ஒரே ஒரு ஊரில் நமோநமஹ என்று அழைக்கப்படும் ஒரு சம்சாரி இருந்தாராம். எல்லோரிடமும் ஏதாவது கருத்து கூறிக்கொண்டே இருப்பாராம். யாராவது தான் சொன்னதைக் கேட்காவிட்டால் சன்னியாசம் கொள்வேன் எனச் சொல்லுவாராம். போவது போல போக்கு காட்டுவாராம், ஐயோ போகாதே என்று யாரையாவது விட்டுச் சொல்ல ஏற்பாடு செய்வாராம்.
புலி வருது கதையாகி விட்டது. இம்முறை எல்லோரும் அவரைப் போட்டு மாத்து மாத்தென்று மாத்தியதில் மூச்சு முட்டி சன்னியாசம் கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு சென்றாராம். ஆனால் முன்ஜாக்கிரதையாக அடுத்த ஆண்டு வந்து விடுவதாகவும் கூறினாராம்.
ஆனால் அந்தோ, இம்முறை நடந்தது வேறு. இத்தனைக்கும் அவர்மேல் அக்கறை கொண்ட தெலுங்குக்காரர் அம்மாதிரியெல்லாம் ரொம்ப பிகு செய்ய வேண்டாம், உங்களைப் போலவே ஓசையிட்டு சென்றவர்கள் கூட அசடுவழிய தானாகவே திரும்ப வேண்டியதாயிற்று வேண்டாம் இந்த விஷப்பரீட்சை என்று கூட கூறிப் பார்த்தாராம். ஆனால் அந்தோ அதை லேட்டாகத்தான் உணர்ந்தாராம். யாருமே இம்முறை அவரைத் திரும்ப வருமாறு அழைக்கவில்லையாம்.
ஆகவே இம்முறை வீட்டருகே வர, அவரது வீட்டம்மா எங்கு வந்தீர்கள் எனக் கண்ணாலேயே கேட்க, "ஹி ஹி ஒண்ணுமில்லை, போன வருஷம் சில பேர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லல்லைன்னு இப்பத்தான் ஞாபகத்துக்கு வந்தது, பதில் சொல்லலாம்னு வந்தேன்" என்றாராம்.
எப்படியோ வந்தால் சரி, பலருக்கு தமாஷா பொழுது போகும். என்ன நான் சொல்றது?
(சமீபத்தில் 1964-ல் அம்புலிமா பத்திரிகையில் "போலி சந்நியாசி" என்ற தலைப்பில் படித்தக் கதை).
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
8 hours ago
31 comments:
டோண்டு அய்யா,
நமோநமஹ என்பதற்கு தமிழ் பெயர் கோவி.மு.கண்ணன் தானே?அது சரி டி பி ஸி டி தெலுங்கு பெயரா நம்பவே முடியல்லயே.மூஞ்சியைப் பாத்தா கொஞ்சம் கொல்டி களை இருக்கற மாறி இருக்கு; ஆனாலும்..
பாலா
இது சம்சாரத்தை விட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டு திரும்ப வரும் எல்லோருக்கும் பொருந்தும் கதை.
என்ன கொடுமை டோண்டு சார் இது? :-(
ரிசெண்டா எவனோ இன்னொரு சாமியார் பிரம்மச்சாரி கதை போட்டன்.
அவுங்க தலைவன் எந்த வண்டிய இழுத்துகிட்டு போரான் என்று யோசித்தால், அவன் இன்னும் சாகவே இல்லை. அவன் செத்தது போலவே ஒரு நெனப்பு... சே
அது என்ன சார் நீதிக்கதை, மொக்கை என்று ரெண்டுமே tag ல இருக்கு. நீதிக்கதைன்னா எதாவது உருப்படியா இருக்க வேணாமா?
சந்திரமுகி சரவணன்,
சில சாமியாருங்க ஸ்கூல் படிக்கச்சே ஹெட்மாஸ்டர் ரூமுக்கு முன்னால் முட்டி போட்டாத்தான் அன்னிக்கு சோறு சீரணம் ஆகுமாம். அந்த மாட்டுப் பெண் போல. என்ன செய்வது, நேர்மையான தன்னிலை விளக்கம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த வாரம் சாமியாரை போட்டு கும்முதல் என்று முடிவாகி விட்டது.
நானும் பரண் மேல ஏறி பழைய அம்புலிமாமவை தேடுறேன்.
வால்பையன்
இதுக்கு நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.
ஆடின காலும்,பாடிய வாயும் நிற்காது'ன்னு சொல்வாங்க இல்லையா ?
அடுத்த பதிவின் தலைப்பு 'இன்னொரு உலகை வெறுத்த மாமியார்'
தெலுங்கு பார்டி தான் மாமியாரோ..
நமோ நமஹ நான் இல்லை
-புது பணக்காரன்
//தெலுங்கு பார்டி தான் மாமியாரோ..//
அய்யய்யோ என்னங்க இது?மாமியாருக்கு மீசை வச்சா அது டி பி ஸி டி கொல்டியா மாறிடுமா?நிஜமாவே அம்புலிமாமா மாயாஜால கதையா இருக்கே..
பாலா
மருமவளை கொடுமை செய்யும் மாமியாவை, மகளிர் காவல் நிலையத்தில் வைத்து லாடம் அடிக்கவேண்டும்.
லேடிஸ் போலிஸ்
ஏனய்யா ஓசையாரை அசடுவழிந்ததாக வம்புக்கு இழுக்கிறீர். அவர் கூப்பிட்டா ஒருமணிநேரத்தில் ஆரேழு பேர் வர்ராங்க என்கிற பொறாமைதானே உங்களுக்கு? இருக்காதா பின்னே. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்.நாங்க சொல்லி புரியாத அவர்(ஓசையார்) இனியாவது உங்களைப்பத்தி புரிஞ்சுகிட்டா சரிதான். அவர் சாதி பற்றி போலிக்கு தகவல் சொன்னதே நீங்கதான் அப்படின்னு பேச்சு.
தலைகீழ் மனிதன்
இதுல என்ன உள்குத்துன்னே புரியலே.
//
இதுல என்ன உள்குத்துன்னே புரியலே.
//
நேக்குந்தான்....!!!
உள்குத்துக்கு உள்குத்து வந்திருக்கு பாருங்கோ... :-p
http://madippakkam.blogspot.com/2008/03/blog-post_12.html
என்னயா நடக்குது இங்க. ஒண்ணுமே புரில. ஒரு வேளை தமிழ்மணம் பாத்தா என்ன நடக்குதுனு புரியுமா??
//அவர் சாதி பற்றி போலிக்கு தகவல் சொன்னதே நீங்கதான் அப்படின்னு பேச்சு.//
அமாம் அவரு தனது ஜாதி என்னிடம் சொல்லி, இத ஊரு பூராத்துக்கும் சொல்லுங்கன்னு சொன்னாரு.
போயா போய் வேற வேல இருந்த பாரு. வந்துடாய்ங்க சிண்டு முடிய..
மாமியார் கிழவி தெலுங்கு பார்ன் கிறுக்கு
தமிழு தமிழுன்னு சொல்லிறத பார்த்தா சிரிப்பை அடக்க முடியலை. சாமியாரும் அச்டே
போட்டிகதை எழுதுறவரும் கொல்டிதானாம். ரெட்டிகாரு ஒஸ்தாரா?லுக்கி வஸ்தாரா
போன மாமியார் திரும்பிய கதை இல்லவா இது
சார் சாமியாரை விட்டுட்ங்க பாவம் :))))) அவரும் எவ்வளவு தான் தாங்குவாரு.
சார் அவர்தான் கருத்துக்கு அடிமை என்று தெரியாதோ !! அவரால கருத்து சொல்லாம இருக்க முடியாது. ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்வி கருணாநிதிக்கு ரெண்டு கேள்வி முட்டு சந்து முருகேசன் செய்வது சரியான்னு ஏதாச்சும் பதிவு போடவில்லைன்னா அவருக்கு தூக்கம் வராது
திரு . இராகவன் அவர்கள்...தங்கள் பதிவுகளைவிட தங்கள் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் மிகவும் அருமை...
இப்பதிவினால் என்ன நன்மை டோண்டு அவர்களே?
கோமணன்
சரியான லூஸ்யா நீ. ஒரு பதிவு போடுவ அதற்கு சில முட்டாள்கள் அனானியா வந்து பின்னூட்டம் போடுறராங்க
///இப்பதிவினால் என்ன நன்மை டோண்டு அவர்களே?
கோமணன்////
nan manam vittu sirithathu thaan nanmai.
thanks mr.dondu. you are young.
//சரியான லூஸ்யா நீ. ஒரு பதிவு போடுவ அதற்கு சில முட்டாள்கள் அனானியா வந்து பின்னூட்டம் போடுறராங்க//
அத யாரு சொல்றது பாரு
///இப்பதிவினால் என்ன நன்மை டோண்டு அவர்களே?
கோமணன்////
உன்ன இந்த கேள்வி கேக்க வெச்சோம் பாத்தியா. அதான் நன்மை
ஸார், கடலை வருத்த சாமியார் கதை எப்ப சார் போடுவீங்க..
போனவாரம் தமிழ்மணத்துல பகிரங்க கடித வாரம், இந்த வாரம் தொடர்பில்லாம இருக்க உங்க டீச்சர் அல்லது நண்பர்களை தேடுதல் அல்லது விடை பெறுகிறேன் அல்லது விடைபெறுபவர்களுக்காக என எழுதும் வாரம். என்ன ரெண்டு ட்ரெண்டையும் இந்த வாராம் ஆரம்பிச்சது நான் தான்.
டோண்டு சார், நீங்களுமா?
//டோண்டு சார், நீங்களுமா?//
நமோ நமஹாவைத்தான் கேட்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment