குஜராத்தில்கூட மோதிக்கு முன்னால் அவர் வந்த பிற்கு என பார்க்க வேண்டியுள்ளது.
முதலில் குஜராத்தில் மோதிக்கு முன்னால் எப்படி இருந்தது, அதை அவர் எவ்வாறு சரி செய்தார் என்பதை பார்ப்போமா.
1. மோதி பொறுப்பை ஏற்ற சமயம்கல்வி விஷயத்தில் அதுவும் பெண்குழந்தைகள் கல்வி விஷயத்தில் குஜராத் 20-ஆம்
இடத்தில்தான் இருந்தது. அதுவும் பாதியில் படிப்பை விடுபவர்கள் 49
விழுக்காட்டில் இருந்தனர்.
இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மோதி முடிவு செய்தார். எல்லா பின் தங்கிய
பகுதிகளுக்கும் விசிட் செய்தார். முக்கியமாக பெண்கள் கல்வியறிவு பெறுவதற்கு
முன்னுரிமை அளித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் பாதியில் படிப்பை
விடுபவர்களது விழுக்காடு 2008-ல் 49-லிருந்து 4-க்கு வந்துள்ளது. (2011-ல் படிப்பாளிகள் 80%, அரசின் விடாமுயற்சியால்).
மேலும், பிரசவத்தில் பெண் மரணம் என்பது குஜராத்திலும் மற்ற இடங்களைப் போலவே துவக்கத்தில் இருந்திருக்கிறது.
மோதி அவர்கள் ஒரு காரியம் செய்தார். ஒவ்வொரு வெற்றிகரமான பிரசவத்துக்கு
பிறகும் வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு ரூபாய் இரண்டாயிரம் ஊக்கத் தொகை
அறிவித்தார். பிரசவத்துக்கு வரும் ஏழை பெண்களுக்கும் நல்ல மருத்துவ மற்றும்
பண உதவி அளிக்கப்பட்டது. (ஒரு நாளைக்கு ரூபாய் 200, கூட வரும்
அட்டெண்டண்டுக்கும் அதே தொகை). இதன் மூலம் 1,58,000 கர்ப்பிணிகள் பயன்
அடைந்தனர். இதெல்லாம் இல்லாத நிலையில் பிரசவ மரணம் 6000 என்ற
நிலையிலிருந்து ஒரே ஒரு மரணம் என்ற அளவில் பிரமிக்கத்தக்க முறையில்
இறங்கியுள்ளது என அவர் துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் கூறினார்.அதே கூட்டத்தில் அவர் கூறிய பிற விஷயங்கள் இன்வருமாறு:.
2. தமிழகத்தில் மின்சாரம் வந்தால் அது செய்தி. குஜராத்திலும் முதலில் அதே நிலைமைதான் மோடி அவர்கள் பதவிக்கு வந்த போது இருந்தது.
நிலைமையில் முன்னேற்றம் காண்பது கடினம் என்பது அதிகாரிகளின் கூற்று. மோடி
அவர்கள் சளைக்காது நடவடிக்கை எடுத்தார். பகுதி பகுதியாக எடுத்து
காரியமாற்றினார். முதல் 1000 நாட்களில் 45 விழுக்காடு கிராமங்களுக்கு முழு
மின்சாரம் வழங்கப்பட்டது. இப்போது அதே திட்டம் குஜராத் முழுக்க
விஸ்தரிக்கப்பட்டு 100 விழுக்காடு கிராமங்களுக்கு 24 மணி நேரமும் 3-phase
மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மோடி அவர்கள் முதல் 1000 நாட்களில்
செய்த விஷயங்கள் பின்வருமாறு. 23 லட்சம் மின்கம்பங்கள், 56,000
ட்ரான்ஸ்ஃபார்மர்கள், 75000 எலெக்ட்ரிக் மீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டன.
ஒரு அரசு மனது வைத்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு இதை விட நல்ல
உதாரணம் வேறு ஏது?
”500 நாட்களில் 700 கிலோமீட்டர் நீளத்துக்கு நர்மதா
திட்டத்தில் பைப்புகள் இடப்பட்டன” என்று சோ கூறியதை குறிப்பிட்டு அதை
அப்டேட் செய்தார். தற்போது அதே புள்ளிவிவரம் 700 நாட்களில் 1400
கிலோமீட்டர் பைப்லைன்கள் போடப்பட்டன என்று கூறினார். அந்த பைப்பில்
கருணாநிதி அவர்கள் தன்னுடைய குடும்பத்தாருடன் காரில் செல்ல இயலும் என்று
பைப்லைனின் விட்டத்தை பற்றி கூறுவதற்காக அவர் தமாஷாக மேற்கோள் காட்டினார். (ஜெயும் சசிகலா கூட அவ்வாறு செய்யலாம்).
ஒரே சிரிப்பு அரங்கில். தனக்கு எதிராக ஒரு ஊழல் புகாரும் இல்லை என்பது ஒரு
புறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே
என்ற கவலையும் இருக்கிறது என்றார்.
3. அரசு மனம் வைத்தால் வருவாயையும் பெருக்க இயலும் என்கிறார் மோதி. ஆனால் அது
லஞ்சத்தை ஒழித்தால்தான் முடியும். உதாரணத்துக்கு மஹாராஷ்டிரம்
மற்றும் குஜராத் வழியில் செல்லும் நெடுஞ்சாலையில் குஜராத் பக்கத்தில் ஒரு
எல்லை செக்போஸ்ட் உண்டு, மஹாராஷ்ட்ரா பக்கத்தில் ஒரு செக்போஸ்ட் உண்டு.
இரண்டிலும் ஒரே அளவு வண்டிகள் போக்குவரத்துதான். குஜராத் தரப்பினர் சட்ட
பூர்வமாக கலெக்ட் செய்வது ஒரு நிதியாண்டில் மஹாராஷ்ட்ரா தரப்பில் உள்ளதை விட 239 கோடியே 60
லட்சம் ரூபாய் அதிகம். சட்டப்படி என்னவெல்லாம் வருமானம் அரசுக்கு வரக்கூடும் என்பதை அது தெளிவாகக்
காட்டுகிறது. ஆனால் அதெல்லாம் செய்யாது விட்டால் கீழ்மட்டத்திலிருந்து
மேல் மட்டம் வரை அதிகாரிகள், மந்திரிகள் ஆகியோரது தனிப்பட்ட பணப்பைதான்
நிறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
4. மேலும் சில குஜராத் புள்ளி விவரங்கள். மோடி முதலில் ஆட்சிக்கு வந்தபோது
நிதி பற்றாக்குறை 6700 கோடி ரூபாய், தற்சமயம் (2008-ல்) 1000 கோடி ரூபாய் உபரியாக
கையில் உள்ளது. ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் பற்றாக்குறை பட்ஜெட் வரி உயர்வு
ஏதும் இன்றி 400கோடி ரூபாய் உபரி பட்ஜெட்டாக உயர்ந்துள்ளது.
முக்கிய காரணம் லஞ்சம் எல்லா தளங்களிலும் ஒழிக்கப்பட்டு வரி வசூல் சரியாக
நடந்ததே.
5. 2007 தேர்த்ல் சமயத்தில் காங்கிரஸ் கலர் டிவி தருவதாக வாக்களித்தபோது அவரிடம்
பத்திரிகைக்காரர்கள் இது பற்றி கேட்டுள்ளனர். கலர் டிவி தர இயலாது ஆனால்
தான் பதவிக்கு வந்தால் வரி கொடுக்காதவர்களை தேடி கண்டுபிடித்து நோட்டீஸ்
கொடுக்கப் போவதாக தயக்கமின்றி கூறியுள்ளார். மக்கள் தங்கள் நலனை
அறிந்தவர்கள். ஆகவே வரி வசூல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்ன தனக்கு ஓட்டு
போட்டு ஜயிக்க வைத்தனர் என்பதில் மோடிக்கு ஐயமேயில்லை. (இப்போது 2012-ல் மட்டும் என்ன வாழுகிறதாம்).
சரி குஜராத்தை பார்த்தாயிற்று. மர்ற்ற மாநிலங்களைப் பார்ப்போமா. தமிழகத்தையே எடுத்து கொள்வோம்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலை ஊக்குவிப்பவையே. ஜெயலலிதா தேவலை என நான் முன்னால் கூறியதற்கு காரணமே கருணாநிதி worse என்பதால்தான். மற்றப்படி இருவரையும் மோதியுடன் ஒப்பிட்டால் நமக்கு டிப்ரஷன்தான் வரும்.
ஜெயும் சரி கேயும் சரி தாம் பதவியில் இருக்கும்போது மற்றவர் அடுத்த தேர்தலில் வெற்றி எற ஏதுவாகவே உழைக்கின்றனர். ஜெ பதவியில் இருப்பதால் முதலில் அவரது சொதப்பகளை பார்ப்போம்.
சமச்சீர் கல்வி, அரசு தலைமைச் செயலகம், அண்ணா நூல்நிலையம், சாலைப் பணியாளர் ஆகிய விஷயங்களில் அவர் தேவையின்றி அவசரமாக செயலாற்றி நேர விரயம் செய்துள்ளார். மின்வெட்டு விஷயமோ இன்னும் சரியாகவில்லை. முயற்சி செய்வதக அவர் கூறினாலும் அது பலனடையும்போதுதான் தெரியும்.
கே அவர்களோ சுத்தம். மானாட மயிலாட நிகழ்ச்சிக, தனக்கு அளித்த பாராட்டு நிகழ்ச்சிகள் ஆகியவர்றுக்கு நேரம் ஒதுக்கியதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது குடும்பத்தினரோ ஐயையோ என்றுதான் கூற வேண்டும்.
இருப்பினும் எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி என பார்த்து ஜெக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது.
தமிழகம் போலவே மற்ற மானிலங்களும் (குஜராத் தவிர). குஜராத்திலோ காங்கிரஸால் ஒறும் செய்ய இயலவில்லை. வெறுமனே பொரும வேண்டியதுதான்.
சரி, மோதி பிரதமராகலாமா? என்னைக் கேட்டால் அவர் இப்போதைக்கு குஜராத்திலேயே இருக்க வேண்டும் என்பேன். இன்னும் ஓர் ஐந்தாண்டு போகட்டும். அப்போதாவது குஜராத்தின் உதாரணம் மற்ற மானிலங்களுக்கு இன்னும் நன்றாக உரைக்கட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை: நண்பர் அருண்பிரபு அவர்களது பதிவு அருமையாக உள்ளது. கண்டிப்பாக படிக்கவும்.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
9 hours ago
43 comments:
எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி! நல்ல உதாரணம்! பகிர்வுக்கு நன்றி!
தமிழ்ப் பழமொழியையே சொதப்பி விட்டீர்கள். எரிகிற கொள்ளிகளில் எது நல்ல கொள்ளி என்று கண்டுபிடிப்பது? என்பது அம்மொழி. அதன் பொருள்: எல்லாமே மோசம்தான் என்பதே. ஆனால் ஜெவை அக்கொள்ளிகளில் நல்ல கொள்ளியாகத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள்.
கருநாநிதியோடு ஒப்பிடும்போது நீங்கள் ஜெ வைத் தேர்ந்தெடுப்பது அவரின் ஜாதிக்காகத்தான். அவர் கிருத்துவருக்கும் ஜெருசேலம் போக மானியம் தருகிறார். இசுலாமியப் பெண் வேடம்போட்டு நோன்புக் கஞ்சியை சாப்பிடுகிறார். நாகர்கோயிலில் கிருத்துவப்பெண் வேடம். இருப்பினும் அவர் சரி உங்களுக்கு. அதே சமயம், அவரின் போட்டியாளராக கருநாநிதி இல்லாமல் வேறொரு பிஜேபி ஆளொருவர் இருப்பின், நீங்கள் பிஜேபி ஆளைத்தான் விரும்புவீர்கள். கருநாநிதி மட்டுமே வேண்டாம், அதற்கு காரணம் அவர் உங்கள் ஜாதி எதிர்ப்பாளர். உங்கள் ஜாதி ஆதரவாளரென்றால் அல்லது உங்கள் ஜாதிக்காரரென்றால் எல்லாமே நசித்துப்போகும். உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. உங்கள் ஜாதியினரிடம் பரவலாகக் காணப்படும் மனப்பாங்கு இது. திராவிட பிதாமகன்களின் காலம் நழுவிக்கொண்டிருக்கிறது. அன்பழகனுக்கு 91 ஆகிவிட்டது. கருநாநிதியின் பிள்ளைகளுக்கு பார்ப்பன எதிர்ப்பு இருந்த மாதிரி தெரியவில்லை எனக்கு. The camaraderie between the late Sujatha and Kanimozhi is an example. பிதாமகன் வைகுண்டப்பதவி ஏகியவுடன எவரை நீங்கள் வெறுப்பீர்கள் என்று நினைப்பது என் பொழுதுபோக்குக்களில் ஒன்று.
Next about your post proper.
கட்டுரையின் கடைசிப்பத்தி திறமையான மழுப்பல். மோடியால் இந்தியப்பிரதமராக முடியுமா ? என்பதை குஜராத்தில் இன்னும் இருக்கட்டும் என்று சொல்லாமல் ஆராய்ந்து பாருங்கள்.
இன்னொரு விடயத்தையும் அரசியல் விஞ்ஞானிகள் (Political scientists) சொல்லிவருகிறார்கள். இவர்கள் கட்சி சாராதவர்கள். Mostly writers and academics. அதாவது ஒருவரின் திறமையை அவருக்குக் கிடைக்கும் கருவிகளைப்பொருத்தே எடைபோட முடியும்.
மின்சாரமில்லாக்குடிசை; கல்வியே வேண்டமென துரத்தும் பெற்றோர்கள், குடிகாரத் தந்தை, பஞ்சம் பட்டினி - இப்படிப்பட்ட நிலையில் அவன் படித்து முதல் மாணவனாக வருகிறான்.
இன்னொருவனுக்கு எல்லாமே இருக்கின்றன. அவனும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறான். இருவரையும் எடைபோட்டுப்பேசினால் எப்படிப்பேசுவீர்கள்?
அதே போல, குஜராத் மக்களும் பீஹார் மக்களும் வெவ்வேறு அடிப்படைக் குணக்கூறுகளைக்கொண்டவர்கள்.
ஒருவரிடம் செல்வது மற்றவரிடம் செல்லாது. வேறுமாதிரிச் சொன்னால், ஒருவரிடம் இலகுவில் செல்லும்; மற்றவரிடம் கடும்போராட்டத்தின் இறுதி வெற்றியாகத்தான் செல்லும். அப்போராட்டத்தை எடுத்து வெல்வதற்குத் தனித்திறமை வேண்டும்.
மோடி குஜராத்தில் செய்பவை மற்றவிடங்களிலும் செய்து காட்டினால்தான், அல்லது செய்ய முடிந்தால்தான் அவர் ஒரு சிறந்த பிரதமர் ஆகத் தகுதி. குதிரை நன்றாக இருந்தால்தான் பந்தயத்தில் வெற்றி பெற முடியும். குஜராத் குதிரை நல்ல குதிரை. சொதப்பலான குதிரை கொடுத்து அதை வைத்துப் பந்தயத்தில் வெற்றி பெறுவதே திறமை. Horse comes first; horse rider comes only next.
(Please note only one aspect is talked above, namely, the fit horse and the rider who finds it easy to ride. The aspect that is not talked about is the hurdles the horse should encounter successfully. i.e. here, the communal element etc. he is to negotiate if you want to hold him up as the PM material)
மோடியைப் பார்த்தேனும் நம்மவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
மக்களின் நலனை நம் அரசியல்வாதிகள் முன்னிறுத்துவதில்லை.தன்னலத்தை மட்டுமே பார்க்கின்றனர்.
மோடி பிரதமராகவேண்டும். மதச்சாயம் பூசாமல் இது நடந்தேறும் என்றே நம்புகிறேன் :)
Please give your view on the below comments.I dont know why this guy is against Modi
http://justicekatju.blogspot.in/2012/12/on-gujarat-development.html
//இருப்பினும் எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி என பார்த்து ஜெக்கு ஆதரவு தர வேண்டியிருக்கிறது. //
ஏன் உங்க அபிமான சோ சொன்ன திருடன்,பிக்பாக்கெட்காரன் உதாரணம் இன்னும் நல்லா பொருந்துமே!
மோடி சிறப்பாக ஆட்சிபுரிகிறார் என்பது ஊடகங்களின் கருத்து,மறுபடியும் தேர்தல் வெற்றி என்பது உறுதிப்படுத்தினாலும் நீங்க மோடிக்கு அல்லக்கை என்பது மோடியின் சிறப்பை மட்டுமே குறிப்பிடுவதில் தெரிகிறது.
இஸ்லாமிய சகோக்கள் உங்க சமீபத்து பிரபலம் மாதிரி சுவனப்பிரியனின் சவுதியில் பாலாறும் தேனாறும் என்பதை குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா என்ற கேள்வியைப் போடுகிறார்கள்.
உங்கள் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா?
மோடிக்கு குஜாரத்துக்குள்ளே கண்டமில்லாமல் இருக்கலாம்.டெல்லிக்குப் போகனும்ன்னு நினைச்சா பல கண்டங்களை தாண்டியாகவேண்டும்.அதில் முக்கியமானவையாக அமெரிக்க கண்டம்,நிதிஷ் குமார் எதிர்ப்பு,பிஜேபிக்குள் போட்டியாக நாற்காலி கனவர்கள்,ஏன் நட்பாக இருந்தாலும் எனக்கும் பிரதமராகனும்னு ஆசை இருக்காதா என்ற ஜெயலலிதா கூட:)
குலசேகரன்!டோண்டு அவர்களுக்கு ஜெயலலிதாவை ஜாதி சார்ந்தோ அல்லது ஆட்சித் திறன் சார்ந்தோ பிடித்திருப்பதில் தவறில்லை.ஆனால் கலைஞர் பார்ப்பன சொல்லை தனது தேவைக்கு ஏற்ப உபயோகிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.அவரோட திறமைக்கு எங்கே நிற்க வேண்டிய ஆள்!நினைச்சா பெருமூச்சுதான் வருது.அவரோட தவறுகளே ஜெயலலிதாவுக்கு மகுடம் சூட்டுவதும்... and vice versa.
மோடியை புகழ்ந்து மோடியின் ஆதரவாளரால் நடத்தபடும் ஒருவர் தரும் சதவீதங்களை பாருங்கள்
தாய் இறப்பில் கேரளா,தமிழகத்தின் நிலையை குஜராத் அடைய இன்னும் பல பத்தாண்டுகள் பிடிக்கும்
வாய் கூசாமல் சொன்ன பொய் ஒரு மரணம் தான் எனபது
http://deshgujarat.com/2011/02/04/latest-figures-outinfant-mortality-rate-imr-drops-by-2-points-in-gujarat/
Gujarat’s IMR was 60 in year 2001 and 2002. In 2003 it was 57, in 2004 it was one point improved 53, in 2005 the figure was 54, in 2006 it against jumped to 53 and then there’s continuous improvement year by year with IMR 52 in 2007, IMR 50 in 2008, and IMR 48 in 2009.
http://deshgujarat.com/2011/03/18/life-expectancy-in-gujarat-is-64-1-years-imr-48-mmr-160/
In accordance with the Registrar General of India, health performance of Kerala is the best in the country with life expectancy in years at birth of 74, IMR of only 12 per one thousand live births and MMR of only 95 per one lakh live births. Madhya Pradesh has the poor record of life expectancy of 58 and IMR of 67 in the country. The state of Assam has the maximum MMR of 480 per one lakh live births. The same indicators for Gujarat show a reasonable performance with life expectancy of 64.1, IMR of 48 per 1000 live births and MMR of 160 per one lakh live births.
As per National Family Health Survey (2005-06), in Gujarat the percentage of underweight children of five years and below was 44.6. In this aspect too, Kerala was on top with only 22.9 per cent of underweight children of five years and below age
மாநிலங்களின் கடன் பற்றிய பட்டியல் இங்கே
எங்கிருந்து இந்த குஜராத் பற்றிய வதந்திகள் துவங்குகின்றன என்று தெரியவில்லை
http://finmin.nic.in/the_ministry/dept_expenditure/plan_finance/DEbt/state-fiscal-debt-liab.asp
There are two sides to this coin.
நீங்க நாணயத்தின் ஒரு பக்கத்தை தெளிவாக் காட்டுறீங்கனு நெனைக்கிறேன்..நாணயத்தின் இன்னொரு பக்கத்தில் மோடிவுடைய நெகட்டிவ் பாயிண்ட்ஸ் இருக்கும்.
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் னு சொல்லுவாங்க.
ஆக மோடி ஓவெரால்லா ஓ கே யா இருந்தால் சரிதான்..
----------
லல்லு பிரச்சாத் யாதவை திட்டாதவனே இல்லை. ஆனால், ரயில்வே மினிஸ்டர் ஆனதும் அந்தாளு நஷ்டத்துல ஓடிய ரயில் துறையில் இலாபத்தை கொண்டுவததாக சொன்னாங்க.
அரசியல்வாதிகள் ஏதோ நாட்டுக்கு நல்லது செஞ்சா சரிதான்.
dondu,
எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகணும்!
இவ்வளவு நல்ல,திறமை வாய்ந்த ஒரு முதல்வர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆண்டு குஜராத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தியபின்னும்,..
உயர்த்தியபின்னும்,....
உயர்த்தியபின்னும்,.......
காங்.தொடர்ந்து மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் வெற்றி பெறுகிறதே..இது எப்படி?
ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை.. என்பது தான் மோடியின் கதை .. ஓட்டப் பய்ந்தயத்தில் ஓடியதில் முதலிடம், ஓடியவர் எத்தனை பேர். ஒரே ஒரு ஆள் என்பது போல., பொருளாதாரத்தில் ஏனைய மாநிலத்தை விட சற்றப் பரவாயில்லை, ஆனால் சமூகவியலில் அவர் இடறிவிட்டார். மற்றப்படி மக்கள் பொருளாதாரத்தை மனதில் வைத்தே மோடிக்கு வாக்குப் போட்டு இருப்பார்கள் எனத் தோன்றுகின்றது .. ஆனால் குஜராத்தில் தேனாறும் பாலாறும் ஓடுகின்றது என சொல்வது வேடிக்கை, அப்படி ஓடினால் ஆயிரக் கணக்கான குஜராத்திகள் கனடா, அமெரிக்காவுக்கு படையெடுக்க வேண்டிய அவசியம் இராதே..
//இவ்வளவு நல்ல,திறமை வாய்ந்த ஒரு முதல்வர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் ஆண்டு குஜராத்தை உலகத்தரத்திற்கு உயர்த்தியபின்னும்,..
உயர்த்தியபின்னும்,....
உயர்த்தியபின்னும்,.......
காங்.தொடர்ந்து மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் வெற்றி பெறுகிறதே..இது எப்படி? //
அதுதான் ஜனநாயகம். 100% சீட்டுகளைப் பெறுவது பாஜகாவுக்கே நல்லதல்ல. எதிர்க்கட்சி இருப்பது முக்கியம்.
மற்றப்படி இவ்வளவு ஆண்டுகளாக 1/3 பங்கு சீட்டுகளே வைத்திருப்ப்து காங்கிரசுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நினைக்கிறீர்களா?
குஜராத்தில் தேர்தல்கள் மிக நல்ல முறையில் நடத்தப்பட்டன. ஆளும் கட்சியாக இருக்கும் அனுகூலம் மோதிக்கு கிடைக்காமல் எலக்ஷன் கமிஷன் பார்த்து கொண்டது. அதுவும் நல்லதுக்கே.
மேலும் கேசுபாய் படேல் போன்றவர்களது முதுகில் குத்தல் வேறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மோதிக்கு முன்னால் சுமார் 10 வருடங்கள் காவிக்கூட்டம்தான் குஜராத்தை ஆட்சி செய்தது என்று கட்டுரையில் குறிப்பிட்டிருந்தால், கட்டுரை முழுமை அடைந்திருக்கும். :)
எரியும் நல்ல கொள்ளி :)
2007ல் காங்கிரசு இலவச டிவி கொடுக்க முன்வந்தது பழைய கதை. இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட திருமங்கலம் ஃபார்முலா போல இலவச வீடு துவங்கி பலவும் சொன்னது காங்கிரசு. சௌராஷ்ட்ரா பகுதியில் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லாமல் இலவசங்களை மட்டுமே அள்ளிக் காட்டியது அங்கே காங்கிரசை (கேசுபாய் இருந்தும்) பெரிதாகத் தலையெடுக்க விடாமல் செய்தது. மோடி தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்களித்துள்ளார். அதே போல சாதி ஓட்டுக்களை நம்பி களத்தில் இறங்கிய பல தலைவர்கள் குஜராத்தில் தோற்றுள்ளனர்.
//மோதிக்கு முன்னால் சுமார் 10 வருடங்கள் காவிக்கூட்டம்தான் குஜராத்தை ஆட்சி செய்தது என்று கட்டுரையில் குறிப்பிட்டிருந்தால், கட்டுரை முழுமை அடைந்திருக்கும். :)//
குஜராத்தில்கூட மோதிக்கு முன்னால் அவர் வந்த பிற்கு என பார்க்க வேண்டியுள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ திரு. காத்தவராயன் அவர்களே,
காதிக்கூட்டம் நல்லது செய்தது என்று சொல்லுங்களேன்.
நரேந்திர மோடி அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை நான் ஒரு நாள் நேரில் பார்த்தேன் அவர் கூறியது மக்கள் எப்படியோ முதல்வர் அப்படி முதல்வர் எப்படியோ அரசு அப்படி என்று கூறினார்.செளராஷ்டராவில் எங்கும் அமைதி ( சாந்தி ) இங்கு காவல் துறையினர் கையேந்துவதில்லை. அரசு சாராயம் விற்கவில்லை குஜராத் மக்களே பன்புள்ளவர்கள்தான் நான் வசிக்கும் ஓராண்டுகாலத்தில் தெரு சண்டையைகூட பார்த்ததில்லை. அடுத்தவர் மனம் புன்படும்படி யாரும் பேசுவதில்லை இங்கு ஓட்டுபோட யாரும் பணம் வாங்குவதில்லை இலவசங்களுக்கு ஆசைப்படுவதில்லை.நல்ல மக்கள் நல்ல முதல்வர் கிடைத்திருக்கிறார்.
மோடிக்கு முன்னால் ஆட்சி செய்தவர்கள் காவிக்கள் என்றார் காத்தவராயன். அதை வழிமொழிந்து, நாம் மோடிக்கு முன், மோடிக்குப் பின் என்று பிரித்து பார்க்க வேண்டும் என்றார் பதிவாளர் டோண்டு.
புரட்சித்தமிழன் சொல்வது அதற்கு மாறாக இருக்கிறது:
- மக்கள் எப்படியோ முதல்வர் அப்படி; முதல்வர் எப்படியோ அரசு அப்படி - என்றால்,
மோடிக்கு முன் ஆட்சி நன்றாகவில்லை; மோடி வந்த பின் நன்று !
மோடிக்கு முன் மக்கள் மோசமாக இருந்தார்களா? மோடி வந்த பின் அவரால் மாற்றப்பட்டனரா? அப்படியென்றால் மக்கள் எப்படியோ முதல்வர் அப்படி என்று எப்படிச் சொல்லமுடியும்?
அடுத்து,
புரட்சித்தமிழன் எத்தனை ஆண்டுகளாக குஜராத்தில் வசிக்கிறார்? மோடியின் ஆட்சியின் போதுதானே போனார்? அப்படியென்றால், மோடி காலத்திற்கு முன் மக்கள் எப்படியிருந்தார்கள் என்று புரட்சியாருக்கு எப்படித் தெரியும்? தெரியாமல் மோடி சொன்னது சரியென்று எப்படிச் சொல்கிறார்?
அப்படியே மோடிக்கு முன்னேயே பு. த அங்கு வசித்தால், மக்கள் அப்போது எப்படியிருந்தார்கள் என்று சொல்லவும்.
The point s before Modi and after Modi, the general characteristic features of Gujratis r same as I said in my first comments topping all comments here.
That s the truth. It comes from their western approach to life. The Westerners r interested in keeping their worldly lives as best as possible, which v mistakenly call selfishness.
If the same outlook obtains in our own TN, we will have a better environment, better governance and better politicians.
A single politician cant do miracles. Only the collective consciousness of an entire ppl will make their lives better.
2002-க்கு முன்னால் இந்தியாவில் நடந்த மிக மோசமான 18 கலகங்கள்.
Now over to the hall-of-shame worst 18 (apart from 2002) using info someone already computed for us:
WORST riot: 1947 Communal riots in Bengal | 5000-10000 Killed | Ruling party happened to be Congress
Riot 2: 1969 | Communal riots in Ahmedabad | More than 512 Killed in the city. 3000 to 15000 range in the entire state | Riots for 6 months | Ruling party happened to be Congress
Riot 3: Oct 1984 | Communal riots in Delhi | 2733 Killed | Ruling party Congress | Almost 100% casualty were Sikhs, which makes this a Rajiv Gandhi led genocide on India's minorities | Followed by “Big Tree falls” justification too from the Prime Minister!
Riot 4: Feb 1983 | Communal violence in Nellie, Assam | 2000-5000 killed | PM – Indira Gandhi (Congress party) - India's worst slaughter of Muslims in any single riot (just 6 HOURS)
Riot 5: 1964 Communal riots in Rourkela & Jamshedpur | 2000 Killed | Ruling party Congress
Riot 6: August 1980 | Moradabad Communal riots | Approx 2000 Killed | Ruling Party Congress
Riot 7: October 1989 | Bhagalpur, Bihar riots | 800 to 2000 killed | Ruling party Congress
Riot 8: Dec 1992 - Jan 1993 | Mumbai, Maharashtra riots | 800 to 2000 killed | Ruling party Congress
Riot 9: April 1985 | Communal riots in Ahmedabad, Gujarat | At least 300 Killed | Ruling party Congress
Riot 10: Dec 1992 | Aligarh, UP | At least 176 killed | Ruling party Congress (President's rule)
Riot 11: December 1992 | Surat, Gujarat | At least 175 killed | Ruling party Congress
Riot 12: December 1990 | Hyderabad, AP | At least 132 killed | Ruling party Congress
Riot 13: August 1967 | 200 Killed | Communal riots in Ranchi | Party ruling again Congress
Riot 14: April 1979 | Communal riots in Jamshedpur, West Bengal | More than 125 killed | Ruling party CPIM (Communist Party)
Riot 15: 1970 | Bhiwandi communal riots in Maharashtra | Around 80 killed | Ruling party Congress
Riot 16: May 1984 | Communal riots in Bhiwandi | 146 Killed, 611 Inj | Ruling party Congress | CM – Vasandada Patil
Riot 17: Apr-May 1987 | Communal violence in Meerut, UP | 81 killed | Ruling party Congress
Riot 18: July 1986 | Communal violence in Ahmedabad, Gujarat | 59 Killed | Ruling party Congress
Here's why I said numbers vary drastically. The figures listed for 1969 riots in Gujarat above shows 512 tragic victims. But the link here (http://www.gujaratriots.com/32/gujarats-bloody-history-of-violence/), tells a very different story. Maybe Ahmedabad city had that count, but overall in Gujarat, the count was 5000 officially ... 15000 or so unofficially. Of course, the main reason quoted is the political struggle of Indira Gandhi PM (CON-I) and Hitendra Desai CM (CON-O). Justice Reddy Commission identified 2398 instances of communal violence in Gujarat between 1960 and 1969 - that is THREE riots every FOUR days during the decade.
Most likely the effort to “fit-in” 2002 into the worst-10 hall of shame might even FAIL if we do proper research on the skeletons in the closet
At the end of the day, it’s not just a number game, but human tragedy … reflects badly how fractured our society is/was. It is also worth recounting that there has not been a SINGLE major riot in Gujarat since 2002, which speaks volume about the most favourite ‘punching’ bag of ‘seculars’. Some learn from a mistake and turn around … while some other “Bharat Ratnas” just kept on scoring double & triple centuries :(
அன்புடன்,
டோண்டு ராகவன்
பார்க்க: http://www.voxindica.net/2012/02/many-previous-riots-top-gujarat-in.html
//மோடிக்கு முன் மக்கள் மோசமாக இருந்தார்களா? மோடி வந்த பின் அவரால் மாற்றப்பட்டனரா? அப்படியென்றால் மக்கள் எப்படியோ முதல்வர் அப்படி என்று எப்படிச் சொல்லமுடியும்?
அடுத்து,
புரட்சித்தமிழன் எத்தனை ஆண்டுகளாக குஜராத்தில் வசிக்கிறார்? மோடியின் ஆட்சியின் போதுதானே போனார்? அப்படியென்றால், மோடி காலத்திற்கு முன் மக்கள் எப்படியிருந்தார்கள் என்று புரட்சியாருக்கு எப்படித் தெரியும்? தெரியாமல் மோடி சொன்னது சரியென்று எப்படிச் சொல்கிறார்?
அப்படியே மோடிக்கு முன்னேயே பு. த அங்கு வசித்தால், மக்கள் அப்போது எப்படியிருந்தார்கள் என்று சொல்லவும்.// மோடிக்கு முன் இருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகள் இரண்டுமே மோசமாகத்தான் இருந்தது அப்போது காவல்துறை அரசு அதிகாரிகள் பொதுமக்களின் பண்புகள் ஏதும் மோசமாகத்தான் இருந்தன இதனை எப்படி நிரூபிக்கவேண்டி கேட்டாலும் நிரூபிக்க முயற்ச்சிக்கிறேன். சில எடுத்துக்காட்டுகளை முன்வைக்கிறேன் 1. நமது ஊரில் அரசு பேருந்தில் நீண்ட பயணம் செய்தவர்களுக்கு புரியும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அரை பாக்கெட் சிகரெட்டுக்கும் இருவருக்குமான இலவச உணவுக்கும் ஆசைப்பட்டு சாப்பிடத்தகுதியற்ற சாலையோர உணவகங்களில் நிறுத்தி அதிக பணம் கொடுத்து பசியை தீர்க வேண்டி திட்டிக்கொண்டே உணவு அருந்த நேர்திருக்கும் ஆனால் இங்கு அப்படியெல்லாம் செய்யமுடியாது.அவர்களின் மீது ஆன்லைன்ல் புகார் அளிக்கும் வசதி பேருந்துகளின் நேரத்தை ஆன் லைன் மற்றும் குறுஞ்செய்திமூலம் அறிந்துகொள்ளும் வசதி. 2. நம்ம ஊரில் ஒரு போலீஸ்காரன் பொதுமக்களை போடா என்றால் பொருத்துக்கொண்டுதான் போகவேண்டும் அதே நீங்கள் திருப்பி என்னடா என்று கேட்டுப்பார் ஒரு போலீஸ்காரனையே டா போட்டு கூப்பிடுரியானு அடிப்பான் இங்கு பாய் ( சகோதரன்) பேட்டா ( மகனே) என்றுதான் அழைப்பார்கள் இங்கு காவல் துறை காவல்துறையாகவே இருக்கிறது நம்ம ஊரில் அவர்கள் அரசு சம்பலம் பெறும் ரவுடிகள்.3. அரசு பனிவாய்ப்புகள் காலியிட விவரங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் தெறிவிக்கப்படுகிற்து அதிலேயே வின்னப்பிக்கும் வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள் இங்கு அரசு பனியில் சேர லஞ்சம் கொடுக்கத்தேவையில்லை. எந்த அரசு பனியாளரும் முதல் 3 வருடங்கள் 5000 ரூபாய் சம்பளத்துக்குத்தான் வேலை செய்யவேண்டும்.அரசு பனியாளர்கள் அரசினால் பன்படுத்தப்படுவதால் பயனடையும் மக்களும் பன்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.
ராகவன் நீண்ட புள்ளி விவரம் கொடுத்துள்ளார். அந்த பட்டியல் 1986 க்கு பின்னர் காணாமல் போய்விட்டது ஏன்? 80-களின் கடைசியில் காவிக்கூட்டத்தின் வளர்ச்சியால் Riot தளர்ச்சி அடைந்ததா?
போகட்டும் அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
குறிப்பிடப்பட்ட 18 Riot - களில் ஒன்று கூட தமிழ்நாட்டில் இல்லை.இதற்கு காரணம் தமிழ்நாட்டை ஆண்ட கதர் கூட்டமும், கருப்பு கூட்டமும்தான் என்பதை ராகவன் ஒத்துக்கொள்வாரா?
iTTiAM - காதிக்கும் கதருக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.
///குஜராத்திகள் அடுத்தவர் மனம் புன்படும்படி யாரும் பேசுவதில்லை//
ஆஹா ஆஹா, வியாபார ரீதியா குஜராத்தி, மார்வாடிகளுடன் பழகிப்பாருங்கள்.உங்களால் ஆதாயம் இருக்கும் என்றால் அடிப்பான் பாரு ஜால்ரா, அந்த சத்தத்துக்கு நிகர் எந்த வாத்தியத்திலும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. காரியம் முடிந்தவுடன் கழுத்தறுப்பான் பாருங்க..........
அனுபவப்பூர்வமாக உண்ர்ந்தது இது, ஆர்டர் கொடுக்கும்போது பல் இளித்த குஜராத்திகளிடம் அதன் பின்னர் படும் பாடு சொல்லி மாளாது.
இதை இங்கு மோதியுடன் ஒப்பிடுப்பார்க்க வேண்டியதாகிறது. பிரதமர் ஆகும்வரை பல் இளிப்பார், ஆன பின்னர் இருக்குது ஆட்டம். மோதி பிரதமர் ஆக முடியாது, மோதியின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்து ராகவன் இரட்டிப்பு அல்ல பலமடங்கு சந்தோஷமடையவதற்காகவாவது மோதி பிரதமராகவேண்டும், அதற்காக ராகவனுடன் சேர்ந்து நாமும் கோபாலபுரத்துக்கு காவடி தூக்குவோம். நல்ல கொள்ளியை எல்லாம் நம்பாதீங்க ராகவன். அப்புறம் சீசன் டிக்கெட்தான்.
//மோதியின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்து ராகவன் இரட்டிப்பு அல்ல பலமடங்கு சந்தோஷமடையவதற்காகவாவது மோதி பிரதமராகவேண்டும், //
I agree with this statement with a slight variation.
ராகவன் சொல்லும் மோடி ஒரு சிறந்த நிர்வாகி என்பதை மோடியைப் பிரதமராக்கிப் பார்த்தால் மட்டுமே தெரியும். அதற்கு பிஜேபியின் தலைவர்கள் விலகி இவரைப் பிரதமர் பதவிக்காக அக்கட்சி தேர்ந்தெடுக்கவேண்டும்.
இந்தியா குஜராத்தாகுமா என்று தெரிந்துவிடும்.
புரட்சித்தமிழன் !
மோடி சொன்னது: மக்கள் எப்படியோ அப்படி முதல்வர்; முதல்வர் எப்படியோ அப்படி அரசு.
உங்கள் விளக்கத்தின்படி மோடி அரசமைத்த பின் தான் மக்கள் யோக்கியர்களானார்கள் என்றே வருகிறது. நீங்களே அப்படித்தான் சொல்லித் தொடங்குகிறீர்கள்.
ஆக, மக்களின் அடிப்படைக்குணத்தை ஒரு தனிமனிதனால் மாற்ற முடியும் என்று முடிகிறது
கடைசியில் ராகவன் கருத்தே வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள முதல்வராக இருக்கும் அரசியல்வாதி மோடியாக இருந்தால் தமிழர்களின் அடிப்படைக்குணம் மாறி அவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள்.
இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. Tamils are basically corrupt people. No one can change them. But we can control their corruption by devising clever strategies.
The Federal States of India
Financial Year 2011
Federal State Capital of the State Indian Rupee (Ten Million) US Dollar (Billion) Growth Rate (YoY) %age of Total GDP Per-capita Income (INR)
1 Maharashtra Mumbai 10,29,621 $224.12 14.23% 14.09% 83,471
2 Uttar Pradesh Lucknow 5,88,467 $128.09 13.42% 8.05% 26,051
3 Andhra Pradesh Hyderabad 5,67,636 $123.56 19.44% 7.77% 60,458
4 Tamil Nadu Chennai 5,47,267 $119.13 17.94% 7.49% 72,993
5 Gujarat Gandhinagar 4,81,766 $104.87 12.21% 6.59% 63,961
6 West Bengal Kolkata 4,43,644 $96.57 10.76% 6.07% 41,469
7 Karnataka Bangaluru 3,98,893 $86.83 15.73% 5.46% 59,763
8 Rajasthan Jaipur 3,03,358 $66.03 18.76% 4.15% 39,96
Gujarat's growth is all hype and nothing in real.
Here are the GDP statistics for the year 2011.
Even TN grew 5% more than that of gujarat.
Maharashtra 10,29,621 14.23%
Uttar Pradesh 5,88,467 13.42%
Andhra Pradesh 5,67,636 19.44%
Tamil Nadu 5,47,267 17.94%
Gujarat 4,81,766 12.21%
@Krishnakumar
It is really a pity that Rahul did not have assistance from Krishnakumar in the 2012 election.
Regards,
N. Raghavan
How about comparing the personal wealth of chief minsters.
Regards,
N. Raghavan
@dondu,
when mr.krishnakumar points out to you gujarat's hype you are talking about comparing the personal wealth of CMs.
you are shifting topic to divert attention.
so whatever happened to 'no mistake during modi rule' theory of yours? you have conveniently forgotten or ignored it!!
you like modi no matter what he does or what he doesnt. well. its up to you if you wish to live in fool's paradise.
but dont throw blanket figures to support your claim.
a state that is not able to nourish its women and children doesnt deserve to be called a developed state. check out some statistics. even somalia fares better than gujarat in malnourishment. its a shame on gujarat and modi.
எலெக்ஷன் கமிஷன் கண்ணில் விளக்கெண்ணெய் இட்டுக் கொண்டு ஒரு பூத் ஏஜண்ட் அளவுக்கு காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டு குஜராத்தில் தேர்தலை நடத்தினாலும் மோதி வெற்றி பெறுகிறாரே, அது ஏன் என யோசிக்க வேண்டாமா?
பரவாயில்லை. குஜராத்திகள் புத்திசாலிகள். ஆயிரம் ரஹ்மான்கள் அல்லது கிருஷ்ணகுமார்கள் வந்தாலும் மோதியை அசைக்க முடியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@DONDU,
well. you still havent answered the question.
//well. you still havent answered the question.//
என்ன புடலங்காய் கேள்வி?
//even somalia fares better than gujarat in malnourishment. its a shame on gujarat and modi.//
ராகுலுக்கு இதைச் சொல்லியிருந்தால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்குமே, கோட்டை விட்டீர்களே? சரியான காமடி பீஸ் ஐயா நீங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//well. you still havent answered the question.//
என்ன புடலங்காய் கேள்வி?
dont get irritated. there will be critics everywhere. if you cant take criticism positively you should not be in public space.
you said that modi has not done any mistake during his rule. i gave you facts about gujarat malnutrition and you are replying about his personal wealth, congress canvassing, rahul gandhi etc but not about gujarat's malnourishment.
winning an election is different, efficiently administering a state is different.
@ரஹ்மான்
//dont get irritated.//
Not irritated, just amused.
Regards,
Dondu N. Raghavan
ஊட்டசத்து குறைந்த உணவு, இது உணவு பற்றாகுறையால் வருவதில்லை அவர்களுடைய உணவு பழக்கத்தில் வருவது. இட்லி, தோசை சோறு என்று எதைக்கொடுத்தாலும் அவர்கள் சாப்பிடமாட்டார்கள். அவர்களின் விருப்ப உணவு கம்பு ரொட்டியும் கோதுமை ரொட்டியும் மட்டுமே,மேலும் இங்கு எவரும் காலை சிற்றுண்டி அருந்தும் பழக்கம் இல்லை காலையில் டீ யுடன் சிறிது காராசேவ் போன்ற அயிட்டத்தை 50 கிராமுக்கும் குறைவாகவே சாப்பிடுவார்கள். மாமிச உணவினை 90% இந்து மக்களின் வீடுகளில் சமைப்பதில்லை குஜராத்தில் கண்ணில் படும்படி எங்கும் இறைச்சி கடைகளை காணமுடியாது.சங்க்ளித் பான் விகாஸ் சேவா யோஜனா திட்டத்தின் மூலம் ஊட்டசத்துபான உணவு பாக்கெட்டுகள் மற்றும் விட்டமின் மாத்திரைகள் வாரந்தோறும் வீடுகளுக்கே வந்து கொடுக்கிறார்கள் அதை மக்கள் பயன்படுத்துவதில்லை ஊட்டசத்து உணவுப் பாக்கெட்டுகளை மாடுகள் தின்கிறது.சத்துக்குறைபாட்டிற்கு அந்த மக்களே காரணம் பட்டினியால் செத்தால் மட்டுமே அரசு காரணம் என்று சொல்லலாம்.
//. ஆனால் குஜராத்தில் தேனாறும் பாலாறும் ஓடுகின்றது என சொல்வது வேடிக்கை, அப்படி ஓடினால் ஆயிரக் கணக்கான குஜராத்திகள் கனடா, அமெரிக்காவுக்கு படையெடுக்க வேண்டிய அவசியம் இராதே.//
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் செல்பவர்கள் பஞ்சம் பிழைக்க செல்பவர்கள் இல்லை சாப்பாட்டுக்கு வழியில்லாதவன் எல்லாம் அமெரிக்காவும் கனடாவும் போகமுடியாது. இங்கிருந்து அடிமை வேலைக்கு யாரும் வளைகுடா நாடுகளுக்கு செல்வதில்லை.மதிய உணவிற்கு பின் 1 மனி முதல் 3 மனி வரை ஒரு சிகரெட் கூட கிராமங்களில் வாங்கமுடியாது. உணவுக்குப்பின் ஓய்வு என்று சுகமான வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சோ அவர்கள் துக்ளக்கில் கூறிய பாயிண்டுகள்:
1. குஜராத் மக்கள் வென்றிருக்கிறார்கள்.
2. அவர்களை ஓசி கலாச்சாரத்துக்கு கொண்டு வர காங்கிரஸ் செய்த முயற்சிகள் தோற்றன.
3. கேஷுபாய் படேல் மேற்கொண்ட முதுகில் குத்தும் வேலை பலிக்கவில்லை. அவரது வேட்பாளர்கள் பலர் டிபாசிட் இழந்தனர்.
4. 61 இடங்கள் பெற்ற காங்கிரஸ் கட்சி வெற்றி பெர்றது, இதே மாதிரி லோக்சபா தேர்தலிலும் பாஜக பெறும் சீட்டுகளில் பாதியை மட்டுமே அது பெறக்கடவது.
முழுதாக படிக்க, பார்க்க, துக்ளக் இதழ் 02.01.2013 தேதியிட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இங்கிருந்து அடிமை வேலைக்கு யாரும் வளைகுடா நாடுகளுக்கு செல்வதில்லை.//
your facts are wrong. there are tens of thousands of gujaratis in all gulf countries including saudi arabia and egypt. i dont know whether they are working as slaves in gulf. but i know for a fact that they are there.
மாமிச உணவினை 90% இந்து மக்களின் வீடுகளில் சமைப்பதில்லை குஜராத்தில் கண்ணில் படும்படி எங்கும் இறைச்சி கடைகளை காணமுடியாது
காசா பணமா அடிச்சு விடுங்க புரட்சி தமிழன் அன்னாச்சி
http://www.thehindu.com/opinion/op-ed/not-vegetarianism-or-dieting-mr-modi/article3939379.ece
http://articles.timesofindia.indiatimes.com/2009-11-02/ahmedabad/28083993_1_gujarat-government-fishing-boats-cent-rise
Senior sociologist professor Ghanshyam Shah believes the myth that Gujarat is a vegetarian state was exploded a decade ago by a survey of Anthropological Survey of India, which said 70 per cent of the state was non-vegetarian. "Ten per cent Muslims, seven per cent Dalits, 40 per cent OBCs and 14 per cent Adivasis are all meat eating," he says. "Among the OBCs, only smaller artisan communities like Prajapatis and Suthars, forming seven per cent, are traditionally vegetarian. Among upper castes, Rajputs are traditionally meat eaters."
மகர நெடுங்குழைக்காதரின் பக்தருக்கு புத்தாண்டு வாழ்த்துகள். மாமி, மற்றும் பசங்களைக்கேட்டதாகச் சொல்லவும். இன்றைக்கு தினமலரில் இந்தத்திருநாமம் எப்படி தென் திருப்பேரை பெருமாளுக்கு வந்தது எனப்போட்டிருக்கிறார்கள் படியுங்கோ!
ஜெயலலிதா தனித்துப்போட்டி. பிஜேபியுடன் கூட்டு இல்லை.
இது ஒரு நல்ல புத்தாண்டுச்செய்தி. எனக்கு.
உங்களுக்கு எப்படி சார்?
@குலசேகரன்
புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் அவ்வாறே ஆகுக.
ஜெயலலிதாவுடன் கூட்டணி இல்லை என்றால் பிஜேபிக்கு பல அவமானங்கள் மிச்சம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment