4/11/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -2

ஜவஹர்லால் நேரு அவர்களது லெகஸி பற்றி எழுதிய முந்தையப் பதிவில் நான் இம்மாதிரி குறிப்பிட்டிருந்தேன்.

"அதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர்". இந்த வரிகளுக்கு எதிர்வினையாக சில பின்னூட்டங்கள் வந்தன. அதில் ஒருவர் வேலை நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்து சம்பாதித்த எனது செயலை கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வேடிக்கையாக ஒரு பதில் கூறினேன் அப்போதைக்கு ஏனெனில் அப்பதிவு நேருவைப் பற்றியது. இப்போது சற்று சீரியஸாகவே பதில் கூறுகிறேன்.

அரசு நிறுவனங்களில் தேவைக்கதிகமாக ஆட்கள் வேலைக்கு எடுப்பது தெரிந்ததே. அதுவும் ஐ.டி.பி.எல். விவகாரத்தில் என்னெல்லாம் கந்திர கோளம் நடந்தது என்பதை எனது ஐ.டி.பி.எல். நினைவுகள் லேபல் கீழ் குறிப்பிட்டுள்ளேன்.

என்னை மேலே சொன்ன விஷயத்தை வைத்து கேள்வி கேட்டவர் சரியாகத்தான் கேட்டுள்ளார். ஆம், இந்த நிலைக்கும் இந்திரா காந்திதான் காரணம். ஆனால் ஒன்று. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நெட்டி முறிக்கும் வேலை வந்தபோது ஐ.டி.பி.எல். வேலை மட்டுமே முக்கியமாக நடந்தது. அதுவும் வேலையில் சேர்ந்த புதிதில் என் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் வேலை நேரத்தில் சுறுசுறுப்பான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளனாகவும், வீட்டில் இருக்கும் நேரத்தில் அதே அளவில் சுறுசுறுப்பான ஜெர்மன் மொழி பெயர்ப்பாளனாகவும் இருந்ததை வேடிக்கையாகவே குறிப்பிட்டேன்.

மறுபடியும் இந்திரா காந்தி. பொதுத் துறையில் இருந்த நிறுவனங்களின் பொற்காலமே எழுபதுகள் மற்றும் எண்பதுகள். 1966-ல் பதவிக்கு வந்து 1984-ல் கொல்லப்பட்ட இந்திரா காந்தி அவர்கள் 1977 முதல் 1980 வரையிலான குறுகிய காலக் கட்டத்தைத் தவிர்த்து பிரதம மந்திரியாக இருந்தார். சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேசீய மயமாக்கினார்.

1966 ஜனவரியில் அவர் பிரதமராகத் தேர்வு பெற மொரார்ஜி தேசாயோடு போட்டி போட நேர்ந்தது. மொரார்ஜியிடம் அதிருப்தியுற்றவர்கள் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்தனர். அப்போது மொரார்ஜி பிரதமரானால் தங்கள் அதிகாரம் செல்லாது என அஞ்சினர். ஆகவே அரசியலுக்கு ஒப்பீட்டு அளவில் சற்றே புதியவராக இருந்த இந்திரா காந்தியை பிரதமராகத் தேர்ந்தெடுத்தால் தங்களுக்கு நல்லது எனத் திட்டமிட்டனர். அவர்களில் காமராஜரும் ஒருவர். இந்திரா காந்திக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டனர். நேருவின் மகள் என்ற லேபலும் இந்திரா காந்திக்கு சாதகமாக அமைந்தது.

இந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:
1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை
2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்
3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை
4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)
5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)
6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை
8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் 31 வரை (கொலையுண்ட தினம்)

இந்திரா காந்தி அவர்கள் அதிகாரத்தில் இருந்த 15 ஆண்டுகள் நேரு அவர்கள் அதிகாரத்தில் இருந்த 18 ஆண்டுகள், ராஜீவ் அவர்கள் இருந்த 5 ஆண்டுகள், ராஜீவின் மனைவி பொம்மைப் பிரதமரின் சூத்ரதாரியாக இருந்து வரும் காலம் ஆகியவற்றைக் கூட்டினால் 40 ஆண்டுகளுக்கு மேல் வருகிறது. இப்போது நடக்கும் பல விபரீதங்களுக்கு காரணமாக விரும்பியோ விரும்பாமலோ நேருவின் குடும்பம் அமைந்து விட்டது. ஆகவே நேருவின் லெகஸியை குறித்து எழுதத் துவங்கினேன்.

முதலில் வெறுமனே மூன்று பதிவுகள்தான் போட இயலும் என்று பார்த்தால் இந்திரா காந்தியின் காலக்கட்டம் மட்டுமே 4 பதிவுகளுக்கு குறையாமல் வந்து விடும் போலிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

Anonymous said...

எதை எழுதினாலும் ஏன் உங்களைப் பற்றியும் உங்கள் மொழிபெயர்ப்பு பற்றியும் மிகப் பெருமையாக எழுத மறப்பதில்லை?

dondu(#11168674346665545885) said...

//எதை எழுதினாலும் ஏன் உங்களைப் பற்றியும் உங்கள் மொழிபெயர்ப்பு பற்றியும் மிகப் பெருமையாக எழுத மறப்பதில்லை?//
நேருவை பற்றி போட்ட முந்தைய பதிவில் எனது மொழிபெயர்ப்பு வேலையை தேவையில்லாது இழுத்த புத்திசாலிதான் நான் எழுதியதற்கு காரணம். இம்மாதிரி கேட்டால் நான் சோர்ந்து போவேன் என்று பைத்தியக்காரத்தனமாக நினைப்பவருக்கு ஏற்ற பதிலையே தந்தேன்.

வேறு ஏதாவது கேள்வி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Raj Chandra said...

Dear Mr. Raghavan,

Though I may not completely agree with some of your views(like Kashmir issue), it is important, you record your views about Nehru family's legacy series(atleast people like me will know the eye witness accounts of what happened during those days).

Please write in detail(ofcourse depending on your time).

Thank you.

Regards,
Rajesh

dondu(#11168674346665545885) said...

நன்றி ராஜ் சந்திரா அவர்களே,

இந்திரா காந்தி கால கட்டத்திற்கே இரண்டுக்கும் மேல் பதிவுகள் ஆகிவிடும். நிதானமாக எனக்கு நினைவுக்கு வருபவையெற்றெல்லாம் தொகுத்து எழுதுவேன்.

காஷ்மீர் பற்றி உங்களுக்கு மாறு கருத்து இருந்தால் அதை பின்னூட்டமாக இடுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Raj Chandra said...

பின்னூட்டம் அல்லது பதிவாக எழுத ஆசை இருக்கிறது. ஆனால் தற்போதைய தமிழ் இணையப் பதிவுலகம் போகும் பாதையைப் பார்க்கும்போது, சிலவற்றை எழுத யோசிக்க வேண்டியுள்ளது (தவிர, உங்கள் அளவிற்க்கு சுறுசுறுப்பு இல்லை :) ).

சமயம் கிடைத்தால்(எப்போது இந்தியா வருவேன் என்று தெரியவில்லை) நேரில் பார்க்கும்போது பேசலாம்.

dondu(#11168674346665545885) said...

//பின்னூட்டம் அல்லது பதிவாக எழுத ஆசை இருக்கிறது. ஆனால் தற்போதைய தமிழ் இணையப் பதிவுலகம் போகும் பாதையைப் பார்க்கும்போது, சிலவற்றை எழுத யோசிக்க வேண்டியுள்ளது//
என்ன பிரச்சினையை குறிக்கிறீர்கள்? அதற்காகத்தானே அனானி ஆப்ஷன் திறந்துள்ளேன்? நீங்கள் பாட்டுக்கு செயல்படுங்கள். கவலை வேண்டாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன் வானவில் said...

ஒரு நாளின் பெரும்பகுதியை மொழிபெயர்ப்பு வேலையிலேயே செலவிடும் ஒருவர் அதே நினைவோடு இருப்பதும், அதைப் பற்றியே அதிகம் எழுதுவதிலும் என்ன ஆச்சரியம் இருக்கிறது anonymous zei அவர்களே? அதை ஏன் தற்பெருமையாக நினைக்க வேண்டும்?

டோண்டு அவர்களே, "சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேசீய மயமாக்கினார்" என்று எழுதியிருக்கிறீர்களே. தயவு செய்து கொஞ்சம் விளக்குங்கள். ஒட்டுமொத்தமாக இவ்வாறு கூறுவது சரியாகப் படவில்லை. அவ்வாறு இந்திரா செய்ததால் எந்தவொரு நன்மையும் விளையவே இல்லையா?

அன்புடன்,
ராஜாமணி

dondu(#11168674346665545885) said...

//அவ்வாறு இந்திரா செய்ததால் எந்தவொரு நன்மையும் விளையவே இல்லையா?//
அரசியல் வாதிகளுக்கு கொழுத்த நன்மை. ராஜாஜி அவர்கள் கூறினார். அரசின் வேலை அரசு நடாத்துவது. வெற்றிலைப் பாக்கு கடை வைப்பதில்லை என்று.

ஆனால் வெத்திலைப் பாக்குக் கடைக்குகூட டெண்டர் எல்லாம் விட்டு திருவிழாவே நடத்க்துவர் அரசினர்.

சில பெரிய முதலீடுகள் தேவைப்படும் துறைகளுக்கு மட்டும் அரசு முயற்சி தேவைப்படும், உதாரணம் ரயில்வே.

மேலும் விவரமாக அடுத்த பதிவில் எழுதுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
டோண்டு அவர்களே, "சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேசீய மயமாக்கினார்" என்று எழுதியிருக்கிறீர்களே. தயவு செய்து கொஞ்சம் விளக்குங்கள். ஒட்டுமொத்தமாக இவ்வாறு கூறுவது சரியாகப் படவில்லை. அவ்வாறு இந்திரா செய்ததால் எந்தவொரு நன்மையும் விளையவே இல்லையா?
//

எல்லாவற்றையும் தேசியமயமாக்கியதால் இலாபத்தில் ஓடிக்கொண்டிருந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கின. அரசு வெள்ளை யானைகளை பராமரிக்கவே வரிப்பணம் செலவானது.

தீமைகளைக்கணக்கிட்டால் நன்மைகளின் அளவு மடுவாகிவிடுகிறது. மூட்டைப் பூச்சித் தொல்லைக்கு வீட்டைக் கொழுத்திய கதைதான்.

மூட்டைப் பூச்சி தொல்லை அழிந்தது என்ற நன்மை உண்டாயிற்று அவ்வளவே.

இன்று பாருங்கள், அனைத்திலும் தனியார் முதலீடு. இதை 1980லேயே ஆரம்பித்திருந்தால் நிச்சயம் நாம் ஒரு 15 வருடம் அதிகம் முன்னேறியிருப்போம். இன்று ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் போல் பல பன்னாட்டு கம்பெனிகள் நம் நாட்டவர்களால் இயங்கிக் கொண்டிருக்கும். 1995க்குப் பிறகு தான் புத்தி வந்தது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது