12/11/2008

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது

இந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக அவர் ஒரு சுவாரசியமான விவரம் தன் வாழ்விலிருந்து எழுதியிருக்கிறார். அது சம்பந்தமாக கூகளில் தேடியபோது, இந்தத் திண்ணை கட்டுரை கிடைத்தது. முதலில் அது கூறுவதைப் பார்ப்போம்.

“ஒரு இடைச் செருகல். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே!’ என்ற பெரியோர்கள் வற்புறுத்தலின் பேரில் பாசி படிந்த குளத்தில் இருந்து நீர் அருந்த மறுத்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளைக்குக் குழந்தையாய் இருந்த போது ஒரு சந்தேகம் எழுந்தது. தமிழர்கள் அவ்வளவு மடையர்களா? அசுத்தமான நீரை அருந்தினால் உடல் நலம் கெட்டு விடாதா ? .ஏன் இப்படியானதொரு பழமொழி வழக்கிலிருக்கிறது ? என்பது அந்த சந்தேகம். நீண்ட காலம் கழித்து ஒரு குளத்தின் கரையில் மதிற்சுவரில் ஒரு கல்வெட்டு காணக்கிடைத்தது. அதில் கீழ் வருமாறு செதுக்கப் பட்டிருந்தது.

“நீர்ப்பிழை செய்வது ஊர்ப்பிழைத்தற்றால்
நெடுமுடி மன்னன் கடுஞ்சினம் கொள்ளும்.”

‘இங்கு அசுத்தம் செய்யாதீர். அசுத்தம் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என இக்கால அரசாங்கம் அறிவிப்புப் பலகை வைப்பது போல் அக்காலத்தில் கல்வெட்டாக குளக்கரையில் அரசன் எச்சரிக்கை செய்திருக்கிறான். ஊர் மக்கள் பயன் படுத்தும் நீரை அசுத்தம் செய்தால் அரசன் தண்டிப்பான் என்பது அக்கல்வெட்டின் பொருள். ஊரைப் பிழைத்தாலும் நீரைப் பிழைக்காதே என்ற சொலவடை, காலப்போக்கில் மறுவி ‘ தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே !’ என ஆகிவிட்டதாம்”.

இது பற்றி நான் சமீபத்தில் 1960-ல் அவரது சுயசரிதத்தில் படித்துள்ளேன். மேலே கூறிய நிகழ்ச்சி அவர் தம் பெற்றோர் உறவினருடன் மாட்டு வண்டியில் பயணம் செய்தபோது நடந்தது. வழியில் ஒரு தோப்பில் வண்டியை நிறுத்தி கட்டுச்சாத மூட்டையை பிரித்து கொண்டு வந்த சித்திரான்னங்களை புசித்து, நீரருந்த அருகில் இருந்த கிணற்றிலிருந்து நீர் சேந்தியுள்ளனர். சிறுவன் ராமலிங்கத்துக்கு இதெல்லாம் முதல் அனுபவம், ஆகவே ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறான். அவனுக்கு கொடுத்த தண்ணீரில் பாசி இருந்தது. அதை கையால் நீக்கிவிட்டு அவனுக்கு அருந்த கொடுத்துள்ளனர். “உவ்வே, பாசி இருந்த தண்ணீர் எனக்கு வேண்டாம்” என சிறுவன் முரண்டு பிடித்தான். “ தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே”! என்று அவனிடம் கூறி அவனை சமாதானப்படுத்தி, அந்த நீரை குடிக்க வைத்தனர். இந்த சொலவடை அவனுள் புகுந்து அவனை குடைந்த வண்ணம் இருந்திருக்கிறது. எல்லோரையும் கேட்டிருக்கிறான். யாரும் சரியாகச் சொல்லவில்லை. எதேச்சையாக பிற்காலத்தில் அவருக்கு இதன் விடை ஒரு ஊரின் குளக்கரையில் காணப்பட்ட கல்வெட்டில் கிடைத்துள்ளது.

வாழ்க்கையே அப்படித்தான். எதிர்பாராத இடங்களிலிருந்து விடைகள் கிடைக்கும். என்ன, அதை மனதில் நிறுத்திக் கொண்டு வேறு வேலைகளை பார்க்க வேண்டியதுதான். எனக்கும் இம்மாதிரி பல முறை நடந்துள்ளது. அதை பற்றி நான் இங்கு குறிப்பிட்டுள்ளேன். இப்படித்தான் கள்ளா வா புலியைக் குத்து என்ற சொற்றொடருக்கு உவேசா அவர்களும் விடை கண்டுகொண்டார்.

நாமே பல முறை பார்த்திருப்போம். ஏதேனும் பொருளை தேடும்போது, பல ஆண்டுகளாகத் தேடியும் கிடைக்காமலிருந்த மற்ற பொருட்கள் கைக்கு கிடைக்கும் அப்போது தேடியது மட்டும் கிடைக்காது. பல ஆண்டுகளாக கிடைக்காமல் போக்கு காட்டிய கார்சாவி (அந்தக் காரை விற்று பல ஆண்டுகள் ஆனபடியால்), அது கிடைத்தும் பிரயோசனம் லேது என்றபடியால், “சீ, இது வேற சனியன்னு” அதை தூக்கி எறிந்திருப்போம். “ஒனக்கு ஏதுடா கார் சாவி, காருக்கே வழியில்லாமத்தானே கால் டாக்சியெல்லாம் ‘என்னுடைய கார்’னு சொல்லிட்டு திரிஞ்சுக்கிட்டிருக்க” என்று சொல்லும் முரளி மனோஹர், ஷட் அப்!

அதெல்லாம் சரி, தலைப்பை எப்ப நியாயப்படுத்தப் போறே என்ற கேள்விக்கு பதில் சுலபம். கவிஞர் வே. ராமலிங்கம் எழுதிய கவிதை வரிகள் இவை. வெள்ளைக்காரன் இவற்றைக் கேட்டு நடுங்கினான். மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சை போராட்டத்தை சித்தரித்தன இக்கவிதையின் வரிகள். இந்த உரலிலிருந்து பெற்ற அதன் முழுவரிகளை இங்கு பார்ப்போமா?

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)
ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே
மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே! .(கத்தி)
குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . .(கத்தி)
கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . .(கத்தி)
கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட! . .(கத்தி)
காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே . .(கத்தி)

அம்மாதிரி பெற்ற சுதந்திரத்தை நாம்தான் பேணி காக்க வேண்டும். தேவையின்றி பேசும் வீணர்களை புறக்கணித்து மேலே செல்வோம். Whine & lament நிச்சயம் தேவையேயில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

Anonymous said...

கவி அரசின் கவிதை


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்….
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு….


தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
தர்மம் மீண்டும் வெல்லும்

இதை மீண்டும் மெய்ப்பிக்க ஆண்டவன் உங்களுக்கு துனையிருப்பான்

உங்களின் நலன் போற்றுவர்களும்,விரும்பிகளும்,நண்பர்களும் துனையிருப்பார்கள்.

bala said...

//தேவையின்றி பேசும் வீணர்களை புறக்கணித்து மேலே செல்வோம். Whine & lament நிச்சயம் தேவையேயில்லை. //

டோண்டு அய்யா,

வீணர்களென்று யாரை திட்டுகிறீர்கள்?ம க இ க நக்சல் படு பாதகர்களையா,பெ தி க/தி க கருப்பு சட்டை ரெளடி கும்பலையா அல்லது மஞ்ச துண்டு அய்யாவின் பிரியாணி குஞ்சுகளையா?தெளிவாக சொல்ல வேண்டியது தானே.

பாலா

dondu(#11168674346665545885) said...

//வீணர்களென்று யாரை திட்டுகிறீர்கள்?//
எல்லா வீணர்களையுமே என்று வைத்துக் கொள்வோமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//வீணர்களென்று யாரை திட்டுகிறீர்கள்?ம க இ க நக்சல் படு பாதகர்களையா,பெ தி க/தி க கருப்பு சட்டை ரெளடி கும்பலையா அல்லது மஞ்ச துண்டு அய்யாவின் பிரியாணி குஞ்சுகளையா?தெளிவாக சொல்ல வேண்டியது தானே.

பாலா
//

வெண்ணை பாலா.. உம‌து காஞ்சி காம‌கேடி, த‌மிழ் எதிரி துக்ள‌க் சோமாரி, ம‌த‌வெறிய‌ர்க‌ள் மோடி, அத்வானி, RSS, VHP வ‌கைய‌றாக்கள் ரொம்ப‌ ஒழுக்க‌மோ? அவ‌ர்க‌ள் எந்த‌ ர‌க‌ம்?

கோம‌ண‌காந்த்

Anonymous said...

யார் சொல்கிறார்களோ அவர்களைப் பொறுத்து அந்த வார்த்தைக்கு "வெயிட்" கொடுப்பது தான் நல்லது. ஒரு நிலையிழ்ந்தவரின் கருத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டுமா? அதை ignore செய்வது தான் சிறந்தது. ஈழ்த் தமிழ்ர்கள் பெயரை இப்படி பெயரில்லாதவர்கள் கெடுப்பது வேதனை தான்.
வலைப்பதிவுகளுக்கு வருவதற்கே பிடிக்கவில்லை.பாவம் இந்தச் சந்தடியில் பச்சக் குழந்தையையம் சீரியஸ் கருத்துக்களை எழுத வைத்துவிட்டார்கள்.
குப்புக் குட்டி.

Krishnan said...

Dear Dondu Sir:

1: Any comments on the article by Ms. Kanimozhi in The Hindu http://www.thehindu.com/2008/12/10/stories/2008121055791100.htm ?

2. Do you agree with Boycott when he says cricket should not played amidst such tight security ?

3. Do you think India can do a Israel and bomb terrorist camps in Pakistan regardless of consequences ?

4. Have you prepared a list of books to be purchased at the coming Chennai book fair ? If so, can you share it with us ? How many times do you propose to visit the fair ?

Anonymous said...

Dondu Sir,
I am pretty new 2 ur blog, found it as a whiff of fresh air among other tamil blogs which are full of anti-Brahminism and anti-Hinduism craps, blaming everything bad under the earth on parpaniam.

Keep up this good work. Cheers.

Anonymous said...

1.பிள்ளையோ பிள்ளை முக முத்து பிரச்சனை பண்ணுவார் போலிருக்கே?
2.பெரியவருக்கு மீண்டும் தர்ம சங்கடமா?
3.தாத்தா சொத்து பேரனுக்கு -கோர்ட் நடவடிக்கைகள் தலைவரின் மூத்த பேரன் அறிவு நிதி தொடர நடவடிக்கையாமே?
4.கருனா,தயா,கலா,அறிவு(நிதி)-கோடிகள் குவிந்ததற்கு பெயராலஜி காரணமா?
5.தவறான முறையில் சேர்த்த சொத்து தவறாமல் துன்பத்தை தரும் என்பது உண்மையாகப் போகிறதா?

வால்பையன் said...

அவங்களுக்கு தான் வேற வேலை இல்லை

உங்களுக்குமா!
விட்டு தள்ளுங்க,

வால்பையன் said...

//கருனா,தயா,கலா,அறிவு(நிதி)-கோடிகள் குவிந்ததற்கு பெயராலஜி காரணமா?//


சுரண்டாலஜி தான் காரணமென்று வெளியே பேசிகொள்கிறார்கள்

Anonymous said...

2008ம் ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் பாக்கி.

இந்த ஆண்டில்

உங்களை
1.மகிழ்ச்சி படுத்திய செய்தி/நிகழ்ச்சி
2.கவலை படுத்திய செய்தி/நிகழ்ச்சி
3.போடா ஜாட்டன் என்று நினத்த செய்தி/நிகழ்ச்சி
4.எதிர்பார்த்து நடந்த நிகழ்ச்சி/செய்தி
5.எதிர்பாராமல் நடந்த நிகழ்ச்சி/செய்தி
6.எதிர்பார்த்து நடக்காத நிகழ்ச்சி/செய்தி
7.நீங்கள் எழுதிய பதிவில் மிகவும் பிடித்தது(முதல் பரிசு)
8.நிறைய பின்னுட்டங்களையும் பார்வைகளையும் பெற்ற பதிவு
9.யாரும் கண்டு கொள்ளாத பதிவு( 0 பின்னூட்டம்)
10.பிறர் எழுதிய பதிவில் உங்களை மிகவும் ஆச்சரியப் படுத்திய பதிவு/பதிவர்

dondu(#11168674346665545885) said...

நக்கீரன் பாண்டியன் அவர்களே,
இக்கேள்விகளை அடுத்த ஜனவரி முதல் டோண்டு பதில்கள் பதிவில் வருமாறு அதற்கான வரைவை உருவாக்கி சேர்த்து விட்டேன். ஏனெனில், இன்னும் 2008 முடியவில்லை. முடிந்தவுடன் அதற்கு பதில் சொல்வதே சிறப்பாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// வால்பையன் said...
அவங்களுக்கு தான் வேற வேலை இல்லை

உங்களுக்குமா!
விட்டு தள்ளுங்க,//

You too valpaiyan.Be careful .You will get brickbats (critical remarks) from anti-Brahminism and anti-Hinduism camps.

Anonymous said...

dondu(#11168674346665545885) said...
நக்கீரன் பாண்டியன் அவர்களே,
இக்கேள்விகளை அடுத்த ஜனவரி முதல் டோண்டு பதில்கள் பதிவில் வருமாறு அதற்கான வரைவை உருவாக்கி சேர்த்து விட்டேன். ஏனெனில், இன்னும் 2008 முடியவில்லை. முடிந்தவுடன் அதற்கு பதில் சொல்வதே சிறப்பாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

2-01-2009 அன்று வெளிவர இருக்கும் சிறப்பு கேள்வி பதில் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//You too valpaiyan.Be careful .You will get brickbats (critical remarks) from anti-Brahminism and anti-Hinduism camps. //

நண்பரே நானும் அதில் ஒரு மெம்பர் தான், நான் மனிதர்களை மட்டும் தான் மதிக்கிறேன். மதங்களை அல்ல

Anonymous said...

//Anonymous said...
// வால்பையன் said...
அவங்களுக்கு தான் வேற வேலை இல்லை

உங்களுக்குமா!
விட்டு தள்ளுங்க,//

You too valpaiyan.Be careful .You will get brickbats (critical remarks) from anti-Brahminism and anti-Hinduism camps.//

anti டோண்டுவையும் சேர்த்துங்கோங்கண்ணா

ஏன் என்றால்

1.ஹிண்டு ராம்
2.துகளக் சோ
3.டோண்டு

இவர்கள்தான் இப்போது( வசவுகளை பெறுவதில்) ஹிட் லிஸ்டில்.

அதுவும் இலங்கைத் பிரச்சனையில் இவர்களின் நிலை பாட்டை ,எதிர்ப்போர்
பற்றிய செய்திகள் யாவரும் அறிந்ததே.

Anonymous said...

தேர்ந்து எடுக்கப்படும் கேள்விகளுக்கு துக்ளக் பரிசு வழங்குவது போல நீங்களும் கொடுப்பீர்களா ?
லஹே ரஹோ முன்னாபாய் படத்தில் லக்கி சிங்-க்கு பூச்செண்டு வழங்கிற மாதிரி ஒரு அனானி உங்களுக்கு அடிக்கடி பாட்டு ஒன்னை எழுதி விட்டுறாரே , அந்த பாடல்களை படிப்பீர்களா இல்லை வாய்விட்டு பாடிப் பார்ப்பீர்களா ? (அனானி, முகம் காட்ட மறுத்தாய் ஏன் உன் முகவரியை மறைத்தாய்)

குப்புக் குட்டி

Anonymous said...

//

Anonymous said...
(அனானி, முகம் காட்ட மறுத்தாய் ஏன் உன் முகவரியை மறைத்தாய்)

குப்புக் குட்டி.

.)))))))))))))))

Anonymous said...

//"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது"//

//அதெல்லாம் சரி, தலைப்பை எப்ப நியாயப்படுத்தப் போறே என்ற கேள்விக்கு பதில் சுலபம். கவிஞர் வே. ராமலிங்கம் எழுதிய கவிதை வரிகள் இவை. வெள்ளைக்காரன் இவற்றைக் கேட்டு நடுங்கினான். மகாத்மா காந்தி அவர்களின் அகிம்சை போராட்டத்தை சித்தரித்தன இக்கவிதையின் வரிகள்.//

//அம்மாதிரி பெற்ற சுதந்திரத்தை நாம்தான் பேணி காக்க வேண்டும். தேவையின்றி பேசும் வீணர்களை புறக்கணித்து மேலே செல்வோம். Whine & lament நிச்சயம் தேவையேயில்லை.
//

ஆகவே, காந்தியின் புதல்வர்களாகிய நாம் பாகிஸ்தானுடன் பிரச்சினை வரும்போதேல்லாம், பாகிஸ்தான் எல்லைக்குப் போய் இந்த பாட்டை உரக்கப்பாடினால் நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்துவிடலாம். ஆணானப்பட்ட வெள்ளைக்காரனே இதைக் கேட்டு நடுங்கினான். பாகிஸ்தான் எம்மாத்திரம். காந்தியின் அஹிம்சாவாதக் கொள்கைகளை மறந்துவிட்டு அனாவசியமாக எல்லையில் படையைக் குவிக்கும்/குவிப்போமென மிரட்டும் வீணர்களைப் புறக்கணித்து சோ அவர்களின் தலைமையில் பாகிஸ்தான் எல்லைக்கு செல்வோம். Whine & lament நிச்சயம் தேவையேயில்லை.

பாகிஸ்தானை நடுங்கவைத்த பிறகு, இந்தப் பாடலை டோண்டு ஹீப்ருவில் மொழிபெயர்த்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுப்பார். அவர்கள் இப்பாட்டை அராபியர்களை, பாரசீகர்களைப் பார்த்துப் உரக்கப் பாடுவார்கள். அவர்களும் கேட்டு நடுங்குவார்கள். மத்திய கிழக்கில் அமைதி பூத்துக் குலுங்கும்.

dondu(#11168674346665545885) said...

//பாகிஸ்தானை நடுங்கவைத்த பிறகு, இந்தப் பாடலை டோண்டு ஹீப்ருவில் மொழிபெயர்த்து இஸ்ரவேலர்களுக்குக் கொடுப்பார். அவர்கள் இப்பாட்டை அராபியர்களை, பாரசீகர்களைப் பார்த்துப் உரக்கப் பாடுவார்கள். அவர்களும் கேட்டு நடுங்குவார்கள். மத்திய கிழக்கில் அமைதி பூத்துக் குலுங்கும்.//
சான்ஸே இல்லை. இப்போதே அராபியர்கள் யுத்தம் என்று வந்தால் இஸ்ரவேலர்களை கண்டு அலறுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//சான்ஸே இல்லை. இப்போதே அராபியர்கள் யுத்தம் என்று வந்தால் இஸ்ரவேலர்களை கண்டு அலறுவார்கள்.//

ஆமாம், ஆமாம். இஸ்ரவேலர்கள் ஏற்கனவே கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் செய்து சாத்வீகமாக வென்றிருக்கிறார்கள். அதே மாதிரி மீண்டும் "கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்று பாட ஆரம்பித்தால் அராபியர்கள் அலறாமலா இருப்பார்கள்?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது