எபிசோட் - 7 (23.12.2009) சுட்டி - 1 மற்றும் சுட்டி - 2
சென்னைக்கு மாற்றல் பெற்று தன் பெற்றோருடன் ஒரே வீட்டில் இருக்கும் மகிழ்ச்சியில் பாகவதரின் மூத்த மகன் சிவராமன். அந்த உற்சாகம் சிறிதும் இல்லாத அவன் மனைவி ராஜி இருவரும் தங்கள் தனியறையில் அமர்ந்து பேசுகின்றனர். இந்த மாற்றம் பெறுவதற்காக தங்களில் ஒவ்வொருவரும் எவ்வளவு பேரைப் பார்த்து முகஸ்துதி எல்லாம் செய்ய வேண்டியிருந்தது என அவரவர் பேசுகின்றனர்.
கடவுளுக்கே கூட முகஸ்துதி தேவைப்படுகிறது என சிவராமன் குறிப்பிடுகிறான். உனக்கு நான் இதை செய்கிறேன், எனக்கு நீ அதைச் செய் என கடவுளிடம் டிமாண்ட் செய்யும் பக்தனை பற்றியும் சிவராமன் கூறுகிறான்.
“ஏன் சார் வேண்டிக் கொள்வது கேவலமா இல்லையா” என சோவின் நண்பர் கேட்கிறார். “கிடையவே கிடையாது” என சோ திட்டவட்டமாக மறுக்கிறார். மேலும் கூறுகிறார், “பக்தன் உங்களையோ என்னையோ கேட்கவில்லையே. கடவுளிடம் தனக்கு உரிமை இருப்பதாக நம்புகிறான். அவ்வாறே கேட்கிறான். கீதையிலேயே பகவான் தன்னை வணங்கும் பக்தர்களில் நால்வகையினரை அடையாளம் காண்கிறார். முதல் வகையினர் துயரத்தில் மூழ்கியவர்கள், இரண்டாம் வகையினர் ஒருவித தேடலில் ஈடுபடுபவர்கள், மூன்றாம் வகையினர் பொருட்களில் ஆசையுடையவர்கள், நான்காம் வகையினர் ஞானிகள்”. ஒவ்வொரு வகைக்கும் உதாரணமும் தருகிறார்.
அப்படியானால் நால்வகையினரும் ஒன்றுதானா என நண்பர் கேட்க, அவர்கள் நால்வருமே உயர்ந்த நிலையில் இருப்பவர்களே. ஞானிதான் தனக்கு மிக அருகாமையில் இருப்பதாக கடவுள் கூறினாலும் அவர் நால்வகையினரையும் சமமாகவே நடத்துகிறார் என சோ அவர்கள் பதில் தருகிறார்.
தான் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் ஆசையில் சென்னைக்கு வரவில்லை என்றும், இங்கு கூட்டுக் குடும்பத்தில் அந்தரங்கம் இல்லை என ராஜி கூற, தாம் இருவரும் அதிக நேரம் அலுவலகத்திலேயே கழிப்பதாகவும், வீட்டிலும் இந்த அறைக்குள் வந்து கதவை ஆத்திக் கொண்டால் அந்தரங்கம் தானாகவே வந்து விடுகிறது என சிவராமன் அவளுக்கு எடுத்துரைக்கிறான். அதற்குள்ளாக அவன் தம்பி வெளியிலிருந்து கதவைத் தட்டி, டிவியில் ராமலீலா படம் போடுவதாகவும், சிவராமனும் ராஜியும் வெளியில் வந்து எல்லோருடனும் சேர்ந்து டிவி பார்க்குமாறு அப்பா கூறுவதாக சொல்கிறான். ராஜி சிவராமனை எகத்தாளமாகப் பார்த்து, இதுதானா ப்ரைவசி என நொடிக்கிறாள்.
அசோக் வீட்டில் சமையற்கார மாமி அவனுக்கு உணவு பரிமாறுகிறாள். நடந்து முடிந்த உமாவின் சிமந்தம் பற்றி அவள் பேசிக்கொண்டே அசோக்குக்கு உணவு பரிமாறுகிறாள். அசோக் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான். அவனையே உண்மையான வர்ணரீதியான பிராமணனாக மாறுமாறு வேம்பு சாஸ்திரி அவனுக்கு சவால் விட்ட சொற்கள் திரும்பத் திரும்ப அவன் காதுகளில் ஒலிக்கின்றன. இதற்குள் ஃபோன் வர சமையற்கார மாமி அதை எடுக்கிறாள். பர்வதம் பேசுகிறாள். அவளிடம் மாமி சீமந்தம் நடந்தது பற்றி விசாரிக்கிறாள். நாதனும் வசுமதியும் அடுத்த நாள் காலை 7 மணி ஃப்ளைட்டில் வருவதாக கூற, பர்வதம் தான் அடுத்த நாள் காலை 10 மணிக்கு அங்கு வருவதாக கூறுகிறாள். இதற்குள் அசோக் சாப்பிட்டுவிட்டு கைகழுவுகிறான். மாமியிடம் அனேகமாக அந்தச் சாப்பாடுதான் அவன் தன் வீட்டில் மாமி கையால் பரிமாறப்பட்டு தான் சாப்பிடும் கடைசி சாப்பாடு என்று கூற மாமி ஒன்றும் புரியாமல் திகைக்கிறாள்.
அடுத்த நாள் காலை நாதனும் வசுமதியும் திரும்பும்போது அசோக் வீட்டில் இல்லை. நாதனும் வசுமதியும் அதனால் கோபப்படுகின்றனர். அதற்குள் அசோக்கிடமிருந்து ஃபோன் வருகிறது. தான் திருவண்ணாமலையில் இருப்பதாகவும், வருவதற்கு சில வாரங்கள் ஆகும் என்றும் கூறுகிறான். திருவண்ணாமலையில் அவன் எங்கு தங்கியிருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை.
வசுமதி அசோக் எங்குதான் இருக்கிறான் என கேள்வி கேட்க, சித்தன் போக்கு சிவன் போக்கு போல அசோக் என்ன செய்வான் என்பதை யாருமே கண்டறிய இயலாது என நாதன் அலுத்துக் கொள்கிறார்.
“இந்த சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதை நான் பல முறை கேட்டிருக்கிறேன், அதன் பொருள் என்ன”, என்று சோவின் நண்பர் கேட்கிறார். சோ அவர்கள் சித்தர்களை பற்றி விளக்குகிறார். அவர்களது சித்திகள் பற்றியும் பேசுகிறார். ஆனால் அவ்வாறான சித்திகளுடன் திருப்தியடையாது சித்தர்கள் கடவுளைத் தேடுவதையும் விடுவதில்லை. அவ்வாறு செய்யாது சித்திகள்லிலேயே ஆழ்ந்து போனால் அவர்கள் வெறும் மந்திரவாதிகளே என சோ கூறுகிறார்.
“நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே” என்று கூட ஒரு சித்தர் பாடியிருக்கிறாரே, அதுதான் பகுத்தறிவு என சிலாகிக்கிறார் சோவின் நண்பர். அதைச் சொன்னவர் சிவவாக்கியர் என்னும் சித்தர் எனக்கூறி முழுப்பாடலையும் சோ அவர்கள் சொல்கிறார்.
“நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”?
அதாவது கடவுள் உள்ளேயே இருக்கிறார், அவரைத் தேடுதல்தான் முன்னுரிமை பெற வேண்டும் என சிவவாக்கியர் கூறுகிறார், மற்றப்படி ‘பகுத்தறிவுவாதிகள்’ என தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் சொல்வது போன்று கடவுள் இல்லவே இல்லை என்ற நாத்திகவாதமாக அதைக் கொள்ளலாகாது என்வும் சோ அவர்கள் விளக்குகிறார்.
நாதன் வசுமதியிடம் எப்படியும் அசோக் திரும்ப வருவான். சில வாரங்கள் பொறுத்திருத்து பார்க்கலாம் எனக் கூறுகிறார்.
ஏழு வாரங்கள் கழிந்து ஒரு நாள். நாதன் வீட்டில் அவர், வசுமதி, நீலகண்டன் மற்றும் பாகவதர் அமர்ந்திருக்கின்றனர். பாகவதர் தன்னுடன் சில நாட்களுக்கு முன்னால் அசோக் ஃபோனில் பேசியதாகவும் தான் சிதம்பரத்தில் இருப்பதாகக் கூறியதாகவும், ஆகவே நாதன் கவலைப்படவேண்டாம் என்பதைச் சொல்லவே தான் வந்ததாகக் கூறுகிறார். நீலகண்டனும் தன்னுடனும் அசோக் பேசியதிக் கூறுகிறார். நாதனும் அதே அனுபவத்தைக் கூறுகிறார். அவன் தற்சமயம் எங்கிருக்கிறான் என்பதில் எல்லோரும் குழப்பமாக இருக்கிறார்கள்.
அசோக் தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறான்.
(தேடுவோம்)
எபிசோட் - 8 (24.12.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் வீட்டுக்குள் பிரவேசிக்கிறான் வேட்டி, மேல் துண்டு, குடுமி சகிதமாக. சமையற்கார மாமி திகைக்கிறாள். உள்ளே நாதன், வசுமதி, பாகவதர், நீலகண்டன் ஆகியோரிடம் அசோக் வந்தது பற்றிக் கூற எல்லோரும் வெளியே ஓடி வருகின்றனர். அசோக்கைப் பார்த்து பிரமித்து நிற்கின்றனர் எனக்கூறுவது ஒருவிதமான understatement-ஆகத்தான் இருக்கும்.
இது என்ன வேஷம் என நாதனும் வசுமதியும் சீற மற்ற இருவரும் பிரமித்து நிற்கின்றனர். தப்பாக தான் எதுவும் பண்ணவில்லையே, குடுமிதானே வைத்துக் கொண்டிருக்கிறேன் என அசோக் திரும்பக் கேட்கிறான்.தான் எழுதப்போகும் பரிட்சைக்கு இது ஒரு பிள்ளையார் சுழி என்று வேறு கூறுகிறான். பாகவதராலேயே அசோக் செய்ததை ஜீரணிக்க முடியவில்லை. வர்ணரீதியான பிராமணனாக தான் வாழப்போவதாக கூறி அசோக் மற்றவர்களுக்கு மேலும் கிலி ஊட்டுகிறான்.
அதுக்கு எதுக்காக குடுமி தேவை என சோவின் நண்பர் கேட்க, சாதாரண மிலிட்டரியிலேயே தலையை க்ளோஸாக கிராப் செய்து கொள்ளவேண்டும் என சட்டம் இருக்கிறதே, இங்கும் அது போல ஒரு டிசிப்ளின்தான். கூடவே, பல சம்பிரதாயங்கள் இதில் அடங்கியுள்ளன. குடுமியை அப்படியே யாரும் இஷ்டத்துக்கு வைத்து கொள்ள முடியாது. அதற்கான சம்ஸ்காரங்கள் உண்டு, மந்திரங்கள் சொல்லப்பட வேண்டும். நாற்பது சம்ஸ்காரங்களில் ஒன்றான சௌரத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் சோ அடுக்குகிறார்.
அசோக் வசிஷ்டர் அம்சமானாலும் அவன் இன்னும் அசோக்காகவே இருப்பதால் தனக்கு தோணினதை செய்கிறான். இதை ஆர்வக்கோளாறாகத்தான் பார்க்க வேண்டும். நிஜ வசிஷ்டர் இதையெல்லாம் செய்ய மாட்டார்.
அசோக் சொன்னதைக் கேட்டு What do you mean? என நாதன் ஆங்கிலத்தில் சீற, "I mean to say that I intend to live as a true Brahmin strictly according to the tenets of Brahminhood as prescribed by our ancient texts என அசோக் நிதானமாக சுத்த ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறான். பிராமணன் செய்ய வேண்டிய கர்மாக்களையும் பட்டியலிடுகிறான்.
சோவும் அவற்றை பட்டியலிடுகிறார். எல்லாமே கேட்கும்போதே பயமுறுத்தும் நியமங்கள். அதையெல்லாம் செய்து பிரும்மச்சரியத்தைக் கடைபிடித்தால் அப்புறம் என்ன என சோவின் நண்பர் கேட்க, சாதாரணமாக கிருகஸ்தாஸ்திரமம்தான். ஆனால் சிலர் பீஷ்மரைப் போல எப்போதுமே பிரும்மச்சாரிகளாக இருப்பார்கள். அவர்கள் நைஷ்டிக பிரும்மச்சாரிகள் என சோ கூறுகிறார். ஆதி சங்கரர் நேரடியாக சன்னியாசமே பெற்றார் எனவும் அவர் கூறுகிறார்.
பிராமணனின் கடமைகளில் தானம் பெறுதல், தானம் செய்தல் என்றும் உண்டு. அதைக் கேட்டு நாதன் தான் ஏற்கனவே செய்த தானங்களை பட்டியலிடுகிறார். தான் இன்னும் என்ன தானம் செய்ய வேண்டும் என அவர் கேட்க, தன்னை அவர் யாருக்கு தானம் தருவார் என அசோக் புன்னகையுடன் கேட்கிறான்.
இது சாதாரண கேள்வி இல்லை, நசிகேதஸ் தன் தந்தையிடம் கேட்ட கேள்வி என சோ கூறுகிறார். நசிகேதசின் கதையையும் கூறுகிறார். அவனை யமனுக்கே தானமாகத் தருவதாக அவன் தந்தை கோபத்தில் வார்த்தைகள் விட, அவனும் யமலோகத்திற்கே செல்கிறான். அங்கு யமனுடன் நிகழ்த்தும் சம்வாதங்கள் இந்து ஆன்மீக எழுத்துக்களில் பிரசித்தி பெற்றவை. கடோபநிஷத்தில் அவை வருகின்றன. மரணத்தின் பிறகு என்ன நடக்கும் என்பதையும் நசிகேதஸ் யமனிடமிருந்து உபதேசமாகப் பெறுகிறான்.
நாதன் கோபத்துடன், “உன்னை ஒரு வேதபாடசாலைக்கு தானமாகத் தந்தேன்” எனக்கூற, “என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என அசோக் அவர் காலில் வீழ்ந்து வணங்குகிறான். பிறகு வீட்டை விட்டு புறப்படுகிறான். அவனை நிறுத்த எல்லோரும் முயற்சி செய்கின்றனர். ஆனால் பலனில்லை.
இப்போது டோண்டு ராகவன். இதுவரை இல்லாத பிராமணனைத் தேடிய அசோக், தனக்குள்ளிலிருந்தே வர்ணரீதியான பிராமணனை உருவாக்க முயன்று, அவனைத் தன்னுள்ளேயே தேடுகிறான். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கருத்துகளை தாராளமாக அள்ளிவீசுபவர்கள் அவனது முயற்சிகளையும் பார்க்கட்டுமே. நானும் அவற்றைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
(தேடுவோம்)
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
17 hours ago
6 comments:
6.பரவலாய் போலீஸ் என்றாலே பொது மக்கள் மத்தியில் ஒரு வித வெறுப்பு..இது மாறுமா?
7.நடக்கும் கூத்துக்களை பார்த்தால் நம்ம ஜனங்களுக்கு, அவுத்து விட்ட(ஃப்ரீ) ஜனநாயகம் சரிப்பட்டு வராதோ என்ற எண்ணம் ?
8.தமிழகத்தில் பயபக்தியுடன் கடைபிடிக்கப்படும் மகாளயபட்ச விரதத்தின் மகிமையைப் பற்றி விரிவாக சொல்லவும்?
9.அமெரிக்க பொருளாதாரம் சரி ஆகிவிட்டதா?
10.அமெரிக்காவில் படிக்க வேண்டும்; அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும்; அமெரிக்க பாய்/கேர்ல் ப்ரண்ட் வேண்டும் எனும் இளைஞர்களின் கனவு மீண்டும்?
11.அரசின் சலுகைகள் தமிழ் மீடியத்திற்கு பல இருந்தும் ஆங்கில மீடியத்தையே மக்கள் நாடுவதற்கு காரணம் என்ன?
12.படித்தவர்கள் எல்லாம் அரசு வேலைக்கு ஆசைப்படும் அளவுக்கு அவர்கள் சம்பள விகிதம் உள்ளது உண்மையா?
13.அரசு ஊழியரின் பென்ஷன் வருங்காலத்தில் அரசுக்கு பெரும் நிதிச்சுமையாய்விடும் எனும் அரசின் கருத்து பற்றி?
14.ஸ்டேட்பாங்க் ஊழியருக்கு மட்டும் பென்ஷ்ன் 3வ்து சலுகையாய்( பணிக்கொடை,ப்ரொவிடெண்ட் பணம்,பென்ஷன்) இருப்பதை மற்ற வங்கி ஊழியர்கள் பொறுத்து கொள்ளுவது ஆச்சரியமான ஒன்றுதானே?
15. முன்பு தனியார் நிறுவனங்கள், சிறிய ஜெட் விமானங்களை வாடகைக்கு விட்டார்களே இப்போது?
16.பொதுவாய் இப்போதெல்லாம் ஆண்களை, பெண்கள் மதிப்பதில்லையே என்ற குற்றச்சாட்டு ஆண்கள் மத்தியில்?
உங்கள் தயவில் இதையும் பார்த்துவிட்டேன்.
ஆதி சங்கரர் போல் டைரக்ட்டாக சன்னியாசி தான் என்று நினைக்கிறேன்...
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
17.அடிக்கடி மருத்துவர்களால் பேசப்படும் கருணைக் கொலை எந்த நாட்டிலாவது சட்ட வடிவில் உள்ளதா?
18.நிலவும் சூழ்நிலைக் கேற்ப கருணைக் கொலை அனுமதிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?
19.நல்ல தூய பண்பான நட்பின் இலக்கணம் என்ன?
20.பெண்கள் உடுத்தும் உடையில் மடிசார், மாடர்ன் டிரஸ். இதில் பெண்களுக்கு உகந்தது எது? ஏன்?
21.நியாயத்தை கொன்று வாழும் மனிதர்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை எவ்வாறு இருக்கும்?
22.கொண்டாடப் படும் விதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்து ஜெயந்தி ஒப்பிடுங்கள் ?
23. விரிவாய் விளக்குக: மாந்தருக்கு
எது மயக்கம்? எது போதை?
24.பொதுவாய் மக்கள் ,சட்டம் ஒரு கழுதை என ஏன் கழுதையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்?
25.ஜொலிக்கும் தங்கம் கண்டுபிடிப்பதற்கு முன்னால், பெண் எதனால் ஆபரணம் செய்து அணிந்தாள்?
26.இந்த கலிகாலத்தில் எப்படி அழைத்தால் கடவுள் வருவார் ?
27.நிறைவேறாத உங்கள் நீண்ட நாள் ஆசை ?
28. நிறைவேறிய உங்கள் நீண்ட நாள் ஆசை?
29.சொலவடையாய் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என சொல்வார்களே அதன் விளக்கம்?
30. அப்ப்போம் இலுப்பைப் பூ இல்லாத ஊருக்கு என்ன சொல்லுவார்கள்?
31.மாநிலப் பிரிவினை கோரிக்கைகள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரிய சவலாய் மாறிவிடும் போலுள்ளதே?
32. இன்று இரவு 1200 மணி முடிந்ததும் பிறக்கும் 2010ஐ எப்படி வாழ்த்தி ,கொண்டாடி, என்ன எதிர்பார்ப்புடன் வரேவேற்கிறீர்கள்?
cho telling lie. periyar only truth
komanakrisnan
1.What is your plan respecting the 2010 new year celebrations.
2.Have you seen the super hit english film avadhar ?
3.Any new decisions for the new year?
4.Any plan of meeting other chennai bloggers on new year day?
5.What will happen to the world in 2012?
What was the crime committed by N.D.Tiwari?
Post a Comment