1/17/2005

ekalappai என்னும் அற்புதம்

இதை என் வன் தகட்டில் இறக்கிக் கொண்டதும் பலப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன. முக்கியமாக வோர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட் ஆகியவற்றில் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது.

புதுவைத் தமிழ் ரைட்டரும் உபயோகமானதுதான் ஆனால் இதில் அடித்துக் கொண்டு, நகலெடுத்துப் பிறகு சம்பந்தப்பட்டக் கோப்புகளில் ஒட்டுவதில் சிறிது அதிகப் பிரயாசை எடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் என்ன, இகலப்பையில் லதா, கம்பன், சோழன் முதலிய எழுத்துருக்கள் கிடைப்பதில்லை. அது ஒரு குறைதான்.

இதுவரை நான் பார்த்த எல்லா முறைகளிலும் ஒரு சிறு குறை உள்ளது. அதாவது ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணத்தை சரி பார்க்க முடியவில்லை. இது எங்காவது கிடைக்குமா?

நான் மொழி பெயர்க்கும்போது காகித நகல்களை உபயோகிப்பதில்லை. மின்னஞ்சல் அட்டாச்மென்ட் ஆக கோப்புகளை வன் தகட்டில் இறக்கிக் கொள்கிறேன். பிறகு அதை save as நகலாக எடுத்துக் கொண்டு, நேரடியாகக் கணினியிலேயே மொழி பெயர்த்து, மொழிபெயர்ப்பை மின்னஞ்சல் மூலம் திருப்பி அனுப்பி விடுகிறேன். எங்கும் காகிதமே இல்லை.

எல்லாக் குறைகளும் விரைவில் சரி செய்யப்படும் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

சன்னாசி said...

நான் முன்பு உபயோகித்த 'குறள்' என்ற மென்பொருளில் spell-check இருந்ததாக நினைவு. ஆனால், அதில் ஹ என்ற எழுத்துக்குப் பதிலாக, ha என்று அடித்தால் ஷ என்று வந்தது. வாய்ப்பிருப்பின் பார்க்கவும்.
http://kstarsoft.com/

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி. குறளையும் இறக்கிக் கொண்டேன். ha அடித்தால் ஹ என்றுதான் வருகிறது. அதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. sha அடித்தால்தான் ஷ வருகிறது.
பிழைத்திருத்தி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது புரியவில்லை. அதையும் சரி செய்ய முடியும் என்றுதான் நம்புகிறேன்.
அன்புடன்,
ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது