5/20/2012

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 20.05.2012

ஐ.பி.எல். மேட்ச் ஃபிக்ஸிங் கூத்துக்கள்
ஒரு மேட்ச் சம்பந்தமாக என்றென்றும் அன்புடன் பாலா எழுதியிருந்தார்,

1 பந்து 4 ரன்கள் தேவை. இப்போது கூட சென்னை ஜெயித்திருக்கலாம், அவர் ஒரு well directed short ball வீசியிருந்தால்! தோனி வந்து அறிவுறுத்தியும், ஹில்ஃபன்ஹாஸ் அந்த கடைசி பந்தை over pitch பண்ணியதால், காட்டான் ஸ்மித் காட்டுத்தனமாக அடித்ததில், பந்து பவுண்டரிக்கு பறந்தது. மும்பை என்ற மிகச்சாதாரண அணிக்கு இன்னொரு ஓசி வெற்றி! மும்பை வென்றது என்பதை விட சென்னை தோற்றது என்பது சரியாக இருக்கும்.

இது மேட்ச் ஃபிக்ஸிங் இல்லாமல் வேறென்ன என்பது எனக்குப் புரியவில்லை.  இப்போது ஷாருக்கான் அடிக்கும் கூத்து வேறு சகிக்கவில்லை. ஐ.பி.எல். இன்னும் நமக்குத் தேவைதானா?

இப்போதுதான் பாலா அவர்களுடன் இது பற்றி தொலை பேசினேன். அவரும் ஒரு மாதிரியான குழப்பத்தில்தான் இருக்கிறார். ஒரு போஸ்ட் போடப்போவதாகக் கூறினார். அதை படிக்க ஆவலாக உள்ளேன்.

ஜெயேந்திரர், நித்தியானந்தர், மதுரை ஆதீனம் போன்றவர்கள்.
ஜெயேந்திரருக்கு யாராவது டேமேஜ் லிமிட்டிங் பற்றி சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். தன் மேல் இத்தனை குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு அவர் தேவையில்லாமல் நித்தியானந்தர் விஷயத்தில் ஏன் கருத்து தெரிவிக்க வேண்டும்?

ஜெயேந்திரர் பற்றி நான் ஏற்கனவேயே பின்னூட்டம் ஒன்றில் எழுதியிருப்பதை இங்கே மீண்டும் தருகிறேன்.
//காஞ்சி பெரியவர் மீது அனு வைத்த குற்றச்சாட்டுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள் ...//
அனு பொய்யுரைப்பார் என்பதை நான் நம்பவில்லை. அதுவும் இம்மாதிரியான விஷயங்களை பெண்கள் ஜாக்கிரதையாகவே கையாளுவார்கள். ஏனெனில் இது சம்பந்தமாக அவர்கள்மீதும் சேறடிக்க முயற்சிகள் நடக்கும்.

இந்த விவகாரத்தை நான் இங்கு அடக்கி வாசிக்கும் காரணமே ஜெயேந்திரருக்காக இல்லை. காலஞ்சென்ற அனுவின் மேல் வேறு யாரும் அவதூறு செய்யக்கூடாது என்பதாலேயே. 

நீங்கள் யோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது, அவ்வாறான தோற்றத்தையும் அளிக்க வேண்டும் என்று பொருள் வருமாறு ஆங்கிலத்தில் It is not sufficient that you are honest, you should also appear to be honest ஒரு சொலவடை உண்டு. 

அதன்படி ஜெயேந்திரர் என்னைப் பொருத்தவரை தேறவில்லை. மீதி விஷயங்கள் கோர்ட்டில் இருப்பதால் இப்போதைக்கு இது பற்றி மேலே பேச விருப்பம் இல்லை.


நித்தியானந்தர் இன்னொரு காமெடி பீஸ். அவரை சீரியசாக பலர் எடுத்துக் கொள்வது ஒரு டிராஜெடியே. என்ன செய்வது? காமெடியும் டிராஜெடியும் கலந்து தருவதுதான் வாழ்க்கையே. நான் எனது முந்தைய பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதியிருந்தேன். 


ஆனால் (பெரியாரது பொருந்தா திருமணம் நடந்து) இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னால் இப்போதேல்லாம் பெரியார் செய்ததற்கு சப்பைக்கட்டு கட்டுபவர்கள்தான் அனேகம். மனிதன்மனம் விசித்திரமானது. நம்ப விரும்புவதை ஏதேனும் செய்தாவது, தலையை கொடுத்தாவது நம்பும். அதே போல நித்தியானந்தருக்கும் சப்பைகட்டு கட்ட வருவார்களாக இருக்கும். அவரைப் பொருத்தவரை இதுவும் கடந்துபோகுமாக இருக்கும்.என்னைப் பொருத்தவரை மொத்தத்தில் சாமியார்கள் என்றாலே எனக்கு அலர்ஜிதான். நித்தியானந்தரும் அதற்கு விதிவிலக்கல்ல. நாமே நேரடியாக சாமி கும்பிடுவதை விடுத்து இது என்ன இம்மாதிரி புரோக்கர்களை தேடுவது?

அதற்கேற்றாப்போல் இப்போதே நித்தியானந்தருக்கான சப்பைக் கட்டுகள் ஆரம்பமாகி விட்டன.

இப்போது சீனியர் காமெடி பீஸான மதுரை ஆதீனம் என்ன சொல்றார்?

அதாகப்பட்டது, சிவபெருமானே என் கனவில் வந்து நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவிக்கச் சொன்னார் என்கிறார் மதுரை ஆதீனம்
டோண்டுவின் கேள்வி: இது சிவபெருமானுக்குத் தெரியுமா?

எனது ரோல் மாடல் யுவராஜ் சிங்தான்
சும்மா சொல்லப்படாது கேன்சர் ட்ரீட்மெண்டை முடித்துக் கொண்டு மீண்டும் கிரிக்கெட்டில் ஆழ்ந்து ஈடுப்டப்போவதாகக் கூறியுள்ளார். அவரே எனது ரோல் மாடல்.

தொடையில் ட்யூமர் ஆப்பரேஷனுக்கு பிறகு டியூமர் மலிக்னண்ட் எனத் தெரிய வந்தது. இது Sarcoma (cancer) of the soft tissues என டயாக்னஸ் செய்யப்பட்டது. 33 கதிரியக்க சிகிச்சைகள், ஆறு கீமோதெரபி என நடந்தன. நேற்றுத்தான் கடைசி கீமோதெரபி. இனிமேல் செக்கப்புக்கு வந்தால் போதும் என எனது டாக்டர் திரு. பூபாலன் அவர்கள் கூறிவிட்டார்.

சில நல்லதுகள் நடந்தன. முடி எல்லாம் கொட்டி விட்டது. ஹேர் கட்டிற்கான அறுபது ரூபாய் மிச்சம் :))). எல்லா உதவியையும் செய்யத் தயாராக வந்த உறவுகளுக்கும் நன்றி. கடவுள் புண்ணியத்தில் கடன் எதுவும் வாங்கவில்லை.

இனிமேல் பழைய வாழ்க்கைக்கு. முழுவீச்சுடன் திரும்ப வேண்டும், யுவராஜ் சிங்கைப் போல.

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளுடனும் அதனால் பெறும் எனது தன்னம்பிக்கையோடும் வெற்றி பெறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்.




17 comments:

நம்பள்கி said...

Yes, it is a deadly disease; and Yuva-raj is an apt Man and Role Model for anyone. Trust, you will do well.

I strongly suggest you may want to have a second opinion at Adyar CA Institute; there are many many devoted doctors whose only motto is service; yes, service above self!

Arun Ambie said...

//என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளுடனும் அதனால் பெறும் எனது தன்னம்பிக்கையோடும் வெற்றி பெறுவேன்.// இது நம்பிக்கை! தன் முயற்சியும் இறையருளும் உள்ள நீங்கள் முன்னிலும் சிறப்பாக பதிவுலகிலும் மொழிபெயர்ப்பு உலகிலும் திகழ இறைவனை வேண்டுகிறேன்.

Arun Ambie said...

ஜெயேந்திரர் சற்றே மூடிக் கொண்டிருப்பது நலம் என்ற அபிப்பிராயம் எனக்கும் உண்டு. தானுண்டு தன் காமகோடி பீடமுண்டு என்று இருப்பதே இவருக்கு நல்லது. ஆனால் நுணல்போலக் கெடுகிறார் இவர். இது தேறாத கேஸ் என்று ஆந்திர அரெஸ்டுக்குப் பல ஆண்டுகள் முன்பே முடிவு கட்டப்பட்டவர் இவர். (பல சம்பவங்கள் உள்ளன. நேரில் சந்திக்கும்போது சொல்கிறேன்.)

நிற்க. ஜெயேந்திரர் தேறமாடார் (ரொம்ப கஷ்டம்) என்பதற்காக அனுராதா ரமணனின் குற்றச்சாட்டுகளை அப்படியே ஏற்க இயலாது. பெண்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதை காட்டுவார்கள் என்பது சற்றே old school of thought. In my opinion she might have been given an offer she could not have refused. கைதுக்கு 7-8 மாதங்களுக்கு முன்னால் குருவே, தெய்வமே என்று இதே ஜெயேந்திரரைப் புகழ்ந்தவர் அனுராதா ரமணன். கைதுக்குப் பிறகு அவர் பற்றிய அதிரவைக்கும் குற்றச்சாட்டு அதுவும் வெகுகாலத்துக்கு முன் நடந்ததாக.

அப்படியானால் சம்பவத்துக்குப் பிறகு அத்தனை காலங்கள் அனுராதா காஞ்சிமட பக்தையாக நடித்துக் கொண்டிருந்தாரா? அதற்கென்ன காரணம்? உள்ளே புகுந்து ஆராய்ந்து பார்த்தால் கூவம் மணக்கிற்தே என்று சொல்லத்தக்க துர்நாற்றம் இருக்கும்.

But yet, தன் வாயால் தன்னை மட்டுமல்லாது தம் மடத்தின் பெயரையும் சாந்நித்யத்தையும் கெடுத்துக் கொண்டார் ஜெயேந்திரர் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. பீடாதிபதி பொறுப்பிலிருந்து விலகி சந்நியாசியாக அவர் வாழ்ந்தால் காமகோடி பீடம் இழந்த மரியாதையை மீண்டும் பெற வாய்ய்ப்புள்ளது.

ராம்ஜி_யாஹூ said...

happy to hear that your health is perfectly ok, keep writing sir, keep rocking

கோவி.கண்ணன் said...

மேலும் குணமடைய நல்வாழ்த்துகள்.

பிரசாத் said...

GET WELL SOON

வழிப்போக்கன் said...

வயதில் மிகவும் மூத்தவனான நான் என் பரிபூரண ஆசிகளை வழங்கி, தாங்கள் முற்றிலும் குணமடைந்து பழைய டோண்டுவாகவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
சாமியார்களின் விவகாரங்கள் எல்லாம் விகாரமாகி வருகின்றன. அவற்றைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் கௌரவக் குறைவு என்று நான் கருதுகிறேன்.
காலம் இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கட்டும் என்று நாம் எதிர்பார்த்துக் காத்திருப்போமாக!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

பரிசல்காரன் said...

ஆல் த பெஸ்ட்!

ராஜரத்தினம் said...

என் தந்தையும் தொண்டை கழுத்து சம்பந்தமான் கேன்ஸரில் இருந்து மீண்டவர்தான் ! அவருக்கு ரேடியோதெரபி மட்டுமே கொடுக்கப்பட்டது! காஞ்சி மருத்துவமனை! கடந்த 3 ஆண்டுகளாக சோளீஸ்வரர் புண்ணியத்தில் நன்றாகவே இருக்கிறார்! அதுபோல நீங்களும் நலமடைவீர்!

Ganpat said...

எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்கள் முற்றிலும் குணமடைந்து,சகஜ நிலைக்கு திரும்ப மனமார பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
Ganpat

R.Ravichandran said...

Best wishes

ராமுடு said...

I didn't read blog for the last few months. Its hard to know that you got soft tissue cancer and Now I am happy that you got recovered.

Pray almighty to give all strength to forego this.

Please take care of yourself.

Sundar said...

Wish You A Speedy recovery

D. sundarvel

raghs99 said...

Dondu Sir,

I have not even missed a single post of yours and admirer of you.
May Lord parthasarathy bless you with good health and peaceful and long life.

Kind regards
Raghav

Ganesh said...

Dear Sir,

Visiting your blog after a long time.
Very glad to read that you are doing better.

My sincere prayers for your health.

Hari Om
Ganesh

http://pudhirthamizhan.blogspot.com said...

Dear Dondu Sir,
I Pray the God to give you power to overcome the health concerns and shine in your own way for years to come.

Naveena Bharathi

R. Jagannathan said...

+உங்கள் கருத்துக்களுக்கு மற்ற ப்ளாக் சைட்டுகளில் மிகுந்த மரியாதை உண்டு. உங்கள் ப்ளாக்-ஐ இன்று படித்தேன். நீங்கள் கேன்சரிலிருந்து மீண்டு வந்ததற்கும், நீண்டகாலம் நோய் நொடி இன்றி உடல் நலத்துடன் வாழவௌம் எல்லாம் வல்ல ரெங்கனாதரைப் ப்ரார்த்திக்கிறேன்.

என் நெருங்கிய உறவினரும் இப்போதுதான் இதே கேன்சரில் (தொண்டை, நாக்கு) இருந்து 33 ரேடியேஷன், 6 கிமோதெரபியிலிருந்து மீண்டு வந்து இனி ரெகுலர் செக் அப் மட்டும் வர டாக்டர் சொல்லியிருக்கிறார். அவரும், குடும்பமும் பட்ட பாட்டைப் பார்த்ததினால், உங்கள் பொறுமையும் நன்கு தெரிகிறது. வாழ்த்துக்களும், ப்ரார்த்தனைகளுடனும் - ஜெ.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது