சமீபத்தில் 1978-ல் தமிழக அரசு இரண்டு கோமாளி வேலைகளை செய்தது. முதலாவது பழைய நம்பர் புது நம்பர் குழப்பங்கள். அது பற்றி இன்னொரு பதிவில். இப்பதிவில் இரண்டாவதைப் பார்ப்போம்.
தெருக்களிலிருந்து சாதிப் பெயர்களை எடுத்ததுதான் இரண்டாவது விஷயம். ஒரு அறிவிப்பில்லை, ஒரு விவாதம் இல்லை. திடீரென செய்யப்பட்டது அது.
உதாரணத்துக்கு நான் திருவல்லிக்கேணியில் இருந்தபோது வெங்கடாசல செட்டித் தெருவில் இருந்தேன். அதே திருவல்லிக்கேணியில் வெங்கடாசல முதலித் தெரு, வெங்கடாசல நாயக்கன் தெரு என்னும் பெயரிலும் தெருக்கள் உண்டு. . இந்தக் கோமாளித்தனமான அரசு ஆணையால் எல்லாமே வெங்கடாசல தெரு ஆயின. அதனால் எவ்வளவு குழப்பங்கள்? தபால் ஊழியர்கள் எவ்வாறு கடிதங்களை தெருவாரியாக பிரிப்பார்கள் என்றெல்லாம் சிறிது கூட யோசனை இல்லாது செய்த வேலை அது. குறைந்த பட்சம் வெங்கடாசல தெரு 1, 2, 3 என்றாவது பிரித்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை.
சைதாப்பேட்டையில் இருந்த ஐயங்கார் தெரு வெறுமனே தெரு என்று ஆயிற்று. ஆஹா, என்ன அறிவு, புல்லரிக்கிறது ஐயா. தி.நகரில் மதிப்புக்குரிய நானா சாஹேப் பெயரில் இருந்த தெரு நானா தெரு என்று ஆயிற்று. சாஹேப் என்பது சாதிப் பெயர் என்பது அவர்கள் துணிபு போலும். அது இருக்கட்டும் நானா என்பது உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் Émile Zola அவர்கள் உருவாக்கிய ஒரு விலைமாதுவின் பெயர். இப்போது நானா தெரு எந்த எண்ணத்தை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்?
அதெல்லாம் விடுங்கள், நான் இங்கு குறிப்பிட நினைப்பது ஒன்றே ஒன்றுதான். வெங்கடாசல செட்டியார், வெங்கடாசல முதலியார், வெங்கடாசல நாயக்கர், காசி செட்டியார் ஆகியோர் தத்தம் தொண்டுகளால் நல்ல பெயர் பெற்றவர்கள். டாக்டர் ஏ.எல். லட்சுமணசாமி முதலியார் 27 ஆண்டுகள் மதறாஸ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். பிள்ளைப்பேறு பற்றி அவர் எழுதிய மருத்துவ நூல் இன்னும் பாடபுத்தகமாக மருத்துவ மாணவர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. அது Mudaliyaar's book" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதையும் வெறுமனே புத்தகம் என்றே கூறிவிடலாமா? அவரது இரட்டை சகோதரர் சர் ஆற்காட் ராமசாமி முதலியார். அவர் பெயரில்தான் SRM deemed University இருக்கிறது என நினைக்கிறேன். அதில் இருக்கும் M-ஐ எடுத்துவிடுவோமா?
இப்போது எனது கேள்வி. ஏற்கனவே இருக்கும் தெருக்களின் பெயரில் இருந்து சாதிப் பெயரை நீக்குவது சம்பந்தப்பட்டவர்களை அவமதிப்பதாகாதா? அதுவும் நானாத் தெரு?
சாதிப் பெயர்களை வைத்துக் கொள்வதோ கொள்ளாததோ அவரவர் முடிவு. அதன் ஒரு உபயோகத்தை இங்கு கூறிவிடுகிறேன். தமிழ் நாட்டை விட்டு வெளியில் சென்றாலே surname என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய பெயர் N.ராகவன் என்றால், "N" என்பதை விரிவாக்க சொல்கிறார்கள். நரசிம்மன் என்று கூறினால் நரசிம்மன் ராகவன் என்று எழுதிக் கொள்கிறார்கள். பிறகு அதையே R.நரசிம்மன் என்று கூறிவிடுகிறார்கள். அது என் தந்தையின் பெயர் என்று அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் விளக்க வேண்டியுள்ளது. வெளி நாட்டுக்கு போனாலோ கேட்கவே வேண்டாம். அதுவே நான் ஐயங்கார் என்ற என் சாதிப் பெயரை போட்டுக் கொண்டால் பிரச்சினையே இருந்திருக்காது. N.R. Iyengar என்று நிம்மதியாகப் போட்டுக் கொண்டிருக்கலாம். வருமான வரிப் படிவங்களில் வரும் குழப்பத்தை நாம் எல்லோருமே உணர்ந்துள்ளோம்.
இன்னொரு விஷயம். இந்த சாதிப் பெயரை சேர்க்கும் முறை தமிழ் நாட்டைத் தவிர்த்து இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் உண்டு. தேவ கௌடா, பாபா சாஹேப் அம்பேத்கர், முலாயம் சிங் யாதவ், ஜவஹர்லால் நேரு, மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி, வல்லபாய் பட்டேல், இத்யாதி, இத்யாதி. எனக்கு ஒரு சந்தேகம். ஏன் இன்னும் பட்டேல் மார்க, ஜவஹர்லா நேரு சாலை, மகாத்மா காந்தி ரோட் என்றெல்லாம் தமிழகத் தெருக்களில் வைத்துக் கொண்டுள்ளோம்?
ஆக, ஒவ்வொரு முறையும் நாம்தான் கோமாளி ஆக்கப்படுகிறோம். அதெல்லாம் இருந்தும் தமிழ் வலைப்பூக்களில் சாதிப் பெயருக்கு எதிராகச் செய்யப்படும் அகண்ட பஜனை காதைத் துளைக்கிறது. சாதி கூடாது என்று கூறுவர் பலர். ஆனால் கிட்டிமுட்டிப் போய் நீங்கள் என்ன சாதியில் பெண் எடுத்தீர்கள் என்று கேட்டால் மென்று முழுங்குகின்றனர். தங்கள் பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து செய்தார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுகின்றனர். இருபது ஆண்டுகள் கழித்து தங்கள் பிள்ளைகளுக்கு கலப்பு மணம் செய்விப்பதாக வீறாப்புப் பேச்சு வேறு. யாராவது அவ்வளவு ஆண்டுகள் கழித்து கேள்வி கேட்கப் போககிறார்களா என்ற எண்ணம்தானே அதற்கு காரணம். ஜாதி சங்கங்கள் ஏன் வைத்துக் கொள்கிறார்கள் என்று கேட்டால் அது அவர் சொந்த விஷயம் என்று திருவாய் மலர்கின்றனர் சிலர்.
சமீபத்தில் 1972-ல் பம்பாயில் இருந்தேன். என் மாமா பிள்ளை என்னிடம் "என்ன டோண்டு, பேசாமல் மஹாராஷ்ட்ரா பெண்ணை மணந்து புரட்சி பண்ணுவதுதானே" என்று பொழுது போகாமல் அறிவுறை கூறினான். அவன் மணந்தது என்னவோ ஐயங்கார் பெண்ணைத்தான். அதை சுட்டிக் காட்டிய நான், ஊருக்கு உபதேசம் செய்வதை நிறுத்துமாறு கூறினேன். எனக்காகவே ஒரு ஐயங்கார் பெண் (என் மனைவி) ஊரில் இருந்ததும் நான் கூறியதற்கு காரணம்.
கலப்புத் திருமணத்தால் வரும் பிரச்சினைகள் எத்தனை? அதை இன்னொரு பதிவில் பார்ப்போம். இப்பதிவுக்கு திரும்புவோம். சாதிப் பெயரை போட்டுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம். மற்றவர்கள் மூக்கை நுழைக்கத் தேவையில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவையங்கார்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
11 hours ago
69 comments:
ஐயங்கார் என்றால் உயர்ந்த ஜாதி, குறவர், கள்வர், இழ்வர் என்றால் 'தாழ்ந்த' ஜாதி என்ற நிலை இன்று நம் நாட்டில் இருக்கும்போது, நீங்கள் உங்கள் பெயர் பின்னால் ஐயங்கார் என்று பகிரங்கமாக போட்டுக் கொண்டு திரிவேன் என்பது சரி அல்ல.
பசியுடன் எதிரே ஒருவன் ஒட்டிய வயிருடன் இருக்கும் போது, நீங்கள் மட்டும் சூடா ஜிலேபி சாப்பிடுவது போலாகும் அது.
தனியே அவன் பார்க்காத போது சாப்பிட்டால் கூட தப்பில்லை. அவன் முன்னிலையில், அவனை ஏங்க வைத்துத் தின்றால், உங்கள் வயிறு கருகிப் போகும்.
அதே போல்தான் உங்களின் 'உயர்'ஜாதியின் அடையாளத்தை பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வது.
தேவையற்ற செயல் இது, என்பதே என் கருத்து.
-BNI
"தி.நகரில் மதிப்புக்குரிய நானா சாஹேப் பெயரில் இருந்த தெரு நானா தெரு என்று ஆயிற்று. சாஹேப் என்பது சாதிப் பெயர் என்பது அவர்கள் துணிபு போலும். அது இருக்கட்டும் நானா என்பது உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் Émile Zola அவர்கள் உருவாக்கிய ஒரு விலைமாதுவின் பெயர். இப்போது நானா தெரு எந்த எண்ணத்தை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்?"
ஐயய்யோ இப்படியெல்லாம் கூட அர்த்தம் வருதா?
முகம்மது யூனுஸ்
"எனக்கு ஒரு சந்தேகம். ஏன் இன்னும் பட்டேல் மார்க, ஜவஹர்லா நேரு சாலை, மகாத்மா காந்தி ரோட் என்றெல்லாம் தமிழகத் தெருக்களில் வைத்துக் கொண்டுள்ளோம்?"
அதானே?
கிருஷ்ணன்
vai
Sorry, Badnewsindia. I do not agree with you. I don't think Dondu sir has implied that his caste is superior. He was born with that identity and he does not hesitate to use it. Using it or not using it is entirely up to him.
Me too, I put my caste name. So what? I am proud of showing my identity. Konar Tamil notes by any other name is unthinkable, what do you say? By the way, what is then your opinion about the caste-based associations like Vanniyar Sangam, Mudalizar Sangam, Thevar Peravai et al?
Dondu sir is actually wearing a crown of thorns by proclaiming his identity as is evident by the recent attacks on him and I respect him for his forthright views. It is beside the point that I agree with him in this respect. Had it been even otherwise, I would have still felt the same respect.
Krishnan Konar
குடும்ப பெயர் என்பதும் பண்டைய கலாசாரங்களில் இல்லை. இது ஒரு சமூக நவீன வெளிப்பாடே. ஆசியாவின் பல இனங்கள் இவ்வாறே தமிழர்கள்போல குடும்ப பெயரோ, இனப்பெயரோ இல்லாமல் இருந்திருக்கின்றன. இது ஒரு சுதந்திரமான ஒரு நல்ல நிலை என்று அபிப்ராயப்படுகிறேன். இன்று பின்நவீனத்துவ வெளிப்பாட்டிலும் குழுக்கள் குடும்ப பெயரை தவிர்த்து முதல்பெயர் ரீதியாகவே பழகுவதையே நாகரீகமாக கருதும் வழக்கம் அதிகமாக காண்கிறேன்.
குடும்ப பெயர், தெருப்பெயராகி பின் வர்க்கப்பெயராகி பின் சாதியாக புரையோடிப்போகிறது.
இதன் தொடர்பாக ஒரு தகவலை பகிர்ந்துகொள்கிறேன். துருக்கியில் முஸ்தபா கெமால் (அததுர்க்)கொண்டுவந்த பல புரட்சி சீர்திருத்தங்களில் ஒரு surname வைத்துக்கொள்ளவேண்டும் என்பதும் ஒன்று. திடீரென்று அறிவித்து ஒரு மாதத்துக்குள் பதிவு செய்து பெயரை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சொல்லியாகிவிட்டது. எல்லோரும் முழித்து என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் என்னென்னவோ வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பல பெயர்கள் அர்த்தமே இல்லாமல் இருக்கும். சில பெயர்கள் - தவக்களை போன்று - சிரிப்பாக இருக்கும். என் கீழ் வேலை பார்த்த ஒரு பெண்மணியின் surname "ciplak" என்பது. இதன் பொருள் "நிர்வாணம்" naked என்றாகும். :-))
அது மாதிரி ஒரு சட்டம் போட்டு இங்கு எல்லோரும் ஒரு மாத்த்துக்குள் பெயர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.
அப்படி ஏற்பட்டால் "தமிழினக்காவலர்", திரா"விட"ன், "பழைய வந்தேறி", "புது வந்தேறி", "ஜல்லி", 'வெங்காயம்', "பார்ப்பனீயமான பறைய ராசா" என்றெல்லாம் தோன்றியதை வைத்துக்கொள்ளலாம் என்பது என் அபிப்ராயம்.
சர்க்காரில் யாராவது செய்வார்களா?
என்ன டோண்டு சார், நீங்களும் உஜாலாவுக்கு மார்றிட்டீங்க போலிருக்கு?
நீங்க சாதிப்பெயரைப் பத்தி சொல்றதை இங்க இருப்பவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல்லையே. அது சரி நீங்க அதுக்கு என்ன பதில் வச்சிருக்கீங்கங்கறதை எங்அ எல்லோருக்கும் தெரியுமே. :))
முனிவேலு கவுண்டர் (ஹி ஹி)
அப்படி ரொம்பத் தேவையானா நீங்க ஏன் கெசட்டில் பெயரை ராகவையங்கார்னு மாத்திக்கக் கூடாது?
கட்ட்பொம்மு நாயக்கர்
ரொம்ப சரியாச்சொல்லிப் புட்டிங்க சாமி. கண்டிப்பா எல்லோரும் அவங்க அவங்க சாதி பெயரை தங்கள் பெயர் கூட சேத்து எழுதி பழகுனும் சாமி. அப்பத்தான் எவன் சுரண்டினவன் சுரிட்டினவன் எவன் சுரண்டப்பட்டவன்னு தெரியும். என்ன நான் சொல்றது?
"கண்டிப்பா எல்லோரும் அவங்க அவங்க சாதி பெயரை தங்கள் பெயர் கூட சேத்து எழுதி பழகுனும் சாமி."
வாங்க காஞ்சி பிலிம்ஸ். ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணவில்லையே நீங்கள்.
சாதிப் பெயரை போட்டுக் கொள்வதோ, போட்டுக் கொள்ளாததோ சம்பந்தப்பட்டவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்றுதானே நான் கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"குடும்ப பெயரும் ஜாதி பெயரும் ஒன்றா?கேரளாவிலும் ஆந்திராவிலும் பலரும் ஜாதிபெயருக்கு பதில் குடும்ப பெயரை கடைசிபெயராக வைத்துக் கொள்வார்கள்."
அவை இரண்டும் ஒன்றல்ல என்றுதான் நினைக்கிறேன். அதே சமயம் இந்த சர்நேம் விஷயத்தில் தமிழகம் செய்த குளறுபடிகளை நீங்கள் அமெரிக்காவில் அனுபவித்திருப்பீர்களே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அதே போல்தான் உங்களின் 'உயர்'ஜாதியின் அடையாளத்தை பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வது."
உயர் ஜாதியைச் சேர்ந்தவன் என்று நான் சொல்லிக் கொண்டதில்லை. அதே சமயம் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியது போல நான் ஐயங்கார் என்று கூறிக் கொண்டதால் வந்த பிரச்சினைகள் பல. இருப்பினும் அவை எனக்கு பொருட்டல்ல.
இந்தப் பதிவு முக்கியமாக சம்பந்தமில்லாது இன்னொருவர் பெயருடன் விளையாடுவதை கண்டிக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அது மாதிரி ஒரு சட்டம் போட்டு இங்கு எல்லோரும் ஒரு மாதத்துக்குள் பெயர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்".
அவ்வாறு ஜெர்மனியில் யூதர்களுக்கு சட்டம் போட்டார்கள். அவர்களுக்கு வேண்டுமென்றே கேவலமான பெயர்களைத் தந்தார்கள்.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
ஒரு யூதன் வீடு திரும்புகிறான். அவனுக்கு அளிக்கப்பட்ட சர்நேம் Schweissloch. Schweiss --> Sweat and Loch --> hole, hence Schweissloch --> Sweat hole/pore.
அவன் மனைவி கேட்டாள், இவ்வளவு கேவலமான பெயரா என்று. அதற்கு அவன் பதில் இவ்வாறு. "நீ வேற அவங்க கொடுத்த பேர் Scheissloch. கஷ்டப்பட்டு லஞ்சம் கொடுத்து அதிலே w சேர்க்க வேண்டியிருந்தது".
Scheiss --> shit.
இப்போது கூட தலித்துகள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெயர் வைப்பதை பல இடங்களில் உயர் சாதியினர் அனுமதிப்பதில்லை. அந்த உயர் சாதியினரில் யாரும் பார்ப்பனர் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"என்ன டோண்டு சார், நீங்களும் உஜாலாவுக்கு மாறிட்டீங்க போலிருக்கு"?
ஆமாம் சார், தோளில துண்டை போட்டு புது பிளாக்கருக்கு இழுத்துட்டாங்க. அதாவது பின்னூட்டத்தை பப்ளிஷ் செய்யறதுக்கால் லாக் இன் பண்ணால் முதலில் புது பிளாக்கருக்கு மாறுடா அப்புறம் பாக்கலாங்கறான்.
பின்னூட்டத்துக்கு நன்றி கவுண்டரே. :))
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடுத்த காண்ட்ரவர்ஸிக்கு வழி..எத்தனை எய்ம் ?
தமிழக சாதிப்பிரி"வினை"களை பற்றி பேசும்போது அருகில் இருந்த, என்னுடைய குழுவில் பணிபுரியும் ஒருவர் கேட்டார், ஏன் நீங்கள் தமிழ்நாட்டில் உங்கள் சாதிப்பெயரை ( "சர்நேம்") உங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்வதில்லல என்று...
நான் சொன்னேன்...இப்போதெல்லாம் சாதிப்பெயரை எங்கள் ஊரில் சேர்த்தால் அது கேவலமாக மதிக்கப்படும் என்று...கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நிலைதான் என்று...யார் காரணம், எப்படி நடந்தது என்றான்...
பெரியார் என்று ஒரு தாத்தா இருந்தார்...அவர் சொல்லி செய்திருப்பாங்க என்றேன்...நான் பிறந்த 1978ல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது உங்கள் பதிவை படித்துதான் தெரிந்துகொண்டேன்...
"குல தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்" என்றார் பாரதி...
தேவைப்படும் இடத்தில் தான் எந்த சாதி என்பதை சொல்வது கேவலம் இல்லை...ஆனால் தன்னுடைய சாதி உசத்தி, மற்றவர் எல்லாரும் தாழ்ந்த சாதியினர் என்று எண்ணும் ஆட்டிட்யூட் மிகவும் கேவலமானது...இழிபிறவிகள் மட்டுமே செய்யக்கூடியது...
கல்வெட்டு சொல்லியமாதிரி, தமிழகத்தை பொறுத்தவரை, உங்கள் சாதி உயர்ந்த சாதியாக இருந்தால் அதை வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டும், ஜிலேபி கதை என்பதில் எல்லாம் எனக்கு ஒப்புதல் இல்லை...
நீங்கள் உங்கள் சாதியை உங்களுடனே வைத்துக்கொள்ளுங்களேன், இனிமேல் அதைச்சொல்லி ரிசர்வேஷன் கோட்டாவில் மருத்துவக்கல்லூரிக்கா இடம் வாங்கப்போகிறீர்கள் ?
வெறுமனே வெட்டி வாதத்துக்காக ஏன் சாதியை பிடித்துக்கொண்டு தொங்கவேண்டும் ? போடா ஜாட்டான் என்று சாதியை சொல்லிவிட வேண்டியதுதானே ? ஐயங்கார் என்று போட்டால் உங்களுக்கு நிம்மதி வருகிறது என்பது சிறுபிள்ளைத்தனமானது...
சாதியை சொன்னால் நிம்மதி வரும் என்றால் எண்கணிதம், நியூமராலஜி, டயபடிக் கிளீனிக் மாதிரி சாதி ப்ரொனவுண்ஸிங் கிளீனிங் வரும்..அதில் போய் உட்கார்ந்து நான் அய்யங்கார், நான் அய்யர், நான் முதலியார், நான் ரெட்டியார் என்று சொல்லி சொல்லி நிம்மதி அடையலாமே எல்லாரும்...
நீங்கள் பலரை கேட்டீங்களே, நீங்கள் எந்த சாதியில் திருமணம் செய்யப்போகிறீர்கள் என்று, என்னை இன்னும் கேட்கவில்லை இல்லையா...நான் வேறு சாதியில் தான் திருமணம் செய்வேன்...அய்யர் / அய்யங்கார் என்றால் டபுள் ஓக்கே...!! அய்யங்கார்கள் எனக்கு பொண்ணு கொடுக்க தயாரா ?
கொஞ்சம் சூடாகிட்டனோ ? பரவால்லை...ஜெயராமன் மீண்டும் வந்தது சந்தோஷம்...மியூஸ் அருமையாக ஒரு பின்னூட்டம் போடுவார், அதை ரசிக்கலாம், பதிவர்களின் பெயர்களை கடிச்சு துப்புகிறது உங்கள் பதிவு.அதனால் ஒரு சிக்னேச்சரும் போட்டுக்கறேன்..
அன்புடன்,
செந்தழல் ரவி
/இப்போது கூட தலித்துகள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெயர் வைப்பதை பல இடங்களில் உயர் சாதியினர் அனுமதிப்பதில்லை. அந்த உயர் சாதியினரில் யாரும் பார்ப்பனர் இல்லை.//
ரெம்ப முக்கியமான மேட்டரே இதுதாங்க .
கரு.மூர்த்தி
"மேற்குமாம்பலத்தில் நாயக்கமார் தெரு என்று இருந்ததை நாயக்கவை எடுத்துவிட்டு மார் தெரு என்று மாற்றி,..."
:))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
"நீங்கள் பலரை கேட்டீங்களே, நீங்கள் எந்த சாதியில் திருமணம் செய்யப்போகிறீர்கள் என்று, என்னை இன்னும் கேட்கவில்லை இல்லையா..."
அப்படி கேட்டவர்களை கூட என்ன ஜாதி என்று கேட்கவில்லை. திருமணம் உங்கள் ஜாதியிலா அல்லது வேறு ஜாதியிலா என்று மட்டும் கேட்டேன். ஜாதி என்பதை x ஆக வைத்துக் கொண்டேன்.
ஐயங்கார் பெண் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள். உங்களுக்கென்ன குறைச்சல்? நல்ல ஹேண்ட்சம், நல்லவர், நன்றாகப் பழகுகிறீர்கள். அப்புறம் என்ன பிரச்சினை?
வினோத் துவாவை நானும் எதிர்பார்க்கிறேன் என்று அவரிடம் கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதிப்பிற்குரிய டோண்டு அவர்களுக்கு,
இதோ வந்தேன்.
நீங்கள் சொல்ல வருவது பெயர் மாறுபாட்டால் ஏற்படும் குழப்பம் மட்டுமே என்றால் சரி. ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால் ஜாதிப் பெயர் என்பது வெறும் அடையாளம் மட்டும்தானா?
இல்லை என்பது என் உறுதியான கருத்து.
இந்தியாவில் ஜாதிப் பெயர் என்பது பலமுள்ளவர்கள் பலமற்றவர்கள் என்பதை குறிக்கும் விஷயமாக இருந்துவருவது தங்களைப் போன்ற பரந்த அனுபவம் உள்ளவருக்குத் தெரிந்திருக்கும்.
தான் பலமுள்ளவன் என்பதை காட்டும் அவசியம் அதிகம் தேவைப்படுவது ரௌடிகளுக்கு மட்டும்தான் (பலமுள்ளவர்போல் நடிப்பவர்களுக்கும் தேவைப்படலாம்).
ஒரு காலத்தில் ஐயர் ஐயங்கார் என்று போட்டுக்கொள்ளுவது கௌரவமாகத் தெரிந்தது. போட்டுக்கொண்டார்கள். எப்போது அப்படிப்பட்ட அடையாளத்தை சுமப்பது தமிழகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு தடையாக இருக்கும் என்பது தெரிந்ததோ அப்போதே அதை கழட்டிவிட்டார்கள்.
தங்களது பேச்சு, இஷ்ட தெய்வம் (நான் ஈவேராவை பின்பற்றுபவன் - கமலஹாஸன்) எல்லாவற்றையும் மாற்றிக்கொன்டு தப்பிப் பிழைக்கும் டார்வினின் பிராணிகளாகவும் ஆகிவிட்டார்கள். ஆனால் வடக்கே போனால் ஐயர் என்பதையும் ஐயங்கார் என்பதையும் வைத்துக்கொள்வார்கள் (காரணம் பின்னால் சொல்லுகிறேன்).
ஆனால் தமிழகத்திலுள்ள எந்த ஜாதியினரும் தங்கள் வீட்டுத் திருமணப் பதிரிக்கையில் ராமுச் செட்டியார், செந்தழல் ரவி ஐயங்கார் (அவர்தான் ஆசைப்படுகிறாரே !), வீரபாகுத் தேவர், முனுசாமிச் சேர்வை, ஏழுமலைச் செட்டியார் என்றுதான் போடுவார்கள். காரணம் அங்கே அது அந்தஸ்தை, பலத்தை குறிப்பதாக இருப்பது.
ஆனால் வட இந்தியாவின் கதை சற்றே வித்தியாசமானது என்றுதான் நினைக்கிறேன். சர் நேமை வைத்து ஜாதியை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பட்டேல்களும், பாட்டீல்களும், வர்மாக்களும், ஷர்மாக்களும் மட்டுமல்லாது கபாடி, மகேஸ்வரி என்றெல்லாம் சர் நேம்கள் உண்டு. பல சமயங்களில் இவை ஜாதியை குறிப்பதில்லை. லால் எனும் சர் நேமை வைத்துக்கொண்டிருப்பவர் தாழ்த்தப்பட்ட ஜாதியினராகவும் இருக்கலாம் அல்லது தாழ்த்தப்பட்டவர்களின் ரத்தத்தை ருசிக்கும் உயர்சாதி ஆளாகவும் இருக்கலாம். அங்குள்ள கிராமங்களுக்குப் போனால் சர் நேமை வைத்தல்ல, நேரடியாக உங்கள் ஜாதி என்ன என்று கேட்டுத்தான் உறுதிசெய்வது வழக்கம்.
ஜாதிப் பெயரை எடுத்துவிட்டால் வரும் குழப்பத்தை தவிர்க்க நமது அரசாங்கம் அன்னார்களுடைய ஊர்ப் பெயரையோ அல்லது அன்னார்களுக்கு அளிக்கப்பட்ட பட்டத்தையோ உபயோகப்படுத்தலாம். அதை விடுத்து ஜாதிப் பெயரை திரும்பவும் கொண்டுவருவது தேவையில்லாத வேலை. ஒரு காலத்தில் பலமுள்ளவர்களாய் இருந்தவர்கள் வீண் பெருமை பேசித் திரியவும், இப்போது பலம் பெற்றோர் அடாவடியும், அனியாயமும் செய்யவும் வழிவகுக்குமே தவிர வேறு எந்த புண்ணாக்கிற்கும் அது பயன்படாது.
இப்படிக்கு,
டோண்டு என்கின்ற நல்ல மனிதரை மதிக்கின்ற ம்யூஸ் என்னும் சராசரி மனிதன்
//உயர் ஜாதியைச் சேர்ந்தவன் என்று நான் சொல்லிக் கொண்டதில்லை. அதே சமயம் ஏற்கனவே பலமுறை தெளிவுபடுத்தியது போல நான் ஐயங்கார் என்று கூறிக் கொண்டதால் வந்த பிரச்சினைகள் பல. இருப்பினும் அவை எனக்கு பொருட்டல்ல.
//
உயர் ஜாதிக்காரன் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளவில்லை என்பது சரி.
ஆனால், நான் மேலே சொன்னது போல் ஜாங்கிரி உங்களுக்கு சொந்தமானதாக இருந்தாலும், பக்கத்தில் பசியில் வயிறு ஒட்டிப்போய் இருப்பவனை வைத்துக் கொண்டு, அவன் கண் முன்னே அதை உண்பீரா?
இந்துக்கள் ஆயிரமாயிரம் ஜீவாதாரமான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அது குறித்து பேச வகையில்லை. கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்கிற சமாச்சாரமாக இந்த மனிதர் இந்த மாதிரி காசு பெறாத விசயத்தை தேச விரோத சக்திகளுக்கு 'இந்து தருமமே சாதீயம்' என கும்மியடிக்க ஏற்றவகையில் அடி எடுத்து கொடுக்கிறாரே என வயிறெரிந்து கொண்டிருந்தேன். நன்றி ம்யூஸ் அழகாக சொல்லிவிட்டீர்கள். புரிந்தால் சரி டோண்டு சாருக்கு
நன்றி ம்யூஸ் அவர்களே. என் எதிர்பார்ப்பிற்கேற்ப தங்களது தெளிவான பின்னூட்டம் வந்துள்ளது.
எனது இந்தப் பதிவே சாதிப் பெயரை போட்டுக் கொள்வாதோ இல்லையோ என்பது சம்பந்தப்பட்டவரின் தனி விருப்பம் என்றே கூற வந்ததுதான். அதுவும் காலஞ்சென்றவர்கள் பெயரில் போய் கையை வைத்து நானா சாஹேப் என்று இருந்த தெருவை நானா தெரு என்று மாற்றிய கூத்தைத்தான் அதிகம் கண்டித்தேன்.
இப்போதிருக்கும் தமிழக சூழ்நிலையில் ஐயர் அய்யங்கார் ஆகிய பெயர்கள் போட்டு கொள்வதற்கு கண்டிப்பாக மனவுறுதி வேண்டும். அதை நான் என் பெயருக்கு பின்னால் இப்பதிவில் இட்டது எதிர்ப்புகளை எதிர்பார்த்தே.
சர்நேம் விஷயத்தில் ஜாதிகளே முழு பங்கையும் வகிக்கவில்லை என்பதும் உண்மையே. பிரதிவாதி பயங்கரம் என்று ஒருவர் பட்டம் பெற்றார் தனது வாதத் திறமையால். ஆனால் அவரது சந்ததியினர் அந்தப் பெயருக்கு அருகதை ஆக முடியுமா? அவ்வாறு ஒவ்வொருவரையும் ஆராய்ந்து பார்ப்பது காரியதுக்குத்தான் ஆகுமா?
அந்த விஷயத்தில் சாதிப் பெயரை சர்நேமாக வைத்தால் இந்தியா முழுதும் தொந்திரவு இல்லாமல் புழங்கலாம். வெளி நாடுகளுக்கும் அவை உபயோகமாக இருக்கும் என்று பயனை உத்தேசித்தே இப்பதிவில் அவ்வாறு எழுதினேன்.
மற்றப்படி ஊர்பெயரையும் போட்டுக் கொள்ளலாம். அல்லது வீட்டின் பெயரையும் போட்டுக் கொள்ளலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
செந்தழல் ரவி அவர்களே,
நான் வேறு சாதியில் தான் திருமணம் செய்வேன்...அய்யர் / அய்யங்கார் என்றால் டபுள் ஓக்கே...!! அய்யங்கார்கள் எனக்கு பொண்ணு கொடுக்க தயாரா ?
இந்த டபுள் ஓக்கேயின் பின் உள்ள ஆர்வம் லேசாக இடித்தாலும், வாக்கியங்களுக்கு நடுவில் அர்த்தங்களை தேடாமல் என் கருத்தை தெரிவிக்கிறேன். இவை என் அனுபவம். என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்கின்ற அவதானத்தில் விளைந்தது.
அனுபவம் 1:
என் நண்பர் ஒருவர் செட்டியார் ஜாதியைச் சேர்ந்தவர். அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டது ஒரு ஐயர் வீட்டுப் பெண்ணைத்தான். (இந்த காதல் திருமனம் நிறைவேற நான் எழுதிக்கொடுத்த பல சுவாரஸ்யமான நாடகக் கதைகள் இங்கு அனாவசியம்). ஐயர் பெண்ணின் வீட்டில் அமோக ஆதரவு. திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரும் வந்து வாழ்த்தினார்கள். ஆனால் பையனின் வீட்டில் சுத்தமாக ஆதரவு இல்லை.
அனுபவம் 2:
என் தோழி ஒருத்தி ஐயங்கார்தான் (அட, அட, பொறுங்கள். அவசரப்பட்டு டபுள் ஓக்கே சோல்லிவிட வேண்டாம். அவருக்கு காதலர் ஒருவர் இருக்கிறார்.) அவரது அத்தை திருமணம் செய்துகொண்டிருப்பது செங்குந்த முதலியார் வீட்டுப் பையனை. அவரது முதல் அண்ணன் ஒரு ஐயர் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இரண்டாவது அண்ணன் கோனார் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவரது காதலர் அவரது அத்தைக்கும் செங்குந்த முதலியாருக்கும் பிறந்த பையன்தான்.
இந்த இரண்டு பேரும் பெங்களூரில்தான் இருக்கிறார்கள். வேண்டுமானால் உங்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இவை அவர்களின் பெர்சனல் விஷயங்கள் என்பதால் நாசூக்காக பேசி நீங்கள் இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த இருவரையும் தவிர்த்து எத்தனையோ விஷயங்கள் கண்முண் நடக்கின்றன. உதாரணமாக மதுரையில் புரோகிதம் செய்பவரின் குடும்பத்தில் மூன்று சகோதரிகள் தலித்துக்களையே திருமணம் செய்துள்ளனர். அந்த புரோகிதருக்கோ அவரது தொழிலுக்கோ இதனால் எந்த பாதிப்பும் இல்லை. வேண்டுமானால் சொல்லுங்கள், அவர்களது அட்ரெஸ் தருகின்றேன்.
உண்மையை சொல்லப்போனால் மற்ற எந்த சாதியையும் விட தமிழ் நாட்டின் ஐயர் ஐயங்கார் சாதியினர்தான் கலப்புத் திருமணம் அதிகம் செய்கின்றனர். விதவைத் திருமணங்களும், மறுமணங்களும் அதிகம் நடக்கும் ஜாதி தமிழ் பார்ப்பன ஜாதிதான். வேண்டுமானால் நீங்கள் திருமண வெப் சைட்டுக்களிலிருந்து ஒரு புள்ளி விவரம் எடுத்துப் பார்த்துக்கொள்ளலாம்.
மற்ற ஜாதியில் பெண்ணையும் பிள்ளையையும் வெட்டிப் போடுகின்ற கொடுமை இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
இதுபோன்ற உண்மைகளைச் சொன்னால் மற்ற சாதியர்களினால் அவமானமே நிகழும். இதனால் இதை தமிழகத்தின் பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துவதில்லை.
மேலும் பார்ப்பனர் தவிர்த்த வேறு எந்த ஜாதியினரும் தங்களை விட ஜாதி வரையறைகளில் கீழே உள்ளவர்களைத் திருமணம் செய்ய விரும்புவதில்லை. தங்களுக்கு ஒரு படியோ, பல படியோ (அவர்களது நம்பிக்கையின்படி) மேலேயுள்ள ஜாதியினரை திருமணம் செய்துகொண்டு புரட்சி செய்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். இதுதான் நடைமுறை உண்மை.
பி கு: அது சரி, நீங்கள் பாட்டு தைரியமாக டபுள் ஓக்கே போடுகிறீர்களே, "அவங்க" டோண்டு சார் பதிவில் இந்த பின்னூட்டத்தை படிக்கமாட்டர்கள் என்கின்ற நம்பிக்கைதானே?
பார்சிக்கள் screwwalla,pagadiwalla(last names) என்று பெயர் வைத்துக்கொள்வதை பார்திருகீரீகளா??
செந்தழல் ரவி said - "அய்யங்கார் என்றால் டபுள் ஓக்கே...!!"
Muse (# 5279076) said - "தங்களுக்கு ஒரு படியோ, பல படியோ (அவர்களது நம்பிக்கையின்படி) மேலேயுள்ள ஜாதியினரை திருமணம் செய்துகொண்டு புரட்சி செய்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். இதுதான் நடைமுறை உண்மை."
சரி சரி விடுங்க மியுஸ், ஆ வூன்னா கலைஞர், மாறன் குடும்பத்தை இழுத்திடுவிங்களே.
###########
ஜாதி ஒழிப்பு பற்றி சொல்லி, ஆட்சி பொருப்பில் வந்த பின்பும் "தங்களை மேல் ஜாதி ஆட்கள் போல் கருதுவதில்லை" என்றே நினைக்கிறார்கள் என்று தி.க தலைவர் கவலையுடன் சொன்னார்.
###########
Muse (# 5279076) said - "உண்மையை சொல்லப்போனால் மற்ற எந்த சாதியையும் விட தமிழ் நாட்டின் ஐயர் ஐயங்கார் சாதியினர்தான் கலப்புத் திருமணம் அதிகம் செய்கின்றனர். விதவைத் திருமணங்களும், மறுமணங்களும் அதிகம் நடக்கும் ஜாதி தமிழ் பார்ப்பன ஜாதிதான். வேண்டுமானால் நீங்கள் திருமண வெப் சைட்டுக்களிலிருந்து ஒரு புள்ளி விவரம் எடுத்துப் பார்த்துக்கொள்ளலாம்."
மேலும் படிக்க-
My family and other globalisers
The Times of India, April 3, 2005
http://www.swaminomics.org/articles/20050403_my_family_and_other_globalisers.htm
"இந்த மாதிரி காசு பெறாத விசயத்தை தேச விரோத சக்திகளுக்கு 'இந்து தருமமே சாதீயம்' என கும்மியடிக்க ஏற்றவகையில் அடி எடுத்து கொடுக்கிறாரே என வயிறெரிந்து கொண்டிருந்தேன். நன்றி ம்யூஸ் அழகாக சொல்லிவிட்டீர்கள். புரிந்தால் சரி டோண்டு சாருக்கு"
மற்றவர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ என்றெல்லாம் கவலைப் பட்டு கொண்டிருந்தால் ஒரு காரியமும் செய்ய முடியாது அரவிந்தன் நீலகண்டன் அவர்களே.
இப்பதிவின் நோக்கத்தை பதிவிலும் சரி, பின்னூட்டங்களிலும் சரி ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.
தெருப் பெயர்களில் வந்த குழப்பத்தை யாருமே மறுத்து பேசவில்லை. மற்ற விஷயங்களில் அவரவர் கருத்து சொன்னார்கள் அவ்வளவே.
ஒருவர் இரு பெயரில் வந்து போட்ட இரண்டு பின்னூட்டங்களை மட்டும் ஏற்கவில்லை. :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
பார்சிகள் ஸ்க்ரூவாலா, பகடிவாலா என்றெல்லாம் வைத்து கொள்வது உண்டுதான். ஆனால் இம்மாதிரி பெயர்களே அவர்கள் அடையாளத்தை வெளியில் காட்டி விடுகின்றனவே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
"சரி சரி விடுங்க மியுஸ், ஆ வூன்னா கலைஞர், மாறன் குடும்பத்தை இழுத்திடுவிங்களே."
கலைஞருக்கு ஒரு தலித் சம்பந்தியும் இருப்பதாகா படித்திருக்கிறேன் போலிருக்கிறதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சாதிப் பெயரை நீக்கினால் தபால் போகாதா? பரவாயில்லை. அது இருந்ததால் அவனவனுக்கு குமாஸ்தா வேளைமுதல் ஜட்ஜ் வேலை வரை கிடைக்காமல் செய்து கொண்டிருந்தார்கள்.
சாதிகளை வைத்து அடையாளங்கண்டுதான் தீண்டாமையே உருவானது! மனிதனின் சுய மரியாதையை விட தெருக்குழப்பம் ஒன்றும் பெரிதல்ல.
அதே சமயம் நீங்கள் ஐயங்கார் என்று வைத்துக்கொள்ளலாம். நாங்கள் நிச்சயம் உங்களை உயர்ந்தவர் என்று நினைக்கமாட்டோம். மாறாக ஒரு பாப்பானின் உட்பிரிவு என்ற அளவில் தான் பார்ப்போம். மேலும் பழங்காலத் தமிழரைப் போல அல்லாமல் பிராமணர்கள் பொதுவாக ஒரு கிளிப்பிள்ளை கூட்டம், அறிவு ரீதியாகவும் அனுபவம் ரீதியாகம் மிகவும் தாழ்ந்தவர்கள், மக்களை முட்டாளாக சிந்திக்க விடாமல் வைத்திருந்த திருடர்களின் பரம்பரை என்றுதான் நினைப்போம். மரியாதையும் செய்வோம். தயவு செய்து வருத்தப்படாமல் ஐயங்கார், வடகலை அல்லது தென்கலை என்பதையும் சேர்த்துக்கொள்ளவும். இன்னும் உபயோகமாக இருக்கும்!
செந்தழல் ரவி ஐயங்கார் வீட்டு அழகைப் பற்றி நினக்கவேண்டாம். சாதியய்ப் பற்றியே நினைக்க வேண்டாம். இன்னும் சொல்லப்போனால் உன்னைப் பற்றி சொல்... உன் குடும்பம் பற்றித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்ற மேற்கத்திய கண்ணோட்டமே உயர்ந்தது.. இப்போதைய சூழலில்.
"சாதிப் பெயரை நீக்கினால் தபால் போகாதா? பரவாயில்லை."
அப்படீங்களா, ஏதாவது ஒரு முக்கியமான இண்டர்வியூவுக்கான காகிதம் இக்குழப்பத்தால் சரியான தருணத்தில் கிடைக்காது போய், அதே போல பல முக்கியமான கடிதங்கள் கிடைக்காது போய் என்றெல்லாம் வந்து, அதனால் பாதிக்கப்படுபவர்களிடம் இக்கதையைக் கூறுங்கள். இத்தனையும் எதற்காக? எம்.ஜி.ஆர். என்ற மனிதர் தனது இமேஜுக்காகக் செய்தது. ஆனால் அவர் தி. நகரில் உள்ள டாக்டர் நாயர் ரோடை பெயர் மாற்றாமல் வைத்திருந்திருக்கிறார் என்று எனது வலைப்பூ நண்பர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். Draw your own conclusions.
"அது இருந்ததால் அவனவனுக்கு குமாஸ்தா வேலை முதல் ஜட்ஜ் வேலை வரை கிடைக்காமல் செய்து கொண்டிருந்தார்கள்."
எங்கு செய்தார்கள் சார்? வேதநாயகம் பிள்ளை, பம்மல் சம்பந்த முதலியார், ஏ.லட்சுமணசாமி முதலியார், ஏ. ராமசாமி முதலியார், வி.எல் எத்திராஜ் முதலியார், ஷண்முகம் செட்டியார் என்றெல்லாம் ஜாதிப் பெயர் போட்டுக் கொண்டு ஜம் ஜம் என்று பவனி வந்தனர். பெரிய பதவிகளை அலங்கரித்தனர். நாடார்கள் தங்கள் பெயரைப் போட்டுக் கொண்டு வன்கொடுமைகளை வென்று வந்தனர்.
"அதே சமயம் நீங்கள் ஐயங்கார் என்று வைத்துக்கொள்ளலாம். நாங்கள் நிச்சயம் உங்களை உயர்ந்தவர் என்று நினைக்கமாட்டோம்."
I care two hoots about that. அந்த மாதிரி மரியாதைகளுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன்.
"மேலும் பழங்காலத் தமிழரைப் போல அல்லாமல் பிராமணர்கள் பொதுவாக ஒரு கிளிப்பிள்ளை கூட்டம், அறிவு ரீதியாகவும் அனுபவம் ரீதியாகம் மிகவும் தாழ்ந்தவர்கள், மக்களை முட்டாளாக சிந்திக்க விடாமல் வைத்திருந்த திருடர்களின் பரம்பரை என்றுதான் நினைப்போம்."
என்ன வேண்டுமானாலும் நினைத்து விட்டு போங்கள். ஆனால் இப்பதிவின் முக்கிய கேள்விக்கு வாருங்கள். யார் சாதிப் பெயரை யார் எடுப்பது? அதுவும் இறந்தவர்கள் பெயரில் கைவைப்பது என்ன நாகரிகம்? தி.நகர் நடேச முதலியார் பார்க்கை நடேசன் பார்க் என்று மாற்றியது என்ன கூத்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
1) பலமுள்ள நாங்கள் அப்படித்தான் எடுப்போம். முடிந்தால் வைக்கச்சொல்லி போராடுங்கள். போராட்டமா.. நோ நோ, நாங்கள் எதையும் நோகாமல் தான் பெறுவோம்" என்று சொல்ல வருகிறீர்களா?
2. அந்தக்காலக் கதையை அவிழ்த்து விடவேண்டாம். இப்பொழுது உள்ள மாணிக்க வினாயகம் என்ன சாதிப்பேரா போட்டுக்கொண்டுள்ளார்? அல்லது எத்தனை வக்கில்ல்கள் சாதிப்பேரோடு திரிகிறார்கள்?
3. யாரோ ஒருவருக்கு, வேளை வாய்ப்பு கடிதம்,ஏதோ ஒருநாள் ... அகா... அருமையாக இருக்கிறது... அதே சமயம் மற்றவர்கள் சாதிப்பெயரால் மாதாரி, அம்பட்டை என்று தினம் கேவலப்பட்ட போது எத்தனை பிராமணர்கள் சிந்தித்தார்கள்?
4. மற்றபடி ஒன்று மட்டும் உண்மை. அன்று மரியாதை கிடத்தவரை அவற்றை போட்டீர்கள். இன்று கேவலப் படுத்தப் படுவோம் என்றதும் போடமாட்டீர்கள். தலைவலியும் காய்ச்சலுக்கும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள் டோன்டூ அய்யங்கார் அவர்களே!
"பலமுள்ள நாங்கள் அப்படித்தான் எடுப்போம். முடிந்தால் வைக்கச்சொல்லி போராடுங்கள்."
ஆகா பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. நாங்கள் ஏன் போராட வேண்டும்? அதை விட நல்ல வேலைகள் எங்களுக்கு உள்ளன. இப்போது கூட தபால்காரர்கள் (முக்கால்வாசி பேர் நாயுடுக்கள்) வெங்கடாசல செட்டித் தெரு, வெங்கடாசல முதலித் தெரு என்றெல்லாம் போட்டு முகவரி எழுதினால் வாழ்த்தத்தான் செய்கிறார்கள். அவ்வாறு தபால்காரர் கஷ்டப்படுவார்களே என்று கூட யோசியாது சொல்லாமல் கொள்ளாமல் திடீரென ஒரு நாள் எடுத்தார்கள். ஏன்? நீங்கள் கூறியபடி, 'பலமுள்ள நாங்கள் அப்படித்தான் எடுப்போம்'. உண்மையை கூறியதற்கு நன்றி.
"அன்று மரியாதை கிடைத்தவரை அவற்றை போட்டீர்கள். இன்று கேவலப்படுத்தப்படுவோம் என்றதும் போடமாட்டீர்கள்."
மறுபடியும் புரிதலில் தவறு செய்கிறீர்கள். நான் இப்போதுதானே ராகவையங்கார் என்று போட்டுக் கொண்டேன்? ஏன் என்று யோசித்து பார்த்தீர்களா?
ஏனெனில், சாதிப் பெயரை போட்டுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் முடிவுக்கு விட்டு விடவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருப்பவன்.
சும்மா சாதியை ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் கல்யாணம் என்று வரும்போது மட்டும் அப்பா அம்மாவுக்கு அடங்கிய பிள்ளைகளாகச் சென்று தத்தம் சாதிப் பெண்ணை மணந்து நல்ல சீர் வரிசை வரதட்சிணை எல்லாம் பெற்றுக் கொள்கின்றனர் அல்லவா? அதை சுட்டிக் காட்டிவிடப் போகிறேனோ என்றே பல பதிவர்கள் இப்போது அமைதி காக்கின்றனர். அவர்கள் யார் என்பது அவரவருக்கே தெரியும். நான் கூற வேண்டியதில்லை.
நாம் போன மாதம் உங்கள் சென்னை வருகயின்போது சந்தித்தோம். அப்போது நீங்கள் ஒன்று கூறினீர்கள். அரசியல் சம்பந்தமாக நான் இட்ட இடுகைகளில் கொடுத்த உதாரணங்கள் யதார்த்தத்துடன் ஒத்துப் போகின்றன என்று குறிப்பிட்டீர்கள். (factually correct). அந்த அடிப்படையில் இந்த இடுகையில் தவறு இருந்தால் கூறவும் திருத்திக் கொள்கிறேன். மற்றப்படி உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். எனது கருத்தையும் மதிக்கிறேன். என்ன ஓக்கேயா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. வரதட்சிணை யின் தமிழ் பெயர் என்ன மொழிபெயர்ப்பாள நண்பரே? எங்கோ தாக்குகிறேனா?
2. மாட்டை அடக்கியும், பரிசம் போட்டும் கட்டிய திருமணங்கள் யாரைப் பின்பற்றியதால் இந்த நிலை?
3. மேலே நான் சொன்னதில் factual error ஏதாவது இருக்கிறதா?!
"மாட்டை அடக்கியும், பரிசம் போட்டும் கட்டிய திருமணங்கள் யாரைப் பின்பற்றியதால் இந்த நிலை?"
நீங்கள் கேட்ட கேள்வி மட்டும் எப்படி போதும் கருத்து சொல்ல? உங்கள் பதிலைக் கூறுங்கள்? அதை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கூறுங்கள். பிறகு பார்க்கலாம்.
உதாரணத்துக்கு நான் சமீபத்தில் 1957-ல் தி.க. வினர் நடத்திய பிராம்மணாள் ஹோட்டல் போர்டு போராட்டத்தில் அவர்கள் செய்த அராஜகங்கள் என்று கூறினால், ஒன்று அவற்றில் பலவற்றை நானே நேரில் பார்த்திருக்க வேண்டும் (போராட்டம் நடந்த திருவல்லிக்கேணி முரளிகபே அப்போது நான் வசித்த வெங்கடாசல செட்டித் தெரு வீட்டிலிருந்து நான்கு நிமிட நடை) அல்லது அக்காலக் கட்டத்து பேப்பர்களை படித்திருக்க வேண்டும். அதைப் பற்றி ஒரு பதிவும் போடுகிறேன். ஐடியா கொடுத்ததற்கு நன்றி.
ஆனால், இந்த வரதட்சணை கொடுமை எனக்குத் தெரிந்து சில நூறாண்டுகளாக உள்ளன. ஆகவே நீங்கள் சமீபத்தில் 1750-ல் அதை நேரில் பார்த்திருந்தால் கூறவும். இல்லாவிடில் அவ்வாறு மாறுதல் நடந்ததை பற்றி ஏதேனும் அக்காலக் கட்டத்தில் எழுதப் பட்டிருந்தால் கூறவும். அதில் factual error ஏதாவது இருந்து, என் கண்களுக்கு புலப்பட்டால் கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த தெருப் பெயர் மாற்றம் குறித்த விஷயத்தினால் அவதியுற்ற ஒரு முதிய தபால்காரர் எனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். அவர் பட்ட நிறைய கஷ்டங்களை சிறு வயதில் கதைகளய்க் கேட்ட அநுபவம் நிறைய உண்டு.
நான் என் சாதி பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்வது முற்றிலும் என் சொந்த விருப்பம். எந்தக் கொம்பன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை.
தெருக்களுக்கு பெயர் வைத்த அறிவு ஜீவிகள் சற்று யோசித்திருக்கலாம். சரி பெயர் வைத்தவர்களுக்குத் தான் அறிவில்லை. சாதிப் பெயர்களை களைந்து புரட்ச்சி செய்த எம்ஜியாருக்கு எங்கே போனது புத்தி? ஏத்தி உட்க்கார வைத்தோமல்லவா...அனுபவிப்போம்.
செல்லா கூறியது போல்
//ஐய்ங்கார் எனப் போட்டுக் கொண்டால்.....//(மிச்சத்தை அவர் பின்னூட்டத்தில் படிக்கவும்)
இவர் சொல்லுவது நிச்சயம் கண்டிக்கத் தக்கது. முற்றிலும் ஒரு வேஷத்துக்காகத் தான் இவர் சாதியினை தவிக்கிறார் என்பதற்கு அவரே சொன்ன
//பலமுள்ள நாங்கள் அப்படித்தான் எடுப்போம். முடிந்தால் வைக்கச்சொல்லி போராடுங்கள்...//
எத்த்னை ஏமாற்றுத் தனம். அது என்னவோ தெரியவில்லை...சாதி பற்றி ஆரம்பித்தால் முதலில் உருளுவது பிராமணர்கள் தலை தான். ஏன் அவர்களுடையது மட்டும் தான் சாதியா? அப்ப முதலியார் தேவர் எல்லாம் என்ன படிச்சு வாங்கின பட்டமா ?
இவ்வளவு வண்ணமாக் சாதி எதிர்ப்பு செய்பவர்கள் ஏன் தன் சாதிக்கென ஒரு சங்கத்தை தொடங்கி அதனை ஒரு அரசியல் கட்சியாகவும் மாற்றி மக்களின் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்றனர் என கூறலாமே.
மதுசூதனன் ராமானுஜம்
//பலமுள்ள நாங்கள் அப்படித்தான் எடுப்போம். முடிந்தால் வைக்கச்சொல்லி போராடுங்கள்...//
அதற்கு எதிர்வினைதான் நீங்கள் கூறுவதும்:
"நான் என் சாதி பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்வது முற்றிலும் என் சொந்த விருப்பம். எந்தக் கொம்பன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை",
மற்றும் எனது பதிவின் நோக்கமும். நான் ஏற்கனவே பலமுறை வெவ்வேறு தருணங்களில் கூறியதுதான், "எனது சாதியை நான் கூறிக்கொள்வதற்கு எந்த இணையத் தாசில்தாரின் அனுமதியும் எனக்கு தேவையில்லை" என்பதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சீதனம் சரியான சொல். இருப்பினும் அது ஸ்ரீதன் --> ஸ்ரீதனம் --> என்று மறுவி சீதனமாக வந்துள்ளது. சரியானத் தமிழ்ச்சொல் மஞ்சக்காணி என்றும் கூறலாம்.
ஆனால் இதெலாம் பார்ப்பனர்கள்தான் தமிழர்களுக்கு சொல்லிக் கொடுத்தனர் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழக பார்ப்பனர்களும் தமிழர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிரிச்சு மேயும் பின்னூட்டம் ஒன்றை தயார் செய்ய ஈவ்னிங் ஆகும், இப்போ நேரம் இல்லை...
ஆனால் அய்யங்காராக மாறுபவர்கள் வடகலையா / தென்கலையா ? ஏன் என்றால் எனக்கு தெரிந்த நன்பர் மாற விரும்புகிறார், அவருக்கு வடக்கே சூலம், தெற்கே வாஸ்துபடி சரியில்லையாம்...வேற ஏதாவது திசையில் உட்பிரிவு இருந்தால் தெரிவிக்கவும்... :)))))))))))))
1) தெருப் பெயரில் உள்ள சாதிப் பெயரை மட்டும் எடுத்திருக்கக் கூடாது. ஒட்டு மொத்தமாய் எடுத்துவிட்டு ஹைத்ராபாத்தில் புதிய தெருக்களுக்கெல்லாம் இருப்பது போல (உ.ம்: 8-3-231/A/73, Road No: 2, Banjara Hills, என்று) வைத்தால் ஒற்றை வரியில் எழுதிவிடலாம், தபால்காரருக்கும் எளிது.
2) பேருடன் உங்க சாதியை போட்டுக்கொள்ளும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது உங்கள் விருப்பம் என்கிறீர்கள். இதுக்கு உங்காத்து பாசையிலயே பதில் சொல்லனும்னா
"என்னத்தையோ ஈஷிண்டு வந்திருக்கேள்... ஜலம் குடுத்து அலம்பிண்டு வரச் சொல்றவாள்ட்ட மாட்டன்! அது என் இஷ்டம்ங்கறேள்... ஆனா சுத்தியிருக்கவாளெல்லாம் நாறுதுங்கறாளே அவாளையெல்லாம் நெனைச்சுப் பாருங்கோ..."
3) என் கருத்துக்களுக்கு உங்கள் மறு கருத்துக்கள், அதற்கு பதில் என மேற்கொண்டு பின்னூட்டங்கள் இட்டு விவாதித்து விரயம் செய்யாமல் முன்கூட்டியே "Let us Agree to disagree" என்று முத்தாய்ப்பாய் முடித்துக் கொள்கிறேன்.
"பேருடன் உங்க சாதியை போட்டுக்கொள்ளும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது உங்கள் விருப்பம் என்கிறீர்கள்."
இல்லையே, நான் அப்படி சொல்லல்லையே. போட்டுக் கொள்வதோ கொள்ளாததோ அவரவ்ர் உரிமைன்னுதானே கூறினேன்.
"ஆனா சுத்தியிருக்கவாளெல்லாம் நாறுதுங்கறாளே அவாளையெல்லாம் நெனைச்சுப் பாருங்கோ..."
இதையே உங்க ஊருலே இருக்கிற லிங்காயத்துகள், ஹெக்டேக்கள், கவுடாக்கள் ஆகியோர் கிட்ட கூறிப், பார்க்க இயலுமா? இல்லை முதலியார் சங்கம், நாடார் ச்ங்கம், நாயக்கர் சங்கம்னு எல்லாம் வெச்சிண்டிருக்காளே அவா கிட்டப் போய் பேச முடியுமா?
நான் இந்தப் பதிவிலே குறிப்பிட்டது காலம் சென்றவர்கள் பெயரில் இருக்கும் ஜாதிப் பெயரை நீக்கும் அதிகாரம் யார் தந்தௌ? அதே சமயம் டாக்டார் நாயர் ரோட் மட்டும் ஏன் அப்படியே இருந்தது? இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் தில் உண்டா?
அப்படியே படையாச்சி மாவட்டம்னு எப்படி வந்ததுன்னு கூற முடியுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பேருடன் உங்க சாதியை போட்டுக்கொள்ளும் உரிமை வேறு யாருக்கும் கிடையாது உங்கள் விருப்பம் என்கிறீர்கள். //
"பேருடன் உங்கள் சாதியை போட்டுக்கொள்ளுவது உங்கள் விருப்பம் அதை மாற்றச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்கிறீர்கள்" என்று படிக்கவும்.
////பி கு: அது சரி, நீங்கள் பாட்டு தைரியமாக டபுள் ஓக்கே போடுகிறீர்களே, "அவங்க" டோண்டு சார் பதிவில் இந்த பின்னூட்டத்தை படிக்கமாட்டர்கள் என்கின்ற நம்பிக்கைதானே?////
கண்டிப்பாக பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது...:))))))
கோபி...
//உ.ம்: 8-3-231/A/73, Road No: 2, Banjara Hills, என்று//
நீங்கள் இருப்பது ஹைதராபாத்திலோ ?
நானும் அங்கு தான் இருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் Let us agree to disagree..
//இதையே உங்க ஊருலே இருக்கிற லிங்காயத்துகள், ஹெக்டேக்கள், கவுடாக்கள் ஆகியோர் கிட்ட கூறிப், பார்க்க இயலுமா? இல்லை முதலியார் சங்கம், நாடார் ச்ங்கம், நாயக்கர் சங்கம்னு எல்லாம் வெச்சிண்டிருக்காளே அவா கிட்டப் போய் பேச முடியுமா?//
நீங்க சொன்னதை அவங்க சொல்லியிருந்தா அவங்க கிட்டயும் போய் அவங்க "பாசை"யில இதையே பேசியிருப்பேன்.
ஆனா பாருங்க, பேச்சை விட "செயலில்"தான் எனக்கு நம்பிக்கை அதிகம். ஆதிக்கசாதிகளின் ஈனச்செயல்கள் என்னை பாதிக்கும் போது என்னளவில் "செயல்முறையில்" எதிர்த்து அந்த செயல்களை தகர்த்திருக்கிறேன்.
விவாதத்தை மேற்கொண்டு வளர்க்க விருப்பமில்லை. கடைசியாக மீண்டும் "Let us Agree to disagree" என்று முத்தாய்ப்பாய் முடித்துக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்
மதுசூதனன்,
நான் முன்பிருந்தது ஹைத்ராபாத்தில். இப்போதிருப்பது பெங்களூரில்.
யார் சாதிப் பெயரை யார் எடுப்பது?
-------------------------------
நிச்சயம் உங்கள் சாதிப்பெயரை யாரும் வந்து எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது.நீங்கள் நினைத்தால் அரசாங்க கெஜட்டில் எப்படி வேண்டுமோ அப்படியே பதிவு செய்து கொள்ளலாம்.மற்றவர்களும் அப்படியே கூப்பிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்யலாம்.(ஒருவனின் பெயரை அவன் விரும்பாவண்ணம் உச்சரிப்பது மரியாதைக் குறைவு).
அப்படியே அரசாங்கம் சட்டம் போட்டு உங்களின் பெயரை மாற்றச் சொன்னாலும் நீங்கள் சுப்ரீம் கோர்ட்வரை செல்லலாம்.சாதிப் பெயரை பயன்படுத்திக் கொள்ளும் உங்களின் முயற்சியை யாராலும் நிறுத்த முடியாது.
பூணூலைக்கூட நீங்கள் ஏன் சட்டைக்குள் போடுகிறீர்கள் பிறருக்குப் பயந்தா?நீங்கள்தான் மற்றவர்கள் போல் பயப்படமாட்டீர்களே அய்யா? இது வடகலை அய்யங்கார் வசிக்கும் வீடு என்று பெரிதா எழுதிக்கூட வைக்கலாம்.
தயவு செய்து பார்ப்பனீய சர்னேம்களை மேற்கு கலாச்சாரத்தின் லாஸ்ட் நேம்களுடன் ஒப்பிட வேண்டாம்.
"லாரனஸ் ஷூமேக்கரை" விட "தாமஸ் பார்பர்" தாழந்தவர் அல்ல.இவர்களைவிட "கிராகாம் வுட்" எந்தவிதத்திலும் உயர்ந்தவர் அல்ல. டேவிட் கார்ப்பெண்டர் இந்த வருணம்தான் என்று புத்தகங்கள் சொவது இல்லை.ஒரு ஆற்றின் பெயரை எனது நண்பர் லாஸ்ட் நேமாக வைத்துள்ளார். "நான்ஸி லார்சன்" சர்ச்சில் முக்கியமான பதவியில் இருந்து கொண்டு பகுதி நேரமாக கக்கூஸ் கழுவுகிறார்.வெளி நாடுகளில் லாஸ்ட் நேம் என்பது என்ன என்று தெரிந்து எழுதவும்.
புது பிளாக்கருக்கு உங்களை கட்டாய மாற்றம் செய்துவிட்டார்கள். நீங்கள் என்ன பிளாக்கைவிட்டு ஓடியா போனீர்கள்? பலரிடம் உதவி கேட்டு மாற்றங்களை ஏற்கவில்லை. அது போல் அந்த போஸ்ட்மேன்களும் மாற்றங்களுடன் வாழப்பழகிக் கொள்வார்கள்.தெருப் பெயரில் குழப்படி இருந்தால் 1 ஆம் தெரு 2 ஆம் தெரு என்று மாற்ற ஆலோசனை சொல்லலாம். அதைவிடுத்து சாதிப் பெயர்தான் நல்லது என்று பேசுவது கொடுமை.
நீங்கள் அடிக்கடி இளைஞன் என்று சொல்வீர்கள். உண்மைதான் அய்யா. நீங்கள் வளரவே இல்லை.
பார்ப்பனீயத்தின் முக்கிய குணமே..
தனக்குத் தேவை/நன்மை என்றால் அதனுடன் சமரசம் செய்து கொள்ளும்
(உ.ம்: நீங்கள் புதிய பிளாக்கருடன் வாழ பழகிக் கொண்டுஇருப்பது).
தனக்கு பாதிப்பு/பிடிக்கவில்லை என்றால் அதை நேரடியாக எதிர்க்காமல் அடுத்தவன் இலைக்கு பாயாசம் கேட்பது போல் எதிர்ப்பது.
(உ.ம்: உங்களின் சாதிப் பெயரை யாரும் இதுவரை சட்டம் போட்டு மாற்றச் சொல்லவில்லை. ஆனால் தெருப் பெயர் மாறியவுடன் அதை எதிர்க்கும் சாக்கில் உங்களின் செயலை ஞாயப்படுத்துகிறீகள்.)
"ஆனா பாருங்க, பேச்சை விட "செயலில்"தான் எனக்கு நம்பிக்கை அதிகம். ஆதிக்கசாதிகளின் ஈனச்செயல்கள் என்னை பாதிக்கும் போது என்னளவில் "செயல்முறையில்" எதிர்த்து அந்த செயல்களை தகர்த்திருக்கிறேன்."
ரொம்ப சத்தியமான வார்த்தை. அதே போலத்தான் பார்ப்பனர்களை தேவையின்றி வம்புக்கிழுப்பவர்களை நான் ட்ரீட் செய்கிறேன். அது எனது எதிர்வினை. அவரவர் கருத்து அவரவருக்கு என்றுதான் நான் முதலிலிருந்தே கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
(ஒருவனின் பெயரை அவன் விரும்பாவண்ணம் உச்சரிப்பது மரியாதைக் குறைவு).
அப்படி வாருங்கள் வழிக்கு. இறந்தவர்கள் பெயரில் உள்ள சாதிப்பெயரை எடுப்பதற்கு இவர்கள் யார்? வெங்கடாசல செட்டி, வெங்கடாசல முதலி, வெங்கடாசல நாயக்கர், நானா சாஹேப் இத்யாதி, இத்யாதி. முதலில் அதற்கு பதில் கூறுங்கள். டாக்டர் நாயர் ரோட் மட்டும் ஏன் அப்படியே இருந்தது? அதையும் கூறுங்கள்? எஸ்.ஆர்.எம்மிலிருந்து M-ஐ எடுத்து விடுவீர்களா?
"அது போல் அந்த போஸ்ட்மேன்களும் மாற்றங்களுடன் வாழப்பழகிக் கொள்வார்கள்."
உங்களுக்கென்ன கூறிவிட்டீர்கள். அதை அவர்கள் சொல்ல வேண்டும் சார்.
படையாச்சி மாவட்டம், முத்துராமலிங்க தேவர் மாவட்டம்?
சாதி சங்கம் வைத்திருப்பவர்களிடாம் போய் பேசுங்கள். உங்கள் வீட்டார் எப்படியெல்லாம் சாதி பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் நீங்களே பார்த்து கொள்ளுங்கள். பெற்றோர் அரேஞ்ச் செய்யும் திருமணங்கள் சாதி அடிப்படையிலா அல்லது வேறு அடிப்படையிலா என்பதையும் பாருங்கள். ஹிந்து/மங்கையர் மலர் ஆகிய பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களைப் பாருங்கள். விட்டால் எல்லோரும் பார்ப்பனர் சொல்வதை கேட்டுத்தான் செய்தார்கள் என்றும் கூறினாலும் கூறுவீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"கண்டிப்பாக பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது...:))))))"
ரொம்ப தைரியம்தான். :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
வலைப்பதிவர் சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளேன்...இங்கே நீங்கள் பின்னூட்டம் இட்டு உங்கள் வருகையை உறுதி செய்யவேண்டும்...இது உங்களுக்கு அபிஷியல் ரெக்வஸ்ட் :)))))
கண்டிப்பாக வருகிறேன் ரவி அவர்களே. இதற்காக என் தரப்பிலிருந்தும் ஒரு தனிப்பதிவு போட நினைத்தேன். பிளாக்கர் சொதப்புகிறது. ஆகவே நான் போட நினைத்த பதிவையும் பின்னூட்டமாக உங்கள் பதிவிலும் போட்டுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதையெல்லாம் படிக்கும்போது, என் ஞாபகத்தில் வரும் பல கிறுக்குத்தனங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
சாதியை ஒழிக்கிறேன் பேர்வழி என்று சாதியை பெயர்களிலிருந்து தூக்கி பல தலைவர்களுக்கு அவமானமிழைத்தாகி விட்டது.
மெய்யப்ப செட்டியாரை மெய்யப்பன் என்று சொல்லும்போது அவமரியாதையாக தோன்றுகிறது. செட்டியார்வாள் என்றுதான் கல்கி எழுதுவார்.
தெருப்பெயர்களில் மட்டுமல்ல, இந்த துக்ளக் அரசாங்கம் பள்ளிகளிலும் இந்த அடாவடியை செய்தது. நானிருக்கும் மயிலையின் பெரிய P.S ஹைஸ்கூல் பென்னத்தூர் சுப்ரமணிய ஐயர் பள்ளி என்று பெரிதாக ஆளுயர கொட்டை எழுத்தில் இருந்தது. திடீரென்று ஒரு நாள் 'பென்னத்தூர் சுப்பிரமணியன்" என்று மாற்றிவிட்டார்கள். அய்யர்களை ஒழித்த திருப்தியில் மயிலாப்பூர் மகிழ்ந்தது.
வெங்கடாசலங்களுக்கு திருவல்லிக்கேணியில் பிராப்ளம் வந்திருக்கலாம். ஆனால், எங்கள் மயிலாப்பூரில் அவர் சிரமப்படவில்லை.
வேங்கடாசல முதலி தெரு (ராதாகிருஷ்ணன் சாலையையும், ராயப்பேட்டை ஹைரோட்டையும் இணைக்கும் சாலை) வெறுமனே சுருங்கி V.M. தெரு ஆனது. தமிழிலும் வி.எம். தெரு என்றே எழுதிவைத்திருக்கிறார்கள் இந்த பிருகஸ்பதிகள்.
இம்மாதிரி அறைகுறை பிரசவங்கள் நிறைய.
நானிருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி ரோடு வெறுமனே சுருங்கி டி.டி.கே சாலை என்று ஆனது. இது தமிழா?
இதே பெயரை தாங்கிய நுங்கம்பாக்கம் கிருஷ்ணமாச்சாரியோ "கிருஷ்ணமா" என்று ஆனார். ஏனென்றால், கிருஷ்ணமாச்சாரியிலிருந்து சாதியை எப்படி ஒழிப்பதென்று தெரியவில்லை. "மா"ச்சரியத்தில் விட்டுவிட்டார்கள்.
ஆனால், எங்கள் "ரங்காச்சாரி'க்கு பிடித்தது சனி. பொறுப்பில்லாமல் நறுக்கி "ரங்கா" என்று ஆக்கிவிட்டார்கள். ரங்கா, ரங்கா என்று கத்திக்கொண்டிருக்கிறோம். போகட்டும், "ரங்கன்" என்பதுதான் சரியான பெயர் என்று தெரிந்திருந்தால், அவர் பெயரை அவமரியாதையாய் "ரங்கன்" என்று போட்டிருப்பார்களா, இல்லை "ரங்கர்" என்று சொல்லியிருப்பார்களா. எல்லாம், அந்த அசத்து எம்ஜியாருக்கே வெளிச்சம்.
ஆனால், தேவரிடம் இன்னும் கைவைக்கவில்லை. சேமியர்ஸ் சாலை இன்னும் "பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை" என்றே எழுதியிருக்கிறது.
அரசியலதான் காரணமே.
ஆனால், அய்யர்களும், செட்டிகளும், முதலிகளும் நிறைந்த சென்னை வீதிகள் இன்று அடையாளம் தெரியாமல் வலம் வருகின்றன.
என் அபிப்ராயத்தில் சாதி ஒழிக்க எடுத்த முடிவு சரியோ, தப்போ ஆனால், எடுத்தோம், கவுத்தோம் என்று செய்த இந்த காரியம் கேலிக்கூத்து...
இதன் இன்னொரு பரிமாணமாக, இங்கிலீஷ் பெயர்களை தமிழ்படுத்துகிறேன் என்ற கூத்தை பற்றியும் நிறைய எழுதலாம்.
நானிருக்கும் வாரன் சாலை பக்தவச்லம் சாலையாகி பத்து வருடத்துக்கு மேலாகிறது. ஆனால், சத்தியமாக ஒருத்தனும் அப்படி சொல்வதில்லை. ஆட்டோ காரனிடம் 'பக்தவச்சலம் சாலை' என்று கேட்டால் அதிகமாக காசு கேட்பார். வாரன் சாலை என்று சொன்னால்தான் லோகல் ஆளுக்கு அடையாளம்.
நம்ம லோகல் லீடர்களுக்கு அவ்வளவுதான் முகவரி...
இந்த சங்கடம் இப்போதும் தீர்ந்தபாடில்லை. பகுத்தறிவு குஞ்சுகள் இன்றும் சன் டிவியில் "மணிசங்கர் அய்யர்" என்று சொல்வதில் சங்கடப்படுகின்றன. மணிசங்கர் என்று சொல்லவும் மனசில்லை. அய்யர் என்ற ஆபாச வார்த்தையை சன்டிவியில் சொல்லவும் முடியவில்லை. கஷ்டம்தான்... மாத்தி மாதிரி தோனினமாதிரி சொல்கிறார்கள்..
இன்னொரு பெரிய கொடுமையைக் கேளுங்கள் ஜெயராமன் அவர்களே.
ஹாமில்டன் பாலத்தை (திருவல்லிக்கேணிக்கருகில்) ஹாமில்டன் வாராவதி என்று முதலில் செய்து பிறகு அதை உள்ளூர்க்காரர்கள் அம்பட்டன் வாராவதி என்று சுருக்கினார்கள்.
இப்போது தமிழக அரசு கோமாளித்தனம் செய்தது. அம்பட்டன் வாராவதியிலிருந்து அம்பட்டனை எடுத்து என்ன செய்தார்கள் தெரியுமா? அதை அம்பேத்கர் பாலம் என மாற்றினார்கள். இது எப்படி இருக்கு? இந்திய அரசியல் சட்டத்தின் தந்தைக்கு நல்ல மரியாதை தந்தது அரசு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Found this site from Arvindneela's blog:
http://aiyan-kali.blogspot.com/2007/02/blog-post_06.html
Your comments?
You Know Who அவர்களே,
அது குறித்து நான் பதிவே போட்டுக் கொண்டிருக்கிறேன். நான் போட நினைத்து கவனத்திலிருந்து தவறிய பதிவு அது. இவரது இப்பதிவால் கவனத்துக்கு வந்தது.
ஆகவே அப்பதிவருக்கு நன்றி தெரிவித்து இப்பதிவு இன்று வரும். :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்ன்
//Dear Sir
I havea doubt? Who is this person?
http://munivelu.blogspot.com/
http://www2.blogger.com/profile/04553556820907257167//
Better go and ask him. Before that, how about telling as to who you are, as someone else might ask me about you. Just for information please.
Regards,
Dondu N.Raghavan
தெரு பெயர்களில் இருந்த ஜாதி பெயரைத் தூக்கியது தவறு தான். ஜாதியை தன் பெயருடன் இணைத்துக்கொண்ட மனிதர்களை அல்லவா தூக்கியிருக்க வேண்டும். எதிர்காலத்தில் எந்த தெருவுக்கும் இவர்கள் பெயரை வைத்து பின் ஜாதி பெயரை தூக்கி மக்களை குழப்பாமல் இருக்கலாம்.
"ஜாதியை தன் பெயருடன் இணைத்துக்கொண்ட மனிதர்களை அல்லவா தூக்கியிருக்க வேண்டும்".
எப்படி? டாக்டர் ரங்காச்சாரியை தூக்க வேண்டுமென்றால் 1930 களுக்கு அல்லவா செல்ல வேண்டும்?
காலயந்திரம் ஆர்டர் செய்வோமா?
"ஒரு கால எந்தேரம் பார்சல்..."
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்படியே சோனியா காந்தி, மன்மோஹன் சிங், புத்ததேப் பட்டாச்சார்யா ஆகியோரையும் தூக்கச் சொல்வீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அனானிகளுக்கு வழி விட்ட டோண்டு மாமா வாழ்க
டோண்டுவைப் பற்றிய ஒரு தலித்திய பார்வை:
http://aiyan-kali.blogspot.com/
//லாரனஸ் ஷூமேக்கரை" விட "தாமஸ் பார்பர்" தாழந்தவர் அல்ல.இவர்களைவிட "கிராகாம் வுட்" எந்தவிதத்திலும் உயர்ந்தவர் அல்ல. டேவிட் கார்ப்பெண்டர் இந்த வருணம்தான் என்று புத்தகங்கள் சொவது இல்லை.ஒரு ஆற்றின் பெயரை எனது நண்பர் லாஸ்ட் நேமாக வைத்துள்ளார். "நான்ஸி லார்சன்" சர்ச்சில் முக்கியமான பதவியில் இருந்து கொண்டு பகுதி நேரமாக கக்கூஸ் கழுவுகிறார்.வெளி நாடுகளில் லாஸ்ட் நேம் என்பது என்ன என்று தெரிந்து எழுதவும்.//
Utter Nonsense. Kalveddu should first study the history of European caste system which the society overcame after its colonial expansionism
வாருங்கள் அரவிந்தன்,
உங்கள் பதிவில் அப்படி என்னை திட்டி விட்டு இங்கு வந்து சேம் சைட் கோல் அடிக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்கள் பதிவில் அப்படி என்னை திட்டி விட்டு இங்கு வந்து சேம் சைட் கோல் அடிக்கிறீர்கள்?//
உங்களை திட்டவில்லை. சேம் சைட் கோல் போடவும் இல்லை. சாதி குறித்தும் கலப்பு திருமணம் குறித்தும் உங்கள் கருத்துக்கள் தவறானவை. கண்டிக்கப்பட வேண்டியவை. கல்வெட்டின் தகவல்கள் தவறானவை, ஐரோப்பாவில் சாதீயம் பாரதத்தைக் காட்டிலும் மோசமாக இருந்தது. செயிண்ட் அகஸ்டைன் போன்ற மகா பெரிய கிறிஸ்தவ இறையியலாளர் பாணர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க கூடாது -அவர்கள் ஏசுவை ஏற்றுக்கொண்டவர்களானாலும்- என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். தோல்பதனிடுபவர்கள், நாவிதர்கள், வண்ணான் ஆகியவர்களுக்கு எதிராக தீண்டாமையும் நிலவியிருந்திருக்கிறது. இதற்கான இறையியல் நியாயங்களும் மத்திய கால ஐரோப்பிய நூல்களில் நிறையவே கிடைக்கும். எனவே கல்வெட்டு ஏதோ ஐரோப்பிய பின்-பெயர்களுக்கு சாதீய கொடுமை பின்னணி கிடையாது என்று சொல்லியிருப்பதைத்தான் தவறு - சுத்தமாக வரலாற்று அறிவு இல்லாமல் மேம்போக்காக பாரத கலாச்சாரத்தை மட்டும் திட்டும் பார்வை என கடிந்திருக்கிறேன். ஆனால் சாதிப்பெயர் இன்றைக்கு அங்கு வலியும் வலுவும் இழந்துவிட்டது. ஏன்? மிகுதியான மூலதன உள்ளீடு காலனியவிரிவாதிக்கம் ஆகியவை காரணிகள். ஆக, இன்று கல்வெட்டு சிலாகிக்கும் சாதீயமற்ற sur-name களை மேற்கத்திய நாகரிகம் பெற மூன்று கண்டங்களில் கருவறுப்பு நடத்தி மூலதன கொள்ளையடிப்பால் அது நிகழ்ந்தது. இந்துஸ்தானத்தின் கதை என்ன? அதே காலகட்டத்தில் பாரதத்திலிருந்து மூலதனம் வெளியேறிக்கொண்டிருந்தது. அத்துடன் கடுமையாக சாதீய கட்டமைப்பு இறுகியது.இதில் காலனீய பிரிட்டிஷாரின் பங்கு இன்னமும் முழுமையாக ஆராயப்படாதது. ஐயன் காளி தமது பதிவில் குற்றப்பரம்பரையாக பிரிட்டிசாரால் மாற்றப்பட்ட ஒரு விவசாய-வனவாசி சாதியினரைக் குறித்து கூறியிருந்தார், பாரதம் முழுவதும் இது நடந்திருக்கிறது. பல கோடி மக்கள் பிரிட்டிஷ் காலனிய அமைப்பினால் இறுக்கமடைந்த சாதியக்கட்டமைப்பில் கீழே கீழே தள்ளப்பட்டனர். எனவே மூலதனமிழந்து சாதீயம் இறுக்கமடைந்த நிலையில் இந்து சமுதாயமானது சாதீயத்தை எதிர்த்து போராடுகிறது. பாரதம் விடுதலை அடைந்த போது சாதீயம் அழிக்கப்பட அரசியல் அமைப்பும் சமுதாயமும் இணைந்து முடிவெடுக்குமென நினைத்தோம். ஆனால் சாதீய மேன்மையை பற்றித்திரியும் தங்களைப்போல்வோர் ஒரு புறம் என்றால் சாதீயத்தை அரசியல் மூலதனமாக்கி அதில் அதிகார அறுவடை காண்போர் மறுபுறம். பழி என்னவோ இந்து தருமத்தின் மேல். எனவேதான் நமது அனைத்து சக்தியையும் பயன்படுத்தி சாதீயம் அழிக்கப்பட வேண்டியது அவசியம். எனவேதான் சாதீயம் அழிக்கும் மானுட மணத்தை (உங்கள் பாசையில் கலப்பு மணம் ஹும்) சங்கம் ஆதரிக்கிறது. எனது திருமணத்திற்கு சங்க அதிகாரிகள் மட்டுமே வந்திருந்தனர். உறவினர் வரவில்லை. இன்று என் குழந்தை எவ்வித ஏக்கமும் இல்லாமல்தான் வளருகிறான். சங்ககாலம் முதல் குடும்பங்களை எதிர்த்து காதல் மணங்கள் நடந்து வந்துள்ளன. ஒரு சங்கப்பாடலில் அவ்விதம் சென்ற காதலரை பிடிக்க விரைகின்றனர் பெற்றோர். வழியில் ஒரு அந்தணரிடம் இந்த பாதையில் இருவர் சென்றார்களே பார்த்தீர்களா என்கின்றனர். அதற்கு அந்த பழந்தமிழ் அந்தணர் கூறிய பதில் என்ன தெரியுமா? "இல்லையே ஒருவர் தான் சென்றார்கள் ஏனென்றால் அந்த அளவு அவர்கள் உள்ளமும் இதயமும் ஒத்துவிட்டது" என அந்த பெற்றோருக்கு அறிவுரை கூறி அவர்களை அத்திருமணத்தை ஏற்க செய்தாராம். மீண்டும் சொல்கிறேன். சிறிதே சிந்தியுங்கள். இந்து தருமமும் சமுதாயமும் எத்தனையோ புறப்பகைகளை சந்தித்தப்படி இருக்க, அகப்பகையாக அரிக்கிறது சாதீயம். ஐயா உங்களுக்கு புண்ணியமாக போகும் இந்த சாதிப்பற்றை விடுத்து சமுதாய அக்கறை கொள்ளுங்கள்.
Dondu,
You can ignore all the other kids. Dont ignore Aravindan's Hindu voice!
YKW
So you cornered at last Mr.Dondu. Why cant you respond to Aravinda's beautiful post above?
//So you cornered at last Mr.Dondu. Why cant you respond to Aravinda's beautiful post above?//
பதிவா, பின்னூட்டமா? And I am supposed to be cornered? Funny.
அரவிந்தன் நான் சொல்வதைத்தான் குறிப்பிடுகிறார். எந்த சமூகமாக இருப்பினும் குழு மனப்பான்மை என்பது ஏதாவது ஒரு ரூபத்தில் வரும் என்றுதான் நானும் கூறுகிறேன்.
ஆனால் ஒன்று. என்னை அவர் தனது பதிவில் ரொம்பவே மோசமான வார்த்தைகLil சாடிவிட்டார். நண்பர் கால்கரி சிவா அவர்களும் அதில் சேர்ந்து கொண்டது குறித்து வருந்தினேன். இருப்பினும் அவர்கள் கூறுவதையும் பரிசீலனை செய்தேன்.
நான் ஜாதி வெறியன் என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? சில விஷயங்கள் எப்போதும் ஒரே மாதிரி நடக்கின்றன, நடக்கும். அதை யெல்லாம் மனதில் கொண்டு ஜாக்கிரதையாக செயல்படுங்கள் என சொல்வது என்ன தவறு?
குடுப்பத்தில் மூத்த பெண்ணோ பிள்ளையோ இம்மாதிரி செயல்படுவதால் அவர்களது தம்பி தங்கையினரும் பாதிக்கப்படுகின்றனர். கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் நல்லபடியாக நடந்தால் சந்தோஷம். இல்லாவிட்டால் என்ன மன உளைச்சல்? அச்சமயத்தில் உற்றார் உறவினரின் துணையும் இல்லாது போவது என்ன கொடுமை?
தாங்கள்தான் என்னவோ முற்போக்காளர்கள் என்று எண்ணிக்கொள்ளப்படவேண்டுமென்பதற்காகவே மனதுக்கு ஒவ்வாததை எழுதி இணைய தாசில்தார்கள் ஒப்புதல் பெறுவது எனக்கு பிடித்தமில்லை. அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் சொல்கிறேன் என்பதற்காக மட்டும் ஒப்புக் கொள்ளாதீர்கள், பகுத்தறிவை உபயோகித்து அவர்வர் செய்ய வேண்டியதை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் என ஈ.வே.ராமசாமி நாயக்கர் அவர்கள் கூறுவது இந்த இடத்தில் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் அதுவே எனது கருத்துமாகும்.
ஆகவே, டோண்டு ராகவன் கூறுகிறான் என்பதற்காக மட்டும் நீங்களும் செயல்படாதீர்கள் என இந்த அறுபது வயது இளைஞன் கூறுகிறான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I want to mention one thing that there is lot of difference between cast name and surname. In north, western part of india for e.g patel can be a found in all the cast including Muslims. Ahmed patel etc., Simlarly Sing.You cannot identify ones cast only by surname. One can presume, That is not the case in TamilNadu. It was there but i don't know how and when it was removed. For eg in my family the eldest son name is given RAO title, though we are Iyers.
//I want to mention one thing that there is lot of difference between caste name and surname.//
முற்றிலும் உண்மை. அதே சமயம் ஜாதிப் பெயரையும் சர்நேமாக உபயோகிக்கின்றனர். அது அவரவர் குடும்பத்தின் வழக்கம்.
அமெரிக்கா விஷயத்தை நான் இப்பதிவில் கூறியதை வைத்து, என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்ற தலைப்பில் நான் இட்டதைப் படித்துள்ள "ஒரு இணைய நண்பர்" என்னை சொந்த நாட்டை விட்டு நகராத நாதாறி" என மிகுந்த அன்புடன் குறிப்பிட்டார். அவருக்கு எனது நன்றி.
ஆனாலும் வருமான வரி கட்டும் படிவங்கள், பம்பாய், தில்லி ஆகிய இடங்களில் இருந்தபோது பட்ட துன்பங்கள் ஆகியவை நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment