3/03/2011

டோண்டு பதில்கள் 03.03.2011

hayyram
கேள்வி-1. இட்லிவடையில் எஸ் வி சேகர் பேட்டியைப் பார்த்தீர்களா? தமிழ் சினிமாவில் பிராமணர்கள் மோசமாக சித்தரிக்கப்படுவது பற்றிய கேள்வியை இட்லிவடைக்கு அனுப்பி இருந்தேன். அது கேட்கப்பட்டது. கேள்வி முழுமை பெறுவதற்குள் நீண்ட பதிலை அளித்து விட்டார். அந்த பதில் பற்றி தங்களது கருத்தை அறிய ஆவல்!
(குறிப்பு: கேள்வி கேட்டவர்கள் பற்றிய விபரம் பற்றி எதுவும் கூறப்படாவிட்டாலும் என்னைத் தவிர வலைதளத்தில் இது பற்றி யாரும் கேட்பதில்லையோ என்கிற யூகத்தாலும் அந்தக் கேள்வி நான் அனுப்பியதாகத் தான் இருக்கும் என யூகித்துக்கொண்டேன்!)

பதில்: இக்கேள்வி இப்பதிவின் வரைவைப் பொருத்தவரை மிகவும் பிந்தி வந்தாலும், இதையே முதல் கேள்வி ஆக்குகிறேன்.

உங்களுக்கு பதில் சொல்லவே நான் இப்பேட்டியைக் கேட்டேன். சேகர் சொல்வதை இவ்வாறு சுருக்கலாம். அ) இதை பற்றி ரொம்பவும் பெரிதுபடுத்தினால் காரியத்துக்காகாது. அதை அப்படியே இக்னோர் செய்ய வேண்டும். ஆ) அவ்வாறு பிராமணர்களை கிண்டல் செய்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, அதை மறைக்கவே அவ்வாறு செய்கிறார்கள். இ) அப்படி ரொம்பவும் பொறுக்க முடியாமல் போனால் பேசாமல் கோர்ட்டில் போய் ஸ்டே ஆர்டர் வாங்கி எதிர்ப்பைக் காட்டுவது நலம்.

என்னுடைய கோபமெல்லாம் பாலசந்தர் போல சொந்த ஜாதியினரையே மட்டம் தட்டும் இந்த அருவருக்கச் செய்யும் போக்கு மீதுதான். மற்ற சாதியினரை விடுங்கள், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மைதான், ஆட்சியிலே இருந்தாலுமே. எனது வழியை பதிவுலகில் இத்தனை நேரத்துக்கு அறிந்திருப்பார்கள். சீறுவேன், சம்பந்தப்பட்டவரின் சாதி தெரிந்தால் அதைப் பற்றிய உண்மைகளை வெளியாக்கி, கிண்டல் செய்து அவரை வெறுப்பேற்றுவேன். நான் ஒன்றும் சமாதானவாதியெல்லாம் இல்லை. என்னை ஒரு கன்னத்தில் அடித்தால் அடித்தவனின் இரு கன்னத்திலும் மாறி மாறி பத்து அறைகள் கொடுப்பேன்.

pt
இந்த மின் அஞ்சலுக்கு டோண்டுவின் விமர்சனம்?
கருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்
என்னை வச்சு காமெடி பண்ணாதிங்கைய்யா என் எவளவு கெஞ்சினாலும்
கனி அழகிரி ராசா அவரை விடுவதாக இல்லை .இந்நிலையில் வரும் தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள்.
1. ஈழ தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி சென்று கொத்து கொத்தாக ராஜபக்ச கொன்ற போது ஒருமணி நேரம் கலைஞர் உண்ணாதவிரதம் இருந்தது. அதை நேரடி ஒளிபரப்பும் செய்து கொண்டது. கலைஞருக்கு வேர்க்கும் என ராஜாத்தி அம்மாள் அவரது முடி இல்லாத தலையை துடைத்து விட்டது.

பதில்: தூள் படம் என நினைக்கிறேன், நடிகர் ஷிண்டே காவேரிக்காக உண்ணாவிரதம் இருப்பார், கடைசியில் எல்லோருக்குமே மாசுபட்ட வாட்டரில் ஜூஸ் தருவார் விக்ரம். சத்தியமாகச் சொல்கிறேன், கலைஞரின் இக்கூத்து எனக்கு அப்படத்தைத்தான் நினைவூட்டியது.

2. அதே பிரச்சனைக்கு தினசரி கடிதம் எழுதி ஒரு ஸ்டாம்ப் ஒட்டி பிரதமருக்கு அனுப்பியது. அதை அந்த ஆபீஸ் பியோனாவது படித்தானா என்பது பற்றி கவலையே படாதது.
பதில்: கலைஞரின் கடமை கடிதம் எழுதுவதே, பலன் பற்றியெல்லாம் கவலை இல்லை. பகவத் கீதையை ரொம்பத்தான் பின்பற்றுகிறார் அவர்.

3. இலவசம் இலவசம் என்று இலவசவீடுகள், ஒரு ரூபாய் மண்,கற்கள் கலந்த அரிசி கலர் டிவி என் கொடுத்து ஓட்டு வாங்கிட துடிக்கும் கேவலமான தந்திரம்.
பதில்: அக்கேவலமான பொருட்களை வாங்கும் மக்களின் கேவலம் இதற்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல.

4. ராசா இமாலய ஊழல் செய்த போதும் அதை ஒப்பு கொள்ளாமல் அவர் சிறையில் களி தின்ன பிறகுதான் கட்சியை விட்டு நீக்குவேன் என்று அடம்பிடிப்பது.
பதில்: கலைஞர் மாதிரி நண்பர்கள் இருக்கும்வரை ராசாவுக்கு விரோதிகளே தேவை இல்லை. நண்பேண்டா.

5. ராசா விவகாரத்தால் வாசிங்டன் போஸ்ட் வரை இந்தியாவில் இப்படி ஒரு பணப்பேய் இருக்கிறது என்று இந்தியாவின் மானத்தை வாங்க வைத்தது.
பதில்: அதையும் மிஞ்சியதே இஸ்ரோ ஊழல். வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்.

6. இந்திய மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுகின்ற வேளைகளில் மீனவ குடும்பங்களுக்கு உதவி செய்யாமல் ஒரு கவிதை எழுதி கலைஞர் டிவியில் ஒளிபரப்பி மொக்கை போடுவது.
பதில்: வெட்கக்கேடு

7. தொடர்ந்து கதை வசனம் எழுதி தமிழ்மக்களை வாந்தி எடுக்க வைப்பது.அதை விட கொடுமை அவர் வசனம் எழுதிய படங்கள் ஓடுவதுக்கு முறுக்கு, லட்டு எண்டு மக்களுக்கு கொடுத்து பேதி என்று வீட்டுக்கு ஓடவைக்கிறது .
பதில்: தலையில் துண்டு போடும் தயாரிப்பாளருக்கு ஏதாவது பெர்மிட் தந்து விடுகிறாரே, நியாயஸ்தர் அவர்.

8. ஓட்டுக்கு லஞ்சம் படிப்புக்கு லஞ்சம் வீட்டுக்கு லஞ்சம் என்று வறிய மக்களின் வாழ்க்கையில் மண்ணை வாரிப்போடுவது .
பதில்: வெல்லப் பிள்ளையாரை கிள்ளி அவருக்கே நைவேத்தியம் வைப்பது போல மக்களது பணத்தைக் கொள்ளையடித்து, அதிலிருந்தே துக்குனூண்டு கிள்ளி இலவசமாக தருவதை மக்கள் நம்பும் வரை இக்கூத்து தொடரும்.

9. ஓட்டுக்காக குஸ்பு போன்ற நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கஸ்தூரிபாய்களை கட்சியில் சேர்த்து மக்களை வெறுப்படைய வைப்பது .குஸ்பு யார் என்று நம்ம கார்த்திக்கை கேட்டால் சொல்லுவார் .
பதில்: இதில் ஏன் குஷ்பூவை இழுக்கிறீர்கள்?

10. தமிழ் சினிமா விழா என்றால் ஓடி போய் முன்வரிசையில் இருந்து தன்னை மற்றவர்கள் பாராட்டுமாறு விட்டு விட்டு அந்த பாராட்டு மழையில் தூங்குவது.
பதில்: தேர்தலிலாவது மக்கள் பள்ளியெழுச்சி பாடினால் நன்றாக இருக்கும்.

11. இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருஷ்ணா
பதில்: கிருஷ்ணாவை படகில் ஏற்றி அனுப்புவோமா?

12. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிப்பதற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 30 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள் என்று தில்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பதில்: அதில் எவ்வளவு பேர் அல்லக்கைகள்?

13. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல்காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்து கைத்தறி மற்றும் மின்தறி நெசவாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்
பதில்: அவ்வாறே கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறதே. இந்த அழகில், கடனை ஒழுங்காகத் திருப்புபவர்களுக்கு வட்டியில் தள்ளுபடியாம். ஆனால் கட்டாமலேயே டபாய்ப்பவர்களுக்கு அசலே தள்ளுபடியாம்.

14. மும்பை உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாப் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் ஃபர்கானா ஷா தெரிவித்தார்
பதில்: ஐஷ்மனை இஸ்ரவேலர்கள் 1960-ல் பிடித்தனர். எல்லா வழக்குகளையும் முறைப்படியே நடத்தினர். 1962, மே 31-அன்று தூக்கில் போட்டனர். நம்மவர்கள் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் உள்ளன.

15. உதகை நகரில் 2 தனியார் தங்கும் விடுதிகளில் நடைபெற்றுள்ள தொடர் கொள்ளைச் சம்பவங்களால் சுற்றுலாப்பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பதில்: டூரிசமையே நம்பி வாழும் ஊருக்கு இது தேவையற்ற சங்கடமே.

ezhil arasu
FOR DONDU'S COMMENT:-
கேள்வி-16. Two top executives of Tata group --chairman of the group's realty and infrastructure arm R Krishna Kumar and its managing director and chief executive officer Sanjay G Ubale -- were today questioned by the CBI in connection with the second-generation mobile telephony spectrum allocation scam
பதில்: பண்டோராவின் பெட்டி திறக்கப்ப்பட்டு விட்டது. எந்தப் புத்துல என்ன பாம்பு இருக்குமோ, யாருக்குத் தெரியும்?

கேள்வி-17. Among the acquitted, 40 were named in the first charge sheet, and of these, 28 were apprehended from the scene of the crime near Godhra railway station. They all have been released.
பதில்: குற்றம் நிருப்பிக்கப்பட்டவர்களில் 11 பேருக்கு தூக்கு, மீதிப் பேருக்கு ஆயுள் தண்டனை.

கேள்வி-18. Noting that Jammu and Kashmir had gone through a "difficult time" last year, Prime Minister Manmohan Singh today said the government was keeping its "fingers crossed" this summer while remaining vigilant as he asserted that no quarter should be given to secessionists.
பதில்: இந்த நேரு குளறுபடியை ஆரம்பித்து வைத்து விட்டு போய் சேர்ந்து விட்டார். நாம்தான் இன்னும் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி-19. Do you think issues like corruption, terrorism, and misuse of power by the authorities are pushing India towards becoming a banana republic? What do we need to do to prevent this?
பதில்: இத்தாலியில் ஆட்சி கவிழ்ந்து கொண்டே இருக்கும். இருப்பினும் அங்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவது அதனால் எல்லாம் தடைப்படவில்லை. ஆனால் இங்கோ லஞ்சம் வாங்குபவர்கள் ஆட்சியில் நிலைத்து நிற்கின்றனர். நாட்டுக்குத்தான் நஷ்டம்.

கேள்வி-20. After grilling key aide and Green House Promoters managing director Sadiq Batcha on Tuesday, CBI investigators claimed on Wednesday former telecom minister A Raja invested a chunk of the kickbacks he received in the sale of second generation mobile telephony spectrum in real estate
பதில்: எல்லாம் முடிந்து, கேஸ் நடந்து ராசாவுக்கு தண்டனை தராத வரைக்கும் நாம்தான் இவ்வாறு ஸ்பெகுலேட் செய்து கொண்டிருப்போம்.

Surya
டோண்டு சாரின் கேள்வி-பதில் பகுதிக்காக
கேள்வி-21. கலாநிதி மாறனுக்கு ஒரு வருட சம்பளம் மற்றும் இதர சலுகைகளின் மதிப்பு ருபாய் முப்பத்தி ஏழு கோடியே எட்டு லக்ஷம்! அவரது மனைவி காவிரிக்கும் அதே சம்பளம்தான்!! இவர்கள் இருவரது சம்பளம் மட்டும் சன் குழும லாபத்தில் பதின்மூன்று சதம்! இவர்கள் இருவரது மொத்த சம்பளமும் சன் குழுமத்தின் வருட செலவில் பதின்மூன்று சதம் கூட. இது கொஞ்சம் ஓவராத் தெரியல்ல?
பதில்: மொத்த நிறுவனமே அவர்களுடையதுதான். இம்மாதிரி சம்பளமாக பெற்றுக் கொண்டால் வரிவிதிப்பு பரவலாகி, ஒவ்வொரு வகையிலும் வரிக்கு உட்படாத இன்கம் கூட்டினாலே கணிசமாக துட்டு சேருமே.

கேள்வி-22. விஜயகாந்த் ஒரு வழியாக ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு சம்மதித்து விட்டது போல் தெரிகிறது. ஜெ - விஜய்காந்த் - வை.கோ - காம்ரேடு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு அமையும்? உங்கள் கணிப்பு என்ன?
பதில்: நிலைமை ஆளும் கட்சிக்கு பாதகமானதே. விஜயகாந்தால் ஓட்டுச் சிதறல் இருக்காதே.

கேள்வி-23. சில ஊடகங்களும் சில வலைப் பதிவர்களும் "ஜெயலலிதா சமூகத்தைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையாளர் திரை மறைவில் விஜய காந்துடன் கூட்டணிக்கு வேலை செய்தார்" என்று கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள். இதே சோதான் முன்பு தி.மு.க. விற்கும் த.மா.க.விற்கும் கூட்டணிக்கு வேலை செய்தார் என்பது மறந்து விட்டதே இவர்களுக்கு. திருமாவளவன் அவர்கள் தி.மு.கவிற்கும் பா.ம.க விற்கும் கூட்டணி அமையப் பாடு பட்டதை நான் " இசை வேளாளருக்கும் வன்னியருக்கும் கூட்டணி அமைய தலித் தவிக்கிறார்" என்று எழுதினால் (அப்படி ஒரு ஜாதி வர்ணம் பூசி எழுத எனக்கு மனம் இல்லை. ஒரு உதாரணத்திற்குத்தான் சொல்கின்றேன்). இதே பதிவர்கள்தான் "உன் ஜாதி என்ன? வர்ணம் என்ன?" என்று கூப்பாடு போடுவார்கள். இவர்கள் திருந்தவே மாட்டார்களா?
பதில்: மாட்டார்கள். தத்தம் சாதியை மட்டும் தூக்கிப் பிடிப்பார்கள் அம்மாதிரியான ஆஷாடபூதிகள்.

கேள்வி-24. பார்வதி அம்மாள் மறைவுக்கு கலைஞர் "இரங்கல் கவிதை" ஒன்றும் எழுதியது போலத் தோன்றவில்லையே? மருத்துவர் கூட ஒன்றும் கவலைப் பட்ட மாதிரி தெரிய வில்லையே? ஏன்?
பதில்: அவரவர் கவலை அவரவருக்கு.

Arun Ambie
கேள்வி-26. சிங்கூரில் ரெயில் பெட்டித் தொழிற்சாலை வருகிறதாமே? விவசாயம் இப்போது மட்டும் பாதிக்கப்படாதோ?
பதில்: ரயில் பெட்டித் தொழிற்சாலை அரசு கம்பெனியாக இருக்கும் என நம்புகிறேன். மமதா போன்றவர்களௌக்கு அங்கு பலத்த வேட்டையல்லவா. டாட்டாவிடம் அது கிடைக்காதே.

ரமணா
கேள்வி-27. கூட்டணி பேரத்தில் கருணாவின் சாணக்கியம் வெல்லுமா?ராகுலின் முயற்சி வெல்லுமா?
பதில்: இரண்டு திருடர்கள் கூட்டு சேர்ந்தால் ஒருவரையொருவர் நம்ப மாட்டார்கள்தான். பார்க்கலாம் கூத்து எவ்வளவு தூரத்துக்குத்தான் போகிறதென்று.

கேள்வி-28. திமுகவை காங் பாடாய் படுத்துவதாய் வரும் செய்திகள் உண்மையா?
பதில்: ஒரு இலை விழுந்தால், இரு இலைகள் துளிர்க்கும்?

கேள்வி-29. திருமாவும் அதிமுக பக்கம் போனால் பாமகவுக்கு இந்ததடவை `கோவிந்தோ கோவிந்தோ` நிலையா?
பதில்: திருமா அதிமுக பக்கம் போவார் என நான் நினைக்கவில்லை.

கேள்வி-30. திமுக முரண்டு பிடித்து பணியாவிட்டால் ஆட்சிக் கலைப்பு ஆளுனர் ஆட்சி,கைதுகள் படலம், என ஜூவியின் செய்திப்படி நடந்தால் யார் அதிகம் சந்தோஷப்படுவார்கள்?காரணம்?
அ)சோ ஆ)சு.சாமி இ)ஜெயலலிதா ஈ)ராகுல் உ)எம்ஜிஆரின் ஆத்மா ஆகியவர்கள் என்ன நினைப்பார்கள்?

பதில்: முக்கியமாக சந்தோஷப்படுவது மக்கள். சோ இமாதிரி சந்தோஷங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். மற்றவர்கள் பற்றி சொல்லத் தெரியவில்லை.

கேள்வி-31 பெரும் சொத்துக்குவிப்பு விவகார கோர்ட் நடவடிக்கைகள் தமிழகத்தில் தொடர் கதையா?
பதில்: அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் அது அகில இந்தியாவுக்கும் பொருந்தும்.

வஜ்ரா
தற்பொழுது அரபு உலகத்தில் நடந்துவரும் புரட்சிகள் பற்றி..
கேள்வி-31. இந்த புரட்சிகள் எல்லாம் அல்கோய்தா தீவிரவாதிகளின் செயலாக இருக்குமோ ?

பதில்: கவிழ்க்கப்படும் ஆட்சிகள் எல்லாமே ஊழல் ஆட்சிகள்தானே. ஆனால் இசுலாமிய நாடுகளில் என்ன கஷ்டம் என்றால் புரட்சியாளர்களே பின்னாலே ஊழல் வாதிகளாகி விடுகின்றனர்.

கேள்வி-32. இப்புரட்சிகள் மூலம் நாளை உருவாகும் நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாத, யூத வெறுப்பு கொண்ட ஆனால் ஜனநாயக நாடுகளாக (ஈரான் போல்) இருக்காது என்பது என்ன நிச்சயம் ?
பதில்: இஸ்ரவேலர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் அது அவர்களுக்கு பழக்கம்தானே.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வியாழனறு சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

hayyram said...

//உங்களுக்கு பதில் சொல்லவே நான் இப்பேட்டியைக் கேட்டேன்// நன்றி.

//சேகர் சொல்வதை இவ்வாறு சுருக்கலாம். அ) இதை பற்றி ரொம்பவும் பெரிதுபடுத்தினால் காரியத்துக்காகாது. அதை அப்படியே இக்னோர் செய்ய வேண்டும்// ஆனால் அதில் என்ன பிரச்சனை என்றால் சுமார் 6 கோடி தமிழர்களில் 50 லட்ஷம் பிராமணர்கள் இதை புறக்கனித்தாலும் மீதமுள்ள ஐந்தரைக் கோடி சக மனிதர்கள் மனதில் பிராமணர்கள் பற்றி தவறான அபிப்பிராயம் அல்லது பிம்பம் விதைக்கப்படுகிறது. அதனால் காரணமே இல்லாமல் பாதிக்கப்படப் போவது பிராமணர்கள் தான். ஆதலால் வெறுமனே புறக்கனித்தல் சரியாகாது. குறைந்தபட்சம் பிராமணர்களைச் சுற்றி நடத்தப்படும் சைக்கோத்தனமான தாக்குதல் குறித்து பிராமணர்கள் உட்பட பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

//ஆ) அவ்வாறு பிராமணர்களை கிண்டல் செய்பவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, அதை மறைக்கவே அவ்வாறு செய்கிறார்கள்// உண்மை.

//இ) அப்படி ரொம்பவும் பொறுக்க முடியாமல் போனால் பேசாமல் கோர்ட்டில் போய் ஸ்டே ஆர்டர் வாங்கி எதிர்ப்பைக் காட்டுவது நலம்.// சாமானிய பிராமணர்கள் என்ன செய்ய முடியும்! சங்கங்கள் நடத்தி பெரியளவில் இருப்பவர்களோ அல்லது எஸ்வி சேகர் மாதிரி பிராமணர்களுக்காக நான் போராடுகிறேன் என்று கூறுபவர்கள் கூட இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாத போது ஒரு சாமானிய பிராமணன் கோர்டு , கேஸ் என்று போக எப்படி முடியும்? என்பது சந்தேகம்!

அவருக்காக நான் அனுப்பிய கேள்வி இது தான்:

//தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பிராமண துவேஷிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது.
பிராமணர்களை தொடர்ந்து கேலி செய்தும், மடிசார் கட்டிய பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், ஜாதிக்கொடுமைக்காரர்கள் போலவும் சித்தரித்து படங்கள் எடுக்கப்படுகிறது. ஒரு அரசியல் வாதியாகவோ அல்லது ஒரு சினிமாக்காரராகவோ பிராமணர்களை தொடர்ந்து அவமதித்து எடுக்கப்படும் சினிமாக்களுக்கு எதிராக குரல் கொடுப்பீர்களா?//

பொத்தாம் பொதுவாக சேகர் பதில் கூறி இருக்கிறார். எப்படியோ, நமது கேள்விகளும் ஆதங்களும் காற்றில் அலை பரவலாக செல்லத் துவங்கி இருப்பது ஒரு ஆருதல்! அதைப் பார்த்த அல்லது படிக்கும் யாரேனும் ஒரு சினிமாக்காரர் மனதிலாவது பிராமணர் பற்றிய மோசமான காட்சிப்படுத்தல் தவிர்க்கலாமே என்று தோன்றிலால் கூட நல்லதே!

dondu(#11168674346665545885) said...

உங்கள் எண்ணங்களை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராம்ஜி_யாஹூ said...

சாரு சோவின் பத்திரிகையில் கட்டுரை எழுதுவது குறித்து தொண்டோ அவர்களின் கருத்து என்ன

அடுத்து ஜெயமோகன் கூட நக்கீரனில் எழுத இறங்கி வந்து விடுவாரோ

Arun Ambie said...

//ஐந்தரைக் கோடி சக மனிதர்கள் மனதில் பிராமணர்கள் பற்றி தவறான அபிப்பிராயம் அல்லது பிம்பம் விதைக்கப்படுகிறது. அதனால் காரணமே இல்லாமல் பாதிக்கப்படப் போவது பிராமணர்கள் தான். ஆதலால் வெறுமனே புறக்கனித்தல் சரியாகாது.//
எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும். மன்மதன்அம்பு ஆண்டாள் பாடல் சம்பந்தமாக அத்தகைய மிரட்டலுக்குப் பிறகே 'சற்றே' இறங்கினார் கமலஹாசன்.

படம் பற்றி வழக்குப் போட்டு ரிலீஸை முடிந்தவரை தாமதப்படுத்தினாலே போதும்.
வட்டி கட்டியே நொடித்துப் போவதற்கு சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்டிவிட்டு வேறு மாதிரி எடுப்பது மேல் என்று முடிவெடுப்பார்கள் தயாரிப்பாளார்கள்!!

dondu(#11168674346665545885) said...

@ராம்ஜி யாஹூ
பார்க்க: http://dondu.blogspot.com/2011/03/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது