கோவி கண்ணன் அவர்களது இது பற்றிய இப்பதிவில் வந்த ஒரு பின்னூட்டம் கூறுவது:
”விஸ்வரூபம் குறித்த சோ வின் உணர்வுகளாக நீங்கள் எழுதியிருப்பவை பொறுப்பான,
பண்பான விமர்சன ரகத்தில் சேரும். ஆனாலும் அதில் எனக்கு ஏற்பு இல்லை.
படத்தில் தவறாக ஏதும் சொல்லப் படாவிட்டாலும் அதற்கு எதிர்ப்பு புறப்பட்டது
உண்மை. அந்த எதிர்ப்பை மீடியா ஊதிவிட்டதும் உண்மை. அந்நிலையில் படம்
வெளிவந்திருந்தால் கலவரங்கள் வந்திருக்கலாம். அப்போது சாதாரண மனிதர்கள்
பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியெல்லாம் நடக்காமல் படத்தை ஒத்தி வைக்கிற
வேலையை அரசாங்கம் செய்தது. அது அவசியம். அதைச் செய்யத்தான் வேண்டும்.
அதனால்தான் சோ அதைச் சரியென்று சொல்லியிருக்கிறார்- இது என் புரிதல்”.
எனது புரிதலும் இதுதான். ஆனால் இந்த விஷயத்தில் நான் சோ சொன்னதுடன் ஒத்துப் போகவில்லை என்ப்தையும் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் குறிப்பிட்டுள்ளேன். நான் சோ அவ்ர்களது கருத்துடன் ஒத்துப்போகாது இருக்கும் இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் இதுவும் ஒன்று. ஆனால் சற்று மேலும் யோசித்ததில் இப்போது சோ கூறுவதை புரிந்து கொள்ள முடிகிறதுதான். இருந்தாலும் மனம் கேட்க மாட்டேன் என்கிறது. ஒரு அபூர்வ சினிமா கலைஞனை நோகடிக்கிறார்கள். தமிழகத்தில் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் காட்டப்படும் ஆதரவுகளால் அவருக்கு பொருள் நட்டம் ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
இதில் இசுலாமிய அவதூறு ஏதும் இல்லை என நான் புரிந்து கொண்டதும் உண்மைதான் என்பதை கோவி கன்ணன் அவர்களது மேலே சுட்டப்பட்ட பதிவு உறுதி செய்தது குறித்தும் சந்தோஷமே.
சீக்கிரம் தடைகளெல்லாம் நீங்கி இங்கும் விவரூபம் எழட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
7 hours ago
15 comments:
"அப்படியெல்லாம் நடக்காமல் படத்தை ஒத்தி வைக்கிற வேலையை அரசாங்கம் செய்தது. அது அவசியம். அதைச் செய்யத்தான் வேண்டும். அதனால்தான் சோ அதைச் சரியென்று சொல்லியிருக்கிறார்- இது என் புரிதல்”"
இதே ஒத்தி வைக்கும் வேலையை கருணாநிதி செய்திருந்தால் சோ என்ன சொல்லியிருப்பார் என்பது யாம் அனைவரும் அறிந்ததே???
கமல், அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரை வேணா தூக்கி எறியலாம். வருடத்திற்கு ஒரு மனைவி அல்லது துணைவர் வச்சுக்கலாம். அது அவர் வாழ்க்கை.
ஆனால், கமல் ஒரு வியாபாரியாக, தயாரிப்பாளாராக ஆகும்போது, கொஞ்சம் அனுசரிச்சுப் போகணும்.
இது என் படம், நான் என்னவேணா செய்வேன் என்று திமிருடன் பேசியது சிறுபிள்ளைத்தனம்.
உ போல் ஒருவனில் இவர் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக காட்டியபோதே எரிச்சலடைந்தவர்கள் அப்போது விட்டுவிட்டு அதை தொடர்ந்து செய்யும் கமலை விட்டால் விஸ்ரூபம் 10 வரை எடுத்து அவமானப்படுத்துவார். இவரை நிறுத்தியே ஆகனும்னு முடிவு செஞ்சுட்டாங்க.
சரி, நான் அன்னிய இஸ்லாமிய தீவிரவாதியைத்தான் காட்டுறேன் என்னும் இவர், உ போ ஒ என்ன பண்ணினார்?? அதை எப்படி நியாயப் படுத்துவார்?
JJ's justification on TN govts' responsibility to ban the movie is very reasonable!
I dont care about Cho!
But, JJ taught arrogant and adamant and cocky Kamal Hassan a big lesson!
He is a businessman. He cant have such a BIG MOUTH as his business depends on other people! I enjoyed Kamal's every defeat! Thanks to Islamic outfits for making this as a big issue.
Why dont you ask KH to continue being arrogant and adamant and NOT COME down or NOT compromise even now???
Can he do that??? After all VR is STILL HIS PRODUCT or NOT?? And he believes HE HAS NOT DONE anything wrong.
சோ ஓரு குழ்ப்பவாதி...
Yesterday I heard salman rushdie saying, "people should define themselves by what they like but they define themselves by what they hate".
the above commented fellow is an example for this attitude.This attitude will never help anyone and make life very bitter for themselves as well as others around them..
திரு. டோண்டு அவர்களே,
எனக்கென்னவோ எல்லா பிராமணர்களும் கூட்டு சேர்ந்து கொண்டு கொட்டமடிக்கிறீர்கள் என தோன்றுகிறது.
திரு. செல்வி ஜெ, திரு. கமல், திரு சோ, நீங்கள் மற்றும் புதுவரவாக திரு. ஜவஹர்!!!
திரு. மு க அவர்களின் வேலையையும் (பிராமணர்கள்) உங்களுக்குள்ளேயே பங்கு போட்டுக்கொள்வதால் தற்போது ஒரு மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது. யாரை கண்டபடி ஏசுவது என்று முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது.
திரு. கோவி அவர்களின் பதிவிலிட்ட கருத்துரை.
---------------------------------------
//திரு. கோவி. கண்ணன் அவர்களே,
//அமெரிக்ககாரன் குழந்தையை, பெண்களை கொல்லமாட்டான் என்று ஒரு தீவிரவாதி பேசும் வசனத்தை நான் ரசிக்கவில்லை,//
இந்த வசனத்தின் விளைவுகள் / புத்திசாலித்தனம் புரியவில்லையா தங்களுக்கு? யார் இதனை படத்தில் பார்த்தாலும் கேட்டாலும் நிதர்சனம் என்ன என (அமெரிக்கராகவே இருந்தாலும்) யோசிக்கமாட்டார்களா என்ன?
மேற்கண்ட தங்களின் கருத்திற்கு ஏதும் சரி தவறு என்று சொல்லாமல் பெரும்பாலான / எல்லா அமெரிக்க வாசி பதிவர்களும் நழுவுவதை கவனித்தீர்களா? இந்த அழகில் சோ வின் நிலைப்பாடு பற்றி என்ன பஞ்சாயத்து?
சரி, திரு. சோ, படத்தை பற்றி கருத்து கூறவில்லை என்கிறீர்கள். அவர் என்ன அந்த படத்தின் திரையிடலை பார்த்த்தார் என்று எங்காவது உறுதிப்படுத்தினீர்களா? பிறகு எப்படி படத்தின் காட்சிகளைப்பற்றி கருத்து கூறமுடியும்?
தங்களின் கருத்துக்கள் இங்கு குழப்பமாக உள்ளது. அல்லது திரு எஸ். வீ. சேகரின் காட்டுல மழை நாடகம் போல தலைப்பை நியாயப்படுத்தி இருக்கிறீர்கள்!
//தமிழகத்தில் மதவாத மற்றும் சாதிய சக்திகள் பெருகிவருவதால் எதிர்காலத்தில் (ஓய்வு வயதில்) கூட தமிழகம் திரும்பவது பற்றி யோசிக்காமலேயே இருந்துவிடனும் என்று நினைக்க துவங்கியுள்ளேன்,//
திரு. கோவி, என்ன இது அழுகுணி ஆட்டம்???!!!
சரி ஒரு பேச்சுக்கு தாங்கள் இதனை சீரியஸ் ஆகவே கூறினீர்கள் என்று கொண்டால், ஜெ வும் / அரசும் இதே போல் கலவரமேற்பட்டால் கூறலாமா?//
Very well said. Hatredness cannot be someone's identity. Unfortunately it is for majority.
///sunaa said...
the above commented fellow is an example for this attitude. This attitude will never help anyone and make life very bitter for themselves as well as others around them..///
யோவ் சூனா!
உமக்கு மேலே 3 பேரு பின்னூட்டமிட்டு இருக்கா! யாரைச் சொல்றீர்னு தெளிவாகச் சொல்லும். புரியுதா ஓய்?!
The guy who has huge "attitude problem" is Kamalahassan. And he pays a "price" for that! Then, comes your attitude.
You both need to learn to SPEAK clearly and quote "legibly" so that others can understand who the hell you are talking about. If you are blabbering like this, "this fellwow" or "that fellow" only you and KH can understand your response!
எனக்கு என்னவோ இது எல்லாம் ஜெஜெவின் விளையாட்டு என நினைக்கின்றேன்.. ஜெ எம்ஜியாருக்கு கமலை திட்டி எழுதிய கடிதம் குறித்து முக சொன்னதும், துள்ளிக் குதித்து ஓடி வந்து பிரஸ் மீட் வைத்து,நான் அப்பாவி, நான் அப்பாவி, என உளறிக் கொட்டியதில் இருந்து, இந்த விஸ்வரூபத்தின் சுயரூப பாசைக் கயிறு எங்கே இருந்தது என்பதை அறிந்துக் கொண்டோம். கூட ச்சும்மாச்சுக்கு சோ போன்றோர் எல்லாம் ஜெவுக்கு கர்ச்சிப் கொடுத்து ஆதாயம் தேடுகின்றனர் என தோன்றச் செய்கின்றது ... வாழ்க தமிழ் ! வளர்க டாமில் னாடு .. !
i'm talking about you only mr.varun.you define urself by what you hate.go and check ur blog contents.
//உமக்கு மேலே 3 பேரு பின்னூட்டமிட்டு இருக்கா! யாரைச் சொல்றீர்னு தெளிவாகச் சொல்லும். புரியுதா ஓய்?!//
I believe the comment is meant for Salman Rushdie.
//இதே ஒத்தி வைக்கும் வேலையை கருணாநிதி செய்திருந்தால் சோ என்ன சொல்லியிருப்பார் என்பது யாம் அனைவரும் அறிந்ததே???//
dondu sir, no answer?
//dondu sir, no answer?//
இந்த விஷயத்தில் சோ கூறுவதை நான் ஒத்துக் கொள்ளவில்லை என்பதுதான் இப்பதிவின் அடிநாதமே.
மேலும் கருணாநிதி முதல்வராக இருந்திருந்தால் அவருக்கு முதற்கண் இம்மாதிரி தடையை இட தில்லே இருந்திராது. எனவே இக்கேள்வியை அனுமானக் கேள்வியாகவே பார்க்கிறேன்.
சங்கராச்சாரியாரை அரெஸ்ட் செய்யுமளவு கருணாநிதி துணிந்திருக்க மாட்டார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///sunaa said...
i'm talking about you only mr.varun.you define urself by what you hate.go and check ur blog contents.///
Well, now it is much better and somewhat clear! :-) Thanks for the clarification! As you can see people did not get you till you made it clear!
BTW, I know what I am writing in my blog. I dont have to check that out. Take care! :)
chappai kattu.
"பாப்பாத்தியமா ... நீ சா(ப்)ட்டு சொல்லு உப்பு காரம் போதுமான்னு." இது ஒரு டயலாக். இதில் கமல் யாரை திருப்தி செய்ய விரும்புகிறார். தி.க-வா , தி.மு.க-வா ? புரியாதவர்க்கு உள்செய்தி (சில வருடங்கள் முன்பு செல்வி ஜெயலலிதா மாட்டு கறி சமைத்து படைத்து மற்றும் உண்டதாக செய்திகள் ...தி.க. எப்பவும் போல காலைல வெளிய சரியா போலன்ன அது பார்பனர் சதி என்று கூறும்). உலக படம் எடுக்குற நாய்க்கு உள்ளூர் விவகாரம் எதுக்கு? குரங்கு ஆப்ப எடுத்த கதையா ஆகி போச்சுல்ல, நீ உலக தரத்துல எடுத்தது?
Post a Comment