1/15/2010

துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 3

இப்போது பேச வேண்டியது சோவின் முறை. எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தோம். பை தி வே சோவின் இம்முறைக்கான செயல்பாடு பற்றி நான் பஸ்ஸில் வீடு திரும்பும்போது மீட்டிங்கிற்கு வந்தவரோடு பேசினேன். சோ இவ்வாறு நான்கு பேரை அதிகமாகப் பேசச் செய்ததால் ஒரு மணி நேரம்போல அதிகமானதை குறை கூறினேன். ஆனால் அவர் ஒரு விஷயம் சொன்னார், சோவால் இப்போதெல்லாம் விடாமல் பேச இயலவில்லை, ஆகவே அவருக்கு ஓய்வு தரும் நோக்கமும் இதில் உண்டு என்றார். மனதுக்கு கஷ்டமாக இருந்தது. சோவைப் போன்றவர்கள் இன்னும் பல ஆண்டுகள் செயலாக இருக்க வேண்டும். அந்த மனிதர் கூறுவது தவறாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

பழகருப்பையாவை சிலாகித்து பேசியதும் சோ அவர்களது சம்மிங் அப் ஆரம்பித்தது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இருவர் மட்டுமே களத்தில் இருக்கும்போது நமக்கு என்ன சாய்ஸ் என அவர் கேட்டார். விஜயகாந்த் தேறுவார் என்பது யதார்த்த நிலையை அலட்சியம் செய்வதற்கு சமம் என்றார்.

முருகன் குறிப்பிட்டது போல ஜனங்களும் கரப்ட் ஆகிவிட்டனர் என்பது கவலைக்குரியதே. விஜயகாந்தை முன்னர் ஆதரித்த பத்திரிகைகள் இப்போது அவரை ஆதரிப்பதில்லை. என்னவோ விஜயகாந்த் நிலையில் சரிவு ஏற்பட்டது போன்ற தோற்றம் இப்போது தரப்படுவது தவறே. அவர் அப்படியே இருக்கிறார். அவர் பற்றிய முந்தைய மதிப்பீடுகள்தான் அதிகப்படுத்தி கூறப்பட்டன என்றார். இப்போது திமுகாவுக்கு மாற்று வேண்டுமா வேண்டாம என அவர் கேட்ட போது வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்தன. அப்படியானால் ஜெயலலிதாதான் மாற்று என்றார் அவர்.

கருணாநிதி மேற்கொள்ளும் சுயபுகழ்ச்சி முயற்சிகள் காணச் சகிக்கவில்லை. எங்கிருந்து பாராட்டு வந்தாலும் ஆவலுடன் ஓடுகிறார். அரசியல் நிர்ப்பந்தங்களுக்கேற்ப அவரது செயல்பாடுகள் உள்ளன. முல்லை பெரியார் அணை நிலை பற்றி மீட்டிங் போட நினைத்ததும் ராசா மேல் சி.பி.ஐ. ரெயிட் வந்தது. உடனே தனது போராட்டத்தைக் கைவிட்டார்.

சாதி அரசியல் தலைவிரித்தாடுகிறது. ஜெயலலிதா எம்ஜிஆர் படப்பாடலான “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” அடிகளை பாடிய போது வெட்கமேயின்றி அதில் வரும் தலைவன் சொல் தன்னைக் குறிக்கிறது என்றார். அது அண்ணாவை குறிக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம். நல்ல வேளையாக “திருடாதே பாப்பா திருடாதே” என ஜெ பாடியிருந்தால் அதுவும் தன்னைத்தான் குறிக்கிறது என அவர் மயங்கியிருப்பார் என்றார்.

ஆலடி அருணா வழக்கில் விடுதலையானவர்களுக்கு எதிராக அரசு அப்பீல் செய்து இரட்டை ஆயுள் தண்டனையை வாங்கித் தரமுடிந்தது. ஆனால் தினகரன் எரிப்பு மற்றும் கொலை வழக்கில் அத்தனை குற்றவாளிகளுமே விடுதலையாக, அரசு அப்பீல் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.

தமிழீழ விஷயத்தில் அவர் அடித்த ஸ்டண்டுகளையும் அவர் பட்டிலலிட்டார். சேது விவகாரத்தில் ராமர் பற்றி கூச்சமே இன்றி மாற்றி மாற்றிப் பேசுகிறார். பஸ் டெர்மினசுக்கு அவரது பெற்றோர் பெயரை வைக்க அவர்கள் என்ன தியாகம் செய்தார்கள் எனக்கேட்டால், தன்னையே நாட்டுக்காக தியாகம் செய்தார்கள் என கூறுகிறார்.

சிறுதொழில்களுக்கு அளித்த முன்னுரிமைகளை அவர் விலக்கிக் கொள்ள, அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவற்றை மீண்டும் அளித்தார். ஜெ காலகட்டத்தில் தொழிற்துறையில் முன்னேர்றம் ஏற்பட்டது. இப்போது அதெல்லாம் இல்லை.

பீஹார், ஜார்க்கண்ட் ஆகிய பின்தங்கிய மாநிலங்களின் வளர்ச்சி விகிதம் தமிழகத்தை விட அதிகமாக இருப்பது நமக்கு வெட்கக்கேடு என்றார். காங்கிரஸ் ஆதரவு இருக்கும் வரையில் திமுகவின் ஒட்டுக்கலாச்சாரத்தை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுடன் சரியாக மூவ் செய்வதில்லை என ஒருவர் அரங்கத்திலிருந்து கூற, கருணாநிதியின் ரிகார்ட் மட்டும் என்ன வாழ்ந்தது என்றார். அரசியல்வாதிகளில் தான் பாராட்டும் நிலையில் ராஹுல் காந்தி மட்டுமே இருக்கிறார் என்பதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டு போனார்.

தமிழகத்தையே தனது குடும்பத்தாரிடம் பங்குபோட்டு தந்த கருணாநிதியின் ஆட்சி போக வேண்டியதே என்றார். ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தை சிறப்பாக நடத்த உதவிய எல்லோருக்கும் நன்றி கூறினார். பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

29 comments:

Anonymous said...

அடுத்த டோண்டுவின் கேள்விபதில் பதிவுக்கு:


சோவிடம் கேட்கபட்ட கேள்விகளுக்கு டோண்டுவுக்கு பதில் சொல்லும் வாய்ப்பு அளிக்கபட்டால் என்ன சொல்லுவார்.


1. ஏ. ஸ்ரீதரமூர்த்தி, கோவை

அ. தமிழ்ச்செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்?
ஆ. அசாமில் பங்களாதேசிகளின் ஊடுருவல்கள், அங்கிருந்தே கோவைக்கும் வந்து விடுகிறார்கள்
இ. துக்ளக்கில் வெளியாகும் ஹிந்து மகாசமுத்திரத்தின் பேப்பர் தரத்தை சரிசெய்தால் பைண்ட் செய்து வைத்துக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.




2. அப்துல் ரஹ்மான்

அ. டாக்டர் கலைஞர் பற்றி விமரிசனம் செய்து என்ன பலன் கண்டீர்கள்?
ஆ. தேசீய அளவில் பாஜகவின் நிலைமை ஏன் மங்கி வருகிறது?
இ. திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கைவிட்டால் பாமகவின் கதி?



3. குப்புசாமி, கோவை
அ. அடுத்த ஆண்டு காமராஜ் ஆட்சி அமையுமா?
ஆ. பூரண மதுவிலக்கை திரும்பக் கொண்டுவரவேண்டும் என சோ அவர்கள் கலைஞரோடு பேசுவாரா?





5. ரகுபதி, ஈரோடு
அ. இடைதேர்தல்களில் மக்கள் தக்க ஆதரவு அளித்ததாகக் கலைஞர் கூறுகிறாரே.



6. என். ராஜன், நங்கநல்லூர்
அ. மாநில அரசின் நிதிநிலைமை பற்றி? கருணாநிதி எவ்வாறு இவ்வளவு இலவசங்களை அளிக்கிறார்?
ஆ. மத்திய ரயில்வே அமைச்சராகச் செயல்பட்ட லாலு பிரசாத் யாதவ் பற்றி பிறகு கூறுவதாக சோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கூறினார். இப்போது கூறலாமே?


7. வெங்கடேசன்

8. மஹாபிரபு
அ. பிரபாகரன் தந்தையின் இறப்புக்காக ஏன் கவிதை இல்லை கலைஞரிடமிருந்து?
ஆ. முதல்வராக தெரிவு செய்யப்பட மக்களது ஆதரவு ஜெ-க்கா கலைஞருக்கா?
இ. கலைஞருக்கு பிறகு அழகிரியா ஸ்டாலினா என்று போட்டி வருமா?
ஈ. இது வரை அழகிரி சொல்லிச் சொல்லி ஜெயித்திருக்கிறார். வரும் அசெம்பிளி தேர்தலில் 190 சீட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும் என்பது உண்மையிலேயே நடக்குமா?



9. நாராயணன்
அ. எங்கே பிராமணன் சீரியலின் நேரத்தை இரவு எட்டரை மணிக்கு மாற்ற இயலுமா. இரவு எட்டரை மணி ஸ்லாட்டுக்கு வீட்டில் பலத்த போட்டி.
ஆ. அவர் தனியா நின்னா 1500 கோடி ரூபாய்கள் தருவதாக விஜயகாந்திடம் கூறப்பட்டதா?



10. ரவி ஹைதராபாத்
அ. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு WTO-வுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்த்தத்தால் வந்ததா?
ஆ. விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறுவது பற்றி
இ. கிறித்துவம் முன்னெப்போதிருப்பதை விடவும் பரவுகிறதே?



11. ஸ்வாமிநாதன் வேளச்சேரி
அ. கருணாநிதி வாக்குறுதி அளித்ததையேல்லாம் செய்து விட்டார்
ஆ. கூட்டணி கட்சிகளை ஜே மதிக்காத விஷயம்
இ. பத்திரிகைகள் ஏன் எப்போதுமே பாஜகவுக்கு எதிராக உள்ளன?

Anonymous said...

4.கலைச்செல்வன், ராமநாதபுரம்
அ. பெண்கள் இடஒதுக்கீட்டை அதரிக்கிறீர்களா?
ஆ. அப்படி இடஒதுக்கீடு வந்து, நிறைய பெண்கள் பார்லிமெண்டுக்கு வந்தால் மருமகள் பாதுகாப்புச் சட்டம் வருமா?
இ. நீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசியம்.

dondu(#11168674346665545885) said...

@அனானி
சோ பதில்ளித்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்வதா. ஆளை விடுங்கள்.

எங்கே பிராமணன் சீர்யல் பற்றிய ஒரு முக்கியத் தகவல் மட்டும் தருவேன். ஒவ்வொரு எபிசோடுக்கும் இரண்டு சுட்டிகள் தந்துள்ளேன். நிதானமாக பார்த்து கொள்ளலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இளஞ்செழியன் said...

தமிழ் மக்களில் பிற்போக்கு சக்திகளும்,ஆதிக்க மன்ப்பான்மை கொண்ட சிறுமதியாளைர்களும்,சூழ்ச்சி வலைபண்ணி பிறரை வஞ்சம் செய்து ஏய்த்து பிழைக்கும் கூட்டமும் அந்த காலம் தொட்டு இன்று வரை சோவுக்கு வால் பிடித்து அவரை வானுயரத்திற்கு உயர்த்தி மகிழ்ந்த வரலாறு இந்த நாடறியும்.

இன்று வாசகர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்து பொலிவிழந்து பல பத்திரிக்கைகள் உள்ளன.

எந்தக் கொம்பன் வந்தாலும் கழகத்தையும் கலைஞரையும் அசைக்கமுடியாது.

இளஞ்செழியன் said...

//கருணாநிதி மேற்கொள்ளும் சுயபுகழ்ச்சி முயற்சிகள் காணச் சகிக்கவில்லை. எங்கிருந்து பாராட்டு வந்தாலும் ஆவலுடன் ஓடுகிறார். அரசியல் நிர்ப்பந்தங்களுக்கேற்ப அவரது செயல்பாடுகள் உள்ளன. முல்லை பெரியார் அணை நிலை பற்றி மீட்டிங் போட நினைத்ததும் ராசா மேல் சி.பி.ஐ. ரெயிட் வந்தது. உடனே தனது போராட்டத்தைக் கைவிட்டார்.//


கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தன்னை புகழ வேண்டாம் என மாண்புடன் சொன்ன தமிழினத் தலைவரை,தலைவரின் புகழை கொச்சை படுத்தும் நோக்கோடு பார்ப்பன நல விரும்பி சோ சொதப்பியுள்ளார்.எப்படியாவ்து திராவிட ஜெயங்களை திரை போட்டு மறைக்க முயலும் விலாசம் இழந்தவர்களின் வெற்று கூச்சலை தமிழ்ச் சமுதாயம் சட்டை செய்யாது.
வல்லூறுகளுக்கு வெண்சாமரம் வீசும் பிற்போக்கு சக்திகளின் கொட்டங்கள் ஆட்டங்கள் இங்கே செல்லுபடியாகாது.
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த தமிழ் சமுதாயத்தின் விடியலுக்கு அர்பணித்து தியாகம் செய்து வாழும் வள்ளுவரை,இரண்டாம் இராசராசனை தியாக சுடரொளியை போற்றி வணங்குவோம்.

இளஞ்செழியன் said...

//தமிழகத்தையே தனது குடும்பத்தாரிடம் பங்குபோட்டு தந்த கருணாநிதியின் ஆட்சி போக வேண்டியதே என்றார். ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.//

வெளியே வரும் பூனைக்குட்டியை பாரீர் பாரீர்

பாசம் என்றால் இதுவன்றோ பாசம்

வெல்க கலைஞர்
ஓங்குக புகழ்
பல்லாண்டு வாழ்ந்து சரித்திரம் படைத்து சாதனை புரியட்டும்.
ஏழை பசிப்பபிணி போக்கிய ஏந்தல்
அவர்தம் உயிர் காக்கும் கடவுள்
ஆடைகளை அள்ளித்தரும் வாழும் கிருஷ்ணன்.

போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற மொழிக்கு இணங்க எவர் என்ன சொன்னாலும் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம் என்று சமுதாயக் கடமை ஆற்றும் முதல்வர் கருணாநிதி புகழ் ஓங்குக

Anonymous said...

//இப்போது திமுகாவுக்கு மாற்று வேண்டுமா வேண்டாம என அவர் கேட்ட போது வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்தன.//

veru eppadi kural ezumbum in anti-dmk meet?

Anonymous said...

//தமிழகத்தையே தனது குடும்பத்தாரிடம் பங்குபோட்டு தந்த கருணாநிதியின் ஆட்சி போக வேண்டியதே என்றார். ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.//

Dream...Day dream!

As long as MUKA is alive, DMK will continue to be in power. He knows how to win. She knows how to lose.

After MUKA is gone, his son Stalin will ensure she is out of power. Stalin is a different kettle of fish. He will puruse a politics radically different from DMK earlier generation, including his father.

So Ramasamy dreams. He has been making noises in TN politics for many decades but it had not effect on people.

Some groups of city dwellers, - salaried workers, retired government and private employees like Dondu, and some others who have their own reasons to be anti-DMK - will continue with So Ramasamy because he is a good entertainer even in politics.

கடைசி காலத்தில் நிறைய பேருக்கு நேரம் நன்னா போவுது.

Rajaraman said...

ஏங்க.. இளஞ்செழியன் இப்படியா சிரிப்பு மூட்டறது.. சிரிச்சு சிரிச்சு வயறு புண்ணாகி போனது தான் மிச்சம். நீங்க தமிழ் திரைப்படங்கல்க்கு நகைச்சுவை பகுதி எழுதினால் நல்ல எதிர்காலம் காத்திருக்கு.

வலைஞன் said...

ஐயா இளஞ்செழியன்,

ஒரு சிறு வேண்டுகோள்

வானுயரத்தில் வாழும் உயர்சாதி பார்ப்பன சோ, பத்திரிக்கை நடத்தி,வக்கீல் பணி புரிந்து, சினிமாவில் நடித்து 1970 லிருந்து இன்று வரை சம்பாதித்தது(சொத்து) மொத்தம் எவ்வளவு என்று நான் விசாரித்து சொல்கிறேன்.

இதே 40 ஆண்டுகளில்

தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இந்த தமிழ் சமுதாயத்தின் விடியலுக்கு அர்பணித்து தியாகம் செய்து வாழும் வள்ளுவர்,
இரண்டாம் இராசராசன்,
தியாக சுடரொளி,
ஏழை பசிப்பபிணி போக்கிய ஏந்தல்,
அவர்தம் உயிர் காக்கும் கடவுள்,
ஆடைகளை அள்ளித்தரும் வாழும் கிருஷ்ணன்.
போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற மொழிக்கு இணங்க எவர் என்ன சொன்னாலும் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம் என்று சமுதாயக் கடமை ஆற்றும்
தாழ்ந்த சாதியை சேர்ந்த,சமுதாயத்தின் அடித்தட்டில் வாழும் தமிழ் காவலர்
சம்பாதித்தது(சொத்து) மொத்தம் எவ்வளவு என்று நீங்கள் கேட்டு சொல்வீர்களா?
நன்றி

Anonymous said...

Dondu Sir,

Thank you as always for your prompt update.

Partha.

Anonymous said...

ஒரு கற்பனை.சோவும் டோண்டுவும் சந்தித்தால்.சோ கேட்கும் கேள்விகளுக்கு டோண்டு என்ன பதில் சொல்லுவார்.

மாலை 5 மணிக்கு சந்திப்பு என் ஏற்பாடு .நங்கநல்லுரிலிருந்து டோண்டுவின் கார் புறப்பட்டு சோவின் இல்லத்தை 0530க்குதான் அடைகிறது .பரஸ்பர நமஸ்காரம் தெரிவித்து பேட்டி ஆரம்பமாகிறது.

சோவின் கேள்விகள்:
1.வணக்கம். வழக்கம் போல் லேட்டா ஏன்?
2.துக்ளக் எத்தனை வருசமா படிக்கிறீங்க?
3.அதுலே உங்களுக்கு புடித்த பகுதி,பிடிக்காத பகுதி?
4.என்ன மாற்றம் செய்தால் பழைய சர்குலேசன் வரும்?
5.துக்ளக் ஆண்டுவிழாவில் யாருமே துக்ளக் பற்றி பேசவில்லையே ஏன்?
6. இதுவும் கருணாநிதியின் சதியா?
7.உங்கள் பிளாக்கில் என்னப் பற்றிய தனிப் பதிவுகள் தொடராய் வந்தது முன்பு .இப்போது எழுதாதற்கு காரணம் உண்டா?
8.எங்கே பிராமணன் தொடர் இரண்டுவுக்கு வரவேற்பு எப்படி?
9.இணையத்தில் அல்லது குறுந்தகட்டில் என் நாடகம் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் ?
10.அடுத்த துக்ளக் ஆண்டு விழாவில்,அரசியல்,நாடகம்,
சினிமா,சட்டத்துறை,
இதழியல்துறை,கம்பெனி நிதி நிர்வாகம், என மாறுபட்ட ஆறு கேள்விகள் கேட்கும் வாய்ப்பு கொடுத்தால் என்ன கேட்பீர்கள்?

thiruchchikkaaran said...

மூவேந்தர் வழி வந்த முத்தமிழ் வித்தகர், புற நானூற்றுப் புலி, அக நானூற்று அரிமா, கங்கை கொண்டான், காஷ்மீர் கொண்டான், காபூல் கொண்டான், கடாரம் கொண்டான், ஈழம் கொண்டான், ஒகேனேக்கல் கொண்டான், தமிழினத் தலைவன் வாழ்க வாழ்கவே!

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்தார் போல, பேரறிஞ்சரின் உழைப்பில் உருவான கழகத்தை அப்படியே அலாக்காக கைப் பற்றிய திறமை என்ன என்ன?

தன் வாரிசுகளுக்கு இடையே மோதல் வராமல் பதவிகளைப் பங்கு போட்டுக் கொடுத்து, வாரிசுகளின் சண்டையில் இருந்து தமிழ் நாட்டு மக்களை காத்த அழகு என்ன என்ன?

ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை அழகாக சமாளித்த விதம் என்ன என்ன?

எங்க தலிவனை பாராட்டுங்க ஐயா!

தன் வாரிசுகளின் விடியலுக்கு விடியலுக்கு தமிழகத்தை அர்பணித்து "தியாகம்" செய்து வாழும் வள்ளுவரை,இரண்டாம் இராசராசனை "தியாக சுடரொளியை" போற்றி வணங்குவோம்!

thiruchchikkaaran said...

மஹா கனம் பொருந்திய ஸ்ரீமான் சோ தான் புதிய ஜகத் குருவா?

http://thiruchchikkaaran.wordpress.com/2009/12/17/is-cho-the-jagath-kuru-now/

இளஞ்செழியன் said...

மக்களின் ஆதரவினை முழுவதும் இழந்த சோ ஒரு வாலில்லா பட்டம்.சிறகொடிந்த பறவை.காற்றுப்போன பலுன்.இடிந்த கட்டிடம் .இத்துப்போன காகிதம்.கடலில் மூழ்கிய கப்பல்.நீர் வற்றிய குளம்.பழுதுபட்ட இயந்திரம். மக்கள் சக்தியால் நிராகரிக்கபட்ட நிலையில் சித்தம் கலங்கி உளுத்துப்போன விசயங்களுக்கு பார்ப்பன முலாம் பூசி மெருகேற்றும் தந்திரம் சமுகநீதிகாக்கும் அரண்கள் பெரியார்,அண்ணா வாழ்ந்த பூமியில் இனி செல்லாது.யாருமே வங்காத ஒரு புத்தகம் அதற்கு ஒரு ஆண்டு விழா.கூட்டிய கூட்டம் ஆதிக்க சக்திகளின் கொக்கரிப்பு.பிற்போக்கு சக்திகளின் எலும்பினை முறிக்கும் நாள் வரும் 2011 தேர்தல்.சோவின் ஜால வித்தைகளும் ,அவரின் எடுபிடிகளாய் செயல் படும் இட்லிவடை,டோண்டு கனவு ,காணல் நீராய் போவது உறுதி.கலைஞரின் தொடர் வெற்றி சகாப்தம் தொடரும்.
அவர் இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்து ஒடுக்கபட்ட சமுதாயத்தின் விடியலை மேம்படுத்தி செய்யும் அதி அற்புதங்கள் தொடரச் செய்திட நம் பரிபூரண ஆதரவினை அநத நல்லானுக்கு,தன்னடக்கத்தில் சிறந்தோனுக்கு ,சாமானியத்துக்கு சமானியத்தை கற்றும் கொடுத்த நல் ஆசானுக்கு ,வல்லானுக்கு.தியாகக்செம்மலுக்கு ,ஆற்றல் அரசனுக்கு, வாழும் வரலாறுக்கு , நல்கி தமிழன்னைக்கு பெருமை சேர்ப்போமாக.

Anonymous said...

//Anonymous Anonymous said...

ஒரு கற்பனை.சோவும் டோண்டுவும் சந்தித்தால்.சோ கேட்கும் கேள்விகளுக்கு டோண்டு என்ன பதில் சொல்லுவார்.

மாலை 5 மணிக்கு சந்திப்பு என் ஏற்பாடு .நங்கநல்லுரிலிருந்து டோண்டுவின் கார் புறப்பட்டு சோவின் இல்லத்தை 0530க்குதான் அடைகிறது .பரஸ்பர நமஸ்காரம் தெரிவித்து பேட்டி ஆரம்பமாகிறது.//



rombave viththyasama yesikkum dondu
BALE BALE


krishanan

Anonymous said...

இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.
கலைஞரை புகழ்வது போல் இகழ்கிறான்.

Anonymous said...

1.What about the long leftist rule by com jothi basu in west bengal?
2.Who has prevented him from becoming p.m of Indian at that time?
3.It is repeatedly told by vaiKo that he is very close to jothi basu.is it true or political trick?
4.Will it be possible for left communist to regain the political strength in parliament in future in the light of changed feelings of indian people?
5.Because of left support the bank employees' unions are achieving all high demands( When pension is denied for government employees, the same is allowed to bank staff and they can give revised option for pension.This benefit is extended to retired people also) form government of india by simple one or two day strike.Why it is not possible for others who is also backed by these communists?

Ramanujam

கந்தசாமி said...

டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.தொழிற்சாலைகளுக்கு மாலை நேரத்தில் கூடுதல் கட்டணத்தில் மின்சப்ளை -ரயில்வே தட்கல் மாதிரியா!
2.அறுவடை இயந்திரத் தரகர்களால் சம்பா நெல் விவசாயிகள் பாதிப்பு -தரகனும் புழைக்கவேணாமா!
3.கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வெற்றிடம்: ஜெயலலிதா-அதிமுக வழியிலா!
4.மதவாதத்துக்கு எதிராக போராடியவர்: சோனியா இரங்கல் -இந்த டயலாக்க விடமாட்டார்களா!
5.அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட நரசிம்ம ராவ் வகுத்த ரகசிய திட்டம்!-வெறும் வாய்க்கு அவலா!
6.ஜோதி பாசுவின் கை நழுவிய பிரதமர் பதவி! -கைக்கு எட்டியதை தட்டி விட்டது யாரு!
7.மூன்றரை ஆண்டு டாக்டர் படிப்பு: மத்திய அரசு விரைவில் அறிமுகம் -சார்ட் கட் டாக்டரா!
8.ரிசர்வ் வங்கிக்கு பெண் கவர்னர்: பிரணாப் - இனி எல்லாம் சக்தி மயமா!
9.சப​ரி​மலை உண்​டி​யல் வசூல் ரூ.119 கோடி - நல்ல வேளை கோவில் கேரளத்தில் இருக்கு!
10.ஏழைகள் மீது அக்கறை காட்டும் நிதிக் கொள்கைகள் தேவை: மன்மோகன் சிங் - இப்படி பேசவாவது செய்தால் தானே வண்டி ஓடும்!

வலைஞன் said...

//இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.
கலைஞரை புகழ்வது போல் இகழ்கிறான்.//

ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார்:

புகழ்ந்தாலும் பார்ப்பான்
இகழ்ந்தாலும் பார்ப்பான்
வையகம் இதுதானடா!

Anonymous said...

//Anonymous said...

இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.
கலைஞரை புகழ்வது போல் இகழ்கிறான்.//

.)))))

Anonymous said...

//வலைஞன் said...

//இளஞ்செழியன் என்பவர் ஒரு பார்ப்பானப் பருப்பு.
கலைஞரை புகழ்வது போல் இகழ்கிறான்.//

ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார்:

புகழ்ந்தாலும் பார்ப்பான்
இகழ்ந்தாலும் பார்ப்பான்
வையகம் இதுதானடா!//


இலக்கணத்தில் வஞ்சப்புகழ்ச்சியணி (irony)என ஒன்று உண்டு.சங்க இலக்கயத்தில் இவ்வணி பயின்று வந்துள்ளது.
வஞ்சப் புகழ்ச்சி அணி என்பது ஒருவரைப் புகழ்வது போல இகழ்வதும்,இகழ்வது போல புகழ்வதும் ஆகும்.(இன்றைய சூழலை புகழவேண்டியவரை இகழ்வதும்,இகழவேண்டியவரைப் புகழ்வதும் தானே நடந்து கொண்டு இருக்கிறது.பல இடங்களில்,சரி கருணாநிதி விசயத்துக்கு வருவோம்.

சட்ட மன்றத்தில்,பெரிய விழாக்களில்,பொதுக்கூட்டங்களில்,
கவியரங்கங்களில் இன்னும் பிற பல ஊடகங்களில் பிறர் கலைஞரைப் பாராட்டுவது எந்த வகையில் சேர்ந்தது?

வழங்கப்படும் பட்டங்கள்,பரிசுகள் சும்மாவா?

அவர் பிறந்த நாளில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் உள்ள வாசகங்கள் எந்த வகையை சேர்ந்தது ?

உலகம் பூராவும் கோவை வந்து செம்மொழிமாநாட்டிலே கலைஞர் புகழ் பாடும் வானம்பாடிகள் ,பட்டைய கிளப்ப போறாங்களே அதை என்னான்னு சொல்லுவார்கள்?

Anonymous said...

//உலகம் பூராவும் கோவை வந்து செம்மொழிமாநாட்டிலே கலைஞர் புகழ் பாடும் வானம்பாடிகள் ,பட்டைய கிளப்ப போறாங்களே அதை என்னான்னு சொல்லுவார்கள்?//

ippave kannai kettuthe

krishnan

Anonymous said...

உலகத்தமிழர்கள் கூடும் செம்மொழி மாநாடு நடாத்தும் கலைஞர் மனமுவந்து கோவையை சிங்காரக் கோவையாய் மாற்ற பல நல்ல திட்டங்கள்.
1.அவினாசி சாலை-திருச்சி சாலை இணைப்புச் சாலைகள் அமைத்தல்
2.கெடியாசிய வளாகத்திற்கு செல்லும் சாலைகளை விரிவுபடுத்துதல்
3.நடைபாதைகளை அழகுபடுத்தி நேர்த்தி செய்தல்
4.பூங்காக்கள் உருவாக்குதல்
5.குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் உருவாக்குதல்
6.தமிழ் மொழி வளர்ச்சிக்கான பல நல்ல திட்டங்கள்.

Venkat said...

Dear Sir,
Thank you very much for the commentary.
I dont miss the function every year until I was in Chennai. Missed for two years, since I moved to US. But your blog took me there and felt like I was personally present.
Thank you and God bless you.
-venkatesh
New Jersey

Anonymous said...

Controversial stand on India-China war

During the war, a faction of the Indian Communists backed the position of the Indian government, while other sections of the party claimed that it was a conflict between a socialist and a capitalist state, and thus took a pro-Chinese position. There were three factions in the party - "internationalists" , "centrists", and "nationalists" . Internationalists supported the Chinese stand whereas the nationalists backed India; centrists took a neutral view. Prominent leaders including S.A. Dange were in the nationalist faction. B. T. Ranadive, P. Sundarayya, P. C. Joshi, Basavapunnaiah, Jyoti Basu, and Harkishan Singh Surjeet were among those supported China. Ajoy Ghosh was the prominent person in the centrist faction. In general, most of Bengal Communist leaders supported China and most others supported India.[3] Hundreds of CPI leaders, accused of being pro-Chinese were imprisoned. Some of the nationalists were also imprisoned, as they used to express their opinion only in party forums, and CPI's official stand was pro-China. Thousands of Communists were detained without trial.[4] Those targeted by the state accused the pro-Soviet leadership of the CPI of conspiring with the Congress government to ensure their own hegemony over the control of the party.

Ramanujam.

see this link also
1.http://news. rediff.com/ report/2010/jan/18/ the-country-mourns-the-death- of-a-patriot.htm
2.http://en.wikipedia .org/wiki/Communist_Party_ of_India_ (Marxist)


dondu can write this matter in detail so that the younger generation can understand the reality .

Ramanujam

Anonymous said...

the earlier comment matter received by me through email.
ramanujam

Anonymous said...

1.அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி என்ன ஆகும் ?
2.மீண்டும் சகோதர மோதலா?
3.தயாநிதி இன்னும் போட்டியில் இருக்கிறரா?
4.ஸ்டாலின் திமுக-அழகிரி திமுக-கனிமொழி திமுக-மாறன் திமுக இது நடந்துவிடுமோ?

5.இது வரை உப்பை தின்னுவிட்டு ஜீனி சாப்பிட்டது போல் நடந்ததவரின் கதி இனி?

Anonymous said...

/1.அழகிரியாரின் ராஜினமா மிரட்டல்-ஜூவி செய்தி -இனி என்ன ஆகும் ?//

ஆடுகள் மோதும் சிந்தும் குருதி குடிக்கலாம் என என்னும் பார்ப்பன வெறியர்களின் ஆசை நிராசையாய் ஆகும்

//2.மீண்டும் சகோதர மோதலா?//

ஆசை தோசை அப்பள வடை

//3.தயாநிதி இன்னும் போட்டியில் இருக்கிறரா?//

வடிகட்டிய பார்ப்பனக் குசும்பு குண்டாமட்டி

//4.ஸ்டாலின் திமுக-அழகிரி திமுக-கனிமொழி திமுக-மாறன் திமுக இது நடந்துவிடுமோ?//

நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்புன்னு சொல்லும் குடுமிகளின் கேள்வியா இது?

//5.இது வரை உப்பை தின்னுவிட்டு ஜீனி சாப்பிட்டது போல் நடந்ததவரின் கதி இனி?//

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லம் பேய்


யோவ் ஐயரே பெரியார் சரியாத்தான் அய்யர்களை பற்றி சொல்லியுள்ளார்.
மாய்மாலம் பண்ணி பாப்பாத்தி ஆட்சி கொண்டுவரத்தானே இந்த தகுடுதத்தங்கள்.திருந்தவும் இல்லையென்றால் அறப் போராட்டங்கள் மீண்டும் துவங்கப்படும் கறுப்புச் சட்டைகளால்.

நெடுங்கால கழகத்தொண்டன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது