கார்த்திக் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில பதிவுகளுக்கான உந்துதலைத் தந்து விட்டார். அவை நன்றாக உங்களுக்குப் பட்டால் நன்றி அவருக்கு, நன்றாக இல்லையென்றால் கண்டனம் எனக்கே. என்ன, சரியானப் பங்கீடுதானே?
இதில் நடு நடுவே ஆங்கிலம் வரும். ஏனெனில் தர்க்க சாஸ்திரம் சம்பந்தப்பட்ட சில தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு என்னிடம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சொல்லாட்சி இல்லை.
தர்க்க சாத்திரம் என்பது விஞ்ஞானத்துக்கு விஞ்ஞானம், கலைக்குக் கலை என்று கூறுவார்கள். விளக்குவேன். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்கள் எல்லாமே தர்க்க சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டவையே. அதே சமயம் அவற்றை ஒழுங்கான முறையில் அணிவகுத்து வெளியிடுவது ஒரு கலையே. Hence logic is a science of sciences and art of arts.
விஞ்ஞானப் பிரிவுகள் இருவகைப்படும். ஒரு வகை இருப்பதை இருப்பது போலக் கூறுவது. உதாரணம் வான சாஸ்திரம். கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பது நாம் விடாது கிரகணங்களை நோக்கியதாலும் அதைப் பற்றி பரிசோதனைகள் மேற்கொண்டதாலும் நமக்குத் தெரிய வருகிறது. இப்போது நாம் துல்லியமாகக் கிரகணங்களை கணிப்பது அவற்றை பற்றி நாம் கண்டுணர்ந்ததன் எதிரொலியேயாகும். நாம் சொல்லி அவை வருவதில்லை. இவைகளை positive sciences என்று கூறுவார்கள். மற்றொரு வகை எவ்வாறு இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவது. உதாரணம் எதிக்ஸ், தர்க்க சாஸ்திரம் போன்றவை. தர்க்கம் செய்ய விதிகள் உண்டு. அவற்றை மீறினால் தர்க்கம் தவறாகி விடும்.
இப்போது தர்க்க சாஸ்திரத்துக்கு வருவோம். அவை deduction மற்றும் induction எனப்படும். Deduction என்பது பொது விஷயங்களிலிருந்து குறிப்பிட்ட விஷயங்களுக்கு வருவதாகும். உதாரணம்:
All men are mortal.
Socrates is a man
___________________
Therefore Socrates is mortal.
This is a valid argument using categorical syllogism.
Categorical syllogisms are named as such because they divide things up into categories. These form groups which can be analyzed using set theory and displayed using Venn diagrams.
There are six rules that categorical syllogisms must obey:
All syllogisms must contain exactly three terms, each of which is used in the same sense.
The middle term must be distributed in at least one premise.
If a major or minor term is distributed in the conclusion, then it must be distributed in the premises.
No syllogism can have two negative premises.
If either premise is negative, the conclusion must be negative.
No syllogism with a particular conclusion can have two universal premises.
When you hear people talking about syllogisms without describing what type of syllogism, they often mean categorical syllogisms.
Categorical syllogisms are sometimes viewed as being a 'spatial reasoning' as it divides the world up into 'spaces'. This is creating a 3D image of the categories, or sets.
The basic flaw that often appears is the an assumption that if you have one characteristics of a group, you have all of the characteristics of the group. This leads people into stereotyping and comments such as 'Oh, they are all like that.'
Whenever you hear a generalization (all, never, some, most, etc.) there is a good chance that there is a categorical syllogism in there that you can challenge.
On the other hand, you can create your own categorical syllogisms, which will often go unchallenged.
என்ன தலை சுற்றுகிறதா. அதுதான் லாஜிக்.
சில வாதங்கள் பார்ப்பதற்கு சரியாகத் தோன்றலாம் ஆனால் அவை தவறானவை.
இப்போது பாருங்கள்:
All soverigns are circular.
Queen Elizabeth is a sovereign
Therefore Queen Elizabeth is circular.
The above argument commits the fallacy of ambiguous middle. இங்கு பொதுவாகக் கூறப்பட்டது sovereign. இதற்கு ஒரு பொருள் சவரன் இன்னொரு பொருள் அரசன் அல்லது அரசி. இரண்டும் ஒரே பொருளுடன் இருப்பது அவசியம். இங்கு அவை வெவ்வேறு பொருளில் கூறப்பட்டுள்ளன. அவை இங்கு பொருந்தா. இவ்வாறு பல வாதங்களிலிருந்து தவற்றைக் கண்டுபிடிப்பதே லாஜிக்கின் வேலை என்று கூடப் பொருள் கொள்ளலாம்.
இது சம்பந்தமாக ஒரு பலான ஜோக் உண்டு. ஆனால் அது இங்கு வேண்டாம்.
சமீபத்தில் கல்வியாண்டு 1962-63-ல் புதுக்கல்லூரியில் எங்களுக்கு லாஜிக் போதித்தவர் திரு. முகம்மத் காசிம் அவர்கள். அவர் ஓர் எடுத்துக்கட்டு கூறுவார். நடப்பது மனிதனுக்கு இயல்பு ஆனால் ராணுவத்தில் தாளத்துக்கேற்றவாறு நடப்பதைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதே போல சிந்திப்பது என்பது எல்லோரும் செய்வது என்பது உண்மையானால் தர்க்க சாஸ்திரம் சில விதிகளுக்கு உட்பட்டு தர்க்கம் செய்யச் சொல்லிக் கொடுக்கிறது என்பார் அவர்.
அடுத்தப் பதிவில் மற்றத் தாளங்களைப் பார்ப்போம். அவற்றில் தோன்றக்கூடியத் தப்புத்தாளங்களையும் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
6 hours ago
9 comments:
தர்க்க சாஸ்த்திரம் என்பதற்கு தமிழில் ஏதேனும் சம வார்த்தைகள் உள்ளதா?
தர்க்க சாஸ்த்திரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.
தலைப்பின் சுட்டி சரியாகக் காட்டப்படவில்லை.
சரிபார்க்கவும்.
நன்றி.
பூங்குழலி.
பகுத்தறிவு என்று கூட ஒரு பொருள் இருக்கிறது. ஆனால் இப்பதிவின் விஷயத்துக்கு ஏற்றத் தலைப்பாக அது இல்லை.
தலைப்பின் சுட்டியில் என்ன பிரச்சினை? எனக்குப் புலப்படவில்லையே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு ஜோக் உண்டு ..ஆசிரியர் தர்க்க சாஸ்த்திரம் நடத்திவிட்டு , மாணவனிடம் ஒரு உதாரணம் சொல்ல சொன்னாராம் .. நம்பாளு சொன்னாராம் ' I love you, sir .
you love your daughter . So I love your daughter' ;)
வருக தாசு அவர்களே. நீங்கள் கூறிய வாதத்தில் fallacy of four terms இருப்பதாக தர்க்க சாஸ்திரம் கூறுகிறதே.
இன்னொரு உதாரணம் இந்த தர்க்கத் தவறுக்கு.
Platoon obeys the commander.
The commander obeys his wife.
Ergo, army obeys the wife.
ஆனால் இது நல்ல வாதம் போலத் தோன்றவில்லை? சில சமயம் உண்மையாகவும் இருக்கிறது. Because people are generally illogical, you know.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வருக ஆறாம் புலன் அவர்களே. இந்த வாதத் தவறுக்குப் பெயர் fallacy of the undistributed middle. வட மொழியில் அவ்வியாபக மத்திய பதம் என்று கூறுவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அருமை டோண்டு சார்.
தொடருங்கள்.
என்னுடைய பதிவில் சன்னாசி ஒரு காமெண்ட் அடித்திருந்தார்.
தலைவர் அரிஸ்டாட்டில் வாழ்க என்று. அது ஒரு சுட்டி. அதைத் தொடர்ந்து போனால் அங்கே அவர் சுட்டிக் காட்டியிருந்தது - syllogism. இதை நேராகவே சொல்லி இருக்கலாமே என்று குறிப்பிட்டிருந்தேன்.
இந்த வார்த்தை பலகாலமாகவே புழக்கத்தில் இருந்தது. மக்கள் அறிந்தோ அறியாமலோ அதை உபயோகித்து வந்தார்கள். வாதத்திலிருந்து நழுவி செல்ல விரும்பும் ஒருவர் - மற்றவரைப் பார்த்து சொல்லுவது - என்னவே, சிலாக்கியம் பேசி திரியுதீரு என்று.
மேலும் எழுதுங்கள்.
வலைப்பதிவாளர்களுக்கு அவசியமான பதிவு.
நன்றி.
"வாதத்திலிருந்து நழுவி செல்ல விரும்பும் ஒருவர் - மற்றவரைப் பார்த்து சொல்லுவது - என்னவே, சிலாக்கியம் பேசி திரியுதீரு என்று." சிலாக்கியத்தில் தவறொன்றுமில்லை. அதைத் தவறாக பிரயோகம் செய்வதில்தான் பிரச்சினையே வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்
சுத்தரது மேலே நின்னுக்கிட்டு சுத்தாத பார்த்தா சுத்தாததும் சுத்தர மாதிரி தெரியும்.
உங்களுக்கு விளக்கம் தெரியும்னு நினைக்கிறேன்..
மாயா
சார்
சுத்தரது மேலே நின்னுக்கிட்டு சுத்தாத பார்த்தா சுத்தாததும் சுத்தர மாதிரி தெரியும்.
உங்களுக்கு விளக்கம் தெரியும்னு நினைக்கிறேன்..
மாயா
நன்றி மாயா அவர்களே. உங்கள் பின்னூட்டத்தை ஏற்றுக் கொண்டபிறகும் இப்பெட்டிக்கு வர மறுக்கிறது. ஆகவே அப்படியே நகல் எடுத்து ஒட்டுகிறேன்.
What you are trying to say is based on relativity theory.
Regards,
Dondu N.Raghavan
Post a Comment