இவ்வளவுதான் உலகம்
உலகநாதன் அவர்களது இப்பதிவைப் பார்த்ததும் எனக்கு கீழே உள்ள கதைதான் நினைவுக்கு வந்தது.
ஒரு பிச்சைக்காரன் வீடுவீடாக பிச்சை எடுப்பவன். அவனை எல்லோருமே திட்டித்தான் அனுப்புவார்கள். ஒரே ஒரு வீட்டின் குடும்பத் தலைவி மட்டும் அவனுக்கு அன்புடன் பிச்சை போடுவாள். அவனும் அவளை வாழ்த்திவிட்டுத்தான் போவான்.
அன்றும் அதே மாதிரித்தான் நடந்தது. எல்லா வீடுகளிலும் அவனை அடிக்காத குறையாக விரட்டினார்கள். மனம் கோபத்தில் மூழ்க இந்தப் பெண்மணி வீட்டுக்கு வந்தான். அவர் வெளியில் வந்து பிச்சை போட சற்றே தாமதமாயிற்று. கோபத்துடன் அவன் கத்தினான், “போடாத மகராஜிகள்தான் இன்னிக்கும் போடல்ல. எப்பவும் போடற முண்டை உனக்கு என்ன லேட்டு” என்று கத்தினானாம்.
இப்போ என்ன அவனிடம் ரமணமகரிஷி மாதிரி அப்பெண்மணி நடந்து கொள்ளவேண்டும் என்கிறீர்களா?
தவற்றுக்கு மேல் தவறு செய்யும் ஈழப்போராளிகள்
ஏற்கனவேயே நான் இன்னொரு தருணத்தில் கூறியதுதான். பிரபாகரன் உயிருடன் இருப்பதாகச் செய்யும் அலம்பல்கள் இலங்கை அரசுக்குத்தான் சாதகமானதாக இருக்கப் போகிறது. அப்படியே அவர் உயிருடன் இருந்தாலும் அதைச் சொல்லாமால் மறைப்பதே சமயோசிதமான காரியமாகும். ஆனால் யார் அவர்களுக்கு இதையெல்லாம் சொல்வது?
ஈழத்தமிழர்களது போராட்டம் யூதர்களது ஜியோனிசப் போராட்டமாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் செய்யும் செய்கைகள் எல்லாமே பி.எல்.ஓவைத்தான் நினைவுபடுத்துகின்றன. ஜியோனிச கோட்பாட்டின்படி யூதர்கள் செயல்பட்டபோது மிகவும் அடக்கியே வாசித்தார்கள். அவர்கள் நிலங்கள் வாங்கியது எல்லாமே பரம ரகசியங்களாக வைக்கப்பட்டன. அதுதான் சரியான முறை. விரோதிக்கு நமது செயல்பாடுகள் துல்லியமாகத் தெரியக்கூடாது என்பது போர் யுக்தியின் முதல் பாடம். அதுவே சமீபத்தில் 1982-ல் லெபனானிலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படதற்கு முக்கியக் காரணமே அந்த நாட்டின் அரசை டம்மியாக்கியதுதான்.
மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு ஸ்ரீலங்காவில் நடந்திருக்க வேண்டியது. அது எதிர்பாராத விதமாக இந்தியாவிலேயே நடந்தது. அப்போதும் முடிந்தவரை குண்டு வைத்த ஈழப்போராளிகள் பலமுறை டெலிஃபோன் செய்து பாதுகாப்புப் படையினரை எச்சரித்தனர். நம்மூர் தயிர்வடை அதிகாரிகள்தான் அதை அலட்சியம் செய்தனர். ஆனால் அதுவே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவை கொல்ல முயன்று பல அப்பாவிகளின் உயிர்களையும் மனசாட்சியேயில்லாது புலிகள் வேட்டையாடியதுதான் இந்திய மக்களுக்கு அவர்கள் மேல் வெறுப்பு வர முக்கியக் காரணமாக இருந்தது.
மொசாத்
இஸ்ரேலை பற்றி பேசும்போது மொசாத்தைக் குறிப்பிடாமல் இருக்க இயலாது. குமுதம் ரிப்போர்டரில் அவர்கள் பற்றிய தொடர் ஒன்று சுவாரசியமாகப் போகிறது. நீங்கள் எல்லோருமே பிபிசியின் எஸ் பிரைம் மினிஸ்டர் தொடருக்கான எபிசோடுகளை பார்த்திருப்பீர்கள். அதில் ஒன்றில் இங்கிலாந்துக்கான இஸ்ரவேல் தூதர் இங்கிலாந்து பிரதமருக்குக்கூட தெரியாத இங்கிலாந்தின் படை அணிவகுப்புகள் பற்றிக் கூறுவார். அவர் சொன்ன ஒரு தகவலை வைத்து பிரதம மந்திரி தலைமைச்செயலாள்ர் ஹம்ஃப்ரீயை டரியல் ஆக்குகிறார்.
இஸ்ரவேலருக்கு அதெல்லாம் எப்படித் தெரிந்ததாம்? எல்லாமே மொசாத்தின் கைங்கர்யமே.
சோவின் எங்கே பிராமணன்
தலைவர் சோ அவர்களது எங்கே பிராமணன் மீண்டும் வரும் 14-ஆம் தேதியன்று ஆரம்பிக்கிறது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ? முதல் எபிசோடுக்கு ரிவ்யூ முரளி மனோகர் தானே செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறான். பேசாமல் அத்தனை பதிவுகளையும் அவனே போட்டாலும் நன்றாகத்தானே இருக்கும்?
கல்கியின் இணைய சிறப்பிதழ்
அதை தயாரிக்கும் நேசமுடன் வெங்கடேஷ் என்னை அவ்விதழில் என் கட்டுரை வருவது பற்றி அடக்கி வாசிக்குமாறு கூறியதால் இதுவரை அமைதி காத்தேன். ஆனால் அவரே அதை ட்விட்டரில் தெரிவித்த நிலையில் நானும் அது பற்றி கோடி காட்டுவது தவறாக இருக்காது என நினைக்கிறேன்.
வரும் ஞாயிறன்று இதழ் கடைகளுக்கு வருகிறது. அதுவரைக்கும் நான் மேலே கூறியதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
16 hours ago
12 comments:
// நம்மூர் தயிர்வடை அதிகாரிகள்தான் அதை அலட்சியம் செய்தனர்.// Well said! The bag was checked in but was later found out that the passenger did not board the flight. The Officer who held custody of the bag thought it contained Gold and wanted to clear the passengers first and then take "hold" of the bag! When the Customs got calls about the bomb, the cops wanted to place it on the empty run way but since he didn't let them take it away, it exploded inside the airport and there was heavy casualty. My uncle's friend's brother - customs Officer in his mid 30's - was in the vicinity and had glass pieces struck to his body. The doctors couldn't remove all the glass pieces and today he still has minute pieces struck to his back.
@ரவிஷா
பையை வைத்து அழும்பு பண்ண அதிகாரி என்ன ஆனார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மீனம்பாக்கம் நிகழ்வை வைத்து எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அருமையான தொடர்கதை எழுதினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//@ரவிஷா
பையை வைத்து அழும்பு பண்ண அதிகாரி என்ன ஆனார்?// Torn into pieces.
மீனம்பாக்கம் மேட்டர் பற்றி சிறிது விளக்குங்களேன்...
6.சிறந்த சேமிப்பு வழி முறைகள் எவை?
7.தமிழா... இன உணர்வு கொள்! என்கின்றனரே... இது பற்றி?
8.கோவில் விழாக்களில், சாமி
யாடுதல்' என்று கூறி, சாராயம் குடித்து, குறி சொல்வது தமிழர் பழக்கம்; மற்ற மாநிலங்களில் எப்படி?
9.நாணம், பயிர்ப்பு, இவை எல்லாம்?
10.வெளி மாநிலத்தவர்கள், காஷ்மீரில் நிலம் வாங்கவோ, காஷ்மீரிகள்,வெளிமாநிலத்தாருக்கு விற்கவோ முடியாது என்பது பற்றி?
//அதை தயாரிக்கும் நேசமுடன் வெங்கடேஷ் என்னை அவ்விதழில் என் கட்டுரை வருவது பற்றி அடக்கி வாசிக்குமாறு கூறியதால் இதுவரை அமைதி காத்தேன். ஆனால் அவரே அதை ட்விட்டரில் தெரிவித்த நிலையில் நானும் அது பற்றி கோடி காட்டுவது தவறாக இருக்காது என நினைக்கிறேன்.
வரும் ஞாயிறன்று இதழ் கடைகளுக்கு வருகிறது. அதுவரைக்கும் நான் மேலே கூறியதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.//
பாராட்டுக்கள் டோண்டுஜி.
http://kgjawarlal.wordpress.com
///சோவின் எங்கே பிராமணன்
தலைவர் சோ அவர்களது எங்கே பிராமணன் மீண்டும் வரும் 14-ஆம் தேதியன்று ஆரம்பிக்கிறது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ?/// இதில் மகிழ்ச்சி என்ன வேண்டிக்கிடக்கிறது. பிராமணர்கள் இல்லை என்று சொல்வதற்கும், பிராமணர்கள் எல்லாம் கலப்புத்திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று புத்தி சொல்வதற்கும் ஒரு பிராமண நாடகம் தேவையில்லை. அதற்கு தி க வினரே போதும். என்னைப் பொறுத்தவரை தி க வினரின் வேலையைத் தான் சோ செய்கிறார். பிராமண வேஷம் போட்டுக் கொண்டு. ஏற்கனவே ப்ராமணப் பெண்களையும் அவர்தம் குடும்ப கலாச்சாரங்களையும் தமிழ் சினிமாவில் கடித்துக் காரி துப்பிக்கொண்டிருக்கிறார்கள். பிராமணப் பெண்கள் வேறு ஜாதி ஆண்களை மணப்பதையே நாகரீகமாகக் கருதிக்கொண்டு இருக்கிறார்கள். பிராமணப் ஆண்களுக்கு சொந்த ஜாதியில் பெண்ணேஇல்லை. இந்த லட்சனத்தில் அழிந்து வரும் ப்ராமண இனத்திற்கு உதவி செய்யாமல் பிராமணர்கள் இல்லை என்று கலப்பு மணம் செய்யுங்கள் என்றும் சொல்வதற்கு ஒரு பிராமண நாடகம் தேவையா என்றே தோன்றுகிறது.
Who is writing about Mossad in Kumudam Reporter ? PaRA ?
Eagerly looking forward to reading your piece in Kalki Dondu Sir.
DOndu Sir,
Its a good article in kumudam Reporter about Mossad (kannai Paar Siri), I remember you will be reading too....
Any idea about Enge Brahman II , I believe it hasn't been published by Mr.Cho like first part....
Looking forward
11.உலகில் டிவி' ரிமோட் மட்டும் கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்...என்னவாயிருக்கும்?
12.மயக்கும் விழிப்பேச்சில் வல்லவர்கள் ஆண்களா, பெண்களா?
13.வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் இந்தியர்களின் தற்போதைய நிலை எப்படி?
14.பசியால் ஒருவன் மாண்டு போவது போன்ற கொடுமைக்கு பொறுப்பு யார்?
15. ஊரை கலக்கும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டா?
மொஸாட் பற்றி அறிய ஆவலாயுள்ளோர் ஆனால் கால அவகாசம் போதாதவர்கள் பின்வரும் சினிமாக்களை பார்க்கலாம்.
1) A little drummer girl (1984)
2) Victory at Entabe/Operation )thunderbalt.(1976
3) Munich (2005)
Post a Comment