பகுதி 2
பகுதி 1
இப்போது கதைக்கு போகலாம்.
நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, பீஷ்மரின் பாத்திரத்தை இங்கு காந்திஜிக்கு கொடுத்துள்ளார் சஷி தாரூர். ஆங்கிலேயர்களும் வருகின்றனர் கதையில் அஸ்தினாபுரம் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு கீழ்ப்பட்ட ஒரு சுதேச சமஸ்தானமாகக் காட்டப்பட்டுள்ளது. கதையிலும் அவரை கங்காஜீ என்றே எல்லோரும் அழைக்கிறார்கள். மற்ற பாத்திரங்களையும் பார்ப்போமா?
தன் தம்பி விசித்திரவீர்யனுக்காக அரசிளங்குமரிகள் அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகியோரை சிறையெடுத்து வருகிறார் கங்காஜி. அவர்களுள் அம்பா தான் சால்வனை கணவனாக வரித்ததைக் கூற அவளை அவனிடமே திரும்ப அனுப்ப, அவன் அவளை ஏற்றுக் கொள்ளாது போக, பிறகு யாருமே ஏற்றுக் கொள்ளாது போக, அப்பெண் ஒரிஜினல் கதையில் பீஷ்மரைக் கொல்ல சபதம் எடுத்து தற்கொலை செய்து கொண்டு அடுத்த பிறவியில் சிகண்டியாக வருகிறாள். ஆனால் இந்த நாவலில் அப்படிக் காட்டாது, அப்பெண் பிற்காலத்தில் தனது பெண் நிலையை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக் கொண்டு அவரை பிற்காலத்தில் கொல்கிறாள் (கோட்சேதான் அம்பா).
விசித்திரவீரியன் வாரிசின்றி இறக்க, அவரது விதவைகள் அம்பிகா மற்றும் அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகள் தர கங்காஜி மறுத்துவிட்ட நிலையில், சத்தியவதி வேதவியாசரின் துணையை நாட, அவர் மூலம் அம்பிகாவிற்கு குருடனாக திருதிராஷ்ட்ரனும், அம்பாபாலிகாவிற்கு பாண்டுவும், வேலைக்காரிக்கு விதுரரும் பிறக்கின்றனர். திருதிராஷ்டிரன் ஜவஹர்லால் நேரு, பாண்டு சுபாஷ் சந்திரபோஸ், விதுரர் சர்தார் வல்லபாய் படேல். கங்காஜீ இளவரசர்களை தன் குழந்தைகள் போல பாவித்து நன்கு வளர்த்து வருகிறார். திருதிராஷ்டிரனை இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்க, அவர் அங்கிருந்து சோஷலிசம் கற்று வருகிறார். பாண்டுவோ உள்ளூரிலேயே படிக்கிறார். விதுரரும் நன்கு படித்து சிவில் சர்வீசில் சேருகிறார்.
இளவரசர்கள் வயதுக்கு வந்ததும் திருதிராஷ்டிரருக்கு காந்தாரியை (கமலா நேரு) மணமுடித்து வைக்கிறார் கங்காஜி. பாண்டுவுக்கு இரு மனைவியர், ஒருவர் குந்தி யாதவ் இன்னொருவர் மாத்ரி. குந்தி சிறு பெண்ணாக இருந்தபோது Hyperion Helios (கதிரவன்) என்ற வேற்று நாட்டான் ஒருவனுடம் சினேகம் ஏற்பட்ட வம்பு பற்றி கங்காஜி இங்கு பேசுகிறார். அதெல்லாம் வயசுக்கோளாறு, அதற்கப்புறம் அப்பெண் சமத்தாகவே இருந்தாள் என்றும் கூறுகிறார். இருந்தாலும் பாண்டுவுக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது என்று இன்னொரு மனைவியையும் அவருக்கு மணம் செய்விக்கிறார் கங்காஜி. விதுரருக்கு ஒரு மகாராஜாவுக்கு வேலைக்காரி மூலம் பிறந்த பெண்ணை திருமணம் செய்விக்கிறார்.
காந்தாரிக்கு மகாபாரதத்தில் 100 பிள்ளைகள், ஆனால் இந்த நாவலிலோ ஒரே ஒரு பெண், பெயர் பிரியதுரியோதனி (இந்திரா காந்தி). ஆனால் இவளே 100 பிள்ளைகளுக்கு மேல் என்றுதான் கூறப்படுகிறது.
பாண்டுவுக்கோ ஒவ்வொரு கைக்கு ஒன்று என இரு மனைவியர் இருந்தாலும் அவருக்கு மாசிவ் ஹார்ட் அட்டாக் வர, தாம்பத்திய உறவு கூடாது எனக்கூற சந்ததிக்காக அவர் என்ன முடிவு எடுத்தார் என்பதைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
பாண்டுவின் நிலையைப் பற்றி சஷி தாரூர் ஆங்கிலத்தில் குறிப்பிடுவது இவ்வாறு:
He was in bed one day with both his consorts, attempting something quite unspeakably imaginative, when an indescribable pain shot through his chest and upper arm and held his very being in its grip. He fell back, unable to mouth the words to convey his torture, and for a brief moment his companions thought their ministrations had brought him to a height of ecstasy they had never seen before. But a quick lower down convinced them something quite different was the matter. They frantically screamed for help.
அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
7 hours ago
2 comments:
dondu avargal than leelaiyai meendum arambithu vittar.
komanan
வீரமணி அய்யா எழுதியுள்ள இந்து மதத்தின் மறுபக்கம் புத்தகத்தில் இம்மாதிரி பல புராண காம புரட்டுகளை சுலோகத்துடன் விளக்கி அம்பலப்படுத்தியுள்ளார். பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் ரீல் விட்டு தமிழரையும் திராவிடரையும் ஏமாற்றியுள்ளார்கள் என்பது விளங்கும். டோண்டு அவர்கள் அப்பணியை தொடர முயல்கிறார். பெரியார் மீண்டும் வரமாட்டார் என்ற தைரியமோ?
கோமணன்
Post a Comment