செந்தழல் ரவி, உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மூர்த்தியின் மேல் புகார் அளித்து அது பத்திரிகைகளிலும் வந்தது தெரிந்ததே. அதற்கு ஒரு வாரம் கழித்து நானும் சென்றேன். எனது புகார் சைபர் கிரைமில் ஒரு உதவி ஆய்வாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் என் பெயரில் மூர்த்தி தயாரித்த ஆர்க்குட் ஆபாச பக்கங்களை காண்பித்தேன். மொத்தம் 23 ப்ரொஃபைல்கள். எல்லாவற்றையும் பொறுமையாக அவர் ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுத்தார். நேரம் ஆக ஆக மூர்த்தியின் மேல் அவரது கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது. போலி டோண்டு பற்றி நான் இட்ட பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்தார் அவர்.
முதல் காரியமாக ஆர்க்குட் பக்கங்களை அவர் கூகளுக்கு எழுதி அழிக்கச் செய்தார். டுண்டூ பதிவர் எண்ணில் போடப்பட்டிருந்த மூன்று வலைப்பூக்கள் அழிக்கப்பட்டன. வெளியில் சொல்லாமல் கமுக்கமாக விசாரணை நடத்தப்பட்டது. கூகள் நிறுவனம் ஒத்துழைத்தது. மலேஷியாவுக்கும் செய்திகள் பறந்தன. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நேற்று ஒரு விஷயம் நடந்தது.
நேற்று சைபர் க்ரைமில் வைத்து போலி டோண்டு மூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்தேன். கேசை விசாரித்து வரும் அதிகாரிகளே மூர்த்தியின் செயல்பாடுகளைப் பார்த்து நொந்து போயினர். புகார் அளித்தவன் என்ற ஹோதாவில் என்னையும் அங்கு அழைத்ததால் நான் அங்கு சென்றிருந்தேன்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விசாரணை. மூர்த்தி இட்டிருந்த பதிவுகளின் அச்சடிக்கப்பட்ட காகிதங்களுடன் பதிவர் உண்மைத் தமிழனும் ஆஜரானார். என் தரப்புக்கு நானும் சைபர் கிரைம் அதிகாரியிடம் மூர்த்தியால் உருவாக்கப்பட்ட உரல்களை எடுத்து தந்தேன்.
மூர்த்தியுடன் அவரது வக்கீல் மற்றும் மைத்துனர் வந்திருந்தனர். தன் சகோதரியின் கணவன் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்பட்டதைப் பார்த்து அந்த இளைஞருக்கு பேச்சே வரவில்லை. அவமானத்தால் குனிந்த தலை நிமிரவே இல்லை.
மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. (அப்படியில்லை என செந்தழல் ரவி கூறுகிறார். இந்த வரியை சேர்த்த நேரம் 14.38 மணி, 25.07.2008)
இப்படியாக மூன்றாண்டுகளாக நடத்திய யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாண்டுகளாக என்னென்னவெல்லாம் நடந்து விட்டன! மூர்த்திக்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் எத்தனை பேர்?
இன்னும் விசாரணை நடக்கிறது. அவருடன் சேர்ந்து செயல்பட்டவர்களின் லிஸ்டையும் தருமாறு சைபர் கிரைம் அதிகாரிகள் மூர்த்தியிடம் கூறியுள்ளனர். மூர்த்தியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு ஓர் அறிவிப்பு.
தன்னால் உருவாக்கப்பட்ட உரல்களை அழிப்பதாக அவர் வாக்கு தந்துள்ளார். ஆகவே சம்பந்தப்பட்ட பதிவர்கள் தத்தம் பெயரில் உருவாக்கப்பட்டிருந்த உரல்களின் லிஸ்டை தரலாம்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மூர்த்தி தனது மூர்த்தி மற்றும் விடாது கருப்பு வலைப்பூக்களில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
இப்போதைக்கு இவ்வளவுதான். இதற்கு மேல் எழுதினால் கோபத்தில் என்ன எழுதுவேன் என்று தெரியாது. மூர்த்திக்கு எதிராக இந்த யுத்தத்தில் பங்கு கொண்ட பதிவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
9 hours ago
82 comments:
அப்பாடா............
ஒரு நிழல் யுத்தம் நிஜமாவே முடிஞ்சது.
இதுக்காகப் போரிட்ட அனைவருக்கும் நன்றி.
பதிவுகளில் அடாவடித்தனம் செய்கின்ற அனைவருக்கும்
இது ஒரு பாடமாக இருக்கும்!
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
மீண்டும் தர்மம் வெல்லும்
பண்டிய நக்கீரன்
^^ கீரருடைய வார்த்தையே சர்வநிச்சயமான உண்மை :)
திருமங்கலம் அம்மங்கி ஸ்ரீராம் முரளி
அப்பாடா இனிமேல் நோ நோ மம்மி பாவம் டாடி பாவம் னு சொல்ற அளவுக்கு ஈமெயில் வராது :-)
great news!
congrats!
Celeberate this. யாராவது ஒரு பட்டையை போட்டு குடுங்க, வலையேத்திடலாம்.
Dondu, invitation for a தொடர் விளையாட்டு for you. ராமலஷ்மியால் தொடர முடியவில்லை, அதனால, உங்களை வடை சுட சொல்லியிருக்கேன் இங்கே:
http://surveysan.blogspot.com/2008/07/tagging-continues.html
வாழ்த்துக்கள் டோண்டு சார். உங்கள் விடாமுயற்சி, என்னை போன்றோருக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது.
Dondu sir,
The truth will triumph is excellently reported here, this is how market punishes charged or irrational people with the help of right rule of law.
It is a very good lesson to other bloggers also (Tamil, English etc)
Are the Tamil Communist and Socialist Blogger’s are watching or blinked?
அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற செய்தல் நலம்.
மேலும் அதை போல் ஆபாச பின்னூட்டமிடும் கனவான்களுக்கு இந்த பதிவு ஒரு எச்சரிக்கை மணி
வால்பையன்
Congratulations.. You may not need to keep comment moderation option enabled anymore.. Enjoy the freedom :))
எனக்கு உங்கள் பெயரில் ஆபாச பின்னூட்டம் இட்டவன் இவன் தானா ?
உங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்கு எனது பாராட்டுக்கள் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
இது ஒரு முக்கியமான பதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Yours and fellow bloggers efforts on this issue is highly commendable.
வாழ்த்துக்கள் டோண்டு சார்.
பிரச்சினை தீர்ந்தால் நல்லது தான் !
//ஆபாச பின்னூட்டமிடும் கனவான்களுக்கு இந்த பதிவு ஒரு எச்சரிக்கை மணி
//
சில ---- பிறவிகள் (தங்களை கண்டுபிடிக்க முடியாது என்ற நினைப்பில்) இன்னும் கூட ஆபாச பின்னூட்டம் இடுகின்றன. சமீபத்தில் (டோண்டுவின் சமீபத்தில் அல்ல!) எனக்குக் கூட ஒன்றிரண்டு பின்னூட்டங்கள் வந்தன. Time is running out for them also !
எ.அ.பாலா
Conrgats Sir.
Sorry that i could not join you all in your quest for justice.
Hope this is the end of such issues...
It is a relief. A relief due to your continuous efforts.
Due to you many other bloggers are saved from the psychopath.
Congratulations !
Yours,
Bangalore friend
டோண்டு சார்,
"மூர்த்தி" எனது வலைப்பூ பெயரில் ஆரம்பித்த ஆபாச வலைப்பூ உரல்:
http://harimahesh.blogspot.com
இந்த போலி வலைப்பூவை அழிக்க உதவிட வேண்டுகிறேன்.
//
மேலும் அதை போல் ஆபாச பின்னூட்டமிடும் கனவான்களுக்கு இந்த பதிவு ஒரு எச்சரிக்கை மணி
//
Kudos.
Though I am very new to blog world compared to all of you guys who have suffered in this,I too was not spared from this ugly episode.
Once there were some threatening comments referring this person Vidathu Karuppu's name,that I should change my way of writing.
After sometime some ugly comments props in.
Then I took some measures to track IP's of commenting persons & also I took this to Tamaizmanam admin, after which all this have stopped.
It's a good thing they come out with an apology openly.
வாழ்த்துக்கள் டோண்டு சார்... இணையத்தை எப்படி உபயோகப்படுத்தவேண்டும் என்பதற்கு தவறான முன்னுதாரணமான அந்த மிருகம் போன்றவர்களை எப்படி தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான சரியான முன்னுதாரணம் நீங்கள்.
நான் வலைப்பூக்களை படிப்பதே கடந்த 7 அல்லது 8 மாதங்களாகத்தான் என்பதால் இந்த பிரச்சினை குறித்து அறிந்திருக்கவில்லை. ஆனால் உங்கள் பதிவுகளை பார்த்து பிரச்சினையினை ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.
நீங்கள் செய்ததை பார்த்தவுடன், நம் கவிஞன் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது "மோதி மிதித்து விடு பாப்பா.. அவன்(ர்?) முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" என்று.
அடா அடா!!! சூப்பர் சார்.
கேக்கவே காதுக்கு குளிர்ச்சியா இருக்கு. டோன்டு சாரி! வாழ்த்துக்கள்!! சைபர் க்ரைமுக்கும் நன்றி.
//எனக்கு உங்கள் பெயரில் ஆபாச பின்னூட்டம் இட்டவன் இவன் தானா ?//
என்னங்க! மகாத்மா காந்திய உண்மையிலேயே சுட்டுட்டாங்களான்னு கேக்குற மாதிரி இருக்கு...
அதுசரி! அவனை ஆதரிச்சவனுங்க...???
ராகவன்,
இது நல்லதே.
எனது பெயரிலேயிருந்த
http://wandererwave.blogspot.com பதிவும் கூகுலால் அகற்றப்பட்டிருக்கின்றது. கூகுலிடம் கேட்டும் அகற்றாத பதிவு, இப்போது அகற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி.
சம்பந்தமான இரு விடயங்கள்.
1. அவரைமட்டும் விசாரித்து என்ன பயன்? அவருக்குச் சார்பாகச் செயற்பட்டவர்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டும்.
2. "போலி சல்மா பதிவும் அவராலேதானா போடப்பட்டது" என்ற குறிப்பிட்ட பதிவு பற்றி ஏதும் தெரிந்தால், சொல்லுங்கள். இல்லாவிட்டால், அப்பதிவினைப் பற்றியும் சென்னை குற்றவியல்_பொலிஸிடம் நீங்கள் தெரிவிக்கவேண்டுகிறேன்.
பெயரிலி அவர்களே,
ஆப்பரேஷன் சல்மா அயூப்பைப் பற்றி நான் இட்ட இப்பதிவைப் பாருங்கள்: http://dondu.blogspot.com/2007/04/blog-post_14.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன்,
இணைப்புக்கு நன்றி.
நீங்கள் போட்ட பதிவினை போட்ட சந்தர்ப்பத்திலேயே பார்த்திருக்கிறேன். அதற்கும் குற்றவியல்_பிரிவு விசாரணைக்கும் சம்பந்தமில்லையே :-(
இங்கே நான் கேட்பது, அப்பதிவினைப் பற்றியும் நீங்களோ, உங்களுடன் மூர்த்தியினைப் பற்றிய முறைப்பாடு செய்தவர்களும் குற்றவியல்_பிரிவிடம் எடுத்துச் சொல்லவேண்டும் (இதுவரை அப்பதிவு பற்றி அவர்களிடம் பேசப்படாதிருந்தால்). அது மூர்த்தியினாலே போடப்படாததென்றால், சம்பந்தப்பட்டவரும் குற்றவியல்_பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். மூர்த்தி அப்பதிவினை இட்டவர் அவரில்லாவிட்டால், அப்பதிவு பற்றி தனது வாக்குமூலத்திலே சுட்டியும் காட்டி, அப்பதிவினை நடத்தியவரும் விசாரணைக்கு வரச் செய்ய வேண்டும்.
//தன்னால் உருவாக்கப்பட்ட உரல்களை அழிப்பதாக அவர் வாக்கு தந்துள்ளார். //
doondu பதிவு அளிக்கப்படவில்லை. அதில் அனைத்து இடுகைகளும் draft என்று மாற்றப்பட்டுள்ளன.
சில நாட்கள் கழித்து, அவை வேறு பெயரில் வெளி வரலாம்.
எச்சரிக்கை !!!
//அது மூர்த்தியினாலே போடப்படாததென்றால், சம்பந்தப்பட்டவரும் குற்றவியல்_பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். மூர்த்தி அப்பதிவினை இட்டவர் அவரில்லாவிட்டால், அப்பதிவு பற்றி தனது வாக்குமூலத்திலே சுட்டியும் காட்டி, அப்பதிவினை நடத்தியவரும் விசாரணைக்கு வரச் செய்ய வேண்டும்.//
பத்த வச்சுடியே பரட்ட
உங்கள், மற்றும் நண்பர்களின் விடாமுயற்சிக்கு நீதி கிடைத்திருக்கிறது. நன்றி.
க்ரைம் பிரான்ச் அதிகாரிகளுக்கும் நன்றி.
பெயரிலி குறிப்பிட்டது போல அப்பதிவுகளை எழுதியரும் - அது மூர்த்தியானாலும் அல்லது வேறு நபரானாலும் - அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
கட்டற்ற சுதந்திரத்தைத் தவறான வழியில் பயன்படுத்தினால் அழிவுதான் ஏற்படும் - தேச சுதந்திரமானாலும், இணைய சுதந்திரமானாலும்.
தவறை உணர்ந்து மனந் திருந்த மூர்த்திக்கு இந்த முடிவு உதவட்டும். தவறிழைக்க நினைக்கும், இழைத்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையும்.
நன்றி.
For the rest of the blogs, the account itself is deleted. For doondu.blogspot.com, only the posts seem to be deleted or removed. Better, have them delete the blog itself.
ஒரு பெருமூச்சு விடமுடிகிறது - ஆனாலும் மாடரேஷன் எடுக்கும் அளவுக்கு தைரியம் வரவில்லை. ஒரே நாளில் 85 கமெண்டு எனக்குப் போட்ட புண்ணியவான் ஆச்சே!
இந்தப் பணியில் ட்தீவிரமாக செயல்பட்ட அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்தும்.
அதே நேரத்தில் பெயரிலி சொல்லும் விஷயமும் உறுத்தத்தான் செய்கிறது. சல்மா அயூப் விவகாரத்திலும் தவறு செய்தது யார் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும்.எதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள் டோண்டு.
மூர்த்தி ஒரு முடிவுக்கு வந்தது நல்லது. அவன் மட்டுமே இல்லை. இன்னும் இப்போது தலைமறைவாக இருக்கும் இணையக் குசும்பன், முகமூடி அணிந்த அவனுடைய அல்லக்கைகள், முகமூடி அணியாத ஜால்ராக்கள், 'பின்னூட்ட பாலா' என்று பல பேருக்கு ஆப்பு வைக்கணும். டோண்டுவும், மற்ற இணையப் போலிஸ்களும் செய்வார்களா?
ஆடிய ஆட்டம் என்ன?
பேசிய வார்த்தை என்ன?
--
ஒரு கும்பல் இதை பற்றி பேசாமல் இருக்கும் அர்த்தம் என்ன?
-கும்மி
மூர்த்தி ஒரு முடிவுக்கு வந்தது நல்லது. அவன் மட்டுமே இல்லை. இன்னும் இப்போது தலைமறைவாக இருக்கும் இணையக் குசும்பன், முகமூடி அணிந்த அவனுடைய அல்லக்கைகள், முகமூடி அணியாத ஜால்ராக்கள், 'பின்னூட்ட பாலா' என்று பல பேருக்கு ஆப்பு வைக்கணும். டோண்டுவும், மற்ற இணையப் போலிஸ்களும் செய்வார்களா?
அதே... அதெல்லாம் டோண்டு ராகவய்யர் அஜெண்டாவில் நஹீ ஹைய்.
இங்கே சந்தடிசாக்கில் அனானியாக எழுதிய எல்லோர் மீது பழைய காழ்ப்புணர்வில் சகதி வீசப்படுகிறது. அனானியாக எழுதுவது குற்றமல்ல. அனானியாக இங்கே பின்னூட்டமிட்டுக்கொண்டே அனானியாக எழுதுபவர்களுக்கு ஆப்புவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் ஐரனி புரியவில்லை.
அனானியாக எழுதுவதோ ஒரு கருத்தை வலியுறுத்த புனைபெயர் வைத்துக்கொள்வதோ பிரச்னை அல்ல.
இங்கே மூர்த்தியின் குற்றம், பதிவர்களின் குடும்பத்தினரை ஆபாச அவதூறு செய்தது, அவர்களது ஐடிகளை போலி செய்து ஆபாச பதிவுகள் ஏற்படுத்தியது ஆகியவை. பெரும்பாலான அனானி பதிவர்கள் மூர்த்திக்கு பயந்தே அனானி வேஷம் போடவேண்டிவந்தது.
ஆதியில் முதல்முதல் அனானி ஆட்டம் ஆரம்பித்தது பெயரிலிதான். அனானியாக எழுதுவதே குற்றமென்றால், முதலில் கூண்டில் ஏற்றப்படவேண்டியவர் பெயரிலி. பலரை அனானியாக அவதூறாக எழுதி கையும் களவுமாக மாட்டிக்கொண்டவர் பெயரிலி. இதற்கு ஆதாரங்களை இணையத்தில் பலரும் எழுதியுள்ளனர். அதனை எல்லாம் மறந்துவிட்டு, அல்லது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு இவர் இங்கே புனிதபிம்பம் கட்டிப்பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது.
டோண்டு, பயந்தால் வேண்டுமானால் எடிட் செய்துகொள்ளவும்.
/ஆதியில் முதல்முதல் அனானி ஆட்டம் ஆரம்பித்தது பெயரிலிதான். அனானியாக எழுதுவதே குற்றமென்றால், முதலில் கூண்டில் ஏற்றப்படவேண்டியவர் பெயரிலி. பலரை அனானியாக அவதூறாக எழுதி கையும் களவுமாக மாட்டிக்கொண்டவர் பெயரிலி. இதற்கு ஆதாரங்களை இணையத்தில் பலரும் எழுதியுள்ளனர். அதனை எல்லாம் மறந்துவிட்டு, அல்லது மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு இவர் இங்கே புனிதபிம்பம் கட்டிப்பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது./
:-)
ஆதியிலே ஏவாளோடு ஆப்பிளைக் கடித்ததும் நானே. எதற்கு என்னையெல்லாம் Martin luther & Gosset உயரத்துக்கு ஏற்றுகிறீர்கள் :-)
அநாநியாகவோ, வேறுபெயரிலோ எழுதுவதோ குற்றமென்றால், இங்கே எத்தனை பேர் மிஞ்சுவார்கள் என்ற கணக்கை இங்கேயே விட்டுவிடுகிறேன்.
பிரச்சனை அதுவல்ல என்று உங்களுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்; வாசிக்கின்றவர்களுக்கும் தெரியும்.
அவதூறாக எழுதினேன் என்றாலோ, யாருடைய பெயரிலேனும் பின்னூட்டமோ, பதிவோ போட்டிருந்தேனென்றால், மூர்த்தியிலே போட்டதுபோல ஆதாரத்துடன் கொண்டுபோய் குற்றவியல்_பிரிவிடம் கொடுங்கள். சும்மா அநாமதேயமாகக் குற்றம் நீங்கள் சாட்டுவதுபோலச் சாட்டுவதும் அவதூறென்றால், விட்டுவிடுகிறேன். :-)
இதெல்லாம் சல்மா அயூப்பின் விவகாரத்தினை இல்லையென்று ஆக்கிவிடுமா? அல்லது சரியென்று ஆக்கிவிடுமா?
அநாநியாக வந்து சொல்கின்றவர்களுக்கு இவ்வளவுக்கு மட்டுமே பதில் சொல்லமுடியும்.
You should make this post in English too and attach it to other aggregators such as desi pandit. People who get involved in these kind of activities should come to their senses.
Kudos to everyone who were involved.
-dyno
http://balaji_ammu.blogspot.com/2008/07/449.html
வந்து படித்துவிட்டு எனக்குத் தூரமான தொலைவில் நடந்த விசயங்களைப் பற்றி என்ன சொல்வது என்று புரியாமல் திரும்ப போய்விட்டேன். இருந்தாலும் மனசு கேட்காமல் வந்தேன்.பிரச்சினைகளுக்கு நீங்களும் தீயூட்டினீர்கள் என்று பதிவர்களின் முந்தைய பதிவுகளைக் காணும்போது தெரிகிறது.மன்னிப்பு என்பது கடினமான விசயம்தான்.அப்படி மனதால் நீங்கள் மன்னித்தால் மகான் ஆவீர்கள்.
இந்தப் பிரச்சனையை சட்டரீதியாக முடிவுக்குக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. உங்களது தொடர்ந்த போராட்டத்துக்கு வாழ்த்துகள்!
டோண்டு அவர்களே,
என் இரண்டாவது பின்னூட்டத்தை வெளியிடாதது ஏனோ? அந்த பின்னூட்டத்தை எழுதிய பிறகு பதிவுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பின்னூட்டத்தைக் வெளியிட்டிருக்கிறீர்கள். ஆனால் இங்கே என்னை கேள்வி கேட்ட இன்னொரு அனானிக்கு பதிலளித்த என் பின்னூட்டத்தை வெளியிட உங்களுக்கு மனதில்லை. என்ன நியாயமோ போங்க.
அனானி அண்ணா,
//அனானியாக இங்கே பின்னூட்டமிட்டுக்கொண்டே அனானியாக எழுதுபவர்களுக்கு ஆப்புவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் ஐரனி புரியவில்லை.//
ஏன்னா, மூர்த்தி சட்ட நடவடிக்கைக்குப் பிறகு திருந்தி மன்னிப்பு கேட்டிருக்கிறான். இணையக் குசும்பன், முகமூடி, திருமலை போன்ற ஆசாமிகள் வலைப்பதிவில் ஆக்டிவ் ஆக இல்லாவிட்டாலும், இந்த ஜென்மங்கள் திருந்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆகையால் இவன்களுக்கு இன்னும் பயப்பட வேண்டியுள்ளது. புரிஞ்சதா?
சரி, நீர் யாருக்கு பயந்து அனானியாக எழுத வேண்டும்?
இதே வகையில் சக பெண் பதிவரை பற்றி ஆபாசமாய் எழுதிய ஒருவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே....
அவர் மீது புகார் ஏதும் அளிக்கப்பட்டிருக்கிறதா என அறிய விரும்புகிறேன்.
இனிமேலாவது இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து போராடி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் டோண்டு அவர்களே
//இணையக் குசும்பன், முகமூடி, திருமலை போன்ற ஆசாமிகள் வலைப்பதிவில் ஆக்டிவ் ஆக இல்லாவிட்டாலும், இந்த ஜென்மங்கள் திருந்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆகையால் இவன்களுக்கு இன்னும் பயப்பட வேண்டியுள்ளது. புரிஞ்சதா?//
முதலில் அவர்கள் எங்கெல்லாம் வந்து நீங்கள் hint செய்வதுபோல அசிங்கமாக எழுதினார்கள்? என்னமோ அவர்களுக்கு பயப்படுவது போல உதார் காட்டுகிறீர்கள்? அவர்கள் மூவருமே நல்ல பதிவர்கள். முக்கியமாக திருமலை மிகவும் நெருங்கிய நண்பர் எனக்கு. எங்கு அவர்கள் அசிங்கமாக எழுதினார்கள் என்பதை முடிந்தால் தகுந்த சுட்டிகளுடன் காட்டுங்களேன் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதே வகையில் சக பெண் பதிவரை பற்றி ஆபாசமாய் எழுதிய ஒருவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே....//
ஒரு பெண்பதிவரில்லை, பல பெண் பதிவர்கள் துளசி மேடம், ஜயஸ்ரீ, மதி கந்தசாமி என்றும் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம். அத்தனை பேரையும் ஆபாசமாக திட்டியவன் மூர்த்தியே. அவனை பிடித்தாகி விட்டது.
இத்தருணத்தில் இன்னொன்றையும் கூற ஆசைப்படுகிறேன். சல்மா அயூப் பெயரில் வந்து பொன்ஸ் அவர்களை திட்டியதும் மூர்த்தியே என்பதில் எனக்கு ஐயமில்லை. மிகவும் அநியாயமான முறையில் ஜயராமனை பலிகடாவாக்கினார்கள். அது பற்றி நான் போட்ட பதிவு http://dondu.blogspot.com/2007/04/blog-post_14.html
இன்னும் அப்படியே உள்ளது. அதற்கு மேல் நான் எதுவும் செய்வதாக இல்லை.
அது மூர்த்தி இல்லை, வேறு யாதாவதோ என்ற எண்ணம் யாருக்கெல்லாம் வருகிறதோ அவர்கள் சைபர் கிரைமுக்கு செல்லட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பிரச்சினைகளுக்கு நீங்களும் தீயூட்டினீர்கள் என்று பதிவர்களின் முந்தைய பதிவுகளைக் காணும்போது தெரிகிறது.//
நான் மிகவும் மோசமாகத் தாக்கப்பட்டவன். அதிலும் என்னை முகமூடியாக உபயோகித்து மற்றவர்களை திட்டினான் மூர்த்தி. ஆகவே மற்றவர்கள் கூறுவது போல நான் இக்னோர் செய்திருக்க முடியாது. வெறுமனே என்னை பெயர் சொல்லி திட்டியிருந்தால் நானும் இக்னோர் செதிருப்பேன்.
அதே சமயம் பலர் அறிவுறை கூறியது போல விலகிப் போயிருந்தால் பிரச்சினை இன்னும் இருந்திருக்கும். இப்போது இல்லை. மேலே என்ன சொல்ல?
அவ்வாறு போகாததால் எனக்கு வந்த ஆதாயங்கள் என்ன? ஒன்று தன்னம்பிக்கை. இன்னொன்று எனது தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட முன்னேற்றம். அதனால் ப்ரோஸ் காம் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் பிளாட்டினம் உறுப்பினர் ஆக முடிந்தது. இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
கடைசியாக ஒன்று கூற ஆசைப்படுகிறேன். இதில் நான் மட்டும் போராடவில்லை. போராடிய மற்றவர்களுக்கும் இப்பெருமை போகும். அவர்களுக்கு முதற்கண் என் நன்றிகள் உரித்தாகுக.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/சல்மா அயூப் பெயரில் வந்து பொன்ஸ் அவர்களை திட்டியதும் மூர்த்தியே என்பதில் எனக்கு ஐயமில்லை./
அப்படியானால், நீங்கள் சல்மா அயூப் பதிவு பற்றியும் குற்றவியல்_பிரிவிடம் சொன்னீர்கள் என்கிறீர்களா?
அதை மூர்த்தி ஒத்துக்கொண்டாரா?
/தன்னால் உருவாக்கப்பட்ட உரல்களை அழிப்பதாக அவர் வாக்கு தந்துள்ளார். ஆகவே சம்பந்தப்பட்ட பதிவர்கள் தத்தம் பெயரில் உருவாக்கப்பட்டிருந்த உரல்களின் லிஸ்டை தரலாம்./
சல்மா அயூப் பதிவு பற்றி நீங்கள் முறையிடத் தேவையில்லை என்பது முற்றிலும் உண்மை. அதனை அதனோடு சம்பந்தப்பட்டவர்களே செய்யவேண்டும். அவர்களுக்கே முறையிட வேண்டியதில்லை என்று ஆகும்போது, நீங்கள் எதற்காகச் சொல்லவேண்டும்? இந்த சல்மா அயூப் சுட்டி கட்டாயம் குற்றவியல்_பிரிவிடம் கொடுக்கப்படவேண்டும்.
ஜயராமனை அநியாயமாகப் பலிக்கடா ஆக்கினார்கள் என்றால், அவர் கட்டாயமாக அவரை அப்படியாகக் பலிபீடத்திலே தலையை அமுக்கி வைத்தவர்களை அவதூறு வழக்கிலே ஏற்றியிருக்கவேண்டும். அவர் மன்னிக்கும் குணம் நிறைந்தவரோ தெரியவில்லை; விட்டுவிட்டார். பலிபீடத்திலே ஏற்றியவர்கள் தப்பிப்பிழைத்தார்கள். இப்படியான பலிபீடத்திலே அப்பாவிகளை ஏற்றும் நடவடிக்கைகள் இனியேனும் ஒழிவதற்கென்றாயினும், ஜயராமன் அவர்களிலே வழக்குத் தொடரவேண்டும்.
சம்பந்தமின்றி ஒரு விடயம்; நடந்து கொண்டிருக்கும் ஒரு விசாரணை பற்றி ஒரு பதிவினைப் போடுவது, விசாரணையிலே எத்துணை கெடுதலை விளைவிக்கும் என்பதையும் நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும். இப்படியாக உங்கள் கருத்துகளையும் ("சல்மா அயூப் பதிவினை இட்டது மூர்த்திதான் என்பதிலே எனக்கேதும் சந்தேகமில்லை" என்று அடித்த வாக்கிலே அறிவிப்பது) அகப்பட்ட மீனை நழுவ விடத்தான் உதவும். உங்கள் பதிவிலே பின்னூட்டமிட்டது, இப்படியான உங்களின் ஆடுவெட்டமுன்னால், அதை அறுக்கும் பரபரப்பான தன்மை தந்த எரிச்சலாலேதான். பாதிக்கப்பட்டவர் நீங்கள் மட்டுமல்ல, நான் உட்பட பல பேருமேதான்; இவரின் தொல்லை நிற்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதே; அதனைச் செய்தவர்களுக்கும் நன்றி. ஆனால், உங்கள் பதிவு மிகவும் அவசரமானதும் சில வரிகள் அவரசமானவையுமாகும்.
மூர்த்தியின் விடயத்திலே அவர் விசாரிக்கப்பட்டு கொடுக்கு ஒடுக்கப்பட வேண்டியவரேதான். இவரின் கூத்துகளிலே சம்பந்தமில்லாமலே அழுந்தும் அவருடைய குடும்பத்தினரை எண்ணி மட்டும் வருத்தமடைகிறேன்.
இப்பின்னூட்டத்தை என் பதிவிலும் எங்காவது போட்டு வைத்துக்கொள்கிறேன்.
இதுவரையிலே உங்களின் பல கருத்துகளோடு முரண்படும் என் பின்னூட்டங்களையும் இங்கே அனுமதித்ததற்கு நன்றி.
டோண்டு சார்,
உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துகள்.. இந்த ப்ரச்சினை ஆரம்பித்த நாள் முதல் இதைக் கவனித்தவன் என்ற முறையில்.. நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் சக பதிவர்களும் மனரீதியாக அனுபவித்திருக்கக் கூடிய உளைச்சல்கள் என்க்குப் புரிகிறது..
இந்த தண்டனை மூர்த்திக்குத் தேவைதான். அவர் மனம் திருந்த இந்த தண்டனைகள் ஒரு நல்ல காரணியாக அமையும் என நம்புகிறேன்..
அவ்ர் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார் என்ற எண்ணங்கள் அவர் குடும்பத்திற்கு (தலைகுனிந்த அந்த மைத்துனர் .. பாவம்) நிறைய மன உளைச்சல்கள் தரலாம். அவ்ர்களுக்காக பரிதாபப் படுகிறேன்.
//மூர்த்தியின் விடயத்திலே அவர் விசாரிக்கப்பட்டு கொடுக்கு ஒடுக்கப்பட வேண்டியவரேதான். இவரின் கூத்துகளிலே சம்பந்தமில்லாமலே அழுந்தும் அவருடைய குடும்பத்தினரை எண்ணி மட்டும் வருத்தமடைகிறேன்.//
ரீப்பீட்டே
மற்றப்படி போலி மூர்த்தி எழுதிய ஆபாச பின்னூட்டங்களை விட தற்பொழுது இயங்கி வரும் விட்டது சிகப்பு போலி(கள்) பிற பெயர்களில் எழுதும் பின்னூட்டங்கள் அதிகம்.
அவரும் (அவர்களும்) விரைவில் மாட்டுவார்கள்
~~~
ஆபாச பின்னூட்டம் தவிர, சாரு நிவேதிதாவின் பெயரில் மோசடி, செந்தழல ரவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த துவங்கிய தளங்கள் என்ற வகையில் சட்ட விரோத காரியங்களையும் மூர்த்தி செய்தான் என்பதை மறந்து விட வேண்டாம்.
~~~
மூர்த்தி மாட்டிக்கொண்டான் என்பதால் மீதி எல்லோரும் புனிதர் அல்ல :(
~~~
ஆனால் ரெட் / ராபின் கும்பல் பொய் பிராச்சாரங்களை செய்கிறது என்பதற்காக மூர்த்தியின் ஆபாசத்தை பொறுக்க வேண்டுமா.
இணையத்தில் பலரும் ஆரியத்திற்கு எதிராக எழுதுகிறார்கள். ஆரிய திராவிட கருத்து மோதல் வேறு. இப்படி குடும்ப உறுப்பினர்களின் பெயரை வைத்து ஆபாச கதை எழுதுவது, மோசடி செய்வது என்பது வேறு.
~~~
மூர்த்திக்கு போதிய அளவு முன்னெச்சரிக்கை அளிக்கப்ப்ட்டது
~~~
ஒரு முறை மன்னிப்பு கேட்டு, பதிவுகளை அழித்து விடுகிறேன் என்று கூறியபின், பதிவுகளை அழிக்காமல் draft என்று மாற்றி, சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் வலையேற்றியது நம்பிக்கை துரோகமல்லவா ?
~~~
எதோ சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன்.
~~~
மூர்த்தி காவல் துறையினாரால் விசாரிக்கப்பட்டது அவர் சாருவின் பெயரால் செய்த மோசடிக்காகவும், தொலைபெசிகளின் அழைப்பை பொறுக்க முடியாமல் சாரு கவிஞர் கனிமொழி வரை புலம்பியதாலும் செந்தழல் ரவி மீதான தாக்குதலாலும் தான்
//அவர்கள் மூவருமே நல்ல பதிவர்கள்.//
இனிமே பொய் சர்டிபிகேட் வேணும்னா உங்ககிட்ட வாங்கிக்கலாம் :-)
//முக்கியமாக திருமலை மிகவும் நெருங்கிய நண்பர் எனக்கு.//
நல்ல நண்பரைத்தான் பிடிச்சிருக்கிங்க போங்க!
//எங்கு அவர்கள் அசிங்கமாக எழுதினார்கள் என்பதை முடிந்தால் தகுந்த சுட்டிகளுடன் காட்டுங்களேன் பார்ப்போம்.//
தமிழ்மணத்த பத்தி திருமலை செய்து வந்த அவதூறுப் பிரச்சாரமே போதாதா அந்தாளின் யோக்கியதையை தெரிந்துகொள்ள. தமிழ்மணத்துல தொடரும் உங்களை கூட மானமில்லாதவர், ரோஷமில்லாதவர் என்றெல்லாம் திருமலை வைதது கூட மறந்து விட்டதா? சுட்டி வேற கேக்கறீங்க. என்னத்த சொல்ல, என்னத்த சுட்ட.
சரி, அந்த பின்னூட்டத்த இன்னும் ஏன் விடமாட்டேங்கறீங்க டோண்டு சார்?
//சரி, அந்த பின்னூட்டத்த இன்னும் ஏன் விடமாட்டேங்கறீங்க டோண்டு சார்?//
இதுதான் அனானியாக வருவதில் கஷ்டம். எந்தப் பின்னூட்டத்தை குறிப்பிடுகிறீர்கள் என பார்க்க இயலவில்லை. அதை மட்டுறுத்தாமல் இருந்ததற்கு காரணம் ஏதாவது இருந்திருக்கும். எதற்கும் இன்னொரு முறை இட்டு விடுங்களேன். மறுபடியும் ரிஜக்ட் செய்தாலும் செய்வேன், ஆனால் அத்துடனேயே ஏன் ஏற்க மறுக்கிறேன் என்பதையும் குறிப்பிடுவேன்.
உங்களது மற்ற கருத்துகளை பற்றி மேலும் கமெண்டுகள் இல்லை. ஏற்கனவே வேணது கூறிவிட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சாரின் போரட்டத்தில் பங்கு கொண்ட அனவரையும் பாராட்டுவோம்.
இதற்கு விரிவான விளக்கம் கொடுக்கவும்
போலி டோண்டுவும் ஒரு புண்ணாக்கு பதிவும்" யட்சன்...
//போலி டோண்டு என அன்போடு(?) அழைக்கப்பட்ட திருவாளர். மூர்த்தி என்பவர் சென்னை சைபர்க்ரைம் போலீசாரின் வசமிருப்பதாகவும், அவருக்கெதிரான நடவடிக்கைகள் பற்றியும் பெரியவர் டோண்டு தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.//
//திரு.மூர்த்தி என்பவர் தமிழ்வலையுலக செயல்பாட்டின் முன்னோடிகளில் ஒருவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது, முத்தமிழ்மன்றம் போன்ற குழுமங்களில் அவரின் பங்களிப்புகள் இருந்தது, இருக்கிறது. இத்தகைய மனிதரை போலி டோண்டுவாக மாற்றிய பெருமை, நம்முடைய மூத்த பதிவர் பெரியவர் டோண்டுவையே சாரும் என்பது நிஜத்திலும் நிஜம். இதை அவரும் மறுக்க மாட்டார், மறுக்கவும் முடியாது.//
//தனிமனிதனாய் சுற்றிக்கொண்டிருந்த மூர்த்தியை....குழுவாய் செயல்பட வைத்ததில் இந்த பெரியவருக்கு நிறையவே பங்குண்டு....எப்பொழுதெல்லாம் தன்னுடைய பதிவுகள் சுணங்குகிறதோ அப்போதெல்லாம் புதிய அஸ்திரம் ஒன்றை வெளிக்காட்டி....தனக்கும் போலி டோண்டுவுக்கும் விளம்பரம் தேடிக்கொண்டதில் இவருக்கு இனை யாருமில்லை.//
//உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
கெணத்து தண்ணி இனிக்கிது
கடலு தண்ணி கரிக்கிது
நெறத்தில தான் ஒண்ணாகத் தெரியுது
கெணத்து தண்ணி இனிக்கிது
கடலு தண்ணி கரிக்கிது
நெறத்தில தான் ஒண்ணாகத் தெரியுது
எடுத்துக் குடிக்கும் போது பேதம் நல்லா புரியுது
எடுத்துக் குடிக்கும் போது பேதம் நல்லா புரியுது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
நத்தையிலே முத்திருக்கு நாகத்திலே நஞ்சிருக்கு
அத்தனையும் மண்ணுலதான் பொறக்குது
நத்தையிலே முத்திருக்கு நாகத்திலே நஞ்சிருக்கு
அத்தனையும் மண்ணுலதான் பொறக்குது
இன்னும் எத்தனையோ விதம் விதமா இருக்குது
இன்னும் எத்தனையோ விதம் விதமா இருக்குது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
காக்கையோடு வானத்திலே
கருங்குயிலும் பறக்கும் போது
பார்வையிலே ஒண்ணாகத் தோணுது
காக்கையோடு வானத்திலே
கருங்குயிலும் பறக்கும் போது
பார்வையிலே ஒண்ணாகத் தோணுது
குயிலு பாடும் போது காகம் ஓடி போகுது
குயிலு பாடும் போது காகம் ஓடி போகுது
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே
நம்ம கண்ண நம்மாலே நம்ப முடியலே !
டோண்டு அவர்கள் சொல்வதை பார்த்தல் அது சரியாக இருப்பது போலுள்ளது.நீங்கள் (யட்சன்)சொல்வதும் சரி போலுள்ளது.
அதுக்கு இந்தப் பாட்டு சரிதான்//
//இதற்கு விரிவான விளக்கம் கொடுக்கவும்//
பார்க்க: http://mugamoodi.blogspot.com/2006/01/blog-post_29.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாண்டிய நக்கீரன் பேரில் இன்னொருவர் ( இது எப்படி விளக்கவும் டோண்டு சார்)
------------------------------
1டோண்டு சார் பற்றிய Cartoon சிரிப்பை வரவழைக்கிறது.வ... பாண்டிய நக்கீரன் டோண்டு சார் பற்றிய Cartoon சிரிப்பை வரவழைக்கிறது. வலையுலக மார்கண்டேயன் டோண்டு சாரின் புகழ் வாழ்க.டோண்டு சார் பற்றிய Cartoon சிரிப்பை வரவழைக்கிறது.
வலையுலக மார்கண்டேயன் டோண்டு சாரின் புகழ் வாழ்க.
2.லக்கி சார்,ஒரு குட் நியூஸ் டோண்டு சாரும் ஹேரிபாட்ட... பாண்டிய நக்கீரன் லக்கி சார், ஒரு குட் நியூஸ் டோண்டு சாரும் ஹேரிபாட்டர், சர்வண்டீஸ் என்ற பெயரி வைத்திருந்த வலைப்பதிவுகளை அழித்துவிட்டாராம் போன் போட்டு சொன்னார்லக்கி சார்,
ஒரு குட் நியூஸ் டோண்டு சாரும் ஹேரிபாட்டர், சர்வண்டீஸ் என்ற பெயரி வைத்திருந்த வலைப்பதிவுகளை அழித்துவிட்டாராம் போன் போட்டு சொன்னார்
-----------------------------
1 தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மம... பாண்டிய நக்கீரன் தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் பண்டிய நக்கீரன்தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
மீண்டும் தர்மம் வெல்லும்
பண்டிய நக்கீரன்
ஒன்றை க்ளிக் செய்தால் ஒரு இடம் செல்கிறது
மற்றொன்றை க்ளிக் செய்தால் "no movement'
இது எப்படி சாத்யம்.
கருத்துக்கள் நேர் எதிராக
pro dondu sir(commeny1)
against dondu sir ( comment 1.2)
please go to http://madippakkam.blogspot.com/2008/07/blog-post_25.html?showComment=1216965480000
http://madippakkam.blogspot.com/2008/07/blog-post_24.html?showComment=1216890900000
நண்பர் பெயரிலிக்கு
சல்மா அயூப் விவகாரம் பற்றி புகார் கொடுக்க வேண்டுமானால் அதனால் பாதிக்கப்பட்டவர்தான் தர வேண்டும். நானோ அல்லது நீங்களோ அல்லது டோண்டு ஸாரோ புகார் கொடுக்க முடியாது. இது சட்டப்படியான விதிமுறை.
அன்றைக்கு அதனால் பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் பதிவர் என்பதாலும், புகார் கொடுத்த பின்பு கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டி வரும் என்பதாலும்தான் அன்றைக்கே அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் நேரில் வந்து மன்னிப்பு கேட்டு ஒப்புதல் வாக்குமூலம் போல் பேசிவிட்டுச் சென்றதால் அது அத்தோடு முடிக்கப்பட்டது.(இப்படி முடிக்கப்பட்டது எனக்கும் பிடிக்கவில்லை என்றாலும் நிஜவாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால், பாதிக்கப்பட்டவர் விரும்பாதபோது நாம் இதில் எதுவும் செய்ய முடியாது)
திருவாளர் டோண்டுவுடன் எனக்கு இந்த விஷயத்தில் மிகப் பெரிய கருத்து வேறுபாடு உண்டு. அந்த சல்மா அயூப், மூர்த்தி இல்லை என்பதிலும், திரு.ஜெயராமன் என்பவர்தான் அந்த நபர் என்பதிலும் எனக்கு 200 சதவிகிதம் ஒப்புதல் உண்டு.
//ஆனால், உங்கள் பதிவு மிகவும் அவசரமானதும் சில வரிகள் அவரசமானவையுமாகும்.//
முதலில் இப்படியொரு பதிவை போடும்படியான எண்ணம் டோண்டு ஸாருக்கு இல்லை. பதிவை போடச் சொன்னது நான்தான்..
எங்களுக்குத் தெரியாமல் இருக்கும் பதிவர்களின் போலிப் பதிவுகளைத் தெரிந்துகொண்டு அதனை மூர்த்தியின் மூலம் நீக்கி பதிவர்களுக்கு உதவிடலாம் என்பதற்காகத்தான் இப்படியொரு பதிவைப் போடச் சொன்னேன்.
குறிப்பாக டோண்டு ஸாருக்கு இப்படியொரு 20 லைனில் பதிவுபோட விருப்பமே இல்லை. "முடியாது. நீங்க போட்டுக்குங்க" என்று என்னிடம் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஆனால் தொடர்ச்சியாக இணையத்தின் முன்னால் அமரும் சூழ்நிலை எனக்கில்லாததால்தான் நான் அவரைத் தொடர்ந்து வற்புறுத்தி போடச் சொன்னேன். கூடவே மூர்த்தியும் மன்னிப்பு கேட்டு எழுதிவிட்டதால் டோண்டு ஸார் பதிவினை போட்டுவிட்டார்.
இதில் தவறேதும் இல்லை.
இந்தப் பதிவு வழக்கினை எந்தவிதத்திலும் திசை திருப்பாது.. நீங்களும் சல்மா அயூப் என்றோ, வேறு ஏதாவது சொல்லியோ திருப்ப வேண்டாம். விட்டுவிடுங்கள்..
சல்மா அயூப்பிற்காக சைபர் கிரைம் போலீஸ் அலுவலகம் எப்போதும் திறந்துதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை சென்று புகார் கொடுக்கச் சொல்லுங்கள்.. ஒரு வாரத்தில் யார் உண்மையான குற்றவாளி என்பது தெரிந்துவிடும்.
நன்றி டோண்டு ஸார்..
சம்பந்தமில்லாத கமெண்ட்டுகளை இனிமேலும் அனுமதிக்க வேண்டாம்.
என்னால் ஏற்பட்ட பெரிய சிரமத்திற்கு மன்னிக்கவும்..
யட்சன் என்பவரது பதிவில் மீண்டும் எழும் இந்த பிரச்சினைக்காக அங்கே எழுதிய பின்னூட்டத்தை இங்கே மீண்டும் அளிக்கிறேன்...
என்னுடைய விளக்கம் இந்த இரண்டு விடயத்துக்கு தான்...
டோண்டுவோ மற்றவர்களோ என்னை "போலி டோண்டு" வை கண்டறியும்படி ஆரம்பத்தில் சொல்லவில்லை....நான் எடுத்த முயற்சிகளை சொல்லியபோது ஆதரவு தெரிவித்தார்கள்...
போலி டோண்டு பதிவோ அல்லது எந்த ஆபாசப்பதிவோ என்னால் துவக்கப்படவில்லை, இதுவரை எந்தவிடத்திலும் ஆபாசமாக எழுதியதில்லை...
மேலும் இந்த பின்னூட்டத்தில் இன்னும் ஒரு விடயத்தையும் சேர்த்திருக்கிறேன்...
////அப்படி டோண்டு ரவியை ஊக்குவித்ததாக தான் செந்தழல் ரவி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.
டோண்டுவின் மனைவி, பெண்ணை பற்றி ஆபாசமாக எழுதி போலியின் நம்பிக்கையை பெற முயற்சித்தாராம் செந்தழல் ரவி.
////
இந்த பின்னூட்டத்தை மூர்த்தியை தவிர வேறு யாராலும் போட முடியாது :)))
டோண்டு அவர்களின் மனைவி மகள் புகைப்படம் டூண்டு தளத்தில் வெளியானது...
அந்த தளத்தின் ஆக்ஸஸ் மூர்த்தியை தவிர யாருக்கும் கிடையாது...
ஸ்பெஷல் ஆப்பு என்பதும் மூர்த்தியின் தளம்...
இதை மூர்த்தியே காவல் துறையினரிடம் எழுதி கொடுத்துள்ளான்.
அதிலும், டூண்டு தளம் உலகின் எந்த எந்த ஐ.பி முகவரியில் இருந்து ஆக்ஸஸ் செய்யப்பட்டது / எங்கே இருந்து திறக்கப்பட்டது / எந்த எந்த தேதியில் போஸ்ட் போடப்பட்டது என்று கூகிள் நிறுவனம் பி.டி.எப் கோப்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸாருக்கு அனுப்பி உள்ளது....
அதில் எந்த இடத்திலும் என்னுடைய ஐ.பி கிடையாது.
இதில் இருந்தே, டோண்டு, நான் மிகவும் மதிக்கும் துளசி டீச்சர் போன்றவர்கள் பற்றி எல்லாம் நான் எழுதவில்லை (இதை எல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க, அவ்ளோ கேவலமா எழுத - என்னால சத்தியமா முடியாது)
அப்படி நினைப்பவர்கள் போலீசில் புகார் தரட்டும், நான் அதனை எழுதி இருந்தால் போலீஸ் என்னை கைது செய்யட்டும்...
மூர்த்தி தனக்கு வேலை போய்விட்டதாகவும், நான்கு மாதமாக தமிழ்நாட்டில் தான் இருப்பதாகவும் போலீஸில் சொல்வது பொய். இரண்டு வாரங்களுக்கு முன்புவரை மூர்த்தியின் ஐபியில் இருந்து எனக்கு ஹிட் வந்துகொண்டுள்ளது...
மேலும் சிம்பத்திக்காக மூர்த்தி சொல்லும் விஷயங்களையும் நம்ப முடியாது. அதெல்லாம் மலேசிய மானேஜர்கள் லீவு தருவதற்கு வேண்டுமானால் நம்பட்டும். நான் நம்ப முடியாது.
மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்த டேப் ஆதாரங்கள் உள்ளது. நான் இதன் மூலம் கிரிமினல் வழக்கு தொடரமுடியும். இன்றுவரை செய்யும் எண்ணம் இல்லை, இனி வரலாம்...
ஆகஸ்ட் இரண்டாம் தேதி மீண்டும் காவல் துறையினர் வரச்சொல்லியுள்ளார்கள் ( என்னுடைய தந்தையாரும் மூர்த்தியை சந்திக்க ஆவலாக உள்ளார். என்னுடைய பிறப்பை சந்தேகித்து மூர்த்தி எழுதிய விடயங்கள் குறித்து மூர்த்தியிடம் நேரடியாக விளக்கிவிடுவார் என்று நினைக்கிறேன்)
மேலும் மூர்த்தியால் பாதிக்கப்பட்ட பதிவர்கள் பலர் வர காத்திருக்கிறார்கள்...
என்னைப்போன்ற ஒரு சிலர் அவனை மன்னித்துவிட்டுவிடும் மன நிலையில் இருந்தாலும், சில பதிவர்கள், மூர்த்தி செய்த குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும் என்ற நிலை எடுத்துள்ளனர்.
வழக்கறிஞர் நன்பரிடம் கொடுத்த - மூர்த்தியின் ஒப்புதல் வாக்குமூலத்தில் இருக்கும் சிங்கைப்பதிவரும், மற்றொரு பதிவரும் விரைவில் அங்கே வந்து நிற்கவேண்டும் என்று நினைக்கிறேன்...
உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...அது ஆரியப்போலியாக இருந்தாலும் திராவிடப்போலியாக இருந்தாலும்...
ஆகஸ்ட் இரண்டாம் தேதி எழும்பூர் குற்றப்பிரிவு , சைபர் கிரைம் அலுவலகத்தில் சந்திக்கலாம் வாருங்கள்....
//திருவாளர் டோண்டுவுடன் எனக்கு இந்த விஷயத்தில் மிகப் பெரிய கருத்து வேறுபாடு உண்டு. அந்த சல்மா அயூப், மூர்த்தி இல்லை என்பதிலும், திரு.ஜெயராமன் என்பவர்தான் அந்த நபர் என்பதிலும் எனக்கு 200 சதவிகிதம் ஒப்புதல் உண்டு.//
ஜயராமன் அனியாயமாக பலியாடு ஆக்கப்பட்டார் என்பதற்கான வாதங்களை நான் ஏற்கனவே எனது ஆப்பரேஷன் சல்மா அயூப் பதிவில் தந்துள்ளேன். கட்டை பஞ்சாயத்து செய்து அவரை வேறு விஷயங்களை காட்டி மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர். இது குறித்தும் கட்டை பஞ்சாயத்து ஏன் செய்யப்பட்டது என்பது குறித்தும் எனக்கு சந்தேகங்கள் உண்டு. சைபர் கிரைமில் அது பற்றி விசாரித்தால் தானே உண்மை வரும். அப்போது யாருக்கு கூற வேண்டுமோ அவர்களிடம் என் சந்தேகங்களை கூறுவேன்.
பார்க்க:
http://dondu.blogspot.com/2007/04/blog-post_14.html
அது சரி, என்னமோ ஒரு முரளி மனோஹர் புனைப்பெயருக்கு தார்மீக கோபத்துடன் எழுதி தாட் பூட் தஞ்சாவூர் என்று பதிவுகள் போட்ட பல அண்ணன்கள் இப்போது மூர்த்தி என்று நிச்சயமாகத் தெரிந்த பின்னரும் இடி போன்ற மௌனம் ஏன்? இது வரைக்கும் ஒரு நூலிழையில் மூர்த்திக்கு சந்தேகத்தின் பலனை தந்தவர்கள் இப்போது கண்ணை கசக்கிக் கொண்டு இப்பிரச்சினையில் தங்களையும் ஊறுகாயாக சிலர் பயன் படுத்த முயன்றார்கள் என காமெடி பின்னூட்டமெல்லாம் இடுகின்றனர்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
உண்மைத் தமிழன்(15270788164745573644)
மூன்று கருத்துகள்:
1. இவ்விடயத்தினைத் திசை திருப்பும் நோக்குடன் நான் எழுதவில்லை. (இவ்வழக்கினால், என் பெயரிலே இடப்பட்டிருந்த "அற்புதமான கதை"ப்பதிவும் நீக்கப்பட்டிருக்கும் ந்நன்மை கிடைத்திருக்கிறது)
2. வழக்குடன் சம்பந்தப்பட்டவர்களே வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அறிக்கைகளும் செவ்விகளும் கொடுத்துக்கொண்டிருப்பது சரியான & வழக்குக்குக் கெடுதலற்ற விடயமா என்று இங்கிருக்கும் வழக்கறிஞர்களே சொல்வதுதான் சரி; சரியாகப்படவில்லை என்றே தோன்றியது.
3. சல்மா அயூப் பிரச்சனையிலே சம்பந்தப்படவர்களே முறையீடு செய்ய வேண்டும் என்றுதான் நானும் சொல்லியிருக்கின்றேன். ஆனால், மூர்த்தி இட்ட பதிவுகளைச் சொல்லும்படி கேட்கும் ராகவனிடம் அப்பதிவும் மூர்த்தி இட்டதே என்று குற்றவியல்_பிரிவிடம் சொன்னாரா என்று கேட்பதிலே தவறில்லை என்று எண்ணுகிறேன்.
அவ்வளவுதான்.
செந்தழல் ரவியின் முதல் பின்னூட்டத்தைத் தவிர மீதியெல்லாம் எடுத்து விட்டேன். அதுவும் நான் அவரிடம் அப்போது வேறு விஷயமாக தொலைபேசியபோது அவர் அதை உறுதி செய்ததால்தான்.
அப்போதே அது அதர் ஆப்ஷனில் வந்தது என்பதை கவனிக்காதது என் குற்றம்தான்.
பிளாக்கர் பெயரில் வருபவர்கள் பிளாக்கராக லாகின் செய்து வருதல் நலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று நடந்த பெங்களூர் குண்டு வெடிப்புகளில் இறந்த பெண் ஒரு தமிழர் என்று சொல்லுகிறார்கள்.
//இன்று நடந்த பெங்களூர் குண்டு வெடிப்புகளில் இறந்த பெண் ஒரு தமிழர் என்று சொல்லுகிறார்கள்//
இறந்தது யாராயிருந்தாலும் அது மிகவும் விசனமளிக்கும் செயலே. இறந்தவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிகப்பெரிய பிரச்சனை ஒரு நல்ல முடிவுக்கு வந்தது.
//பெயரிலி. said...
உண்மைத் தமிழன்(15270788164745573644)
மூன்று கருத்துகள்:
1. இவ்விடயத்தினைத் திசை திருப்பும் நோக்குடன் நான் எழுதவில்லை. (இவ்வழக்கினால், என் பெயரிலே இடப்பட்டிருந்த "அற்புதமான கதை"ப் பதிவும் நீக்கப்பட்டிருக்கும் நன்மை கிடைத்திருக்கிறது)//
நீக்கச் சொன்னது நாங்கள்தான்.. உங்களுடையது மட்டுமல்ல, வஜ்ராசங்கர், சர்வேஸன், மாயவரத்தான், அதியமான், விருந்து, சட்னிவடை, ஆதிசேஷன், சதுர்வேதி, வால்டர் வெற்றிவேல், சிவஞானம்ஜி, காசிஆறுமுகம் என்று மொத்தம் 17 தளங்களை நீக்கச் சொல்லியிருக்கிறோம்.
//2. வழக்குடன் சம்பந்தப்பட்டவர்களே வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது, அறிக்கைகளும் செவ்விகளும் கொடுத்துக்கொண்டிருப்பது சரியான & வழக்குக்குக் கெடுதலற்ற விடயமா என்று இங்கிருக்கும் வழக்கறிஞர்களே சொல்வதுதான் சரி; சரியாகப்படவில்லை என்றே தோன்றியது.//
உங்களுடைய கருத்து சரியானதுதான் என்றாலும் இந்த நேரத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. பாருங்கள். இந்தப் பதிவு எழுதிய பிறகுதான் ஹரிஹரனின் போலி வலைத்தளம் பற்றி எங்களுக்குத் தெரிகிறது.. என்ன செய்ய? இதன் மூலம் வருகின்ற பிரச்சினைகளையும் சமாளிப்போம். எத்தனையையோ சமாளித்தாகிவிட்டது.
//3. சல்மா அயூப் பிரச்சனையிலே சம்பந்தப்படவர்களே முறையீடு செய்ய வேண்டும் என்றுதான் நானும் சொல்லியிருக்கின்றேன். ஆனால், மூர்த்தி இட்ட பதிவுகளைச் சொல்லும்படி கேட்கும் ராகவனிடம் அப்பதிவும் மூர்த்தி இட்டதே என்று குற்றவியல் பிரிவிடம் சொன்னாரா என்று கேட்பதிலே தவறில்லை என்று எண்ணுகிறேன். அவ்வளவுதான்.//
உங்களுடைய கேள்வி நியாயமானதுதான் என்றாலும் நானே அதனைப் பற்றிக் குறிப்பிடவில்லை. காரணம், அப்போதே அந்தப் பதிவு நீக்கப்பட்டது என்பதை நான் அறிவேன். அதோடு இந்த வழக்கோடு அதனையும் சேர்த்து இழுப்பது வழக்கிற்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது.. ஊக்கமளிக்காது என்பதாலும்தான்..
தங்களுடைய ஆலோசனைகளுக்கும், பரிவுகளுக்கும் மிக மிக நன்றி பெயரிலி ஸார்..
வாழ்க வளமுடன்
யப்பா டைம் பாஸ்-க்கு பண்ற ஒரு வேளையிலே இவ்வளவு களேபரம் .. ஹையோ ஹையோ .. போய் புள்ளகுட்டிங்களை படிக்க வைக்குற வழியப்பாருங்கப்பா...
இணைய குசும்பன், முகமூடி மற்றும் திருமலையை தாக்கும் அனானியின் பின்னூட்டம் ஏற்கப்படவில்லை. தைரியம் இருந்தால் பிளாக்கராக லாகின் செய்து வரவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்தப் பதிவு எழுதிய பிறகுதான் ஹரிஹரனின் போலி வலைத்தளம் பற்றி எங்களுக்குத் தெரிகிறது.. என்ன செய்ய? //
இப்போதுதான் அந்த உரலில் போய் பார்த்தேன். அதுவும் நீக்கப்பட்டுள்ளது. ஹரிஹரன் மனம் அமைதி அடையலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// இணைய குசும்பன், முகமூடி மற்றும் திருமலையை தாக்கும் அனானியின் பின்னூட்டம் ஏற்கப்படவில்லை //
யாருப்பா அனானி நீ, இவ்ளோ நல்லவனா இருக்க... வருசக்கணக்கா ஆகியிருக்கும் நாம களத்துல சந்திச்சி.. இவ்ளோ நாளா இருட்டு ரூம்பு மூலையில குந்தி குமுறி குமுறி அழுதுமா மன அழுத்தம் தீரல உனக்கு? அப்பிடி என்னதாம்பா ப்ரச்னை உனக்கு? உன் மனபிராந்திக்கு மருந்தா அயல்நாட்டு பிராந்தி வேணும்னா சொல்லு அனுப்பி வைக்கிறேன்... இல்லையின்னா இந்த லிஸ்டுல உன் வீட்டுக்கு பக்கமா எது இருக்கோ அங்கன போயி யாருகிட்டயாவது மனசு விட்டு பேசு...
http://www.tnhealth.org/treatment.htm -
01. Institute of Mental Health, Medavakkam Tank Road, Kilpauk, Chennai - 10
02. Dept. of Psychiatry, Madras Medical College, Chennai
03. Dept. of Psychiatry, Govt. Stanley Medical College,. Chennai
04. Dept. of Psychiatry, Govt. Kilpauk Medical College, Chennai
05. Dept. of Psychiatry, Govt. Chengalpattu Medical College, Chengalpattu
06. Institute of Psychiatry, Govt. Govt. Madurai Medical College
07. Dept. of Psychiatry, Govt. Coimbatore Medical College, Coimbatore
08. Dept. of Psychiatry, Govt. Mohan Kumaramangalam Medical College, Perundurai
09. Dept. of Psychiatry, Govt. Salem Medical College
10. Dept. of Psychiatry, Govt. Tanjore m,edical College, Tanjore
11. Dept. of Psychiatry, Ki.Va.Po. Medical College, Trichi
12. Dept. of Psychiatry, Govt. Tirunelveli Medical college, Tirunelveli
13. Psychiatric Clinic, Govt. ESI Hospital, Ayanavaram
டோண்டு அவர்களே,
//இணைய குசும்பன், முகமூடி மற்றும் திருமலையை தாக்கும் அனானியின் பின்னூட்டம் ஏற்கப்படவில்லை. தைரியம் இருந்தால் பிளாக்கராக லாகின் செய்து வரவும்.//
இது என்ன மிரட்டலா? நான் ஏற்கனவே சொல்லியபடி இவர்களுக்கு பயந்து தான் அனானியாக வருகிறேன். நீங்கள் வெளியிடவில்லை என்றால் என்ன. யட்சன் வெளியிட்டிருக்கிறார். அதில் என்ன தாக்குதல் இருக்கிறது என்று விருப்பமுள்ளவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
விதியின் விளையாட்டு விசித்திரமானது. (எனக்கு கர்ம வினை / ஜோதிடம் இதில் நம்பிகை உண்டு)
மூர்த்தி செய்த ஈனச்செயல்களுக்கு தகுந்த தண்டனை, எதோ ஒரு முறையில், அவனுக்கு கிடைக்கும் என்றே நினைத்தேன்.
எடியுரப்பா, ஓகெனக்கல் குடிநீர் பிரச்னையை அரசியல் லாபத்திற்க்கா பெரிது படுத்தி வன்முறையை தூண்டியது, எப்படி மூர்த்தியை மாட்ட வைத்தாது பாருங்கள். கர்னாடகாவில் தமிழர் மீது வன்முறை ; அதில் தந்திரமாக செந்தமிழ் ரவியை பலிகடாவாக்க மூர்த்தி போட்ட திட்டம் கடைசியில் அவனுக்கெ வினையானது.
ரவி பற்றி ஆர்குட்டில் அவன் போலி அய்டியில் எழுதாமல் இருந்திருந்தால், அவர் சைபர் க்ரைம் போலிஸில் புகார் அளித்திருக்க மாட்டர். பல வருடங்கள் அவனின் லீலைகள் தொடர்ந்தது/தொடர்ந்திருக்கும். 2007இல் அடையாளம் காட்டப்பட்ட பின்பு அவனை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. சரி, அப்படியே கொசுத்தொல்லை போல சகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று அனைவரும் நினைத்த போது, சற்றும் எதிர்பாராமல் இந்த திருப்பம் மற்றும் தண்டனை.
கெடுவான், கேடு நினைப்பவன் என்ற பழமொழி மிகச் சரியே...
//சரி, அப்படியே கொசுத்தொல்லை போல சகித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று அனைவரும் நினைத்த போது, சற்றும் எதிர்பாராமல் இந்த திருப்பம் மற்றும் தண்டனை.//
100% உண்மை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீதி வென்றது.நியாயம் வென்றது.தர்மம் வென்றது.
CONGRATS.
RAMAKRISHNAHARI
//எடியுரப்பா, ஓகெனக்கல் குடிநீர் பிரச்னையை அரசியல் லாபத்திற்க்கா பெரிது படுத்தி வன்முறையை தூண்டியது, எப்படி மூர்த்தியை மாட்ட வைத்தாது பாருங்கள்.//
எல்லாம் நன்மைக்கே !
//எடியுரப்பா, ஓகெனக்கல் குடிநீர் பிரச்னையை அரசியல் லாபத்திற்க்கா பெரிது படுத்தி வன்முறையை தூண்டியது, எப்படி மூர்த்தியை மாட்ட வைத்தாது பாருங்கள்.//
அப்ப இதுல கூட ப.ஜ.க கை உள்ளது என்கிறீர்களா?
I suggest, you (or Ravi) pls give the Salma Ayub blog URL to cyber crime when you meet them next time.
They can check the post history and IP sources and figure out who the real publisher is.
after all this, I think its better to knock that down as well.
கேட்டகவே மிக்க சந்தோசமாக உள்ளது. இலங்கையில் இப்படியெல்லாம் செய்யமுடியாது என்ற ஆதங்கம் வேறு உள்ளது.
//இந்தப் பதிவு எழுதிய பிறகுதான் ஹரிஹரனின் போலி வலைத்தளம் பற்றி எங்களுக்குத் தெரிகிறது.. என்ன செய்ய? //
இப்போதுதான் அந்த உரலில் போய் பார்த்தேன். அதுவும் நீக்கப்பட்டுள்ளது. ஹரிஹரன் மனம் அமைதி அடையலாம்.
//
டோண்டு சார், செந்தழல் ரவி, உண்மைத்தமிழன் எனது பெயரில் இருந்த போலி வலைத்தளத்தை நீக்கியதற்கு நன்றிகள்.
தமிழ் வலைப்பூக்களின் வாயிலாக மத்தியகிழக்கு குவைத்தில் இருந்தபடிக்கு கனடாவின் கால்கரி முதல் நியூஸிலாந்து வரை நம் மக்களோடு நெருங்கிய உறவினர்கள் போல ஒரு தனித்த சிறப்பான அந்நியோன்யத்துடன் இருக்க கிடைத்த அற்புதமான கருவியான வலைப்பூ இணைய தளம், கருத்தைக் கருத்தினால் எதிர்கொள்ள முடியாத மூர்த்தி போன்ற ஆபாச வக்கிரசிந்தனை குழுவினரால் சிதைந்து போனது வருத்தமே!
வாதங்களில் கருத்தை ஏற்காதவர்களது குடும்பத்தினரைத் தாக்கி நாற வசவுகளை பின்னூட்டமாக்கி வலைப்பூக்கள் மாற்று சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளும் களமாக இருப்பதை மறுத்து தெருக்களில் டாஸ்மாக் சரக்கடித்து பகுத்தறிவோடு சச்சரவு செய்யும் மலினத்தைக் கொணர்ந்ததால் சமூக சிந்தனை வாதங்களில் ஈடுபடாமல் சலிப்படைய வைத்ததுதான் சாதித்தது.
நல்லவர்களைஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான் என்ற உண்மை மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.
நன்றி அந்த இறைவனுக்கு.
இனி நல்லதே நடக்கும்
duplicate mayavarathaan's blog : mayavaraththaan.blogspot.com is still on action but set to 'for invited users only' option.
எந்த மன்னிப்பையும் கண்ணெடுத்து நான் பார்க்கவில்லை. ஆனால் இவ்வளவு நடந்த பின்பு, மன்னித்துவிடுங்கள் என்றுக்
கேட்ப்து என்ன நியாயம்? குழந்தைகள் உட்பட தன் ஆபாச வார்த்தைகளால் கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் ... வாரி
இரைத்தவரை இன்று மன்னிக்க என் மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை. சட்டபூர்வமான தண்டனை கட்டாயம் தர வேண்டும்.
Post a Comment