இப்பதிவை போடுவது முரளி மனோகர்
இரண்டாம் பகுதி வரப்போவதை சோ முன்கூட்டியே எச்சரித்து விட்டார், ரொம்ப நியாயஸ்தர். அவர் கூறியது குறித்தும், இரண்டாம் பகுதிக்கான தனது ஹேஷ்யங்களையும் கடைசி பதிவில் டோண்டு பெரிசு இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
துக்ளக் 29.07.2009 இதழ் கேள்வி பதிலிலிருந்து:
மல்லிகா அன்பழகன், சென்னை-78
கே: ஜெயா டிவியில் நன்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தங்களின் ‘எங்கே பிராமணன்’ - டி.வி. சீரியல், திடீரென முடிக்கப்பட்டது ஏன்? பலரும் பலவிதமாகப் பேசுகிறார்கள் என்பதால் கேட்கிறேன்.
ப: பலவிதமான பேச்சுக்களை நம்ப வேண்டாம். கதையை முடிக்கிற கட்டம் வந்தது என்று நாங்கள் (நான், டைரக்டர், தயாரிப்பாளர்) நினைத்ததால், முடித்தோம். ஜெயா டிவியினரே, தொடர், விரைவில் முடிவதை விரும்பவில்லை. அதனால்தான், இப்போது, அந்தத் தொடருக்கு ஒரு தொடர்ச்சியை - அல்லது இரண்டாம் பாகத்தை - உருவாக்க முடியுமா என்பது பற்றி நான், டைரக்டர் வெங்கட், தயாரிப்பாளர் சுந்தரம் - ஆகிய மூவரும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். தீவட்டிக் கொள்ளைக்காரன் மாதிரி, முன்கூட்டியே எச்சரித்து விட்டேன்; தொடர் மீண்டும் தொடர்கிறதே என்று நீங்கள் புகார் கூறினால், அதில் நியாயம் இருக்காது.
நான் இந்த சீரியலின் கடைசி பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தேன்:
சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.
சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்.
வர்ண ரீதியான பிராமணனை தேட அசோக்கால் முடியாமல் போன நிலையில், அம்மாதிரியான தேடலே அவசியமா என்பதுதான் எனது மனதில் எழுந்துள்ள இப்போதைய கேள்வி.
அதே சமயம், “அசோக் தேடிய ரேஞ்சுக்கு உண்மையான, வர்ணரீதியான பிராமணன் இப்போது இல்லை என்பது நிலைநிறுத்தப்பட்டாலும், அதை அடையும் பாதையில் இருப்பதாக நான் சாரியார், சாம்பு சாஸ்திரிகள், மற்றும் சிகாமணியை அடையாளம் காண்கிறேன்” என்றும் நான் சீரியலின் கடைசி பகுதிக்கான ரிவ்யூவில் எழுதியிருந்தேன். ஒரு வேளை இந்த சீரியலின் இரண்டாம் பகுதியில் இது சம்பந்தமாக ஏதேனும் சொல்லப் போகிறார்களா என்பதை அறிய நானும் ஆவலுடன் இருக்கிறேன்.
அதாவது, வர்ணரீதியான பிராமணன் என்னும் ஆதரிச நிலையை 100% அடைய முடியாவிடினும், அதை அடையும் முயற்சியில் யாராவது இருக்கிறார்களா என்பதையாவது பார்க்கலாம் அல்லவா? புத்தகமும் சரி சீரியலும் சரி நிறுத்தப்பட்ட இடம் முடிவான இடமா அல்லது வெறும் திருப்பு முனையா என்பதையும் இந்த எக்ஸ்டென்ஷன் - அது நிஜமாகவே வரும் பட்சத்தில் - ஆராயுமோ?
அசோக்கின் இந்த முயற்சியில் மாஜி நாத்திகர் நீலகண்டன் ஏதேனும் பங்கு வகிப்பாரா? சாம்பு சாஸ்திரிகள் முயற்சியில் வேத பாடசாலை நன்கு உருவானதா? இம்மாதிரி பல கேள்விகள் எனது மனதில் உள்ளன. மேலும் சாம்பு சாஸ்திரிகள், பிரியா, உமா, பாகவதர், சிகாமணி, சாரியார் ஆகியோரையும் பார்க்க மனம் விழைகிறது.
எது எப்படியாயினும் சோ அவர்கள் நினைப்பதுதான் நடக்கப் போகிறது.
ஏதோ நம்மால் ஆனது மீண்டும் ரிவ்யூக்கள் போடுவதே. அதுவும் முரளி மனோகர் முதல் பகுதிக்கு தான்தான் ரிவ்யூ போட வேண்டும் என அடம் பிடிக்கிறான். இது வால்பையனுக்கு நான் தரும் முன் தகவல் மட்டுமே.
ஆக டோண்டுவும் நியாயஸ்தர்தான். நான் முதல் பதிவு போடப் போவதை முன்னாலேயே சொல்லிவிட்டது.
முதல் எபிசோட் (14.12.2009)
அதை இங்கே பார்க்கலாம்
இங்கேயும் பார்க்கலாம்.
இந்த எபிசோடை பொருத்தவரை இரண்டாம் சுட்டிதான் உத்தமம். முதல் சுட்டி பாதியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.
நாதனும் வசுமத்யும் தெருவில் துக்ளக் அலுவலகத்தை தேடி கண்டுபிடிக்கின்றனர். அதைப் பார்த்ததுமே பெரிசு நிமிர்ந்து உட்கார்ந்தது. சட்டென நான் அதை அடக்கினேன். “பெரிசு, நீ என்ன சொல்லப் போறேன்னு தெரியும். ஏன்னாக்க நீ வேறே நான் வேறே இல்லை. சமீபத்துல 1972-ல் பம்பாய் ஷண்முகாநந்தா ஹாலில் நடந்த சோவின் சரஸ்வதியின் சபதம் நாடகத்தில் வரும் காட்சியைத்தானே சொல்ல நினைச்சே. அதையும் நானே எழுதிகிறேன். பேசாம அமரும்” எனச் சொன்னதும்தான் அது அடங்கிற்று.
ஆம், உணமைதான். சோ எழுதிய சரஸ்வதியின் சபதம் நாடகத்தில் கதைக்குள் கதை வருகிறது. அதில் சோ ஒரு திரைக்கதாசிரியர். தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோரது ஆணைக்கேற்ப கதையை மாற்றிக் கொண்டே போய், அக்காட்சிகளும் கட்டப்படுகின்றன. அபத்தமாக கதை போவதை பொறுக்காமல் நாரதர் கலைவாணியிடம் முறையிட, அவர் சோவுக்கு தண்டனையாக அவரது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து அவரை டரியல் ஆக்கியதாக கதை போகிறது.
அதைத்தான் இங்கு பெரிசு கூற எண்ணியது. ஆனால் எனது பதிவுக்குள் அது வருவதாவது. கூடவே கூடாது எனத் தடுத்து விட்டேன்.
சோவின் அலுவலகத்துக்குள் வந்த வசுமதியும் நாதனும் தங்களை அறிமுகப்படுத்திக் கொல்ள, சோ வியப்படைகிறார். அவர்களது பிரச்சினை என்ன எனக் கேட்க வசுமதி கடற்கரைக்கு போன தங்கள் மகன் காணவில்லை, அவனைக் கண்டுபிடித்து தங்களிடம் சோ ஒப்படைக்க வேண்டியது என டிமாண்ட் செய்கிறாள். அசோக்கை சாதாரண பையனாக இல்லாமல் ஏன் அவனை இவ்வளவு அமானுஷ்யமாக சிருஷ்டி செய்தார் எனவும் கேட்கிறாள்.
அதற்குள் நீலகண்டனும் சாம்பு சாஸ்திரிகளும் உள்ளே வந்து இன்னும் குட்டையை குழப்புகிறார்கள். “நான் பாட்டுக்கு ஏதோ உபாத்தியாயம் செய்து பிழைத்து கொண்டிருந்தேன், என்னையே நான் பிராமணனா என யோசிக்க வைத்து விட்டீர்களே” என சாம்பு குற்றம் சாட்ட, நாத்திகனான தன்னை இப்படி பயங்கரமான ஆத்திகனா மாத்தினதும் பிரச்சினையாகி விட்டது என நீலகண்டன் புலம்புகிறார்.
பாகவதர், சாரியார் எல்லாம் பின்னால் வருகிறார்கள், கூடவே ரௌடி சிங்காரமும் வருகிறான் என நீலகண்டன் கூற, சோ பயந்து அலறி, தன் கனவிலிருந்து விழித்து கொள்கிறார். எதிரில் அமர்ந்திருக்கும் தனது ப்ரொட்யூசர் நண்பரிடம் இக்கனவு பற்றிக் கூற, அவரும் தன் பங்குக்கு சோவிடம் அவருக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் எனக் கூறி வெறுப்பேற்றுகிறார். பேசாமல் எங்கே பிராமணன் பார்ட் 2 எடுக்கலாம் என ஆலோசனை கூறுகிறார்.
”கதைக்கு தந்த இரு முடிவுகளில் இரண்டாவது முடிவு சிவபெருமானே பிராமணராக வந்து அசோக்கை ஆட்கொண்டு அழைத்து செல்வதாகும். அதை ஒதுக்கி விட்டு, கடற்கரை செல்லும் அசோக்கை திரும்பக் கொணர்வது என சோ கூற நண்பரும் குழந்தைபோல குதூகலித்து ஆமோதிக்கிறார்.
கைலாயத்தில் நாரதர் சிவபெருமானிடம் வசிஷ்டர் இல்லாத கைலாயம் நன்றாகவே இல்லை எனக்கூறி, அவரை திரும்ப கொணர்வதற்காக ஈசன் அருள் புரிய வேண்டுகிறார். அவரும் அதை ஏற்று அதற்கான உபாயம் யோசித்து வைத்திருப்பதாகவும், அதை நாரதர் அசோக்குக்கு தெரியப்படுத்தவேண்டும் எனக்கூறுகிறார்.
கடற்கரையில் அசோக்கை நாரதர் ஒரு சித்தர் வேடத்தில் சந்தித்து அவன் பிரச்சினை பற்றி கேட்க, அவனும் உண்மையான பிராமணனை தான் தேடுவதாகவும் அவர் தனக்கு கிட்டவில்லை எனவும் வருத்தத்துடன் கூறுகிறான். வெளியில் பிராமணனைத் தேடுவதை விட அசோக் தனக்குள்ளேயே உண்மையான பிராமணனை தேட வேண்டும், தேவையானால் அவனை தனக்குள்ளிருந்தே உருவாக்க வேண்டும் எனக்கூறுகிறார்.
நாதன் வீட்டில் சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து அவரிடம் விடைபெறுகிறார். அவருக்கு தர வேண்டீய தட்சணையை வசுமதி அப்படியே ரூபாயாகக் கொடுக்க, அதை ஒரு உறைக்குள் வைத்துத் தருவதுதான் மரியாதை எனக்கூறி நாதன் ஒரு உறையை வரவழைத்து அதில் போட்டுத் தருகிறார். பிறகு அவரே சாம்பு சாஸ்திரிகளை தனது காரில் அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, வசுமதி பொருமுகிறாள். சாம்பு பற்றி நிஷ்டூர தொனியில் வேறு பேசுகிறாள்.
சோவின் நண்பர் இப்பெண்மணி ஏன் இவ்வாறு பேசுகிறாள் எனக் கேட்க, பல வீடுகளில் இது நடப்பதுதான் என சோ கூறுகிறார். புரோகிதர், உபாத்தியாயர், குரு, ஆச்சார்யன் ஆகியோரிடையே உள்ள வேறுபாடுகளை விளக்குகிறார்.
எங்கே பிராமணன் பார்ட் 2 ஜெயா டிவில்யில் திங்கள் முதல் வியாழன் வரை (நான்கு நாட்கள்) இரவு எட்டு மணி முதல் 08.30 வரை ஒளிபரப்பாகிறது.
அன்புடன்,
முரளி மனோகர்
வரலாற்றை நேர்மையாகக் கற்பது…
-
வரலாறு இந்தியாவில் மிக அதிகமாகப்பேசப்படும் விஷயம், ஆனால் மிகமிகக் குறைவாகக்
கற்கப்படுவதும்கூட. நாம் வரலாற்றை நம் இன,மொழி, மத மேட்டிமைவாதத்திற்காக
மட்டுமே க...
8 hours ago
11 comments:
என்ன வர்ணம் அடித்தால் வர்ணரீதியான பிராமணன் கிடைப்பான்!?
Thanks a lot Dondu Sir. Continue your good work.
சுட்டிக்கு மிக்க நன்றி ராகவன் அவர்களே. உங்கள் ரிவ்யூவை நான் முதல் பாகத்திலும் படித்ததுண்டு. இப்போதும் படிக்க ஆவலாய் உள்ளேன்.
இரண்டாம் பாகம் பற்றிய என்னுடைய அன்றன்றைய synopsis இன்னும் ஓரிரு நாட்களில் என் வலைப்பதிவிலும் மேலும் முன்பே நான் எழுதி வந்த வலைதளத்திலும் பதிக்க உள்ளேன்.
தினமும் எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
அன்புடன்,
ஷக்தி
இனி முரளி மனோஹர் காட்டில் அடை மழை.
சங்கர்லால்.
இவைகளுக்கு உங்கள்( ஸ்பெஷல்)சூப்பர் கமெண்ட்?
1.பெண்கள் அசைக்க முடியாத சக்தி: மு.க.ஸ்டாலின் -அப்போம் ஜெயலலிதா!
2.கூட்டணி வைப்பேன்: விஜயகாந்த்-அதிமுகவுடனா?
3.திரைப்படத் தொழிலாளர் நலவாரியம் அமைப்பு: முதல்வர் கருணாநிதி-பாசம்ன்னா இதுதான்
4.வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்?-இது ஓவெராயில்லை
5.வேடிக்கை பார்க்கும் அமைப்புதான் தேர்தல் ஆணையம்: ராமதாஸ்-நெசமாலுங்களா!
6.நெல்லை விடுதிகளில் போலீஸôர் திடீர் சோதனை: ரூ. 41 லட்சம் பறிமுதல்; அதிமுகவினரிடம் விசாரணை-பழி ஒரிடம் பாவம் !
7.பாடாய் படுத்தும் ஏ.டி.எம்.கள்-மெசினை நம்பினோர்...
8.ஆலங்குடியில் குருப் பெயர்ச்சி வழிபாடு-நல்ல அறுவடை சாமிகளுக்கு !
9.தமிழகத்தை பிரிக்கும் கோரிக்கைக்கு "இந்துமுன்னணி' எதிர்ப்பு-அப்படி போடு அறுவாளை!
10.திருவண்ணாமலை நகைக் கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு -கணக்கு இருக்கா!
///Your Blogs URL: http://tamil498a.blogspot.com
Browser(s) used: Firefox
Location: India
My blog at the above URL has been suddenly disabled as "spam". It is a genuine blog in Tamil language of India. It doesn't contain any spam links. The blog has Adsense ads. The only external link that I have placed is a link to a Digg-like voting site with the URL http://tamilish.com/. If that causes the problem, or any other link that I had inadvertantly added, please give me a chance to remove them. No intentional link spam has been added by me.
Also I do not have any backup of the blog too.
Please rectivate it and oblige.
Thanks
S.K///
இப்படி ஒரு ப்ளாக் ஸ்பேம் ஆவதற்கு என்ன காரணம்? முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எப்படி மேற்கொள்ளலாம்? தமிழ்498a காரரின் மனது எவ்வளவு வருத்தப்படும்?
இல்லாத பிராமணனைத் தேடுவதாக ரொம்பவும் சிலர் கவலைப்படுகிறார்களே ? அதைப்பற்றி எதுவும் நீங்கள் சொல்லவில்லையா ?
@வஜ்ரா
கவலைப்படுகிறவர்கள் அதை செய்யாது நிறுத்தச் செய்யும் செய்தி முதல் எபிசோடிலேயே வந்து விட்டதே. அதை அவங்க கேக்கலைன்னுன் நினைக்கிறேன்.
வர்ண ரீதியான பிராமணன் தற்காலத்தில் இல்லை என்பதை சோ தெளிவுபடவே புத்தகத்திலும் கூறிவிட்டார், எங்கே பிராமணன் தொடரின் முதல் பகுதியிலும் கூறி விட்டார்.
இரண்டாம் பகுதியின் முதல் எபிசோடில் நாரதர் சாமியார் வேடத்தில் வந்து அசோக்கிடம் பேசுகிறாரே. பிராமணனை அசோக் தனக்குள்ளேயே தேட வேண்டும். தேவையானால் உருவாக்க வேண்டும்.
வசிஷ்டரான அசோக்கால் அது முடியாது என்கிறீர்களா? அப்படி உருவாகும் பிராமணன் தற்காலத்தவரால் எவ்வாறு நோக்கப்படுவான், அவனுக்கு வரும் இன்னல்கள் என்னென்ன, அவனுக்கு உதவப்போவது யார் யார் என்பதெல்லாம்தான் இரண்டாம் பகுதியில் வரும் என நம்புகிறேன்.
காத்திருந்து பார்ப்போமே, என்ன நான் சொல்லுவது?
மற்றப்படி, சோவின் இந்த அற்புத சீரியல் பற்றி என்னால் ஆன விஷயங்களை எழுத எண்ணியுள்ள நானா ஜெலூசில் பேர்வழிகள் போடும் உபயோகமற்ற பதிவுக்கெல்லாம் போவேன்?
ரொம்பவே கஷ்டமான காலம்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Brothers Mr. Vajra, Mr. Dondu, & other Brothers,
For the ready reference of all Brothers, I have quoted the comments which was posted by me on Koottanchoru blog.
//இங்கே பிராமணர்கள், என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்களே, இங்கே யார் பிராமணர்? எப்படி இவர்கள் பிராமணர்கள்?
//“அந்தணர் என்பர் அறவோர், மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”//
எல்லோருக்கும் நல்லது நினைக்கும் மனது இருக்கிறதா?
அத்வேஷ்டா (வெறுப்பிலாமல்),சர்வ பூதானம் மைத்ர (எல்லா உயிர்களிடமும் சிநேகமாக),கருண ஏவ ச (கருணையுடன் )”நிர்மமோ நிரஹங்கார (அகந்தையும், திமிரும் இல்லாதவனாக)ய மத் பக்த: ஸ மே ப்ரிய (எவன் என்னிடம் பக்தி உள்ளவனாக இருக்கிறானோ அவனே எனக்கு விருப்பமானவன்) ”
மனதிலே கருணை இருக்கிறதா?
எல்லோரையும் போல காலையிலே இட்டிலி , பொங்கல் தின்று விட்டு வேலைக்கு ஓடுகிறீர்கள். மாலையில் வீட்டில் வந்து அடைகிறீர்கள்.
உங்களுக்கும் மற்றவருக்கும் கிஞ்சித்தாவது வித்யாசம் உண்டா?
ஆன்மீக அறிவாவது இருக்கிறதா?
இன்றைக்கு இருக்கும் “பிராமணர்க”ளுக்கு, யார் சரியான ஆன்மீக வாதி என்று கண்டு பிடிக்கும் அளவுக்கு கூட ஆன்மீக அறிவும் கிடையாது, அதப் பற்றி அக்கரையும் இல்லை. இவர்கல் மதிப்பது, பணத்தை, பட்சணத்தை, பதவியை தான்.
//ஆனால் இங்கே இப்போது வாழாத, இல்லாத பிராமணர் பற்றி, உங்கள் கட்டுரையில் நீங்கள் ஏன் சம்பந்தமேயில்லாமல் பேசுகிறீர்கள் என்று கேட்கிறேன். நீங்கள் எல்லாம் பிராமணர் , பிராமணர் என்று
சம்பந்தமே இல்லாமல் சொல்லிக் கொள்வது ஏன்?
பிராமணன் என்பது ஒரு Specie இருந்து,it became extinct now. இப்போது இங்கே யாருமே பிராமணர் இல்லை.
காசுக்காக அலைபவன், காசு சேர்ப்பது இந்த
உலக வாழக்கையில் இன்பம் அனுபவிப்பது என
இருப்பவர்கள் எப்படி பிராமணன் ஆக முடியும்?
மக்களின் நன்மைக்கு உழைக்காத சுயநலவாதி எப்படி பிராமணன் ஆக முடியும்?//
We will publish articles on Poonool, Ritulas.... etc on the below referred blog.
http://thiruchchikkaaran.wordpress.com/
Thanks.
கனம் டோண்டு சார் அவர்களே, நாங்கள் மஹா கனம் பொருந்திய சோ அவர்களைப் போல
"எங்கே பிராமணன்?" என்று கட்டுரை எழுதி, எபிசோடு செய்து கோடிகளைக் குவித்தும் ,
ஒரு புறம் கருணாநிதியை திட்டிக் கொண்டே, இன்னொறு புறம் அவருக்கு வயதாகி விட்டதால் அவரை கலைங்கர் என்று
அழைக்கலாம் என்று சர்டிபிகேட் கொடுத்துக் கொண்டும், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன், முதல் ஆளாக சென்று பார்த்து அவருக்கு வாழத்து சொல்லி இன்டைரெக்ட் ஜால்ரா போடுவதுமாக இல்லாமல்
நாங்கள் மக்களின் நன்மைக்கு ஆக எழுதுகிறோம். எங்களை நீங்கள் புறக்கணியுங்கள்,
ஆனால் "சர்வ பூதானாம் மைத்ர" என்ற கொள்கையின் அடிப்படையிலே எவ்வுயிர்க்கும் நன்மை நினைக்கும் பிராமணர்கள் எல்லா பிரிவு மக்களிடம் இருந்தும் தோன்றுவார்கள்.
அப்போது வெறுமனே தங்களை பிராமணாள் என்று நினைத்துக் கொண்டு அவ்வாறே அழைத்துக் கொண்டும் இருப்பவர்களுக்கு என்ன புதிய பெயர் வைக்கலாம் என்று யோசித்து வையுங்கள்.
கனம் டோண்டு சார் அவர்களே,
டயம் இருந்தா இதைக் கொஞ்சம் பாருங்கோ!
//மஹா கனம் பொருந்திய ஸ்ரீமான் சோதான் புதிய ஜகத் குருவா?//
http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/17/is-cho-the-jagath-kuru-now/
Post a Comment