எப்படியும் கமல் அடுத்த படத்தையும் எங்கேயிருந்தாவதுதான் சுடப்போகிறார். ஏன் இந்தப் படத்தை சுடக்கூடாது? படத்தின் பெயரின் தமிழாக்கம் “பேஷ் பேஷ், வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கணும்” (Waah, life ho toh aisi).
நேற்று மாலை Zee டிவியில் இப்படத்தை உறவினர் வீட்டில் எதேச்சையாக பாதியிலிருந்து எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி டைம்பாசுக்காகப் பார்த்தேன். பிரமித்தேன். ஆனால் அந்தோ படம் முடிவதற்கு முன்னாலேயே வீட்டுக்கு வர வேண்டியிருந்தது. அதனால் எல்லாம் துவண்டுவிடுவானா இந்த டோண்டு ராகவன்? படத்தின் பெயரை ஆங்கில எழுத்துக்களில் நோட் செய்து கொண்டு வந்ததும் வராததுமாக கணினியை இயக்கி இணைய இணைப்பு தந்து யூ ட்யூப் மச்சான் உதவியால முழு படத்தையும் பாத்துட்டோமுல்ல.
அதாகப்பட்டது, படத்தின் பெயரை ஆங்கிலத்தில் டைப் அடித்து, தேடும் ஆணை தந்ததுமே முழு படமும் 14 பகுதிகளாக வந்தது. பிறகு என்ன இரவு ஒரு மணி வரை படத்தைப் பார்த்து விட்டுத்தான் தூக்கம். முதல் பகுதி இங்கே.
சரி அப்படி என்ன இப்படத்தில் என்று கேட்கலாம். அதிலும் இதில் கமல் ஏன் குறிப்பிடப்படுகிறார் என்பதைக் கூறுவதுதான் இப்பதிவின் நோக்கம். முதலில் கதையை பார்ப்போம்.
தனது பெரிய குடும்பத்தை தன் உழைப்பால் பராமரித்து வெற்றி மேல் வெற்றி பெறும் இளைஞன் ஆதி. அவனுடைய அண்ணன் குடிபோதையிலே எப்போதுமே இருப்பவன். அவன் குழந்தைகளும் ஆதியின் பராமரிப்பில்தான். பெரிய அண்ணனும் அண்ணியும் விமான விபத்தில், இறக்க அவர்கள் குழந்தைகளையும் இவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டில் இருக்கும் பிரேம் சோப்ரா சித்தப்பா தன் குல வழக்கப்படி ஆதியின் வீட்டை அபகரிக்க என்ணும் பில்டருக்கு துணை போகிறார். ஆதிக்கு விளங்காத ஒரு பார்ட்னர். ஆதியின் 32 லட்சத்தை எடுத்து இன்வெஸ்ட் செய்து விட்டு எப்போது அவனுக்கு நாமம் போடலாம் எனக் காத்திருக்கிறான்.
இதெல்லாம் தெரியாத ஆதி மோட்டார் விபத்தில் உயிரிழக்கிறான். அவனை அழித்துச் செல்லும் யமர் அற்புதமான கூறை திறந்த காரில் வானத்தில் பறக்கிறார். கூடவே சக்தி என்னும் ஆறு வயது சிறுவன். அவனும் இறந்திருக்கிறான். தான் மரணமடைந்ததை அறிந்து ஆதி துணுக்குற்று தன் வீட்டை ஒரு முறை காட்டுமாறு யமரைக் கேட்க, அவரும் சரியென காட்டுகிறார். ஆதியின் குடும்பம் படும்பாட்டைக் கண்ட யமர் ரொம்ப ஃபீலிங்ஸாகி அழுகிறார்.
அவரது உதவியுடன் ஆதி பேயாக வந்து குடும்பத்துக்கு எல்லா உதவியும் செய்கிறான். இப்போதே புரிந்திருக்கும் முழம் முழமாக காதில் பூவை சுற்றுவார்கள்/சுற்றுகிறார்கள் என. இருப்பினும் அந்த சுற்றலும் எனக்கு மனதுக்கு இதமாக இருந்தது என்பதும் நிஜம். சஞ்சய் தத் யமராக தூள் கிளப்புகிறார். அந்த அளவுக்கு செய்ய நம்ம கமலை விட்டால் வேறு ஆள் இல்லை. படத்தின் முடிவை யூட்யூப் திரையில் காண்க.
நிஜமாக சொல்கிறேன். கமல் அடித்து தூள் செய்ய வேண்டிய படம் இது. ஆதியாக தனுஷைப் போடலாம். பிரேம் சோப்ரா ரோலுக்கு மணிவண்ணன் இருக்கவே இருக்கிறார்.
நீங்களும் உங்கள் ஆலோசனைகளை கூறுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன் (ரொமப்வும் ஜாலியான மூடில்)
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
16 comments:
சுடறது கிடக்கட்டும், சொதப்பாமல் இருக்க வேண்டும் என்பதல்லவா கமலிடம் எதிர்பார்க்க வேண்டிய முதல் விஷயம்?
ஐயா,
அப்போ இன்னொரு முன்னாபாய் ரெடியா?
//படத்தின் பெயரின் தமிழாக்கம் “பேஷ் பேஷ், வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கணும்”//
1) பேஷ் பேஷ்
2) என்ணும்
3) கூறை
இதெல்லாம் தமிழ் - ஆ?
யமர் - ???
@கிருஷ்ணமூர்த்தி
ஏன் அவர் சொதப்புவார் என எண்ணுகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல விசயங்களை சுட்டாலும் பரவாயில்லை, ஆனால் அதான் originality கெடாமல் சுட வேண்டும்.
/ஏன் அவர் சொதப்புவார் என எண்ணுகிறீர்கள்?/
திறமை, புத்திசாலித்தனம் கமலிடம் இருக்கிறதென்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு அதை சொதப்பாமல் அவரால் செய்ய முடியாது என்பது அவருடைய ஒவ்வொரு படமுமே சாட்சி! ஒரே ஒரு விதி விலக்காக சமீபத்தில் அன்பே சிவம் படத்தை வேண்டுமானால் சொல்லலாம்!
நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! கொனஷ்டை, குதர்க்கம், அல்லது தவிர்த்திருக்கலாமே என்று வகைப்படுத்தக் கூடியவை எல்லாமே அவரோடு சேர்ந்தே இருக்கும் வியாதி!
இந்த மாவு ஏற்கனவே பலமுறை அரைச்சா மாதிரி இருக்குதே!
ரொம்ப நாளாக எந்த ஒரு பெண்ணையும் பார்க்காமல் இருந்தால் பார்க்கும் பெண்களெல்லாம் அழகாகத்தான் தெரிவார்கள். அது போல், நீங்கள் ரொம்ப நாளாக எந்தப் படத்தையும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
20 நிமிடத்திற்கு மேல் படம் பார்க்கமுடியவில்லை. அப்படி ஒரு மொக்கை...
//
இந்த மாவு ஏற்கனவே பலமுறை அரைச்சா மாதிரி இருக்குதே!
//
எதையாவது அரைத்த பிறகு கிடைப்பது தான் மாவு.
இந்த வார கல்கி இதழில் உங்களுடைய ஒரு கட்டுரை படித்தேன்..
வாழ்த்துகள் சார்.
அன்புடன்
சூர்யா
கொடுமை
kamal waste guy. SURYA & VIKRAM IS BEST
Kamaloda adutha padathukkuu avar siramappadaamale oru kadhaikaru ready-a?
:)
தாங்க முடியல!
hello,
சிவாஜி கணேசன் ஏற்கனவே இந்த மாதிரி கதையை பண்ணி விட்டார். இந்தி காரங்களே லேட் தான். படத்தோட பேர் 'முதல் தேதி'. பாருங்க ஒரே சோகமாக இருக்கும். கமல் பண்ணினார்ண ஜாலி-யா பண்ணுவாரோஎன்னவோ?
அய்யா, சிவாஜி கணேசன் ஏற்கனவே இந்த மாதிரி கதையை பண்ணி விட்டார். இந்தி காரங்களே லேட் தான். படத்தோட பேர் 'முதல் தேதி'. பாருங்க ஒரே சோகமாக இருக்கும். கமல் பண்ணினார்ண ஜாலி-யா பண்ணுவாரோ என்னவோ?
thatstamil editor he is a big fan of kamal ; how he supposed to give link to this blogger ?
Post a Comment