இந்த ஐடியா கொடுத்த பெயர் குறிப்பிட விரும்பாத நண்பருக்கு நன்றி. அவருக்கு எக்ஸ் என்று பெயர் வைத்து அவர் இட்ட கேள்விகளுடனேயே ஆரம்பிக்கிறேன்.
1. டோன்டு பால் ரூ.1.50 குறைப்பாம்? நீங்க எப்ப பால் வியாபாரம் பண்ண ஆரம்பித்தீர்கள்?
பதில்: பால் வியாபாரம் செய்வதற்கு திறமை தேவை, அதுவும் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களிடம் வேலை வாங்கி என்றெல்லாம் திறமைகள் தேவைப்படும். அடியேனிடம் அவை பூஜ்யம். மற்றப்படி திறத்தகவுப் பால் விலை அதிகரித்துத்தானே உள்ளது? குறையவில்லையே.
2. கால் டாக்ஸிகளுக்கு துட்டு கொடுத்து எப்படி கட்டுபடியாகிறது?
பதில்: மொழிபெயர்ப்பு வேலைகளுக்காக வாடிக்கையாளர் அலுவலகம் செல்ல நேரிடும்போது கால் டாக்ஸி கட்டணங்களை அவர்கள் ஏற்கிறார்கள். மற்றப்படி சொந்த விஷயங்களுக்கு குடும்பத்தினருடன் செல்வதற்கு கால் டாக்ஸிக்களே சிறந்தவை. இதில் முக்கியம் நேரம் சேமிப்பாவதே. அவ்வாறு சேமிக்கும் ஒவ்வொரு மணியும் எனக்கு காசு, ஏனெனில் மொழிபெயர்ப்புக்கு அதை உபயோகித்து கால் டாக்சியின் கட்டணங்களுக்கு மேலேயும் பொருள் ஈட்ட இயலும். ஆகவே சொந்தமாக கார் வாங்கத் தேவையில்லை என்று ஏற்கனவே கூறியுள்ளேன்.
3. உங்கள் வாரிசுகள்/உறவினர்கள் உங்கள் பதிவுகளைப் படிக்கிறார்களா ? அவர்கள் ஏதும் கமெண்டு போடுவதில்லையா?
பதில்: படிப்பதில்லை. அது ஒன்றுதான் எனக்கு மனவமைதியை தந்துள்ளது. மற்றப்படி அவர்களிடம் பிரச்சினை பற்றி குன்ஸாகக் கூறியுள்ளேன்.
4. பல எழுத்தாளர்களையும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் தாங்கள் பா.ராகவன் ஐயங்காருடன் இன்னும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ளவில்லையா ? அவரும் உங்க ஏரியாதானே?
பதில்: பா.ராகவன் ஏற்கனவே என் நண்பர். முதன் முறையாக அவரை நான் 2005 புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். "நிலமெல்லாம் ரத்தம்" தொடரை ஆரம்பித்திருந்தார் / ஆரம்பிக்கவிருந்தார். நான் தீவிர இஸ்ரேலிய ஆதரவாளன் என்பதை அவரிடம் கூறி, அவர் எழுத்துக்களின் விமரிசனம் என்னிடமிருந்து பறந்து வரும் எனவும் கூறியிருந்தேன்.
5. ஐயங்கார்கள் ஏன் ஐயர்களை கூட சேர்ப்பதில்லை ? (ஒரு அளவிற்கு மேல் நெருங்க விடமாட்டார்கள்)
பதில்: அப்படியெல்லாம் இல்லை. இப்போது பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் சந்திக்கும் பார்ப்பன வெறுப்பு இருக்கும் இந்த நிலையில் ஐயர்கள், ஐயங்கார்கள், மார்த்துவர்கள் ஆகியோர் ஒரே அணியாக இருத்தல் அவசியம்.
Dondu Fan
ஆங்கிலத்தில் வந்த கேள்விகளை அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழாக்கியுள்ளேன்:
1. தமிழ் வலைப்பூக்களில் நாகரிகமான நடத்தையை நிறுவுவதில் தமிழ் மணம் இன்னும் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமா?
பதில்: தமிழ்மணம் வெறும் திரட்டிதான் என்பதை முதலில் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும். அதே சமயம் தமிழ்மணத்தாரும் சும்மா இல்லை. பின்னூட்ட மட்டுறுத்தலை சரியான நேரத்தில் கட்டாயமாக்கி, வலைப்பூக்களின் தரத்தைக் காத்தார்கள். இப்போது அது கட்டாயம் இல்லை என்றாலும், மட்டுறுத்தலின் பயன் அறிந்த வலைப்பதிவர் தத்தம் பதிவுகளில் அந்த ஏற்பாட்டைத் தொடர்கின்றனர். அதே போல தரக்குறைவான வலைப்பூக்களை நடுநிலை தவறாது நீக்குவதிலும் எந்தப் பின்வாங்கலும் இல்லை. இதைவிட சிறப்பாக ஒரு திரட்டி எப்படி நடந்து கொள்ள இயலும்?
2. தற்சமயம் நீங்கள் படிக்கும் புத்தகம் எது?
பதில்: இப்போதுதான் The Great Indian Novel என்னும் ஆங்கிலப் புத்தகத்தை இரண்டாம் முறையாக படித்து முடித்தேன். நிரம்ப சிந்தனைகளை தூண்டிய புத்தகம் அது. ஆசிரியர் சஷி தாரூர்? அவரைத்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு செக்ரெடரி ஜெனெரலாக இந்தியாவின் சார்பில் சிபாரிசு செய்தார்கள் என அறிகிறேன்.
3. பொன்னியின் செல்வனில் வரும் வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு மிக அதிகப் பொருத்தமாக இருப்பது யார்?
பதில்: ஒரு காலத்தில் நான் இந்த ரோலுக்காக கற்பனை செய்தது ஜெமினி கணேசனை. ஆனால் அச்சமயம் எம்.ஜி.ஆர். இந்த ரோலுக்கு வரப்போவதாக ஒரு பயங்கர வதந்தி வந்தது. நல்ல வேளை அது உண்மையாகவில்லை. இக்காலத்திய நடிகர்களில் கமலஹாசனை விட்டால் வேறு யார் அதை செய்ய இயலும்?
வால்பையன்:
1. பதிவிற்கு எதிர் கும்மு பதிவு போடுவது எப்படி?
பதில்: இதற்கு பதில் லக்கிக்குத்தான் தெரியும். நானே அதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். மற்றபடி லக்கிலுக் நல்ல நண்பர். எனது ஜெயா டி.வி. பேட்டியை சி.டி.யில் எடுத்து எனக்கு தந்து உதவினார். அவருக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகுக.
சரவணன்:
1. டோண்டு என்றால் என்ன அர்த்தம்?
பதில்: என் அன்னைக்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு என்று ஏதாவது ஒன்றிருந்தால், அது இக்கேள்விக்கான பதிலில்தான் இருக்கும். என் தந்தை அது ஒரு மராட்டிப் பெயர் என்றும். நான் பிறந்த செய்தி அவர் பம்பாய் போஸ்டிங்கில் இருந்த போது அவருக்கு வந்தது என்றும் கூறிக்கொள்வார். எனது அன்னையோ டோண்டு என்றால் அசடு என்று அர்த்தம் என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார். அதுவும் குழந்தையாக இருந்தபோது திருதிருவென்று முழிப்பேனாம், ஆகவே இது என்ன டோண்டு மாதிரி முழிக்கிறது என்று யாரோ சொல்ல, என் அன்னை அதை எனக்கு செல்லமாக சூட்டி, டோண்டு, மண்டு, குண்டு என்றெல்லாம் கொஞ்சியிருக்கிறார். மற்றப்படி டோண்டு என்ற பெயர் எனது தனித்தன்மையை காப்பாற்றி வந்திருக்கிறது.
2. தென் திருப்பேரை எங்க இருக்கு?
பதில்: திருச்செந்தூர் திருநெல்வேலி சாலையில் திருச்செந்தூருக்கு கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்குதான் என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறான். நவ திருப்பதிகளுள் இது ஒன்று.
3. Ed McBain நாவல்கள் படித்ததுண்டா?
பதில்: இல்லை
4. Georges Simenon படித்ததுண்டா?
பதில்: Inspector Maigret பாத்திரத்தை உருவாக்கியவர்தானே. ஒன்றே ஒன்று சமீபத்தில் 1976-ல் ஃபிரெஞ்சில் படித்துள்ளேன். அவரது ஒரு நாவல் Le train என்று நினைக்கிறேன். அதன் திரையாக்கத்தை பார்த்துள்ளேன்.
5. மிருதுவான இசையா, மென்மையான இசையா: எது சரி?
பதில்: இரண்டுமே ஒன்றுதானே. மிருது என்பது வடமொழி சார்ந்த சொல், மென்மை என்பது தூய தமிழ்ச்சொல்.
6. Blog எழுத வராமல் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
பதில்: என்ன செய்திருப்பேன். என்பதை விட என்ன செய்திருக்க மாட்டேன் என்பதைக் கூறுவது எளிது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதைத் துவக்கியிருக்க மாட்டேன். ஆகவே மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் ப்ரோஸ்-ல் பிளாட்டினம் உறுப்பினராக ஆகியிருக்க முடியாது. ஜெயா டி.வி.யில் என்னை பேட்டி கண்டிருக்க மாட்டார்கள் (உண்மைத் தமிழனுக்கு நன்றி). திருக்குறள் மொழிபெயர்ப்பு வேலையில் பங்கெடுத்திருக்க மாட்டேன்.
7. Aki Kaurismäki படங்கள் பார்த்ததுண்டா? (யாருங்க அவரு:-))
பதில்: இல்லை. நிஜமாகவே கேட்கிறேன், யாருங்க அவரு?
தீவு:
1. உங்களுக்கு கவிதை எழுதிப் பழக்கமுண்டா?
பதில்: ஐயையோ, இல்லவே இல்லை.
எஸ்.சி. சுந்தர்:
1. எனது பதிவுற்கு நல்ல புனைபெயர் கொடுக்கவேண்டுகிறேன்.
பதில்: புதுவெள்ளம் அல்லது புத்துணர்ச்சி
சுழியம்:
1. தாங்கள் தவறுகளை தைரியமாக எதிர்க்கும் நேரங்களும், ஜாக்கிரதையாக ஜகா வாங்கும் நேரங்களும் எவை?
பதில்: இதற்கு பதில் ரொம்ப சுலபம். தர்மமும் நம்பக்கம் இருந்து, நம் கையும் ஓங்கியிருந்தால் தைரியமாக எதிர்ப்போம், கை தாழ்ந்திருந்தால் அடக்கி வாசிப்போம். ஜகா வாங்குவது என்றும் சொல்லலாம். புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்றும் கூறிக்கொள்ளலாம். சொல்லிவிட்டு போவோமே, காசா பணமா? செய்ய நிஜமாகவே கஷ்டமான காரியம் தர்மம் நம்பக்கம் இல்லாதிருந்து, ஆனால் நம் கை ஓங்கியிருந்தால் அதை துர் உபயோகம் செய்யாது அடக்கி வாசிப்பதுதான். அதற்கு தேவை அதர்மம் செய்வதிலிருந்து தடுக்கும் நாண உணர்ச்சி.
வால் இல்லாத பையன்:
1. போலி டோண்டு மூர்த்தி திடீரென்று உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில்: எப்படிப்பட்ட விரோதியாயினும் வீடு தேடிவருபவரை வரவேற்கத்தான் வேண்டும். பிறகு விவாதம், மற்றும் வார்த்தைகளால் கும்முவது இருக்கவே இருக்கின்றன. திரும்பிப் பார்த்ததில் மூர்த்தியுடன் எனக்கு எந்த குறிப்பிட்ட விஷயத்தில் மன வேறுபாடு எந்தத் தருணத்தில் வந்தது என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். அதை அச்சமயம் பெரிதாக நினைக்காதது என் தவறுதான். அதை சரிசெய்தால் போயிற்று.
2. தாங்கள் விரும்பும் வேலை பொறியாளர் அல்லது மொழி பெயர்பாளர் . விளக்கதுடன் பதில்.
பதில்: இதே கேள்வியை என்னிடம் ஐ.டி.பி.எல். வேலைக்கான நேர்க்காணலில் கேட்டனர். அப்போது கூறிய பதிலேதான் இப்போதும். நான் மொழிபெயர்ப்பாளனாகவே இருக்க விரும்புவேன். ஏனெனில் இது முழுக்க முழுக்க நானே செய்ய வேண்டிய வேலை. அதன் மூலம் வரும் வாழ்வும் தாழ்வும் என் கையிலேதான் உள்ளது. ஆனால் பொறியாளர் வேலை அப்படியில்லை. அதில் ஒரு பகுதியாகத்தான் நான் இருப்பேன். எல்லாமே எனது கட்டுபாட்டுக்குள் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. மேலே கூறிய பால் வியாபாரம் பற்றிய கேள்விக்கான பதிலில் கூறியதுபோல பலருக்கு வேலை கொடுத்து, அவர்களிடம் வேலை வாங்கி என்றெல்லாம் திறமைகள் தேவைப்படும். அடியேனிடம் அவை பூஜ்யம்.
3. உங்களின் பிளாக்கில் உங்களுக்கு மிகவும் பிடித்த பதிவு எது?
பதில்: ஆரவாரப் பேய்களெல்லாம்- டோண்டுவின் யோம்கிப்பூர்.
அரவிந்தன்:
டோண்டு ராகவன் - காண்டு ராஜேந்திரன்; ஆறு வித்தியாசங்கள் சொல்லுங்க
பதில்: 1) டோண்டு ராகவன் ஒரிஜினல், காண்டு கஜேந்திரன் லக்கிலுக்கின் கற்பனை (லக்கிலுக் என் நண்பர் என்பதை மறுபடியும் கூறுகிறேன். ஓசைப்படாது உதவிகள் பல செய்தவர்), 2) டோண்டு ராகவன் இளைஞன், காண்டு கஜேந்திரன் கெழவன், 3) டோண்டு ராகவன் சண்டைக்கு அஞ்சாதவன், காண்டு கஜேந்திரன் மசோகிஸ்டாகக் கருதப்படுபவன், 4) டோண்டு ராகவனுக்கு நண்பர்கள் உண்டு, காண்டு கஜேந்திரனுக்கு இல்லை, 5) டோண்டு ராகவனின் இஷ்ட தெய்வம் மகரநெடுங்குழைகாதன், காண்டு கஜேந்திரனுக்கு தகர நெடுங்குழைகாதன் என்பது லக்கிலுக்கின் துணிபு், 6) டோண்டு ராகவனுக்கு சோ பிடிக்கும், காண்டு கஜேந்திரன் விரும்புவது சுண்டக்கஞ்சி என்பது லக்கிலுக்கின் கூற்று.
இப்பதிவுக்கான பின்னூட்டமாக நீங்கள் அடுத்தப் பதிவில் வரக்கூடிய கேள்விகளை கேட்கலாம். வழக்கம்போல இப்பதிவின் கருத்துக்களையும் பின்னூட்டமாகவும் கூறலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
48 comments:
மிக அற்புதம். தாங்கள் இந்தப்பணியை தொடர்ந்து நடத்திவர வேண்டுகிறேன். தங்களின் பதிவுப்பெயர் சூட்டலுக்கு மிக்க நன்றி
நல்ல கேள்விகள்
நல்ல பதில்கள்.(நேர்மையான)
//இப்போது பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் சந்திக்கும் பார்ப்பன வெறுப்பு இருக்கும் இந்த நிலையில்//
தவறான புரிதல். பார்ப்பனர்களின் கொடூர 'மனுதர்ம' செயல்பாடுகள்தான் வெறுக்கப்படுகின்றன. உண்மையில் அவர்களுக்கு நேர்மை, உண்மை, உழைப்பு, மனிதநேயம் போன்ற நல்லபண்புகளை கற்றுக்கொடுக்கும் தமிழகத்திற்கு என்றும் நன்றிக்கடன்பட்டவர்கள் !
டோண்டு அய்யா,
கேள்வி பதில்கள் அபாரம்.கேள்விகள் இரண்டு.
1)சிங்கப்பூர் கருத்து கந்தசாமியோ அல்லது அவரது தெலுங்கு மாமியார் பார்ட்டியான டி பி ஸி டி #2 அய்யாவோ தான் போலி டோண்டு/வி க/மூர்த்தி என்ற திடுக்கிடும் உண்மை வெளிப்பட்டால் உங்கள் முதல் எண்ணம் என்னவாக இருக்கும்?
2) இந்தியாவைப் பொருத்தவரை,கீழே தரப்பட்டவகைகளில் மிகவும் மோசமான தீவிரவாத குழு எது?
LeT,JeI,HUJI,SEMI,SIMI,JeM போன்ற இஸ்லாமிய தீவிரவாத கும்பலா?
பெ தி க,தி க,தி மு க போன்ற காட்டுகூச்சல் போட்டபடி வன்முறை செய்யும் காட்டுமிராண்டி கும்பலா?
அல்லது,
ம க இ க போன்ற வெறி பிடித்து அலையும் பொறிக்கி கம்யூனிஸ்ட்(நக்சல்) கும்பலா?
பாலா
//இதற்கு பதில் லக்கிக்குத்தான் தெரியும். நானே அதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். மற்றபடி லக்கிலுக் நல்ல நண்பர். எனது ஜெயா டி.வி. பேட்டியை சி.டி.யில் எடுத்து எனக்கு தந்து உதவினார். அவருக்கு என் நன்றி எப்போதும் உரித்தாகுக//
அநியாயத்துக்கு இப்பதிவின் பல இடங்களில் என் பெயரை போட்டு கொடுத்தற்கு நன்றிகள்! :-((((
மற்றபடி கேள்வி-பதில் பகுதி சிறப்பாகவே வந்திருக்கிறது. வாராவாரம் காண ஆவலுடன் இருக்கிறேன்.
//ஒரு காலத்தில் நான் இந்த ரோலுக்காக கற்பனை செய்தது ஜெமினி கணேசனை. ஆனால் அச்சமயம் எம்.ஜி.ஆர். இந்த ரோலுக்கு வரப்போவதாக ஒரு பயங்கர வதந்தி வந்தது. நல்ல வேளை அது உண்மையாகவில்லை. இக்காலத்திய நடிகர்களில் கமலஹாசனை விட்டால் வேறு யார் அதை செய்ய இயலும்?//
இந்த பதிலுக்கு ஒரு எதிர்வினை வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ஜாலி கற்பனை! (கற்பனை மட்டுமே, என் கருத்து அல்ல, எனக்கு கமலையும் ஜெமினியையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்)
ஜெமினி கணேசனும், கமலும் பார்ப்பானன் என்பதால் அவர்களை திராவிடனான வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு டோண்டு சிபாரிசு செய்கிறார். இதன் மூலமாக வந்தியத்தேவனின் திராவிடப் பரிமாணத்தை நீர்த்துப் போக செய்யும் அவரது நுண்ணரசியல் புரிகிறது. அதே நேரத்தில் பச்சை திராவிடனான மருதூர் கோபால இராமச்சந்திரனை கிண்டல் அடிப்பதின் மூலமாக தன் உள்மன அரிப்பையும் டோண்டு தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
//அநியாயத்துக்கு இப்பதிவின் பல இடங்களில் என் பெயரை போட்டு கொடுத்தற்கு நன்றிகள்! :-((((//
கல்யாண பரிசு தங்கவேலின் குரலில் டோண்டு ராகவன் கூறுவதாவது, “இது என்னப்பா, நன்றியைக் கூட கூறவிடமாட்டேங்கறாங்க”
//மற்றபடி கேள்வி-பதில் பகுதி சிறப்பாகவே வந்திருக்கிறது. வாராவாரம் காண ஆவலுடன் இருக்கிறேன்.//
நன்றி. உங்கள் தரப்பிலிருந்தும் கேள்விகள் கேட்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
//இந்த பதிலுக்கு ஒரு எதிர்வினை வந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ஜாலி கற்பனை! (கற்பனை மட்டுமே, என் கருத்து அல்ல, எனக்கு கமலையும் ஜெமினியையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்)//
இப்படியா சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வீர்கள் நண்பர் லக்கிலுக்! ஏற்கனவேயே தினமலர் ரமேஷுக்கு ஆதரவு தெரிவித்தீர்கள், எனக்கு வலையுலக டெண்டுல்கர் என்று போட்டோவே போட்டீர்கள். யாராவது உங்கள் “தோழர்” உங்களை மசோகிஸ்ட் என்று கூறிவிடப் போகிறார்கள். :))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
சொல்ல மறந்து விட்டேன், லக்கிலுக். உங்கள் எதிர்ப்பதிவு நல்ல கற்பனை நான் வாய் விட்டு சிரித்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடுத்தப் டோண்டு பதில்கள் பதிவுக்கான கேள்விகளை இப்பதிவில் பின்னூட்டமாகப் போடவும். அவை உடனே வெளியிடப்படும், ஆனால் பதில்கள் என்னவோ அடுத்தப் பதிவில்தான் வரும். அப்டுடேட்டாக எல்லா கேள்விகளையும் கவர் செய்யவே விரும்புவேன். மற்றப்படி எசப்பாட்டு ரேஞ்சில் வரும் எதிர்ப்பதிவு/கும்மிகளைக் குறித்து கவலை கொள்ளவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ம க இ க போன்ற வெறி பிடித்து அலையும் பொறிக்கி கம்யூனிஸ்ட்(நக்சல்) கும்பலா?
//
ithai vanmaiyaaga kandikkiren. ma.ka.yi.ka oru samooga puratchi iyakkam. athai purinthu koLLavum
komanan
//ithai vanmaiyaaga kandikkiren. ma.ka.yi.ka oru samooga puratchi iyakkam. athai purinthu koLLavum//
அடப்பாவி பொய் சொல்ல ஒரு அளவு இல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத இயக்கம் தானே உங்களது.
இந்த பின்-கம்யுநிஸ உலகில் கூட சோஷலிச வெறி கொண்டு அலைபவர்கள் நீங்கள்.
உங்கள் புரட்சி பற்றி எங்களுக்கு தெரியாதா என்ன ...
//பார்ப்பனர்களின் கொடூர 'மனுதர்ம' செயல்பாடுகள்தான் வெறுக்கப்படுகின்றன. உண்மையில் அவர்களுக்கு நேர்மை, உண்மை, உழைப்பு, மனிதநேயம் போன்ற நல்லபண்புகளை கற்றுக்கொடுக்கும் தமிழகத்திற்கு//
கொன்னுடீங்க டா, கொன்னுடீங்க டா
எப்படி டா இதெல்லாம்.
மத்த உயர் சாதிக்காரன் தப்பே செய்யாத மாதிரி பேசற, நீ சொல்லும் சாதி கொடுமையெல்லாம் அவன்தான் அதிகம் செய்யுரான்.
மத்த உயர் சாதிக்கு நேர்மை, உண்மை, உழைப்பு, மனிதநேயம் இதெல்லாம் சொல்லிதரமாடீங்களோ
வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு கமல் பொருத்தமாகவே இருக்க மாட்டார். அவர் அந்த பாத்திரத்தின் தன்மையை கெடுப்பார்.. அதோடு "இப்போதைய" என்பதற்கு அர்த்தம் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் அல்ல...
"இப்போதைய" என்பதற்கு அர்த்தம், "சூர்யா, விக்ரம், பரத், அஜித், ஆர்யா, விஜய், விஷால்... etc." யார் உங்கள் சாய்ஸ்?
//இப்போதைய" என்பதற்கு அர்த்தம், "சூர்யா, விக்ரம், பரத், அஜித், ஆர்யா, விஜய், விஷால்... etc." யார் உங்கள் சாய்ஸ்?//
புபட்டியன் அய்யா,
என்னைக் கேட்டால் இவங்க எல்லாரையும் ஒதுக்கி தள்ளி விட்டு புதுமுகமா டாக்டர் அன்புமணி ராமதாசை இந்த ரோலுக்கு தேர்வு செய்யலாம்.குந்தவை ரோலுக்கு கனிமொழி சூப்பரா இருப்பாங்க.
பாலா
//வந்தியத்தேவன் பாத்திரத்துக்கு கமல் பொருத்தமாகவே இருக்க மாட்டார். //
கொல்டி விஷால் வந்தியத்தேவன் ரோலுக்கு சூப்பரா இருப்பார், ஆனா பாவம் நடிக்க தெரியாது.
விஜய்க்கு வேன்னா வாந்தியேடுத்தவன் ரோல் கொடுக்கலாம்.
இதுகூட நல்ல யோசனையாய்தான் தெரியுது.
சமீபத்தில் சென்ன லலித் கலா அகாதமியில் நடந்த ஔரங்கசீப் பற்றிய கண்காட்சியை போலீஸ் அடித்து நொறுக்கியதும், அதை எந்த முக்கிய தொலைக்கட்சி ஊடகத்திலும் காட்டாமல் மூடி மறைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
//
ஜெமினி கணேசனும், கமலும் பார்ப்பானன் என்பதால் அவர்களை திராவிடனான வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு டோண்டு சிபாரிசு செய்கிறார். இதன் மூலமாக வந்தியத்தேவனின் திராவிடப் பரிமாணத்தை நீர்த்துப் போக செய்யும் அவரது நுண்ணரசியல் புரிகிறது. அதே நேரத்தில் பச்சை திராவிடனான மருதூர் கோபால இராமச்சந்திரனை கிண்டல் அடிப்பதின் மூலமாக தன் உள்மன அரிப்பையும் டோண்டு தீர்த்துக் கொண்டிருக்கிறார்.
//
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்.
//அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்.//
அதைத்தான் தனது கற்பனை என்பதை லக்கிலுக் தெளிவாக்கி விட்டாரே. அப்புறம் என்ன. ஆனால் அவர் சொல்வது போலத்தான் பலர் ரியாக்ட் செய்வார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\சமீபத்தில் சென்ன லலித் கலா அகாதமியில் நடந்த ஔரங்கசீப் பற்றிய கண்காட்சியை போலீஸ் அடித்து நொறுக்கியதும், அதை எந்த முக்கிய தொலைக்கட்சி ஊடகத்திலும் காட்டாமல் மூடி மறைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?//
டோண்டு ஐயாவ பதிவுலக விட்டு தொறத்துறதுக்கு ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே உங்க கேள்வில
டோண்டு சார்,
நான் சென்னை வந்தா உங்கள சந்திக்கலாமா? நான் பதிவர் இல்லை, இருந்தாலும் உங்களை சந்திக்க ஆசை. முடியுமா?
1. இந்த பார்ப்பன=திராவிட சண்டை எப்போது முடியும்/ஒழியும்?
2. எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?
இரண்டாவது கேள்விக்கு லக்கிலுக்கும் பதில் அளிக்கலாம்!!!
எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து அடுத்த வெள்ளிக்கிழமை பதிவில் பதில் தரப்படும். இதற்காகவெ ஒரு பதிவு வரைவு ரூபத்தில் உள்ளது. கேள்விகள் வர வர அதில் ஏற்றப்படும். பதில்களும் அவ்வப்போது தரப்பட்டு, கடைசி டச் அப்புக்கு பிறகு குறிப்பிடப்பட்ட நாளன்று வரும்.
கேள்விகள் இல்லாத பின்னூட்டங்களுக்கு நான் விரும்பினால் எதிர்வினை இப்பதிவிலேயே தருவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?//
அவர்கள் எல்லாம் மெய்யாலுமே டகால்ட்டி ஆயிட்டாங்கன்னா உணர்வார்கள்!
//அவர்கள் எல்லாம் மெய்யாலுமே டகால்ட்டி ஆயிட்டாங்கன்னா உணர்வார்கள்//
லக்கி ,
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த திராவிட தலைவர்கள் சூப்பராக ஊழல் செய்தால் மெய்யாகவே இவர்கள் உலகத்தின் தலை சிறந்த டகால்டிகள் என்று ஒத்துக் கொள்வீர்கள்?
//எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?
அவர்கள் எல்லாம் மெய்யாலுமே டகால்ட்டி ஆயிட்டாங்கன்னா உணர்வார்கள்!//
லக்கிலுக்,
திராவிடக்கட்சிகளில் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவரும் சாதாரண தொண்டனின் இப்போதைய நிலை என்ன? அதன் தலைவர்களின் இன்றைய நிலை என்ன? நாற்பது வருடங்களுக்கு முன்னர் முத்துவேல் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, அன்பழகன், துரைமுருகன் இவர்களின் நிலை என்னவாக இருந்தது? விலைமாதுவிடம் சென்றுவிட்டு காசு கொடுக்காமல் வந்தவர்கள் யார்? கவிஞர் கண்ணதாசன் புட்டுப் புட்டு வைத்த உண்மைகளை நீங்கள் படிக்கவில்லையா? ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வெட்கமில்லாமல் உண்டியல் வைத்து ஏழைத்தொண்டனின் கோவணத்தையும் அதில் போடச்செய்த தலைவர்களை இன்னமும் உங்களைப் போன்றவர்கள் நம்புவது வேதனையாக இருக்கிறது.
//
சமீபத்தில் சென்ன லலித் கலா அகாதமியில் நடந்த ஔரங்கசீப் பற்றிய கண்காட்சியை போலீஸ் அடித்து நொறுக்கியதும், அதை எந்த முக்கிய தொலைக்கட்சி ஊடகத்திலும் காட்டாமல் மூடி மறைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
//
அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா...
இங்கே திராவிடர் என்பது அஞ்சாமல் இருப்பவர்கள் தான். ஔரங்கசீப் பற்றிய உண்மைகளைக் கண்டு அஞ்சும் திராவிட குஞ்சுகள் எல்லாம் திராவிட "குஞ்சுகள்" என்று சொல்லிக் கொள்ளக் கூடத் தகுதியற்றவர்கள்.
//
1. இந்த பார்ப்பன=திராவிட சண்டை எப்போது முடியும்/ஒழியும்?
2. எப்போது இந்த திராவிடத் தலைவர்கள் எல்லாம் டகால்டின்னு நம்ப தமிழ் மக்கள் உணர்வார்கள்?
//
உங்கள் இரண்டாவது கேள்விக்குப் பதில் தான் முதல் கேள்விக்கும்...
//கேள்வி : டோண்டு சார் இனி வாராவாரம் ”டோண்டு பதில்கள்” என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லப் போகிறாராமே? யார் யாரெல்லாம் கேள்விகள் கேட்பார்கள்?
லக்கி : ஏன் அவருக்கென்று ஒரு வாசகர் வட்டம் இருக்கிறதே? நாட்டாமை, தினகர், அறவாழி அந்தணன், வெங்கடேஷ் ஷர்மா, பிரகாஷ், நெப்போலியன், புதியவன், வரதன், கண்ணம்மா, விசாலாட்சி, கிருஷ்ணன் என்னும் செர்வாண்டஸ், பஜ்ஜி போன்ற பிரபல பதிவர்கள் கண்டிப்பாக கேள்வி கேட்பார்கள். ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் என்றென்றும் அன்புடன் பாலா போன்றவர்களும் கேள்வி கேட்க வாய்ப்பியிருக்கிறது.//
இது டவுசர் கழணட பதிவாளர் சொன்னது. அன்புடன் பாலா இவரை போல விளம்பரதுக்காக அவரை நீக்கு என்று ஒருவாரம் கூவி வீட்டு அடுத்த வாரம் அவரோடு கும்மி அடிபப்வரில்லை. இவர் எழுத்தில் தான் தரம் இல்லை என்றால் நடத்தையும் இதை போல தான் போலும் .
அன்புடன் பாலா இவரை போல டயம்பாஸுக்கு பதிவு எழ்துவது இல்லை. அவரின் சேவைகளை சொல்லி தெரியவேண்டியது இல்லை.
டோண்டு அய்யா இவரை போன்றவர்கள் உங்களுக்கு நண்பர்கள் என்பதை நீங்கள் சொல்வது படு கேவலமானது,
//டோண்டு அய்யா இவரை போன்றவர்கள் உங்களுக்கு நண்பர்கள் என்பதை நீங்கள் சொல்வது படு கேவலமானது,//
ரீபீட்டே
எந்த விசயத்துக்கும் லாயக்கு இல்லாத பீலா பாரதியின் அல்லைகைகளுக்கு ஏன் மரியாதை டோண்டு அய்யா?
வீரவேல் ! வெற்றி வேல் !
ஏதேனும் ஒரு பதிலை தேர்ந்தெடுக்கவும்:
தன் கை பலமாக இருக்கும்போது பெரிய வஸ்தாது போல பூச்சாண்டி காட்டுவதும், தன் கை பலமாக இல்லாதபோது பொய் சொல்லுவதும், குழைந்து நடு நடுங்கி புகழாரம் சூட்டுவதும் யாருடைய செயல்?
1. கோழைகள்
2. சுயமரியாதை இல்லாதவர்கள்
3. புல்லுருவிகள்
4. அற்பர்கள்
5. திராவிட மாயையில் மயங்கியவர்கள்
6. வன்முறைக்கு அஞ்சுபவர்கள்
7. மானம் போனாலும், தர்மம் அழிந்தாலும், உலகில் நன்மை அழிந்தாலும், தானும் தன் குடும்பமும் உயிர் பிழைப்பதும், சுகங்களை அனுபவிப்பதுமே முக்கியம் என நினைப்பவர்கள்
8. பாலஸ்தீனியர்கள்
9. இஸ்ரேலியர்கள்
10. தமிழ் நாட்டில் சாதி வெறியினால் அதிகாரம் செய்யும் கழகக் கண்மணிகள்
தங்களுடைய பதிலுக்கு அட்வான்ஸ் நன்றிகள்.
வந்தே மாதரம் !
//அன்புடன் பாலா இவரை போல டயம்பாஸுக்கு பதிவு எழுதுவது இல்லை. அவரின் சேவைகளை சொல்லி தெரியவேண்டியது இல்லை.//
பாலா அவர்கள்தான் நான் வலையுலகுக்கு வருவதற்கே இன்ஸ்பிரேஷன். அவரைப் பற்றி நான் எழுதியதைப் பார்க்க http://dondu.blogspot.com/2007/02/blog-post_20.html
ஆக, லக்கிலுக் போகிறபோக்கில் பாலாவை இழுப்பது கண்டிக்கத் தக்கதே.
அதே சமயம் லக்கிலுக்கும் எனது நண்பரே. உதவிகளும் செய்துள்ளார். அதுவும் உண்மையே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
////என்னைக் கேட்டால் இவங்க எல்லாரையும் ஒதுக்கி தள்ளி விட்டு புதுமுகமா டாக்டர் அன்புமணி ராமதாசை இந்த ரோலுக்கு தேர்வு செய்யலாம்.குந்தவை ரோலுக்கு கனிமொழி சூப்பரா இருப்பாங்க.///
இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் டோண்டு சார்:
அருள்மொழிவர்மனாக - மு.க.ஸ்டாலின்
கரிகாலனாக - அழகிரி
சேந்தன் அமுதனாக - தயாநிதி மாறன்
பெரிய பழுவேட்டையராக - மருத்துவர் அய்யா
நந்தினியாக - ஜெயந்தி நடராஜன்
சின்னப் பழுவேட்டையராக - கிருஷ்ணசாமி
வானதியாக - தமிழச்சி தங்கபாண்டியன்
பூங்குழலியாக - ராதிகா
ஸ்டாலினுக்கு நடிப்பு அனுபவம் உண்டு, குறிஞ்சி மலரில் அரவிந்தனாக நடித்திருக்கிறார்.
சேந்தன் அமுதனாக தயாநிதி மாறன்? ஏன் அவர்தான் கடைசியில் பட்டம் கட்டப்போகிறார் என்பதுதான் உங்கள் உள்குத்தா? அது சரி அது பற்றி நமக்கென்ன கவலை?
மற்ற சாய்ஸ்கள் பற்றி நோ கமெண்ட்ஸ்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு கோரிக்கை: அனானியாக வரும் கேள்விகளைத் தவிர்க்கவும். குறைந்தபட்சம் blogger கணக்கு இல்லாததால் அனானியாக வருபவர்கள் பெயர் குறிப்பிட வேண்டும் என்று கூறுங்கள்.
கேள்வி: ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது ஏன்? (குஜராத் வளர்ச்சியும் அடைந்துள்ளதே என்று மழுப்ப வேண்டாம். உண்மையான பதில் தேவை.)
//மத்த உயர் சாதிக்காரன் தப்பே செய்யாத மாதிரி பேசற, நீ சொல்லும் சாதி கொடுமையெல்லாம் அவன்தான் அதிகம் செய்யுரான்//
aathaaram kodu vennai... paarppanan romba olunga vennai? 2000 varudam yeemaathhunathu poothaathaa vennai?
komanan
//மத்த உயர் சாதிக்காரன் தப்பே செய்யாத மாதிரி பேசற, நீ சொல்லும் சாதி கொடுமையெல்லாம் அவன்தான் அதிகம் செய்யுரான்//
aathaaram kodu vennai... paarppanan romba olunga vennai? 2000 varudam yeemaathhunathu poothaathaa vennai?
komanan
ஆதாரமா வேணும்? இந்தாங்க சார்.
http://osaichella.blogspot.com/2008/03/blog-post_13.html
நல்லா நிதானமா படிச்சுப் பாருங்க சார். படிச்சுப்புட்டு, உங்க கோவணத்த தலைல தலப்பாக் கட்டாக் கட்டிக்கிட்டு யார் அநியாயம் செஞ்சாங்களோ அவங்களோட மல்யுத்தம் பண்ணுங்க.
மேற்கொண்டு கோவணம் (மானத்தை மறைக்க) வேண்டுமென்றால் அனுகவேண்டிய முகவரி,
கோவண யாவாரி,
நம்பர் நாப்பத்து நாலின் கீழ் ஏழு,
எட்டாவது முட்டுச் சந்து
கோம(ள)ணம் நகர்
தி. நகர்,
சென்னை ஆறு லட்சத்துப் பதினேழு.
\\கேள்வி: ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது ஏன்? (குஜராத் வளர்ச்சியும் அடைந்துள்ளதே என்று மழுப்ப வேண்டாம். உண்மையான பதில் தேவை.)//
நல்ல அருமையான கேள்வி. கொலை என்பது கொலைதான். அது ஒன்றாக இருந்தாலும், இரண்டு மூன்றாக இருந்தாலும் ஈராயிரமாக இருந்தாலும் கொலையே. ஆனால், ஒன்று, இரண்டு மற்றும் மூன்று கொலைகள் மக்களை சென்றடைவதில்லை. சென்றடைந்தாலும் மறந்து விடுவார்கள் அல்லது மறக்கடிக்கப் படுவார்கள். உதாரணமாக, உதயகுமாரன் என்ற பச்சை மண்ணை படுகொலை செய்தார்கள் சில பாதகர்கள். காரணம்? பெரியதாக ஒன்றுமில்லை. ஒரு தலைவர் எந்த விதத் தகுதியும் இல்லாமல், தன்னுடைய அதிகாரத்தால், மிரட்டலால் டாக்டர் பட்டத்தை வாங்கினார். அது பிடிக்காமல் உதயகுமாரன் கண்ணில் பட்ட நாய்களின் கழுத்தில் எல்லாம் டாக்டர் என்ற அட்டையை தொங்க விட்டதால், அவனையும் தொங்க விட்டார்கள் கயவர்கள். அதுவும் எப்படி? அந்தத் தலைவரின் "என்ன செய்வியோ ஏது செய்வியோ, நான் இந்த எடத்த விட்டுப் போறதுக்கு முன்ன அந்தப் பையன் உசுரோட இருக்கக் கூடாது" என்ற கட்டளை/கர்ஜனை.
இன்னொன்று, பாவம் ஒரு முன்னாள் அமைச்சர் காலையில் வாக்கிங் சென்றார். பாதி வழியில் கொத்துக் கறி போடப்பட்டு வீதியில் கிடந்தார். மற்றொருவரும் இதே பாணியில் வாக்கிங் போகும்போது உடல் முழுவதும் வெட்டப் பட்டு கொலையானார்.
இதுவாவது பரவாயில்லை, அரசியல் முன்விரோதம். எந்தப் பாவமும் செய்யாத மூவர் உடல் கருகி செத்தார்களே? நினைவிருக்கிறதா சரவணன்? இதையெல்லாம் கேள்விகளாகக் கேட்க தைரியம் இல்லாதவர்கள், இன்று மோடி கொலைகாரன் என்று கூப்பாடு போடுவது வியப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை மோடியும் ஒன்றுதான், மேலே சொன்ன கொலைகளை செய்துவிட்டு வெட்கமில்லாமல் ஆட்சி அதிகாரத்திலிருப்பவர்களும் ஒன்றுதான். மோடியாவது பரவாயில்லை, தான் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக தன் மாநில மக்களுக்கு நல்லது செய்கிறார்.. ஆனால், "தன் சொந்த லாபத்துக்காக" கொலை செய்தவர்கள் குடும்பச் சண்டையில் கவனம் செலுத்தி, மக்களை மறந்து விட்டார்கள்.
இப்போது சொல்லுங்கள், மோடி நல்லவரா? இல்லை மேலே சொன்ன கொலைகளை செய்தவர் நல்லவரா?
பின்னூட்டங்களில் வரும் கேள்விகளை அடுத்த பதில்களுக்கான வரைவில் சேமித்து வருகிறேன். வரும் வெள்ளிக்கிழமை அடுத்த செட் கேள்வி பதில்கள் பதிவாக வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
ஈராயிரம் பேரைக் கொன்ற மோடி ஆட்சியில் வாழ குஜராத் மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று கருதுவது ஏன்? (குஜராத் வளர்ச்சியும் அடைந்துள்ளதே என்று மழுப்ப வேண்டாம். உண்மையான பதில் தேவை.)
//
மோடியை ஆட்சி பீடத்தில் மறுபடியும் மறுபடியும் அமர்த்தும் மக்களே அதைப் பற்றிக் கவலைப்படாத போது, உமக்கு எதுக்கு ஐயா குஜராத் மக்கள் மீது அக்கரை ?
நீர் பேசாமல் உம்ம தெரு முனையில் பிச்சை எடுப்பவர்கள் மீது இதே அக்கரையைக் காட்டவும்...ஏதாவது நல்லது நடக்கும்.
இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனையான, திபத்தியர் கலாச்சாரத்தை அழிக்கும் சீனா பற்றி நம் உள் நாட்டு தேச துரோகிக் கும்பலின் (CPIM, CPM, CPIML) கருத்து என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஏதேனும் சொல்லுங்கள். அதே விஷயத்தை, "தி ஹிண்டு" எவ்வாறு அணுகுகிறது என்பது பற்றியும் சொல்லுங்கள் ஐயா.
//மோடியை ஆட்சி பீடத்தில் மறுபடியும் மறுபடியும் அமர்த்தும் மக்களே அதைப் பற்றிக் கவலைப்படாத போது, உமக்கு எதுக்கு ஐயா குஜராத் மக்கள் மீது அக்கரை ?
//
ottu podaavittal RSS-kaarargal uthaippaargale?! payanthu aanaal pidikkaathu oottu pottathaal modi jeyithu vittaan. unmai
athuve.
komanakrishnan
Sorry for English, Please convert into tamil and reply it.
We did Inter-cast marriage in karnataka state. we both are from tamilnadu. is tamil nadu goverment offering money to inter-case marriages or central goverment ? how to apply for this ?
S.kumar, Bangalore
\\ottu podaavittal RSS-kaarargal uthaippaargale?! payanthu aanaal pidikkaathu oottu pottathaal modi jeyithu vittaan. unmai
athuve.
komanakrishnan//
அட ஆக்கங்கெட்ட கூவ, என்ன சொல்லுத? ஆர் எஸ் எஸ் காரன் மிரட்டி ஓட்டுப் போடச் சொன்னானா? இதென்ன உங்க ஊர்ல நடக்குற கார்ப்பொரேஷன் தேர்தலா? வெள்ள வேட்டி வெள்ளச் சட்டைல வந்து அடாவடி செஞ்சு கள்ள ஓட்டுப் போட? இல்ல, தென் மாவட்ட சிங்கம் மாதிரி (அது கொஞ்ச நாள்ல அசிங்கப் படப்போவுதுன்னு உங்க ஊரு பட்சி ஒன்னு சொல்லுது) அடாவடி செஞ்சு பொழைக்க மோடி என்ன பணத்தாச புடிச்சா அலையுறாரு? அங்க நடந்தது உண்மையான தேர்தல் சாமி. கள்ள ஓட்டுக் கலாச்சாரத்துல மூழ்கின உன்னால இப்டித்தான் யோசிக்க முடியும்.
//
ottu podaavittal RSS-kaarargal uthaippaargale?! payanthu aanaal pidikkaathu oottu pottathaal modi jeyithu vittaan. unmai
athuve.
//
கல்கத்தாவுல 30 வருஷம் இப்படி செஞ்சு தான் ஆட்சியில இருக்கானுங்க இந்த மானங்கெட்டவெங்க..
இதோ வந்தாச்சு ராகவன் சார், நாங்களும் பிளாக்கர் account create பண்ணிடோம் ல. என்ன கஷ்டம்னா இதுக்காக புது google account create வேண்டி இருந்தது....அதுவும் google தானாகவே ஜப்பான் மொழியில் interface display செய்தது....அதை ஆங்கிலத்துக்கு மாற்றி create செய்ய வேண்டி இருந்தது
வாழ்த்துக்கள் அருண் அவர்களே. இன்னும் இரண்டு வேலைகள் பாக்கி உள்ளன.
1. உங்கள் பிளக்கர் டிஸ்ப்ளே பெயரில் உங்கள் பதிவு எண்ணும் வருமாறு செய்யவும், அதாவது arun (#10268419741198179086).
2. உங்கள் புகைப்படம் அல்லது வேறு ஏதாவது படம் உங்கள் ப்ரொஃபைலில் போடவும்.
இவ்விரண்டையும் செய்தால் யாரும் உங்களை போல போலியாக வரயியலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.தமிழக கோயில்களில்,கேரள கோயில்களில் கடைபிடிகப்படும் ஆசாரமுறைகள் கடை பிடிக்கப்படுவதில்லை.இதை சரி செய்வது எப்படி?
2.திடிரென்று தமிழக கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதே,கடவுளை ஏற்றுக் கொள்ளும் தன்மை அதிகரித்து விட்டதா?
3.சாதரண சோதிடர் கூட தினம் ரூபாய் 300 (கிராமத்தில்)வருமானம் ஈட்டுவதகா சொல்கிறார்கள்,இது நல்லதற்கா?
4.பக்தி மற்றும் சோதிடப் வார,மாத பத்திரிக்கைகள் விற்பனை படு அமர்களப்படுகிறதே?
5.கடவுள் மறுப்பு கொள்கையில் மிகத் தீவிரம் காட்டியவர்கள் கூட (50 வயதுக்கு மேல்)பக்தி மானாகி விடுவதன் காரணம் யாது.
6.இந்து இதிகாசங்களில் கடுமையாக கூறப்பட்டுள்ள தண்டனைகள் தவறு செய்பவர்களுக்கு இப் பூலோகத்தில் வாழும் போது தரப் பட்டால் மக்களின் ஆன்மீகம்(கடவுள் பக்தி)வளருமல்லவா
7.பொதுவாக எல்லாச் சாமியார்களுமே எதாவது தப்பு செய்து கடைசியில் மாட்டிகொள்கிறார்களே(அவர்களது கட்டுப் பாடற்ற உனவுப் பழக்கம் காரணாமா?)
Post a Comment