சில கேள்விகள் அடுத்த வார பதிவுக்கு போய் விட்டன.
Surya
கேள்வி-1. கனிமொழி ஸ்ரீலங்கா எம்பசிக்கு முன் போராட்டம் நடத்திக் கைதானார் என்று செய்தி படித்தேன். தந்தை தண்டவாளத்தில் தலை வைத்து தமிழுக்காக உயிரைக் கொடுக்க முன் வந்து மொழி காத்தார். மகள் மனிதாபிமானற்ற மகிந்த ராஜபக்சேயை, மனுநீதிப் பார்ப்பனக் கும்பல் மகிழ்ந்து கொண்டாடும் சிங்களக் கயவனை, சிங்கம் போல சீறிப் பாய்ந்து தன் உயிரையும் துச்சமாக மதித்துப் போராடி சிறை சென்றார் என்று சில வட்டாரங்கள் அதற்குள்ளேயே செய்தி எழுதத் துவங்கிவிட்டன. இதை எல்லாம் இன்னமுமா நம் மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்?
பதில்: வின்னரில் வடிவேலு கேட்ட இந்தக் கேள்விக்கு அவரது அல்லக்கைகளில் ஒருவன் கூறிய பதிலே இங்கும்: “அது அவங்க தலைவிதி தலைவா”.
கேள்வி-2. சுப்ரமண்யம் சுவாமிக்கு உச்ச காட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சிலர் (ஆர்.எஸ்.எஸ். சார்புடையோர்) கோரிக்கை வைத்துள்ளனர். சுவாமியைப் பார்த்தால் ஒன்றும் பயப்படுகிற மாதிரித் தோன்றவில்லையே! சுவாமிக்கு அம்மா சீட் (ராஜ்ய சபை) வழங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
பதில்: சுப்பிரமணியம் சுவாமி அரசு பாதுக்காப்பை யோசித்துத்தான் ஏற்பதே நல்லது. அவர் மேல் இருக்கும் எரிச்சலில் 1984 அக்டோபர் 30 மீண்டும் நடந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
கேள்வி-3. ரஜினி இப்போது அரசியலுக்கு வந்தாலும் வெல்வார் என்று ப.சி. பேசியுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: சிதம்பரம் ஜோக் எல்லாம் அடிக்கிறாரே.
கேள்வி-4. காதலர் தினப் பதிவு ஒன்றும் போடவில்லையே நீங்கள்! ஏன்?
பதில்: ஏற்கனவேயே போட்டு விட்டேனே.
கேள்வி-5. நீங்கள் கர்நாடக சங்கீதம் கேட்பது உண்டா? பிடித்த பாடகர்/பாடகி யார்?
பதில்: அதை சரியாக சீர்தூக்கி கேட்டு எஞ்சாய் செய்யும் ஞானம் எனக்கில்லை. பிடித்த பாடகர் என்று யாரும் இல்லை.
pt
டோண்டு சாரின் விமர்சனம்?
கேள்வி-6. 112 தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றுள்ள நிலையில் மேலும் 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
பதில்: மீனவர்கள் கடலுக்கு செல்லும் நேரத்தில் பல ஹெலிகாப்டர்கள் மேலே ரோந்து செய்வது நல்ல பலன் அளிக்கும்.
கேள்வி-7. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி என்பதை சட்டரீதியாக நிரூபிப்பேன் என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார். ராசாவின் 14 நாள் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பதில்: முடிந்தால் நிரூபிக்கட்டுமே, யார் வேண்டாம் என்றார்கள்?
கேள்வி-8. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ராசா தான் எல்லாவற்றையும் செய்தார், அமைச்சரவையில் கூட அது தொடர்பாக அவர் ஆலோசிக்கவில்லை. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறை எப்படி அமல்படுத்தப்பட்டது?, ஏன் ஏல முறை பின்பற்றப்படவில்லை? என்பது எனக்குத் தெரியாது-பிரதமரின் பேட்டி
பதில்: பதவி வெறி.
கேள்வி-8. 7 கூன் மாஃப்… ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் படம். ப்ரியங்காவைவிட இதன் இயக்குனர் முக்கியமானவர், விஷால் பரத்வாஜ், மெக்பூல், ஓம்காரா போன்ற அற்புதப் படங்களை இயக்கியவர்.
இந்தப் படத்தில் ஏழு பேரை திருமணம் செய்து கொண்டவராக வருகிறார் ப்ரியங்கா. அதனால் படத்தின் முழுக் கதையும் இவரைச் சுற்றியே வருகிறது. ப்ரியங்காவின் முதல் கணவராக நீல் நிதின் முகேஷ் நடித்துள்ளார். ஹீரோயின் ஓரியண்ட் கதையில் ஏழில் ஒருவராக நடிக்க எப்படி நீல் நிதின் ஒத்துக் கொண்டார்?
பதில்: மாற்றம் என ஏற்படுவது நல்லதுதானே. அவரது ரோலுக்கு அதிக வெயிட்டேஜ் கொடுப்பார்களாக இருக்கும்.
கேள்வி-9. பீகாரில் மாலை நேர கோர்ட்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது . முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார்.
பதில்: வக்கில்களுக்கு இதில் ஆட்சேபணை இருபது வேடிக்கையாக உள்ளது.
ezhil arasu
FOR DONDU'S COMMENT:-
கேள்வி-10. Dr Singh showed us on Wednesday that he will cling to power. That makes him no better than run-of-the-mill politicians. So, as an exercise in image-building, his press conference was a depressing failure.
பதில்: யாருக்கும் வெட்கமில்லை.
கேள்வி-11. The reported statement of an eminent cleric from Gujarat asking Muslims of the state to leave the 2002 riots behind and take advantage of the state's development has unleashed a flurry of arguments and counter arguments.
பதில்: இசுலாமியர்கள் மோதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது குஜராத்துக்கு வெளியில்தான். குஜராத்தில் அங்குள்ள இசுலாமியருக்கு மோதியின் அரசு செய்யும் நல்ல காரியம் தெரியாமலா அவரது கட்சிக்கு உள்ளாட்சி தேர்தல்களில் இத்தனை அமோக வெற்றி கிடைத்திருக்கும்?
கேள்வி-12. P. Chidambaram, Pranab Mukherjee and Digvijay Singh are at least three prime ministerial frontrunners should Manmohan Singh decide to go, unable to face the heat from the 2G and other scams and if Rahul Gandhi declines the hot job.
பதில்: விஜய், அஜீத் மற்றும் மாதவன் நடிக்கும் படத்துக்கு என்ன பெயர்?
கேள்வி-13. When India and Pakistan met in Thimpu to revive the composite dialogue between their foreign ministers this spring, Pakistan asked India to do more against Hindu extremists allegedly responsible for the Samjhauta Express blasts
பதில்: பாகிஸ்தன் முதலில் தன் நாட்டு நிலைமையை சரி செய்து கொள்ளட்டும்.
கேள்வி-14. UPA-2 in the run-up to the budget session of Parliament is plagued by two nightmares: corruption and inflation. And it is acutely aware of them. Prime minister Manmohan Singh, finance minister Pranab Mukherjee, and Planning Commission deputy chairman Montek Singh Ahluwalia expressed their concern over inflation on Friday.
பதில்: 12-ஆம் கேள்விக்கான ப்திலே இங்கும்.
hayyram
கேள்வி-15. இந்த டுபாங்க்ஸ் சாமியார் பற்றி உங்கள் கருத்தென்ன? (டுபாங்க்ஸ் என்னைப் பொறுத்தவரை)
http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_14.html
http://ujiladevi.blogspot.com/2011/02/blog-post_17.html
பதில்: சாதாரணமாகத்தானே எழுதுகிறார்? தமாஷாக பொழுது போகிறதே.
கேள்வி-16. இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறிக்கொண்டே மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொலைகள் பற்றி தங்களது கருத்து?
http://hayyram.blogspot.com/2011/02/blog-post_20.html
பதில்: இன்னுமா இந்த விஷயத்தில் ஊர் அவர்களை நம்புகிறது?
ரமணா
கேள்வி-18. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிய நாடாளுமன்ற கூட்டுக் குழு சாதிக்குமா?சமாளிக்குமா?
பதில்: சோனியாவுக்கே தெரிந்த ரகசியம் அது.
கேள்வி-19. இலங்கை தமிழர் நலம் பேசும் திருமாவளவன் காங்,திமுகவுடன் கூட்டணி வேடிக்கையா? வினோதமா?
பதில்: அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா.
கேள்வி-20. வட மாநிலங்களில் கொள்கைரீதியாய் எதிரும் புதிருமாய் இருக்கும் மருத்துவரும் திருவும் பதவி ஆசையில் மீண்டும் ஒரே கூட்டணியில் என்ன உதாரணம் சொல்ல ?
பதில்: ஆசை வெட்கமறியாது.
கேள்வி-21. ஒருவேளை காங் தனியாய் அணி அமைத்தால் விஜய காந்த் எந்தப் பக்கம் சாய்வார் ?
பதில்: தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு மாற்றுத் திறனாளிதான்.
கேள்வி-22. பாஜக, திமுக கூட்டணி சாத்யமானால் சோவின் நிலை?
பதில்: இப்போதைய நிலையில் நாட்டு நலனுக்கு பொருந்தாத கூட்டு என்றுதான் அவர் கூறுவார் என நினைக்கிறேன்.
அடுத்த வியாழனன்று மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சைவ சித்தாந்த அறிமுக வகுப்புகள்
-
சைவசித்தாந்த அறிமுக வகுப்புகளை நடத்த தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது
வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகளைப் பற்றி அறிந்துகொண்டோம். சைவசித்தாந்தம்
ஒரு ...
2 hours ago
10 comments:
டோண்டு சாரின் விமர்சனம்?
1.இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருஷ்ணா
2.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 30 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
3.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல்காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கைத்தறி மற்றும் மின்தறி நெசவாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்
4.மும்பை உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் ஃபர்கானா ஷா தெரிவித்தார்
5.உதகை நகரில் 2 தனியார் தங்கும் விடுதிகளில் நடைபெற்றுள்ள தொடர் கொள்ளைச் சம்பவங்களால் சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
//சாதாரணமாகத்தானே எழுதுகிறார்? தமாஷாக பொழுது போகிறதே.// விஷயம் அதுவல்ல, தனக்குத்தானே யோகி என்று போட்டுக்கொண்டு ஒரு மேடைப் பேச்சாளரைப் போல எழுதுகிறார். யோகியாக இருப்பவர்கள் பேசவேண்டிய விஷயங்களா என்று தோன்றியது. அதான விஷயம்.
http://hayyram.blogspot.com/2011/02/blog-post_9440.html
ரயில் எரிப்பு திட்டமிட்ட கொலை என்று தீர்ப்பு வந்த பிறகும் மோடியை குற்றம் சாட்டுவதிலேயே இருக்கிறது காங்கிரஸ். இறந்து போன 59 இந்துக்கள் பற்றி அவர்கள் வாழ்க்கை பற்றி பேசக்கூட நேரமில்லை. என்ன கொடுமை சரவணா!
நீங்கள் மார்ச் 1 முதல ஒரு கேள்விக்கு
ரூ.10 கட்டணம் வசூலிக்கபோவதாக ஒரு வதந்தி உலவுகிறதே உண்மையா?
அது உண்மை என்றால் தயவு செய்து இந்த விஷப்பரீட்சை வேண்டாம் அப்படி செய்தே ஆகவேண்டும் என்றால் 3 கேள்விக்கு ரூ10மட்டும்(அதிகபட்சமாக) வசூலிக்கவும்.(இதிலும் senior citizen களுக்கு concession kodukkavum)நன்றி
//
கேள்வி-9. பீகாரில் மாலை நேர கோர்ட்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு செய்தனர். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது . முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார்.
பதில்: வக்கில்களுக்கு இதில் ஆட்சேபணை இருபது வேடிக்கையாக உள்ளது.
//
வக்கீல்களாக இருந்துகொண்டு கோர்ட்டை புறக்கணிப்பது ஹிபாகிரசி இல்லையா...
அரசின் ஆணை பிடிக்கவில்லையென்றால் கோர்டில் கேஸ் போட்டு ஸ்டே வாங்கவேண்டியது தானே ?
வக்கீல்களே கோர்ட்டை புறக்கணித்தால் சாமானியன் என்ன செய்வான் என்று கூட யோசிக்கத் தெரியாத கூமுட்டைகளா நம் வக்கீல்கள் ?
(இது சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் கோட் மாட்டிக்கொண்டு திரியும் ரவுடிகளுக்கும் பொருந்தும்)
FOR DONDU'S COMMENT:-
1. Two top executives of Tata group --chairman of the group's realty and infrastructure arm R Krishna Kumar and its managing director and chief executive officer Sanjay G Ubale -- were today questioned by the CBI in connection with the second-generation mobile telephony spectrum allocation scam
2.Among the acquitted, 40 were named in the first charge sheet, and of these, 28 were apprehended from the scene of the crime near Godhra railway station. They all have been released.
3.Noting that Jammu and Kashmir had gone through a "difficult time" last year, Prime Minister Manmohan Singh today said the government was keeping its "fingers crossed" this summer while remaining vigilant as he asserted that no quarter should be given to secessionists.
4.Do you think issues like corruption, terrorism, and misuse of power by the authorities are pushing India towards becoming a banana republic? What do we need to do to prevent this?
5.After grilling key aide and Green House Promoters managing director Sadiq Batcha on Tuesday, CBI investigators claimed on Wednesday former telecom minister A Raja invested a chunk of the kickbacks he received in the sale of second generation mobile telephony spectrum in real estate
டோண்டு சாரின் கேள்வி-பதில் பகுதிக்காக
1) கலாநிதி மாறனுக்கு ஒரு வருட (http://www.suntv.in/suntvnetwork/suntvlimited/share/SUN%20TV%20ANNUAL%20REPORT%202010.pdf) சம்பளம் மற்றும் இதர சலுகைகளின் மதிப்பு ருபாய் முப்பத்தி ஏழு கோடியே எட்டு லக்ஷம்! அவரது மனைவி காவிரிக்கும் அதே சம்பளம்தான்!! இவர்கள் இருவரது சம்பளம் மட்டும் சன் குழும லாபத்தில் பதின்மூன்று சதம்! இவர்கள் இருவரது மொத்த சம்பளமும் சன் குழுமத்தின் வருட செலவில் பதின்மூன்று சதம் கூட. இது கொஞ்சம் ஓவராத் தெரியல்ல?
2)விஜயகாந்த் ஒரு வழியாக ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு சம்மதித்து விட்டது போல் தெரிகிறது. ஜெ - விஜய்காந்த் - வை.கோ - காம்ரேடு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு அமையும்? உங்கள் கணிப்பு என்ன?
3) சில ஊடகங்களும் சில வலைப் பதிவர்களும் "ஜெயலலிதா சமூகத்தைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையாளர் திரை மறைவில் விஜய காந்துடன் கூட்டணிக்கு வேலை செய்தார்" என்று கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். இதே சோதான் முன்பு தி.மு.க. விற்கும் த.மா.க.விற்கும் கூட்டணிக்கு வேலை செய்தார் என்பது மறந்து விட்டதே இவர்களுக்கு. திருமாவளவன் அவர்கள் தி.மு.கவிற்கும் பா.ம.க விற்கும் கூட்டணி அமையப் பாடு பட்டதை நான் " இசை வேளாளருக்கும் வன்னியருக்கும் கூட்டணி அமைய தலித் தவிக்கிறார்" என்று எழுதினால் (அப்படி ஒரு ஜாதி வர்ணம் பூசி எழுத எனக்கு மனம் இல்லை. ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்கின்றேன்). இதே பதிவர்கள்தான் "உன் ஜாதி என்ன? வர்ணம் என்ன?" என்று கூப்பாடு போடுவார்கள். இவர்கள் திருந்தவே மாட்டார்களா?
4)பார்வதி அம்மாள் மறைவுக்கு கலைஞர் "இரங்கல் கவிதை" ஒன்றும் எழுதியது போலத் தோன்றவில்லையே? மருத்துவர் கூட ஒன்றும் கவலைப் பட்ட மாதிரி தெரிய வில்லையே? ஏன்?
சூர்யா
சிங்கூரில் ரெயில் பெட்டித் தொழிற்சாலை வருகிறதாமே? விவசாயம் இப்போது மட்டும் பாதிக்கப்படாதோ?
அருண் அம்பி,
வங்காளிகள் என்னிக்கு கம்யூனிஸ்டுகளுக்கு வோட்டு போட்டார்களோ அன்னிக்கே அவிங்க தலையெழுத்து உறுதியாயிடுச்சு...உருப்படமாப் போறது தான் அந்த தலைவிதி.
இப்ப அங்கே நடக்குறது நல்ல சக்திக்கும் தீய சக்திக்குமான போராட்டமல்ல..இரண்டு கெட்ட சக்திகளுக்கு இடையில் நடக்கும் அதிகாரப்போர். மாவோமாதா பானர்ஜீயும் கம்யூனிஸ்டுகளும் அடித்துக்கொண்டு இருவரும் செத்துமடிந்தால் ஒழிய அந்த மாநிலத்துக்கு விடிவு இல்லை.
1)கூட்டணி பேரத்தில் கருணா வின் சாணக்கியம் வெல்லுமா?ராகுலின் முயற்சி வெல்லுமா?
2)திமுகவை காங் பாடாய் படுத்துவதாய் வரும் செய்திகள் உண்மையா?
3)திருமாவும் அதிமுக பக்கம் போனால் பாமகவுக்கு இந்ததடவை `கோவிந்தோ கோவிந்தோ` நிலையா?
4)திமுக முரண்டு பிடித்து பணியாவிட்டால் ஆட்சிக் கலைப்பு ஆளுனர் ஆட்சி,கைதுகள் படலம், என ஜூவியின் செய்திப்படி நடந்தால் யார் அதிகம் சந்தோஷப்படுவார்கள்?காரணம்?
அ)சோ
ஆ)சு.சாமி
இ)ஜெயலலிதா
ஈ)ராகுல்
உ)எம்ஜிஆரின் ஆத்மா
ஆகியவர்கள் என்ன நினைப்பார்கள்?
5)பெரும் சொத்துக்குவிப்பு விவகார கோர்ட் நடவடிக்கைகள் தமிழகத்தில் தொடர் கதையா?
Post a Comment