1/09/2009

ஆதரிசமாக கொள்ள வேண்டிய பெருமதிப்புக்குரிய நாடார் சமூகம்

நான் மிகவும் மரியாதைக்குரிய சமூகமாக நினைப்பவர்களில் நாடார்களும் அடங்குவர். பெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் பற்றி பதிவு போட்ட உடனேயே இவர்களைப் பற்றியும் போட விரும்பினேன். ஆனால் கைவரவில்லை. இப்போது சொல்லி வைத்தாற்போல் குமுதம் பத்திரிகையில் இரண்டு இதழ்களில் அவர்களை பற்றிய கவரேஜ் வந்துள்ளது. முதலில் அதை பார்ப்போம், பிறகு எனது தரப்பிலிருந்தும் சில சொற்கள் கூறுவேன். Now over to Kumudam!

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்பு போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.

திருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.

சான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.
பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.

தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்' என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

தங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.

பெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) ``நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது'' என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..


எந்தச் சமுதாய மக்களாக இருந்தாலும் உறவின்முறையோடு `அண்ணாச்சி' என்று அன்போடு அழைக்கும் நாடார் சமூகத்தார், தாங்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்று பிரகடனப் படுத்தியதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.

இதனால் பல்வேறு இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. நாடார்கள் ஒன்று சேர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தப் போராட்டம் நடந்தது. ஆட்சியாளர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு மேலே ஆடை உடுத்திக்கொண்டனர். பொது இடங்களில் தங்களது மேல் ஆடையைப் பறிக்க முயன்றவர்களை எதிர்த்துத் தாக்கினர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.

கலவரம் மேலும் மேலும் பரவி பலர் கொல்லப்படுவதைக்கண்டு சென்னை அரசே அஞ்சியது. அதனால் உடனே தலையிட்டு, 1859_ல் `நாடார் பெண்கள் மேலாடை அணியக்கூடாது' என்ற பிரகடனத்தை அரசு ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பெண் கல்விக்கென நாகர்கோவிலில் ஆங்கிலேயரால் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் பெண் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது.

தங்கள் இனம் இப்படி பல இன்னல்களுக்கு ஆட்படுவதற்குக் காரணமே, தங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை நாடார் மக்கள் உணர்ந்தனர். அதன் பொருட்டு உருவாக்கப்பட்டதுதான் `நாடார் உறவின் முறை' என்ற அமைப்பு.அனைத்து வழக்குகளிலும் போலீசைத் தலையிடவிடாமல் உறவின் முறையே விசாரித்து தீர்ப்பு கூறியது.

நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, தங்களது பரம்பரை பழக்கவழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் மாற்றியமைக்க முற்பட்டனர். ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் தொடங்கினர். பெண்கள் பாரம்பரியமான கனத்த ஆபரணங்களையும், காது வளையங்களையும் தவிர்த்தனர்.

விதவைகள் வெள்ளைச் சீலை கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் மறுமணம் தடை செய்யப்பட்டது. (இப்போது மறுமணத்தை ஆதரிக்கிறார்கள்.) பெண்கள் தண்ணீரை தலையில் எடுத்துச் செல்வதைத் தடுத்து, இடுப்பில் எடுத்துவரப் பணிக்கப்பட்டனர்.

திருமண ஊர்வலங்களின்போது செல்வ செழிப்பினைக் காட்ட பல்லக்குகளைப் பயன்படுத்தினர். பெரும்பாலான நாடார்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள். சிலர் வைணவர்களாகவும் இருந்தனர். முருகக் கடவுள் நாடார் சமூகத்தின் சிறப்பு தெய்வம். பத்ரகாளி, மாரியம்மன், அய்யனார் என்று சிறுதெய்வ வழிபாடும் இவர்களிடம் உண்டு. கோயில் திருவிழாவின்போது முளைப்பாரி எடுப்பது பிரசித்தம்.

நாடார் திருமணத்தின்போது தாய்மாமனுக்கு முக்கியத்துவம் உண்டு. கன்னியாகுமரி, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பெண் வீட்டார் கிலோ கணக்கில் நகை போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எவ்வளவு பெரிய சொந்தம் இருக்கிறது என்பதைக் காட்ட திருமணத்தின்போது நடத்தப்படும் `அலந்தரம் செய்வது' என்ற சடங்கு மிக முக்கியமானது.

கோயில்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கினர். சிவன் கோயில்கள் கட்டினர். தங்களை சத்திரியர்கள் என்று அடையாளம் காணும்படி நடந்துகொண்டனர்.நாடார்குலத்தின் பொருளாதார உயர்வும், பொதுமதிப்புக்காக அவர்கள் செய்த முயற்சியும் உயர்சாதிக்காரர்களுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் பிரச்னை உருவானது.

அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது. இக்கலவரத்தை நாடார் இனமக்கள் `சிவகாசிப் போர்' என்றே அழைக்கிறார்கள்.

ஆலயத்திற்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய தங்களுக்கும் உரிமை வேண்டும் என்று நாடார்கள் கேட்டதுதான் கலவரத்திற்குக் காரணம். மற்ற ஆதிக்க சாதியினர், `நாடார்கள் கோயில்களுக்கு நுழையவே கூடாது' என்று எதிர்த்ததோடு கோயிலையும் மூடிவிட்டார்கள். அன்று இரவே கோயில் கதவை உடைத்து நாடார்கள் கோயிலுக்குள் புகுந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதனால் கொதித்தெழுந்த ஆதிக்க சாதியினர் நாடார் வீடுகளுக்குத் தீ வைத்தனர். சிவகாசி நகரில் இருக்கும் நாடார்களை வேரோடு கருவருக்கவேண்டும் என்ற மூர்க்கத்தனத்தோடு சிவகாசி மீது தாக்குதல் நடத்தினர். சுற்று கிராமங்களைக் கொள்ளை அடித்தனர். ஆனால் இதில் நாடார் இனமக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி எதிர்த்துப் போராடினார்கள். கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். பலர் மடிந்தார்கள். இறுதியில் நாடார்களே இந்தப் போரில் வெற்றி பெற்றார்கள்.

1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோது, 150 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாயிருந்தன. சுமார் 4000 வீடுகள் அழிக்கப்பட்டன. இரு தரப்பிலும் பலர் இறந்து போனார்கள். சிவகாசியில் நடந்த சோக சம்பவத்தை இந்தியா முழுவதிலுமுள்ள பத்திரிகைகள் முதற்பக்கத்தில் வெளியிட்டு நாடார்களின் நியாயத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லின.

நிலைமைகளை நன்கு உணர்ந்த நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன், வி.வி.ராமசாமி (நீதிக்கட்சி) போன்றோர் அரசியல் கதவைத் திறந்துவிட்டனர். தலைவர் கோசல்ராம் தலைமையில் ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் உப்பு சத்தியா கிரகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேசிய விடுதலைக்காக காம ராஜர் நடத்திய போராட்டங்களும் அரசியலில் அவர் காட்டிய வழிகாட்டல்களும் நாடார் சமூக மக்களை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியது.

நாடார் சமூகம் கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தையே முழுவதுமாக நம்பியிருக்கவில்லை. நெல்லை மாவட்டத்தில் கிருஸ்தவ மதத்திற்கு மாறிய நாடார்களின் முன்னேற்றத்திற்காக மதகுருமார்கள் கல்வியின் சிறப்பினை அவர்களுக்குக் கற்பித்தனர். 19ஆம் நூற்றாண்டுகளில் `மகமை நிதி' உதவியால் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளைத் தென்மாவட்டங்களில் தொடங்கினர். 20ஆம் நூற்றாண்டில் பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி உள்ளிட்ட பல முக்கிய கல்லூரிகளையும் தொடங்கினர். நாடார்கள் சமூகத்தினரோடு மற்ற சமூகத்தினரும் அதனால் பலன் அடைந்தனர்.

``நாடார்கள் நாடாண்டவர்கள் என்பதை இன்று நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். இடைவிடா உழைப்பினாலும் சிக்கனத்தாலும் நாடார்கள் சாதாரண மளிகைக்கடை முதல் கம்ப்யூட்டர் துறை வரை உலகளவில் முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற சமூகத்தவரும் பயன்பெறும் வகையில் நாடார் சமூகம் உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை. நாடார்களின் வெற்றி ரகசியமும் அதுவே'' என்கிறார் சென்னை, நெல்லை_தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் க்ஷி.ஜி.பத்மநாபன் நாடார்.

உண்மைதான். இன்று நாடார்கள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தங்கள் செல்வாக்கினை நிலைநாட்ட ஆரம்பித்துவிட்டனர்..

`உழைத்தால் உயரலாம்' என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.

மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்' என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான' மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்' திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்' என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே.

`தினத்தந்தி'யைத் தந்து தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பாமரர்கள் எழுத்துக்கூட்டி தமிழைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார். நாடார் மகாஜன சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தவர் பொறையார் ரத்னசாமி நாடார். நம் நாட்டிற்கு `தமிழ்நாடு' என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த சங்கரலிங்க நாடாரின் தியாகத்தை மறக்கமுடியாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது குலசேகரபட்டினத்தில் லோன் துரை என்ற வெள்ளைக்காரனைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற காசிராஜன், தூக்குமேடை ராஜகோபால் ஆகியோரின் வீரம் பலருக்கு எடுத்துக்காட்டு. வானம் பார்த்த சிவகாசி பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளையும் பட்டாசு தொழிற்சாலைகளையும் உருவாக்கி `குட்டி ஜப்பான்' என்று சொல்ல வைத்து அனைத்து இனமக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்தவர்கள் சிவகாசி பி.அய்யநாடாரும் ஏ.சண்முகநாடாரும் ஆவர்.

நீதிக்கட்சி வி.வி.ராமசாமி, விருதுநகர் சீமான் எம்.எஸ்.பி.ராஜா. வெள்ளைச்சாமி நாடார், ஏ.வி.தாமஸ், ஜெயராஜ் நாடார், டாக்டர் சந்தோஷம் என்று உழைப்பில் உயர்ந்த நாடார்களில் எண்ணற்றவர்களைக் காட்டலாம்.காவல் துறைக்கு பெருமை சேர்த்த அருள் ஐ.ஜி.யை எந்த சமூகத்தவரும் மறக்கமாட்டார்கள்.

இன்று கணினி உலகில் நுழைந்து உலகப் பணக்காரர்களுள் ஒருவராகத் திகழும் சிவ்நாடார், பழுத்த அரசியல் தலைவர் குமரிஅனந்தன், அரசியல் தலைவரும் நடிகருமான சரத்குமார் என்று பலரை இந்த சமூகத்தின் நட்சத்திரங்களாகக் காட்டலாம்.

நன்றி இரா. மணிகண்டன் மற்றும் குமுதம் இதழ்கள் 31.12.2008 & 07.01.2009

மீண்டும் டோண்டு ராகவன். தலித்துகளைப் போலவே நாடார்களும் சொல்லொண்ணா வன்கொடுமைகளை அனுபவித்தவர்கள். ஆனால் தலித்துகள் அப்படியே இருக்கிறார்கள், நாடார்களோ பெருமிதம் தரும் அளவுக்கு முன்னேறியுள்ளனர் என்பதை பார்க்கும்போது முன்னவர்களது நிலை வேதனை அளிக்கிறது. ஒரு முதல் முயற்சியாக இரட்டைக் குவளை முறையை எப்படி எதிர்க்கொள்ளலாம் எனக் கூறிய ஆலோசனைக்கு எவ்வளவு கேலியான பின்னூட்டங்கள்? நான் சந்தித்த ஒரு தலித் நண்பரிடம் இப்பதிவைப் பற்றி கூறியபோது அவர் அரசு டீக்கடை வைத்து தருமா என ஒரு அடிப்படை கேள்வியே கேட்டார். அவ்வாறு எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பார்த்து நின்றால் சுயமரியாதைக்காகாது என்பதை அவர் புரிந்து கொள்ள தயாரில்லை. அதே மாதிரி நாடார்களும் நின்றிருந்தால் இப்போதைய அவர்களது உன்னத நிலை கனவில்கூட கிட்டியிராது என்பதே நிஜம்.

இம்மாதிரி நேர்மறையான எண்ணங்களை உள்ளடக்கிய தொடரை எழுதியதற்கு குமுதம் பாராட்டப்பட வேண்டும். அதைவிடுத்து அது என்னவோ ஜாதியை தூக்கி நிறுத்துகிறது எனக் கூறுவது வெறும் தட்டையான எண்ணம். இத்தகைய முன்மாதிரிகளை எத்தனை முறை எடுத்தியம்பினாலும் போதாது என்பதே எனது ஆணித்தரமான கருத்து.

நான் இட்ட ராம்நகரி பதிவிலிருந்து சில வரிகளை இங்கு காட்டுவேன். “இடையில் (நாவிதர் வகுப்பைச் சார்ந்த ராம்நகரியின்) தந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லாது போக அவ்ரை மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். அங்கிருக்கும் மருத்துவர் ராம்நகரியின் தூரத்து உறவுக்காரர். ராம்நகரி அவரிடம் "நல்ல வேளை நம்ம சாதி ஆள் நீ இங்க இருக்க.." என்று இழுக்கும்போதே, மருத்துவர் ஒரு மாதிரி சங்கடத்துடன் கனைத்து விட்டு அவரை தனியாக அழைத்து சென்று தனது சாதி யாருக்கும் அந்த மருத்துவமனையில் தெரியாது, ஆகவே தயவு செய்து அங்கு அதைப் பற்றி பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். பிறகு வரும் ஒவ்வொரு காட்சியிலும் இந்த சாதி பிரச்சினை ராம் நகரியை ஒவ்வொரு மாதிரி பாதிப்பதையே பல வகையில் காண்பிக்கிறார்கள்”.

நாடார்கள் தம் முயற்சியால் பெற்ற பெருமை இஸ்ரவேலர்கள் தம் நாட்டையே உருவாக்கினதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. அவர்களும் நாடார்கள் போலவே தமக்குள்ளேயே ஒற்றுமையாக இருந்து முன்னேறினர். முன்னேற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் நாடார்களுக்கு எனது பெரிய சல்யூட். இந்த வலைப்பூவை இப்போதுதான் பார்த்தேன். நல்ல முயற்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

101 comments:

குடுகுடுப்பை said...

உங்களுடன் சேர்ந்து நானும் வைக்கிறேன் பெரிய வணக்கம்.தலித் சமூகமும் இப்படி ஒரு பொருளாதார முன்னேற்றத்தை அடைய அவர்களுடைய தனிப்பட்ட முயற்சி தேவை.ஆனாலும் பிராமணர்கள் தங்களுடைய அறிவை அவர்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க ஏதாவது செய்யவேண்டும். உதாரணமாக பிராமணர்கள் தலித்துகளை தானாக முன்வந்து அர்ச்சகர் ஆக்கவேண்டும்.வன்கொடுமை செய்யும் உயர்சாதியினருக்கு நெத்தியில் அடிப்பது இவர்களை தத்தெடுங்கள்.

சாதி அடையாளம் ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல, ஆனால் சாதிகளுக்குள் ஏற்றத்தாழ்வை குறைப்பது அறிவுஜீவிகள் நினைத்தால் சாத்தியமே

Anonymous said...

கட்டுரையில் பல தவறுகள். முதலில் தமிழகத்தில் வருண அமைப்பு வடக்கே இருந்தபடி அப்படியே இருந்ததில்லை - அதாவது இங்கே எவருமே ”சத்ரியர்” கிடையாது. பார்ப்பனர்கள், வைசியர்கள், சத்ரியர்கள், சூத்திரர்கள் என்று வடவர்களின் சதுர்வர்ண சமூக அமைப்பு முறை இங்கே எவரால்/எதற்காக/எப்படி/எப்போது/ஏன் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது (அ) திணிக்கப்பட்டது என்பது ஒரு நீண்ட விளக்கத்தால் தான் விளங்க வைக்க முடியும் - இங்கே ( உங்கள் பதிவில் ) அது சாத்தியம் இல்லை.

ஒன்றே ஒன்று மட்டும் - மக்கள் தலைவர்கள் உருவாவது சாதியின் அடிப்படையில் என்கிற தொனியில் அமைந்திருக்கிறது. அதற்கு என் கண்டனம்.

மற்றபடி உங்கள் ஆட்டத்தை நீங்கள் செவ்வனே தொடரலாம் - ஸ்டார்ட் ம்யூசிக்!!

வால்பையன் said...

இஸ்ரேல் மாதிரி நாடார்களுக்கும் தனிநாடு கொடுத்துரலாமா?

சமத்துவம் பிறக்க சாதீ ஒழிந்தே ஆகவேண்டும்!

nagai said...

only the hard work succeed

வால்பையன் said...

சாதியத்தை எதிர்த்ததை தட்டையான எண்ணங்கள் என்று கூறுவதை கண்டிக்கிறேன்.

சாதியை ஆதரிப்பது தான் தட்டையான பிற்போக்கான எண்ணம்.

சாதியால் நீங்கள் பெருமையடையலாம்,
ஆனால் சாதியால் என்ன பயன் என்று நீங்கள் தனியாக ஒரு பதிவு போட்டே ஆகவேண்டும்.

Anonymous said...

இந்த கட்டுரையில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவில் IT revolution ஏற்படுவதற்கு காரணமான (pioneer) வருமான HCL group chairman சிவ நாடரை குறிப்பிடாமல் விட்டு விட்டார்கள்.

nagai said...

please give kumudam article link about nadars

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
நாடார்கள் வன்கொடுமைக்கு உள்ளானது நிஜம். அதை எதிர்த்து அவர்கள் போராடி இப்போதைய உயர்நிலையை அடைந்தது நிஜம். அதை ஆதரிசமாக வைத்து தலித்துகளும் தம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் நிஜம்.

மற்றப்படி எல்லா குப்பையையும் கார்ப்பெட்டுக்கு கீழே பெருக்கி மறைப்பதுபோல சாதீயக் கொடுமைகள் இருப்பதை உணர மறுத்து அதற்கு முற்போக்கு சாயம் பூசுவது முட்டாள்தனம். அதற்கு நான் துணைபோவதாக இல்லை. சாதியமே இல்லை என முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்து வாழ்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

ஒரு வெற்றிகரமான போராட்டத்துக்கு குமுதம் அங்கீகாரம் தந்து கட்டுரை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இதிலெல்லாம் திசை திரும்பாமல் தலித்துகள் தங்கள் முன்னேற்றத்தைப் பார்த்து கொள்ளட்டும் என்பதே என் விருப்பம். கூறுபவர்களுக்கென்ன, கூறிவிட்டு தம் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

நாடார் சமுகம் பற்றிய உங்களின் பதிவு பல சரித்திர உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அவர்களின் கடின உழைப்பு,தனனம்பிக்கை,விடா முயற்சி,ஒற்றுமை உணர்வு,அநீதி கண்டு பொங்கும் பேராண்மை,துணிச்சல்,நற்பண்புகள் அனைத்தும் பாராட்டப் படவேண்டியவை என்று சொன்னால் அது மிகையாகாது.

கன்னியாக் குமரி மாவட்டத்தில் அந்த சமுகத்தினர் ,கேரளா உயர் சமுகத்தினரால் கொடுமைம் படுத்தப் பட்டதை பற்றிய கதைகள் ஏராளம் உண்டு.

மாணவப் பருவத்திலிருந்து நாடார் குல நண்பர்களின் வளர்ச்சியை அருகிலிருந்து பார்த்த பலருள் நானும் ஒருவன்.

சிவகாசி நாடார்களின் சில இல்லங்கள் வழிபாடு நடத்தும் கோவில்கள் போல் இருக்கும்.

வாணிபத்தில் இன்று சென்னையில் பிரபலமாய் உள்ள திருநெல்வேலி மாவட்ட நாடார் குலத் திலகங்கள்.

ரங்க நாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் ராஜ ரத்னம்,யோக ரத்னம்,செல்வ ரத்னம்

சரவண பவன் ஹோட்டல் குருப்ஸ் அதிபர் ராஜ கோபால்

வசந்த் அன்கோ அதிபர்-வசந்த்

விஜிபி சகோதரர்கள்

அனைவரும் திருநெல்வேலி/தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சிறு கிராமங்களில் ,வருமானம் குறைந்த குடுமபங்களில் இருந்து சென்னைக்கு சிறு வயதில் வந்து, தொழிலாளியாய் தனது வாழ்க்கையை தொடங்கி,தனது கடுமையான உழைப்பால் இன்றைய அதி உன்னத நிலயை அடைந்துள்ளார்கள்.

கடுமையான உழைப்பே உன் மறு பெயர்தான் நாடார் குலமா

ரவி said...

அப்படியே முதலியார், தேவர் ஆகிய சமூகத்தையும் பிரிச்சு மேயவும்...

வால்பையன் said...

சாதி இருக்கலாம் அல்லது இருக்கிறது,
ஆனால் அது தேவையா?
தேவையென்றால் ஏன் தேவை?
தேவையில்லாத பட்சத்தில் அதை ஏன் கொண்டாடவேண்டும்?

ஒரு தலித் ஒடுக்கப்படுவது பொருளாதரத்தினாளோ அல்லது அவனது படிப்பறிவினாலோ இருந்தால் சரி(அது கூட தவறு தான், அதை பின்னர் விவாதிக்கலாம்), ஆனால் தாழ்த்தபட்ட சாதி என்று முத்திரை குத்துவது தானே பிரச்சனை.

யாருக்குமே சாதிய அடையாளங்கள் இல்லையென்றால் ஏது ஏற்ற தாழ்வு.

உங்களுடய சாதிய அடையாளங்கள் தயவுசெய்து உங்களோடவே போகட்டும். வரும் சமுதாயம் சகோதரத்துவதுடன் வாழட்டும்

வால்பையன் said...

//செந்தழல் ரவி said...
அப்படியே முதலியார், தேவர் ஆகிய சமூகத்தையும் பிரிச்சு மேயவும்..//

யாரையும் மனுசனா பார்க்கதெரியாதா உங்களுக்கு

சாதி,சாதி,சாதி

வாய்ல நல்லா வருது......

dondu(#11168674346665545885) said...

//சாதி இருக்கலாம் அல்லது இருக்கிறது, ஆனால் அது தேவையா?
தேவையென்றால் ஏன் தேவை?//

ஒரு முழு சாதியையே ஒடுக்கும்போது அதில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளேயே ஒத்துழைத்து முன்னுக்கு வந்தது நாடார்கள் விஷயத்தில் நடந்தது. அது சரித்திர உண்மை. ஆக அவர்களுக்கு சாதி தேவைப்பட்டது. இன்னும் தேவைப்படுமா என்பது அவர்களே முடிவு செய்ய வேண்டிய விஷயம். போலித்தனமாக சாதிக் கொடுமையால் அதிகம் பாதிக்கப்படாதவர்கள் எல்லாம் பேசுவதை கேட்டு பாதிக்கப்பட்டவர்கள் செயலாற்ற வேண்டும் என ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும்?
சாதி இல்லை எனக் கூறுவது ஒரு ஃபேஷனாகப் போயிற்று. அதையும் மற்றவர்களுக்குத்தான் நிர்ணயிக்கிறார்கள். தங்களுக்கென்று வரும்போது உறவு முறையிலேயே திருமணம் செய்ய அதே சாதி சங்கங்களுக்கேதான் செல்கின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

குடுகுடுப்பை said...

வால்பையன் said...

சாதி இருக்கலாம் அல்லது இருக்கிறது,
ஆனால் அது தேவையா?
தேவையென்றால் ஏன் தேவை?
தேவையில்லாத பட்சத்தில் அதை ஏன் கொண்டாடவேண்டும்?

ஒரு தலித் ஒடுக்கப்படுவது பொருளாதரத்தினாளோ அல்லது அவனது படிப்பறிவினாலோ இருந்தால் சரி(அது கூட தவறு தான், அதை பின்னர் விவாதிக்கலாம்), ஆனால் தாழ்த்தபட்ட சாதி என்று முத்திரை குத்துவது தானே பிரச்சனை.

யாருக்குமே சாதிய அடையாளங்கள் இல்லையென்றால் ஏது ஏற்ற தாழ்வு.

உங்களுடய சாதிய அடையாளங்கள் தயவுசெய்து உங்களோடவே போகட்டும். வரும் சமுதாயம் சகோதரத்துவதுடன் வாழட்டும்
//

நாம் சொன்ன மாத்திரத்தில் போகப்போவதில்லை,பொருளாதார முன்னேற்றத்தை கொண்டு வந்து விட்டால் நீ தாழ்ந்தன் என்று வன்கொடுமை செய்யும் வாய்ப்பு இல்லை.நாடார்கள் முன்னேறியதைப்போல தலித்துகள் வெற்றி பெற சரியான வழிகாட்டுதல் தேவை.ஒரு நாடாரோ,பிள்ளையோ,தேவரோ கலப்பு மணம் செய்தால் பிரச்சினை வராது ஆனால் தலித்துடன் மேலே குறிப்பிட்ட சாதிக்காரர்கள் கலப்பு திருமணம் நடந்தால் கொலைகள் சாதாரணம்.இதனை ஒழிக்க ஒட்டு மொத்த தலித் முன்னேற்றம் தேவை.நான் இந்த சாதிக்காரன் தலித் பெருமையாக சொல்லும் நேரம் சாதிகள் ஒழியும் ஆரம்பகட்டம். சாதியை சட்டம் போட்டு ஒழிக்க முடியாது.

வால்பையன் said...

//ஒரு முழு சாதியையே ஒடுக்கும்போது அதில் உள்ளவர்கள் தங்களுக்குள்ளேயே ஒத்துழைத்து முன்னுக்கு வந்தது நாடார்கள் விஷயத்தில் நடந்தது.//


மீண்டும் ஒரு முறை
”ஒரு முழு சாதியே ஒடுக்கப்படும் போது” ஏன் சாதி,அது இருந்தால் தானே ஒடுக்கப்படுகிறது.
பிறகு ஏன் அது.
தூக்கி தூரப்போட வேண்டியது தானே!

செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது,அதில் சாதி என்னும் சுமையையும் தூக்கிகொண்டு செல்ல வேண்டுமா?

சாதியை ஆதரிப்பது யார்?
ஒடுக்கப்பட்டவர்களா? அவர்கள் யாரால் ஒடுக்கப்படுகிறார்கள், சாதியை ஆதரிப்பவர்களால்.

நீங்கள் அந்த ரகம் இல்லை என எனக்கு தெரியும்.

ஆனால் ஊருக்கு தெரியாது!

சாதி வேண்டாம்
சாதி வேண்டாம்
சாதி வேண்டாம்

வால்பையன் said...

//நான் இந்த சாதிக்காரன் தலித் பெருமையாக சொல்லும் நேரம் சாதிகள் ஒழியும் //

நான் மனிதன் என்று சொன்னால் வாய் வழிக்குமா?

காதல் கலப்பு திருமனங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன!

சாதிய ஆதரவாளர்கள் சில வருடங்கள் சும்மா இருந்தாலே போதும். சாதி ஒழிந்து விடும்.

நீ தலித் முன்னேறு என்று சொன்னால் தன்நம்பிக்கை ஏற்ப்படாது.

அவன் தோளில் கையை போட்டு அவனையும் சமநிலைக்கு கொண்டு வருவோம்.

அவன் முன்னேறியவன் ஆகிவிடுவான்.

சாதியத்தால் ஏற்ப்படும் தாழ்வுமனப்பான்மை அவனை விட்டு அகலும், அதைவிட்டு நீ தலித் கஷ்டப்பட்டு தான் முன்னேரனும், யாரையும் எதிர்பார்க்காதே என்பதெல்லாம் வெட்டி கூச்சல்.

கூண்டில் அடைத்து வைத்து மயிலை ஆட சொல்வது போல் இருக்கிறது.

இங்கே யாரும் தலித் இல்லை, யாரும் உயர்ந்த சாதி இல்லை, எல்லோருக்கும் எல்லாவற்றிர்க்கும் உரிமை உண்டு

dondu(#11168674346665545885) said...

//மீண்டும் ஒரு முறை
”ஒரு முழு சாதியே ஒடுக்கப்படும் போது” ஏன் சாதி,அது இருந்தால் தானே ஒடுக்கப்படுகிறது.
பிறகு ஏன் அது.
தூக்கி தூரப்போட வேண்டியது தானே!//
நாடார்கள் ஒடுக்கப்பட்ட 19-ஆம் நூற்றாண்டின் சமூக நிலைப்பாடுகளை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதையே உங்கள் பின்னூட்டம் காட்டுகிறது. நாடார்கள் தம் சாதியை சொல்லிக் கொள்ளாவிட்டாலும் நீ நாடான் என சொல்லி சொல்லி அடித்தார்கள். அதுவும் சரித்திர உண்மை. ஆகவே தங்களுக்குள் ஒத்துழைத்து முன்னேறுவதுதான் அவர்கள் செய்திருக்க இயலும், அதையே செய்யவும் செய்தார்கள்.

என்னையே எடுத்து கொள்ளுங்கள், நான் தாம்பிராஸ் மீட்டிங் கூட செல்லவில்லை. இத்தனைக்கும் எனது வீட்டிற்கு எதிரில் இருக்கும் கல்யாண மண்டபத்தில்தான் அது நடந்தது. அப்படிப்பட்ட நானே இணையத்தில் எவனாவது ஆவூன்னா பாப்பான்னு சொன்னா வந்து நின்னு என்னடா ஜாட்டான் என கேட்கிறவன்தானே. குட்ட குட்ட குனிவது மடத்தனம்.

நம் இணையத்துலேயே எடுத்து கொள்ளுங்களேன். இம்மாதிரி எல்லா தீமைக்கும் பாப்பானைத்தானே திட்டுகிறார்கள்? அதை ஏற்காமல்தானே நானே சண்டை போடுகிறேன். அதையே நாடார்கள் விஷயத்தில் பார்த்தால் ஆயிரம் மடங்கு அக்கிரமம் அவர்களுக்கெதிராக நடந்தது. அவர்கள் ஒன்றுபட்டு எதிர்த்தார்கள். வென்றார்கள். அவ்வாறே தலித்துகளும் செய்தால்தான் அவர்களும் உருப்படுவார்கள் என்பதே எனது இப்பதிவின் தீம்.

மற்றப்படி சாதி வேண்டாம் என திரும்பத் திரும்ப சொல்ல ஆசைப்பட்டால், அதே தி.நகர் பாருக்கு சென்று சிக்கன் லெக்பீசை கடித்து கொண்டு பியரை அடித்து கொண்டே வேண்டுமானால் பேசுவோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//இங்கே யாரும் தலித் இல்லை, யாரும் உயர்ந்த சாதி இல்லை, எல்லோருக்கும் எல்லாவற்றிர்க்கும் உரிமை உண்டு//
கேட்க அழகாக இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது உண்மை நிலை அல்ல. நீங்கள் கூறுவதெல்லாம் ஏட்டு சுரைக்காய். கவைக்குதவாது. நாடார்கள் முன்னேற முடிந்தபோது தலித்துகளும் அதே மாதிரி முன்னேற என்ன தடை. இம்மாதிரி சாதி மறுப்பை சொல்லி மனசாட்சிக்கு ஆறுதல் தேடுபவர்களால் திசை திருப்பட்டு தலித்துகள் அப்படியே இருப்பதுஇ அவர்களுக்கு நல்லதில்லை.

சாதி இருக்கிறது, நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். இருப்பதை உனக்கு சாதகமாக பொருத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

நாடார்கள் செய்தார்கள். தலித்துகளும் செய்ய வேண்டும். அப்படியாவது முன்னேறட்டுமே. வேடிக்கை பார்ப்பவர்கள் தம் குற்ற உணர்ச்சியை மறைக்க போலி சமத்துவம் பேசினால் தலித்துகளின் உறுதிதான் பாதிக்கப்படும். அம்மாதிரியே கடசி 60 ஆண்டுகளாகப் பேசித்தான் அவர்கள் இன்னும் இரட்டைக் குவளை கொடுமையிலிருந்து கூட மீள முடியாமல் இருக்கிரார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

///மற்றப்படி சாதி வேண்டாம் என திரும்பத் திரும்ப சொல்ல ஆசைப்பட்டால், அதே தி.நகர் பாருக்கு சென்று சிக்கன் லெக்பீசை கடித்து கொண்டு பியரை அடித்து கொண்டே வேண்டுமானால் பேசுவோம். ///

சுவீடனில் அர்போகா என்ற பியர் உள்ளது...

அதை குடித்தவுடன் மப்பாகிவிடுகிறது..

இதற்கும் சாதிக்கும் எதாவது சம்பந்தம் உண்டா ?

வால்பையன் said...

//தி.நகர் பாருக்கு சென்று சிக்கன் லெக்பீசை கடித்து கொண்டு பியரை அடித்து கொண்டே வேண்டுமானால் பேசுவோம். //

எங்கேயிருந்தாலும் சொல்வேன்!
பார்ப்பனியம் கண்டிப்பாக கண்டிக்கதக்கது, ஆனால் பார்பனியர்கள் எல்லோரும் பார்பனியதை ஆதரிப்பதில்லை.

அதே நேரம் பார்ப்பனனை திட்டுவதால் மட்டும் தலித்தியம் முன்னேறி விடுமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஆக்க பூர்வ சந்தினைகள் இல்லாமல் வெட்டி சண்டை, தெரு நாய்களைவிட கேவலமானது.

உங்களை பார்ப்பனர் என்று எதிர்ப்பதையும் கண்டிக்கிறேன்.
நீங்கள் சாதியை ஆதரிப்பதையும் கண்டிக்கிறேன்.

ஒருமனிதனாக நான் என்றும் உங்கள் அன்புக்குறியவன்

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
//பார்ப்பனியம் கண்டிப்பாக கண்டிக்கதக்கது, ஆனால் பார்பனியர்கள் எல்லோரும் பார்பனியதை ஆதரிப்பதில்லை.//
உயர்சாதீயம் என்னும் சொல் இருக்கும்போது பார்ப்பனீயம் என்னும் சொல்லை போடுவதையே நான் ஆதரிக்கவில்லை. கடுமையாக எதிர்க்கிறேன். மற்றப்படி நாடார்கள் ஒரு சரித்திர நிர்ப்பந்தத்தில் இருந்து செயல்பட்டுள்ளார்கள். அது வெற்றிபெற்றுள்ளது. அங்கு போய் ஆஷாடபூதித்தனமாக சாதியில்லை எனக் கூறுவதால் உங்கள் மனதுக்கு சாந்தி ஏற்பட்டால் அப்ப்டியே போகட்டும். மற்றப்படி நாடார்களுக்கும் தலித்துக்கும் வேண வேலைகள் பாக்கியிருக்கின்றன.

உங்களைப்போல இருப்பவர்கள் சாதியில்லை எனச் சொல்வதை நம்பி செயலாற்றாது இருந்தால் தலித்துகளுக்கு சங்குதான் என்பதும் நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

வால்பையன் said...

//நாடார்கள் செய்தார்கள். தலித்துகளும் செய்ய வேண்டும். அப்படியாவது முன்னேறட்டுமே. வேடிக்கை பார்ப்பவர்கள் தம் குற்ற உணர்ச்சியை மறைக்க போலி சமத்துவம் பேசினால் தலித்துகளின் உறுதிதான் பாதிக்கப்படும். அம்மாதிரியே கடசி 60 ஆண்டுகளாகப் பேசித்தான் அவர்கள் இன்னும் இரட்டைக் குவளை கொடுமையிலிருந்து கூட மீள முடியாமல் இருக்கிரார்கள்.//


நீயாகவே முன்னேறிக்கொள் என்கிறீர்கள்.

நாடார்கள் செய்தார்கள் என்று சமீபத்தில் 1889-ல் நடந்தை சொல்கிறீர்கள், அன்று சாதிகளின் ஆதிக்கம் இருந்தது, இப்போது 2009 எவனாவது நீ என்ன சாதி என்று கேட்டால் கொட்டையை நசுக்கிவிடுவேன்.


தலித்துகள் டீக்கடை வைப்பார்கள், நீங்கள் அங்கே டீ குடிப்பீர்கள்.

ஆனால் பின்னாளில் தலித்துகள் டீ கடை வைக்கும் சாதி என்று ஒரு முறையை உருவாக்கிவிடுவார்கள்.

நல்ல கல்வியை எல்லோருக்கும் கொடுப்போம். எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்போம். எல்லோரும் சகோதரர்களாய் இருப்போம்.

டீ கடை பழைய புராணம், புதுசா எதாவது கதையை சொல்லுங்கள்.


(உங்களிடன் எனக்கு பிடித்ததே, உங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பது தான், நான் மட்டும் என்னவாம். சாதியை ஒழிக்காமல் ஓயப்போவதில்லை)

வால்பையன் said...

//சுவீடனில் அர்போகா என்ற பியர் உள்ளது...

அதை குடித்தவுடன் மப்பாகிவிடுகிறது..

இதற்கும் சாதிக்கும் எதாவது சம்பந்தம் உண்டா ? //

உண்டு.உழைக்கும் சாதிக்கு மப்பு அவ்வளவு சீக்கரத்தில் ஏறாது, அப்படியானால் நீங்கள் என்ன சாதி
(சே,சே சோம்பேறியெல்லாம் இல்லை)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

நாடாண்ட நாடார்கள் என்று கூறிக்கொள்ளும் குடும்பத்தில் பிறந்த நண்பனொருவன் இந்தப் பதிவைப் படித்து விட்டுக் கூறியவை.


//தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் //
என்ன பினாத்தல் இது?

ஏன் இப்படிச் சாதி அடையாளத்தைச் சுமக்க வேண்டும்? (அவன் 'என்ன மயிருக்கு' என்று சொன்னான். நான் நாகரீகம் கருதி...). தாங்கள் செய்த நற்செயல்களால் புகழடைந்தவரை ஏன் இப்படிப்பட்ட கட்டுரையில் இழுக்க வேண்டும்?

//தாங்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க//
சத்திரிய குலத்தைச் சேர்ந்தவங்களா? எவன் (எந்தக் கேனையன்) சொன்னான்? சும்மா முதுகு சொறியறதுக்கும், நாங்களும் நால்வர்ணத்தில் மேல் வர்ணம்தான்னு புளுகறதுக்கும், நாங்க போட்டு மிதிக்கறதுக்கும் கீழ ஆள் இருக்குன்னு காட்டிக்கறதுக்கும், கைல கொஞ்சம் காசு வந்தவுடனே அடுத்து சமூக மரியாதை வேணும்னா இந்த மாதிரி மேல்தட்டு நடிப்பு வேணும்னு கட்டி விட்ட கதை. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான்...

இதில அந்தக்காலத்தில நாமளும் பூணூல் போட்டிருந்தோம்னு சில பெருசுக பீத்தல் வேற.


//நாடார் மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க.. ஆண்கள் பார்ப்பனர் போன்று வேட்டி கட்டவும், பூணூல் போடவும் //
இங்க வருதுல்ல பூனைக்குட்டி வெளிய. காசு வந்தவுடனே பெரிய(!) மனுஷ(!!) வேஷம் போட்டுறணும்.

//நாடார்கள் தங்களுக்குப் பாதுகாப்பு பெற அரசியல் அதிகாரத்தில் நேரடி அங்கம் பெற முயன்றனர்.
பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன், வி.வி.ராமசாமி (நீதிக்கட்சி) போன்றோர் அரசியல் கதவைத் திறந்துவிட்டனர். தலைவர் கோசல்ராம் தலைமையில் ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களில் உப்பு சத்தியா கிரகங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய தேசிய விடுதலைக்காக காம ராஜர் //
ஆக இவங்கெல்லாம் நாடார்களுக்குப் பாதுகாப்பு வேணும்னுதான் இதெல்லாம் செஞ்சாங்க? நல்ல பொழப்புய்யா... (இதுக்கு ...)

நீ இந்தச் சாதி, இந்த வர்ணம். அதுக்காக நீ பெருமைப்படு. நான் இந்தச் சாதி, இந்த வர்ணம். இதுக்காக நான் பெருமைப் படறேன்னு சொல்லி இந்தக் கருமத்தைப் புடிச்சுத் தொங்கி, அதைப் பத்திரமாப் பாத்துக்கறதுல யாருக்கு, என்ன நன்மை? எல்லா மயிரானுகளுக்கும் தனக்கும் கீழ சில பேர் இருக்கான்னு சொல்லிக்கறதுலதான் என்னபெருமை!


//நாடார்கள் தம் முயற்சியால் பெற்ற பெருமை இஸ்ரவேலர்கள் தம் நாட்டையே உருவாக்கினதற்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல.//
அட, இன்னொரு பூனைக்குட்டி!

Anonymous said...

நாடார் சமூகத்தில் தங்கள் சமூகத்துக்குள் கை தூக்கி விடும் பழக்கம் உண்டு. கல்வி நிறுவனங்களை அதிகமாக அவர்கள் நிறுவியதே அந்த இனத்தின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உதவியது. நாடார் உறவின்முறை என்று அதற்கு கட்டுப்பட்டு காவல்துறையினர் உள்ளே நுழையாத கிராமங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் உண்டு.

தலித் மக்கள் முன்னேற அவர்கள் நிறைய கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும். முழுமையான கல்வி அறிவே அந்த மக்களின் முன்னேற்றத்துக்கு உதவும். தலித் மக்களில் முன்னேறியவர்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

வால்பையன் said...

//உங்களைப்போல இருப்பவர்கள் சாதியில்லை எனச் சொல்வதை நம்பி செயலாற்றாது இருந்தால் தலித்துகளுக்கு சங்குதான் என்பதும் நிஜம்.//

என்னவாக செயலாற்றுவது,
இணையம் மற்றும் சில இடங்கலை தவிர சாதியியம் ஒழிந்துவிட்டது.

எல்லோரும் தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய செயலாற்றி கொண்டு தான் இருகிறார்கள்.

பார்பனீயம் என்பதற்கு சரியான அர்த்தம் எனக்கு தெரியாது, ஆனால் அது தீண்டாமையை ஆதரிப்பதாக நான் அறிகிறேன்.

சாதிகள் ஒழியவேண்டும் எனசொல்வதால் தலித்துகள் முன்னேற முடியாது என்று எப்படிசொல்கிறிர்கள்.

தலித்துகளை ஒடுக்குவது யார், உயர்சாதியினர் என்று நம்பி கொண்டிருப்பவர்கள். இங்கே யாருக்கும் சாதி அடையாளங்கள் இல்லை என்று சொல்லிவிட்டால்.

இருப்பினும் உயிர்சாதியினர் என திமிர் காட்டுபவர்களை கூட்டி போய் காயடித்து விட்டால்.

ரவி said...

///உழைக்கும் சாதிக்கு மப்பு அவ்வளவு சீக்கரத்தில் ஏறாது///

அய்யா நானும் அன்றாடம் காய்ச்சிதான்...(சாராயத்தை பற்றி சிந்திக்கவேண்டாம்)

தினமும் உழைத்தால் தான் பிரட்டும் பாஸ்டாவும் பர்கரும் ஓட்ஸும் என்ற நிலையில் இருப்பவன் நான்...

dondu(#11168674346665545885) said...

@வித்யாசாகரன்
நீங்கள் குறிப்பிடும் நண்பரைப் போலவே எல்லா சாதிகளிலும் நபர்கள் உண்டு. நாடார்கள் சாதியினர் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தது காலத்தின் கட்டாயம். அம்மாதிரி இருந்து கஷ்டப்பட்டு மேலே வந்ததால்தான் தங்களவர் எல்லோருக்கும் கல்வி அறிவை அச்சமூகத்தால் அளிக்க முடிந்தது. அதை பெற்றுத்தான் உங்கள் நண்பர் போன்றவர்கள் இப்படி பேசவே இயலுகிறது. ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது போன்றதே இச்செய்கை.

ஆனால் என்ன செய்வது, அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரது சாதியினர் முன்னேறி விட்டனர். முடிந்தால் இவர் மட்டும் ஒரு காலயந்திரத்தில் ஏறி நாடார்கள் கொடுமைபடுத்த அக்கால கேரளாவில் போய் சந்தோஷமாக சாதிக் கொடுமைகளை ஏற்கட்டும்.

அதே மாதிரித்தான் சமீபத்தில் 1947-ல் பெரியார் அவர்கள் இந்தியர்களுக்கு நாடாளவே தகுதியில்லை, வெள்ளைக்காரனே ஆண்டிருக்கலாம் என்ற ரேஞ்சில் பேசி சுதந்திர தினத்தையே துக்கநாளாக அறிவித்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//டீ கடை பழைய புராணம், புதுசா எதாவது கதையை சொல்லுங்கள்.//
யார் சொன்னது? இன்னும் இரட்டைக் குவளை முறை பல இடங்களில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? உத்தபுரம் கொடுமை இன்னமும் தொடர்ந்து கொண்டுதானே உள்ளது?

இப்போது தலித்துகளின் நம்பிக்கையே தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்து முன்னேறுவதில்தான் உள்ளது. எல்லோரும் சமம் என்ற கோஷம் போட்டு கொடுமையை ஏற்று வாளாவிருத்தல் அவர்களுக்கு அழகல்ல. இம்மாதிரி பேச்செல்லாம் அவ்ர்களை காயடிக்க மட்டுமே செய்யும்.

//இணையம் மற்றும் சில இடங்கலை தவிர சாதியியம் ஒழிந்துவிட்டது.//
திருமங்கலத்தில் எந்த அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்? பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பார்த்திருக்கிறீர்களா? இணையத்தில் காணப்படும் சாதீயம் சமூகத்தில் உள்ளதைத்தான் பிரதிபலிக்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

kapilavastu said...

ஆரம்பிச்சுட்டாண்யா கிள போல்ட்டு. ஜாதி பத்தி பத்தி பேசாட்டி இதுக்கு வெளிக்கி போகாது போலிருக்குது. டல்கோலக்ஸ் துண்ண வேண்டியது தானே?

kapilavastu said...

அப்ப நம்ம ராமதாஸ் தான் தியோடர் கேர்சல்ன்னு ஒரு பதிவ போட வேண்டியது தானே கிழமே

dondu(#11168674346665545885) said...

@கபிலவஸ்து
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு தம்மையும் தம்மவரையும் காக்கும் எவரையுமே தியோடார் ஹெர்ட்ஸலுக்கு சமமாகக் கூறவியலும் என்பதை அறிய மாட்டாயா சிறியோனே?

அன்புடன்,
டோண்டு ராகவன்

kapilavastu said...

இச்சுரேலே ஒரு டுபாக்கூர் நாடு. இதுல எல்லா ஜாதியும் இச்சுரேலு மாதிரி மொல்லமாரி தனம் செய்யனும் வேற பெணதுற? இருக்கிற அடி தடி போறாதா? நேக்கு என்னமோ இதேல்லாம் நன்னா படல.

dondu(#11168674346665545885) said...

இந்த இடுகை போட்டதன் பின்னணி இதுதான்.
இன்னமும் தலித்துகள் வன்கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் வீறு கொண்டு எழ வேண்டும் என்பதே எனது விருப்பம். அதைக் காட்டவே நாடார்களின் உதாரணத்தை இங்கு காட்டலாயிற்று.

அது புரியாது சாதி என்பதையே பேசக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் சிலர் பின்னூட்டமுள்ளனர். இந்த மாதிரி நெருப்புக்கோழி மனப்பான்மைதான் தலித்துகளை பொருத்தவரை அபாயகரமானது. நரகத்தின் பாதை நல்லெண்ணங்கள் என்னும் கற்களால் வேயப்பட்டுள்ளது என்ற பொருளில் வரும் ஆங்கில வஅக்க்இய்அம் சும்மா வந்து விடவில்லை.

தீண்டாமை சட்டப்படி தவறு ஆகவே அரசு அவ்வாறு தீண்டாமையை பாவிப்பவர்களை தண்டிப்பதே போதுமானது என்ற ரேஞ்சில் பேசுபவர்களும், சாதி பற்றியே பேசக்கூடாது என மொத்தமாக தடுப்பவர்களும் தலித்துகளின் விரோதிகள் என்பதை அவர்கள் கண்டு கொண்டாலே போதும்.

இந்த மாதிரி பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து பேசுபவர்கள் வெறுமனே தமது குற்றமனப்பான்மையை அழிக்கவே அவ்வாறு பேசித் திரிகிறார்கள் என்பது எனது உறுதியான கருத்து.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@கபிலவஸ்து
2000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு அந்த முழு காலக்கட்டத்திலும் அடுத்த ஆண்டில் ஜெரூசலத்தில் சந்திப்போம் என ஒருவருக்கொருவர் நேர்மறை எண்ணங்களுடன் முகமன் கூறிக் கொண்டு, இறந்தமொழி என வகைபடுத்தப்பட்ட ஹீப்ரூவை மீண்டும் உயிர்ப்பித்து நாட்டு மக்கள அனைவரும் பேசும் மொழி ஆக்கிய இஸ்ரவேலர்களின் நாட்டை டுபாக்கூர் நாடு என நீர் சொல்லிவிட்டால் அது உண்மையாகிவிடுமா?

தாய்மொழி தமிழில் எழுத வக்கின்றி அல்லது தெரியாது, ஓட்டை கப்பல் துரைபோல ஆங்கிலத்தில் பதிவுகள் போடும் உம்மைப் போன்ற சுயமரியாதை அற்றவரின் கருத்துக்கெல்லாம் மதிப்பு அளித்தால் அவனவன் கையில் கப்பரை ஏந்த வேண்டியதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

kapilavastu said...

ஆரம்பிச்சுண்டாயா, உன்ன மாதிரி எனக்கு மொழி வெறி ,சாதி வெறி கிடையாது. உம்ம மாதிரி கீழ் தரமான அரசியல் வாதியும் கிடையாது. பதில் சொல்ல முடியலையனா ஏன்யா கிழமே மொழியை இலுக்கிறே? மத்த மொழியை வச்சிக்கிட்டு குப்ப கொட்டும் நீர் இப்படி பேசுவதுதான் வேடிக்கை.

dondu(#11168674346665545885) said...

@கபிலவஸ்து
உமக்கு என்ன பிரச்சினை? ஒரு சமூகம் தன்னை ஒடுக்கியவர்களையும் மீறி உன்னத நிலைக்கு தனது சொந்த முயற்சிகளாலேயே வந்துள்ளது. அதை பார்த்து ஏன் வயிற்றெரிச்சல்? சாதியே கூடாது என ஒப்புக்கு கூறுபவர்கள் பேச்சைக் கேட்டு அவர்களும் காயடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இருந்திருக்க வேண்டுமோ?

அதே போல இன்னொரு ஒடுக்கப்பட்ட இனமும் அவ்வாறே செயல்பட்டு முன்னேற்றம் பெற வேண்டும் என எண்ணி போடப்படும் இப்பதிவைப் பார்த்து ஏன் இந்த எரிச்சல்? அவர்களும் முன்னுக்கு வரக்கூடாதா?

ஆனால் அவ்வாறெல்லாம் செயல்பட வேண்டுமென்றால் தாம் தமது சாதி, தமது மக்கள் என அவர்கள் செயல்பட்டேதான் ஆக வேண்டும். இங்கு போய் சாதியில்லை என எல்லோரையும் காயடிக்கும் முயற்சிகளை இனம் காட்ட வேண்டியதும் இப்பதிவின் நோக்கமே.

உமது சான்றிதழுக்காக யாரும் காத்திருக்கவில்லை. தாய் மொழியில் எழுத துப்பில்லாதவர்கள் மொழிவெறி என்றெல்லாம் எழுதுவது தம் குறையை மறைக்கத்தான் என்பதும் புரிகிறது.

சரி ஆங்கிலம்தான் எழுதுகிறீரே எனப் பார்த்தால் அதிலும் ஏகப்பட்ட இலக்கணப் பிழைகள். இம்மாதிரியெல்லா நான் சமீபத்தில் 1958-59 காலக் கட்டத்தில் சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலை பள்ளியில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் என் வகுப்பாசிரியர் ஜெயராம ஐயங்கார் அவர்கள் என்னை ஒரு வாரத்துக்கு பெஞ்சுமேல் நிற்க வைத்து பிரம்படி கொடுத்திருப்பார். நானும் அதை தவறு என எண்ணியிருக்க மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//நாடார் உறவின்முறை என்று அதற்கு கட்டுப்பட்டு காவல்துறையினர் உள்ளே நுழையாத கிராமங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் உண்டு. //

இது நல்லதா?
ஒவ்வொரு சாதியினரும் எங்களுக்கு இந்தியஅரசியல் சட்டம் செல்லாது. எங்கள் சாதி சங்க தலைவரை வைத்து பஞ்சாயத்து பண்ணிகொள்கிறோம் என்று சொல்ல சொல்லலாமா?

தமிழ்நாட்டுக்கு போலிஸே தேவையில்லாமல் போகும்.

இது ஜனநாயகநாடா என்று சந்தேகம் வருகிறது

வால்பையன் said...

//தலித் மக்கள் முன்னேற அவர்கள் நிறைய கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும். முழுமையான கல்வி அறிவே அந்த மக்களின் முன்னேற்றத்துக்கு உதவும். தலித் மக்களில் முன்னேறியவர்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும். //

நல்லது தான், சாதியியம் கொழுந்து விட்டு எரியும்.

கல்வி தனியார் கையில் இருந்து பிடுங்கப்பட வேண்டும்.
அனைத்துமே அரசு கல்லுரிகள்.
திறமையுள்ள அனைவருக்கும் இடம் இலவசமாக,

ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லுரி வரை கல்வி இலவசமென்பதே என் கனவு. ஆனால் இலவச தொலைக்காட்சி சத்தம் என் கனவை கலைக்கிறதே!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

//இவர் மட்டும் ஒரு காலயந்திரத்தில் ஏறி நாடார்கள் கொடுமைபடுத்த அக்கால கேரளாவில் போய் சந்தோஷமாக சாதிக் கொடுமைகளை ஏற்கட்டும்.//

இதுக்கு என்ன சொல்றான்னு கேட்டேன்...

"அந்த சாதிக்கொடுமையை ஏத்துக்கணுமா? மேல்சாதிக்கார நாயே, நீ என்னைத் தாழ்ந்த சாதினு சொல்லுவியானு சொல்லிச் சொல்லி அடிப்பேன்; என் வாழ்க்கையை மேம்படுத்திக்க என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுவேன்; படிப்பேன்; வியாபாரம் பண்ணுவேன். ஆனா, நானும் முந்தா நாள் வரைக்கும் மேல் சாதிதான்னு வேஷம் போட மாட்டேன்; நூலைக் கட்டித் தொங்க விட்டுக்கிட்டு, நானும் பிராமணனும் ஒரே தட்டில போன வாரம் தின்னோம்னு கதை கட்ட மாட்டேன்; இந்தக் காமராஜ் நாடான் வந்த பிறகு கீழ் சாதிக்காரப் பயலுவ எல்லாம் நாடாக்கமார் தெருவுல நடக்க ஆரம்பிச்சுட்டானுங்கன்னு புலம்புன எங்க சொந்தக்காரக் கிழவி மாதிரி மேல் சாதித் திமிர் வர விட மாட்டேன். போன நூற்றாண்டுல தனக்கு இருந்த வலிதானே இப்போ தன்னாலயும், மத்தவங்களாலயும் அதிகாரம் பண்ணப்படுறவங்களுக்கும் இருக்கும்னு புரிஞ்சு நடந்துக்குவேன். மக்களே, சாதி அடையாளம் வேண்டாம், மனுஷ அடையாளம் போதும்னு சொல்லுவேன். கீழ் சாதின்னு சொல்லப்பட்ட மத்தவங்களோடு சேர்ந்து போராடுவேன்; இன்னும் சாதின்னு சொல்லிட்டுத் திரியறவங்களைக் காறித் துப்புவேன்"

அவன் சொல்றதுதான் சரின்னு தோணுது.

வால்பையன் said...

//ஏன் இப்படிச் சாதி அடையாளத்தைச் சுமக்க வேண்டும்? //

உங்கள் நண்பருக்கு ஒரு ராயல் சல்யூட்

வால்பையன் said...

//நீ இந்தச் சாதி, இந்த வர்ணம். அதுக்காக நீ பெருமைப்படு. நான் இந்தச் சாதி, இந்த வர்ணம். இதுக்காக நான் பெருமைப் படறேன்னு சொல்லி இந்தக் கருமத்தைப் புடிச்சுத் தொங்கி, அதைப் பத்திரமாப் பாத்துக்கறதுல யாருக்கு, என்ன நன்மை? எல்லா மயிரானுகளுக்கும் தனக்கும் கீழ சில பேர் இருக்கான்னு சொல்லிக்கறதுலதான் என்னபெருமை!//

இதை தான் நானும் கேட்கிறேன், சாதியால் என்ன நன்மை, என்ன பெருமை என யாராவது பட்டியல் இடட்டும், நானும் ஏற்று கொள்கிறேன்.

சொல்லமுடியவில்லையா! நீங்களும் சாதியை ஆதரிப்பதை விடவேண்டும்

வால்பையன் said...

//இன்னும் இரட்டைக் குவளை முறை பல இடங்களில் இருக்கிறது என்பதை அறிவீர்களா? உத்தபுரம் கொடுமை இன்னமும் தொடர்ந்து கொண்டுதானே உள்ளது?//

அதான் சொன்னேனே சாதியை ஆதரிப்பவர்களை காயடிக்கவேண்டுமென்று.

முக்கியமாக அதை பிடித்து தொங்கும் தமிழக அரசை

வால்பையன் said...

/இணையம் மற்றும் சில இடங்கலை தவிர சாதியியம் ஒழிந்துவிட்டது.//
திருமங்கலத்தில் எந்த அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்? //

நான் சொன்ன சில இடங்களில் முதலிடம் அர்சியலுக்கு தான்,
சாதி கட்சிகள் ஒழிய வேண்டும்,
நாடு உருப்படும்

வால்பையன் said...

//அது புரியாது சாதி என்பதையே பேசக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் சிலர் பின்னூட்டமுள்ளனர். இந்த மாதிரி நெருப்புக்கோழி மனப்பான்மைதான் தலித்துகளை பொருத்தவரை அபாயகரமானது. நரகத்தின் பாதை நல்லெண்ணங்கள் என்னும் கற்களால் வேயப்பட்டுள்ளது//

அப்படியானால் ஒவ்வொரு முறையும் நீ தலித், தலித் என்று குத்தி கொண்டே இருக்க வேண்டும். வீறு கொண்டு எழுந்து அவன் முன்னேறி விடுவான் இல்லையா?

நல்லெண்ணத்தால் நான் நரகம் போவேன் என்றால் சந்தோசமாக போகிறேன்.

dondu(#11168674346665545885) said...

//"அந்த சாதிக்கொடுமையை ஏத்துக்கணுமா? மேல்சாதிக்கார நாயே, நீ என்னைத் தாழ்ந்த சாதினு சொல்லுவியானு சொல்லிச் சொல்லி அடிப்பேன்; என் வாழ்க்கையை மேம்படுத்திக்க என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுவேன்; படிப்பேன்; வியாபாரம் பண்ணுவேன்.//
இக்காலத்தில் சௌகரியமாக இருக்கும் நிலையிருந்து கொண்டு கடந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருப்போம் என்றெல்லாம் பேசுவது எளிது. அக்காலக் கட்டத்தில் இருந்த ஒட்டுமொத்த வன்கொடுமையை இவரது முன்னோர்கள் எல்லாம் சேர்ந்து எதிர்த்ததால்தான் இவரைப் போன்றவர்கள் இப்போது உதார் பேச்செல்லாம் பேச முடிகிறது. இவரும் நாடார் சாதியினர் நிறுவிய அறக்கட்டளை தந்த கல்வியைத்தான் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தந்த சாப்பாட்டைத்தான் சப்பிட்டிருக்க வேண்டும். அதையெல்லாம் பெற்று கொண்டு அதை தந்தவர்களை திட்டுவது நன்றிகெட்டத்தனம் அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//நல்லெண்ணத்தால் நான் நரகம் போவேன் என்றால் சந்தோசமாக போகிறேன்.//
உங்கள் நல்லெண்ணத்தால் நீங்கள் நரகத்துக்கு செல்ல மாட்டீர்கள். உங்கள் பேச்சைக் கேட்டு போராடாது விட்ட தலித்துகள்தான் நரகத்துக்கு போவார்கள். வித்தியாசம் இப்போது புரிகிறதா?

உங்களுக்கென்ன, இம்மாதிரி ஏதாவது சமரசமாக பேசிவிட்டு உங்கள் குற்றவுணர்ச்சியை குறைத்து கொள்வீர்கள். ஆனால் செயலாற்றாவிட்டால் படப்போவது அவர்கள்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

மதுரையில் இதே நாடாரினம் தம்மை B.C யிலிருந்து M.B.C க்கு மாற்றுமாறு போராட்டம் நடத்தியது.

அரசாங்கம் போடும் பிச்சைக்காக,
சமூகத்தில் முன்னேற வேண்டும் என்று நினைத்த தலைவர் எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள்.இன்று இருப்பது மேலும் அவர்களை படுகுழிக்கில் தள்ளும் அரசியல் தலைவர்கள்.

சாதிகள் இல்லை என்று சொன்னால் தலித்துகளுக்கு சலுகை போய் சேராது என்பது உங்கள் வாதம்.

இங்கே யாரும் தினமும் பிரியாணி சாப்பிட வேண்டும் என ஆசைப்படவில்லை. எதிர்பார்ப்பது சுயமரியாதை.

மூட்டை தூக்கினால் அதன் பாரத்தினால் வருந்துவேனே தவிர, அதை கேவலன் என்று வருந்த மாட்டேன், இது பெரியார் சொன்னது,

அனைவரும் அப்படி தான் தனக்கு எந்த வேலை சரியாக படுகிறதோ அதை செய்யட்டும். அவர்களை ஏன் சாதி பெயர்களை சொல்லி அழைக்கவேண்டும்.

மேலை நாடுகளிலும் துப்புரவு தொழிலாளிகள் உண்டு, ஆனால் அங்கெயெல்லாம் சாதியும் அதன் கொடுமைகளும் கிடையாது.

உங்கள் தலைமுறையில் சாதி ஒழியாமல் போகலாம், ஆனால் நான் அதை ஒழிக்காமல் போக மாட்டேன்.

dondu(#11168674346665545885) said...

//இதை தான் நானும் கேட்கிறேன், சாதியால் என்ன நன்மை, என்ன பெருமை என யாராவது பட்டியல் இடட்டும், நானும் ஏற்று கொள்கிறேன்.
சொல்லமுடியவில்லையா! நீங்களும் சாதியை ஆதரிப்பதை விடவேண்டும்//
நாடார்கள் ஒரு சாதியாக திரண்டு நின்று இவ்வளவு முன்னேறியுள்ளனர். அம்மாதிரி அமைப்பு இல்லாதிருந்தால் அது நடந்திருக்காது. இதுதான் சாதியின் முக்கிய நன்மை, குழுவாகச் செயல்பட்டு குழுவின் நன்மைக்கு உழைப்பது.

இன்னொரு விஷயம், குழு மனப்பான்மையுடன் செயல்படுவது எல்லா தேசங்களிலும் மக்களிடையேயும் காணப்படுகிறது. அது நீங்களோ வேறு யாராவதோ எதிர்ப்பதால் மாறாது. சாதியும் அதற்கான உதாரணங்களில் ஒன்றுதான். நம்மூருக்கு அது ஒர்க் அவுட் ஆகிறது. அவ்வளவுதான் விஷயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

//வன்கொடுமையை இவரது முன்னோர்கள் எல்லாம் சேர்ந்து எதிர்த்ததால்தான்//

அய்யா, அதைத் தப்புன்னு சொல்லவே இல்லை. ஆனா கொஞ்சம் நல்ல நிலைமை வந்தவுடன் மேல்சாதி வேஷம் போடணுமா? தன்னைப் பலப்படுத்திக்க, தன்னை அவமதித்த ஒரு அமைப்பைப் பலப்படுத்தணுமா? இது அடிமைத்தனமா இல்லையா? சரிய்யா, அப்போ எது மேல்சாதித்தனம்ணு தோணுச்சோ அதைப்பண்ணினீங்க. விதவைகளை வெள்ளைச்சீலை கட்ட வச்சும், மறுமணத்தைத் தடுத்தும் மேல்சாதிப் புனிதத்தைப் பாதுகாத்தீங்க. இப்போ மாறுதில்ல? அந்த மாதிரி இந்தச் சாதிக் கருமாந்திரமும், கட்டுப்பாடும், பெருமையும் மாறும். அதுக்கு அடையாளம் நிறையப் பேர் இருக்கோம்.
இப்போ உள்ள தாழ்த்தப்பட்ட சாதிக்காரனோடு சேர்ந்து போராடணும்னு யாருக்குத் தோணுதோ, அதிகாரம் பண்றவன் தன் சாதியா இருந்தாலும் தப்புன்னு சொல்ற மனசு யாருக்கு இருக்கோ, அவனை மாதிரி மனசு உள்ளவந்தான் போன நூற்றாண்டுலயும் போராடி இருப்பான். இன்னைக்கு மேல்சாதித் திமிர்ல இருக்கும் நாய்கள், அப்போ மேல்சாதிக்கு அடிதாங்கிய கூட்டத்திலதான் இருந்திருக்கும், ஏன்னா மேல், கீழ்ங்கிற மனப்பான்மை உண்டு அதுங்களுக்கு. ஆக, இப்போ மேல்சாதின்னு வேஷம் போடுபவர்கள்தான் நன்றி மறந்தவர்கள்.


இதுக்கு மேல இதைப்பத்திப் பேச நேரம் இல்லைனு அவன் சொல்லிட்டான். நீங்க நல்லா, சந்தோஷமாக் கொம்பு சீவுவீங்களாம்.

வால்பையன் said...

//நாடார்கள் ஒரு சாதியாக திரண்டு நின்று இவ்வளவு முன்னேறியுள்ளனர். அம்மாதிரி அமைப்பு இல்லாதிருந்தால் அது நடந்திருக்காது. இதுதான் சாதியின் முக்கிய நன்மை, குழுவாகச் செயல்பட்டு குழுவின் நன்மைக்கு உழைப்பது. //

மனிதர்கள் ஒன்று சேர்ந்து திரண்டு போராடினால் இந்தநாடே உருப்படும் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும், மீண்டும் மீண்டும் சாதியை மட்டும் திரண்டு வர சொல்வது குறுகிய மனப்பான்மையாக தெரிகிறது

முரளிகண்ணன் said...

ஜாதியைப் பற்றி பேசுவதை அடுத்த தலைமுறையாவது தவிர்க்க வேண்டும். அதற்க்கு முக்கிய தேவை சமுதாயத்தில் சாதனை புரிந்த மனிதர்களை ஜாதிய நோக்கில் அடையாளப் படுத்தாமல் இருப்பதும் ஒன்று. இந்த தவறை முண்ணனி பத்திரிக்கை செய்வது கொடுமையிலும் கொடுமை.

தங்களைப் போன்றவர்கள் ஜாதி கட்டமைப்பு என்றென்றும் நீடித்திருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள். அடுத்த தலைமுறையாவது விடுபடட்டும் என நினைக்கிறேன் நான்.

மனிதனுக்கு தட்டையான சிந்தனைகள் கூட இருக்கலாம், வக்கிர சிந்தனைதான் இருக்கக் கூடாது.

Anonymous said...

வால்பையன் Vs டொண்டு = என்ன பேசி வைத்துக் கொண்டு “விவாதிக்”கிறீர்களா?????

நெம்ப காமெடியா இருக்கு.. அப்படியே விட்டு விடாமல் மேலே தொடரவும்

Anonymous said...

சைவம் வளர்த்த சைவப் பிள்ளைமார் சமூகம்

சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்

முக்கிய பதவிகளை வகித்த முதலியார் சமூகம்
முதலமைச்சர்,தலைமை செயலர் etc

கண்னியம் கற்றுத்தரும் கவுண்டர் சமூகம்
அருட் செல்வர் பொள்ளாச்சி மஹாலிங்கம் அவர்களின் மருமகன் ஜமீன்ந்தார் கிருஷ்ணராய வானவராயர்

நாடாண்ட நாயக்கர் சமூகம்
திருமலை நாயக்கர்

யாவருக்கும் நன்மை செய்யும் யாதவ சமூகம்
ஸ்ரீகிருஷ்ண பகவான்

நாட்டுக்கு நல்லது செய்த நாயுடு சமூகம்
கோவை ஜீ.டி.நாயுடு அவர்கள்

முடிசூடி மன்னர்களாய் வாழ்ந்த முக்குலத்தோர் சமூகம்.

சிங்கப் பட்டி ஜமீன்ந்தார்,ராமனாதபுர மன்னர் சேதுபது

வளம் தரும் விவசாயம் செய்யும் வன்னியர் சமூகம்

செய்த தொழில் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஜாதிப் பிரிவுகள் இந்த நூற்றாண்டிலாவது
மறையுமா?

பொதுவாய் ஜாதி அடையாளங்களை தமிழக அனைத்து நகரங்களிலும் ஏற்பட்டுள்ள புதிய குடியிருப்புகளில்(காலணிகள்,நகர்கள்)
காண்பது அரிது.

அனைவருக்கும் கற்கும் கல்வியிலே முழுச் சுதந்திரம்.

அனைவருக்கும் வாழும் பொருளாதர தாராளச் சுதந்திரம்.

அனைவருக்கும் இறைவன் வழிபட்டிலே ஆதமார்த்தமான சுதந்திரம்.

Anonymous said...

இந்த கட்டுரையில் படிக்கும்போதே உறுத்திய ஒரு விஷயம்:

”சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள்.”

”ஆதிக்க சாதிகள் நாடார் இனமக்களின் வீரத்தைக் கண்டு அஞ்சி நடுங்கத் தொடங்கினர்.”

“அதன் விளைவாக, 1890ஆம் ஆண்டு ஆதிக்க சாதியினருக்கும் நாடார்களுக்கும் இடையே சிவகாசியில் மிகப் பெரிய கலவரம் மூண்டது.”

இந்த ”ஆதிக்க சாதிகள்” எவரெவர்? அவர்கள் தனித் தனி சமூகத்தொகுதிகளாக நாடார்களுக்கெதிரான ஜாதிய வன்முறையில் ஈடுபட்டனரா? (அ) கூட்டாகவா?

வரலாறு எழுதுபவர்கள் - “குமுதம்” பத்திரிகையில்தான் என்றாலும் - இதைப் பற்றி வெளிப்படையாக எழுதாமல் இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இப்படி எழுதுவது நேர்மையானதுதானா?

ஜாதியப் பிரச்சினைகள் வேரூன்றியிருக்கும் தமிழ்நாட்டில், எந்த சமூகத்தொகுதியினரும் ஜாதியக் கொடுமையின் உண்மையான வரலாறு என்ன, அதில் தான் சார்ந்திருக்கும் சமூகத்தொகுதியின் உண்மையான பங்கு என்ன என்பதை அறிந்து கொள்வது, எதிர்காலத்தில் அவை நிகழாமல் இருக்கும்படி செய்வதற்கான சாத்தியங்களை உருவாக்குவதன் முதற்படி.

மாறாக, சமூகவிஞ்ஞானத்தின் நியதிகளுக்கு அப்பாற்பட்ட தான்தோன்றித்தனமும் உண்மையை மதிக்காத பம்மாத்தும் பித்தலாட்டமும் நம் வரலாற்றுப் பிரக்ஞையில் விளையாடப் புகுந்தால் காலத்துக்கும் நாம் இப்படியே உழல வேண்டியதுதான். எரிகிற வீட்டில் ஆதாயம் தேடுகிறவர்களுக்கு இது ஒரு பெரும் வசதி.

எனவே வரலாற்றைப் பேசுகிற எந்த விவாதத்திலும் சான்றுகளுடன் நிறுவக் கூடிய உண்மையை நாம் எப்போதும் வலியுறுத்துவது அவசியம்.

“Seek the truth, and the truth shall set you free," என்பது விவிலிய வாக்கு. அது நம் எல்லோர்க்கும் பொருந்தி வரக்கூடியதுதான்.

Anonymous said...

1.அரசியலில் மறுமலர்ச்சி ஏற்பட அடிப்படையான தேவையான மாறுதல்கள் எவை எவை என சொல்வீர்கள்?
2.ஆதிக்க மற்ற சமுதாயம் அமைய உண்மையிலே யாராவது முயற்சி செய்கிறார்களா?
3.ஜாதி உணர்வில் ஊறிய மக்கள் தெளிவு பெறுவார்களா?
4.இளைய தலைமுறையினர் பலர் ஜாதி,மத பாதிப்புகள் இல்லாமல் இருக்கும் போது போனதலைமுறையினர் மனது மாறுமா?
5.கலப்புத் திருமணங்கள் இந்த ஜாதிப் பூசல்களுக்கு ஒரு விடியலைத் தருமா?

dondu(#11168674346665545885) said...

ஒரு குழுவினர் தாங்கள் அடக்கப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டு வந்த நிலையிலிருந்து தமது சொந்த முயற்சியாலேயே முன்னேறி வந்துள்ளனர்.

அது என்னவோ தெரியவில்லை, அது வரை வாய் பொத்தி வேடிக்கை பார்த்து, அவ்வப்போது வெறுமனே உச் கொட்டி வந்த மற்றவர் இப்போது மட்டும் ஓடி வந்து சாதியெல்லாம் கூடாது என்று புத்தர் கணக்காக உபதேசம் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

நான் அழுத்தம்திருத்தமாகக் கூறுவேன், குழு மனப்பான்மை மனித சரித்திரத்தில் இருந்து வந்துள்ளது. பெரிய பள்ளிகளையே எடுத்து கொள்ளுங்கள், மாணவ மாணவிகளை சுமார் நான்கு குழுக்களாக பிரித்து ஒருவருக்கொருவர் போட்டி வைப்பார்கள். இது கல்வியாண்டு முழுக்க நடக்கும். வருட முடிவில் எந்தக் குழு வெற்றி பெற்றது என்றெல்லாம் பார்த்து பரிசுகள் கொடுப்பார்கள். போட்டி மனப்பான்மை என்பதும் மனித மனத்தில் வேரூன்றியதே.

பலவித குழுக்களில் சாதியும் ஒன்று, அவ்வளவே. மற்றவை மதம், மொழி, இனம் என்றெல்லாம் வரையறுக்கப்படுகின்றன. கல் தோன்றா காலத்திலேயே தமிழினம் உருவாகியது என்கிறோம். தமிழுக்கு செம்மொழி கொடுத்ததும் அதே அந்தஸ்தை தெலுங்கு, கன்னடத்துக்கு தந்ததற்காக பொருமுகிறோம். இதெல்லாம் என்ன?

ஐயா இந்தக் குழு முன்னேறியுள்ளது. இது ஒன்றுதான் சிறந்த வழி, அதே போல ஒடுக்கப்படும் இன்னொரு குழுவும் முன்னேற வேண்டும் என்று கூறுவது குற்றமா? என்னவோ அது முன்னேறி விடுமோ என்ற பயத்திலேயே அவர்கள் மன தைரியத்தை குலைக்க சாதியே வேண்டாம் என்ற பின்னூட்டங்கள் வந்துள்ளனவோ என்ற எண்ணத்தை என்னால் தவிர்க்க இயலவில்லை.

இதில் என்ன வேடிக்கை என்றால், எனக்கு தெரிந்த ஒரு பதிவர், சாதியே கூடாது என்றேல்லாம் கூறும் அப்பதிவர் தனது சாதியினர் உத்தபுரத்தில் தலித்துகளுக்கு எதிராக கூத்து நடத்தியபோது கள்ள மௌனம் சாதிக்கிறார். அவராலும் சாதி சார்பை அடக்க இயலவில்லை. கீழ்வெண்மணி விவகாரத்தில் பகுத்தறிவு பகலவன் மேற்கொண்ட அதே மேம்போக்குதான், சற்றே குறைந்த அளவில்.

சாதியே வேண்டாம் என்று உத்தமமாக பின்னூட்டமிட்டவர்கள் இது சம்பந்தமாக தத்தம் மனசாட்சியையே கேட்டு கொள்ளட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1950 களில் பெரியவர்கள் தங்களின் பெயரின் பின்னால் தங்கள் ஜாதியை பெருமையாய் போட்டுக் கொள்வர்காள்.
ஆனால் 1970 களிலே இந்த முறை அடியோடு மறைந்து விட்டது.இப்போது வாழும் இளைய தலைமுறையினர் யாரும் தங்கள் பெயரின் பின்னால் அந்த ஜாதி அடையாளத்தை போடுவதில்ல.குறிப்பாக அரசின் விதிகளின் படி சொல்லப்படும் முற்படுத்தப் பட்ட ஜாதிகளான ஐயர்,அயங்கார்,பிள்ளைமார்,முதலியார்,ரெட்டியார்,நாட்டுக் கோட்டை செட்டியார் ஆகியோர் கூட இப்படித்தான் செயல் படுகிறார்கள். பெரும்பாலான கிராமங்களில் கூட இந்த நடைமுறை தான் நிதர்சனம் .கல்வியில் பண்பட பண்பட இந்த ஜாதி உணர்வு மெல்ல மங்கித்தான் வருகிறது.ஆனால் அரசியல் வாதிகளின் சுயநல சூழ்ச்சிக்கு பலியாகும் போக்கு மக்களிடம் முழுவதுமாய் மாறும் நாளுக்கு காத்திருப்போம்.
வரலாற்றை புரட்டிப் பார்த்தால் முற்பட்ட ஜாதிகளிடையே கைகலப்பு,அடிதடி, நடந்தது மிகக் குறைந்த அளவிலே இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.அவர்கள் சண்டை யெல்லாம் கோர்ட் ,கேசு,வழக்கு என இப்படித்தான்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையாலும்,பொருளாதர மாற்றங்களினாலும்,கடுமையான உழைப்பாலும்,தன்னை அறிந்து கொண்ட தன்மையாலும் ஒடுக்கப் பட்ட ஜாதியினரில் பல குடும்பங்கள் இன்று பொருளாதார நிலமையில் முற்பட்ட ஜாதியினரைவிட உன்னத நிலை அடைந்துள்ளனர்.

பத்திரிக்கை மற்றும் ஊடகத் துறை,கனரக தொழிலகள்,வாணிபம்,தகவல் தொழில் நுட்பம்,அரசுத் துறை இப்படி எல்லாவற்றிலும் இன்று ஜெயித்துள்ளனர்.

இதற்கு அடிப்படைகாரணம் ஜாதிச் சண்டை போட்டால் இரு பிரிவினருக்கும் பொருளாதார இழப்பு என்பதை தெரிந்து கொண்டதால் தான்.


போன தலைமுறையை விட இந்த தலைமுறையினரிடையே குறைந்து வரும் ஜாதி உணர்வு அடுத்த தலைமுறையில் இல்லாமல் போனால் நல்லது.

Anonymous said...

பெரும் மதிப்பிற்குரிய வால் அய்யாவுக்கு,

//நான் மனிதன் என்று சொன்னால் வாய் வழிக்குமா?//


அய்யா "லகலக" பிராக்டீஸ் மட்டும் செய்திருந்தீங்கன்னா , இப்படி மோசமா வழிய வேண்டி வந்திருக்காதே!. "வாய் வலிக்குமா" தான் சரி என்ப‌து இந்த எளியோனின் அபிப்ராயம். அய்யா கோச்சுக்காதீங்க, முதல்ல நம்ம "ல"ழ" சரி பன்னுவோம். அப்புறமா சொல்லுங்க நானும் வாரேன் இரண்டு பேருமா சேர்ந்து சாதி, மத, இன , வேறுபாடுகளை எல்லாம் அடித்து விரட்டுவோம்.
நீங்க‌ "ல‌" வில‌ வெற்றி வாகை சூடும் வ‌ரை நான் என் பெய‌ரை ச‌ற்றே மாற்றிக் கொள்கிறேன்.
(இன்று முதல் நான் )வால‌றுந்த‌ ந‌ம்பி

Anonymous said...

தாங்கள் முன்னுக்கு வந்தவுடன் தாங்கள் பட்ட கடினத்தை மறந்துவிட்டார்கள். ஏனோ மற்றவர்களும் அப்படிதான் என்ற எண்ணம் தோன்றவில்லையோ?

Nadar Mahajanam said...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் சொன்னதயே திரும்பவும் நினைவு படுத்த விரும்புகிறேன்.
டாக்டர் கிருஷ்ணசாமி,திருமாவளவன் ஆகியோர் அரசியல் செய்வதை விட்டுவிட்டு சமூகப் பணிக்குத் திரும்பி, அடக்கப்பட்டவர்களின் கல்விக்கும் உரிமையைப் பெற்றுத் தருவதற்கும் உழைக்க வேண்டும்.

இதற்கான பலன்கள் கிடைக்க அடுத்த 50 முதல் 100 அண்டுகள் வரையிலும் ஆகலாம். ஆனால் தளர்வில்லாமல் செய்ய வேண்டும். இன்றைய தலைவர்களின் காலத்திற்குப் பிறகு தொடர்ந்து செய்ய அடுத்த தலைமுறை முன் வர வேண்டும். அரசியல் போராட்டங்கள் மூலம் உடனடித் தீர்வு காணவேண்டும் என்றால் நடக்காத காரியம்.

Nadar Mahajanam said...

தீண்டாமைக் கொடுமையை எதிர் கொண்டு வெற்றி கொண்ட சமுதாயம் உள்ளது.
இன்று தமிழகத்தில் நாடார் சமுதாயம் மற்றவர்கள் மதிக்கக் கூடிய நிலையில் இன்று உள்ளது.
ஆனால் 150 வருடங்களுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை. நாடார்களுக்கும் இரட்டை டம்ளர்தான்.
அப்போது சமுதாயத்தை முன்னேற்ற நினைத்த சமூகப் பெரியவர்கள் ஒரு கூட்டம் கூட்டி
ஒவ்வொறு ஊரிலும் உள்ள நாடார்கள் ஒருங்கினைந்த குழுக்களாக
ஒற்றுமையாகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுவது என முடிவெடுத்தனர். இதன் முதல் முயற்சியாக
ஒவ்வொறு ஊரிலும் நாடார்கள் உறவின்முறை என்ற அமைப்பு ஏற்படுத்த்ப்பட்டது.
பின்னர் அவர்கள் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோவில் கட்டப்பட்டது.
பின்னர் சில விதிகள் வகுக்கப்பட்டன.
1.அந்த ஊரில் உள்ள நாடார்கள் அந்தந்த உறவின் முறைக்குக் கட்டுப்பட்டவர்கள்.
2.எந்தப் பிரச்சினையையும் உறவின் முறையில் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். போலீசுக்குப் போகக் கூடாது.
3.மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உறவின்முறை நிர்வாகிகள் மாற்றி அமைக்கப்படுவார்கள்
4.திருமணமான அனைத்து ஆண்களும் உறவின்முறை வரி செலுத்த வேண்டும்
இப்படிப் பல.
இந்த செயல்பாடுகள் வெற்றியடைந்ததும் பல இணைப்புச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன(விருதுநகர்-சென்னை நாடார்கள் சங்கம்)
இதில் முக்கியமான விஷயம் எதுவெனில் இதில் எந்தச் சங்கமும் அரசியலில் ஈடுபடவில்லை.
சமூக மக்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டன.
பின்னர் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து 100
ஆண்டுகளுக்கு முன்பே உறவின் முறைகளின் கட்டுப்பாட்டில் பள்ளிகள் தற்போது கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு
இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
தொழிலை முன்னேற்ற சில வங்கிகளில் கடன் கேட்ட போது தர மறுத்ததால், தனியாக வங்கி ஒன்றும் ஆரம்பிக்கப் பட்டது.
நிற்க,
இன்று திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர்கள் அரசியலை விட்டு சமூகப் பணியில் ஈடுபட்டால்
அடுத்த 100 வருடங்களில் அவர்களின் சமுதாயமும் தலை நிமிர்ந்து நிற்கும்.
அதைவிட்டு ஒரே நாளில் அனைத்தையும் மாற்ற வேண்டும் எனில் என்ன செய்வது?"

Nadar Mahajanam said...

கல்வியின் முக்கியத்துவத்தை எண்ணி

1.1889 ம் ஆண்டு கமுதியில்
ஷத்திரிய நாடார் ஆண்கள் துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

2.1906 ம் ஆண்டு மீனாட்சி பாலபோதினி பெண்கள் துவக்கப் பள்ளி ஆரம்பிக்கப் பட்டது.

1921 ம் ஆண்டு தூத்துக்குடியில்
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆரம்பிக்கப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு முன்பு கமுதியில் நாடார் உறவின் முறை சார்பில் அருகில் உள்ள கொல்லன்குளம் கிராமத்தில் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, அங்கு நாடார்கள் உறவின் முறைக்காக கூலிவேலை செய்து, நாடார் உறவின் முறை வருமானம் ஈட்டியது.

விளைச்சல் வருமானம் நாடார் உறவின் முறைக்கு, கூலி நாடார் சமூகத்திற்கு,
ஊரில் உள்ள மளிகைக்கடைகள் நாடார் சமூகத்தினுடையது.
ஆக விளைச்சல் , வருமானம், செலவு அனைத்தும் நாடார் சமூகத்தினூடேயே சுற்றிச் சுற்றி வந்து சமூகத்தை வளமானதாக்கியது.

Nadar Mahajanam said...

அக்காலத்தில் நாடார்களுகு திருமணம் செய்து வைக்க பிராமணர்கள் மறுத்து விட்டார்கள்.
போடா ஜாட்டான் , நீ என்ன எங்கள் இனத்தை ஒதுக்கி வைப்பது , நாங்கள் உங்களை ஒதுக்கி வைக்கிறோம் என்று சூளுரைத்து, இன்று வரை நாடார் சமூகத்தில் சுயமரியாதை திருமணம் தான்.

என் திருமணச் சடங்குகள் நடந்தது மூன்றே நிமிடங்கள் தான்.

உறவின் முறை தலைவர் அவர்கள்
இன்னார் பையனுக்கும் இன்னார் பெண்ணிற்கும் திருமணம் என்று சொல்லி, உங்கள் இருவருக்கும் சம்மதமா என்று மேடையில் சம்பதம் கேட்டு, தாலியை எடுத்துக் கொடுக்க அதை மனைவிக்கு அணிவித்தேன்.

ஐயருக்குக் கொடுக்க வேண்டிய பணம் மிச்சம்.

dondu(#11168674346665545885) said...

//போடா ஜாட்டான் , நீ என்ன எங்கள் இனத்தை ஒதுக்கி வைப்பது , நாங்கள் உங்களை ஒதுக்கி வைக்கிறோம் என்று சூளுரைத்து, இன்று வரை நாடார் சமூகத்தில் சுயமரியாதை திருமணம் தான்.//
அடாவடிக்கு பணியாமல் இருப்பதுதான் முக்கியம். :)))) சரியான எதிர்வினை.

அன்புடன்,
டோண்டு ராகவ்ன்

Anonymous said...

//Nadar Mahajanam said...
அக்காலத்தில் நாடார்களுகு திருமணம் செய்து வைக்க பிராமணர்கள் மறுத்து விட்டார்கள்.
போடா ஜாட்டான் , நீ என்ன எங்கள் இனத்தை ஒதுக்கி வைப்பது , நாங்கள் உங்களை ஒதுக்கி வைக்கிறோம் என்று சூளுரைத்து, இன்று வரை நாடார் சமூகத்தில் சுயமரியாதை திருமணம் தான்.

என் திருமணச் சடங்குகள் நடந்தது மூன்றே நிமிடங்கள் தான்.

உறவின் முறை தலைவர் அவர்கள்
இன்னார் பையனுக்கும் இன்னார் பெண்ணிற்கும் திருமணம் என்று சொல்லி, உங்கள் இருவருக்கும் சம்மதமா என்று மேடையில் சம்பதம் கேட்டு, தாலியை எடுத்துக் கொடுக்க அதை மனைவிக்கு அணிவித்தேன்.

ஐயருக்குக் கொடுக்க வேண்டிய பணம் மிச்சம்.//


நாடார் குலத் திருமணங்களில் மருத்துவர் ஜாதியினர் பங்கெடுப்பர் என்ற ஒரு தகவல் உண்டு ?இன்னும் அந்த நடை முறை கடைபிடிக்கப் படுகிறதா?

Anonymous said...

//அக்காலத்தில் நாடார்களுகு திருமணம் செய்து வைக்க பிராமணர்கள் மறுத்து விட்டார்கள்.
போடா ஜாட்டான் , நீ என்ன எங்கள் இனத்தை ஒதுக்கி வைப்பது , நாங்கள் உங்களை ஒதுக்கி வைக்கிறோம் என்று சூளுரைத்து, இன்று வரை நாடார் சமூகத்தில் சுயமரியாதை திருமணம் தான்.//

இந்து முன்னணியில் ,முன்னணியினர் பலர் நாடார் சமுகத்தை சேர்ந்தவர்கள்.
அவர்கள் காஞ்சிமட சங்கிராச்சாரியாரின்(ஜெயந்திரர்) விஜயத்தின் போது அவருக்கு பாத புஜை செய்து அவரை வணங்குவது இப்போது வழக்கமாகிவிட்டது.
சிவகாசி இந்து நாடர்கள் தங்களை முற்பட்ட சமுகம் மாதிரி நினைத்துக் கொண்டு,பிற நாடார் குல சொந்தங்களுடன், மக்களுடன் சம்பந்தம் கூட செய்வது கிடையாது என்பார்கள்.
சிவகாசி மற்றும் தூத்துக்குடி நாடார் பிரிவுகளிடையே ஏற்பட்ட கருத்து மோதலால் தான் டி.எம்.பி வங்கியின் பங்குகளின் பறி மாற்றப் பிரச்சனை என்று சொல்லப் பட்டதில் உண்மையுண்டா தெரியவில்லை.
நாடார் என்று ஜாதி குறிப்பிட்டால் இட ஒதுக்கிட்டு சலுகை மறுக்கபப்டும் என்றும் சொல்வார்கள்.

dondu(#11168674346665545885) said...

//இப்போ உள்ள தாழ்த்தப்பட்ட சாதிக்காரனோடு சேர்ந்து போராடணும்னு யாருக்குத் தோணுதோ, அதிகாரம் பண்றவன் தன் சாதியா இருந்தாலும் தப்புன்னு சொல்ற மனசு யாருக்கு இருக்கோ, அவனை மாதிரி மனசு உள்ளவந்தான் போன நூற்றாண்டுலயும் போராடி இருப்பான்.//
ரொம்ப சந்தோஷம். அப்படி உங்கள் நண்பர் எங்கெல்லாம் போராடி வருகிறார், அதுவும் தனது சாதிசனத்தி எதிர்த்து என்பதை தெளிவுபட சரியான அடையாளத்துடன் சொல்லுங்கள், அதாவது அப்படி ஒரு நாடார் நண்பர் நிஜமாகவே இருந்தால். நன்றி.

//இதுக்கு மேல இதைப்பத்திப் பேச நேரம் இல்லைனு அவன் சொல்லிட்டான். நீங்க நல்லா, சந்தோஷமாக் கொம்பு சீவுவீங்களாம்.//
கண்டிப்பாக. தலித்துகளும் நாடார்களை போல தங்களுக்குள் ஒத்துழைத்து முன்னுக்கு வரவேண்டும் என்று கூறுவதுதான் கொம்பு சீவுவது என்றால் அப்படியே ஆகுக.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//குழு மனப்பான்மை மனித சரித்திரத்தில் இருந்து வந்துள்ளது. பெரிய பள்ளிகளையே எடுத்து கொள்ளுங்கள், மாணவ மாணவிகளை சுமார் நான்கு குழுக்களாக பிரித்து ஒருவருக்கொருவர் போட்டி வைப்பார்கள். இது கல்வியாண்டு முழுக்க நடக்கும். வருட முடிவில் எந்தக் குழு வெற்றி பெற்றது என்றெல்லாம் பார்த்து பரிசுகள் கொடுப்பார்கள். போட்டி மனப்பான்மை என்பதும் மனித மனத்தில் வேரூன்றியதே.//

இதெல்லாம் ந்ல்லா தான் இருக்கு!
ஆனா வெற்றி பெற்ற குழு, தோல்வி அடந்த குழுவை ஒதுக்கி வைப்பது தான் இப்போதைய பிரச்சனையே!

வெற்றி பெற்றவர்கள் உயர்சாதி,
தோல்வி அடைந்தவர்கள் தாழ்த்தபட்ட சாதியா?

வால்பையன் said...

//கல் தோன்றா காலத்திலேயே தமிழினம் உருவாகியது என்கிறோம். தமிழுக்கு செம்மொழி கொடுத்ததும் அதே அந்தஸ்தை தெலுங்கு, கன்னடத்துக்கு தந்ததற்காக பொருமுகிறோம்.//

இது தானே சுயநலம் என்கிறோம்!
நமக்கு கொடுத்தால் மகிழ்ச்சி,
அடுத்தவனுக்கு கொடுத்தால் வயிறு எரிகிறது!

வால்பையன் said...

//ஐயா இந்தக் குழு முன்னேறியுள்ளது. இது ஒன்றுதான் சிறந்த வழி, அதே போல ஒடுக்கப்படும் இன்னொரு குழுவும் முன்னேற வேண்டும் என்று கூறுவது குற்றமா?//

சென்ற பின்னூட்டதில் சொன்னது தான்!
நீயும் முன்னேறு என்று வெற்றி பற்ற குழு ஊக்குவிப்பதில்லை! முடிந்த அளவு அதை அமுக்கவே பார்க்கிறது, காரணம் வெற்றி(உயர்சாதி என்னும்) பெற்ற திமிர்

வால்பையன் said...

//என்னவோ அது முன்னேறி விடுமோ என்ற பயத்திலேயே அவர்கள் மன தைரியத்தை குலைக்க சாதியே வேண்டாம் என்ற பின்னூட்டங்கள் வந்துள்ளனவோ என்ற எண்ணத்தை என்னால் தவிர்க்க இயலவில்லை.//

பொருளாதாரத்தில் முன்னேறுவதை பற்றி பிறகு பேசுவோம், நான் கேட்பது சுயமரியாதை.

ஏற்கனவே சொல்லியுள்ளேன், கோவிலில் உண்டைகட்டி வாங்கி சாப்பிடும் பார்பனர்களும் உண்டு, ஐந்து நட்சத்திர விடுதில் பாரின் விஸ்கி குடிக்கும் ஆதி திராவிடர்களும் உண்டு.

நான் கேட்பது அவர்கள் தலித் என்னும் அடையாளம் இல்லாமல் சமமாக மதிக்கபடவேண்டும் என்பதே!

வால்பையன் said...

//எனக்கு தெரிந்த ஒரு பதிவர், சாதியே கூடாது என்றேல்லாம் கூறும் அப்பதிவர் தனது சாதியினர் உத்தபுரத்தில் தலித்துகளுக்கு எதிராக கூத்து நடத்தியபோது கள்ள மௌனம் சாதிக்கிறார். அவராலும் சாதி சார்பை அடக்க இயலவில்லை. கீழ்வெண்மணி விவகாரத்தில் பகுத்தறிவு பகலவன் மேற்கொண்ட அதே மேம்போக்குதான், சற்றே குறைந்த அளவில்.//

பெரியாராக இருந்தாலும் குற்றம் குற்றமே! தேவையற்ற பார்பனிய எதிர்ப்பும் தேவையற்றது தான்!

உத்தபுர விசயதில் அரசு இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் என உங்களுக்கே ஒரு முறை பின்னூட்டம் இட்டுரிக்கிறேன்.

சாதி வேண்டாம் என்று சொல்பவர்கள் தாம் முதலில் சாதிய அடையாளங்களை துறக்க வேண்டும்

வால்பையன் said...

//இதற்கு அடிப்படைகாரணம் ஜாதிச் சண்டை போட்டால் இரு பிரிவினருக்கும் பொருளாதார இழப்பு என்பதை தெரிந்து கொண்டதால் தான்.


போன தலைமுறையை விட இந்த தலைமுறையினரிடையே குறைந்து வரும் ஜாதி உணர்வு அடுத்த தலைமுறையில் இல்லாமல் போனால் நல்லது.//


நல்லதே நினைபோம்
நல்லதே நடக்கும்!

வால்பையன் said...

//நீங்க‌ "ல‌" வில‌ வெற்றி வாகை சூடும் வ‌ரை நான் என் பெய‌ரை ச‌ற்றே மாற்றிக் கொள்கிறேன்.
(இன்று முதல் நான் )வால‌றுந்த‌ ந‌ம்பி//

தப்புதாங்க மன்னிப்பு கேட்டுகிறேன்!

ஒரு சந்தேகம்
பள்ளி, பல்லி ரெண்டையும் சொல்லிப்பாருங்கள். உச்சரிப்பு ள்.ல் -லில் வருகிறதா? இல்லை “ப”-வில் வருகிறதா?

ப-வில் உச்சருப்பு மாற ஏன் ல்,ள் வித்தியாசம்?

தமிழில் உள்ள குளறுபடிகளை பதிவாக போடலாம், நாம் பேசும் மொழியை நாமே கிண்டல் செய்யகூடாதுன்னு விட்டுட்டேன்.

மற்றபடி ழ்,ல்,ள் விவகாரம் இனிமேல் வராமல் பார்த்து கொள்கிறேன், சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி நண்பரே.

dondu(#11168674346665545885) said...

//உத்தபுர விசயதில் அரசு இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் என உங்களுக்கே ஒரு முறை பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.//
நீங்களும் நானும் பேசி என்ன செய்வது வால்பையன்? அதனால் தலித்துகளுக்கு பைசா பிரயோசனம் கிடையாது. அவர்கள்தான் முன்னேறிக் கொள்ள வேண்டும். நாடார்கள் உதாரணம் அதனாலேயே காட்டப்பட்டது.

//பொருளாதாரத்தில் முன்னேறுவதை பற்றி பிறகு பேசுவோம், நான் கேட்பது சுயமரியாதை.//
அதேதான். ஆகவேதான் “உங்களிடம் பைசாவும் வாங்கிக் கொண்டு தனிக்குவளையில் டீ தரும் கடைகளை புறக்கணியுங்கள்” என சொன்னேன். அதற்குத்தான் ஒரு தலித் என்னுடன் பேசும்போது அம்மாதிரி டீக்கடைகளை அரசு வைத்து கொடுக்குமா எனக் கேட்டார். :((

//சென்ற பின்னூட்டதில் சொன்னது தான்! நீயும் முன்னேறு என்று வெற்றி பெற்ற குழு ஊக்குவிப்பதில்லை! முடிந்த அளவு அதை அமுக்கவே பார்க்கிறது, காரணம் வெற்றி(உயர்சாதி என்னும்) பெற்ற திமிர்//
வெற்றிபெற்ற குழு ஊக்குவிக்கும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்? சரித்திரத்தில் மிக அபூர்வமாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது, நாடார்கள் தங்கள் முழு சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தனர். அப்படித்தான் திமிர் இருக்கும். அதை அவர்கள் பெருமிதம் என்று சொல்கிறார்கள் அவ்வளவே. மற்றப்படி அவர்களை பார்த்து தலித்துகளும் ஒட்டுமொத்தமாக முன்னேற வேண்டியதுதான். எப்போதுமே ஆக்ஸிஜன் சிலிண்டரை வைத்து உயிர் வாழ இயலாது. சொந்தமாகவும் மூச்சு விட வேண்டும். இப்போது போய் அவர்களிடம் சாதியெல்லாம் இல்லை என பொய்யான ஆறுதலை தருபவர்களிடம்தான் தலித்துகள் கவனமாக இருத்தல் நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

நாடார் சமூகம் முன்னேறியது, செட்டியார் சமூகம் முன்னேறியது என்கிறீர்களே தவிர அது ஏன் பின் தங்கியது? அவர்கள் பின் தங்கி இருந்தபோது மற்ற சமூகம் ஏன் கண்டுகொள்ளவில்லை
அனைத்திற்கும் காரணம் சாதி தானே!

சாதியால் ஒரு சமூகம் பின் தங்கியுள்ளதே தவிர மற்ற பிரச்சனைகள் நாமளே தீர்த்து கொள்ளகூடியதே!

இப்போது பின் தங்கியுள்ளவர்களுக்கு அரசு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும், அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை, அதே நேரம் அவர்களாஇ கடைசி வரை நீ தலித் என்று சொல்லிகொண்டே இருப்பது. உயர்சாதிகளின் அரசியல் என நான் கருதுகிறேன்

வால்பையன் said...

//நீங்களும் நானும் பேசி என்ன செய்வது வால்பையன்? அதனால் தலித்துகளுக்கு பைசா பிரயோசனம் கிடையாது. அவர்கள்தான் முன்னேறிக் கொள்ள வேண்டும். நாடார்கள் உதாரணம் அதனாலேயே காட்டப்பட்டது.//

அவர்களாகவே முன்னேற வேண்டும்.
சரி
உயர்சாதிய தடைகளை என்ன செய்யலாம்.

வால்பையன் said...

//ஒரு தலித் என்னுடன் பேசும்போது அம்மாதிரி டீக்கடைகளை அரசு வைத்து கொடுக்குமா எனக் கேட்டார்//

சோறு போட்டா ஊட்டி விடு என்று சொல்பவர்களை பற்றி வேண்டாம், உண்மையிலேயே முன்னேற வேண்டும் என ஆரவத்தில் நிறைய பின்தங்கிய வகுப்பை சேர்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள்

வால்பையன் said...

//அவர்களிடம் சாதியெல்லாம் இல்லை என பொய்யான ஆறுதலை தருபவர்களிடம்தான் தலித்துகள் கவனமாக இருத்தல் நலம்.//

சாதியில்லை என்பதால் தலித்துகள் முன்னேறமுடியாது என்பதை தான் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

அவர்களாகவே முன்னேற வேண்டும் என்றால் உயர்சாதி என்னும் தடைகளை என்ன செய்வது. கவனமாக இருக்கவேண்டியது சாதி இல்லையென்று சொல்பவர்களிடமா?

நீ தலித் என்று உயர்சாதிய திமிர் காட்டுபவர்களிடமா?

Anonymous said...

சாதி இல்லை, சாதி இல்லை என்று வாயால் சொன்னால் மட்டும் போதுமா ?

அது இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி என்று நாடார் சமுதாயம் காட்டியிருக்கிறது. இன்று நாடார்களை யாரும் இரட்டை குவளை முறையில் நடத்துவதுல்லையே ? அவர்களும் மேலே வந்துவிட்டார்கள். இது நடைமுறை உண்மை நிலை.

சும்மா சாதி இல்லை என்று சொல்லிவிட்டு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடுபவர்கள் எல்லாம் சமூக நீதிக்காவலராக தலித்து மக்கள் ஏற்றுக் கொண்டு ஏமாறும் வரையில் சாதி, சாதீயம், உயர்சாதீயம் (சில மரமண்டைகளுக்கு பார்ப்பானீயம்) அழியவே அழியாது.

Anonymous said...

வால் அய்யா ,
//ஒரு சந்தேகம்
பள்ளி, பல்லி ரெண்டையும் சொல்லிப்பாருங்கள். உச்சரிப்பு ள்.ல் -லில் வருகிறதா? இல்லை “ப”-வில் வருகிறதா?//


ந‌ம்ம‌ கிட்ட‌ இருக்க "நிறை"ய‌ நீங்க "குறை"யா பார்கிறீங்க‌ளோன்னு நான் நினைக்கிறேன்.

ஹிந்தில‌ இருக்க‌ மாதிரி "க"வில "த‌" வில‌ எல்லாம் நாம‌ வெரைட்டி வ‌ச்சுகிட‌ல‌! அதுக்குப் ப‌திலா ப‌க்க‌த்தில‌ வ‌ருகிற‌ எழுத்தால‌ ஒரு இடி கொடுத்து த‌குந்த‌ உச்ச‌ரிப்பைப் பெறுகிறோம்.

வாத்தியாரைப் பார்த்தால் வணக்கம் சார் என்போம், அதே சம‌யம் நன்பனை பார்த்தா வணக்கம் சொல்லாம முதுகில இன்னாடான்னு ஒரு தட்டு தட்டுறோம் இல்லையா அது மாதிரி இடத்துக்கு தகுந்த உச்சரிப்பை கொண்டுவருவது நம்ம மொழியின் சிறப்பில்லையா.

முதல் எழுத்துக்கு உச்ச‌ரிப்பு ஏன் மாறுது, ப‌க்க‌த்தில‌ வருகிற எழுத்தினால‌‌ தானே. இங்கே முத எழுத்து வெறும் ச‌க்க‌ர‌ம் தான் அடுத்த எழுத்து தான் ஸ்டிய‌ரிங்.

வால் சார் , நிச‌மாவே "ப‌" உச்ச‌ரிப்பு மாறுதா ? நான் ந‌டு வெயில்ல‌ நின்னு "ப‌ல்லி" "ப‌ள்ளி" ‍என்று க‌த்திப் பார்த்த‌தில் ஒரு வித்தியாச‌மும் "ப‌" வில‌ தெரிய‌ல‌.

வால‌றுந்த‌ ந‌ம்பி

வால்பையன் said...

//நிச‌மாவே "ப‌" உச்ச‌ரிப்பு மாறுதா ? நான் ந‌டு வெயில்ல‌ நின்னு "ப‌ல்லி" "ப‌ள்ளி" ‍என்று க‌த்திப் பார்த்த‌தில் ஒரு வித்தியாச‌மும் "ப‌" வில‌ தெரிய‌ல‌.//

அண்ணே நீங்களே ஒத்துகிட்டிங்க
ஹிந்தியில இருக்குற மாதிரி க,ஹா நம்மகிட்ட இல்லைன்னு, அதே மாதிரி உச்சரிப்பு தான் இதுவும்.

பல்லி என்பதை palli என்று உச்சரிப்போம். பள்ளி என்பதை bhalli என்று உச்சரிப்போம்.

ஆக ”ப”வுக்கு தான் சிறப்பு உச்சரிப்பு ழ்’ க்கு இருப்பது போல் எந்த சிறப்பும் ல்க்கும் ள்க்கும் இல்லை

Anonymous said...

\\அது இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி என்று நாடார் சமுதாயம் காட்டியிருக்கிறது. இன்று நாடார்களை யாரும் இரட்டை குவளை முறையில் நடத்துவதுல்லையே ? அவர்களும் மேலே வந்துவிட்டார்கள். இது நடைமுறை உண்மை நிலை.\\

எல்லாச் சமுகத்திலும் இந்த ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள் உள்ளார்கள் என்பதற்கு ஒரு உண்மைச் செய்தி.

திருநெல்வெலி மாவட்டத்தில் ஒரு வியாபாரி செல்வந்தர் .அவர் நாடார் வகுப்பை சேர்ந்தவர்.முதலில் தன் வாழ்க்கையை ஏழ்மையில் தொடங்கி,கடுமையான உழைப்பால் இன்று உயர்ந்த நிலையில் உள்ளவர்.அவருக்கு படிப்பறிவு இல்லாததால் தனது வாணிப கணக்கு வழக்குகளை பார்க்க ஒரு சைவப் பிள்ளை வகுப்பை சேர்ந்த ஒருவரை வேலக்கு வைத்திருந்தார்.பிள்ளை அவர்கள் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.அந்த வியாபாரி கணக்கப் பிள்ளையை மிக கீழ்த்தரமாய் நடத்துவார்.பிள்ளைக்கு பிழைக்க வேறு வழி இல்லாதால் இந்தக் கொடுமைகளை அனுபவித்தார்.

வசதியும் வாய்ப்பும் வந்ததும் கர்வம் வருவது மனிதன் ,எந்த ஜாதியானாலும் வாடிக்கை தான் போலும்
ஜாதீய ஆட்டம் பாட்டங்கள் தொடர்கின்றன வேறு வடிவில் இன்னொருவர் கையில்.

இன்று உண்மை நிலை பல கிராமங்களில் இது தான் .
சைவப் பிள்ளைமார்களின் நிலங்களையெல்லாம் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டவர்கள் இப்போது நெல் குத்தகை கொடுப்பது கிடையாது.
அரசின் சட்டங்களும் குத்தகைதாரர்களுக்கே சாதாகமாய் இருப்பதால் நிலங்களை விற்க முடியாச் சூழ்நிலை.பல குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுகிறது.
அரசின் இடஒதுக்கிட்டுக் கொள்கையிலும் பொருளாதார அளவு கோல் இல்லாததாலும்,மக்கள் தொகையில் எண்ணிக்கையில் கம்மியாய் இருப்பதாலும் பிள்ளைமார் சமுகத்தை எந்தக் கட்சியும் கண்டு கொள்வது கிடையாது.இதற்கு திருநெல்வேலித் தொகுதி மட்டும் விதிவிலக்கு.
அரசுத் துறையில் வேலைவாய்ப்பும் குறைந்து விட்டது.

எம்ஜீஆர் புண்யவானும் ஏதோ புரட்சி செய்வதாய் நினைத்துக் கொண்டு கர்ணம்,கணக்குப்பிள்ளை பதவிகளை திடிரென ஒழித்ததில் பெரிதும் பாதிக்கப் பட்டது இந்த சமுதாயம் தான்.

அறிவில் பார்பனருக்கு இணையாக கருதப் பட்ட சைவப் பிள்ளைமார் சமுகம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் ஏராளம்.

அறிவால் உயர்ந்திருந்த ஒரு சமுகம் தற்கால ஓட்டு அரசியலால் அமுக்கப் பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு ஒரேடியாய் காற்றில் மறைந்து விடும் போலிருக்கிறது.

அவர்களின் சிறப்பு பற்றி இதே குமுதத்தில் ஒரு கட்டுரை வந்துள்ளது "சைவம் வளர்த்த சைவப் பிள்ளைமார்" .அனைவரும் படிக்கவும்.


பின்தங்கியவர்களை முன்னெற்றவேண்டியது நியாயமான ஒன்று.
அதை யாரும் மறுக்க வில்லை

முன்னேறிய ஒரு பண்பாடான சமுகத்தை மைனாரிடி என்பதற்காக அடக்கி ஒடுக்கி இருட்டறையில் தள்ளுவது சரியா?

இரண்டு தலைமுறைக்கு முன்னால் நடந்த அதே தவறுகளை இப்போதும் நடத்துவது நியாயமா?

கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து மாதம் லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நாடார் சமுகத்தை சார்ந்த
குழந்தைகளுக்கு( பிற பிற்பட்ட ஜாதிகளுக்கும்) கல்லுரிவரை( பி.ஜி) இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் அரசு ,அதே நாடார் சமுக வியாபாரியிடம் மாதம் 3000 சம்பளம் வாங்கும் கணக்கப்பிள்ளையின் வாரிசுகளுக்கு ( அவர் முற்படுத்தப்பட்டவர் என்ற முத்திரை) அரசுப் பள்ளிகளில், ப்ளஸ் 2 வில் கேட்ட குரூப் கிடக்காத சூழ்நிலை சரியா? தர்மமா?

அரசியல் கட்சிகள் எல்லாம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பொருளாதார லிமிட்டே இருக்கக் கூடாது எனும் கோரிக்கை வேறு வலுக்கிறது.

வீரபாண்டிய கட்ட பொம்மனின் அமைச்சரரான தானபதிபிள்ளையும்,செக்கிழுத்த செம்மல் வ.உ.சியையும்,புலமை பித்தனையும், தந்த சமுகம் , சைவம் வளர்த்து பெருவாழ்வு வாழ்ந்த
சமுகத்தின் இன்றைய நிலை?

உத்தப்பபுரத்தில் இந்த சமுகத்தினரில் ஒரு பகுதியினர் கோவில் வழிபாட்டில் ,ஆதிதிராவிடருக்கு ,அனுமதி வழங்கவில்லை என்றதும் அனைத்து அரசியல் கட்சிகளும்,அந்த அநீதியை எதிர்த்து போராடி, தலித்துகளுக்கு நியாயம் ஒரளவுக்கு கிடைக்கச் செய்தனர்.பாரட்டுக்கள் அனைவருக்கும்.
இது தர்மம் என்று டோண்டு சார் கருதுவது ஏற்புடையது.

ஆனால் தமிழகத்தின் பல கிராமங்களில் இந்தப் பிள்ளைமார் சமுகம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நீங்குமா ?

வால்பையன் said...

//கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து மாதம் லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நாடார் சமுகத்தை சார்ந்த
குழந்தைகளுக்கு( பிற பிற்பட்ட ஜாதிகளுக்கும்) கல்லுரிவரை( பி.ஜி) இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் அரசு ,அதே நாடார் சமுக வியாபாரியிடம் மாதம் 3000 சம்பளம் வாங்கும் கணக்கப்பிள்ளையின் வாரிசுகளுக்கு ( அவர் முற்படுத்தப்பட்டவர் என்ற முத்திரை) அரசுப் பள்ளிகளில், ப்ளஸ் 2 வில் கேட்ட குரூப் கிடக்காத சூழ்நிலை சரியா? தர்மமா?//

அண்ணே இதுக்கு தான் சாதியே வேண்டாம்னு கத்திகிட்டு இருக்கேன்!

வேண்டாம்ணே உழைபோம் முன்னேறுவோம், சாதி அடையாளம் வேண்டாம்ணே

Anonymous said...

\\அண்ணே இதுக்கு தான் சாதியே வேண்டாம்னு கத்திகிட்டு இருக்கேன்!

வேண்டாம்ணே உழைபோம் முன்னேறுவோம், சாதி அடையாளம் வேண்டாம்ணே\\

உங்களின் வாதம்-தர்க்கம் அனைத்தும் படிப்பதற்கும் கேட்பதற்கும் அருமை.

கண்கள் பனிக்கிறது
நெஞ்சம் இனிக்கிறது.

ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது.

பள்ளிக்கூடத்துக்ககுப் போகும் போதும் ஜாதி கேட்கிறாங்க!
பாடையிலே போகும் போதும் ஜாதி பாக்கிறாங்க!

சினிமாவிலேயும் ஜாதி பரப்புறாங்க!
சின்னத்திரையிலும் ஜாதி கிளப்புறாங்க!

வலையுலகிலும் ஜாதி சண்டையுங்கோ!
வால்பையன் போராடுவது நல்லதுக்குங்கோ!

வால்பையன் said...

//பள்ளிக்கூடத்துக்ககுப் போகும் போதும் ஜாதி கேட்கிறாங்க!
பாடையிலே போகும் போதும் ஜாதி பாக்கிறாங்க!

சினிமாவிலேயும் ஜாதி பரப்புறாங்க!
சின்னத்திரையிலும் ஜாதி கிளப்புறாங்க!//

அந்த நாய்களின் ”முன்னால்” இருக்கும் வாலை வெட்டிவிடவதே சரியானது.

இவர்கள் அரசியலுக்கு அப்பாவி மக்களே பலியாகிறார்கள்

dondu(#11168674346665545885) said...

//கவனமாக இருக்கவேண்டியது சாதி இல்லையென்று சொல்பவர்களிடமா?
நீ தலித் என்று உயர்சாதிய திமிர் காட்டுபவர்களிடமா?//
பின்னவர்கள் எதிரிகள் என நிச்சயம் தெரிந்து விடுவதால் அவர்களை டீல் செய்ய யோசித்தால் போதும். ஆனால் சாதியே இல்லையென கூறுபவர்களை பாம்பென்று ஒதுங்கவும் இயலாது பழுதை என மிதிக்கவும் இயலாது. அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அது சரி(18185106603874041862) said...

டோண்டு சார்,

ஜாதிய உணர்வு என்பது இரு புறமும் வெட்டும் கத்தி....சிலர் அதை தாங்கள் நடந்து வந்த பாதை, செல்ல வேண்டிய பாதை என்று எடுத்துக் கொள்ளலாம்...ஆனால் பலர் அதை மற்ற ஜாதிகளை விட தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்று சொல்ல உபயோகிக்கலாம்..உண்மையா இல்லையா??

ஜாதி இருக்கிறது என்று நீங்கள் சொல்வது உண்மையே...ஆனால் அது ஒழிக்கப்பட வேண்டியதா இல்லையா?? இன்றைக்குள் அதை ஒழிப்பது கற்பனைக்கு எட்டாத விஷயமாக இருக்கலாம்...ஆனால் ஒரு நூறு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது ஜாதி அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்திருக்கிறதா இல்லையா?

இப்பொழுது ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் ஜாதியை முற்றிலும் ஒழித்து விட முடியாதா என்ற நம்பிக்கை தான்....

வால் பையனின் பதிவிலும் ஒரு பின்னூட்டம் இட்டேன்...அதையே இங்கும் இடுகிறேன்.

//
நர்சிம் எழுதிய பதிவையும் படித்தேன்...டோண்டு சார் எழுதிய பதிவையும் படித்தேன்...

நர்சிம் சொல்வது போல குமுதம் வேண்டாத வேலையை செய்து வருவதாகத் தான் தோன்றுகிறது... இப்பொழுது தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக (ஓரளவு) ஜாதி சண்டைகள் பெரிய அளவில் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது...ஆனால் குமுதம் விடாது கருப்பு ரேஞ்சில் விடாது போலிருக்கிறது... ஒரு வேளை அவர்கள் ஜாதிகளின் போராட்டத்தை பதிவு செய்கிறோம், பெருமைப்படுத்துகிறோம் என்று காரணம் சொன்னாலும் பலருடைய ஜாதி திமிரை வளர்க்கவே அந்த கட்டுரைகள் உதவக்கூடும்...தேவர் மகனில் வரும் போற்றிப்பாடடி பொண்ணே பாடல் சில எதிர்பாராத விளைவுகளை இன்றைக்கும் ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது!

ஜாதி இருக்கிறது என்பது உண்மையே...ஏன் பூமியில் பல கிருமிகள், நோய் பரப்பும் வைரஸ் கூட இருக்கிறது...அதற்காக இருக்கிறது...ஒன்றும் செய்ய முடியாது என்று விடமுடியுமா??

ஜாதி வேண்டாம் என்பது இன்றைக்கு வெறும் முற்போக்கு கருத்தாகவும், ஏட்டுச் சுரைக்காயாகவும் தோன்றலாம்....ஆனால், சரித்திரத்தை திரும்பி பார்த்தால் ஒரு காலத்தில் ஜாதியை போட்டுக் கொள்வது பெருமையாக இருந்திருக்கிறது...இன்றைக்கு பலரும் ஜாதியை போட்டுக் கொள்வதில்லை...

மிக வெளிப்படையாக இருந்த ஜாதி அடையாளங்கள் தவறு என்று புரிய வைக்கவே இத்தனை வருடம் ஆகியிருக்கிறது....அது போல் என்றாவது ஒரு நாள் ஜாதி என்ற அமைப்பே தவறு என்று எல்லாருக்கும் புரியலாம்...
//

அது சரி(18185106603874041862) said...

ஒரு காலத்தில் கறுப்பினத்தவர் அமெரிக்காவில் அடிமையாக இருந்தனர். இன்று ஒரு கறுப்பினத்தவரே அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். யாரும் என்னை கண்டிப்பதற்கு முன், அவர் இந்த காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை....அவருக்கு இருக்கும் உண்மையான தகுதி காரணமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது எனக்கும் தெரியும்..

நான் சொல்ல வருவது, அமெரிக்காவில் இனப்பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது போல் இந்தியாவில் ஜாதிப் பிரச்சினையும் மெதுவாக தீர்க்கப்படும்...May be in next 100 years!

Anonymous said...

//கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து மாதம் லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நாடார் சமுகத்தை சார்ந்த
குழந்தைகளுக்கு( பிற பிற்பட்ட ஜாதிகளுக்கும்) கல்லுரிவரை( பி.ஜி) இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் அரசு ,அதே நாடார் சமுக வியாபாரியிடம் மாதம் 3000 சம்பளம் வாங்கும் கணக்கப்பிள்ளையின் வாரிசுகளுக்கு ( அவர் முற்படுத்தப்பட்டவர் என்ற முத்திரை) அரசுப் பள்ளிகளில், ப்ளஸ் 2 வில் கேட்ட குரூப் கிடக்காத சூழ்நிலை சரியா? தர்மமா?//


பிள்ளைமார் சமூகத்திற்கு( இந்தியாவின் பிறந்த ஜாதகம் போல்) அவர்களின் லக்ணத்தில் ராகு இருப்பான் அல்லது அவர்களுக்கு நடப்பது ராகு திசை அல்லது ராகு புத்தி போலிருக்கு.

ராகு தலைகீழாய் கட்டி வைத்து அடிப்பானாம்.

சத்யம் கணனி நிறுவன அதிபர் ராஜூ மாட்டிக் கொண்டதும் இந்த ராகு பகவானின்(தசா புத்தியால்)கோபத்தால் தானாம்.

dondu(#11168674346665545885) said...

//ஜாதிய உணர்வு என்பது இரு புறமும் வெட்டும் கத்தி....சிலர் அதை தாங்கள் நடந்து வந்த பாதை, செல்ல வேண்டிய பாதை என்று எடுத்துக் கொள்ளலாம்...ஆனால் பலர் அதை மற்ற ஜாதிகளை விட தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்று சொல்ல உபயோகிக்கலாம்..உண்மையா இல்லையா??//
சரித்திரத்தில் அபூர்வமாக நிகழும் ஒரு நிகழ்ச்சி, இம்மாதிரி ஒரு சாதியினர் தமது சொந்த முயற்சி மூலமே தம்மை உயர்த்தி கொண்டது. அது கண்டிப்பாக அவதானிக்க வேண்டியது. அவரது பழைய நிலையில் இன்னும் இருக்கும் தலித்துகளுக்கு முன்மாதிரியாக அதை கூறுவதும் இப்பதிவின் நோக்கமாகும். இதற்கு நீங்கள் சொன்ன விளைவுகளும் இருக்கலாம்.

அதற்காக இதை கூறக்கூடாது என்றால் இப்படியும் கூறலாம்.

மின்சாரத்தால் ஷாக் அடித்து பலர் இருக்கின்றனர் ஆகவே மின்சாரமே வேண்டாம் என கூறலாம்.

ரயில்களில் செல்வதால் ஆபத்து ஆகவே ரயில் பயணங்களே வேண்டாம் என நினைக்கலாம். சில நாட்கள் குண்டு வெடிக்கும் என ரயில் பயணங்களையே தவிர்க்கலாம் (டிசம்பர் 6-ஆம் தேதி போல).

கால்பந்து விளையாட்டினால் இரு லத்தீன அமெரிக்க நாடுகளிடையே யுத்தமே வந்ததாக ஒரு முறை படித்துள்ளேன். ஆகவே விளையாட்டு போட்டிகளே வேண்டாம். ஆளுக்கு ஒரு கால்பந்து வாங்கி தந்து விடுங்கள் என்ற ரேஞ்சில் பேசலாம்.

கிரிக்கெட்டால் சூதாட்டம் வளர்கிறது. பாக்ஸிங்கில் முன்னமேயே வெற்றி பெற வேண்டியவர்களை தீர்மானிக்கிறார்கள். ஆகவே அவை எல்லாம் வேண்டாமே. எதற்கு அவை? டெண்டுல்கர் போன்றவர்கள் விளம்பரம் மூலம் கோடிக் கோடியாக சம்பாதிப்பதுதானே நடக்கிறது?

விளம்பரம் என்பது பொய்களால் உருவானது. இன்ன பொருள் இந்த விடத்தில் விற்பனையாகிறது என வெறும் தகவல் அளித்தால் போதாதா?

செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தான் மெமரி ப்ளஸ் போன்ற மருந்தை உபயோகிப்பதாக கூறுவது எவ்வளவு அபத்தமான விளம்பரம், ஆகவே விளம்பரங்களியே தடை செய்து விடலாமா?

நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட் ஆஃப் காண்டக்ட் இருக்கிறது என. அப்படியானால் இப்போது காம்ப்ளானும் ஹார்லிக்சும் நடத்தும் யுத்தம், பெப்சியும் கோக்கோ கோலாவும் நடத்தும் போர் ஆகியவற்றை விளக்குவீர்களா?

//இப்பொழுது ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் ஜாதியை முற்றிலும் ஒழித்து விட முடியாதா என்ற நம்பிக்கை தான்....//
மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பார்ப்பனீயம் என்று ஒன்றுதான் இருக்கிறது. உயர்சாதீயம் என்று ஒன்று இல்லை.

பார்ப்பனர்கள், தங்களை பிறர் உயர்ச்சாதி என்று சொல்லி மதிக்கவேண்டும் என்று கட்டிவிட்ட கதைதான், இந்த சாதிமுறைகள்.

தங்களைத்தானே உயர்த்திக்கொள்ள அவர்கள் இப்படியெல்லாம் செய்தார்கள்.

பிறரை ஏமாற்றாமல் உயர்வது என்பது மிகச்சில தனிமனிதர்களால்தான் முடியும். பலவினங்கள் வாழும் இடத்தில், இப்படிப்பட்ட சூழ்ச்சிமுறைகளைக் கையாள்பவரே வெற்றி பெருவர்.

நீங்கள் கூறும் நாடார்களும், பார்ப்பனரும், மற்றும் எவரேனும், இப்படி உயர்ந்தவரே.

உடல் உழைப்பு மட்டுமே இருந்தால், அவன் சாக்கடை கழுவத்தான் போவான். மூளை (அதாவது, தந்திரம்) யும் வேண்டும். பார்ப்பனர் அதற்கு இந்து மதத்தை பயன்படுத்தினர். மற்றவர், மற்றவற்றைப் பயன்படுத்தினர்.

தென்மாவட்டங்களில் நாடார்களைப் பற்றிக் கேட்டுப்ப்பாருங்கள் நிறையச் சொல்வார்கள். அதையெல்லாம் இங்கே எழுத முடியாது.

உங்களுக்கு வேண்டியது நேரடி அனுபவம். வெறும் புத்தகப்படிப்பை வைத்து ஒரு இனமக்களைப் பற்றி நீங்கள் எழுத முடியாது.

Anonymous said...

//நீங்கள் கூறும் நாடார்களும், பார்ப்பனரும், மற்றும் எவரேனும், இப்படி உயர்ந்தவரே.//


ஒரு காலத்தில் நெல்லை மாவட்டதில் அனைத்து துறைகளிலும் கோலோச்சிவந்த சைவப் பிள்ளைமார் சுமுகத்தின் நிலை இப்போது சொல்லிக்கொள்வது போல் இல்லை.

இன்றைய சூழ்நிலையில் நாடார் குலப் பெருமக்கள் தான் அத்துணை துறைகளிலும் வியாபித்து இருக்கிறார்கள்.

பிள்ளைமார் சொத்துக்கள் வீடு நில புலன்கள் இன்று முக்கால் வாசி நாடார் வசம் கைமாறிவிட்டது. நெல்லை மாவட்டத்தில் பார்ப்பனர் வாழ்ந்த அக்ரகாரங்களே இன்று பெரும் பகுதி நாடார் வசம்.

தமிழக்த்தின் மொத்த பல சரக்கு வியாபாரம் அவர்களின் கட்டுப்பாட்டில்
பிற்பட்டோர் என்னும் அரசின் சலுகை,வாணிபத்தில் கொட்டும் பணம்,கடின உழைப்பு,வாய்யப்புகளை மிகச் சரியாய் பயன் படுத்தும் செயல் திறமை,சமுதாய ஒற்றுமை, இவற்றால் இன்று பல அரசுத் துறைகளில் நாடார் குல பெருமக்களின் ஆட்சிதான். வக்கீல்கள்,மருத்துவர்கள்,பொறியாளர்கள்,மென்பொருள் வல்லுனர்கள் என எல்லாத் துறையிலும் இன்று பார்ப்பனர் போல் முன்னேறிய நிலையில் உள்ளனர்.

அரசின் விதிகளின் படி முன்னேறிய சாதிப் பட்டியலில் உள்ள ஜாதிகள் எல்லாம் பின் தங்கிய நிலயில் .ஆனால் நாடார் சமுகம் அடைந்துள்ள நிலை மற்ற ஒடுக்க பட்ட ஜாதிகளுக்கு ஒரு வழிகாட்டியாய்,பாடமாய் அமைந்தால் டோண்டு சார் சொல்வது போல் வருங்காலத்தில் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

அது சரி(18185106603874041862) said...

//
நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட் ஆஃப் காண்டக்ட் இருக்கிறது என. அப்படியானால் இப்போது காம்ப்ளானும் ஹார்லிக்சும் நடத்தும் யுத்தம், பெப்சியும் கோக்கோ கோலாவும் நடத்தும் போர் ஆகியவற்றை விளக்குவீர்களா?
//

மிக நல்ல வாதம்....ஆனால்....

எலெக்ட்ரிக் ஷாக் அடிக்கிறது என்பதற்காக கலவரங்கள் வந்ததில்லை...க்ரிக்கெட், ஃபுட் பாலில் தங்கள் அணி தோற்று விட்டது என்று அடுத்த அணிக்காரனையும், அவன் ஊரையும் கொளுத்துவதில்லை...அப்படி செய்தால் அந்த விளையாட்டை நிறுத்தி வைக்கும்படி கோர வேண்டியது தான்...இதே போல் தான் பெப்சியும் கோக்கும்....பெப்சி குடிப்பவர்கள் கோக் குடிப்பவர்களை தொட மறுப்பதில்லை...அவர்களை குத்தியும் கொல்வதில்லை...நீங்கள் சொல்வது, ஜாதிக் கலவரங்களும், இந்த சண்டைகளும் ஒன்று தான் என்று சொல்வது போல் இருக்கிறது (இல்லை எனக்கு அப்படி புரிகிறது).

//
மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?
//

மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன்...உண்மையே...சமூகம் என்ற கட்டமைப்பே இந்த குழு மனப்பான்மையால் உருவான ஒன்றே...

ஆனால் சில குழு மனப்பான்மைகளால் பெரிய ஆபத்து இல்லை..உதாரணம் மதுரைக்காரன், திருச்சிக்காரன், சென்னைவாசி போன்ற குழு மனப்பான்மைகள்...மதுரைக்காரன் சென்னையில் வாழ்ந்தால் அவன் சென்னைவாசி ஆகிவிடுவான்...திருச்சிக்காரன் அமெரிக்கா போனால் அடுத்து வரும் அவன் பிள்ளைகள் அமெரிக்காகாரனே தவிர, திருச்சிக்காரன் அல்ல... ஏழை என்ற குழுவில் இருப்பவன் உழைப்பின் பேரில் பணக்கார குழுவில் இடம் பிடிக்கலாம்...இப்படி ஒரே தலைமுறையில் சில குழு மனப்பான்மைகளை ஒழித்து விடலாம்....ஆனால் ஜாதி அப்படியா?? எத்தனை தலைமுறை ஆனாலும் மாற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது???

உங்கள் பதிவின் நோக்கம் பற்றி எனக்கு சந்தேகமில்லை...நீங்கள் மிகுந்த கஷ்டமான நிலையில் இருந்த நாடார் சமூகம் எப்படி முன்னுக்கு வந்தார்கள் என்பதை காட்டும் நல்ல எண்ணத்துடன் தான் பதிவிட்டிருக்கிறீர்கள்...ஆனால் அந்த சமூகம், இன்னும் பல சமூகங்கள் கொடுமைப்படுத்தப்பட அடிப்படையான காரணம் ஜாதி அமைப்பல்லவா??

Anonymous said...

Shall we put them in Forward Caste list now that they have came up to this level ? Do they still need reservation?

dondu(#11168674346665545885) said...

//பார்ப்பனீயம் என்று ஒன்றுதான் இருக்கிறது. உயர்சாதீயம் என்று ஒன்று இல்லை.//
உளறல். இப்போது உயர்சாதீயம் பார்த்து வன்கொடுமை செய்வது பார்ப்பனர் அல்ல. ஆகவே அதையும் பார்ப்பனீயம் என்று சொன்னால் நிஜ பார்ப்பனர்கள் இவன்களுக்கு வேற வேலையே இல்லை அடிச்சுட்டு சாகட்டும்னு கூறிவிட்டு விவாதங்களுக்கே வரமாட்டார்கள். அந்த அளவுக்கு உங்கள் கட்சி பலவீனமடையும். அது இருக்கட்டும், நீங்கள் ஏன் இதை சொல்ல முக்காடு போட்டு வருகிறீர்கள்?

//க்ரிக்கெட், ஃபுட் பாலில் தங்கள் அணி தோற்று விட்டது என்று அடுத்த அணிக்காரனையும், அவன் ஊரையும் கொளுத்துவதில்லை//
ஃபுட்பால் போட்டி சண்டையில் இரண்டு லத்தீன அமெரிக்க நாடுகளுக்கிடையில் பெரிய யுத்தமே வந்தது என நான் படித்திருக்கிறேன்.

அப்ப மதங்கள்? அவற்றை மட்டும் ஏன் வைத்திருக்க வேண்டும்? பெப்சி கோக் விளம்பர யுத்தங்களால் எவ்வளவு பொருள் விரயம்? விளம்பரங்களையே வெறுமனே தகவல் சொல்வது போல நிறுத்தி வைக்கலாமா?

நான் கொடுத்த உதாரணங்கள் எந்த விஷயத்துக்கும் இரு பக்கங்கள் உண்டு என சொல்வதற்கே. இங்கு இணையத்தில் வெறும் வாயை மென்று சாதி ஒழிக எனக் கூச்சல் போட்டுவிட்டு தத்தம் சந்ததியினருக்கு பெண்ணோ பிள்ளையோ விளம்பரம் மூலம் தங்கள் சாதியிலேயே தேடுகின்றனர். சாதியால் பலனே இல்லை என்பதா உங்கள் கட்சி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

\\Anonymous said...
Shall we put them in Forward Caste list now that they have came up to this level ? Do they still need reservation?\\

பிற்பட்டோரில் உண்மையாய் ஏழ்மை நிலையில் உள்ளோரைப் பாதுகாக்கத்தான் உச்ச நீதி மனறம் கீருமி லேயர் கான்சப்ட்டை கொண்டு வந்ததும்

உடனே கலைஞர்,வீரமணி,ராமதாசு போன்ற மகான்கள், பெரிய பனக்கரார்களாய்,கோடிகளுக்கு அதிபதியாய் இருந்தாலும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகை கிடைக்க வேண்டும் என்ற சுயநலப் போக்குடன், உடனே பார் !பார்! பார்ப்பனர்கள் நீதிபதிகளாய்

இருந்து கொண்டு மீண்டும் வருணாசிரமத்தை கொண்டு வரப் பார்க்கிறார்கள்.நிதிபதியிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட ஆரம்பித்துள்ளனரே!

மாதத்திற்கு 40,000 சம்பளம் வாங்குவோர் ( க்ருமி லேயர் 4.5 லட்சம்)இட ஒதுக்கீட்டு பங்கீட்டில் இடம் பிடித்து விட்டால் அந்த ஜாதியில் உள்ள ஏழைகள், அன்றாடம் காய்ச்சிகள் பாடு எப்படி விடியும்.

இதற்கு ஒரே தீர்வு.
பாதிக்கப் படும்
பிற்பட்டோரே, அவர்கள் பகுதிகளில் அரசியல் சக்திகளின் ஆதரவில் நடந்துவரும் இந்த உயர் சதீய உணர்வை எதிர்த்து போரடினால் மட்டுமே இது சாத்யம்.

Anonymous said...

//பிற்பட்டோரில் உண்மையாய் ஏழ்மை நிலையில் உள்ளோரைப் பாதுகாக்கத்தான் உச்ச நீதி மனறம் கீருமி லேயர் கான்சப்ட்டை கொண்டு வந்ததும் உடனே கலைஞர்,வீரமணி,ராமதாசு போன்ற மகான்கள், .........//

I agree with your comments.

//மாதத்திற்கு 40,000 சம்பளம் வாங்குவோர் ( க்ருமி லேயர் 4.5 லட்சம்)இட ஒதுக்கீட்டு பங்கீட்டில் இடம் பிடித்து விட்டால் அந்த ஜாதியில் உள்ள ஏழைகள், அன்றாடம் காய்ச்சிகள் பாடு எப்படி விடியும்.//

Not only in the BC community, creamy layer should also be taken into account the poor from the socalled FC community.

//இதற்கு ஒரே தீர்வு.
பாதிக்கப் படும்
பிற்பட்டோரே, அவர்கள் பகுதிகளில் அரசியல் சக்திகளின் ஆதரவில் நடந்துவரும் இந்த உயர் சதீய உணர்வை எதிர்த்து போரடினால் மட்டுமே இது சாத்யம்.//

I really doubt this. Most of the BC community still look upto their creamy layer society (in their own community) for each and everything.


I salute Nadar's resolve. I do not like the attitude of few fellows from this community (more on the personal side than on the social side), I clearly understand Dondu's point.

Anonymous said...

நாடார் சமுகம் பழங்காலத்தில் அனுபவித்த அடக்குமுறைகள் அதை எதிர்த்து வெற்றி கண்ட அவர்களது பெருமைகளையும் தாங்கள் பதிந்த பிறகு, இது சார்பான பிற பதிவர்களின் பதிவுகள் வாசகர்களுக்கு பல உண்மைகளை சொல்லியிருக்கிறது.

இந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு
பற்றிய விரிவான பதிவு அதன் சாதங்கள்,பாதகங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் பல உண்மைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் பதியவும்.

Vadielan R said...

ரொம்ப நாட்களாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கொடுத்து உள்ளீர்கள் நன்றி

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது