4/03/2009

பல மாதங்களுக்கு பிறகு சில புதிர்கள்

ரொம்ப நாளாயிற்று புதிர்கள் போட்டு. அவற்றை இப்போது பார்க்கலாமா?
1. ஒரு பெண்மணி ஆஸ்பத்திரிக்கு வருகிறாள். தலைமை டாக்டருடன் தனக்கு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகக் கூறுகிறாள். டாக்டர் உள்ளே முக்கிய டெலிஃபோன் கான்ஃபரன்ஸில் இருப்பதாகவும், காத்திருக்க வேண்டும் என்றும் அவளுக்கு கூறப்படுகிறது. அவளும் காத்திருக்கிறாள். அரை மணி கழித்து அவள் உள்ளே சென்று செய்த செயலால் டாக்டரின் மானமே போயிற்று. என்ன நடக்கிறது இங்கே?

2. ஒருவன் பார்க்க நன்றாக இல்லாத ஓவியம் ஒன்றை மிக அதிக விலைக்கு வாங்குகிறான். ஏன்?

3. ஒருவன் ஒரு நீண்ட தெருவின் ஒரு கோடியில் காரை நிறுத்தியுள்ளான். அதே தெருவின் மறுகோடியில் உள்ள தபால் நிலையத்துக்கு அவன் செல்ல வேண்டும். கார்கள் அத்தெருவுக்குள் செல்ல அனுமதி இல்லை. ஆகவே நடந்துதான் செல்ல வேண்டும். தெருவின் நடுவில் உடுப்பி ஹோட்டல் ஒன்று உள்ளது. அதை கடக்காமல் அவன் போஸ்ட் ஆஃபீசுக்கு செல்கிறான். தெரு வழியாகத்தான் செல்கிறான், சுற்று வழியெல்லாம் எடுக்கவில்லை.

4. ரூம் டெம்பெரேச்சரில் இருக்கும் ஒரு திரவம் பலரை பைத்தியமாக்குகிறது. அது என்ன திரவம்? விளக்கவும்.

5.
E
K
A
M
என்றால் என்ன பொருள்?

6. Woman is equal to man; woman is superior to man. இந்த இரு ஆங்கில வாக்கியங்களின் பொருள் வருமாறு சொல்லக்கூடிய ஒரே ஒரு வாக்கியம் என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

43 comments:

ரொம்ப நல்லவன் said...

1. அப்பெண்மணி டெலிபோன் ரிப்பேர் செய்ய வந்திருக்கிறார்.

3. தெருவின் வலது கோடியில் காரை நிறுத்திவிட்டு, இடது கோடியில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்றான்.

5. தலைகீழாக செய் என்று.

அய்யே.. எல்லா கேள்விக்குமா பதில் சொல்லுவாங்க? கொஞ்சமாது யோசிப்பா..

dondu(#11168674346665545885) said...

@ jchat
1. சரியான பதில். 3 மற்றும் 5 தவறு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vishnu - விஷ்ணு said...

2. ஒருவேளை அவனுடைய புகைப்படைத்தை வரைந்திருப்பார்கள் யாரும் வாங்கிவிட கூடாது என்பதற்காக

வால்பையன் said...

//ஒருவன் பார்க்க நன்றாக இல்லாத ஓவியம் ஒன்றை மிக அதிக விலைக்கு வாங்குகிறான். ஏன்?//

உங்களுக்கு பரிசளிப்பதற்க்காக!

வால்பையன் said...

தாவூ தீருது நீங்களே பதில் சொல்லுங்க!

திவாண்ணா said...

2.ஆசாமிக்கு கண்ணு தெரியாது.
3. அட கார்தானே தெரு கோடில நிக்குது? இவரு உடுப்பி ஓட்டலுக்கும் தபால் ஆபீசுக்கும் இடையேதான் இருக்காரு.
4. உபத்திரவம்.
ஹிஹி!
கடேசி: man is not superior to woman
அதென்னங்க ரெண்டு 5 ஆம் நம்பர் கேள்வி?

dondu(#11168674346665545885) said...

முதல் கேள்விக்கு மட்டும்தான் இதுவரை சரியான பதில் வந்துள்ளது. மீதி கேள்விகளுக்காக இதுவரை தரப்பட்ட பதில்கள் தவறு.

கடைசி கேள்வியின் எண் 6 தான். 5 என தவறாக குறிப்பிட்டிருந்தேன். சுட்டிக் காட்டிய திவாவுக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மன்னன் said...

//ரொம்ப நாளாயிற்று புதிர்கள் போட்டு//

இல்லையே... "சமீபத்துல" தானே புதிர்கள் போட்டீங்க :)

ஒண்ணுக்கும் விடை தெரியல்ல தலைவரே....

siddhan said...

நான்காவது கேள்விக்கான விடை : மேக்கப்

dondu(#11168674346665545885) said...

//நான்காவது கேள்விக்கான விடை : மேக்கப்//
சரியான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

siddhan said...

மன்னிக்கவும். கேள்வி எண்ணை தவறாக எழுதிவிட்டேன்.ஐந்தாவது கேள்விக்கான விடை : மேக்கப்

dondu(#11168674346665545885) said...

@சித்தன்
நானும் கவனிக்கவில்லை. ஐந்தாம் கேள்விக்கான விடைதான் மேக்கப்.

அன்புடன்
டோண்டு ராகவன்

siddhan said...

ஆறாவது கேள்விக்கான விடை: Woman is >= man

dondu(#11168674346665545885) said...

//ஆறாவது கேள்விக்கான விடை: Woman is >= man//
நல்ல முயற்சி, ஆனால் இது சரியான விடை அல்ல. சரியான விடை பயங்கர மொக்கையாக இருக்கும், இரண்டே வார்த்தைகளில் இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

uvaraj said...

5. Remake

Anonymous said...

So instead of புதிர் you are going to do பயங்கர மொக்கை!!!!

dondu(#11168674346665545885) said...

@யுவராஜ்: தவறான விடை. சரியான விடை மேக்கப் ஏற்கனவேயே கூறப்பட்டு விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Avanthika said...

Female பிறபதே Male

dondu(#11168674346665545885) said...

@ஈவா
சற்றே மாடிஃபை செய்யவும். இரு வார்த்தைகள்தான் வர வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Avanthika said...

6.Femaleலே male

siddhan said...

W
o
WoMan
a
n

சின்னப் பையன் said...

4. உபத்திரவம்.

ஹிஹி..

dondu(#11168674346665545885) said...

//6.Femaleலே male//
சரியான விடை. அதாவது, ஃபீமேலே மேல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சின்னப் பையன் said...

3. டக்குன்னு தெருவை க்ராஸ் செய்து எதிர்பக்கம் இருக்கும் த.ஆபீஸுக்கு போய்விடுவான்..

சின்னப் பையன் said...

2. ஒவியம் - குப்பைகளால் நிறைந்த ஒரு தெருவைப் பற்றியது.

Avanthika said...

3.அந்த தெருவில் ஒரு கோடியிலிருது மறுகோடிக்கு செல்ல பாலம் உள்ளது.

dondu(#11168674346665545885) said...

//3. டக்குன்னு தெருவை க்ராஸ் செய்து எதிர்பக்கம் இருக்கும் த.ஆபீஸுக்கு போய்விடுவான்..//
//3.அந்த தெருவில் ஒரு கோடியிலிருது மறுகோடிக்கு செல்ல பாலம் உள்ளது//
இரு பதில்களுமே தவறு. கேள்வியை மீண்டும் படித்து விஷுவலைஸ் செய்யவும். இதே மாதிரி கேள்வியை நான் ஏற்கனவேயே எனது பழைய பதிவு ஒன்றில் வேறு காண்டக்ஸ்டில் கேட்டுள்ளேன்.

//2. ஒவியம் - குப்பைகளால் நிறைந்த ஒரு தெருவைப் பற்றியது.//
தவறு. இது சற்றே கடினமான கேள்வி. சீரியஸான பதில், மொக்கை சுத்தமாக இல்லை.

பழமைபேசி said...

Femaleல் Male!

ரவிஷா said...

Q3: He doesn't "pass" the hotel instead he enters into the hotel and leaves to go to the Post Office.

dondu(#11168674346665545885) said...

@ரவிஷா:
சரியான விடை. பை சான்ஸ் எனது பழைய பதிவை தேடி கண்டுபிடித்தீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vee said...

4. Alcoholic drink

Kannan said...

2. அது அவன் வரைந்த ஓவியம். ஒரு ஓவியம் அதிக விலைக்கு விற்றால் அவனது அடுத்த ஓவியங்களும் நல்ல விலைக்கு விற்கும்.

Unknown said...

Q.How

can you drop a raw egg onto a concrete floor

without cracking it?Q.If

it took eight men ten hours to build a wall, how

long would it take four men to build it?
Q.If you had three

apples and four oranges in one hand and four

apples and three oranges in the other hand, what

would you have?

Q. How

can you lift an elephant with one hand?

A.Q. How can a

man go eight days without sleep?

Q. If you throw a red stone into the

blue sea what it will become?

Q. What looks like half apple ?

A
Q.

What can you never eat for breakfast ?

Q. What happened when wheel was

invented ?

Q. Bay of Bengal is in which

state?

வால்பையன் said...

தூங்கலையா ?

dondu(#11168674346665545885) said...

//4. Alcoholic drink//
இதுவும் சரியான விடைதான். ஆனால் இதே போல இன்னொரு திரவமும் உள்ளது. அருந்த முடியாது. இதில் வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை, உதாரணம்: உபத்திரவம்.

எது எப்படியானாலும் மேலே உள்ள ஒரு சரியான விடையை சொன்னதற்கு பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@கண்ணன்:
தவறான விடை. நான் வைத்துள்ள விடை ஆர்ட் உலகில் மிகவும் தெஇந்த நிலை. சற்றே இன்னும் யோசிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவிஷா said...

எங்கேயோ படித்த ஞியாபகம்!

Sri said...

2. Frame is an expensive one?

Srini

dondu(#11168674346665545885) said...

//2. Frame is an expensive one?//
மிகச்சரியான விடை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நான்காம் கேள்விக்கான விடை மட்டும் பாக்கியிருக்கிறது. அதற்கு இரு விடைகள், ஒரு விடை கூறப்பட்டு விட்டது. இன்னொரு விடைதான் தேவை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

R.Gopi said...

//4. ரூம் டெம்பெரேச்சரில் இருக்கும் ஒரு திரவம் பலரை பைத்தியமாக்குகிறது. அது என்ன திரவம்? விளக்கவும்.//

********

"கேப்டன் தல" விஜயகாந்த் வைத்துள்ள ஐஸ் போடாத "டாஸ்மாக்"

Anonymous said...

Mercury, drives people insane, "Mad Hatter" came from it. Liquid at room temperature :(

dondu(#11168674346665545885) said...

//Mercury, drives people insane, "Mad Hatter" came from it. Liquid at room temperature :(//
Perfect answer.

Regards,
Dondu N. Raghavan

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது