9/05/2010

பத்துக் கட்டளைகள் - ஒரு மொழிபெயர்ப்பு அனுபவம்


இயக்கம்: Cecil B. DeMille, Charlton Heston (டைட்டில்ஸில் பெயர் வரவில்லை)
தயாரிப்பு: Cecil B. DeMille
திரைக்கதை: Joseph Holt Ingraham (novel Pillar of Fire), A.E. Southon (novel On Eagle's Wings), Dorothy Clarke Wilson (novel Prince of Egypt), Æneas MacKenzie, Jesse L. Lasky, Jr.
Jack Gariss, Fredric M. Frank
கதைசொல்லி: Cecil B. DeMille
நடிப்பு:
Charlton Heston, Yul Brynner, Anne Baxter, Edward G. Robinson, Yvonne De Carlo, Debra Paget, John Derek
இசை: Elmer Bernstein
சினிமாட்டோக்ராஃபி: Loyal Griggs, ASC
எடிட்டிங்: Anne Bauchens
விநியோகம்: Paramount Pictures
வெளியீடு: October 5, 1956
சினிமா ஓடும் நேரம்: 220 minutes
நாடு: United States
மொழி: English
பட்ஜெட்: $13,000,000
பாக்ஸ் ஆஃபீஸ்: $65,000,000 (அமெரிக்காவில் மட்டும்)
நன்றி விக்கீபீடியா:

சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும்போது என் தந்தை அமரர் நரசிம்மன் என்னையும் என் அத்தைப் பிள்ளையையும் இப்படத்துக்கு அழைத்துச் சென்றார். படம் ஓடியனில் திரையிடப்பட்டது. ஒரு ஆங்கிலப் படத்துக்கு அதன் நேரம் மிகவும் அதிகமே (3 மணி நேரம் 40 நிமிடங்கள்).

இப்படத்தின் விசேஷம் என நான் இன்றும் கருதுவது எனது தந்தையின் இடைவிடாத மொழிபெயர்ப்புதான். திரையில் பேச்சோ எழுத்துக்களோ வர,வர தனது கம்பீரமான குரலில் மெதுவாக எங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்தார். அப்படத்தை பார்த்த சில நாட்களுக்கு எனக்கு அத்தனை காட்சிகளும் நெட்டுருவாகியிருந்தன. அந்தந்த காட்சிகளுக்கான வசனங்களின் தமிழாக்கமும்தான்.

ஆகவேதான் அடுத்த நாளைக்கே எனது பெரியப்பா பிள்ளைகளுடன் நான் அதே படத்துக்கு சென்றபோது அவர்களுக்கு சீன் பை சீன் நான் தமிழில் சொல்ல முடிந்தது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சுமார் 16 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் 1975-ல் அதே படத்தை காசினோவில் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட சீன் வந்து கதாபாத்திரம் வாயைத் திறக்க சில நொடிகள் இருக்கும்போது தமிழாக்க வசனம் ஞாபகத்துக்கு வந்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கிட்டத்தட்ட அப்படியே வந்தது. அச்ச்மயம் என் தங்கைகள் கூட வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் டயலாக் எனக்கு நினைவில் இருப்பதில். இதே மாதிரி அனுபவம் எனக்கு ஏற்கனவே அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் சபாஷ் மீனா படம் பார்க்கும்போது ஏற்பட்டிருந்தபடியால், நான் அவ்வளவாக வியப்படையவில்லை. மறுபடியும் அப்படத்தைப் பார்த்தால் ஞாபகம் வருமாக இருக்கும். இது பற்றி நான் ஜெயா டிவி நேர்காணலிலும் குறிப்பிட்டுள்ளேன்.

அந்த வீடியோ:


ஆனால் எனது தந்தையின் அபார மொழிபெயர்ப்பு பற்றி சில உதாரணங்களுடன் கூறியே ஆக வேண்டும். (டிஸ்கி: இப்பதிவு போடும்போது ஆங்கில மூலத்தில் எனது நினைவுக் குறைவால் தவறு ஏற்படக்கூடாது என்பதற்காக அப்படத்தின் ஸ்க்ரிப்டிலிருந்து எடுத்து எழுதுகிறேன். அதைப் பார்த்ததுமே என் தந்தையின் மொழிபெயர்ப்பு நினைவுக்கு வந்து விடுகிறது).

முதல் காட்சி:
And God said, "Let there be light." And there was light. And from this light, God created life upon earth. And man was given dominion over all things upon this earth and the power to choose
between good and evil. But each sought to do his own will because he knew not the light of God's law.

Man took dominion over man, the conquered were made to serve the conqueror, the weak were made
to serve the strong, and freedom was gone from the world.

So did the Egyptians cause the children of Israel to serve with rigor, and their lives were made bitter with hard bondage.

என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
"வெளிச்சம் உருவாகட்டும்." என்றார் கடவுள். அது உருவாயிற்று. அதன் ஒளியிலிருந்து கடவுள் இந்த பூமியில் உயிர்களை உருவாக்கினார். அவை எல்லாவற்றையும் நிர்வகிக்கும் வேலை மனிதனுக்குத் தரப்பட்டது, நன்மை தீமை அறிந்து தெரிவு செய்யும் சக்தியும் அவனுக்கு அவர் கொடுத்தார். ஆனால் ஒவ்வொருவனும் தன்னிச்சைப்படியே நடந்தான், ஏனெனில் கடவுளின் ஆணையை அவன் சரியாக உணரவில்லை.

மனிதன் மனிதனை அடிமைப்படுத்தினான். அவ்வாறு அடிமையானவர்கள் ஜெயித்தவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதாயிற்று. உலகிலிருந்து சுதந்திரம் மறைந்தது.

அப்படித்தான் எகிப்தியர்கள் இஸ்ரேலின் மக்களை தங்களுக்காக கடுமையாக உழைக்க வைத்தனர். அவர்கள் வாழ்க்கை அடிமைத்தனத்தால் துன்பம் நிறைந்ததாயிற்று.

ஹீப்ரூக்களின் ஆண் குழந்தைகளைக் கொல்ல பரோவா இடும் ஆணைக்கான காட்சி:
Every newborn Hebrew man-child shall die. So let it be written. So let it be done. So speaks Rameses I.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
ஹீப்ரூக்களின் அப்போதுதான் பிறந்த எல்லா ஆண்குழந்தைகளும் கொல்லப்படட்டும். அவ்வாறே என் ஆணை எழுதப்படட்டும், அது நிறைவேற்றவும் படட்டும், எனக்கூறினான் முதலாம் ரமேசஸ்.
(அடுத்த நாள் என் பெரியப்பா பிள்ளைகளுக்கு இதை நான் அக்காட்சியின் போது தமிழில் கூறுகையில் என் குரல் உடைந்து கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்ததும் நினவிலுள்ளது).

குழந்தை மோசஸை கூடையில் வைத்து கர்ணன் வேலை செய்கிறார்கள் குழந்தையின் அன்னையும் அக்காவும். அக்காட்சி:
God of Abraham, take my child into Thy hands, that he may live to Thy service.
But, Mother, we have not even given him a name.
God will give him a name.

என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
அப்ரஹாமின் கடவுளே, என் குழந்தையை உன் ஆதரவில் ஏற்றுக் கொள். அவன் நன்கு வாழ்ந்து உனக்கு சேவை செய்யட்டும்.
அம்மா, தம்பிக்கு பெயர் வைக்கவில்லையே.
அது கடவுளின் வேலை.

கூடையில் வைத்து நைல் நதியில் மிதந்த குழந்தை பரோவாவின் சகோதரியிடம் கிடைக்கிறது. குழந்தையை சுற்றியிருந்த துணியின் நெய்தல் வேலைப்பாடு ஹீப்ரூக்களுக்கானது என்பதை உணர்ந்த அரசகுமாரியின் தாதி அவளைத் தடுக்கப் பார்க்கிறாள். ஆனால் அவள் கேட்கவில்லை. அதை எடுத்து வளர்க்க நிச்சயிக்கிறாள். தாதி யாரிடமும் இது பற்றிய உண்மையைக் கூறக்கூடாது என ஆணை பிறப்பிக்கிறாள். பிறகு குழந்தையை நோக்கிப் பேசுகிறாள்.

You will be the glory of Egypt, my son, mighty in words and deeds. Kings shall bow before you. Your name will live when the pyramids are dust. And... because I drew you from the water, you shall be called "Moses." Moses! Moses! Moses. Moses! Moses! Moses!

என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
என் மகனே, நீ எகிப்துக்கு பெருமை தேடித் தருவாய். சொல்லிலும் செயலிலும் வல்லவனாக இருப்பாய். அரசர்கள் உன் முன்னால் மண்டியிடுவர். பிரமிடுகள் மண்ணோடு மண்ணாகி போனாலும் உன் பெயர் நிலைக்கும். நீரிலிருந்து நான் உன்னை அடைந்ததால் உன்னை மோசஸ் என அழைக்கிறேன். மோசஸ், மோசஸ், மோசஸ், மோசஸ்!

இவ்வாறே கூறிக் கொண்டு போகலாம். ஆனால் நான் மிகவும் அதிகமாக நினைவில் வைக்கும் வசனங்கள்.

முதலாம் ரமேசஸின் ஆணைப்படி மோசஸ் நாடு கடத்தப்படும்போது, பின்புலத்தில் ஒரு குரல் பிரலாபிக்கிறது.
Into the blistering wilderness of Shur, the man who walked with kings now walks alone. Torn from the pinnacle of royal power, stripped of all rank and earthly wealth, a forsaken man without
a country, without a hope,
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
அதோ போகின்றான் அம்மனிதன், வெயில் தகிக்கும் பாலைவனத்தில். அரசர்களுக்கு இணையாக நடந்தவன் இப்போது தனியே நடக்கின்றான். அரசு அதிகாரம் பிடுங்கப்பட்டு, பதவிகள் பறிக்கப்பட்டு, செல்வமெல்லாம் இழந்து, எல்லோராலும் கைவிடப்பட்டு போகிறான் அந்த நாடற்றவன், நம்பிக்கைக்கு ஏதும் இடமின்றி,

முதலாம் ரமேசஸ் இறந்தபோது, இரண்டாம் ரமேசஸ் கூறுவான்:
The royal falcon has flown into the sun.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
ராஜாளிக் கழுகு சூரியனை நோக்கி பறந்துவிட்டது.

சில ஆண்டுகள் கழித்து எகிப்துக்கு திரும்ப வரும் மோசஸிடம் இரண்டாம் ரமேசஸ் கேட்கிறான்:
What gifts do you bring? We bring you the word of God.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
என்ன கொண்டு வந்தாய்? கடவுளிடமிருந்து கட்டளை கொண்டு வந்தேன்.

சாதாரணமாக திரைப்படம் ஓடும்போது யாராவது இம்மாதிரி பேசிக் கொண்டேயிருந்தால், மற்றவர்கள் கடுமையாக ஆட்சேபிப்பார்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை என் தந்தை தனது கம்பீரமான குரலில் மெதுவாக மொழிபெயர்த்துக் கொண்டே வந்தபோது, சுற்றிலிருந்தவர்கள் ஒரு காதை என் தந்தை பக்கம் வைத்தது இடைவேளை போதுதான் தெரிந்தது. பலர் அவரிடம் வந்து சில காட்சிகள் பற்றி சந்தேகம் கேட்டுப் போனார்கள்.

பத்துக் கட்டளைகளையும் கடவுள் தரும் குரல் சார்ல்டன் ஹெஸ்டனுடையதே என்றும், ஆனால் அது டைட்டில்ஸில் இல்லை என்பதும் இப்போதுதான் எனக்கு தெரிந்தது. குழந்தை மோசஸாக வந்தது சார்ல்டன் ஹெஸ்டனின் மூன்று மாதக் குழந்தை என்பதை என்னவோ நான் 1975-ல் இரண்டாம் முறையாக அப்படத்தைப் பார்க்கும்போது தெரிந்து கொண்டேன்.

செங்கடல் பிளக்கும் காட்சி அற்புதம். தியேட்டரில் ஒரே கைத்தட்டல்.

மோசஸ், ஔவையார், கர்ணன், கிருஷ்ணர் ஆகிய எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை எனப் பார்த்தால் பிறந்ததுமே இடம் பெயரும் நிலைதான். மோசஸின் கூடை நைல் நதியில் போக தனது அன்னையின் ஆணப்படி குழந்தையின் அக்கா பின்னால் கரையிலிருந்த வண்ணம் ஓடுகிறாள். அச்சுட்டிப் பெண்ணின் முகத்தில் எவ்வளவு உணர்ச்சிகள், கவலைகள்? கல்லையும் உருக்கும் காட்சியல்லவா அது.

பத்துக் கட்டளைகளில் பல தகவல் பிழைகள் இருந்ததென விக்கிபீடியா கூறுகிறது. I just don't care.

அன்புடன்,
டோண்டு ராகவன்

21 comments:

அருள் said...

// //மனிதன் மனிதனை அடிமைப்படுத்தினான். அவ்வாறு அடிமையானவர்கள் ஜெயித்தவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதாயிற்று. உலகிலிருந்து சுதந்திரம் மறைந்தது.// //

அடடா... உங்க ஆளுங்களைப் பற்றி அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சு போச்சா?

dondu(#11168674346665545885) said...

அடேடே அரசாட்சி செய்த அனுபவம் வன்னியரிடம்தானே உள்ளது? பார்ப்பனன் அரசாட்சி செய்ததே இல்லையே.

இப்போது வன்னியர்கள் தலித்துகளை வன்கொடுமை செய்வதுபோலத்தான் எகிப்தியர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

R. Gopi said...

இவ்ளோ பேசறீங்களே, போன திங்கக் கிழமை என்ன கலர் சட்ட போட்டிருந்தீங்க சொல்ல்லுங்க பாப்போம்!!!! நான் சட்டையே போட்ரதில்லன்னு மழுப்பக் கூடாது!

இல்லன்னா இதுக்கு பதில் சொல்லுங்க, அதே போன திங்கக் கிழமை மத்தியானம் உங்க வீட்ல என்ன கறி \ கூட்டு???!!!!

வஜ்ரா said...

//
இப்போது வன்னியர்கள் தலித்துகளை வன்கொடுமை செய்வதுபோலத்தான் எகிப்தியர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
//

இந்த கருத்து எனக்கு ஏற்புடையது அல்ல. மேலோட்டமாக இது சரி தான் என்றாலும் அடிமைத்தனத்திற்கும் (எகிப்தியர்கள் செய்தது) ஜாதி மோதலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இந்தியாவில் "அடிமை" ஜாதி என்று ஒன்று இருந்திருந்தால் இந்தியாவிலும் எகிப்து போல் megalomaniac தனமான பிரமீடுகள் போன்ற "சரித்திரப் புகழ் வாய்ந்த" கட்டிடங்கள் நிறைய கட்டப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏதும் இல்லை.

யாசவி said...

//சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில்//


:)))

Anonymous said...

//என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
"வெளிச்சம் உருவாகட்டும்." என்றார் கடவுள். //

Ammam, Unga naina indha tamizhdhaan pesichchaa ?

dondu(#11168674346665545885) said...

Unga naina indha tamizhdhaan pesichchaa ?

ஆம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//மேலோட்டமாக இது சரி தான் என்றாலும் அடிமைத்தனத்திற்கும் (எகிப்தியர்கள் செய்தது) ஜாதி மோதலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.//
நான் சொன்னது சமயசந்தர்ப்பம் தெரியாது எல்லாத்துக்கும் பார்ப்பனரையே குறிவைக்கும் அருளுக்கான பதில் அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராஜசுப்ரமணியன் said...

1958-59-ல் நானும் இந்த “பத்துக் கட்டளைகள்” சினிமாவை பார்த்துள்ளேன். (பின்னர் மீண்டும் 3 முறை பார்த்தேன்)

மிக அருமையான படம். உங்கள் பதிவு பழைய நினைவுகளை தூண்டி விட்டது. நல்ல பதிவு; நன்றிகள்.

a said...

ஜெயா டிவி இன்டர்வ்யூ பார்த்தேன்.......... நன்றாக இருந்தது...

dondu(#11168674346665545885) said...

@வழிப்போக்கன்
நான்கு பகுதிகளும் பார்த்தீர்கள்தானே. முதல் பகுதிக்கு கீழேயே மீதி மூன்று பகுதிகளுக்கான சுட்டிகளும் அதன் முடிவில் காணப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// அடடா... உங்க ஆளுங்களைப் பற்றி அவங்களுக்கு அப்பவே தெரிஞ்சு போச்சா?//

Enga vanniyarungala pathi nalla therinjirukkuthu

~Jaathi Veriyudan,

Kurul

Anonymous said...

//
Ammam, Unga naina indha tamizhdhaan pesichchaa ?
//

உம் புள்ள இப்டித்தான் டமில் எழுதப்போவுது...அதப் போயி கவனி தம்பி.

Anonymous said...

எகிப்தில் யூதர்களை அடிமைபடுத்தியதுக்கும் பார்ப்பானர்கள் தான் காரணமா ? சூப்பர் அருள்.

இன்னும் என்ன ?

அவுஸ்திரேலியாவில் பழங்குடிகளை கூண்டோடு கைலாசம் அனுப்பிய உங்க பாஸ் துரைமாருங்களுக்கும் அட்வைஸ் கொடுத்தது பார்ப்புகள் தானோ ?

Anonymous said...

//இவ்ளோ பேசறீங்களே, போன திங்கக் கிழமை என்ன கலர் சட்ட போட்டிருந்தீங்க சொல்ல்லுங்க பாப்போம்!!!! //

Human brain is still a mystery to scientist. It normally remembers, what it wants to remember, may be what it likes or what it dislikes to remember.
And our heart has its own brain for certain functions. Heart transplanted patients, resulted with donor heart characters. The first heart transplanted lady even told the name of the donor to the doctor, with no prior knowledge of that. I watched a BBC documentary. Mystery indeed !.

I wonder how the fanatics out there will behave, if they have a heart transplant.


If one has too much memory it is a disease. See below.

http://abcnews.go.com/Health/story?id=4813052&page=1

Sridhar

Anonymous said...

//உம் புள்ள இப்டித்தான் டமில் எழுதப்போவுது...அதப் போயி கவனி தம்பி.//

Adhula, enna naina thappu. Nee mattum aaththula, Oththulanu kalaykalamaa?

Anonymous said...

//
Adhula, enna naina thappu. Nee mattum aaththula, Oththulanu kalaykalamaa?
//

அகம் என்பது எந்த மொழியில் உள்ளே என்று அர்த்தம் ?

நைனா என்பது எந்த மொழியில் தந்தை என்று அர்த்தம் ?

திராவிட நாய்கள் இங்கிலீசிலும், தெலுங்கிலும் பேசி தமிழை அழிக்கிறார்கள். அடுக்கு மொழி பேச்சை நம்பி ஏமாந்த சோனகிரியே...உன் வம்சம் பேசும் தமிழைப் போய் கவனி முதலில்.

நீயே வூட்டுல இப்புடிக்கா டமிலுல பீட்டார் வுட்டா, உம் புள்ள ஒன்னப் பார்த்து வளருது, அது வாயில கலீஜ் தான் வரும். அத்த டமிலுன்னு நீ வேணா சொல்லி பெருமைப்பட்டுக்கோ.

இப்ப மூடிட்டுப் போ.

Anonymous said...

//திராவிட நாய்கள் இங்கிலீசிலும், தெலுங்கிலும் பேசி தமிழை அழிக்கிறார்கள்//

Thanks for alienating yourself as an ariyan mongrel.

You keep saying "Aathula or S...la",

Anonymous said...

//
Thanks for alienating yourself as an ariyan mongrel.
//

You alienated only yourself believing in ba*d bishop caldwell's 19th century racial theories.

The Keralites, Kannadigas, Andhra, or orissa people never believed such nonsense. That explains who is a mongrel, a dravida mongrel perhaps.

Aathula is not sanskrit you fool, agam/agathil means "inside" its simple tamil.

Soothla is what your mouth would look like when you speak of dravida race. Its from sanskrit word "susinam" meaning male reproductive organ. Yours is dysfunctional i presume.

Anonymous said...

//Aathula is not sanskrit you fool//

Hey Raammm !!!

No one claimed this as Sanskrit.

For telling lies, I give you curse.

From today when anyone tells you "aaththula", then you will immediately remember "Suththula".

Try to ask someone to tell "aaththula", to check this curse.

தி.தமிழ் இளங்கோ said...

REPLY TO ……. dondu(#11168674346665545885) said...

டோண்டு ராகவன் அவர்களுக்கு வணக்கம்! எனது பதிவை வெளியிடுவதற்கு முன்னர் இதே தலைப்பில் அல்லது இதே கருத்தில் வேறு யாரேனும் பதிவு எழுதி இருக்கிறார்களா என்று கூகிள் மூலம் பார்த்துக் கொள்வேன். அதேபோல் பார்த்தபோது உங்கள் பதிவினையும் பார்வையிட்டுளேன். உங்கள் பாணியில் நீங்கள் எழுதியதோடு விமர்சனங்களுக்கும் உங்கள் பாணியிலேயே பதில் தந்துள்ளீர்கள். தங்களின் வருகைக்கு நன்றி!





 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது