10/28/2010

நஜ்மா பீவி, ஷேர் அலியின் பிரச்சினை - அதன் தொடர்ச்சி

இப்பதிவை போட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அதை ஏன் மீள்பதிவு செய்ய நினைக்கிறாய் என்கிறான் முரளி மனோகர். ஏனெனில் அதே விஷயம் மறுபடியும் இப்போது நடந்து பெரிய பிரச்சினையாக கத்தார் நாட்டில் செல்கிறது என அறிகிறேன். இது பற்றி ஹிந்துவில் இன்றுதான் படித்தேன்.

முதலில் மீள்பதிவாக்கப்படும் எனது இப்பதிவை படித்து விடுவோம்:

நான் சாதாரணமாக டிஸ்க்ளைமர் எல்லாம் போடுவதில்லை. ஆனால் இப்பதிவுக்கு அது தேவை. மாற்று மதத்தினரின் மதநம்பிக்கையை நான் இங்கு கேள்வியெல்லாம் கேட்கவில்லை. அதை சம்பந்தப்பட்ட மதத்தினரே பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் நான் இங்கே பேச இருப்பது ஒரு தம்பதியினரைப் பற்றியும் அவர்களது இப்போதைய பிரச்சினை பற்றி மட்டுமே.

ஒரிஸ்ஸாவில் பட்ரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் காண்டாபானியா. அதில் வசிப்பவர்கள் நஜ்மா பீவியும் அவரது கணவர் ஷேர் அலியும். ஜூலை 5, 2003-ல் குடிபோதையில் ஷேர் அலி மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறியுள்ளார். அடுத்த நாள் இருவருமே அதை மறந்து தங்கள் வாழ்க்கையைத் தொடர, அவர்களை அவ்வாறு செய்ய விடாமல் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் தடுத்திருக்கிறார்கள். ஊர்ப் பெரியவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், நஜ்மா இன்னொருவரை மணந்து அவர் இவரை தலாக் சொல்லி, பிறகுதான் அவர் ஷேர் அலியைத் திருமணம் செய்து கொள்ள முடியும் எனக் கூறுகிறார்கள். இசுலாமியத் திருமணச் சட்டமும் அவர்கள் கூறுவது போலத்தான் உள்ளது.

இப்போது அவர்கள் தனியாக பக்கத்து கிராமங்களில் வாழ்கிறார்கள். விஷயம் சுப்ரீம் கோர்ட் வரை போய் விட்டது. சுப்ரீம் கோர்ட் அவர்கள் சேர்ந்து வாழ தடையேதும் இல்லை எனக் கூறிவிட்டது. கோர்ட்டின் வாக்கியங்களில்: "இந்த ஜோடியை தனியே வாழுமாறு கட்டாயப்படுத்த யாருக்குமே உரிமை இல்லை. இது ஒரு மதசார்பற்ற நாடு. எல்லா சமூகத்தினரும், ஹிந்துக்கள், இசுலாமியர் அல்லது வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் நாகரீகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்."

நஜ்மா பீவியும் ஷேர் அலியும் அரசு நிர்வாகம் இப்போது தலையிட்டு தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு நிர்வாகமோ தயங்குகிறது. இவர்களது போல ஏற்கனவே 50 கேஸ்கள் உள்ளன என்றும் எல்லோரும் பாத்குகாப்பு கேட்டால் தாங்கள் என்ன செய்வது என்பதுதான் நிர்வாகத்தின் நிலைப்பாடு.

இப்போது டோண்டு ராகவன். முத்தலாக் என்பது ஒத்துக் கொள்ளக்கூடிய முறை இல்லை என்று படித்ததாகத்தான் ஞாபகம். அம்முறையில் கூறப்பட்ட தலாக்கை மட்டும் இந்த ஊர் பெரியவர்கள் ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்?இப்போது சுப்ரீம் கோர்ட் வரை வந்துள்ள இந்த விவகாரம் உள்மதப் பிரச்சினை என்று விட்டுவிட வேண்டுமா? அதே போல இம்ரானா வழக்கு என்னவாயிற்று என்று யாராவது கூற முடியுமா?

எனக்கு சில சந்தேகங்கள். பாதிக்கப்பட்ட தம்பதியர் மதம் மாறினால் என்ன செய்ய முடியும், இந்து மதத்தில் இருதார திருமணங்கள் தடை என்றதும் பலர் இசுலாமிய மதத்துக்கு மாறியது போல? இக்கேள்வியை இங்கு வைப்பதுகூட இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தம்பதியருக்காகவே.

இத்தருணத்தில் கட்டை பஞ்சாயத்துகளை பற்றியும் பேச வேண்டியுள்ளது. இது மதங்களை மீறியது. ஊர்க்கட்டுப்பாடு என்ற போர்வையில் தனிப்பட்டவர் வாழ்க்கையில் தலையிடுவது பல பஞ்சாயத்துகளின் வழக்கமாகப் போயிற்று. பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 800 ரூபாய் அபராதம் விதித்து, பாதிக்கப்பட்ட பெண் போலிஸுக்கு போகக்கூடாது என்று கட்டுப்பாடும் விதித்ததாக ஒரு பதிவு நேற்று பார்த்தேன். மேல் விபரம் ஞாபகம் இல்லாததால் சுட்டி தர இயலவில்லை. எந்த கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என்பதைக்கூட பஞ்சாயத்தில் பலசமயம் கூறுகிறார்கள்.

மறுபடியும் கூறுவேன், இப்பதிவை போடுவது சம்பந்தப்பட்ட தம்பதியினர் நியாயம் பெற வேண்டும் என்பதற்காகவே.


மீண்டும் டோண்டு ராகவன். மேலே குறிப்பிடப்பட்ட தம்பதியருக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பதை அறிய இணையத்தில் தேடினால் அது கிடைக்கவில்லை. அது நடந்தது மதசார்பற்ற நாடான இந்தியாவில். ஆனால் மேலே உள்ள ஹிந்துவின் கட்டுரையில் நடந்ததோ கத்தார் நாட்டில்.

அக்கட்டுரையை இங்கே ஆங்கிலத்திக்லேயே இடுகிறேன்.

Talaq joke , while chatting with his wife on the net, may cost youth his marriage

Saharanpur (U.P.): A talaq joke to his wife on the Internet may cost an e-savvy youth his marriage.

The man, a resident of Qatar, spelt talaq thrice while chatting with his wife, but little did he know that his humorous intention could nullify his marriage in reality.

The Islamic seminary, Darul Uloom Deoband, has ruled that saying talaq thrice, even casually, is valid as per the Shariyat (Islamic Law) and the marriage will stand nullified. The nationality or the identity of the youth has not been revealed. The fatwa was given by the Deoband's fatwa section, Darul Ifta, in reply to a query posted by the youth.

In his query he had stated that while chatting with his wife over the Internet he jokingly spelled talaq thrice. Claiming to have little knowledge of Islam, the youth said that he didn't know how talaq was taken, adding that he was happily married and wanted to live with his wife.

Darul Ifta had replied to him that once talaq is spelled thrice it amounted to divorce and that his wife was “haraam” for him. It does not matter whether he had enough knowledge of Islam or not. Under such circumstances, the youth is neither allowed to take his wife nor to marry her again, and that she would be required to go through ‘halalah,' if she wanted to return to her husband.

“Halalah” is a practice under which the woman has to marry another man and divorce him before she can marry her previous husband again.The wife would be required to complete the ‘ iddat' (three months time) period after which she would be allowed to marry another man. In case she divorced her second husband, she would have to go through the ‘ iddat' period again before she could re-marry her former husband, it stated. During ‘ iddat' a woman is supposed to stay away from celebrations and socialising. “When you gave three talaqs, all the three took place. It does not matter whether the woman gives talaq or not. Your wife became ‘haraam' for you, whether you are aware of the commandment or not,” the fatwa read. Senior mufti of Darul Uloom Waqf Arif Kasmi said that under the ‘Shariyat' talaq, even if given in a lighter vein, amounts to divorce. — PTI


மத அமைப்பை விடுங்கள். அதனிடமிருந்து வேறு எந்த முடிவையும் பெற இயலாது. இந்த கொழுப்பெடுத்த இளைஞன் மெனக்கெட்டு ஏன் அதனிடம் விளக்கம் கேட்க வேண்டும்? இதைத்தான் சொந்தச் செலவில் சூன்யம் எனச் சொல்வார்கள் போலும்.

ஆனால் அதே சமயம் என்னால் இன்னொன்றும் சொல்லாமல் இருக்க முடியவில்லையே. இப்படியா ஒருவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மதம் தலையிடும்? நான் அந்த இளைஞனாக இருந்திருதால் என்ன செய்திருப்பேன்?

1. முதலில் தலாக் போன்ற வார்த்தைகளை விளையாட்டுக்கும் தனிப்பட்ட கடிதங்களில் கூட பயன்படுத்தியிருக்க மாட்டேன்.
2. அப்படியே பயன்படுத்தியிருந்தாலும் வெளியில் போய் உளற மாட்டேன், அதுவும் மத அமைப்பிடம் மூச்சு கூட விட்டிருக்க மாட்டேன்.
3. அப்படியே செய்தாலும் ஃபட்வாவை அலட்சியம் செய்திருப்பேன். தேவையானால் மனைவியை அழைத்துக் கொண்டு வேறு நாட்டுக்கு சென்றிருப்பேன், மதம் மாறியிருப்பேன். (கத்தாரிலிருந்து கொண்டு இதை செய்தால் சங்குதாண்டி).

அது இருக்கட்டும், இந்தியா தனக்கு வேண்டாம் என கத்தாருக்கே ஓடிப்போன அந்த சில்லுண்டிப் பயல் இந்த விஷயத்துக்கு என்ன எதிர்வினை கொடுப்பான் என்பதை அறிய ஆவல். தனிமனித சுதந்திரத்துக்கு அவன் ஆதரவு இருக்குமா?

பாதிக்கபட்டவருக்காக இந்த கத்தார் செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்று என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

48 comments:

ரவி said...

தரமான பதிவு. பதில்சொல்லக்கூடிய அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது, ஆனால் இன்னும் கிராமங்களில் இவ்வாறு இருக்கிறாகள் என்று அறியும்போது வியப்பு..

abiramam said...

Dondu, If you are REALLY interested in sharing this, you would have written on the same day or some days later when this news really came out. But after a couple of weeks, you are writting here means you have something WRONG intention in your mind.

abiramam said...

You are trying to get some favour / advantage, since your own community people are against your earlier postings. Just because of some uneducated people are doing something in somewhere, it doesn't mean that the entire religion is bad.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது தவறு அபிராமம் அவர்களே. நேற்று ஜோசஃப் சார் அவர்கள் பதிவு ஒன்றில் பாதிக்கப்பட்ட கணவர்கள் பற்றி ஒரு பேச்சு வந்தது. அவர்களுக்கென்று ஒரு தளம் இருப்பதாகக் கூறப்பட்டது. அதைத் தேடுவதற்காக கூகளில் affected husbands என்று சர்ச் பெட்டியில் போட்டு தேட, இரண்டாம் பக்கத்தில் இது கிடைத்தது.

Talaq-affected couple waiting to get united again; .:. NewKerala ... - [ Diese Seite übersetzen ]Talaq-affected couple waiting to get united again. By Jatindra Dash, Bhubaneswar: For Najma Biwi and her husband Sher Ali the waiting just does not seem to ...
www.newkerala.com/news2. php?action=fullnews&id=47878 - 67k - Im Cache - Ähnliche Seiten

அது என் கவனத்தை ஈர்க்க சுட்டியை சொடுக்கி பார்த்தேன், படித்தேன், படித்த ஐந்து நிமிடங்களில் இப்பதிவு. விளக்கம் போதுமா? இப்போது பிரச்சினைக்கு வந்து உங்கள் மேலான கருத்தைக் கூறவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

arunagiri said...

ஒடுக்கப்படும் இஸ்லாமியப்பெண்கள் அடக்கு முறையில் இருந்து விடுபட இந்துமதத்திற்கு மாற வேண்டும் என்றும் "பெண்ணடிமைத்தனம் ஒழிய இஸ்லாமை ஒழிக்காமல் என்ன செய்வது?" என்பதும் போன்ற முற்போக்கு வயிற்றுப்போக்குப்பதிவுகள் இது குறித்து வரும் என எதிர்பார்த்தீர்களோ? நல்ல ஆள்தான் நீங்கள்!

dondu(#11168674346665545885) said...

அப்படியெல்லாம் ஒரு எதிர்பார்ப்பும் இல்லை அருணகிரி அவர்களே. கணவன் மனைவி சாதாரணமாக சண்டை போட்டதை வைத்துக் கொண்டு சம்பந்தமில்லாதவர்கள் ஏன் தொங்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. மற்றப்படி மதம் சம்பந்தமாக வேறு கேள்வி எழுப்பவில்லை.

இந்த அழகில் ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் செய்வது மார்க்கத்துக்கு விரோதம் என்று வேறு எழுதப்படுகிறது!

அன்புடன்,
டோண்டு ராகவன்

siva gnanamji(#18100882083107547329) said...

பித்தரும், குடிமயக்கத்தில் உள்ளோரும் சொல்பவை அங்கீகரிக்கப்
படுவதில்லை எனும் நியதி என்னவாயிற்று?

dondu(#11168674346665545885) said...

அதையேத்தான் நானும் கேட்கிறேன் சிவஞானம்ஜி அவர்களே. அடுத்த நாளைக்கு ஊர் பெரியவர்கள் சம்பந்தப்பட்ட கணவனுக்கு ஒரு அறை கொடுத்துவிட்டு இனிமேல் இவ்வாறு செய்யாமல் இருக்கும்படி அறிவுரை கூறியிருந்தால் இது எப்போதோ முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை என்றுதான் எனக்கு படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு ராகவன்

அடி ஆத்தி said...

ஒரிஸ்ஸாவில் மதமாற்று தடை சட்டம் அமுலில் இருக்கா என்று பார்த்துச் சொல்லுங்கள்? அப்படி இல்லாத பட்சத்தில் பிராமண வகுப்பில் மதம் மாற்றிடுவோம் என்ன சொல்கிறீர்கள்? நீங்க பிராமணாள் தானே? அதற்கு உண்டாண வழியைக் கூறினீர்கள் என்று சொன்னால் அவர்களிடம் பேசி சரி செய்துவிடலாமே? என்ன சொல்கின்றீர்கள்? பிராமிணாரவாதற்கு உண்டான சட்டம் மட்டும் தங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றேன். தயவு செய்து விளக்குவீர்களா?

dondu(#11168674346665545885) said...

"இந்து மதம் யாரையும் தன் மதத்திற்கு அழைப்பதில்லை. அவ்வாறு அழைப்பது இதியாவை பொருத்தவரை கிறித்துவ மதமும் இசுலாமிய மதமும்தான். சிலர் இப்போது இந்து மதத்திற்கு மாற்றுகிறேன் எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரபூர்வ ஆதரவு கிடையாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அபுல் கலாம் ஆசாத் said...

டோண்டு சார்,

ஒங்க பதுவுங்களப் புரிஞ்சுக்கவே முடியல சார். என்னென்ன கேள்விகள முன்னால வெக்கறீங்க.

1.
ஒங்க கேள்வி:
முத்தலாக் கூடுமா?

என்னோட பதில்:
கூடாது.

2.
ஒங்க கேள்வி:
அவங்க மதம் மாறிட்டா என்ன பண்றது?

என்னோட பதில்:
மதம் மாறிட்டா என்னண்ணாலும் அவங்க போய்ச்சேர்ர மதப்படி முடிவு எடுத்துக்கவேண்டியதுதான்.

3.
ஒங்க கேள்வி:
பஞ்சாயத்து தனிமனிதப் பிரச்சனைல தலையிடலாமா?

என்னோட பதில்:
என்ன்னங்க சார், நீங்களேதான் சொல்றீங்க சில எடத்துல ஓட்டு போர்ரதுகூட பஞ்சாயத்துல முடிவெடுத்துதான்னு, அப்புறமென்ன பஞ்சாயத்து அவங்க வாழ்கைல குறுக்கிடுது..அவ்வளவுதான்.

ஆனா, அப்படி குறுக்கிடறது என்னோட பார்வைப்படி தப்பு.

*

டோண்டு சார், யார் எழுதுறதாலயும் யார் மனசும் மாறப்போறதுமில்ல, யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் வரப்போறதுமில்ல, யாரும் திருந்தவும் போறதில்ல.

சும்மா...நம்ம மனவருத்தத்த பதிவு போட்டு வெளில காட்டிக்கலாம். நேரம் இருக்றவங்க படிச்சுட்டு, விருப்பமிருந்தா பின்னூட்டம் குடுக்கப்போறாங்க. அதுதான் நடக்கும்.
இது என்னோட கருத்து.

வலைப்பதிவால மாபெரும் சமுதாயப் புரட்சியையே உண்டு பண்ணலாமுன்னும் சிலர் நெனைச்சுக்கலாம், அது அவங்களோட கருத்து. சல்தா ஹை.

செப்டம்பர் கடேசில நம்ம வீட்ல இஃப்தார் பார்ட்டியோட வலைப்பதிவர் சந்திப்பு வைக்கலாமுன்னு இருக்கேன். தயவுசெய்து வந்து கலந்துக்கங்க.

அன்புடன்
ஆசாத்

dondu(#11168674346665545885) said...

"செப்டம்பர் கடேசில நம்ம வீட்ல இஃப்தார் பார்ட்டியோட வலைப்பதிவர் சந்திப்பு வைக்கலாமுன்னு இருக்கேன். தயவுசெய்து வந்து கலந்துக்கங்க."

கண்டிப்பாக வருவேன். பழைய இந்தி/உருது சினிமா பாடல்கள், முக்கியமாக ஓ.பி. நய்யார் அவர்கள் இசையமைத்தவை, பற்றி உங்களுடன் பேச வேண்டும்.

மற்றப்படி இந்தப் பதிவு விஷயத்தில் நீங்களும் நானும் ஒரே கருத்தில்தான் இருக்கிறோம் என்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

ஒன்று மட்டும் மறுபடியும் கூறுவேன். இப்பதிவு நிச்சயமாக உங்கள் மதத்துக்கு எதிரானதல்ல. நான் ஏற்கனவே கூறியபடி இச்செய்தியை படித்த அடுத்த ஐந்து நிமிடத்தில் புயல் வேகத்தில் தட்டச்சு செய்தது இப்பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வாசகன் said...

வலைப்பூவிலேயே கிடந்துழலும் உங்களுக்கு இப்பிரச்னை பற்றி திரு.பாலா அவர்கள் எழுதியதும் அதற்கு நம் முஸ்லிம் நண்பர்கள் கொடுத்த விளக்கமும் தெரியவில்லை என்பதும் ஏதோ 'கூகிள்' சொல்லித்தான் தெரிந்துக்கொண்டு 'அதையும்' உடனே "புயல் வேகத்தில்" எழுதிவிட வேண்டும் என்ற 'அவா' கொண்டு எழுதியதும் 'மறக்காமல்' டிஸ்க்ளெய்மர் போட்டுக்கொண்டதும்................ஆசாத் அவர்கள் பாணியில்.... சல்தா ஹை!

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் கருத்து கந்தசாமி அவர்களே, பாலா அவர்கள் ஏற்கனவே பதிவு போட்டாரா? நிஜமாகவே எனக்குத் தெரியாது.

எந்த பாலா? என்றென்றும் அன்புடன் பாலா? தயவு செய்து சுட்டி தர முடியுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

இது போல உள்ள பிரச்சனைகள் அப்பப்ப தலைதூக்கும். மதச்சார்பின்மை கேளிவிகுறியதாகும். காமன் சிவில் கோடு பற்றி கேள்வி எழுபப்படும்.

பிறகு எல்லாம் காணாமல் போய்விட்டு (like a fart in the wind) "மதச்சார்பின்மை" காப்பாற்றப் படும்.

இது முதலில் முஸ்லீம் களின் தனிப்பட்ட பிரச்சனை. அவர்கள் தங்களைத் தாங்களே மற்றவர்களிடமிருந்து அன்னியப் படுத்திக் கொள்ளும் இந்த ஷரியா சட்டம் தேவையா? என்பதை "சிந்திக்கும்" முஸ்லீம்கள் முடிவெடுத்து, தங்கள் மதத்தவர்களை முன்னேற்றவேண்டும். இல்லை என்றால் முல்லாக்கள், இது போன்ற கட்டப் பஞ்சாயத்துக் கேசுகள் சொல்வது தான் ஞாயமாகிவிடும்.

dondu(#11168674346665545885) said...

உண்மையான இசுலாமியரால் பழிக்கப்படும் முத்தலாக்கை வைத்துக் கொண்டு தொங்குபவர்களை இசுலாமியராக ஏற்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி எனது பதிவு இல்லை. இந்த குறிப்பிட்ட தம்பதியினரின் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதில்தான் என் கவனம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கருத்து கந்தசாமி அவர்கள் ஏற்கனவே இந்த விஷயம் பதிவாக்கப்பட்டதை கூறினார். அதை போய் கூகளிட்டு பார்த்ததில் இந்த சுட்டியில் அது கிடைத்தது. http://www.tamiloviam.com/unicode/04200610.asp

அதற்கு வந்தப் பின்னூட்டங்களை இங்கு தருகிறேன். இப்பதிவை போட்ட பாஸ்டன் பாலாவுக்கு நன்றி.

உங்கள் கருத்து
வஹ்ஹாபி
4/29/2006 , 5:04:56 PM

[Comment url] அன்பின் பாலா,

தங்களுடைய பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். ஓராண்டுக்கு முன்னர் நீங்கள் தலாக் குறித்து இட்ட பதிவும் அதற்கு அபூ முஹை அவர்களின் விளக்கமும் நினைவிலிருக்கிறது.

தங்களின் இப்பதிவில் மூன்று சொற்கள் மிக முக்கியமானவை. அம்மூன்றில், இரண்டு சொற்கள் மிக, மிக முக்கியமானவை:
\\சன்னி முஸ்லீம்களை தொண்ணூறு சதவீதம் கொண்ட கண்டபானியா (Kantabania)வில் மொத்தமாக ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கான உள்ளூர் ஜமாத் (Choudah Mohalla Muslim Jamat) பிரமுகர் பல்லூ சர்தார், அலி-நஜ்மாவின் வீட்டிற்கு சென்று கைகலப்புக்குப் பிறகு இருவரையும் மீண்டும் பிரித்துவைக்கிறார். ஜமாத்தின் தலைவர் ஷேக் அப்துல் பாரி, தாம்நகருக்கு சென்று வேறொரு மார்க்க அறிஞரான முஃப்தி ஷேக் க்வாஸிமை அணுகி 'குடிபோதையில் உளறினாலும் முத்தலாக் செல்லுபடியாகும்' என்று தீர்ப்பு வாங்கி வருகிறார்\\.

உண்மை தேடுபவராக உங்களைக் காண்பதால் உங்களுக்கு ஒரு செய்தி:
'ஃபத்வா' என்று சொல்லப் படும் இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்புக்கு தலையாய ஒரு நிபந்தனையுண்டு. ஒரு ஃபத்வா வெளியிடப் படுமானால் அதன் அடிப்படை, இறைமறை குர்ஆன் வசனங்களிலிருந்து/இறைத் தூதரின் வழிமுறையிலிருந்து அமைந்திருக்க வேண்டும். இல்லையேல் அந்த ஃபத்வா செல்லாது.

அப்படிப் பட்ட செல்லாத ஃபத்வாக்கள்தாம் போலி முல்லாக்களால் வாங்க-விற்கப் படுகின்றன.

இப்படி நடக்கக் கூடிய 'வியாபார'த்திற்கு அவர்கள் கூறும் காரணத்தை நீங்கள் அறிந்து கொள்வது, 'வியாபாரி'களின் 'திறமை'யைப் புரிந்து கொள்ள ஏதுவாகும்.

மேற்காணும் செல்லாத ஃபத்வாவின் அடிப்படை இறைமறையோ தூதரின் வழிமுறையோயன்று; மாறாக, ஒரு மனிதரின் மனத்தில் உதித்த ஓர் உவமை மட்டுமே!

அதாவது, தலாக் என்பது கொடிய விஷத்துக்கு ஒப்பானதாம். என்வே, "போதையில் குடித்தாலும் தூக்கத்தில் (?) குடித்தாலும் கொடிய விஷம் உயிரைப் போக்கி விடுமன்றோ? அது போலவே, போதையிலோ தூக்கத்திலோ தலாக் கொடுத்தால் செல்லுபடியாகும்" என்பதுதான் வியாபாரிகளின் வாதம்!

சரி, அடிப்படைக்கு வருவோம்.
இறைத்தூதரின் கவித்துவமான தீர்ப்பைப் பாருங்கள்:
"லா தலாக், வலா இதாக் ஃபீ கலாக்" தமிழில்: "மணவிலக்கு என்பதோ விடுதலை என்பதோ மனம் மூடிக் கொள்ளும் வேளையிலன்று" [இமாம் அபூ தாவூத் அவர்களின் 1874ஆவது பதிவு].

Ghalaq என்ற அரபுச் சொல்லை அடங்காச் சினம், போதை போன்ற 'தன் வசமிழத்தல்' அல்லது 'தன்னிலை மறத்தல்' என்று தமிழ்ப் படுத்தலாம்.

உறக்கத் தலாக் குறித்து உங்களது பதிவில் ஏற்கனவே அபூ முஹை தெளிவான பின்னுட்டம் இட்டுள்ளார். என்னுடையது மேல் விளக்கம் மட்டுமே.

நன்றி!


இறை நேசன்.
4/30/2006 , 3:31:29 AM

[Comment url] //இஸ்லாமிய மர்க்கத்தில் இருந்து அவர்களை நீக்குவோம்.//

யார் யாரை எதிலிருந்து நீக்குவது?

இஸ்லாமிய மார்க்கம் என்ன இவர்கள் வீட்டு குடும்ப சொத்தா? நினைத்த நேரத்தில் நினைத்தவர்களை நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும்.

யார் ஒருவர், "இவ்வுலகில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் என்னைப் படைத்த இறைவன் ஒருவனே" என்று உளப் பூர்வமாக உறுதிக் கொள்கிறாரோ அப்பொழுதே அவர் முஸ்லிமாகி(இறைவனுக்கு கட்டுப்பட்டவனாகி) விட்டார். இந்த ஒரு வாசகத்தை உளப் பூர்வமாக யார் ஒருவர் நிராகரிக்கிறாரோ(மறுக்கிறாரோ) அப்பொழுது அவர் அமுஸ்லிமாகி(முஸ்லிமல்லாதவராகி) விட்டார். இதில் நீக்குவதற்கும் சேர்ப்பதற்கும் இஸ்லாம் எங்கே ஒருவரை நியமித்தது. இஸ்லாத்தில் இணைந்திருப்பதும், விலகியிருப்பதும் அவரவர் உள்ளத்தின் நிலைபாட்டினை(அக முடிவு) சார்ந்த விஷயம். இதனை யாருக்கும் இஸ்லாம் பட்டா போட்டு கொடுக்கவில்லை - யாரையும் சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும்.

இந்த ஒரு வாசகத்திலிருந்தே இவர்களுக்கு எந்த அளவிற்கு இஸ்லாமிய மார்க்க ஞானம் உள்ளது என்பது தெரிகிறது.

சகோதரரே இப்படிப்பட்ட இஸ்லாமிய ஞானமில்லா ஞான சூனியங்களின் கருத்துக்களையும், செயல்களையும் புறந்தள்ளுங்கள்.

முடிந்தால் இப்படிப்பட்ட மூட நம்பிக்கை கொண்ட மார்க்க ஞானமில்லா முல்லாக்களிடமிருந்து அப்பாவிகளை மீட்பதற்கும், அவர்களுக்கு முறையான மார்க்க கல்வியையும், சட்டதிட்டங்களையும் படித்துக் கொடுப்பதற்கும் இணைந்து முயற்சி செய்வோம்.

அன்புடன்
இறை நேசன்.

வஹ்ஹாபி
4/30/2006 , 8:42:40 AM

[Comment url] "... (பிற்காலத்தில்) மடையர்கள் மக்களுக்குத் தலைவர்களாவர். (மார்க்கத்தின் அடிப்படை) அறிவின்றி தம் மனம்போன போக்கில் தீர்ப்பு வழங்கி, தாமும் வழிகெட்டு மக்களையும் வழி கெடுப்பர்" என்பது அண்ணலாரின் எச்சரிக்கை [இமாம் புகாரீ அவர்களின் 6763ஆவது மற்றும் இமாம் முஸ்லிம் அவர்களின் 4829ஆவது பதிவுகள்].

Hasan Basari bin Jaafar Sadiq
4/30/2006 , 12:18:12 PM

[Comment url] அன்புடையீர் அசலாமு அலைக்கும். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு இதனை நாம் படித்து தட்டெழுதி அனுப்புகிறோம். நன்றாக இருக்கிறது.

எல்லோருக்கும் என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கணேஷ் said...

டோண்டு, நீங்கள் இதைக் கணவன் மனைவிப் பிரச்சினையாகப் பார்கிறீர்கள்.முஸ்லிம்கள் இதை இஸ்லாமியப் பிரச்சினையாகப் பார்கிறார்கள். அரசு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு நிற்கிறது. இதைத் தவறு என்று இஸ்லாமியரல்லாதவர்களிடம் குரான் எல்லாம் காட்டி உறுதியாய்ச் சொல்லுபவர்களால் அவர்களின் 'இஸ்லாமியச் சகோதரர்களிடம்' இது தவறு என்று சொல்ல முடியாது. உனக்கு குரான் தெரியுமா? எனக்குத் தெரியுமா? என்னுடைய தாடி உன்னுடையதை விட நீளம் என்கிற ரீதியில் சண்டையாகிவிடும். அது இருக்கட்டும். அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் இது போன்ற அடி முட்டாள்தனமான வழக்குகள் நடத்துவது தவிர வேறு வேலையே இல்லையா? உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியும் அரசு முஸ்லிம் தம்பதிகளை முஸ்லிம்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். இதே போல் 50 வழக்குகள் வேறு. ஆனால் பாதுகாக்கவும் இயலாமல் 'மதச்சார்பின்மையினால்' கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. ஒரு மோசமான கால கட்டத்தில் மசூதிகளில் 'காபிர்களைக் கொல்' என்று சொல்லப்படுமானால் இதே 'மதச்சார்பின்மையினால்' கையைப் பிசைந்து கொண்டு நிற்பார்கள். இதில் இருந்து இன்னொன்றும் தெளிவாகிறது. முஸ்லிம்களுக்கு உச்ச நீதிமன்றம், அதன் தீர்ப்பு ஒரு பொருட்டல்ல. இன்னும் குறிப்பாய்ச் சொல்லப் போனால் எந்த நாட்டுச் சட்டமும், நீதிமன்றமும் அவர்களுக்குப் பொருட்டல்ல.

இங்கே இது ஒரு செய்தியாகத் தெரிந்து, இதைப் பற்றிப் பேசுவது, இஸ்லாம் இணையத்தில் வெளிப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டதனால்தான். இல்லையென்றால் இது ஒரு விஷயமாகவே இருந்திருக்காது. முஸ்லிம்களின் பேச்சு, செய்கைகளின் நமக்கு முன்பு தெரியாத இஸ்லாமியக் கோணம் இப்போது தெரியும், இணையத்தினால். இங்கு பலர் இதை உணர்ந்திருப்பீர்கள். இஸ்லாம் தவறு என்று சொன்னால் அது மனிதர்கள் செய்யும் தவறு என்பார்கள். மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்குள் இருந்து மோசமான, கீழான (negative) விஷயங்களையே இஸ்லாம் வெளிக்கொணருகிறது. இஸ்லாம் மட்டுமல்ல, கிருஸ்துவம், யூதம், சாதித்திமிர், இனத்திமிர், குழுத்திமிர் இவையாவும். உள்ளே வெறுப்பும், வெளியே நல்லவன், அறிவாளி வேஷம் பூண்டலைய வைக்கும் பொய்மை இவை. அது போகட்டும்.

அவர்கள் மதம் மாறினால் என்ன என்று கேட்டிருந்தீர்கள். எண்ணைக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிடும். இஸ்லாம் ஒரு வழிப்பாதை. வெளியே வர முடியாது. கொலைதான். இந்தியாவில் கிருஸ்துவமோ அல்லது வேறு எந்த மதமுமோ அவர்களைத் தப்ப வைக்கும் அளவுக்கு முரட்டுத்தனமான நேரடிப்போட்டியில் இல்லை. நம் மதச்சார்பின்மைக் கோமாளிகள் இப்பிரச்னையைத் தீர்க்க, முஸ்லிம்களுக்குள் கொலை செய்தால் இந்தியக் குற்றவியல் சட்டம் அதைக் கட்டுப்படுத்தாது என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள்.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது உண்மைதான். சுப்ரீம் கோர்ட் நீதி வழங்கியிருக்கிறது. ஒரு சாதாரண நிலையில் உள்ள தம்பதியர் மேல் ஒரு மதத்தின் முழு பலாத்காரமும் செலுத்தப்படுகிறது.

அது தவறு என்று ஒப்புக் கொள்ளும் இசுலாமிய சகோதரர்கள் இத்தம்பதியர் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறவும் தயங்குகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுடர் said...

இதில் தயங்குவதற்கு ஒன்றுமேயில்லை. இஸ்லாமிய சட்டபடி அந்தத் தலாக் (விவாகரத்து) செல்லாது என்று ஆகிவிட்ட பின் அவர்கள் சேர்ந்து வாழவேண்டியதுதான். ஆனாலும் இஸ்லாமிய சட்ட அறிவை முறையாக பெறாத ஜமாஅத்தார்கள் வாழும் இடங்களில் இது போன்ற பிரச்சனைக்கு ஆட்படுபவர்கள் பெரும் சிக்கலை சந்திக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

dondu(#11168674346665545885) said...

நன்றி சுடர் அவர்களே. இம்மாதிரி அவசரப்பட்டு விபரீதம் விளைவிக்கக் கூடாது என்பதால்தான் முத்தலாக்கை இசுலாமியச் சட்டத்தில் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் இங்கு நடப்பதோ அந்த சட்டத்திற்கு விரோதமான செயல். அரசு இயந்திரமும் அதற்கு துணைபோவது ரொம்ப மோசம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லடியார் said...

// dondu(#4800161) said...
அப்படியெல்லாம் ஒரு எதிர்பார்ப்பும் இல்லை அருணகிரி அவர்களே. கணவன் மனைவி சாதாரணமாக சண்டை போட்டதை வைத்துக் கொண்டு சம்பந்தமில்லாதவர்கள் ஏன் தொங்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. மற்றபடி மதம் சம்பந்தமாக வேறு கேள்வி எழுப்பவில்லை.//

இதே கேள்வியை இன்னும் கொஞ்சம் விரிவாக்கி, சம்பந்தமில்லாத டோண்டு ராகவன் போன்றோர் ஏன் பதிவு போட வேண்டும்? என்றும் கேட்டுப் பாருங்கள்.

//மறுபடியும் கூறுவேன், இப்பதிவை போடுவது சம்பந்தப்பட்ட தம்பதியினர் நியாயம் பெற வேண்டும் என்பதற்காகவே.//

டோண்டு ராகவன்,

நல்ல நோக்கம்தான். இவைபோன்ற சமூக அவலங்கள் நாட்டில் அரங்கேறும்போதெல்லாம் உங்கள் போன்றவர்கள் வெகுண்டெழ வேண்டும். எனினும் உங்களிடம் மறைந்திருக்கும் உள்ளக்கிடை இடையிடையே வெளிப்பட்டு விடுகிறது.

இந்த அழகில் ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் செய்வது மார்க்கத்துக்கு விரோதம் என்று வேறு எழுதப்படுகிறது!அன்புடன்,டோண்டு ராகவன் May 31, 2006 12:17 PM //

//ஒரு மோசமான கால கட்டத்தில் மசூதிகளில் 'காபிர்களைக் கொல்' என்று சொல்லப்படுமானால் இதே 'மதச்சார்பின்மையினால்' கையைப் // - கணேஷ்

நல்லவேளை பாஸிச மோடியின் அரச தர்பாரிலும் சங்பரிவாரங்களின் கோவில் திண்ணைமடங்களிலும் "முஸ்லிம்களைக் கொல்" என்று ஃபத்வா கொடுக்கப்பட்டு இன சுத்திகரிப்புச் செய்யப்பட்டதுபோல் அந்த "மோசமான காலகட்டம்" மத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

//டோண்டு, நீங்கள் இதைக் கணவன் மனைவிப் பிரச்சினையாகப் பார்கிறீர்கள்.முஸ்லிம்கள் இதை இஸ்லாமியப் பிரச்சினையாகப் பார்கிறார்கள். அரசு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு நிற்கிறது. // - கணேஷ்

மதசார்பற்ற நாட்டில் தனித்தனி மதச்சுதந்திரமும் தனியார் சட்டங்களும் அனுமதிக்கப்பட்ட அரசிலமைப்பைக் கொண்ட நாட்டில் அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் நண்பரே?

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் இனிய நண்பர் நல்லடியார் அவர்களே.
"மதசார்பற்ற நாட்டில் தனித்தனி மதச்சுதந்திரமும் தனியார் சட்டங்களும் அனுமதிக்கப்பட்ட அரசிலமைப்பைக் கொண்ட நாட்டில் அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் நண்பரே?"
எல்லாவற்றுக்கும் மேலாண்மை உடையது சுப்ரீம் கோர்ட். அது கூறியபடி நடப்பதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்க கூடாது. மேலும் இசுலாமியச் சட்டப்படிகூட சம்பந்தப்பட்ட ஜமாத் செய்வது அக்கிரமம். ஆகவே அத்தம்பதியினருக்கு பாதுகாப்பு அளித்து, தேவையானால் அவர்கள் வசிக்கும் ஊரை மாற்ற அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். குரானை தவறாக வியாக்கியானம் செய்த ஜமாத்தின் நிர்வாகத்தை சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் மாற்ற வேண்டும்.

நஜ்மா பீவி மற்றும் ஷேர் அலிக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை என்ன? நான் வேறு ஒரு பதிவில் தலாக்கையும் குலாவையும் பற்றி பின்னூட்டமிட்டபோது முத்தலாக் ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற பொருளில் நீங்கள்தான் பின்னூட்டமிட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

தனி மனிதர்களின் சுதந்திரத்தில் தலையிட்டு, மனிதர்களை கீழான நிலைக்குத் தள்ளுவது எல்லா மத அமைப்புகளிலும் இயல்பாக உள்ளதுதான். ஆனால் எந்த ஒரு சமுதாயம் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து எந்த அளவு விடுபட்டு இருக்கிறதோ அந்த அளவு ஆன்மீகத்தில் முன்னேற வாய்ப்பு உண்டு. சமுதாயம் அழுத்தாதபோது இயல்பான அன்மீகத் தேடல் மனிதர்களை மதக் கருத்துக்களை தேடச் செய்யும். ஒவ்வொருவரும் அவரவர் இயல்பிற்கு ஏற்ற பிடித்தமான மதத்தை பின்பற்ற வழிவகுக்கும். ஆனால் மதத் தலைவர்களுக்கு தங்கள் மதத்தை விட்டு மற்றொரு மதத்திற்கு அவர் மதத்தை சார்ந்த மக்கள் போவது பயத்தை அளிக்கும். ஏனெனில் இது அவர்களது வியாபாரம். வசதியான பிழைப்பு.

நான் மேலே சொன்ன அனைத்தும் எல்லா மதங்களுக்கும் (ஹிந்து மதம் உட்பட) பொருந்தும். இருந்த போதிலும் ஹிந்து மதமானது நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவிருப்பதால் அது ஒரு மதமாற்றி மதம் இல்லை. இது பற்றிய என் பதிவு http://bliss192.blogspot.com/2006/05/blog-post_31.html.

(இந்த பதிவு மதமாற்றிகளை எதிர்ப்பது திம்மிக்களுக்கும், மதமாற்றிகளுக்கும் பிடிக்காது.)

"'ஃபத்வா' என்று சொல்லப் படும் இஸ்லாமிய மார்க்கத் தீர்ப்புக்கு தலையாய ஒரு நிபந்தனையுண்டு."

இது ஒரு தற்கால நாகரீகம். டோண்டு சார், உங்களுக்கு லக்ஷக் கணக்கில் பணம் வேண்டுமா? டாம் ஹாங்க்ஸின் தலையைக் கொண்டு வாருங்கள். என்னிடமில்லை. இந்த கிருத்துவ பத்வாவை அறிவித்த ஒரு மதச்சார்பற்ற நண்பருக்கு.

>>>> நான் வேறு ஒரு பதிவில் தலாக்கையும் குலாவையும் பற்றி பின்னூட்டமிட்டபோது முத்தலாக் ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற பொருளில் நீங்கள்தான் பின்னூட்டமிட்டீர்கள்.<<<<

சால்ஜாப்பையெல்லாம் கேள்வி கேட்கிறீர்களே. இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாமா? நிம்மதியாக வாழ்க்கை நடத்த உத்தேசமில்லையா?

யாராவது உங்கள் மேல் ஃபத்வா அறிவிக்கப் போகிறார்கள்.

பி.கு: இந்த ஃ குறியை எப்படி கொண்டு வருவது? இதே போல "பேஷன்" என்கிற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்து. எப்படி கொண்டு வருவது இந்த யுனிகோட் முறையில்?

Muse (# 01429798200730556938) said...

டோண்டு சார், கீழேயுள்ள நல்லடியாரின் கேள்விக்கு நான் பதில் சொல்லலாமா? உங்களுக்குப் பிடிக்காவிட்டல் இந்த பதிலை அழித்து விடுங்கள்.

>>>> மதசார்பற்ற நாட்டில் தனித்தனி மதச்சுதந்திரமும் தனியார் சட்டங்களும் அனுமதிக்கப்பட்ட அரசிலமைப்பைக் கொண்ட நாட்டில் அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் நண்பரே? <<<<

1. மனிதர்களை, மனிதர்களாக நடத்தும் மனிதர்கள் அரசியலிலும், சமூகத்திலும், மதங்களிலும் தலைவர்களாக ஆக வேண்டும். தீயவர்களின் கையில் இறைவனின் வேதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. நல்ல தலைவர்களின் கையில் சாத்தானின் வேதங்களும் தவறாகப் பயன்படுத்தப்படமாட்டாது.

2. தனி மனிதர்களில் இயல்பாகவிருக்கும் ஆன்மீகத்தை வளர்ப்பதற்கு உதவி செய்யாத மதங்கள் தேவையில்லை. சுவர்க்க நரக பயங்களின் மூலம் மனிதர்கள் அன்புடையவர்களாக முடியாது. பயம் வன்முறை வளர்க்கும். வளர்க்கிறது. ஆன்மீகத்தில் உயர்ந்த மனிதர் அடுத்தவர்களைக் கீழானவர்களாக நடத்துவதில்லை.

3. ஆண்டவனின் குழந்தைகள் அனைவரும் சமம் என்பதன் அடிப்படையில் இந்தியாவில் அனைவருக்கும் பொதுவான சட்டமும், நீதியும் வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

ம்யூஸ் அவர்களே,

முதலில் ஃபேஷன் என்பதை எப்படி அடிப்பது என்று சொல்லித் தருகிறேன்.
qpa=ஃப. அவ்வளவுதான். sr=ஸ்ரீ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"டோண்டு சார், கீழேயுள்ள நல்லடியாரின் கேள்விக்கு நான் பதில் சொல்லலாமா? உங்களுக்குப் பிடிக்காவிட்டல் இந்த பதிலை அழித்து விடுங்கள்."
ஏன் அழிக்க வேண்டும்? நான் ஏற்கனவே கூறியதுடன் இந்த பதிலையும் எனது பதிலாகவே சேர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கணேஷ் said...

இது கணவன் மனைவிப் பிரச்சினையே அல்ல. அவர்களுக்குள் என்ன பிரச்சினை? இது இஸ்லாமிற்கும் 'மதச்சார்பற்ற' இஸ்லாமல்லாத அரசுக்கும் இடையேயான பிரச்சினை. சட்டம், ஒழுங்குப் பிரச்சினை. நேரடியான/மறைமுகமான கொலை மிரட்டலும், அது சார்ந்த பாதுகாப்பும் பற்றிய பிரச்சினை. உலகம் முழுவதும் எங்கெல்லாம் முஸ்லிம்கள் அதிகம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் இஸ்லாமிற்கும் இஸ்லாமல்லாத அரசுகளுக்கும் உள்ள/வரப்போகும் ஒரு பானை பல்வேறு விதமான பிரச்சினைகளின் ஒரு சோறு பதம். நல்லவேளை நான் 'காபிர்களைக் கொல்' என்று எழுதியது நல்லடியாருக்கு வசதியாய்ப் போய்விட்டது. 'அகமதியாக்களைக் கொல்','ஷியாக்களைக் கொல்' என்று எழுதியிருந்தால் குஜராத், மோடி என்று knee-jerk reaction கொடுத்திருக்க முடியாது. சரி, விஷயத்திற்கு வருவோம்.

'மதசார்பற்ற நாட்டில் தனித்தனி மதச்சுதந்திரமும் தனியார் சட்டங்களும் அனுமதிக்கப்பட்ட அரசிலமைப்பைக் கொண்ட நாட்டில் அரசு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் நண்பரே?'

1. முதலில் இஸ்லாம் என்பது ஒரு மதமா இல்லை 70-80 மதங்களா? ஏனென்றால், இந்திய அரசு தனித்தனியே அனைத்துப் பிரிவுகளுக்கும் மத, சட்டச் சுதந்திரம் தருகிறதா? அதைதான் அரசு செய்ய வேண்டுமா அல்லது அகமதியாக்கள் இஸ்லாமைப் புரிந்து கொண்டதுதான் சரி என்று அவர்கள் ஜமாத்தின் தீர்ப்பே இறுதி என்று சொல்ல வேண்டுமா? (ஒரு உதாரணத்திற்கு :))

2. அத்தம்பதியின் பாதுகாப்பைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? இஸ்லாம் தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டு, தவறு செயற்படுத்தப்பட்டு, அதன் விளைவாய் அச்சுறுத்தலும் நிகழ்ந்திருக்கிறது. இங்கு இஸ்லாமைச் சரியாய்ப் புரிந்து கொண்ட இஸ்லாமியராய் உங்கள் கடமை என்ன?

3. குரானையோ, இஸ்லாத்தையோ புரிந்து கொள்வதில் இருவருக்கோ/பலருக்கோ கருத்து வேறுபாடு வந்தால், அதற்கான தீர்வும் அதிலேயே இருக்கிறதா? அந்தத் தீர்விலும் கருத்து வேறுபாடு வந்தால்?

இது போன்ற முட்டாள் வளையங்கள் (loop) நிறையவே உள்ளன. உலக நீதிமன்றங்களில் கேட்கவே முடியாத/மிக அரிதான வாதம்தான் 'இஸ்லாமிய நீதிமன்றங்களில்' முக்கிய வாதமாக இருக்கிறது.

"இந்தச் சட்டத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்."

அல்லா பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து, கடைசி இவர்தான் என்று எச்சரிக்கையும் செய்து, அவர் மூலம் ஒரே ஒரு புத்தகத்தையும் எழுதி வைத்தார். அதுவே எக்காலத்திற்கும், எங்கும் பொதுவானது, எல்லாப் பிரச்சினைக்கும் அதுவே தீர்வு, நீதி என்றும் சொல்லி வைத்தார். ஆனால் அது அத்தூதரின் வழித்தோன்றல்களுக்கு ஒரே மாதிரிப் புரியாமல் போய் விட்டது. அல்லா தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்துப் பதட்டத்தில் கடித்துத் துப்பிய நகங்கள் ஒரு சிறு மலையென இருக்கக் கூடும்.

இங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், அவை சார்ந்து எழும் கேள்விகளுக்கும் நேர் பதில் ஏதும் வாராதெனினும் காபிர்களுக்கு உதவும்.

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி கணேஷ் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kanagavelan said...

//ஆண்டவனின் குழந்தைகள் அனைவரும் சமம் //

ஆண்டவன் அல்லது இறைவன் என்று ஒரே ஒரு இறைவன் இருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். நிறைய ஆண்டவன்கள் இருந்தால்?

ஒரே ஒரு ஆண்டவன்தான் என்று எல்லா மதங்களும் ஒப்புக்கொள்வதாகவே வைத்துக்கொள்வோம். அப்போதும் பல மதங்கள் ஆண்டவனின் எல்லா குழந்தைகளும் சமமல்ல என்று கூறினால் என்ன செய்ய முடியும்? (உதாரணமாக முஸ்லீம் X காபிர்)

dondu(#11168674346665545885) said...

நான் முதலில் கூறியபடி இபதிவு பாதிப்புக்குள்ளான தம்பதியரை பற்றியே. அவர்களுக்கு இசுலாமிய முறைப்படி நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.

பேசாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ வேண்டியதுதான். ரிஜிஸ்டர் திருமண யோசனை கூட மனைவியின் பாதுகாப்புக்காகத்தான்.

தேவையானால் வேறு ஊருக்கு குடிபெயரலாம். அரசு அவர்களுக்கு தேவையான உதவியை செய்ய வேண்டும்.

ஜமாத்துக்காரர்கள் தகராறு செய்தால் கட்டை பஞ்சாயத்துக்கான தண்டனை அவர்களுக்கு தர வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

>>>> ஆண்டவன் அல்லது இறைவன் என்று ஒரே ஒரு இறைவன் இருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். நிறைய ஆண்டவன்கள் இருந்தால்? <<<

நான் கூறிய வார்த்தையின் எஸ்ஸென்ஸ் புரிந்திருந்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது ஏற்கனவே புரிந்திருக்கும். வார்த்தைகள் குழப்பத்தை உண்டாக்கலாம் (நாம் விரும்பியோ, அல்லது விரும்பாமலோ) என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நிறைய ஆண்டவன்கள் இருப்பதாகக் கூறும் மதங்கள் கூட இந்தப் பலான பலான ஆண்டவர்களும் ஒரே ஒரு மூலத்திலிருந்து வந்ததாகவே கூறுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆண்டவனை வழிபடும் மனிதர்களின் புரிதல்கூட அந்த ஆண்டவனிடமிருந்துதான் அனைத்தும் உதித்ததன என்பதே.

ஆண்டவன் சொல்வதைத்தான் அருணாச்சலங்கள் செய்கிறார்கள்.

சரி ஆண்டவனே இல்லை என்று கூறும் அருணாச்சலங்களுக்கு? ஆண்டவன் என்பதற்குப் பதிலாக இயற்கை அன்னை, படைப்பு என்று எதையாவது போட்டுக்கொள்ளுங்களேன்.

இந்த விஷயத்தில் உதவி தேவைப்பட்டால் தற்போதைய தமிழக முதல்வருக்கு ஒரு கடிதத்தைத் தட்டி விடுங்கள்.

dondu(#11168674346665545885) said...

இப்போதே ஜெயின் தாக்குதல்களை சமாளிக்க மூச்சு விடாமல் வேலை செய்யும் தமிழக முதல்வரை இதற்கு ஏன் தொந்திரவு செய்ய வேண்டும்?

அது சரி, இம்ரானா வழக்கு என்னவாயிற்று? கூகளில் தேடினால் சரியாக ஒன்றும் கிடைக்க மாட்டேன் என்கிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முத்துவாப்பா said...

முத்தலாக் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அதிலும் சுயநினைவற்ற நிலையில். எனவே சேர்ந்து வாழ்வதில் மார்க்க ரீதியாய் எந்தத்தடையுமில்லை.

சேர்ந்து வாழவேண்டுமென்பது அந்த பெண்ணின் விருப்பமாக இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது.

மாறாக அந்தக்குடிகாரனின் விருப்பமாக இருக்கும் பட்சத்தில் எல்லோருமாய் சேர்ந்து அந்தப்பெண்ணை மறுபடியும் அதே அவலத்தில் தள்ளவேண்டுமா?

மது அருந்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுகொள்ளாத ஜமாத்துக்கு மணவிலக்கு பற்றி தீர்ப்பளிக்க அருகதையில்லை.

dondu(#11168674346665545885) said...

"சேர்ந்து வாழவேண்டுமென்பது அந்த பெண்ணின் விருப்பமாக இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது.

மாறாக அந்தக்குடிகாரனின் விருப்பமாக இருக்கும் பட்சத்தில் எல்லோருமாய் சேர்ந்து அந்தப்பெண்ணை மறுபடியும் அதே அவலத்தில் தள்ளவேண்டுமா?"

ஆயிரத்தில் ஒரு வார்த்தை முத்துவாப்பா (முத்தப்பா என்று மொழிபெயர்க்கலாமா?) அவர்களே. நான் அறிந்த வரை மனைவி அக்கணவனுடன் வாழ விரும்புகிறாள். ஆகவே ஜமாத் இத்தம்பதியினர் விஷயத்தில் அநீதி செய்கிறது என்பது என் கட்சி.

இப்பதிவில் பின்னூட்டமிட்ட எல்லோரும் இதே கருத்துடன் இருப்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

Anonymous said...

This incident happened recently in 1978. My friend was school first in the SSLC exam.

But, when he went to collect the marks sheet and check something with the school HM, the HM refused to see him. Because, it was some four letter word day, he should not talk to a non - bramin.

Dondu sir, what is your opinion about this HM ? Receiving salary form the Govt and refusing to work; and insulting others.


Sridhar

dondu(#11168674346665545885) said...

@Sridhar
Tell exactly what happened. What four letter day? Which place? Which school? Who was the HM?

Or is everything just a figment of your imagination?

Dondu N. Raghavan

Anonymous said...

//Which place? Which school? Who was the HM? //

Place - Mayuram
School - Propably National High School
HM - Positively a bramin

Sridhar

dondu(#11168674346665545885) said...

@Sridhar
What four letter day? Whos is this friend? Not even sure of the school? Strange!

I am now sure it is just a figment of imagination.

Because, there is no such 4-letter word in which a Brahmin is supposed to refrain from talking with Non-Brahmin and that too a HM refusing to talk with the student having come school first is just too absurd to be true.

And what you are writing is just irrelevant to this post. Better post it in your own blog and give me link. I will come and comment after getting full details.

Dondu N. Raghavan

Anonymous said...

dondu(#4800161) said...
"...சிலர் இப்போது இந்து மதத்திற்கு மாற்றுகிறேன் எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரபூர்வ ஆதரவு கிடையாது..."

இந்து மதத்தில் அதிகாரபூர்வம் என்பதே கிடையாது, சனாதன தர்மம் அல்லவா? அப்புறம் என்ன அதிகாரபூர்வ ஆதரவு?

Anonymous said...

"...ஆண்டவன் சொல்வதைத்தான் அருணாச்சலங்கள் செய்கிறார்கள்..."

நல்ல பன்ச். சிரித்து மாளவில்லை.

silandhy said...

+++ இந்து மதத்தில் இருதார திருமணங்கள் தடை என்றதும் பலர் இசுலாமிய மதத்துக்கு மாறியது போல +++
எனக்கு தெரிந்து இந்த மாநிலத்தின் முதலமைச்சர் தொடங்கி இரண்டு திருமணம் செய்த ஹிந்துக்கள் நிறைய உண்டு.ஆனால் மூவாயிரம் முஸ்லீம்கள் வாழும் எனதூரில் ஒருவருக்கு கூட இருதாரம் இல்லை.
இப்படி எழுதுவதால் உங்கள் அரிப்பு தீரும் என்றால் ஆட்சேபனை ஏதுமில்லை.

dondu(#11168674346665545885) said...

@சிலந்தி
இதில் என்ன அரிப்பைக் கண்டீர்கள்? பலர் மதம் மாறி இசுலாமுக்கு சென்றது உண்மை. ஆனால் இப்பதிவு அதற்காக இல்லை.

கணவன் மனைவி இருவர் நடுவில் ஏதோ சண்டையில் அறியாமையில் விட்ட வார்த்தைக்காக ஒரு மத அமைப்பு உள்ளே புகுந்ததுதான் இப்பதிவின் விஷயம். அது சரியா தவறா என்பது பற்றி நீங்கள் கூறுங்கள், விருப்பம் இருந்தால் முக்கியமாக நஜ்மா விஷயத்தில்.

நஜ்மா பீவி ஷேர் அலி இடத்தில் நான் இருந்திருந்தால் எப்போதோ மதம் மாறி இசுலாமை விட்டு விலகியிருந்திருப்பேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நஜ்மா பீவி ஷேர் அலி இடத்தில் நான் இருந்திருந்தால் எப்போதோ மதம் மாறி இசுலாமை விட்டு விலகியிருந்திருப்பேன்//

ஆனா இன்னும் பாப்பானா இருக்க?

dondu(#11168674346665545885) said...

நான் ஏன் பார்ப்பானா இல்லாம மாறணும்?

டோண்டு ராகவன்

Anonymous said...

நாலு தட நிக்காஹ் செய்யலாம்ல.

silandhy said...

தலாக் மேட்டர அப்புறம் பாக்கலாம்.சந்தடி சாக்குல இஸ்லாத்துக்கு வந்தவன்லாம் நாலு பேர கல்யாணம் பண்ண வந்தவன் அப்படீங்கற வெசம் எதுக்கு? நான்கூட அய்யராவோ,அய்யங்காராவோ பொறந்திருந்தா இந்த சமூகம் பண்ணும் அக்கிரமங்களுக்கு எதிராக இஸ்லாத்துக்கு மதம் மாறியிருப்பேன்.

dondu(#11168674346665545885) said...

@சிலந்தி
எனக்குத் தெரிந்தே சில ஹிந்துக்கள் சட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் இன்னொரு திருமணம் கட்டிக்கொள்ள இசுலாமிய மதத்துக்கு மாறியுள்ளனர். அப்போது முதல் மனைவி விரும்பினால் அதையே காரணமாகக் காட்டி விவாகரத்து பெறமுடியும், சொத்தில் பங்கும் பெறுவாள். மதம் மாறின ஆணுக்கு HUF சொத்து கிடைக்காது.

இதெல்லாம் நிஜமாக பார்த்த உதாரணங்கள்.

அதே போல இப்பதிவில் கூறியது போல ஜமாத்து அடாவடியாக உள்ளே நுழைந்தால், சம்பந்தப்பட்ட தம்பதியினர் மதம் மாறி தப்பினாலும் புரிந்து கொள்ளக் கூடியதே.

இதில் இசுலாமிய மதத்தையோ ஹிந்து மதத்தையோ இழிவுபடுத்தும் நோக்கம் துளியும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது