துஷ்யந்தன், சகுந்தலை விஷயத்தில் உண்மையாகவே என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து எழுதிய நாடோடி, துச்சாசனன் அவிழ்த்துப் போட்ட புடவைகளால் வந்த பிரச்சினையை சுவையுடன் அலசிய நாடோடி, தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்களை பகிடி செய்ய அதிசயபுரி என்ற பிரத்தியேக நாட்டை சிருஷ்டி செய்து, தனது மனோரதத்தில் ஏறி கால பரிமாணங்களை தாண்டி தமிழகத்துக்கு சென்று தான் கண்டதை எழுதும் நாடோடி பற்றி நான் ஏற்கனவே பதிவுகள் போட்டபோது கைவசம் அவர் புத்தகங்கள் ஏதும் இல்லை. ஆனால் இம்முறை ஒரு புத்தகம் கிடைத்தது, அதன் தலைப்பு “ஆயிரம் வருஷத்துக்கு அப்பால்”.
“அதானே, வெறுங்கையிலேயே முழம் போடற இந்தப் பெரிசு இப்போது நம்மை விட்டுவிடுமா என்ன”? என அலுத்துக் கொள்ளும் முரளிமனோகர் அமைதி காக்க வேண்டும். பை தி வே, நீ சந்தேகப்படுவதெல்லாம் உண்மையே. உங்களையெல்லாம் விடுவதாக இல்லைதான்.
புத்தகத் தலைப்பையே தன் தலைப்பாக கொண்ட அவரது இக்கட்டுரையில் அவர் தனது மனோரதத்தில் ஏறி ஆயிரம் ஆண்டுகள் எதிர்க்காலத்தில் செல்கிறார். அவர் அவ்வாறு போகப் போகிறார் என்பதை அறிந்த அவரது வக்கீல் நண்பரும் தனது மனோரத்தத்தில் ஏறி அவரைப் பின்தொடர்கிறார். திடீரென நண்பரைக் காணவில்லை. இவரும் தான் இருந்த 1957-லிருந்து 2957-க்கு வந்து விட்டார். திடீரென அங்கு தனது ந்ண்பரைக் கண்டதும் இருவரும் பாசத்துடன் தழுவிக் கொள்கின்றனர்.
திடீரென அங்கு தோன்றும் இரண்டு போலீஸ்காரர்கள் அவர்களிடம் அவர்கள் ஜாதி பற்றி கேட்க, அவர்கள் கோபத்துடன் அதை சொல்ல மறுக்கின்றனர். அவர்கள் அந்த ஊரைச் சேர்ந்த்வர்களா எனக்கேட்க, அதே ஊர்தான் இருந்தாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் எனக்கூறினால் எங்கே தங்களை பைத்தியம் எனச் சொல்லிவிடுவார்களோ என அஞ்சி வேறு ஊர்க்காரர்கள் எனச்சொல்லி சமாளிக்கின்றனர்.
இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பால்வியாபாரி ஜாதியைச் சேர்ந்தவன் ஒரு பழவியாபார ஜாதிக்காரனை தொட்டுவிட்டது சம்பந்தமாக தகராறு வர அங்கு செல்கின்றனர். வேடிக்கை பார்ப்பவர்கள் எல்லோரும் தனிதனிக் குழுக்களாக நிற்கின்றனர். வேற்று ஜாதிக்காரர்களை தொடக்கூடாது என்ற முனைப்பில் அவர்கள் அவ்வாறு நிற்பதாக நாடோடிக்கு படுகிறது. பிறகு அந்த சண்டைக்கார்கள் இருவர்களுடன் இவர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு மறுபடியும் இவர்கள் ஜாதி பற்றிக் கேட்க தாங்கள் பிராமண ஜாதியைச் சார்ந்தவர்கள் என நாடோடி கூற, அந்த ஜாதியெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே அழிந்து விட்டதை இன்ஸ்பெக்டர் கூறுகிறார். பிறகு அவராகவே நாடோடி உடை பாவனைகளை பார்த்து அவர் எழுத்தாளர்தானே எனக்கேட்க நாடோடியும் ஆமாம் என்கிறார். நண்பரோ தான் வக்கீல் எனக் கூற அதெப்படி வக்கீல் ஜாதிக்காரரும் எழுத்தாள ஜாதிக்காரரும் ஒருவரை ஒருவர் தொடலாம் என இன்ஸ்பெக்டர் கேட்டு விட்டு அடுத்த நாள் கோர்ட்டுக்கு வருமாறு அவர்களிடம் கூறுகிறார்.
அன்றிரவு தங்குவதற்காக ஹோட்டலுக்கு பாகலாம் என்றால் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனி ஹோட்டலாக இருந்தது. ஆக வக்கீலும் எழுத்தாளரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வேண்டி வருகிறது. நாடோடி தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள இன்னொரு எழுத்தாளர் அப்போதைய ஜாதிக் கட்டுப்பாடு பற்றி விளக்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வர்ணாசிரமம் வந்து அதிலிருந்து ஜாதிகள் வந்ததை விளக்குகிறார். பிறகு அவற்றின் கட்டுக்கோப்பு குலைந்து போனதால் யார் வேண்டுமானாலும் எந்தக் குலத்தொழிலையும் செய்யலாம் என நிலை ஏற்பட, சம்பளம் அதிகம் வராத தொழில்களுக்கு ஆட்கள் கிடைக்காது, சம்பளம் அதிகம் கிடைக்கும் வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாக ஜனங்கள் போய் விழ அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் வந்தது. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்னால் அப்போது நிலவிய தொழில்களின் அடிப்படையில் மீண்டும் ஜாதிகளை வகுத்து ஒரு ஜாதிக்காரர் இன்னொரு ஜாதிக்காரரின் வேலையை செய்யக்கூடாது என்ற நிலை நிறுவப்பட்டது.
ஜாதிப் பிரிவுகள் இருந்தனவே தவிர இந்த ஜாதிதான் உயர்ந்தது இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்ற எண்ணங்களும் வராமல் பார்த்து கொள்ளப்பட்டன. தலைமுறை தலைமுறையாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் ஒரு தொழிலை மட்டும் செய்ததால் அத்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவேதான் ஒரு ஜாதியினர் இன்னொரு ஜாதியினரைத் தொடுவது கூட குற்றமாகக் கருதப்பட்டது. போலீஸ் ஜாதியைச் சார்ந்தவர்கள் திருடர்களை பிடிக்கும்போது மட்டும் தங்கள் தொழில் தர்மப்படி அவர்களைத் தொடலாம். பிறகு தீட்டு கழிய அவர்கள் குளிப்பதற்கு சோப்பு டவல் எல்லாம் வழங்கப்படும். திருடர்களும் போலீஸ் ஜாதியினர தங்களைத் தொட்டு விட்டதால் அவர்களும் குளிப்பார்கள்.
இதையெல்லாம் கேட்ட நாடோடிக்கு தலை சுற்றி தெரியாத்தனமாக தான் 1957-லிருந்து வருவதாகக் கூற, “பைத்தியம் டோய்” எனக் கூறி எல்லோரும் அவரை அடிக்க வருகின்றனர். திடீரென விழித்துக் கொள்ளும் நாடோடி தான் 1957-லேயே இருப்பதை உணர்ந்த் நிம்மதி அடைகிறார்.
மனிதர்களுக்குள் குழுமனப்பான்மை என்பது இயற்கையாகவே வரும். ஆனால் அதற்காக இம்மாதிரி ஜாதி என்றெல்லாம் சொல்வது ஓவர் என்பவர்கள் சரித்திரத்தை பற்றி சரியாக அறியாதவர்கள். இப்போது கூட பார்க்கிறோமே, டாக்டர்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் அறிவுரைப்படி டாக்டர்கள் ஆகின்றனர். அதே மாதிரித்தான் மற்ற தொழில்களிலும்.
இதையெல்லாம் ஒத்துக் கொள்வதும் ஒத்துக் கொள்ளாததும் அவரவர் விருப்பம். ஆனால் நாடோடியின் இந்தக் கட்டுரை நல்ல முறையில் நகைச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளது.
அடுத்தப் பதிவில் சிறுவயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வழக்க, பற்றி எழுதியுள்ளதை பற்றி பதிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
9 hours ago
35 comments:
ச்சே ச்சே..எங்க வால்பையனுக்குக் கோபமெல்லாம் வராது! வால் தான் கொஞ்சம் நீளமா....சரவேடிப் பின்னூட்டமா..வரிசையா வரும்:-))
வால்பையனைக் கோபப் படுத்தியே காட்டுவது என்று ஒருத்தர் 1957 வாக்கிலேயே கதை எழுதியிருக்கிறாரா என்ன?
நல்ல கற்பனை!
இந்தக் கனவில் உள்ள அளவுக்கு அப்படி எதுவும் நடந்துவிடாது என்று நம்புகிறேன்!
வட இந்தியாவில் தென் இந்தியாவைவிட ஜாதீய மனோபாவங்கள் ,அடக்குமுறைகள்,அத்துமீறல்கள் அதிகம். ஆனால் தமிழகத்தில் பகுத்தறிவு பிரச்சாரத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த கழகங்கள்,தேவையற்ற பிராமண எதிர்ப்பை இன்னும் கைவிடாமல் இருப்பது சரியில்லாத ஒன்று.
நாங்கள் சாதிகளற்ற சமுதாயம் அமைக்க தமிழன்னையால் தமிழ் சாதி காக்க பிறந்த தானைத்தலைவர்கள் என் சொல்லும் கழக கட்சியினரில் ஆட்சிக்குப் பிறகு தான் இங்கே இந்த ஜாதீய உணர்வுகள்,மோதல்கள் அதிகமாயின.
பாமர மக்களின் ஒட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காவே,இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் வசதி படத்தவர்களை விலக்க வரும் அனைத்து முயற்சிகளியும் ,முறிஅடிக்கும் முரட்டு பக்தர்கள்.
தேர்தல் வேட்பாளர் தேர்வில் ஜாதி
அரசு பதவி பங்கீர்வில் ஜாதி,அமைச்சர் தேர்வில் ஜாதி.
இப்படியே போனால் 1000 வருடமென்ன கோடி வருடம் போனாலும்?
வால் பையன் கோபம் என்ன செய்யும் இந்த சுயநலக் கும்பல்களை
வால்பையனுக்கு மட்டுமல்ல, எனக்கும் கோபம்கோபமாத்தான் வருது!
சாதிகள் என்பன, ஒரு தொழிலைச் சார்ந்து, ஒரு மரபைப் பேணும் விதத்தில், அதே நேரம், இதர பிரிவினரையுமே அனுசரித்து, அரவணைத்துச் சென்ற காலம் ஒன்றிருந்திருக்கிறது. அல்லது, அப்படி இருந்ததாகச் சொல்லப் படுகிறது.
ஏதோ ஒரு காலகட்டத்தில், ஒரு தொழில், மரபு என்பவைகளே இல்லாமல், பிறப்பால் மட்டுமே சாதியும், அதில் உயர்ச்சி . தாழ்த்துதலும் வந்தபோதே, நமக்குள், சண்டை வந்தது, பிரிவு வந்தது, அந்நியன் வந்து புகுந்து நமக்கு புத்தி சொல்ல வேண்டிய அடிமைத்தனமும் வந்தது.
அடிமைத்தனத்தை ஏதோ ஒரு வகையில் சுமந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே கோபம் என்ன செய்யும் என்று கேட்பார்கள்!
ரமணா தான் எழுதியதில், முதல் பாராவை மறுபடி படிப்பாரேயானால், தன் மீதே கோபப்படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்! எனக்குக் கோபம் வருகிறது!
வால்பையன்களுக்கு வரும் கோபம் வாழ்க!
மனித நாகரீகத்தின் முதல் கட்ட வளர்ச்சியா குழுக்கலாக இடம் பெயர்ந்ததை சொல்லலாம்!, மத்திய ஆப்பிரிக்காவில் ஹோமோசேபியன்ஸாக வளர்ச்சி பெற்ற ஹோமோ எரக்டஸ் கண்டங்கள் ஒட்டியிருந்த காரணத்தால் எல்லா நாடுகளுக்கும் பரவியது,
குழுவில் இரண்டாவது நிலையிலிருந்தவன், தன்னையும் ஒரு தலைவனாக அறிவித்து கொள்ள வேண்டி தனக்கான ஆதரவாளர்களை அழைத்து கொண்டு இடம் பெயர்ந்தான், இவர்களது ஒவ்வோரு குழுவுக்கும் தனிதனி அடையாளங்கள் அமைத்து கொண்டது தான் காலத்தின் ஆச்சர்யம்!
பறவையின் இறகுகள், விலங்குகளின் தோல்கள் என இவர்களது அடையாளம் அவர்களை தனிமைப்படுத்தி காட்ட உதவியது, எல்லோருக்கும் மூல தொழிலான வேட்டையாடுதல் மட்டுமே உணவுக்கு, நாளடைவில் வேளாண்மை வந்த பிறகு விவசாயம் தலை தூக்க ஆரம்பித்தது, இடம் பெயர வேண்டிய அவசியமுமில்லை, ஆகையால் இடத்துக்கு அதிகபட்ச பாதுகாப்பு, ஒன்று கொடிய விலங்குகளிடமிருந்து, மற்றொன்று அண்டை குழுக்களிடமிருந்து,
அண்டை குழுக்களிடன் வெகு நாட்கள் சண்டை போட்டு கொள்வதை அவர்களே விரும்பவில்லை, காரணம் என்னவிருந்தாலும் ஒன்றாக இருந்து பிரிந்தவர்கள் என்பதற்கு அடையாளமாக சில மொழி குறியீடுகளும், பழக்கவழக்கங்களும் இருந்தது, அதனால் பொருள்கள் மாற்றி கொள்ளுதல், பெண்கள் மாற்றி கொள்ளுதல் என அவர்களுக்குள் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஏற்ப்பட்டது,
நாளடைவில் தேவைகள் அதிகமாகி பல தொழில்கள், பலதரப்பட்ட மனிதர்கள் உருவாகினர், கூடவே இந்த கேடுகெட்ட சாதியும்!
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், ஆங்காங்கே குழுக்கலாக வாழ்ந்த மனிதர்கள் நீர் ஆதாரம் இருக்கும் இடங்களில் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர், உலகம் முழுவதும் அவர்கள் இன வித்தியாசத்தில் தான் இன்றும் உள்ளனர்,
இந்தியாவுக்கு மட்டும் எந்த சனியன் வந்த நேரமோ தெரியல, இந்த சாதின்னு ஒன்னு இங்க தான் தலைவிரிச்சு ஆடுது! ஒருவேளை அது ஆயிரம் வருடம் கழித்தும் இருக்கலாம், நான் பிறக்காமல் இருந்திருந்தால், நான் தான் பிறந்துட்டேன்ல, பின்ன என்ன கவலை!
May be the below article will be useful for readers!
When will the Brahmin-Bania hegemony end? by Aakar Patel
The Brahmin and the Bania still control the economy, but now the Shudra controls politics.
Old economy, new economy: All economy in India is owned and run by two castes.
The Brahmin used his monopoly on knowledge and the Bania used his high-trust culture of trade to become dominant. Their skills are world-class. Given the realities of capital formation, it is difficult for other castes to catch up soon.
At independence, the peasant had neither political nor economic strength. Democracy transferred power from the Brahmin to him.
The Brahmin and the Bania still control the economy, but now the Shudra controls politics.
The Brahmin and Bania oppose reservations in the private sector, which they totally dominate. The Shudra wants his share, but the Brahmin and Bania say their dominance is from merit.
The Brahmin and Bania control the media, but the Shudra controls legislation.
Sooner rather than later, reservations will come.
for full article please see below link!
http://www.livemint.com/2009/08/27220957/When-will-the-BrahminBania-he.html
வால்பையம் பெருமிதமாச் சொன்னது:
/நான் பிறக்காமல் இருந்திருந்தால்....!
நான் தான் பிறந்துட்டேன்ல, பின்ன என்ன கவலை?/
இப்ப அது தான் கவலையே:-))
@சந்திரா
நீங்கள் சுட்டியிருக்கும் அகமது படேல் எழுதிய கட்டுரை விஷமத்தனமா இல்லை விஷமா?
கட்டுரையப் படித்துவிட்டு வந்திருக்கும் கமெண்டுகள், உண்மையிலேயே நன்றாக இருக்கின்றன. சுட்டிக்கு நன்றி!
//டாக்டர்களின் பிள்ளைகள் பெற்றோர்கள் அறிவுரைப்படி டாக்டர்கள் ஆகின்றனர். அதே மாதிரித்தான் மற்ற தொழில்களிலும்.//
டோண்டு சார்,
சாக்கடை அள்ள மாத 50 ஆயிரம் - ஒரு லட்சம் ஊதியம் என்றால் சாதி வேறுபாடு இல்லாமல் எல்லோருமே வேலைக்கு விண்ணப்பம் செய்வார்கள்.
பணம் கொழிக்கும், கிடைக்கும் தொழில்கள் குலத்தொழில்களாக மாறுவது வரும் காலத்தில் கடினம் தான்.
பார்பனர்கள் ஏன் அர்சகர் தொழிலை விட்டுத்தரமாட்டேன்கிறார்கள் ? இறைச் சேவையா ? பணம். பணம் ! எனக்கு தெரிந்து வருமானம் இல்லாத கோவில்களில் அர்சகர்களே கிடையாது.
டோண்டு சார் , சிந்தனை தூண்டும் நல்ல பதிவு.
கோவி கண்ணன் கருத்தோடு நான் சில இடத்தில் உடன் படுகிறேன். சம்பளம் அடிக்கம் என்றால் அந்த தோழில் செய்ய எந்த சாதியினரும் தயார்.
நான் கண்ட உண்மை, சென்னையில் பல முடி திருதகளில் (சலூன்) பணி புரிவோர் நாவிதன் அல்லது அம்பட்டன் ஜாதி சேர்ந்தவர் அல்ல (வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், நங்கநல்லூர் பகுதிகளில் நாடர், கோனார், தேவர், இஸ்லாமியர் சலூன் நான் பார்த்து இருக்கிறேன்).
கோவில் அர்ச்சகர் பணி விட்டு தர பார்ப்பனர்கள் தயார், ஆனால் பக்தர்கள் தயார் அல்ல. உண்மையிலேயே கழக அரசு தீவிரமாக இருக்குமானால் முதலில் மதுரை மீனாக்சி, திருப்பதி, மயிலாப்போர், மேல்மர்வதூர் ஆதிபராசக்தி போன்ற கோவில்களில் தாழ்த்த பட்டோரை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.
இன்றைய திமுக மத்திய அமைச்சர் ஜகத்ரட்ச்கனே தனது கல்லூரி வளாக கோயிலில் பார்ப்பன அர்ச்சகரை தான் வைத்து உள்ளார்.
////கிருஷ்ணமூர்த்தி said...
வால்பையம் பெருமிதமாச் சொன்னது:
/நான் பிறக்காமல் இருந்திருந்தால்....!
நான் தான் பிறந்துட்டேன்ல, பின்ன என்ன கவலை?/
இப்ப அது தான் கவலையே:-))////
ரிபீட்டு.
நடுவில் ஆப்பு அப்படின்னு ஒரு பதிவர் (போலி பதிவர்) எல்லோருக்கும் கேவலமான பின்னூட்டங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. இப்போ காணோம் என்றே நினைக்கிறேன்.
எது அழிய வேண்டும் என்று நினைகிறீர்களோ அதை கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும். அதுவோ விஷச் செடி. அதற்கு மழை நீரெல்லாம் தேவையாக இருக்காது. நாமேன் வெறுப்பு வெந்நீர் ஊற்றி வளர்க்கவேண்டும் - நாத்திகன் நாராயணன் இல்லை என்று கூறிக் கொண்டே வைகுண்டம் போன கதை போலருக்கு.
--வித்யா
///பார்பனர்கள் ஏன் அர்சகர் தொழிலை விட்டுத்தரமாட்டேன்கிறார்கள் ? இறைச் சேவையா ? பணம். பணம் ! எனக்கு தெரிந்து வருமானம் இல்லாத கோவில்களில் அர்சகர்களே கிடையாது.///
இல்லாத இறைவனை எதற்கு அர்ச்சிக்க விரும்ப வேண்டும்??
மற்றவர்கள்தான் பார்பனர்களை அர்ச்சித்து கொண்டுள்ளார்களே :))
-வித்யா
//
எனக்கு தெரிந்து வருமானம் இல்லாத கோவில்களில் அர்சகர்களே கிடையாது.
//
வருமானம் இல்லாத கோவில்களில் பக்தர்களே கிடையாது.
யாருமே இல்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆத்துரது ?
//
@சந்திரா
நீங்கள் சுட்டியிருக்கும் அகமது படேல் எழுதிய கட்டுரை விஷமத்தனமா இல்லை விஷமா?
//
சுத்தமான அப்பழுக்கற்ற அக்மார்க் விஷம்.
மேலும், அது அகமது படேல் அல்ல. ஆகார் படேல். எங்கோ இருந்து வீசப்படும் எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் ஒரு இந்து நாய் தான்.
அஹமது படேல் காங்கிரஸ் பெரும்புள்ளி, சோனியாவின் பின்னிருக்கும் சக்தி எனவும் சிலர் கூறுகிறார்கள்.
//இல்லாத இறைவனை எதற்கு அர்ச்சிக்க விரும்ப வேண்டும்?? //
பொழப்பு நடத்த வேண்டாமா!?
//நடுவில் ஆப்பு அப்படின்னு ஒரு பதிவர் (போலி பதிவர்) எல்லோருக்கும் கேவலமான பின்னூட்டங்கள் அனுப்பிக் கொண்டிருந்தார். யாரும் மதித்ததாகத் தெரியவில்லை. இப்போ காணோம் என்றே நினைக்கிறேன்.//
எனக்களித்த பதிலில் இது எந்த வகையில் சம்பந்தபட்டிருக்கிறது!?
ஆப்பு பதிவர்களை திருத்த வந்த மாதிரி நான் சாதி வெறியர்களையும், மத வெறியர்களை திருந்த வந்ததாக சொல்லி கொள்ளும் காமெடியும் என்று தானே!
நல்லாயிருக்கு உங்க டைமிங் சென்ஸ்!
உங்க சாதி உங்களுக்கு என்ன வகையில் பயனளிக்குதுன்னு ஒரே ஒரு பாயிண்ட் சொல்லிட்டிங்கன்னா, போங்கடா ஜாட்டான்னு நானும் போயிருவேன்!
//எது அழிய வேண்டும் என்று நினைகிறீர்களோ அதை கண்டுகொள்ளாமல் இருந்தாலே போதும். அதுவோ விஷச் செடி. அதற்கு மழை நீரெல்லாம் தேவையாக இருக்காது. நாமேன் வெறுப்பு வெந்நீர் ஊற்றி வளர்க்கவேண்டும் - நாத்திகன் நாராயணன் இல்லை என்று கூறிக் கொண்டே வைகுண்டம் போன கதை போலருக்கு.//
இதையும் சேர்த்தே படிக்கணும் வால் நண்பரே.உங்களை அல்ல.
நான் ஒப்பீடு செய்தது போலிப் பதிவரையும் ஜாதி என்ற விஷச் செடியையும்தான். :))
-வித்யா
//இந்தியாவுக்கு மட்டும் எந்த சனியன் வந்த நேரமோ தெரியல, இந்த சாதின்னு ஒன்னு இங்க தான் தலைவிரிச்சு ஆடுது! ஒருவேளை அது ஆயிரம் வருடம் கழித்தும் இருக்கலாம், நான் பிறக்காமல் இருந்திருந்தால், நான் தான் பிறந்துட்டேன்ல, பின்ன என்ன கவலை!
//
வால்பையன். ஒரு தகவலுக்காக. நீங்கள் ஆப்ரிக்காவில் பிறந்திருந்தால் அதற்கும் கவலைப்படவேண்டும். காரணம் அங்கேயும் ஜாதி உண்டு. இன்றைக்கு இந்தியாவில் உள்ளதை விட பல மடங்கு அதிகமான தீண்டாமை உள்ள இடங்களும் உண்டு.
///உங்க சாதி உங்களுக்கு என்ன வகையில் பயனளிக்குதுன்னு///
யாருக்கும் பயனில்லை. ஜாதி பற்றி எழுதினா, அன்னிக்கு மட்டும் நிறைய கும்மிகள் கிடைக்கும். நான், நீங்க, கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள், மீண்டும் சிந்திப்போம், சந்திப்போம், ஒரே சரக்காக இருந்தாலும், சரக்கே இல்லாது போனாலும், பழையதாக இருப்பதால், பழைய மொந்தையிலேயே எடுத்து ஊற்றி ஐயோ ஐயோ... உங்களோட பேசினாலே இப்படித்தான்.. :))
--வித்யா
அன்பின் வால்,
இல்லை, ஆமாம், இல்லை,
ஆமாம் அவை வெறும் கற்கள், ஆமாம்,
மீண்டும் இல்லையென கற்கள் வீசி
மலைபோலாகி விட்ட கடவுள்
இருக்கிறது மலை மட்டும், ஆமாம் இல்லை, ஆமாம் இல்லையா?
கடவுள் ஆமாம் இல்லை மதம்
மதம் ஆமாம் இல்லை கடவுள்
கடவுள் ஒன்றாம், மதம் பலவாம்,
மதம் ஒன்றாம், கடவுள் பலவாம்,
ஆமாம் இல்லையா? இல்லையா?
----
ஆமாம். சொல்லிட்டேன். (இனிமே பேசுவீங்க!!!)
---வித்யா
போங்கடா ஜாட்டான்னு சொல்றதுல டோண்டுசாரோடு போட்டிபோட்டுக் கொண்டு வால்பையன் கேட்டது:
/உங்க சாதி உங்களுக்கு என்ன வகையில் பயனளிக்குதுன்னு ஒரே ஒரு பாயிண்ட் சொல்லிட்டிங்கன்னா..../
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க வால்ஸ்!
சாதியை ஒழிக்கணும்னு உதார் விட்டுகிட்டே, நீ நம்ம சாதியான்னு, வா சங்கத்துக்குன்னு, சாதிவாரியாச் சங்கம் நடத்துறவங்க பொழைக்கறதுக்கு, சாதி பயன் படலையா?
ஆயிரம் உதை வாங்கிய ஆபூர்வ சிகாமனியாகறதுக்குன்னே, எஸ் வீ சேகர் தென்னிந்திய பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்புன்னு ஆரம்பிச்சுத் தமாஷ் காட்ட உதவலையா? போணி ஆகலைன்னதும் சைடுல அதிமுக நம்பர் டூன்னு அப்ளிகேஷன் போடறதுக்கும் சாதி உதவலையா?
இன்னும் நிறையச் சொல்லலாம்! இந்தியாவுல, சாத்திய வச்சுத் தான் நிறைய அரசியல் வியாதிகள் பொழப்ப ஓட்டிட்டிருக்கு!
@ விதூஷ்.....
சந்தடி சாக்கில என்னை ஆப்பரசன் நம்பர் டூன்னு சொல்லிடலைய:-))
எனக்குத் தெரிஞ்சு ஆப்பரசன் ஆபாசமால்லாம் பின்னூட்டம் போட்டதாத் தெரியலே.
நீயா நானான்னு இன்னிக்கு மோதிப் பாத்துடுவோம்னு சாரு-ஜெமோ கணக்கா அடிச்சிக்கிட்டிருந்த 'பிரபல' பதிவர்கள் ஆப்பரசன் வந்து பின்னூட்டம் போட்ட பிறகுதான் 'நீயும் நானும் ஒண்ணு தான்-ஜோடி சேந்து பாடலாம்' கணக்கா டூயேட் பாட ஆரம்பிச்சாங்கன்னு தான் தெரியும்!
வரலாறுன்னா வால்பையனுக்குக் கொஞ்சம் அலெர்ஜி! நீங்க வேற இப்படி திரிச்சுச் சொல்லாதீங்க:-))
//வஜ்ரா said...
//
எனக்கு தெரிந்து வருமானம் இல்லாத கோவில்களில் அர்சகர்களே கிடையாது.
//
வருமானம் இல்லாத கோவில்களில் பக்தர்களே கிடையாது.
யாருமே இல்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆத்துரது ?//
ம், அங்கே சாமியே இல்லைன்னு சொல்லாமல் விட்டிங்களே, உங்கள் ஆத்திக சிந்தனையை பாராட்டுகிறேன்.
காசு இருந்தால் தாசி வீடு திறக்கும் என்பது உங்களைப் போன்றோரின் கடவுள் பக்திக்கும் பொருந்தும் போல. வருமானம் இல்லாக் கோவிலை நாய் கூட திரும்பி பார்க்ககதா ? அவ்வ்வ்
கிருஷ்ணமூர்த்தி சார்!
நீங்கள் சொல்வதை பார்த்தால் சாதி ஏமாற்ற மட்டுமே உபயோகப்படுது போல!
நீங்கள் எந்த பக்கம்!
//வால்பையன். ஒரு தகவலுக்காக. நீங்கள் ஆப்ரிக்காவில் பிறந்திருந்தால் அதற்கும் கவலைப்படவேண்டும். காரணம் அங்கேயும் ஜாதி உண்டு. இன்றைக்கு இந்தியாவில் உள்ளதை விட பல மடங்கு அதிகமான தீண்டாமை உள்ள இடங்களும் உண்டு.//
அவர்கள் இனரீதியாக தங்களை பிரித்து கொண்டனர்! சாதி சண்டைய விட கொடுமைகள் நடக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்!
சாதி என்பது எப்படி தோன்றியது என்று தெரிந்துமே, ஆப்பிரிக்காவில் இருக்குன்னு சொல்றிங்களே! ஆப்பிரிக்காவில் யார் மனுதர்மம் எழுதி வைத்தது!?
//நான் ஒப்பீடு செய்தது போலிப் பதிவரையும் ஜாதி என்ற விஷச் செடியையும்தான். :))//
சாதி என்பது விஷச்செடி என்று சொன்னாலே போதுமே, நாம் ஒரே பக்கம் தான் என்று தெரிந்து விட்டதே!
//காசு இருந்தால் தாசி வீடு திறக்கும் என்பது உங்களைப் போன்றோரின் கடவுள் பக்திக்கும் பொருந்தும் போல. வருமானம் இல்லாக் கோவிலை நாய் கூட திரும்பி பார்க்ககதா ? அவ்வ்வ் //
சரியாத்தானே சொல்லியிருக்கிங்க!
யாராவது உரிமையோட,
என்னை படைச்சயுல அதோட விட்டுட்டா எப்படி, நானும் கார் பங்களான்னு எப்ப அனுபவிக்கிறது, உடனே எல்லாம் எனக்கு வேணும்னு கேக்க சொல்லுங்க!
சுதிபாடி, சூடம் ஏத்தி, தேங்காய் உடைச்சு, உண்டியல் கொள்ளையடிச்ச காசில் பங்கு போட்டு
இப்படி நிறைய லஞ்சம் கொடுத்து தானே கடவுளையே வழிக்கு கொண்டு வர வேண்டிருக்கிறது!
தாசிகள் கூட அதிக பணம் கொடுத்தால் தான் முழு உடைகளையும் கழட்டுவார்களாம்!
எனக்கு ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரியல!
/ஆப்பிரிக்காவில் யார் மனுதர்மம் எழுதி வைத்தது!?/
வால்பையனுக்கு வரப்போகும் கோபத்துக்குப் பயந்து கிருஷ்ணமூர்த்தி சொல்வது:
நான் இல்லே! நான் இல்லே!!
/நீங்கள் எந்த பக்கம்!/
பொண்ணுக்குக் கராத்தே, குங் பு எல்லாம் சொல்லிக் கொடுத்துவைத்திருக்கும் பெருமையில் [தைரியத்தில்?] இருப்பவர் பக்கம்!
இதுல சந்தேகம் வேறயா? உடம்பு தாங்காது:-))
@விதூஷ்
உங்களுக்கும் கராத்தே குங் பு தெரியுமா?பொண்ணு தர்ஷநிக்கும் சொல்லி வச்சிருக்கீங்களா?
/ஆமாம். சொல்லிட்டேன். (இனிமே பேசுவீங்க!!!)/ ன்னு கேட்டதும் எங்க வால்ஸ் சமாதானக் கொடி வீச ஆரம்பிச்சுட்டார்?!
:-))
//நாம் ஒரே பக்கம் தான் என்று தெரிந்து விட்டதே!//
இங்கே பின்னூட்டமிட்ட என் கவுஜக்கு எதிர் கவுஜ சொன்னா மட்டும் நாம ஒரே பக்கம்தான்னு ஒத்துக்கிறேன். மத்தபடி, கிருஷ்ணமூர்த்தி சார் எவ்வழி அவர் மகள் அவ்வழி. BTW, அவரும் என்னை அம்மா-ன்னுதான் கூப்பிடுவாரு :))
--வித்யா
this is one of worst article i have ever read in blogs..Please don't spread ur corrupt mind to others..
//இல்லை, ஆமாம், இல்லை,
ஆமாம் அவை வெறும் கற்கள், ஆமாம்,
மீண்டும் இல்லையென கற்கள் வீசி
மலைபோலாகி விட்ட கடவுள்
இருக்கிறது மலை மட்டும், ஆமாம் இல்லை, ஆமாம் இல்லையா?
கடவுள் ஆமாம் இல்லை மதம்
மதம் ஆமாம் இல்லை கடவுள்
கடவுள் ஒன்றாம், மதம் பலவாம்,
மதம் ஒன்றாம், கடவுள் பலவாம்,
ஆமாம் இல்லையா? இல்லையா?//
இதுக்கு எதிர்கவுஜ எழுத நான் ரெண்டு ஃபுல் அடிக்கணுமே!
:)) ஹா ஹா ஹா.... அப்ப சரி. அப்படியே செய்யுங்க. ததாஸ்து.
நாளைக்கு என் பதிவுல சரணாகதி தத்துவ கதாகாலட்சேபம் கேட்டு தெளிஞ்சுருவீங்க.
:))
--வித்யா
//
வருமானம் இல்லாக் கோவிலை நாய் கூட திரும்பி பார்க்ககதா ? அவ்வ்வ்
//
நான் சொல்லாத ஒன்றை ஏன் சொல்லியதாகப் பொய் எழுதுகிறீர்கள் ?
வருமானம் இல்லாத கோவில்களில் நாய் கூட திருப்பிப் பார்க்காது என்று நான் எப்ப சொன்னேன் ?
வருமானம் உள்ள கோவில்களில் மட்டுமா சாமி இருக்கிறது ?
எத்தனையோ கோவில்களில் பல அர்ச்சகர்ள் தலைமுறை தலைமுறையாக அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர், அதில் வருமானம் இருந்தாலும் இல்லை என்றாலும் அந்த அர்ச்சகர்கள் அங்கே தான் இருப்பார்கள். அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?
அர்ச்சகர்களின் (பிராமண மற்றும் பிராமணர் அல்லாதோர்) வருமானம் கோவில் அர்ச்சனையில் மட்டுமல்ல. புரோகிதம் செய்வதிலும் கூட கிடைக்கிறது. பல அர்ச்சகர்களின் முக்கிய தொழில் புரோகிதம், சைடில் செய்வது தான் அர்ச்சகர் வேலை.
//அர்ச்சகர்களின் (பிராமண மற்றும் பிராமணர் அல்லாதோர்) வருமானம் கோவில் அர்ச்சனையில் மட்டுமல்ல. புரோகிதம் செய்வதிலும் கூட கிடைக்கிறது. பல அர்ச்சகர்களின் முக்கிய தொழில் புரோகிதம், சைடில் செய்வது தான் அர்ச்சகர் வேலை. //
அதாவது கடவுளுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையில் புரோக்கராக இருப்பவர்கள் என்று தானே சொல்கிறீர்கள்!
Vidhoosh/விதூஷ் said...
///பார்பனர்கள் ஏன் அர்சகர் தொழிலை விட்டுத்தரமாட்டேன்கிறார்கள் ? இறைச் சேவையா ? பணம். பணம் ! எனக்கு தெரிந்து வருமானம் இல்லாத கோவில்களில் அர்சகர்களே கிடையாது.///
இல்லாத இறைவனை எதற்கு அர்ச்சிக்க விரும்ப வேண்டும்??
மற்றவர்கள்தான் பார்பனர்களை அர்ச்சித்து கொண்டுள்ளார்களே :))
-வித்யா
//
கடவுளை நம்பும் தாழ்த்தப்பட்டவன் ஏன் அர்ச்சகன் ஆகக்கூடாது.
///கடவுளை நம்பும் தாழ்த்தப்பட்டவன் ஏன் அர்ச்சகன் ஆகக்கூடாது.///
ரொம்ப மகிழ்ச்சிங்க. தாராளமாய் வாருங்களேன்.
தமிழ்நாட்டில் கோவில்களுக்கும், வேதபாட சாலைகளுக்கும் பஞ்சமே இல்லை. புரோதிதராக ஆள்தான் இல்லை.
மனு தர்மப்படி வேதம் கற்ற ஒவ்வொருவனும் பூசகராக/புரோதிதர்/அர்ச்சகராக தகுதி உள்ளவனாகிறான்.
அதென்ன வேதம் கற்றால் தான் புரோதிதர் ஆகணுமா? என்று கேட்டீர்கள் என்றால், civil engineering படித்தால் மட்டுமே தரமான பாலங்கள் கட்ட முடியும். இறைநிலையையும் பொது மனிதனையும் இணைக்கும் பாலம் தரமாக இருக்க வேண்டும் என்றால் வேதம் பயில வேண்டும். (வால்பையன் கவனிக்க - இறைவனை என்று நான் என்றுமே சொல்வதில்லை)
இன்றைக்கு கிட்டத்தட்ட 80% வேத பாட சாலைகள் இலவசமாகவே இயங்குகின்றன. ஏழு வயது முதல் இருபத்தொரு வயது வரை உள்ளவர்கள் அனைவருக்கும், உணவு,தங்குமிடம், பாடபுத்தகம், உடை, தண்ணீர் எல்லாமே இலவசம். ஆனாலும் கற்க மட்டும் ஆளே இல்லை.
ஆர்வம் இருந்தால், எந்த வயதிலும், யார் வேண்டுமானாலும் கற்கலாம். வருமானம் அதிகமா இல்லையா என்பதெல்லாம், குறிப்பிட்ட புரோதிதர் அந்த கோவிலின் positive vibration-னை எவ்வளவு தூரம் தன் மந்திரங்களால் உயர்த்துகிறார் என்பதிலேயே இருக்கிறது. உதாரணத்துக்கு, திருப்பதியில் மட்டும் ஏன் இவ்வளவு வருமானம்? முடிந்த போது, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் மற்றும் திருபள்ளி எழுச்சி மந்திரங்களின் தமிழாக்கங்களைப் படித்து பாருங்கள். எத்தனை நேரிடை, ஆக்க பூர்வமான வார்த்தைகளைக் கொண்டுள்ளது என்று. இப்போதெல்லாம் radio-mirchi-யில் கூட கார்த்தால நேரத்துல ஒளிபரப்புராங்களே.
இறைவனை கும்பிடவோ, ஆன்மிகம் வளர்க்கவோ அல்லது இந்து சமூகத்தை உயர்த்தவோ என்றெல்லாம் சிந்திக்காமல், தரமான கல்கியின் நாவல் ஒன்றை படிக்கிறா மாதிரியே படிச்சுப் பாருங்களேன்.
ஏன் வேதங்களை ஆன்மீகத்துக்கு மட்டும் என்று ஒதுக்கிறீர்கள் என்றும் புரியாமலேயே தவிக்கிறேன். அதில், நம்ம பெரியார் சொன்ன கருத்துக்களும் உள்ளது, சாரு, ஜெமோ, தி.ஜா. எல்லோரும் பேசுவது போன்ற கருத்துக்களும் உள்ளது.
--வித்யா
Post a Comment