ஐந்து நாட்களுக்கு முன்னல் விடியற்காலை 5 மணியளவில் மொழிபெயர்ப்பு வேலைக்காக கணினியைத் திறந்து, இணைய இணைப்பை பெற்று, கூகள் டாக்கை திறந்து ஆன் செய்தால் நம்ம ஜெயமோகன் அந்த நேரத்திலும் ஆன்லைனில் இருக்கிறார். சாதாரணமாக நான் யாருடனும் சேட் அதிகம் செய்வதில்லை. இருப்பினும் ஏதோ ஒன்று என்னை உந்த, அவரை சேட்டில் அழைத்தேன். அவரும் வந்தார். அவருடனான சேட் இங்கே நான் இப்போது வெளியிடுவது ஒரு காரணமாகத்தான். அதாவது வாழ்வின் பல நிகழ்வுகள் இம்மாதிரித்தான் எதேச்சையாகவே நடக்கின்றன, அதை காட்டத்தான் எண்ணுகிறேன். இந்த சேட் வெளியீட்டை ஜெயமோகன் ஆட்சேபிக்க மாட்டார் எனஎண்ணுகிறேன்.
from jeyamohan_ B
to raghavan
date Mon, Jan 31, 2011 at 5:39 AM
subject Chat with jeyamohan_ B
5:06 AM me: வணக்கம் ஜெயமோகன் அவர்களே
jeyamohan_: வணக்கம்
me: இவ்வளவு சீக்கிரமே எழுந்து விட்டீர்களே
jeyamohan_: ஆம், இப்போது இரவு 10 மணிக்கு தூங்கி காலை 4 மணிக்கு எழுவது வழக்கம்
me: தினசரி வழக்கமா?
jeyamohan_: ஆம்
me: நல்ல பழக்கம்
5:08 AM பிப்ரவரிவாக்கில் சென்னை வருவது போல படித்தேனே?
வருகிறீர்களா?
வலைப்பதிவர் சந்திப்பு?
5:10 AM jeyamohan_: ஆம். இன்னமும் முடிவாகவில்லை’
me: முடிந்தால் அப்போது உங்களை சந்திக்க ஆவல்
5:11 AM jeyamohan_: பார்ப்போம்
me: இப்போது வரும் துப்பறியும் கதை பிரமாதம்
சாம்புவையும் விடவில்லையே
சி.ஐ.டி சந்துரு வருவாரா?
5:12 AM jeyamohan_: அது 2002ல் எழுதியது
திண்ணையில் வந்தது
5:13 AM me: தெரியும், படித்தேன். வெளியிடப்படாத நாவல் என்று
5:14 AM திகம்பர சாமியாரிடம் கேள்வி கேட்போர் படும்பாடு என்னிடம் பலர் தெரியாத்தனமாக இஸ்ரேல் பற்றி கேட்டு மாட்டிக் கொள்வதை நினைவுபடுத்தியது
5:15 AM ஓக்கே சார், பிறகு பார்ப்போம். இப்போது சேட் செய்ததில் மிக்க மகிழ்ச்சி
5:16 AM jeyamohan_: நான் இஸ்ரேல் பற்றி கேட்கக்கூடாது இல்லையா? நன்றி
பார்ப்போம்
me: keeLunggaLeen, santhooshamaaka peesalaam
கேளுங்களேன்
5:17 AM jeyamohan_: ))
me: சந்தோஷமாக பேசுவேன்
jeyamohan_: சந்தோஷமா கேட்கத்தான் முடியாது இல்லையா? )))
me: அதைத்தான் கூறினேன்
5:18 AM jeyamohan_: பார்ப்போம்..நேரில் சந்திக்கும்போது எப்படி என்று
me: எனது இஸ்ரேல் பற்றிய பதிவுகள்
5:19 AM jeyamohan_: சந்தித்தபோது அதிகம் பேசமுடியவில்லை.
me: ஆம்
கேணியில் பிசியாக இருந்தீர்கள்
jeyamohan_: http://www.jeyamohan.in/?p=11976
me: ஷாஜி பாராட்டு விழாவில் incognito ஆக வந்தீர்கள்
5:20 AM jeyamohan_: இந்தக்கதையை வாசியுங்கள். உங்கள் காலகட்ட விஷயம். பணத்தின் தொகைகள் மிக குறைவாக இருக்கிறதே என்று ஒரு சந்தேகம். ஆனால் அப்போது அப்படித்தான் என்றார் தஞ்சை பிரகாஷ்..
me: சுட்டியை ஆன் செய்து விட்டேன், படிக்கிறேன்
11 minutes
5:32 AM me: படித்தேன், பிரமிப்பில் ஆழ்ந்தேன்
உங்களிடம் தமிழ் விளையாடுகிறது.
வாழ்த்துக்கள்
நிஜமாக நடந்ததா?
5:33 AM jeyamohan_: ஆள் யாரென தெரிந்திருக்கும்...
http://en.wikipedia.org/wiki/M._V._Venkatram
http://preview.palaniappabrothers.com/en/products/authors/97
5:34 AM me: தி.ஜானகிராமனுடைய கதை ஒன்று நினைவுக்கு வந்தது. பிள்ளை கல்யாணத்துக்கு உண்ண வந்தவனை விரட்டியடிக்க, அவன் சாபமிட்டு, பிறகு அதே பிள்ளையின் சவண்டிக்கு சாப்பிட வருகிறான்
jeyamohan_: பரதேசி வந்தான்
me: இன்னொரு சுட்டிக்கும் நன்றி
ஆம்
டைட்டில் சட்டென்று நினைவுக்கு வரவில்லை
jeyamohan_: நான் தமிழின் மிகச்சிறந்த 8 கதைகளில் ஒன்றாக அதை என் முன்னோடிகள் வரிசை விமர்சன நூலில் சொல்கிறேன்
5:35 AM me: எம்.வெங்கட்ராமனும் எனக்கு பிடிக்கும்
சௌராஷ்ட்ரா வகுப்பை சார்ந்தவர் அல்லவா?
அவரது காது என்னும் நாவலை படித்துள்ளேன்
5:36 AM jeyamohan_: காதுகள்
ஆம்
me: காதுகள்தான்
5:37 AM பை தி வே நேரம் கிடைத்தால் எனது ஜெயா டிவி நேர்காணல் வீடியோவை காணுங்கள்
http://dondu.blogspot.com/2010/07/uploading-jaya-tv-interview-dated.html
5:38 AM jeyamohan_: ஆம்
நன்றி
me: ஓக்கே, உங்களது பொன்னான நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டேன்
பிறகு பார்க்கிறேன்
jeyamohan_: பொன்னெல்லாம் இல்லை...
me: வணக்கம்
5:39 AM jeyamohan_: பார்ப்போம்
இந்த சேட்டில் என்னை அதிகம் கவர்ந்தது ஜெயமோகனின் எளிமையான அணுகுமுறை. அவர் அக்கதை பற்றி கூறியிருக்காவிட்டாலும், அதை நான் எப்படியும் படித்திருப்பேன், ஏனெனில் அவரது தளம் எனது பிளாக் ரோலில் உள்ளது. இருப்பினும் அவரே அதை எனக்கு படிக்குமாறு கூறிய விதம் எனக்கு பிடித்திருந்தது.
நான் ஏற்கனவேயே கூறியது போல, அக்கதை என்னை பிரமிக்கச் செய்தது. எம்.வி. வெங்கட்ராமனின் சோகம் என்னை செவுளிலேயே அறைந்தது. சம்பந்தப்பட்ட ஆச்சியின் தர்ம ஆவேசம், செட்டியின் பதைபதைப்பு ஆகியவை அப்படியே உணரும்படியாக இருந்தன.
தமிழ் ஜெயமோகனிடம் விளையாடுகிறது, பிரெஞ்சு எழுத்தாளர் Francois Kavannah-விடம் பிரெஞ்சு விளையாடுவது போல. ஜெயமோகன் போன்ற மகோன்னத எழுத்தாளர்களின் சமகாலத்தவனாக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தி.ஜானகிராமனின் “பரதேசி வந்தான்” என்னும் கதையும் அவ்வாறே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
10 hours ago
15 comments:
hmm! http://pudhukavithaigal.blogspot.com/
தமிழ்சமூகம் இப்படி தான் ஒரு எழுத்தாளனை கேவலமாக நடத்துகிறது.
அவரே காலையில் பொழுது போகாமல் மொக்கை போட்டுகிட்டு இருக்கார், அவர்கிட்ட போய் எப்படி தான் உங்கள் பொன்னான நேரத்தை எடுத்து கொண்டேன்னு சொல்ல முடியுதோ!
இதுவே கூபாவா இருந்தால் இன்னேரம் சொன்னவனின் புட்டத்தில் சவுக்கடி கொடுத்திருப்பார்கள், அங்கே எழுத்தாளனுக்கு தனிமரியாதை, அரசாக்கமே ஜட்டி வாங்கி தருகிறது, இங்கே ஒரு ஷூ லேஸுக்கு வழியுண்டா!?
எனது சாட் அனுபவத்திலேயே இதை தான் பயங்கர கேவலமான சாட்டாக நினைக்கிறேன், கவனியுங்கள், ஜெயமோகன் அவர்களே என என்னை அந்நியப்படுத்துகிறார், அப்படியானால் தமிழ்சமூகம் எழுத்தாளானை மாற்றானாக தானே எண்ணுகிறது, இதுவே ஜப்பானாக இருந்திருந்தால்,.. என்ன மச்சி ஜோராகீறயான்னு விசாரித்திருப்பார்கள்
தொடரும்!.....
காலை நான்கு மணிக்கு எழுவேன் என்றால் தினசரி வழக்கமா என்கிறார், இனிமே தினம் வந்து அட்டனென்ஸ் போட சொல்லுவார் போல, எழுத்தாளன் என்றால் என்ன இவர் வீட்டு கொண்டைச்சேவலா, எழுந்ததும் கூவி எந்திரிச்சிட்டேன்னு சொல்ல.
சந்து சாக்கில் தனக்கு இஸ்ரேல் தெரியும் என்று கதையும் விடுகிறார், நான் பாரிஸ் நகரவீதிகளில் சுற்றிதிருந்த கதை தெரியுமா அவருக்கு, அதை முழுசா கேட்டா ஐசியூவில் அட்மிட் ஆவது உறுதி என்பதை இங்கே பெருமையாக சொல்லிகொள்கிறேன்.
நேற்றைய தினம் வாரமுரசு என்ற தினபத்திரிக்கையில் என்னுடய கமலாபுரம் என்ற நாவல் செவ்வாய்கிரகத்திலேயே சிறந்ததாக தேர்தெடுக்கபட்டதாக வந்திருந்தது, சோகம் பாருங்கள், அன்று பார்த்து ஒரு பேப்பர் கூட விற்கவில்லையாம்!
தொடரும்....
ஒரு எழுத்தாளனின் புத்தகம் 600 கோடியாவது விற்க வேண்டாமா?, படிக்க தெரியுதோ இல்லையோ சும்மாவாவது வாங்கி வைக்க வேண்டாமா, என்புத்தக பேப்பரில் நீ பஜ்ஜி எண்ணையை கூட வடிச்சிக்கோ அதையா நான் கேட்டேன், நீ புத்தகம் வாங்கியே ஆக வேண்டும், இல்லையென்றால் என்னிடம் பேச முயற்சிக்க வேண்டாம்!
உங்களுக்கு வேண்டுமானால் எருமைதோல் இருக்கலாம், எனக்கு காண்டாமிருகதோல் என்பது உங்களுக்கு தெரியாது, பிச்சிபுடுவேன் பிச்சி சொல்லிபுட்டேன் ஆமா!.....
Dear Dondu,
அறம் என்ற கதையை படித்து திடுக்கிட்டேன்.ஜெயமோகன் செய்துள்ளது வடிகட்டிய அயோக்கியத்தனம்.Most Unethical act.
ஒரு மாபெரும் எழுத்தாளருக்கு நேர்ந்த அவமானத்தை இப்படி வெட்ட வெளிச்சமாக்குவது(அதுவும் அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப்பிறகு)
ஒரு கொடூர செயல்.ஜெயமோகன் ஒரு சாடிஸ்ட் என்பது நிரூபணம் ஆகியுள்ளது!
வெட்கப்படுகிறேன்!
"தெரிந்தே கெடுப்பது பகையாகும்!
தெரியாமல் கெடுப்பது உறவாகும்"
என்ற வரிகளுக்கும்,
"கடவுளே! என்னை என் நண்பர்களிடமிருந்து காப்பாற்று!
எதிரிகளை நானே சமாளித்துக்கொள்கிறேன்"
என்ற வரிகளுக்கும்,
அர்த்தம் இப்பொழுதான் விளங்கியது
ங்கொய்யால, அறம் நிஜமாலுமே அறுவை மேட்டரா, இது தெரியாம நான் வேறு அறுத்துட்டானே!
டோண்டு சாரின் விமர்சனம்?
1.மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியின் மூலம், மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தான் விரும்பும் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி, சில சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2.போன் செய்தால் வீட்டுக்கோ வந்து மொபைல் போன் கருவிகளை வழங்கும் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்ஸார் குழுமத்தின் மொபைல் ஸ்டோர்
3.செல்போன் மற்றும் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று மத்திய அரசின் ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது. செல்போன் மற்றும் உயர்கோபுரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றி ஆராய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. அதில் 8 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். சுகாதார அமைச்சகம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு துறை உறுப்பினர் செயலர் ஆகியோர் உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சக பிரதிநிதிகள் இடம்பெற்ற அந்த குழு, தனது ஆய்வு அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது
4.தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய் காவலனின் வரவேற்பால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார். காவலன் வெற்றியும், ஷங்கர் 3 இடியட்ஸில் அவருக்கான சீட்டை கன்பார்ம் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.
5.பருத்திவீரன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகர் சரவணன். அவரும், அவரது மனைவி சூர்யஸ்ரீயும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து, தங்களை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.
அது வெங்கட்ராமன் இல்லை, வெங்கட்ராம்
செறிவான சிறுகதை.
அறச்சீற்றம் எழுத்தாளருக்கு மட்டும் உரியது இல்லை. எந்தத் தொழில் புரிவோருக்கும் இது உண்டு. நான் இது போல நிறையப் பார்த்திருக்கிறேன். எங்கள் ஊர்ப்பக்கம் சிறு தொழில் நிறுவனங்களை நடத்துவோர் (பித்தளை பட்டறை, ஸ்டெயின்லெஸ் பட்டறை வைத்து நடத்துவோர்) அவர்களுடைய தொழிலாளர்களுக்குச் சம்பளத் தேதியன்று வேண்டுமென்றே காலத்தை நீட்டித்து சம்பளம் கொடுப்பார்கள். தீபாவளித் திருநாளின் போது இன்னும் கொடுமையாக இருக்கும். இந்தக் கதையில் வருவது போலவே அந்த நிறுவனத்தை நடத்துபவரின் மனைவி கணவரின் மேல் எரிந்து விழுந்து தொழிலாளர்களுக்குப் பணம் பட்டுவாடா விரைவில் நடக்க ஏற்பாடு செய்வார்.
மொத்தமாக நமக்குக் கீழே வேலை செய்பவர்களுக்குப் பணம் தர மனம் வராததன் காரணம் என்ன? இது நம் மனத்தின் சிறுமையின் அளவையே காட்டுகிறது:-(
ஜெமோ இதைத்தாண்டி சிறப்பான பல சிறுகதைகளை எழுதியிருக்கலாம்.
ஆனால் இது அச்சு அசலான அனுபவம். அந்த வகையில் என்னளவில் இந்தக் கதை ஒரு விசேஷ அந்தஸ்தைப் பெறுகிறது.
தவிரவும், இந்தக் கதையை எந்தவொரு தொழிலாளியின், அலுவலரின் வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்க முடியும் (universal application). அந்த வகையிலும் இது ஒரு செறிவான கதை.
Paul Gauguin பற்றி எழுதியிருக்கிறேன். தமிழ் transliteration கொடுத்ததற்கு நன்றி.http://ramamoorthygopi.blogspot.com/2011/02/blog-post_04.html
அறம் சிறுகதை பற்றி சுசீலா மேடமும் ஒரு பதிவு போட்டிருக்கிறார். நீங்கள் படித்திருக்கலாம். http://www.masusila.com/2011/02/blog-post.html
அறம் கதை ஓகே ராகம், ஜெயமோகனின் படைப்புக்களில் அதற்குதான் முதலிடம் என்பதெல்லாம் தவறு.
ஜெயமோகனின் எளிமையான அணுகுமுறை, தமிழ் ஆளுமை, தமிழ் புலமை இவற்றில் உங்கள் கருத்தோடு முழு மனதாய் ஒத்துப் போகிறேன்
கண்பத்,
எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை.
ஜெ.மோ எப்படி எம்.வி.வெங்கட்ராமனை கேவலப்படுத்தினார் என்று கொஞ்சம் விளக்குங்கள்.
அன்புள்ள டோண்டுவிற்கு,
sub:என் முந்தைய பதிவு
சற்று நிதானமாக யோசித்ததில், அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு, தடித்த வார்த்தைகளை பிரயோகித்துவிட்டேனோ என அஞ்சுகிறேன்.நான் மிகவும் மதிக்கும் ஒரு முதிய எழுத்தாளர் பட்ட சிரமங்களை வர்ணித்தவிதம் என்னை மிகவும் பாதித்து, நிலை தடுமாற செய்து விட்டது.
மன்னிக்கவும்.
அந்தகாலத்தில் MGR படம் பார்க்கும்போது பெண்கள் நம்பியாரின் வில்லத்தனத்தை பார்க்கப்பொறுக்காமல் அவரைத் திட்டி சபிப்பார்களாம்.இதைக் குறிப்பிட்ட நம்பியார் "இதை நான் விருதாக எடுத்துக்கொள்வேன்" என நகைச்சுவையுடன் சொல்வார்..
என் கோபமும் ஒரு வகையில் அம்மாதிரியானதே...
அந்தபதிவை வைத்திருப்பதும் எடுப்பதும் உங்கள் இஷ்டம்.
நன்றி வணக்கம்
வஜ்ரா,
ஏற்கவே என் நிலையை நான் தெளிவு படுத்தி விட்டாலும் உங்களுக்காக இந்த பதில்.
எம்.வி.வெங்கட்ராம் ஒரு சிறந்த எழுத்தாளர்.எதோ விதிவசமாக அவர் ஏழ்மையில் துன்பப்பட நேர்ந்தது.ஜெயமோகன் அவரை சந்தித்தபோது ஒரு சக எழுத்தாளர் என்ற வகையில் அவர் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்திருக்கிறார்.அதை அவர் மறைந்து பத்தாண்டுகளுக்கு பிறகு
வருணித்து வெளியிடுவது தவறு என நினைத்து சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.
நன்றி மறப்பது நன்றன்று,நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்ற அடிப்படையில் இது தவறுதான்.அனால் யோசித்து பார்த்ததில் நான் பிரயோகித்த சில வார்த்தைகளும் தவறுதான் என தோன்றியது.எனவே இன்னொரு பின்னூட்டமும் இட்டேன்.
ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டால்,ஜெயமோகன் தான் குறிப்பது யாரை என்று யாருக்கும் புரியாவண்ணம் ஒரு புனைவு போல செய்திருக்கலாம் என்பதும் என் எண்ணம்.
ஜெயக்ந்தன் பல ஆண்டுகளுக்கு முன் விகடனில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார்.அதில் ஒரு புகழ் பெற்ற நடிகன் எப்படி பிற்காலத்தில் கவனிப்பார் இன்றி சிரமப்பட்டன என்று விவரித்திருப்பார்.ஒரு ரிக்ஷாக்காரன் அவரை பேணி பாதுகாப்பான்.அதே போல
அனுராதா ரமணனும் விகடனில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுகதை எழுதியுள்ளார்.இரண்டிலும் சம்பந்தபட்டவர்கள் யார் என்று தெரிந்து கொள்வது கடினம்
நன்றி
எழுத்தாளர் யாரெனெ சொல்லமாட்டார் என்றுதான் நினைத்தேன்...சொல்லிவிட்டார்...
சரி சொன்னால்தான் என்ன? தெரியட்டுமே இந்த தலைமுறைக்கு, எழுதுபவர்கள் எல்லாம் எப்படி நடத்தப்பட்டார்களென...
அந்த தஞ்சை மண்ணைப்பற்றி சொன்னாலே அது தனிதான்...அதுவும் நாஞ்சில் காரர் சொன்னால்!
'இஞ்ச' மாதிரி கதை படித்து, திகைத்து, மனம் நிறைந்து நாளாயிற்று...
அடுத்தது 'சோற்றுக்கணக்கு' படித்திருப்பீர்கள்...ஜெயமோகன் நல்ல formல் இருக்கிறார்...back to back centuries!
நமக்குத்தான் கொண்டாட்டம்!
Essex சிவா
@Ganpat
ஜெ.மோ எங்கு பேரை கதையில் சொன்னார்? டோண்டுவின் பதிவு இல்லாவிடில், எம்.வி.வெங்கட்ராம் பற்றியது இது, அல்லது எம்.வி.வெங்கட்ராம் என்றொரு எழுத்தாளர் இருந்ததே என்னை போன்று பலருக்கு தெரிந்திருக்காது என்பதே நிதர்சனம்.
@nataraj
திரு எம்.வி வி ஒரு புகழ் பெற்ற சாஹித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர்.
அவர் வாசகர்களுக்கு,ஜெமோ குறிப்பிடுவது அவரையே எனபுரிந்துகொள்ள சிரமம் ஏதும் இருக்காது.
Post a Comment