முரட்டுக் காளைக்கு சிவப்புத் துண்டு போல ரஷ்டியின் பெயர் இசுலாமியருக்கு. இப்போது அவரை சர் ரஷ்டீன்னு கூப்பிடணும்னு பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது ஈரானையும் பாக்கிஸ்தானையும் சீண்டி விட்டுள்ளது. ஈரானிய அதிபர் அவசர அவசரமாக பழைய ஃபத்வாவை தூசி தட்டி எடுத்துள்ளார். சமீபத்தில் 1988-ல் தான் வந்தது என்றாலும் ரொம்பத்தான் தூசி சேர்ந்து விட்டது போல.
முதலில் ஒன்று கூறிவிடுகிறேன். ரஷ்டியின் எழுத்துக்களை என்னால் சில பக்கங்களுக்கு மேல் படிக்க முடிந்ததில்லை. அவ்வளவு குழப்பமான எழுத்து மனிதருக்கு. அவருடைய சாத்தானின் கவிதைகள் என்னும் புத்தகம் சாதாரணமாக மறக்கப்பட்டிருக்கக்கூடியதே என்று அக்காலத்தில் குஷ்வந்த் சிங் எழுதியுள்ளார். ஆனால் அது மிகவும் பிரசித்தி பெற்று, பல நாடுகளால் தடை செய்யப்பட்டு அதன் விற்பனை கோடிகளை எட்டியது. அக்கால ஈரானியக் கோமாளி அயதுல்லா கோமேனியால்தான் அப்புத்தகம் பிரசித்தியாயிற்று என்றால் மிகையாகாது. மற்றப்படி காலணா பெறாத அந்தப் புத்தகத்துக்கு கோடிக்கணக்கான டாலர்கள் பெறுமானமுள்ள விளம்பர விழாவையே கோமாளி நடத்தினார்.
அச்சமயம் பாக்கிஸ்தானில் ஒரு உருது படமே தயாரித்தார்கள். படத்தின் பெயர் "International guerilley" (சர்வதேச கொரில்லாக்கள்). தமாஷான கதை. வில்லன் ரஷ்டியைப் போன்ற முகத்தோற்றம் கொண்ட ஒரு பேர்வழி. அவர் இசுலாமியருக்கு எதிராக பெரிய சதி செய்கிறார். அவருக்கு துணையாக இஸ்ரவேலர்களைத் தவிர யாரைக் கூற முடியும்? கடைசி காட்சிதான் ரொம்பத் தமாஷ். திடீரென எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான புனித குரான் புத்தகங்கள் குண்டு போல சீறி வந்து ரஷ்டியை மோதி அழிக்கின்றனவாம். இதைவிட புனித குரானை அதிகம் அவமதிக்க முடியாது என்று கருதுகிறேன்.
கடைசியில் என்ன ஆயிற்று? பத்வா போட்ட கோமேனி, மேலும் அவருடன் சேர்ந்து ஆட்டம் போட்ட மற்ற இசுலாமியத் தலைவர்களில் பலர் இப்போது மறைந்து விட்டனர். ரஷ்டி மட்டும் நிற்கிறார். இந்த கோமாளித்தனமான வேலையில் ஈரானின் இழப்பை டாலர்களிலும் யூரோக்களிலும் எண்ண ஆரம்பித்தால் பல ஆண்டுகள் அதற்கே ஆகும். எல்லாம் எதற்காக? அப்படியே விட்டிருந்தால் மறக்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகத்துக்காக.
இப்போது பிரிட்டன் விஷயத்துக்கு வருவோம். ரஷ்டி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். சர் பட்டம் வழங்குவது பிரிட்டன். இதில் பாக்கிஸ்தானியருக்கும் இரானியருக்கும் என்ன வேலை? பட்டது போதாதா ஈரானுக்கு? இப்போது ஏன் பத்வாவை தூசி தட்ட வேண்டும்? தேவையின்றி ரஷ்டியை தூக்கிப் பிடிப்பதுதான் இவர்கள் மறுபடி செய்யப்போகும் வேலை.
கடைசியாக ஒரு வார்த்தை. பல இசுலாமிய தேசங்கள் செய்யும் முன்னரே நமது அக்காலத்தைய இந்திய அரசு முந்திரிக்கொட்டை போல் புத்தகத்தை தடை செய்து அதன் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்தது. இப்போதாவது ஏதேனும் கூறி குட்டை குழப்ப மாட்டார்கள் என நம்புவோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
15 hours ago
43 comments:
இதை படிக்கும் போது நேற்று போட்ட இந்த பதிவு தான் ஞாபகம் வந்தது.
//இந்த கோமாளித்தனமான வேலையில் ஈரானின் இழப்பை டாலர்களிலும் யூரோக்களிலும் எண்ண ஆரம்பித்தால் பல ஆண்டுகள் அதற்கே ஆகும். எல்லாம் எதற்காக? அப்படியே விட்டிருந்தால் மறக்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகத்துக்காக.//
இதெபோலதான் பதிவுலகில் பலர் ரஜினி சாரை அவமானபடுத்துவதாக நினைத்துகொண்டு இலவசமாக தலைவருக்கு பப்ளிசிட்டி விழா நடத்திகொண்டிருகின்றனர். அவர்களுக்கு ரஜினி சார் நன்றிகடன் பட்டிருப்பார்.
//இதெபோலதான் பதிவுலகில் பலர் ரஜினி சாரை அவமானபடுத்துவதாக நினைத்துகொண்டு இலவசமாக தலைவருக்கு பப்ளிசிட்டி விழா நடத்திகொண்டிருகின்றனர். அவர்களுக்கு ரஜினி சார் நன்றிகடன் பட்டிருப்பார்.//
:)
ரஜினி என்ற கழிசடையின் பெயர் இங்கே ரொம்ப அவசியமா?
It was Khushwant Singh who recommended ban on Satanic Verses.
Rushdie's style is poetic and similar to James Joice's. You need to have good grounding in creative writing in English to appreciate Rushdie's prose.
>>முதலில் ஒன்று கூறிவிடுகிறேன். ரஷ்டியின் எழுத்துக்களை என்னால் சில பக்கங்களுக்கு மேல் படிக்க முடிந்ததில்லை. அவ்வளவு குழப்பமான எழுத்து மனிதருக்கு.
>>
- ருஷ்டியின் எழுத்துக்கள் மாயாவாத புனைவு வகையைச் சேர்ந்தவை. ஆனால் மார்க்வெஸ் அளவு எளிமையும், மண்வாசனையும் அவரிடம் இல்லை என்பது என் கருத்து. அவர் மேற்க்கத்திய எழுத்தாளர் நிலையில் இந்தியாவைப் பற்றி எழுதுவதும் ஒரு காரணம்.
>>அவருடைய சாத்தானின் கவிதைகள் என்னும் புத்தகம் சாதாரணமாக மறக்கப்பட்டிருக்கக்கூடியதே
>>
- உண்மை. அரசாங்கங்களும், ஃபத்வாக்களும் இதைப் பெரிதாக்கின.
>>
இந்திய அரசு முந்திரிக்கொட்டை போல் புத்தகத்தை தடை செய்து அதன் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்தது. இப்போதாவது ஏதேனும் கூறி குட்டை குழப்ப மாட்டார்கள் என நம்புவோம்.
>>
- தேர்தல் வரும்போது, இந்தியாவில் இது தூசுத் தட்டப்படும் :)
//ரஜினி என்ற கழிசடையின் பெயர் இங்கே ரொம்ப அவசியமா?//
ரஜனி என்னும் நல்ல மனிதரை இவ்வாறு கூறுவது தவறு. அவரைப் பொருத்தவரை அவர் பிரசித்தி பெற்ற நடிகர். அது அவரது தனித்திறமையால் வந்தது. அவரை எதிர்ப்பதன் மூலம் அவர் இன்னும் பிரசித்தி பெற்றார் எனக் கூறுவது புரிந்து கொள்ளக் கூடியதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//It was Khushwant Singh who recommended ban on Satanic Verses.//
என்ன நடந்ததென்றால், பெங்குவின் பதிப்பகத்துக்கு அச்சமயம் குஷ்வந்த் சிங் ஆலோசகராக இருந்தார். புத்தகம் வெளியிடும் முன்னமேயே அதை செய்ய வேண்டாம் என்று அவர் சொன்னது உண்மையே. ஏனெனில் அவர் பல தொல்லைகளை எதிர்ப்பார்த்தார். ஆனால் பதிப்பகத்தார் கேட்கவில்லை. கடைசியில் அவர் பயந்தது போலவே நடந்தது.
பிற்காலத்தில் அவர் இது பற்றி எழுதும்போது நான் மேலே எழுதியது போல குறிப்பிட்டிருக்கிறார். அதை அப்போதே அவர் சொன்னார் என நான் தவறுதலாக எழுதி விட்டேன். அனானிக்கு நன்றி.
//Rushdie's style is poetic and similar to James Joice's. You need to have good grounding in creative writing in English to appreciate Rushdie's prose.//
ஆகவே யாருமே சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். தடை செய்ததால் பலர் பிடிவாதமாகப் புத்தகத்தை வாங்கினர். ஆனால் படிக்கவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதே போல்தான் டோண்டு என்பவருக்கும் வலைத் தளத்தில் பலர் இலவச பிரசித்தி தேடித் தந்திருக்கிறார்களோ?
ச்சும்மா ஒரு தமாசுக்குத்தான்.. யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இங்கிலாந்திற்கு தங்கள் திறமைகளால் பெருமை சேர்த்தவர்களைக் கவுரவிக்க பிரிட்டிஷ் மகாராணியால் கவுரவித்து வழங்கப்படும் பட்டம் SIR. சாத்தானிய வேதம் எழுதியதால் வழங்கப்பட்ட பத்வாவினால், ருஷ்டிக்கு பிரிட்டிஸ் அரசு அடைக்கலம் கொடுத்தது.
எந்தவகையில் ருஷ்டியினால் பிரிட்டிஸ் அரசு பெருமையடைந்தது? என்று விளக்க முடியுமா?
ருஷ்டி எழுதியது சரியென்றால், போலி டோண்டு உங்களைப் பற்றி எழுதியதும் சரியே.
அதிருதுல்ல! :-)
சூப்பர் பதிவு. இந்த திம்மிகள் நாம் என்ன செய்கிறோம் இது நமது எதிர் அணியில் இருப்பவனுக்கு சாதகமாக மாறிவிடுமோ என்று சிந்திக்காமல், குருடர்கள் போல நம் கட்சி தலைவன்/ மத தலைவன்/ நான் நம்பும் சித்தாந்தம/மதம்் இப்படிதான் சொல்லுது என்பதற்காகவே ஆராயாமல் பல செயல்களை செய்கின்றனர்.
இவர்கள் உருபட்ட மாதிறிதான்.
தானும் உருபடாமல் மத்தவனையும் உருப்படவிடாமல் செய்வது இவர்களின் ஸ்பெஷாலிடி. எப்ப இவுங்க எல்லாரும் சொந்தமா யோசிக்கறாங்களோ அப்பதான் திருந்தமுடியும். அது சீக்கிரம் நடக்கும் என்று நம்பிக்கையில்லை. அதுவரைக்கும் நாடு உருப்படாது.
Can we still buy this book?
Where can i buy it?
Better if there is any online stores.
//Can we still buy this book?//
ebay-ல் முயற்சி செய்யவும். ஆனால் சில பக்கங்களுக்கு மேல் என்னால ரஷ்டியை எப்போதுமே படிக்க முடிந்ததில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எந்தவகையில் ருஷ்டியினால் பிரிட்டிஸ் அரசு பெருமையடைந்தது? என்று விளக்க முடியுமா?
ருஷ்டி எழுதியது சரியென்றால், போலி டோண்டு உங்களைப் பற்றி எழுதியதும் சரியே.
அதிருதுல்ல! :-)//
ருஷ்டி பிரிட்டிஷ் குடிமகன். பிரசித்தி பெற்ற எழுத்தாளர். ஆகவே அவருக்கு சர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இதில் பாக்கிஸ்தான் மற்றும் ஈரானிய அரசுகளுக்கு என்ன சம்பந்தம்?
மற்றப்படி இப்பதிவு ருஷ்டி எழுதியது சரியா தவறா என்றப் பிரச்சினைக்கு போகவேயில்லை. ஏனெனில் அப்புத்தகத்தை நான் பெறக்கூட முயற்சிக்கவில்லை. அவ்வளவு குழப்பமான எழுத்துக்கள் அவருடையது. நான் கூறியதையே மறுபடியும் கூறுகிறேன். காலணா பெறாத புத்தகத்துக்கு ஈரானியக் கோமாளியால் நல்ல விளம்பரம்.
இதில் போலி டோண்டு எங்கு வந்தான்? அதுவும் அவனை ருஷ்டியுடன் எப்படி ஒப்பிடப் போயிற்று? அவனை ஈரானியக் கோமாளியுடன் ஒப்பிடுவதுதான் சரி. எப்படி என்பதை விளக்குகிறேன். டோண்டு ராகவனுக்கு பின்னூட்டம் போட்டவர்களையெல்லாம் துரத்தித் துரத்தித் தாக்கினான். அவர்களில் நீங்களும் உண்டுதானே (இனிய உருது மொழி). அதுவும் செந்தமிழ் வார்த்தைகளால் அர்ச்சனை. அதையும் நீங்கள் தனிப்பட்ட முறையிலேயே உணர்ந்தவர். அவனுக்கு பயந்துதானே எனக்கு பின்னூட்டம் போடுவதை நிறுத்தினீர்கள்? (இதற்கு பதில் எதிர்பார்க்கவில்லை, உங்களை நீங்களே இக்கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள்). போலியை அலட்சியம் செய்து அதே சமயம் தாக்குதலையும் விரும்பாதவர்கள் வேறு பெயர்களில் பதிவு செய்து கொண்டு வந்து பின்னூட்டமிட்டனர். அதற்கும் எல்லாருமே டோண்டு ராகவன் என்று குதித்தான் போலி டோண்டு மற்றும் அவனது அல்லக்கைகள். அப்படியே அந்த ஈரானியக் கோமாளியின் செய்கைதானே.
அதிருதுல்ல. :)
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இதே போல்தான் டோண்டு என்பவருக்கும் வலைத் தளத்தில் பலர் இலவச பிரசித்தி தேடித் தந்திருக்கிறார்களோ?//
உண்மைதான். அந்த விஷயத்தில் போலி டோண்டு மற்றும் அவனது அல்லக்கைகளின் செயல்பாடு ஈரானியக் கோமாளியின் செயல்பாடு போலத்தான்.
இது பற்றி அவர்களின் ஒருவரே இவ்வாறு புலம்பியிருந்ததை நான் ரசித்தேன். அது இதோ:
"சூடான இடுகை, ஆனாக்க பின்னூட்டம் லேது. இன்னா நடக்குது இங்கே?
ஒங்க கம்ப்ளைண்ட் புரியல்லே. டோண்டு தன்னோட பதிவுகள்ளே தனக்குத்தானே கமெண்ட் போட்டுக்கறதா சொல்றீங்க. பெரிய்ய பேர் லிஸ்டையும் கொடுக்கறீங்க. அந்தக் கெழவனோ போடா உனக்கும் பெப்பே உங்க பாட்டனுக்கும் பெப்பேங்கறான். தமிழ் மணத்துக்கு கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்னா இத்தப் போயி ஒரு குத்தமா சொல்ல முடியாது. ஏன்னாக்க நெறய பேரு அதத்தான் பண்றாங்க. ராம்தாஸ் ஐயர் ராகவன் ஐயங்கார்னெல்லாம் விடாது கருப்பே போட்டிருக்காரு.
முரளி மனோஹரை கண்டு பிடிச்சீங்க. ஆனா என்ன ஆச்சு? அது புனைப் பெயர்தான், வேற எந்தப் பதிவர் பேரையும் காப்பி அடிக்கல்லே பாத்துக்கோன்னு கெழவன் சொல்லிட்டான். அத்தோட வுட்டானா, புனைப்பெயர் எவ்ளோ வேணா வச்சுப்பேன், போடா மூடனேன்னு வேற சொல்லிட்டான்.
அவனோட பதிவுல மட்டும் வந்து போற பதிவர்களோட ஐப்பியை நீங்க கண்டு பிடிச்சு, அது அவந்தான்னு சொல்லி, இதெல்லாம் நடக்குங்கறீங்க?
அவன் பதிவுல மட்டும் அவங்க வராங்க அதனால டுபாக்கூருங்கோன்னு சொன்னாக்க, அதுக்கான பதிலையும் நீங்க அவனுக்கு கைமேல கொடுத்துட்டீங்களே? அவனுக்கு பின்னூட்டம் போடறவங்க பதிவுக்கெல்லாம் போயி திட்டறதுனாலத்தானே அவ்வாறு அவங்க செய்யறாங்கன்னு கெழவன் சொல்லிட்டானே.
இந்த மாதிரி தேவையில்லாம உதார் வுட்டு கெழவனை வளத்ததுதான் மிச்சம். அவன் இன்னா சொன்னான்? அவன் தமிழ்மணத்துல இருக்க முக்கியக் காரணமே அவனோட ட்ரான்ஸ்லேசன் வேலைக்கு ஒதவியா இருக்கு அம்புட்டுத்தேன்னு சொல்லிட்டான். கூடவே தமிழ்மணத்தையும் புகழ்ந்து எல்லோரையும் ஃபீலிங்ஸ் ஆக்கிட்டான். இதெல்லாம் நல்லத்துக்கா சொல்லு? மா.சிவக்குமார் போல சில பேரு கெழவனுக்கு வேலை வேற கொடுத்து அவன நல்லா சம்பாதிக்க வுட்டாங்க.
இப்படியே இருந்தீங்கன்னு வையுங்க அந்த ஆளே பலான பலானவங்களுக்கு நன்னி அப்படீன்னு பதிவுபோட்டு தன்னோட பதிவோட ஹிட் கவுண்டரை சூடாக்கி, ஒங்களையெல்லாம் பேஜாரு ஆக்கிடுவான்.
இன்னும் ஒரு விஷயம், விடாது கருப்ப நேர்ல பாத்தவரு மூலமா அவரோட உண்மை அடையாளம் டோண்டுக்கு தெரிஞ்சு போச்சாம். ஆனாலும் கெழவன் கமுக்கமா இருக்கானாம், ஒண்ணுமே சொல்லாம.
உங்க ஆளுங்க கிட்டே இவ்வளோ ஓட்டையை வச்சிக்கிட்டு புலம்பி என்ன ஆவப்போவுது?
இவண்,
போலி டோண்டு அனுதாபி
Monday, May 21, 2007 6:23:00 AM"
http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_20.html "
அன்புடன்,
டோண்டு ராகவன்
ருஷ்டி ஒரு இந்திய முஸ்லிம். அவரது இந்த சாதனையை ஆசிய முஸ்லிம்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். ஏன் என்றால் இங்கிலாந்தில் இனவெறி அதிகம்.அப்படிப்பட்ட நாட்டில் ஒரு இந்திய முஸ்லிம் இந்த சாதனையை புரிந்திருப்பது ஆசிய முஸ்லிம் இனத்தவர் அனைவருக்கும் பிரிட்டன் அரசு கவுரவம் செய்தது போலாகும்.
சல்மான் ருஷ்டி மிகச்சிறந்த இலக்கியவாதி.இந்த சர்ச்சை எழுந்திராவிட்டால் அவருக்கு இந்நேரம் இலக்கியத்துக்கான நோபல் பரிசே கிடைத்திருக்கும்.
உயிர்களிடத்தில் அன்பையும், நேசத்தையும் குரான் சொல்லித் தருவதாக முஸ்லீம்கள் சொல்கிறார்கள். அந்த குரானின் வழிப்படிதான் ஆட்சி நடத்துகிறோம் என்று கூக்குரல் இடும் முஸ்லீம் மதவாத அடிப்படையிலான நாடுகள்தான் பிற உயிர்களிடத்தில் அன்பையும், நேசத்தையும் காட்டாமல் அடக்குமுறைகளைக் காட்டுகிறார்கள். அன்று அயதுல்லா கொமேனி செய்த கொடுஞ்செயல் இத்தனை ஆண்டுகளில் ஈரானையும் ஈராக்கையும் பதம் பார்த்துவிட்டது.. அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. அவனை கொல்ல வேண்டும் என்று இபபோதும் இந்த மதத்தின் தீவிரவாதிகள் புலம்புவது அம்மதத்தினருக்கு எதிராக மற்ற மதத்தினர் எழுச்சி பெறுவதற்கு ஒரு காரணமாகிவிட்டது. இதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. எது அன்பை போதிக்கிறதோ அது அவ்வாறே இருக்க வேண்டும். புத்தகத்தைப் புரட்ட ரத்தக்கறை படிந்த கை தேவையே இல்லை..
//அச்சமயம் பாக்கிஸ்தானில் ஒரு உருது படமே தயாரித்தார்கள். படத்தின் பெயர் "International guerilley" (சர்வதேச கொரில்லாக்கள்). தமாஷான கதை. வில்லன் ரஷ்டியைப் போன்ற முகத்தோற்றம் கொண்ட ஒரு பேர்வழி. அவர் இசுலாமியருக்கு எதிராக பெரிய சதி செய்கிறார். அவருக்கு துணையாக இஸ்ரவேலர்களைத் தவிர யாரைக் கூற முடியும்? கடைசி காட்சிதான் ரொம்பத் தமாஷ். திடீரென எங்கிருந்தோ ஆயிரக்கணக்கான புனித குரான் புத்தகங்கள் குண்டு போல சீறி வந்து ரஷ்டியை மோதி அழிக்கின்றனவாம். இதைவிட புனித குரானை அதிகம் அவமதிக்க முடியாது என்று கருதுகிறேன்.//
உண்மை.
சுல்தான்
தமிழ்மணத்தில் எழுத்து சுதந்திரத்துக்கு குரல் கொடுப்பதாக பீற்றிக்கொள்ளூம் கோழைகள் இந்த விஷயத்தில் வாயையும் மற்ற பிறவற்றையும் சேர்த்து மூடிக்கொண்டு வெளியே மிதந்து கொண்டிருந்த நேரத்தில் வீறுகொண்டெழுந்த விகர்ணன் போல் எழுந்த எங்கள் டோண்டுதான் உண்மை எனும் இறைவனின் சத்திய தூதர்
இத்தால் அறியத்தருவது யாதெனில் டோண்டூ ரசிகர்கள் மீது பத்வா பிரகடனப்படுத்தப்படுகிறது.
Recently, after this conterversy started, i heard that he received many prestigious awards including a prize given every 25 years or something. He certainly is a outstanding writer, thinker.
//Recently, after this conterversy started, i heard that he received many prestigious awards including a prize given every 25 years or something. He certainly is a outstanding writer, thinker.//
List of Rushdie awards:
Booker Prize for Fiction
James Tait Black Memorial Prize (Fiction)
Arts Council Writers' Award
English-Speaking Union Award
Booker of Bookers or the best novel among the Booker Prize winners for Fiction
Prix du Meilleur Livre Etranger
Whitbread Novel Award (twice)
Writers' Guild of Great Britain Award for Children's Fiction
Kurt Tucholsky Prize (Sweden)
Prix Colette (Switzerland)
State Prize for Literature (Austria)
Author of the Year (British Book Awards)
Author of the Year (Germany)
Mantua Prize (Italy)
Premio Grinzane Cavour (Italy)
Hutch Crossword Fiction Prize (India)
India Abroad Lifetime Achievement Award (USA)
Outstanding Lifetime Achievement in Cultural Humanism (Harvard University)
Aristeion Prize (European Union)
See also
A critique of The Satanic Verses, by Ata'ollah Mohajerani, former Iranian Minister of Culture
Norwegian author Axel Jensen and his collection of essays, "God Does Not Read Novels: A Voyage in the World of Salman Rushdie"(1994), in defence of free speech
Censorship in South Asia
International PEN
MANIFESTO: Together facing the new totalitarianism-- an open letter he co-signed regarding the Jyllands-Posten Muhammad cartoons controversy
Blitcon, British literary conservatives
Regards,
Dondu N.Raghavan
இந்த கேப்பில் எங்கள் அய்யா சர்வேசன் கேட்பது போல, எல்லா மதத்தினரும் மசுதிக்குள் நுழைய உரிமை வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
/இந்த கேப்பில் எங்கள் அய்யா சர்வேசன் கேட்பது போல, எல்லா மதத்தினரும் மசுதிக்குள் நுழைய உரிமை வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்/
முதல்ல முஸ்லிம் பெண்களை மசூதிக்குள் நுழைய அனுமதிக்க சொல்லுங்க. மற்ற மதத்துகாரர்களுக்கு அனுமதி அளிப்பதை பிறகு பார்க்கலாம்:-D
//முதல்ல முஸ்லிம் பெண்களை மசூதிக்குள் நுழைய அனுமதிக்க சொல்லுங்க. மற்ற மதத்துகாரர்களுக்கு அனுமதி அளிப்பதை பிறகு பார்க்கலாம்:-D//
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. வாழு வாழ விடு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. வாழு வாழ விடு/
எப்போதிருந்து நீங்களும் திம்மியாக மாறினீர்கள்?
//எப்போதிருந்து நீங்களும் திம்மியாக மாறினீர்கள்?//
நான் இசுலாமியருக்கு விரோதி என்பது போன்ற தோற்றம் தருபவர்கள் தவறான புரிதலை உடையவர்கள். இந்துக் கோவில்களில் வந்து எல்லோரையும் உள்ளே விடு என்று கேட்பவரிடம் தில் இருந்தால் மற்ற மதத்தினருக்கும் இதைக் கூறவும் என்று நான் கூறியது ஒரு எதிர்வினைதானே தவிர ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மேல் விரோதம் அல்ல. இப்போது கூட சுவனப்பிரியன் அவர்களை சந்தித்தப் போது அவரது தாத்தா ஹஜ்ஜிலிருந்து திரும்புவரைப் பார்க்கவே நான் கிட்டத்தட்ட 2 மணி நேரம் காத்திருந்தேன், அவரைக் கண்டு ஆசி பெற. ஹஜ்ஜிலிருந்து திரும்ப வருபவரை பார்த்து ஆசி பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அவரவர் மதம் அவரவருக்கு. கடவுளைத் தொழும் இடம் சுற்றுப்பயணத் தலமாகக் கூடாது. இதிலெல்லாம் நான் தெளிவாகவே இருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்
நீங்கள் இசுலாமிய விரோதி என நான் சொல்லவில்லை.பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க மறுப்பது 'அவர்களின் சொந்த விஷயம்' என்ற பகுத்தறிவு ஜல்லியை நீங்களும் அடிக்க காரணம் என்ன என்றுதான் கேட்டேன். பெண்கள் மசூதிக்குள் நுழைந்தால் அப்படி என்ன தான் நடந்துவிடும்? சாமி குத்தம் ஆயிடுமா?
//பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க மறுப்பது 'அவர்களின் சொந்த விஷயம்' என்ற பகுத்தறிவு ஜல்லியை நீங்களும் அடிக்க காரணம் என்ன என்றுதான் கேட்டேன்.//
கண்டிப்பாக இது ஜல்லி இல்லை. சம்பந்தப்பட்ட மதத்தின் பெண்களே பார்த்துக் கொள்ளட்டும். வாழ்க்கையில் ஏற்கனவே பல சிக்கல்கள். மற்ற மதத்தினரின் உள்விவகாரம் நமக்கெதற்கு? அதே சமயம் நம் மதத்தில் மற்றவ்ர்கள் குறுக்கிடுவதையும் பொறுத்துக் கொள்ளக்க்டாது. அதிலும் நம் மதத்தினராக இருந்து கொண்டே நம் மதத்தை மட்டம் தட்டுபவருக்கு பலத்த பதிலடி கொடுக்கப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu Sir,
You are right in advocating a non-interventionist policy in others personal and private matters which include religion. It is the best policy even in the case of many other things. If America had followed Non-Interventionist policy it would have been better off than the mess they are in right now.
People in Tamil blogs are a confused lot. They want to push their own ideology/worldview without due consideration of facts, many politically inclined bloggers even indulge in suppression/extrapolation of facts.
There was one prominent blogger who blamed RSS for Mandaikadu fighting in tamilnadu gave his point of view, at first it so looked he was right, seemed hindus made a mistake causing death to many persons. Then another blogger came up with some information that showed that the christians were equally at blame for the fighting and the death of many persons. Both parties were busy accusing the each other.
But what both forgot was that Where was the government which was supposed to protect the Life and Liberty of people?. What did the government do during the period of disorder?, nobody has questioned it till now. It was the government which failed to protect the life and liberty of its citizens.
Another blogger wants everyone to be allowed entry in Hindu temples. In this case of temple entry no body knows whether the temple in contention is owned privately or by the government. Even then people are irresponsibly passing comments on its rules.
While the blogger publicly admits that he will allow none into his property but he wants unrestricted entry into another property owned by someone else. What a double talk . Shame on him
And it is silly to see a lot of people supporting him just creating a political scene without giving due consideration to the facts.
//While the blogger publicly admits that he will allow none into his property but he wants unrestricted entry into another property owned by someone else. What a double talk . Shame on him//
சரியாகச் சொன்னீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
*****இந்துக் கோவில்களில் வந்து எல்லோரையும் உள்ளே விடு என்று கேட்பவரிடம் தில் இருந்தால் மற்ற மதத்தினருக்கும் இதைக் கூறவும் என்று நான் கூறியது ஒரு எதிர்வினைதானே தவிர ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மேல் விரோதம் அல்ல.*****
டோண்டு ஐயா,
உமக்கு ஜாதி வெறியோடு மத வெறியும் உண்டு. மசூதிக்குள் வரக்கூடாது என்று எந்த துலுக்கனும் இன்னொரு துலுக்கனை தடுக்க முடியாது. தடுக்கவும் இல்லை. கோவிலுக்குள் என்ன மடத்திற்குள் கூட இன்னொரு இந்துவை அனுமதிக்க மறுப்பது ஏன்? என்றுதான் கேட்கிறோம்.
அதேபோல்,அரௌ நாடுகளில் ஆண்களும் பெண்களும் ஒரே மசூதியில் நமாஸ் படிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.
ஐய்யப்பன் கோவிலில் ஜெயமாலா நுழைந்தத்ற்காக சாமியடிவர்களல்லவா மலையாள பார்ப்பான்களான நம்பூதிரிகள்.
//மசூதிக்குள் வரக்கூடாது என்று எந்த துலுக்கனும் இன்னொரு துலுக்கனை தடுக்க முடியாது.//
இங்கு மற்ற மதத்தினரைப் பற்றித்தான் பேச்சு. சவுதியில் மெக்கா நகருக்குள்ளேயே வேறு மதத்தவர் வர முடியாது என்பதை அறிவீரா? மற்றப்படி அவர்கள் மசூதிகளுக்குள் இசுலாமியப் பெண்களை அவர் அனுமதித்தால் என்ன, அனுமதிக்காமல் விட்டால் எனக்கென்ன?
நீங்கள் இந்துவாக இருந்தால் இம்மாதிரி இசுலாமியர் காலில் விழுவது கேவலம்.
//உமக்கு ஜாதி வெறியோடு மத வெறியும் உண்டு.//
முன்னூறுக்கும் மேல் பதிவிட்டுள்ளேன். ஜாதி மற்றும் மதவெறியாக எழுதியதை முடிந்தால் நிரூபியுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெண்கள் மசூதிக்கு செல்வது சம்பந்தமாக திண்ணையில் நான் படித்த கட்டுரையின் சுட்டியை கீழே தந்துள்ளேன்..
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80403117&format=html
//மசூதிக்குள் வரக்கூடாது என்று எந்த துலுக்கனும் இன்னொரு துலுக்கனை தடுக்க முடியாது. தடுக்கவும் இல்லை.//
டேய் நெல்லைக்கு பிறந்தவனே,
நீயும் சர்வேசன் மாதிறி வேஷம் போடாதடா. மதம் பற்றி பேசும்போது ஏன்டா ஜாதிய இழுக்கிறீஙக.
//அதேபோல்,அரௌ நாடுகளில் ஆண்களும் பெண்களும் ஒரே மசூதியில் நமாஸ் படிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.//
இவருதான் போய் பாத்தாரு, மொதல்ல உன்ன எப்படிடா உள்ளவிட்டாங்க, அதுவும் இவரு பெண்கள் நமாஸ் பண்றதை பாத்தாராம், நீ பெண்கள் நமாஸ் பண்றதை பாத்தேன்னு சொன்னா உன்ன அரபு ஜெயில்ல வெச்சி முட்டிக்கு முட்டி தட்டுவாங்க. அளந்ததுபோதும் அடங்குப்பா.
I dont think Mr Dondu has sufficient knowledge of English to read and appreciate English literature, that too, written by writers like Rushdie who are considered to be tough writers in English.
If one does not know English sufficiently, how can one say that Rushide is not a good writer. You must have some mastery in the language and also, some training in appreciation of literature written in that language.
I find the profile of Mr Dondu poorly written in English.
Mr Dondu can write on Tamil writers. Tamil is his mother tongue. Not on English writers, because his English, I am sorry to say, is comparable to that of a Tamil medium boy who mugs up his English lessons to clear his exam.
Clean up your English profile, Mr Dondu, by seeking the help of someone who knows English better than you.
Take it in good spirits, may I hope?
//I dont think Mr Dondu has sufficient knowledge of English to read and appreciate English literature//
அனானி,
உங்கள் கருத்துக்கு நன்றி, எங்கள் ஐய்யாவுக்கு ஆங்கிலம் சுமாராக தெரிந்திருக்கலாம், அவருக்கு அதிகம் தெரிந்துகொண்டு ஆங்கில புலவராகும் விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன்.
ஐய்யா எழுதும் எழுத்து பாமரனுக்கு புரிந்தால் போதும் என்றே நாங்கள் நினைக்கிறோம். மொழியின் வேலை ஒருவர் சொல்லுவதையோ, எழுதுவதயோ புரிந்துகொள்வதற்கே.
//Mr Dondu can write on Tamil writers. Tamil is his mother tongue. Not on English writers//
அதை சொல்வதற்கு நீ யாருப்பா. நீதான் ஆங்கில எழுத்தாளர்களின் ஏஜேன்டா இல்ல பாதுகாவலனா. முகமில்லாதவன் நீ , உனக்கே இது அதிகம்னு தெரியல்லியா?
//Clean up your English profile, Mr Dondu, by seeking the help of someone who knows English better than you.//
தம்பி உனக்கு ஆங்கிலம் அவ்வளோ தெரிஞ்சா ஏன் நீயே ஒரு write-up எழுதி கொடுக்கலாமே. முடிஞ்சா ஒரு write-up எழுதி கொடு இல்லனா உனக்கும் இங்கிலிஸ் தெரியல என்று நினைக்கவேண்டியிருக்கும்.
very good article dondu. i really enjoyed ur humor when comparing poli dondu with iranians :)
Mr Dondu!
First of all, thanks for gracefully allowing my comments that purported to reflect on you negatively, without censoring.
Where are your comments on what I have written regarding your profile? I expected yours, but your fan club wrote in their usual way as if shouting makes one sound reasonable. Shouting makes one a suspect.
Your fan club man, himself using a mask, writes that I am faceless. Funny!!
My message was provoked by your remarks that you found it hard to understand Rushdie, but went on saying about him as a writer.
It is not my intention to call you an ignorant person in the matter of language. It is my point to say that we should not enter into a matter for which we are not qualified to do so. Imagine if a teacher of Tamil was asked to write how he would rate a book on Electrical Engineering. You will laugh, wont you? You are an engineer in EE. Correct? Dont you feel it a big joke if someone else who does not even know a word of EE tells you about EE?
The points raised in your message on Rushdie is the award and its reaction in muslim world. You should have confined yourself with the object of facing your Muslim enemies. Not on adjudging him as an English writer. Those who dont know English cannot decide whether the writer is worthy to be conferred upon an achievement award like 'Sir' by Queen Elizabeth. The award has been given for his achievements and contribution to English literature. Not for anything else.
I hardly came across anyone who could appreciate English literature, say he is not worthy of the award. He richly deserves it. The whole controversy is not about the award itself. But the timing of it. Is it needed, the common people in British, who foot the bills on his security, ask, when the writer is being hounded in other parts of the world; and his security is to be increased thousand times more after the award, at the cost of a common Britisher? This is the question.
Contrary to our popular belief that only muslims oppose the award, the British people, too, are against the conferrement of the award on this writer at a wrong time.
Your message talks about not only the reactions of the Muslim world ut also about him as a writer. Or, are you deciding here whether the author is worthy of the award or unworthy on the basis of his output as an English writer?
You yourself may pleae comment on what I write here and dont allow your fan club to do your work. Your fan club has a lot of other work like fighting with all other fanatics. May them concentrate on that noble work. Why dont you write?
Regards!
My next posting will be on your message proper. Till then, let me wait for your response!
//First of all, thanks for gracefully allowing my comments that purported to reflect on you negatively, without censoring.//
அதனால் என்ன பரவாயில்லை. உங்கள் கருத்தை அழுத்தமாகவே கூறுகிறீர்கள் நல்லதுதானே. இப்பதிவு ரஷ்டிக்கு கொடுத்த சர் பட்டத்துக்கு இசுலாமியரின் எதிர்வினை பற்றியது. ஆகவே நான் ரஷ்டியின் எழுத்தைப் பற்றி எழுதியது போகிறபோக்கில் எழுதியதுதான்.
நான் ஏற்கனவே கூறியபடி சுற்று வழியில் எழுதும் (rambling) அவரது நடை எனது பொறுமையை மிகவுமே சோதிக்கிறது. இதைக் கூறுவது புத்தகப்புழு என மற்றவர்களால் அழைக்கப்படும் டோண்டு ராகவன். அவனாலேயே அப்புத்தகத்தை பொறுமையுடன் படிக்க இயலவில்லை.
ஒரு நல்ல புத்தகம் என்பது படிப்பவர்களின் பொறுமையை சோதிக்கக்கூடாது என்பது எனது கருத்து. அதுவே பலரது கருத்தும். ஒரு சராசரி வாசகனின் கருத்து அது. ரஷ்டியின் சாத்தானின் கவிதைகள் கூட அப்படிப்பட்ட புத்தகமே. ஆகவே தானாகவே அது வழக்கிலிருந்து அழிந்திருக்கும் என்றுதான் நான் சொல்ல வந்தது. நீங்கள் கூட அந்த புத்தகத்தைப் படித்திருப்பதாகத் தெரியவில்லை.
//Where are your comments on what I have written regarding your profile?//
எந்த ப்ரொஃபைலைப் பற்றி கேட்கிறீர்கள்? இந்த வலைப்பூவில் கிட்டத்தட்ட எல்லாமே தமிழில்தானே உள்ளது?
"I am a freelance German/French translator cum interpreter having been active in these languages since 1975/1978 respectively. Being a graduate electrical engineer having worked for 23 years in that capacity, I specialize in technical literature translations. Tamil being my mother tongue, I translate into and from Tamil as well."
இதையா குறிப்பிடுகிறீர்கள்? இதில் என்ன பிழை இருக்கிறது? சர்வசாதாரணமாக வாடிக்கையாளர்களுக்கு நான் அனுப்பும் எல்லா கடிதங்களிலும் அறிமுகமாக இந்த 3 வரிகளும் வரும். அவை உடனடியாக வாடிக்கையாளரின் கவனத்தைக் கவரும். என்னைக் கூப்பிட்டு பேசுவார்கள். வேலை கொடுப்பார்கள். பிறகு மீண்டும் வேலை கொடுப்பார்கள். பிறகு எப்போதெல்லாம் வேலை வருகிறதோ அப்போதெல்லாம் கூப்பிடுவார்கள். ஆக என்னைப் பொருத்தவரை இவை ராசியான வரிகள். அவை சரியில்லை என்று கூறுவது உங்கள் கருத்து. அது பற்றி நான் என்ன கூற இருக்கிறது? எனது ஆங்கிலப்புலமை மேல் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் ஆங்கிலத்துக்கு மாற்றியுள்ளேன். ஆகவே உங்கள் கருத்தை ஒரு புன்னகையுடன் படித்தேன் அவ்வளவே. பதில் கூறும் அளவுக்கு அதில் ஒன்றுமில்லை. அதே போல எனது ரசிகர்கள் எழுதியதும் அவர்கள் கருத்தே. அதிலும் கூற ஒன்றுமில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: ஒரு வேளை நீங்கள் எனது ஆங்கில வலைப்பூவிலிருந்து ஏதேனும் கோட் செய்கிறீர்களா? அதன் சுட்டி Links கீழே முதலாதவாகத் தரப்பட்டுள்ளது.
//but your fan club wrote in their usual way as if shouting makes one sound reasonable. Shouting makes one a suspect.//
we said //அனானி,
உங்கள் கருத்துக்கு நன்றி//
Do you mean that as shouting?? Shouting does not make anything except some noise.
//Your fan club man, himself using a mask, writes that I am faceless. Funny!!//
You are faceless, we are faceless. Now that's double fun, isn't it.
//This is the question.
Contrary to our popular belief that only muslims oppose the award, the British people, too, are against the conferrement of the award on this writer at a wrong time.//
Are you for the Award or not?
ரஷ்டி சர் பட்டத்துக்கு உரியவரா இல்லையா என்பது பிரிட்டனின் உள்விவகாரம். நான் அதற்கு எதிராகவும் இல்லை, ஆதரவாகவும் இல்லை. இப்பதிவே ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிய இரானியக் கோமாளியையும் அவர் ஆதரவாளர்களையும் பற்றித்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment