7/19/2008

டோண்டு ராகவன் கிரிக்கெட் காமண்டரி செய்தால் எப்படி இருக்கும்?

தலைப்புக்காகவே இப்பதிவை மொக்கையில் வகைபடுத்துகிறேன். அதே கேள்வியை பதிவின் கடைசியிலும் மறுபடி கேட்கிறேன்.

கிரிக்கெட் பற்றி நான் ஏற்கனவே எனது எண்ணங்களை எழுதியுள்ளேன். இப்போது மேலும் சில எண்ணங்கள். முக்கியமாக நேர்முக வர்ணனைகள் பற்றி.

கிரிக்கெட் போட்டிகள் கன்னாபின்னாவென்று எண்ணிக்கையில் உயர்ந்து விட்டன. டெலிவிஷன் வேறு வந்துவிட்டது. ஆகவே அவற்றின் நேர்முக வர்ணனைகளை லைவ் ஆக பார்க்க/கேட்க இயலுகிறது. எல்லாமே முன்னேற்றம்தான், ஆனால் இது ஒரு வகையில் இழப்பே. சமீபத்தில் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இந்தியாவில் டெஸ்ட் மேட்சுகள்தான் பிரபலம். ஒரு நாள் ஆட்டங்கள் லீக் அளவில்தான் ஆடப்பட்டன. ரஞ்சி கிரிக்கெட் போட்டிகள் கூடவே உண்டு. அத்துடன் மதறாஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடக்கும் கோபாலன் ட்ராஃபி அவ்வளவுதான். இதுவரை நான் மேலே குறிப்பிட்ட கிரிக்கெட் மேட்சுகளில் ஒன்றைக்கூட நேரடியாகப் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று தோன்றக்கூட இல்லை. நான் நினைக்கிறேன், எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் ரங்கா ராவ் அவர்கள் கூறிய ஒரு கருத்துதான் என்னை இந்த முடிவுக்கு தள்ளியது என்று.

அவர் கூறுவார், "ஆமாண்டா பத்து மணிக்கு மேட்சுக்கு காலங்கார்த்தாலேயே போய் உட்காருவாங்க, மேட்ச் எல்லாம் முடிந்து மாலை செங்குரங்கு மாதிரி மூஞ்சியோட வருவாங்க. எவ்வளவு டைம் வேஸ்ட்"! அம்மாதிரி செங்குரங்காக ஆகக்கூடாது (ஏற்கனவேயே மூஞ்சி பார்க்க சகிக்காது) என்று என் இளமனதில் எண்ணம் உருவாகிவிட்டது என நினைக்கிறேன். நிற்க.

ஆனால் காமெண்டரிக்கள் ரேடியோவில் வரும். Vizzy என்று செல்லமாக அழைக்கபடும் விஜயநகர மகாராஜா, ஆனந்தராவ் (ஹோட்டல் தாசப்பிரகாஷ் மேனேஜர் என்று சொல்லுவார்கள்), பாலு அளகன்னன், ஆர்.டி. பார்த்தசாரதி, நரோத்தம்பூரி, விஜய் மெர்சண்ட் ஆகியோர் ஆங்கிலத்தில் கமெண்டரி சொல்லுவார்கள். தமிழில் நம்ம சாத்தான்குளத்தாரின் தந்தை ஜப்பார் அவர்கள் போன்ற சிலர் தூள் கிளப்பியிருக்கிறார்கள். இம்மாதிரி ரேடியோ காமண்டரிகள் நமது கற்பனைக்கு அதிக வேலை கொடுக்கும். உதாரணத்துக்கு, "The batsman leans on the ball" என்று ஒரு வாக்கியம் வந்து என்னை அடிக்கடி படுத்தும். எங்காவது படக்கூடாத இடத்தில் பேட்ஸ்மேனுக்கு பட்டுவிடப்போகிறதே என அச்சம் வரும். மேலும், ஆனந்த ராவ் ஒரு மாதிரியான முகாரி ராகத்தில் கமெண்டரி சொல்வது கேட்கத் தமாஷாக இருக்கும். பாலு அளகன்னன் கமெண்டரி சொல்ல ஆரம்பித்தாலே இந்திய விக்கெட்டுகள் சரிகின்றன என கடுப்படிப்பார்கள் சிலர். பிறகு வேறுவிஷயங்களில் ஆர்வம் சென்றதில் கிரிக்கெட் காமெண்டரி கேட்கும் வழக்கமும் எனக்கு இல்லாது போயிற்று. ஆகவே தமிழில் நேர்முக வர்ணனைகள் கேட்டதில்லை.

சற்றே மலரும் நினைவுகள். சமீபத்தில் 1960-61 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஐந்து டெஸ்ட் மேட்சுகள் சில எக்ஸிபிஷன் மேட்சுகள் நடத்தப்பட்டன. சொல்லிவைத்தாற்போல அத்தனையும் டிரா. அதிலும் தில்லியில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் பேட் செய்யத் துவங்கி ஒரே ஒரு விக்கட் நஷ்டத்தில் 300 ரன்கள் எடுத்தபோது நமது டென்ஷன்கள் ஜிவ்வென்று ஏறின. ஹனீஃப் முகம்மது இப்போது ரன் அவுட் ஆனார். பிறகு மளமளவென்று சரிந்து 350 ஆல் அவுட். இதெல்லாம் கிரிக்கெட்டில்தான் சாத்தியம். அதிலேயே இரண்டு நாட்கள் போயின. பிறகு களமிறங்கிய இந்தியா பத்தாவது விக்கெட்டுக்கு நூறுக்கு மேல் பார்ட்னர்ஷிப் செய்து 450 ஸ்கோர் எடுத்தது. ஆனால் அது உலக ரிக்கார்ட் இல்லையாம். சமீபத்தில் 1888-ல் சிட்னியில் நடந்த டெஸ்ட் மேட்சில் பத்தாவது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப் இதைவிட அதிகமாம். ஒழியட்டும். இதிலேயே நான்கு நாட்கள் காலி. அப்புறம் எப்படி இரண்டு இன்னிங்ஸ்கள் ஆட நேரம்? மேட்சு டிராதான். அதே சீரீஸில் சென்னை மேட்ச் "தேன் நிலவு" படத்தில் முதல் காட்சியில் வருகிறது என்பது அதிகப்படியான செய்தி.

கிரிக்கெட் காமண்டரிகளை பற்றி கூறினேன் அல்லவா. அதில் Vizzy செய்யும் காமெண்டரிகள் தனி ரகம். ஒரு டிபிகல் கமெண்டரியை இட்டுக்கட்டி கூறுகிறேன். ஆனால் அவ்வறுதான் அவர் கமெண்டரி தருவார்.

"Ramakanth Desai comes in and bowls... a bumper!!!! Hanif Mohammed swings but misses the line of ball completely. The wicket keeper fails to gather and the ball goes all the way for four runs. Umpire signals a bye. Way back in the thirties, Jardine instituted his famous bodyline and had Bradman caught. In the year 1936 Mushtak Ali handled such a bumper admirably and converted it to a six. In the meantime four more balls have been bowled and Hanif Mohammed is bowled. The next batsman Imtiaz Ahmed is retired hurt in the first ball. The fourth ball was a noball and yielded four runs as bye as the wicket keeper again failed to gather it. Talking of Jardine, I am forced to recall that he killed the spirit of the game. Once he was coming in to bowl, the runner had given a start and was away from the crease, wherupon Jardine struck the stumps at the bowler's end and appealed 'Hozatt". The runner had to be given out. It was just a school match played out in the year 1924, but you see the man is revealed in his true colours even when a kid. In the meantime A.G. Kripal Singh has bowled an over and gave away 12 runs".

மேலே உள்ள பத்தியில் தடித்த கோணல் எழுத்துக்களில் இருப்பவை Vizzy-யின் மலரும் நினைவுகள். இப்போது கூறுங்கள், டோண்டு ராகவன் கிரிக்கெட் காமண்டரி செய்தால் எப்படி இருக்கும் என்பதில் ஏதும் சந்தேகம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

ezhil arasu said...

ஒரு (மொக்கை) கமெண்ட்.

ஒரு மேல் நாட்டு அறிஞர் சொன்னாராம்

"eleven fools are playing
eleven thousnad fools are seeing"

1.கிரிக்கெட் மத்த விளையாட்டுகளை குழி தோண்டி குப்புறத்தள்ளிவிட்டது.

2.கிரிகெட்டில் சூதட்ட்டம் கொடி கட்டி பறக்கிறது

3.ஜாதி,மத,மாநில அரசியல் வேறு

4.நட்டுக்காக விளையாடமல் தனது சொந்த புகழுக்க்காக விளையாடும் சுயநலமிகள்

5.மனித ஊழைப்பின் நேரத்தை உறிஞ்சும் அரக்கன்

6. எல்லவற்றிற்கும் மேலே கிரிகெட் மேட்ச் ந்டக்கும் போது வீட்டு டீவி பையன்கள் ஆட்சியில்.
---------------------

அது சரி 10 மணி நேரமாச்சு யாரும் பின்னூட்டம் போடலியே.காரணம் என்ன தெரியவில்லை.இதில் ஏதாவது?

dondu(#11168674346665545885) said...

//அது சரி 10 மணி நேரமாச்சு யாரும் பின்னூட்டம் போடலியே.காரணம் என்ன தெரியவில்லை.இதில் ஏதாவது?//

இன்று ஆடி சனிக்கிழமை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Tech Shankar said...A video about S/w Engineers LifeEnjoy

TamilNenjam

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தலைப்பிற்கு மட்டுமான என் பதில் :
கேவலமாக இருக்கும் :)

வலைஞர்! said...

http://vinavu.wordpress.com

karurtoday said...

நல்ல மொக்கை

karur

Anonymous said...

பாயாசத்தில் வத்தல்குழம்பு ஊற்றி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ,அப்படி இருக்கும் !

கோமணகிருஷ்ணன்

Anonymous said...

//Anonymous said...
பாயாசத்தில் வத்தல்குழம்பு ஊற்றி சாப்பிட்டால் எப்படி இருக்குமோ,அப்படி இருக்கும் !

கோமணகிருஷ்ணன்

டோண்டு அவர்களை ஒரு வழி பண்ண ............

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது