11/17/2011

டோண்டு பதில்கள் - 17.11.2011

BalHanuman
கேள்வி-1. உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதாக இருந்தால் எதற்காகப் பாராட்டிக் கொள்வீர்கள்?
பதில்: ரொம்ப சங்கடமான கேள்வி. அதே போன்ற இன்னொரு, ஆனால் இதனுடன் சம்பந்தமான கேள்வி, “நீங்கள் கற்றவற்றைப் பட்டியலிடுங்கள்” என்பதே. இக்கேள்விக்கு விடையாக பட்டியலிடும்போது பெரிய பட்டியலாக வந்து விட்டால் அதை வைத்துக் கொண்டு என்னைத்தானே பாராட்டிக் கொள்ள இயலுமா என பார்க்க2 வேண்டும்.

ஆனால் அந்தோ அவ்வாறு பட்டியலிடும்போது ரொம்பவும் தேற மாட்டேங்கறதே. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவுன்னு ஔவை பாட்டி சொன்னாருன்னு நினைக்கிறேன்.

ஆகவே ஆளை விடுங்கள், இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை.

கேள்வி-2. குடும்ப அதிகார மையப் போட்டியில் கனிமொழி வீழ்ந்துவிட்டால்...?
பதில்: ஒருவர் வீழ்ந்தால் வேறு இன்னொருவர் ஜெயிப்பார்தானே, அவரும் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்தானேன்னு விட்டுவிட வேண்டியதுதான், அவ்வ்வ்வ்.

கேள்வி-3. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும் தான் நான் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு ஜெயிலில் இருந்து வருகிறேன் என்று கனிமொழி கூறியிருக்கிறாரே?
பதில்: பேரம் இன்னும் முடியவில்லை என நினைக்கிறேன்.


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-4. கனிமொழி ஜாமீன் விவகாரம்: நீதி தாமதப்படுகிறது - கருணாநிதி வேதனை
பதில்: ஆம், நீதி தாமதபடுகிறதுதான். சட்டுபுட்டென கேசை முடித்தோமா, கனிமொழியை உள்ளே தள்ளினோமா சில ஆண்டுகளுக்கு, என இருக்க வேண்டாமா?

கேள்வி-5. 90 கிமீ வேகத்துக்கு மேல் போகக்கூடாது ஆம்னி பஸ்களுக்கு ஐகோர்ட் தடை
பதில்: ஆம்னி பஸ் டிரைவர்கள் மேல் அவரவர் முதலாளிகளால் தரப்படும் நிர்ப்பந்தம் பற்றியும் யோசிக்க வேண்டும். ரெஸ்ட் தராது, ஒரு ஆளையே வரிசையாக ட்ரிப்புகளுக்கு பயன்படுத்துவது வேறு இருக்கிறது. வேகமாகச் செல்ல வேண்டியது அவருக்கான கட்டாயம்.

கேள்வி-6. இந்தியா & பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயம் ஏற்படும்
பதில்: பிளாஸ் பேக் போல பின்னால் செல்லும் விஷயம் ஏதும் இருக்காது என நம்புவோமா.

கேள்வி-7. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்ட பிரச்னை: மோடி கவலை!
பதில்: தேசபக்தியுடைய யாருமே பட வேண்டிய கவலைதானே. ஆகவே மோடியும் படுகிறார்.

கேள்வி-8. ஆர்க்டிக் பனிப்பாறைகள் 4 ஆண்டில் உருகும் : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
பதில்: பங்களா தேஷ், போன்ற பல நாடுகள் கடலில் மூழ்கும் அபாயம் உண்டு.


ரமணா
9. கிங்பிஸருக்கு அரசு பண உதவி சரியா?
பதில்: கமர்ஷியலாக அதை நியாயப்படுத்த முடிந்தால், பரவாயில்லை. ஆனால் உதாருக்காக அல்லவா மல்லய்யா செயல்படுவது போலத் தோன்றுகிறது?

10. பொதுத்துறைகள் இனி?
பதில்: வெறுமனே வெட்டி வேலைகளை உருவாக்காது இருந்தாலே பொதுத் துறைகள் உருப்பட்டு விடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கம்மி என்றுதான் அஞ்சுகிறேன்.

11. இந்தியா வங்கிகளின் எதிர்காலம்?
பதில்: அன்னிய வங்கிகளின் பிடியில் அகப்படாமல் இருந்தாலே போதும்.

12. அதிமுக காங் கூட்டணி கனியுமா?
பதில்: தமிழக ஊசல் விளையாட்டில் அதன் முறைதான் இப்போது.

13. அமெரிக்காவில் கலாமுக்கு சோதனை?
பதில்: நாமும் நம் பங்குக்கு பில் கிளிண்டன், ரசீது கிச்சா (நன்றி கிரேசி மோகன் அவர்களே) ஆகியோரை சோதித்தால் ஆயிற்று.

14. பெட்ரோலிய நிறுவனங்கள்‍‍‍... நஷ்டம் என்பது போலி கணக்கா?
பதில்: போலி இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

15. ராகுல் காங்கிரஸின் செயல் தலைவர் ஆவது பற்றி?
பதில்: நேரு குடும்பத்தையே பிடித்துக் கொண்டு தொங்குவது காங்கிரசுக்கு அவமானமே.

16. 2ஜி வழக்கு என்னவாகும்?
பதில்: வழக்கைத் துவங்கி விட்டார்கள் என படித்த நினைவு இருக்கிறதே.

17. கூடன்குளம் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கும்?
பதில்: வெற்றி மக்கள் நலனுக்கு கிடைத்தால் சந்தோஷமே.

18. அரசு டீவியில் சன் டீவி எப்படி சாத்யம்?
பதில்: இப்போதைக்கு சாத்தியம் இல்லைதான்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.உயரமான தொலைக்காட்சி கோபுரம்: ஜப்பான் கின்னஸ் சாதனை
2.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
3.லோக்பால் வரம்புக்குள் சிபிஐ: ஹசாரே குழு
4.கூடங்குளம்: பேச்சு தோல்வி
5.அமெரிக்க நிறுவனங்களின் அச்சம் நீக்கப்படும்: மன்மோகன்
6.1996 உலகக் கோப்பையில் சூதாட்டம்?
7.மருந்துகளின் விலையை மிக அதிகமாக உயர்த்தக்கூடாது: உச்ச நீதிமன்றம்
8.சிம்பு பற்றி தவறான வதந்திகள் பரப்புகிறார்கள்: டி.ராஜேந்தர்
9.விலை உயர்வைக் குறைக்க மனம் இருந்தால் மார்க்கம் உண்டு: கருணாநிதி
10.தமிழக காங்கிரஸை பலப்படுத்துங்கள்: ஞானதேசிகனுக்கு சோனியா காந்தி உத்தரவு

ரமணா said...

1.தமிழக்த்தில் பஸ்,பால் கட்டணங்கள் அதீத உயர்வு?
2.அத்வானியின் ரத யாத்திரை வெற்றியா?
3.ராகுல் மாயா பைட் எப்படி?
4.காங் மம்தா ஊடல் பற்றி?
5.ஞானதேசிகன் காங்கிரசை கரை சேர்ப்பார?
6.விஜயகாந்த் போராட்டம் ஜெவை எதிர்த்து?
7.அதிமுகவின் மக்கள் செல்வாக்கு இனி?
8.சுக்கிராமுக்கு ஜெயில்?
9.சச்சின் அதிரடி 100/100 பற்றி?
10.பாமக வின் எதிர்காலம்?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது