11/11/2011

மகாநாடுகளில் நடக்கும் திருட்டுகள்

எனது ஆங்கில வலைப்பூவில் நான் பின் தொடரும் வலைப்பூக்களில் நான் குறிப்பிடுபவரது வலைப்பூவும் ஒன்று. அவரது இந்த இடுகையே எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது. அந்த இடுகையிலிருந்து சில வரிகள்.
“One member of the Business Practices listserv was furious when her computer bag was stolen out of the room where the listserv was holding a happy hour. She had placed it on the floor next to the bartender station. After reporting the theft to hotel security, they found it 15 minutes later “on the 3rd floor, in an empty closed room, with all the zippers opened, conference materials left alone but [the] laptop was gone.” She was then upset with the way the hotel handled the situation because they would not give her the incident report because it was “confidential Marriott property,” claimed they did not have security cameras (although they initially told her they would check the cameras) and did not reported the incident to the police. She felt the Marriott was covering the incident up and asked people to contact her if they saw any suspicious activity.

OK, first of all, shame on her for leaving her bag unattended. I always remind the first-time conference attendees to be aware of their valuables and to look back when they leave their seat, room, etc. to make sure they have not left anything behind. I never let my laptop or purse out of my sight – or in fact out of my hands or off my shoulder. I would never in a million years leave it unattended next to a bartender station or anywhere else. The fact is that hotels in general are public locations, and anyone can come in off the street and blend into the crowd”.

ஆக திருட்டுகளுக்கு முக்கிய காரணமே இம்மாதிரி பொது இடங்களுக்கு செல்பவர்கள் தத்தம் பொருட்களை பாதுகாப்பதில் அதீத அக்கறையின்மையைக் காட்டுவதுதான். ஹோட்டல்களில் சாப்பிட வரும் பலர் தங்கள் செல்பேசியை டேபிள் மீது வைத்து விட்டு கைகழுவ செல்கிறார்கள். திரும்பி வருவதற்குள் யாரோ ஆட்டையை போட்டுவிட, அவர் குய்யோ முறையோ என கத்துவது மட்டும் குறையாது. பலருக்கு பல முறை இவ்வாறு நடந்திருப்பதை பார்த்தபின்னாலும் பலர் இம்மாதிரி கூமுட்டைத்தனத்துடன் செய்வது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற ஒரு விஷயத்தை நண்பர் பத்ரி அவர்கள் எழுதியது என் நினைவுக்கு வந்தது. அவருக்கு ஃபோன் போட்டு கேட்டதில் உலகச் செம்மொழி மாநாட்டில் நடந்ததைத்தான் தான் எழுதியதாக குறிப்பிட்டதாகக் கூறினார். அவர் பதிவு மாநாட்டு ஏற்பாட்டளர்கள் செய்த சொதப்பல்களை அதிகம் குறிவைத்தது. அதில் வந்த பின்னூட்டங்கள் பல மாநாட்டுக்கு வந்தவர்களது செயல்பாடுகளையும் புட்டு புட்டு வைத்தன. நோய்க்கூறு மனநிலை என்னும் தலைப்பிட்டு வந்த அவரது அப்பதிவிலிருந்து சில வரிகள்:

“கையேந்திக் கேட்பது என்பது ஒரு நோய்க்கூறு மனநிலை. அதுவும் அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உள்ளதா என்பதைப் பற்றி துளியும் புரிந்துகொள்ளாது, வேண்டும், வேண்டும், கொடு, கொடு என்று பறப்பது நோய்க்கூறு மனநிலை. தனக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டார்கள் என்றபின்னும் மேலும் மேலும் கொடுங்கள் (என் மாமனுக்கு ஒண்ணு, என் மச்சானுக்கு ஒண்ணு, என் கூட்டாளிக்கு ஒண்ணு) என்று கையேந்துவதும் நோய்க்கூறு மனநிலைதான். கீழே வைத்துள்ள பொருள்களை உரியவர் அனுமதி இன்றி எடுத்துச் செல்வது நோய்க்கூறு மனநிலை. யாரும் இல்லாத நிலையில் பொருளைத் திருடுவது அதீத நோய்க்கூறு மனநிலை.

கோவை செம்மொழி மாநாட்டில் இவை அனைத்தையும் பார்த்தேன்.

இணையக் கண்காட்சியில் நாங்கள் வாடகைக்கு எடுத்து வைத்திருந்த இரண்டு கணினிகளில் ஒன்றைக் களவாடி விட்டார்கள். இரவு கண்காட்சி முடிந்து, அடுத்த நாள் காலையில் வண்டியில் கட்டி எடுத்துப்போவதற்குமுன்னதாகவே களவாடிவிட்டார்கள். NHM Writer, NHM Converter அடங்கிய 3,000 சிடிக்களை வைத்திருந்தோம். அதில் 1,000-ஐ விநியோகித்திருந்தோம். காலையில் பார்த்தால் 700-தான் மீதம். சுமார் 1,300 சிடிக்கள் அடங்கிய பெட்டிகளை எடுத்துப்போய்விட்டார்கள். அதனை ஆளுக்கு ஒன்றாக கணினி வைத்திருப்போரிடம் சேர்த்தார்கள் என்றால் பயன் கொண்டதாக இருக்கும்.

தமிழ் இணைய மாநாட்டு வளாகத்தில் இந்தியத் தமிழர் முதல் வெளிநாட்டுத் தமிழர் வரை, படித்த பேராசிரியர்கள் முதல் பாமர துப்புறவுத் தொழிலாளர் முதல், கையேந்தி கையேந்தி, இலவசமாக அதைக் கொடு, இதைக் கொடு என்று பறக்காவட்டியாகப் பறந்து அலைந்ததைப் பார்க்க வெட்கமாக இருந்தது. செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பலர் அடித்துப் பிடித்துக்கொண்டு கிடைத்ததையெல்லாம் சேகரிக்க விரும்பியதன் பலனாக, தமிழ் இணைய மாநாட்டுக்கு வந்தவர்களுக்குக் கொடுக்க என்று வைத்திருந்த மாநாட்டுக் கட்டுரைகள், சிடி அடங்கிய பைகளை பாதுகாக்கவேண்டியிருந்தது. இதனால் தமிழ் இணைய மாநாட்டுப் பேராளர்களுக்குக் கடும் கோபம். பெயர்களைப் பரிசீலித்து, கையெழுத்து போட்டு வாங்குங்கள் என்றால், பலர் பொய்க் கையெழுத்துகளைப் போட்டு பைகளைத் திருடிச் சென்றனர்”.


அப்பதிவில் சில பின்னூட்டங்கள்:

“அரவிந்தன் said...
பயிலரங்கில் நான் வைத்திருந்த குறிப்பேடு வந்திருந்த பொதுமக்களால் எடுத்துச்செல்லப்பட்டுவிட்டது.இருமுறை என்னோட டேட்டா கார்டு திருடு போகும்நிலை இருந்தது.நான் சற்று உஷாராக இருந்ததால் தப்பித்தது .

நான் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த தினசரிகளை கேட்டு வாங்கி சென்றனர். மேஜையில் இருந்த அனைத்தையும் எடுத்து சென்றனர். அவ்வளவு ஏன் நான் சாப்பிட மேஜையில் வைத்திருந்த நேந்தரங்கா சிப்ஸை கூட விட்டு வைக்கவில்லை.:(
TUE JUN 29, 11:41:00 AM IST

நேந்த்ரங்கா வறுவலைக்கூடவா விட்டு வைக்கவில்லை எனக்கேட்பது முரளிமனோகர். :))

Badri said...
அரவிந்தன்: இன்னும் பலவற்றை நான் எழுதவில்லை. சாப்பாட்டு அரங்கில், தேநீர் வழங்கும் இடத்தில் நடந்தவை போன்ற அசிங்கங்களை எங்கும் பார்க்கவில்லை. மாடரேஷன் என்பதே இல்லாமல், வாங்கி வாங்கிச் சாப்பிட்டது; எக்கச்சக்கமாக தட்டில் நிரப்பிக்கொண்டு வீணடித்துக் குப்பையில் போட்டது...

எத்தனை எத்தனையோ பென் டிரைவ்கள் களவாடப்பட்டன. இலவசமாகப் பயன்படுத்த வைத்திருந்த கணினிகளின் ஆப்டிகல் மவுஸ்களைத் ‘தள்ள’ முயற்சி செய்தனர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இலவசம் என்ற வார்த்தை எந்த அளவுக்கு நம் மக்களை ஆட்டிவைக்கிறது! திருடுதல் என்பது எவ்வளவு ஈனத்தனமான செயல் என்பதை எப்படி அறியாமல் இருக்கிறார்கள்? ஐயன் திருவள்ளுவன் என்று வாய் கிழியப் பேசுவது இதற்காகத்தானா?

தமிழர்களின் ஒட்டுமொத்தக் கயவாளித்தனத்தை ஒரே இடத்தில் காண உதவியது ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’.
===
ஆனால் இவற்றையும் மீறி பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன. அவைபற்றி எழுதுவதற்குமுன் கோபத்தைத் தணித்துக்கொள்ளவே இந்தப் பதிவு.
TUE JUN 29, 12:03:00 PM IST

இம்மாதிரி இடங்களில் நான் இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜாக்கிரதை உணர்வு பன்மடங்காக இருத்தல் அவசியம் எனக்கூறவும் வேண்டுமோ?

சில செய்ய வேண்டிய / செய்யக்கூடாத செயல்கள்
அப்போதுதான் உங்கள் பொருட்களை இழக்காமல் இருப்பீர்கள்.

1. பொது இடங்களுக்கு செல்லும்போது தேவையானவற்றை மட்டும் எடுத்து செல்லுங்கள். சில இடங்களில் செல்பேசியைக் கூட உள்ளே எடுத்து செல்ல முடியாது (அதுவும் அது கேமிரா வசதியோடு இருந்தால் கேட்கவே வேண்டாம்). நான் வாடிக்கையாளரது அலுவலகத்தில் அன்றைய தினத்துக்கு வேலை செய்வதற்காக செல்லும்போது செல்பேசி அவசியம் தேவை. அதே சமயம் அது கேமிரா செல்பேசியாக இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.
துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களில் போலீசார் கெடுபிடி செய்வார்கள். ஆகவே அங்கெல்லாம் நான் செல்பேசியே எடுத்துச் செல்வதில்லை.

2. செல்பேசிக்கே அந்த கதி என்றால், லேப்டாப் பற்றி கேட்கவா வேண்டும்? எந்த இடத்திலும் அதை வைத்து விட்டு அப்பால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். டேட்டா கார்ட், பவர் கார்ட் ஆகியவற்றையும் கண்போல பாதுகாக்க வேண்டும் எனக்கூறவும் வேண்டுமா?

ஜெயமோகன் ஆர்கனைஸ் செய்த ஊட்டி இலக்கிய மாநாட்டுக்கு நான் செல்லாததற்கு முக்கியக் காரணமே லேப்டாப் பாதுகாப்பு பற்றிய எனது கவலைதான். எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தொடர்ச்சியாக வருபவை. ஆகவே லேப்டாப் எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பது என்னும் பேச்சுக்கே இடமில்லை.

3. மின்ரயில் பயணங்களில் செல்லும்போது சிலர் செல்பேசியை இரவல் கேட்பார்கள், அவசரமாக ஒருவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், தங்களது செல்பேசியில் சார்ஜ் தீர்ந்தது என்றும் பொய் சொல்வார்கள். அழுத்தமாக அக்கோரிக்கைகளை நிராகரிப்பதுதான் நலம். இல்லாவிட்டால் ஒரு ரயில் நிலையம் வந்ததும் பேசிக் கொண்டே இறங்கிச் சென்று விடுவார்கள். எனது நண்பனின் செல்பேசி அப்படித்தான் பறி போயிற்று.

4. செல்பேசிகளை வெறுமனே சட்டை பாக்கெட்டில் வைப்பது சரியில்லை. எதற்காகவேனும் குனிந்தால் செல்பேசி கீழே விழும் வாய்ப்பு அதிகம். நான் செய்வது போல வாரில் அதை கட்டி பாக்கெட்டில் வைத்து, வாரை கழுத்தில் மாட்டிக் கொள்வது நலம். பார்க்க படம்:


பை தி வே இந்த படத்தைப் பார்த்துத்தான் ஜ்யோவ்ராம் சுந்தர் பூணூல் போட்டிருக்கிறாரா என அனாவஸ்ய கேள்வியை எழுப்பி என்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு போனார் ஒரு சோகால்ட் இணைய தாசில்தார். ஆகவே நான் இப்போது காட்டும் போட்டோவில் எனது செல்பேசியை நான் எவ்வாறு வைத்திருக்கிறேன் என்பதை மட்டும் பாருங்கள். பூணல் ஆராய்ச்சி எல்லாம் வாணாம்.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் இப்போதைக்கு இவ்வளவுதான்.

நீதி: அல்லாவை நம்பு. ஆனால் அதே சமயம் ஒட்டகத்தையும் பாதுகாப்பாக கட்டி வைக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது