பதிவர் ராம்ஜி யாஹூவின் கேள்வி:
ராம்ஜி_யாஹூ
சாரு சோவின் பத்திரிகையில் கட்டுரை எழுதுவது குறித்து டோண்டு அவர்களின் கருத்து என்ன?
அடுத்து ஜெயமோகன் கூட நக்கீரனில் எழுத இறங்கி வந்து விடுவாரோ?
பதில்: துக்ளக்கில் எழுத வாய்ப்பு கிடைத்தது சாருவுக்கு ஒரு பிரமோஷன் மாதிரியே. சோ அவர்களது பெருந்தன்மைக்கும் அது ஓர் எடுத்துக் காட்டு.
ஜெயமோகன் நக்கீரனுக்கு எழுத வருவது அவருக்கு பின்னடைவே. நக்கீரன் கோபாலுக்குஅது ஒரு நல்ல வணிக வாய்ப்பு.
ஓக்கே ராம்ஜியின் கேள்விக்கான பதில் முடிந்தது. எனது புதிய பதிவுக்கு அது தூண்டுகோலாக இருந்ததால் அக்கேள்விக்கு அடுத்த வியாழன் வரை காத்திருக்காது உடனே பதில் அளித்தேன்.
இன்று விற்பனைக்கு வந்த 09.03.2011 தேதியிட்ட துக்ளக்கில் சாருவின் முதல் கட்டுரை வந்து விட்டது (பக்கம் 8-9). சும்மா சொல்லப்படாது முதல் கட்டுரை நன்றாகவே உள்ளது. துர்வாசர் வண்ணநிலவன் கட்டுரையை படிப்பது போலவே இருந்தது.
முதலில் சுய அறிமுகம். பிறகு துகளக்கில் தான் எதிர்பாராத விதமாக எழுத வந்ததன் பின்னணி. ட்விட்டரில் இருக்கும் அராத்து என்னும் பதிவர் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி, துக்ளக் ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பு.
தான் என்ன எழுதப்போகிறார் என்ற கேள்விக்கு ஐநா சபையில் போர்த்துகல் மந்திரி பேச வேண்டிய பேச்சை தான் பேசும் வெளி உறவு மந்திரியே இருக்கும்போது தனக்கு எழுத விஷயமா இல்லை என பூடகமான பதிலுடன் சாருவின் கட்டுரை ஆரம்பிக்கிறது. தொடர்கிறது மேல்நாட்டு மோகம் பற்றிய சாருவின் எண்ணங்கள். காதலர் தினம், அன்னையர் தினம், நண்பர்கள் தினம் ஆகியவர்றை நாம் குருட்டுத்தனமாக அந்த நாடுகளிலிருந்து பெற்றதை சாடுகிறார்.
இந்தியர்களது பல தீய பழக்கங்களை (கட்டுப்பாடின்மை, சாலைவிதிகளை கடைபிடிக்காமை, வெளிநாடுகளில் கஷ்டத்தில் மாட்டும் நாம்மவர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருத்தல் ஆகியவை) சாடுகிறார்.
அதுதான் சொன்னேனே துக்ளக்கில் வரும் துர்வாசர் கட்டுரை போலவே உள்ளது.
ஆக, ரிலாக்ஸ் செய்யச் சொல்லும் பதிவருக்கான விடை இப்போது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.
அவர் சொன்ன ஒரு ஊகம்; அதில் அவரையும் மீறி துக்ளக்கின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைத்தான் பார்க்கிறேன். அந்த ஊகம்:
* நித்யாணந்தா சரசம் அல்லது சல்லாபம் பற்றி நிச்சயம் இருக்காது!
ஆம், நிச்சயம் இருக்காது. துக்ளக்கின் தரம் அப்படி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
7 comments:
தேர்தல் நேரத்தில் சாரு துக்ளக்கில் இணைந்து இருப்பது சற்று வித்தியாசமாகவே எனக்குப் படுகிறது
ரஜினி, கமல் மட்டும் தான் மேடை மாறி மாறி இருக்க முடியுமா, நாங்களும் செய்கிறோம் பார் என்ற கட்டுடைத்தலா இது, தெரிய வில்லை
For: டோண்டு பதில்கள்:
ராவண - கும்பகர்ணர்களாமே?
மனுசனால் டீசண்டாக கூட எழுதமுடியும் என்று நிரூபிக்கப்பார்க்கிறார் என்று நினைக்கிறேன். வெற்றி பெற்றால் சந்தோசம் தான்.
-----------------
வஜ்ரா said...
மனுசனால் டீசண்டாக கூட எழுதமுடியும் என்று நிரூபிக்கப்பார்க்கிறார் என்று நினைக்கிறேன். வெற்றி பெற்றால் சந்தோசம் தான்.
------------------
கலக்கல் கமென்ட். வாய் விட்டு சிரித்து விட்டேன்!
சரியாகச்சொன்னீர்கள்...சோ அவர்களின் பெருந்தன்மைதான்...ஆனால் அதற்காக...ம்ம்ம்...பொருத்திருந்துதான் பார்ப்போமே!
Essex சிவா
1 துக்ளக்கில் அறிஞர்கள் பலர் எழுதி இருக்கின்றனர்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவர்கள்..ஆனால் நையாண்டி எழுத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தார் சோ... துக்ளக் வரலாற்றில் முதல் முறையாக , நையாண்டி எழுத்தில், சோவையே மிஞ்சி காட்டும் வகையில் , அல்ட்டிமேட் ரைட்டர் சாரு எழுத ஆரம்பித்து இருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன? (உதாரணமாக இந்த வார துக்ளக் கட்டுரையின் முதல் வரியை பாருங்கள்.. முதல்வரின் கொள்ளு பேரனுக்கு காவல் இருக்க வேண்டிய போலீசார் இங்கு என்ன செய்கிறார்கள் என யோசித்தேன் )
2 துணிச்சலான எழுத்து, வித்தியாசமான பார்வை இவற்றில் சோவிற்கு நிகராக , தமிழ் நாட்டில் அல்டிமேட் ரைட்டர் சாருவை மட்டுமே சொல்ல முடியும் என்ற கருத்து குறித்து உங்கள் கருத்து ?
தொகுதி பங்கீட்டில் பணிந்து போனது காங்கிரசா , திமுக வா?
Post a Comment