ஜோஸஃப் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ.
"கலக்கிட்டீங்க ஜோஸஃப் அவர்களே. என் C.P.W.D. அனுபவம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது."
மத்தியப் பொதுப்பணித்துறையில் நான் பத்து ஆண்டுகள் இளநிலை மின் பொறியாளராக இருந்தேன். கடைசி 7 ஆண்டுகள் ஆவடியில் உள்ள மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்தில் போஸ்டிங். கட்டிடங்களுக்கு மின்சார வையரிங் செய்தல், தெரு விளக்கு போடுதல், நிலத்தடி கேபிள் இடுதல் ஆகிய பணிகள். எல்லா வேலைகளையும் ஒப்பந்தப் புள்ளிக்காரர்கள் செய்ய நாங்கள் செய்த வேலைகளை அளந்து அளவை புத்தகத்திலிட்டு, பில்கள் தயார் செய்து மேலே அனுப்ப வேண்டும். செம வேலை. கட்டிடங்கள் பாட்டுக்கு வந்து கொண்டிருந்தன. என் மேற்பார்வையில் 10 கட்டிடங்களுக்கு மேல். கேம்பஸ் முழுக்க ஒவ்வொரு கட்டிடமாகச் சுற்ற வேண்டியது.
விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கான பாயின்டுகள் short, medium & long என்று பிரிக்கப்படும். மூன்று மீட்டர்கள் நீளத்துக்கு குறைவானவை ஷார்ட் பாயிண்டுகள், 3-6 வரை மீடியம் மற்றும் 6 மீட்டர்களுக்கு மேல் லாங்க் பாயிண்டுகள். இங்கு நான் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ள இந்த தகவல் அவசியம், ஆகவே கூறினேன்.
120 போலீஸ்காரர்களை தங்க வைக்க வசதி உடைய 7 பேரக்ஸ்கள் கட்ட வேண்டும். அதில் பல ஹால்கள் உண்டு. ஹாலின் நடு வரிசையில் வரும் விளக்குகள் லாங்க் பாயிண்டுகள். அவற்றின் நீளம் 6.35 மீட்டர்கள்.ஆனால் ட்ராயிங்கில் அவை மீடியம் பாயிண்டாகக் குறிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் என்ன அளவு நேரடியாக எடுக்கப்படுகிறதோ அதைத்தான் அளவைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். அந்த முறையில் நான் லாங்க் என்றே அவற்றைக் குறிப்பிட்டேன். திடீரென பொருளாதார நெருக்கடியால் இரண்டு பேரக்ஸ்களுடன் அப்போதைக்கு வேலையை நிறுத்தி விட்டனர். ஆகவே அவற்றுக்கான பில் மட்டும் போட்டு கணக்கை முடிக்க வேண்டியிருந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு மீதி ஐந்து பேரக்ஸுகள் கட்டுவதற்கு க்ளியரன்ஸ் வர அவற்றுக்கான வேலைகள் ஆரம்பித்தன. இங்குதான் விதி விளையாடியது. சிவில் தரப்பில் திடீரென ஒவ்வொரு மாடிக்கும் ஒரு அடி உயரத்தைக் குறைத்து விட்டனர். அது எங்களுக்குத் முதலில் தெரியாது. மீதி எல்லாம் ரிபீட் ஆகவே நான் முதல் இரண்டு பேரக்ஸ்கள் போலவே இங்கும் பாயிண்டுகளை வகைப் படுத்தி விட்டேன். ஆனால் இந்த லாங்க் பாயிண்டுகள் நீளம் 30 செ.மீ. அளவில் குறைந்து 6.05-லிருந்து 5.95 வரை வந்து விட்டன. அவற்றை பார்டர்லைன் பாயிண்டுகள் என்போம். சாதாரணமாக மீடியம் என்றே குறிப்பிடுவோம். எனக்கு உயரம் குறைத்த விஷயம் தெரிந்திருந்தால் அவ்வாறே எல்லாவற்றையும் மீடியமாக அளந்திருப்பேன். எல்லாவற்றையும் போட்டு இரண்டு பில்கள் வந்தவுடந்தான் எனக்கு உயரம் குறைந்த விஷயம் தெரிந்தது. இப்போது அளவை புத்தகத்தில் போட்டதை மாற்றவும் முடியாது. அதற்குள் இந்த விஷயத்தை மேலிடத்திற்கு யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
எதிர்ப்பாராத வகையில் இந்த பாயிண்டுகளை செக் செய்ய E.E. அவர்களே வருவதாகக் கூறி விட்டார். எங்கள் A.E. அவர்கள் என்னிடம் இது பற்றிக் கூறி, "என்ன ராகவன், உங்களைக் காப்பாற்ற முடியாது போலிருக்கிறதே" என்றார். இந்த அழகில் முகத்தில் ஒரு புன்முறுவல் வேறு. எனக்கு எரிச்சலான எரிச்சல். இருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல் கூறினேன். "ஆமாம் சார், நாம் இருவருமே கஷ்டத்தில் இருக்கிறோம்" என்றேன். ஸ்விட்சை அணைத்தது போல புன்னகை மறைந்தது. "துரதிர்ஷ்டவசமாக நீங்களும் அதே பாயிண்டுகளை செக் செய்து கையெழுத்திட்டிருக்கிறீர்கள்" என்று அவரிடம் அன்புடன் எடுத்துரைத்தேன்.
அப்புறம் என்ன, இ.இ. வந்த போது, இவரே டேப்பைப் பிடித்து சார் 6.12 மீட்டர்கள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூற இ.இ. யும் திரும்பிச் சென்றார். ஆக என் ஞாபகசக்தி என்னைக் காப்பாற்றியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
2 comments:
CPWD பற்றி நிறைய அனுபவங்களை - training sessionல் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரு முறை எங்கள் மூத்த அதிகாரி
ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
அந்த நிறுவனம் CPWDல் எப்பொழுதும் வேலை எடுக்கும். முறையாக எல்லோரையும் கவர் கொடுத்து
கவனித்து விடுவார்கள். அதனால் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் புதிதாக ஒரு துணை பொறியாளர் வந்தார். அவர் எதிர்பார்த்ததை
விட கம்மியாக கவரில் இருக்கவும் அவர் அதைப் பற்றி முறையிட்டு தனக்கு இன்னமும் அதிகம் வேண்டுமென்றார். வழக்கமான தொகையைத் தான்
தர முடியும் - அதற்கு மேல் முடியாது என்று சொல்லி விட்டனர். து. பொ. பயங்கர கோபம். இவர்களை எங்காவது மாட்டி விட வேண்டும்
என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஒவ்வொரு வேலையையும் கூர்ந்து கவனித்து வந்தார். இந்த நிலையில், இந்த நிறுவனமும் உஷாரக இருந்தது.
எப்படியும் மாட்டிக்க கூடாது என்று specification புத்தகத்தை நன்றாக வாசித்து அதன் படி தவறாமல் வேலையையும் செய்து முடித்து விட்டனர்.
இனி இறுதியான பில்-ஐ தணிக்கை செய்ய வேண்டும். அது தான் கடைசி சந்தர்ப்பம். அதை விட்டால் அப்புறம் பழி வாங்க முடியாது. அந்த து.பொ. இரவெல்லாம்
கண்விழித்து புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார். கடைசியில் அதிகாலை வேலையில் எதையோ கண்டுபிடித்து விட்டார். மறுநாள் அலுவலகம் திறந்த உடன்
நிறுவனத்தைச் சார்ந்த பொறியாளர்கள், பணியாளர்கள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, கட்டிடத்திற்குச் சென்றார்.
எந்திரத்தின் அடிப்பாகத்தைக் காண்பித்து "இதென்ன?" என்று கேட்டார்.
'' பவுண்டேஷன் சார்'' என்றனர்.
"சரி - இதற்கு நீர் விட்டீர்களா?"
"ஆமாம் சார் - நன்றாக விட்டோம் சார்"
"எங்கிருந்து நீர் எடுத்து வந்தீர்கள்?"
"டாங்கரில் கொண்டு வந்தோம்"
"அப்போ, இது கிணற்றுத் தண்ணீர் இல்லையா?"
"இல்லையே - ஏன் சார்?"
"அப்படியானால் - உங்களுக்கு பில் அனுமதிக்க முடியாது."
"ஏன்?"
"நன்றாக வாசித்துப் பாருங்கள் - என்ன எழுதியிருக்கிறதென்று" சொல்லி விட்டு வாசிக்க ஆரம்பித்தார் - "The foundation shall be well watered என்று இருக்கிறது.
நீங்களோ கிணற்றுத் தண்ணீர் விடவில்லை. அதனால் தவறிழைத்து விட்டீர்கள்" என்றார்.
இந்தக் கதையை பயிற்சியின் போது சொல்லிவிட்டு அவர் சொல்லியது - CPWD ஆட்களுடைய குறுக்குச் சிந்தனை இது. அவர்களைச் சமாளிக்க வேண்டுமென்றால் - அவர்கள்
அளவிற்கு நீங்களும் குறுக்குச் சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
உங்கள் அனுபவம் அதை சரி என்கிறது. மேலும் சொல்லுங்கள்.
நன்றி நண்பன் அவர்களே. நீங்கள் சொன்ன நிகழ்ச்சி நன்றாக இருந்தது. இருப்பினும் நிறுவனத்தினர் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தால் ஒரே நிமிடத்தில் அந்தத் துணைப் பொறியாளர் அந்த சைட்டிலிருந்து விலக்கப்பட்டிருப்பார். மேலும், அஸ்திவாரம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள். ஒரு குறிப்பிட்ட இயந்திரமா அல்லது கட்டிடமா? எது எப்படியானாலும் அஸ்திவாரம் கணிசமான அளவில் இருந்தால் அதற்கு முதலிலேயே ஒரு பார்ட் பில் போடுவார்கள்.உண்மையைக் கூறப் போனால் சிவில் வேலைகளில் மாதத்துக்கொருமுறை பில் போட்டேயாக வேண்டும். நான் இருந்த மின்துறையில் வேண்டுமானால் பில்கள் சற்றுத் தாமதமாக வரலாம். சிவிலில் இல்லை. ஆகவே உ.பொ. வின் இந்த ஆட்சேபணை ஏற்கனவே பார்ட் பில்களை செட்டில் செய்த டிபார்ட்மெண்டுக்கே வினையாக முடியும். ஆகவே அந்த து.பொ. உடனே மாற்றப்படுவார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment