1/21/2010

டோண்டு பதில்கள் - 21.01.2010

அனானி (13.01.2010 காலை 05.40-க்கு கேட்டவர்)
தமிழ் புத்தாண்டை தைமாதம் முதல் நாள் என் தமிழக அரசு அறிவித்த செய்கை பலப் பல விவாதங்களை உருவாக்கிய நிலையில்:
1.மக்களில் பெரும் பகுதியினர் ஏற்றுக் கொண்டனரா? இல்லையா?

பதில்: நிலைமை தெளிவாக இல்லை.

2. அதிமுகவின் நிலை இதில் தெளிவாக இல்லையே?
பதில்: அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய நிலை கொண்டுவரும் வாய்ப்பு உண்டு.

3. எழுத்துச் சீர்திருத்தம் போல் இதற்கும் வரும் காலத்தில் முழு ஆதரவு கிடக்கும் போல் உள்ளதே?
பதில்: எழுத்துச் சீர்த்திருத்தம் ஏற்படுவதற்கு பல காலம் பிடித்தது. இதற்கும் அவ்வாறே அவகாசம் தேவைப்படுமாக இருக்கும்.

4. முற்பட்ட சாதியினர் மட்டும் எதிர்ப்பதாய் கூறப்படும் புகார்கள் பற்றி?
பதில்: பேசாமல் ஓட்டெடுப்பு எடுத்து பார்த்து விடலாம்.

5. கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஜாதகம் மேல் நம்பிக்கை கிடையாது எனும் எண்ணம் உள்ள தங்களின் கருத்து இதில்?
பதில்: தமிழ்ப்புத்தாண்டு என்பது முக்கியமாக தமிழ் இந்துக்களின் நம்பிக்கை பேரில் உள்ளது. அதில் நோண்டுபவர்கள் தமிழகத்துக்காக தனி ஹிஜிரா கணக்கு, ஆங்கில காலண்டர் ஆகியவற்றை கொண்டுவர துணிவார்களா?

அரசின் இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறி ஆக்குகிறது எனும் எதிர்க்கட்சிகளின் குற்ற்ச்சாட்டு
6. இலவசம்தான் ஓட்டுகளை அள்ளுகிறது எனத் தெரிந்தபிறகும் இந்த நிலை மாறுமா?

பதில்: நாட்டு மக்களையே சோம்பேறியாக்கும் இம்மாதிரி திட்டங்கள் கண்டிப்பாக அவர்தம் நலனுக்கு உகந்ததாக இருக்காது என்பதே நிஜம்.

7. வாங்கிய கடன்கள் ரத்து இதில் சேர்த்திதானே?
பதில்: கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் ஜனார்த்தன் பூஜாரிகள், கருணாநிதிகள் ஆகியோர் இருக்கும்வரை இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

8. உணவு, உடை, உறைவிடம் மூன்றும் இலவசமாய் கொடுத்து பொழுது போக டீவியும் கொடுத்த அரசு அடுத்து மக்களை கவர என்ன செய்யும்?
பதில்: டாஸ்மாக்கில் இலவசம்?

9. ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மையானல் அடுத்த தேர்தலுக்கு எவ்வளவு பணம் கைமாறும்?
பதில்: ஓட்டர்கள் எண்ணீக்கையை வைத்து பெருக்கிப் பார்த்து கொள்ளுங்களேன். பெருக்கல் வாய்ப்பாடு ஸ்கூலில் சொல்லித் தரவில்லையா?

10. திமுக ஆட்சியில் தமிழக வளர்ச்சி விகிதம் சரிவு எனும் அதிமுக தலைவியின் குற்றச்சாட்டு உண்மையா? புள்ளிவிபரம் சரியா?
பதில்: அவர் என்ன புள்ளிவிவரங்கள் தந்தார் எனத் தெரியாது. ஆனாலும் பொதுவாக குறைகிறது என்பது சரியே.

எம்ஜிஆர் முயற்சியால் முதல்வர் ஆனேன் அதை கடைவரை மறக்க மாட்டேன் என கலைஞரின் உருக்கமான பேச்சு
11.இந்த நினைப்பு கூட அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்கு இல்லாதது சரியா?

பதில்: இந்த உருக்கமெல்லாம் புருடா. முதற்கண் எம்.ஜி.ஆரிடம் இவர் பட்ட தோல்வி அனுபவங்கள் மறக்க முடியாதவை. அதுவும் வேறு தருணத்தில் எம்.ஜி.ஆர். இந்திராவிடம் 1980-ல் தோற்றபோது தானே அத்தோல்வியை வரவழைத்தவர் என்ற மாயைக்கு உள்ளாகி மனிதர் அவரது மந்திரி சபையைக் கலைக்கச் செய்து பரிதாபகரமாக மண்ணைக் கவ்வினார். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை அவர்தான் முதன்மந்திரி.

மற்றப்படி எம்ஜிஆர் பெயரை உபயோகித்துத்தான் ஜெயலலிதா பதவிக்கு வந்தார் என்பது உண்மையானாலும்,. கூர்ந்து பார்த்தால் கடைசி காலத்தில் எம்ஜிஆரே ஜெயலலிதாவை தவிர்க்கப் பார்த்திருக்கிறார். அவர் உயிருடன் இன்னும் சில காலம் இருந்திருந்தால் ஜெ பதவிக்கே வந்திருந்திருக்க முடியாது. இதுவும் நிஜமே.

12. அதிமுக உள்கட்சி தேர்தலில் குழம்பியுள்ள தொண்டர்களை மேலும் குழப்பவா?
பதில்: அதிமுகவில் உட்கட்சி தேர்தலா, அதுவும் சுதந்திரமான தேர்தலா? இது என்ன புதுக்கதை?

13. இவ்வளவு கரிசனம் உள்ள திமுக தலைவர் ஏன் எம்ஜிஆரை கடசியை விட்டு நீக்கினார்?
பதில்: அது அவர் தன் வாழ்நாளிலேயே செய்த பெரிய தவறு. அதற்கான விலை 13 ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். எம்.ஜி.ஆரை தோற்கடிக்கவே முடியாத அவரது ஆயாசம்.

14. அண்ணாவின் மறைவுக்கு பின்னால் நடந்த திமுக தலைவர் தேர்தலில் எம்ஜிஆரின் திடிர் அணி மாற்றம் உண்மையில் என்ன நடந்தது?
பதில்: நான் அறிந்தவரை முதலியார்களின் ஆதிக்கத்தை கட்சியில் தவிர்க்க அவர் எண்ணினார் என்பதே. மேலும் நெடுஞ்செழியனுக்கு கருணாநிதிக்கு இருந்த அளவுக்கு அடிமட்ட தொண்டர்கள் ஆதரவு அதிகம் கிடையாது.

15. இன்னும் எம்ஜிஆரின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது என்ற தகவல்-தலைவரின் இந்தப் பேச்சு தொடர்பு உண்டா?
பதில்: எம்ஜிஆரையே பார்க்காத புதிய தலைமுறை வந்து விட்டது. இன்னமும் அவரது ஓட்டு வங்கியின் சதவிகிதம் அப்படியே இருக்கும் என நான் நம்பவில்லை.

14-01-2009 லிருந்து 13-01-2010 வரை நடந்த செயல்கள், சாதனைகள், குறைபாடுகள், பேச்சுக்கள், சாதனைகள், வெற்றிகள், சந்தித்த இடர்கள், குணநல மாற்றங்கள் இவற்றின் அடிப்படையில் இவர்களை ஒப்பிடுக?
16. திரு மோடி-திரு கருணாநிதி
பதில்: மலை-மடு. சாதனையாளரையும் வேதனையாளரையுமா கம்பேர் செய்வது?

17. திரு அத்வானி-திரு மன்மோஹன்சிங்
பதில்: அத்வானி பிரதமராக வந்திருந்தால் மற்றவர் மாதிரி பெயரளவுக்கே பிரதமராக எல்லாம் செயல் பட்டிருக்க மாட்டார்.

18. அதிபர்அனில் அம்பானி-அதிபர் முகேஸ் அம்பானி
பதில்: ஒரு முகேஷ் அம்பானி கிட்டத்தட்ட ரெண்டு அனில் அம்பானிக்கு சமமா இருப்பார் போல தோணறதே?

19. உலக நாயகன் கமல்-சூப்பர் ஸ்டார் ரஜினி
பதில்: திறமை-முகராசி

20. தேமுதிக வி.காந்த்-சமதா சரத்
பதில்: புள்ளிவிவர அலம்பல்-சித்தப்பா

21. சன்டீவி-கலைஞர்டீவி
பதில்: நிஜம்-பின் தொடரும் நிழல்

22. தமிழக அரசு-கேரள அரசு-நதிநீர் பிரச்சனை
பதில்: கெஞ்சல்-மிஞ்சல்

23. சீனா-இந்தியா-எல்லை பிரச்சனை
பதில்: மிஞ்சல்-கெஞ்சல்

24. முற்போக்கு பதிவர் “ர”-பிரபல பதிவர் “க”
பதில்: யார்-யார்???

25. டோண்டு-பெரியார் கொள்கை காக்கும் பதிவர்கள்
பதில்: மொழிபெயர்ப்பு - முழிபெயர்ப்பு

26. தமிழ்மணம் திரட்டி-தமிழிஷ் திரட்டி
பதில்: சீனியர் - ஜூனியர்

27. துணை முதல்வர் ஸ்டாலின் -மத்திய அமைச்சர் அழகிரி
பதில்: ராஜீவ் காந்தி - சஞ்சய் காந்தி

28. அமைச்சர் ராஜா-அமைச்சர் தயாநிதி
பதில்: ஒரே குட்டையில் ஊறிய எஃபக்ட்

29. சிபிஎம்வரதராஜன் -சிபிஐ தா.பாண்டியன்
பதில்: அவ்வளவா இருவர் பற்றியும் தெரியாது, ஆகவே ஒப்பிடல் இல்லை

30. சினிமா பழைய பிரபல சினிமா இயக்குனர்கள்-சாதனை புரியும் புது இளம் இயக்குனர்கள்
பதில்: திரைக்கதையில் கவனம் - தொழிற்நுட்பத்தில் அக்கறை

31. கனிமொழி கருணாநிதி - சசிகலா நடராஜன்
பதில்: சேர்த்துக் கொள்ளலாம் - கொள்ளலாகாது

32. பின்னுட்டபுயல்கள்-வால்பையன் -உ.தமிழன்
மற்றவர்கள் பதிவில் சரமாரியான பின்னூட்டம்-தனது பதிவில் பின்னூட்டங்களுக்கு சரமாரியாக தனிப்பட்ட முறையில் பதில்கள்


அனானி (17.01.2010 காலை 06.47-க்கு கேட்டவர்)
ஒரு கற்பனை.சோவும் டோண்டுவும் சந்தித்தால். சோ கேட்கும் கேள்விகளுக்கு டோண்டு என்ன பதில் சொல்லுவார். (மாலை 5 மணிக்கு சந்திப்பு என் ஏற்பாடு. நங்கநல்லுரிலிருந்து டோண்டுவின் கார் புறப்பட்டு சோவின் இல்லத்தை 0530க்குதான் அடைகிறது. பரஸ்பர நமஸ்காரம் தெரிவித்து பேட்டி ஆரம்பமாகிறது).

சோவின் கேள்விகள்:
1.வணக்கம். வழக்கம் போல் லேட்டா ஏன்?

பதில்: (பதில் உங்களுக்கு). கேட்கவே முடியாத கேள்வி. சோவுக்கு என் வழக்கம் என்னவ்ன்று தெரியாது. மேலும் எனது பலமே நேரத்துக்கு செல்வதுதான்.

2. துக்ளக் எத்தனை வருசமா படிக்கிறீங்க?
பதில்: நாற்பது ஆண்டுகளாக.

3. அதுலே உங்களுக்கு புடித்த பகுதி,பிடிக்காத பகுதி?
பதில்: கேள்வி பதில் அதிகம் பிடிக்கும், பிடிக்காததுன்னு ஒண்ணுமே இல்லை.

4. என்ன மாற்றம் செய்தால் பழைய சர்குலேசன் வரும்?
பதில்: இருக்கும் சர்குலேஷனுக்கு என்ன குறைவு?

5. துக்ளக் ஆண்டுவிழாவில் யாருமே துக்ளக் பற்றி பேசவில்லையே ஏன்?
பதில்: இல்லையே பேசினார்களே. ஒருவர் கூட இந்து மகாசமுத்திரத் தொடர் வரும் பக்கங்களில் காகிதத்தின் தரத்தை உயர்த்தினால் பைண்ட் செய்து வைத்துக் கொள்ளலாம் எனக்கூறினாரே.

6. இதுவும் கருணாநிதியின் சதியா?
பதில்: இதுக்கெல்லாம் அவருக்கெங்கே நேரம் இருக்கு? மானாட மயிலாட பார்க்கவே நேரம் போதவில்லையே.

7. உங்கள் பிளாக்கில் என்னப் பற்றிய தனிப் பதிவுகள் தொடராய் வந்தது முன்பு .இப்போது எழுதாதற்கு காரணம் உண்டா?
பதில்: எங்கே பிராமணன் பதிவுகள் எல்லாவர்றிலும் சோ என்னும் லேபலும் உண்டே.

8. எங்கே பிராமணன் தொடர் இரண்டுவுக்கு வரவேற்பு எப்படி?
பதில்: அற்புதமான சீரியல்.

9. இணையத்தில் அல்லது குறுந்தகட்டில் என் நாடகம் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில்?
பதில்: இல்லை

10. அடுத்த துக்ளக் ஆண்டு விழாவில், அரசியல், நாடகம், சினிமா, சட்டத்துறை,
இதழியல்துறை, கம்பெனி நிதி நிர்வாகம் என மாறுபட்ட ஆறு கேள்விகள் கேட்கும் வாய்ப்பு கொடுத்தால் என்ன கேட்பீர்கள்?

பதில்: நான் கேட்க நினைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். அது பின்வருமாறு: சமீபத்ட்ய்ஹில் 1972-ல் வெளிவந்த யாருக்கும் வெட்கமில்லை என்னும் நாடகத்தில் sita சட்டம் பற்றி கூறி அதன் குறையையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதை வைத்து ஏதாவது பொதுநல வழக்கு போட இயலுமா?

ராமானுஜம்:
1. What about the long leftist rule by com jothi basu in west bengal?
பதில்: அது அந்த மாநிலத்தின் துர்பாக்கியம். தொழில்கள் எல்லாம் மேற்கு வங்கத்தை விட்டு ஓடச்செய்தது இந்த ஆட்சிதான்.

2.Who has prevented him from becoming p.m of Indian at that time?
பதில்: வேறு யார், அவருடைய மார்க்சிஸ்ட் கட்சியினரேதான். பிறகுதான் அவர்களுக்கு தாங்கள் செய்த மடத்தனம் பற்றி புரிந்தது. ஆனால் ஒன்று, நாட்டைப் பொருத்தவரை நல்ல மடத்தனம்.

3. It is repeatedly told by vaiKo that he is very close to jothi basu. is it true or political trick?
பதில்: க்ளொசாக இருந்தேன் என்கிறாரா அல்லது இருக்கிறேன் என்கிறாரா?

4.Will it be possible for left communists to regain the political strength in parliament in future in the light of changed feelings of indian people?
பதில்: இடது கம்யூனிஸ்ட்களுக்கு போக்கிடம் குறைவே. 2004-ன் நிலை அடிக்கடி திரும்ப வராது. அப்போது தங்கள பயங்காட்டலை அவர்கள் அளவுக்கதிகமாக செய்ததில் அவர்களுக்குத்தான் நட்டம். இப்போது அந்த சௌகரியமான நிலை கிடைக்காது. கண்டிப்பாக அவர்கள் பி.ஜே.பி.யிடம் செல்ல இயலாது. காங்கிரசுடனும் சுமுக உறவு இல்லை.

5. Because of left support the bank employees' unions are achieving all high demands (When pension is denied for government employees, the same is allowed to bank staff and they can give revised option for pension. This benefit is extended to retired people also) form government of india by simple one or two day strike.Why it is not possible for others who is also backed by these communists?
பதில்: வங்கிகளின் நிலைமையே வேறு. முதற்கண் வீ.ஆர்.எஸ். மூலம் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. மேலும், வங்கிகள் பணம் செய்யும் மையங்கள். மற்ற அரசு துறைகள் (உதாரணம் மத்தியப் பொதுப்பணித் துறை) பணம் செலவழிகும் மையங்கள். ஆகவே இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. வங்கி யூனியன்கள் முதலிலிருந்தே விழிப்பாகச் செயல்பட்டு வந்துள்ளன. ஆகவே நீங்கள் சொல்வது வியப்பளிக்கவில்லை.

மற்றப்படி அரசு ஊழியர்களுக்கு பென்சன் மறுக்கப் படுகிறதா? இது என்ன புதுக்கதை?

கந்தசாமி
1. தொழிற்சாலைகளுக்கு மாலை நேரத்தில் கூடுதல் கட்டணத்தில் மின்சப்ளை -ரயில்வே தத்கால் மாதிரியா!
பதில்: இந்திய மின்சார விதிகள்படி இது செல்லுமா எனத் தெரியவில்லை. அவ்வாறு அதிகக் கட்டணம் வசூலிக்க வழிமுறை ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. நிற்க. மின்சாரம் ஒழுங்காக தர வக்கில்லாதவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

2. அறுவடை இயந்திரத் தரகர்களால் சம்பா நெல் விவசாயிகள் பாதிப்பு -தரகனும் பிழைக்கவேணாமா!
பதில்: ஏன் கூடாது, மிகப்பெரிய தரகனான அரசியல்வாதியே பிழைக்கும்போது சின்னத் தரகன் ஏன் பிழைக்ககூடாது?

3. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வெற்றிடம்: ஜெயலலிதா-அதிமுக வழியிலா!
பதில்: ஏற்கனவேயே அதிக அளவில் வெற்றிடங்கள் இருக்கும் அந்த இயக்கத்தில் புதிதாக என்ன வந்து விட்டது?

4. மதவாதத்துக்கு எதிராக போராடியவர்: சோனியா இரங்கல் -இந்த டயலாக்க விடமாட்டார்களா!
பதில்: மேற்கு வங்கத்தை பொருளாதாரப் படுகுழியில் தள்ளியவர் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும்.

5. அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்ட நரசிம்ம ராவ் வகுத்த ரகசிய திட்டம்!-வெறும் வாய்க்கு அவலா!
பதில்: ராமர் கோவிலும் வேண்டாம், மசூதியும் வேண்டாம், நைட்கிளப் அங்கு ஆரம்பியுங்கள் ஓகோன்னு வரும்னு ஒரு உள்ளூர்க்காரர் கூறியதாக சமீபத்தில் 1993-ல் படித்தது நினைவுக்கு வருகிறது.

6. ஜோதி பாசுவின் கை நழுவிய பிரதமர் பதவி! -கைக்கு எட்டியதை தட்டி விட்டது யாரு!
பதில்: இதே பதிவில், மேலே உள்ள கேள்வி ஒன்றில் இதற்கான பதில் வந்து விட்டது.

7. மூன்றரை ஆண்டு டாக்டர் படிப்பு: மத்திய அரசு விரைவில் அறிமுகம் -ஷார்ட் கட் டாக்டரா!
பதில்: ஏதாவது எல்.எம்.பி. படிப்பாக இருந்து தொலைக்கப் போகிறது.

8. ரிசர்வ் வங்கிக்கு பெண் கவர்னர்: பிரணாப் - இனி எல்லாம் சக்தி மயமா!
பதில்: இது என்ன பெண்கள் வகிக்கக்கூடாத பதவியா என்ன?

9. சப​ரி​மலை உண்​டி​யல் வசூல் ரூ.119 கோடி - நல்ல வேளை கோவில் கேரளத்தில் இருக்கு!
பதில்: தமிழகத்தில் நான்கைந்து பங்குகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.

10. ஏழைகள் மீது அக்கறை காட்டும் நிதிக் கொள்கைகள் தேவை: மன்மோகன் சிங் - இப்படி பேசவாவது செய்தால் தானே வண்டி ஓடும்!
பதில்: வழக்கமாக உலகெங்கும் அரசியல் வாதிகள் பேசுவதுதான், இதிலென்ன அதிசயம்?

அடுத்தவாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

Anonymous said...

மாதம் 100 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 'ஷாக்' : மின் கட்டணம் உயரும் என மின் வாரியம் புது விளக்கம்

1.ஆண்டுக்கு 5000 கோடி நஷ்டம் என்னும் போது கடணத்தை உயர்த்தாமல் எப்படி அரசால் முடியும்?
2.அரசின் கணக்குப்படி 20 லட்சம் ஓட்டுக்கள் மட்டும் திமுகவுக்கு நஷ்டம் போல் தெரிகிறது?
3.இதிலும் தொலைபேசி மாதிரி தனியார் பெருவாரியாய் நுழைந்தால் கட்டணம் கிடு கிடு என குறையுமா?
4.ஆண்டுக்கு 5000 கோடி இழப்பு இருக்கும் போது அரசு மின்வாரிய பணியாளர்களுக்கு மத்திய அரசை விட அதிகமாய் (40 %)சம்பள உய்ர்வு ஏன்?
5.தமிழக அரசுத்துறைகளில் 100 % ஊழல் இங்குதான் எனும் பேச்சு பற்றி?

Anonymous said...

//
24. முற்போக்கு பதிவர் “ர”-பிரபல பதிவர் “க”
பதில்: யார்-யார்???//

முற்போக்கு கொள் கைகள் கொண்டவர்.நெருப்பின் அனலை அடைமொழியாய் கொண்டவர்.டோண்டுவின் நண்பர்.அவர் ஈரெழுத்து பதிவர்.

டோண்டுவிடம் வாரம் வாரம் கேள்வி கேட்பவரின் பெயரும் இவர் பெயரும் ஒன்று.வெளிநாட்டில் இருந்தாலும் வாத்யார் சுப்பையாவுக்கு நல்ல நண்பர். இசை குழலுதும் பதிவர்

வால்பையன் said...

//கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஜாதகம் மேல் நம்பிக்கை கிடையாது எனும் எண்ணம் உள்ள தங்களின் கருத்து இதில்?//

அப்படி போடு அருவாளை!

வால்பையன் said...

//வாங்கிய கடன்கள் ரத்து இதில் சேர்த்திதானே?//

விவாசாயிகளுக்கு தேவையான மழை இல்லை, நிலம் இல்லை, ஆட்கள் இல்லை, ஆனால் கடன் மட்டும் உண்டு!
கூட்டமா கொண்டு போய் கொன்னுபுடுவோமா!?

Madhavan Srinivasagopalan said...

//16. திரு மோடி-திரு கருணாநிதி
பதில்: மலை-மடு. சாதனையாளரையும் வேதனையாளரையுமா கம்பேர் செய்வது? //

Well said. I was in GJ '97-'09(11.5 yrs). To know the real value of Modiji, go & stay in GJ for some time. But, u need not stay in TN to know abt. CM's attitude in governing.

வால்பையன் said...

//திரு மோடி-திரு கருணாநிதி
பதில்: மலை-மடு. சாதனையாளரையும் வேதனையாளரையுமா கம்பேர் செய்வது? //

உண்மை தான்!

அவர் மலை போல் பிணங்களை குவித்தவர்,
இவர் மடு போல் பிணங்களை குவித்தவர்!

வால்பையன் said...

//அத்வானி பிரதமராக வந்திருந்தால் மற்றவர் மாதிரி பெயரளவுக்கே பிரதமராக எல்லாம் செயல் பட்டிருக்க மாட்டார்.//

ஆமாம்,
ராமர் கோவில் கட்டியே நாட்டை இடித்திருப்பார்!

வால்பையன் said...

// உலக நாயகன் கமல்-சூப்பர் ஸ்டார் ரஜினி
பதில்: திறமை-முகராசி//

முகராசின்னா என்ன!?
ரசினிக்கு திறமையே இல்லைன்னு அர்த்தமா!?

முள்ளும் மலரும்,
ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் நல்ல திறமைக்கு சான்று தானே, அதன் பிறகு கெடுத்தது ரசிகர்கள் தானே, ஏன் ரசினிக்கு இபடி ஒரு அவமானத்தை ஏற்ப்படுத்தனும்!

வால்பையன் said...

//துணை முதல்வர் ஸ்டாலின் -மத்திய அமைச்சர் அழகிரி//

ஸ்டாலின் தொண்டர்களை வைத்து அரசியல் செய்கிறார்,
அழகிரி பணத்தை வைத்து அரசியல் செய்கிறார்!

பணம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது!

வால்பையன் said...

//பின்னுட்டபுயல்கள்-வால்பையன் -உ.தமிழன்
மற்றவர்கள் பதிவில் சரமாரியான பின்னூட்டம்-தனது பதிவில் பின்னூட்டங்களுக்கு சரமாரியாக தனிப்பட்ட முறையில் பதில்கள்//

உண்மைதமிழன் அண்ணனும் முதலில் சராமாரியாக பின்னுட்டியவர் தான், தற்பொழுது அடக்கி வாசிக்கிறார்!

வால்பையன் said...

//அதுலே உங்களுக்கு புடித்த பகுதி,பிடிக்காத பகுதி?
பதில்: கேள்வி பதில் அதிகம் பிடிக்கும், பிடிக்காததுன்னு ஒண்ணுமே இல்லை.//

பின் பக்கத்துல ஒரு விளம்பரம் வருமாமே, அது கூடவா பிடிக்கும்!

வால்பையன் said...

//What about the long leftist rule by com jothi basu in west bengal?
பதில்: அது அந்த மாநிலத்தின் துர்பாக்கியம். தொழில்கள் எல்லாம் மேற்கு வங்கத்தை விட்டு ஓடச்செய்தது இந்த ஆட்சிதான்.//

பின் ஏன் ஐந்து(தானே)முறை வரை வரிசையாக தேர்ந்தெடுத்தார்களாம்! அவரும் இலவச டீவீ கொடுத்தாரா!?

வால்பையன் said...

//Who has prevented him from becoming p.m of Indian at that time?
பதில்: வேறு யார், அவருடைய மார்க்சிஸ்ட் கட்சியினரேதான். பிறகுதான் அவர்களுக்கு தாங்கள் செய்த மடத்தனம் பற்றி புரிந்தது. ஆனால் ஒன்று, நாட்டைப் பொருத்தவரை நல்ல மடத்தனம்.//

ஐந்து வருடம் ஆட்சியை பார்த்த பிறகு தானே அது மடத்தனமா இல்லையான்னு சொல்ல முடியும்!
முன் முடிவுகளுக்கு இருக்கும் ஒரே காரணம் முதலாளித்துவ பற்று தானே!

வால்பையன் said...

//It is repeatedly told by vaiKo that he is very close to jothi basu. is it true or political trick?
பதில்: க்ளொசாக இருந்தேன் என்கிறாரா அல்லது இருக்கிறேன் என்கிறாரா? //


:)

அப்படி பார்த்தா கருணாநிதி தானே வெரி க்ளோஸ்!

வால்பையன் said...

//தொழிற்சாலைகளுக்கு மாலை நேரத்தில் கூடுதல் கட்டணத்தில் மின்சப்ளை -ரயில்வே தத்கால் மாதிரியா!//

இன்னைக்கு பேப்பர் பார்க்கலையா!?
வீட்டில் ஃபேன், தொலைகாட்சி பெட்டி, ஃப்ரிட்ஜ் வைத்திருந்தால் கூடுதல் மின் கட்டணம்!

இதற்காக தான் இலவச டீவீ கொடுத்துருப்பாங்களே! கையில் ஆயிரம் கொடுத்து மாதாமாதம் நூறு ருபாயாக ஆயுளுக்கும் புடுங்குவது,
கந்து வட்டியை விட மோசமா இருக்கே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

//மதவாதத்துக்கு எதிராக போராடியவர்: சோனியா இரங்கல் -இந்த டயலாக்க விடமாட்டார்களா!
பதில்: மேற்கு வங்கத்தை பொருளாதாரப் படுகுழியில் தள்ளியவர் என்பதையும் சேர்த்து சொல்ல வேண்டும்.//

மேற்கு வங்கம் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது!?
புள்ளிவிபரம் கிடைக்குமா!?

சுட்டி கொடுத்தாலும் பரவாயில்லை!

வால்பையன் said...

//ரிசர்வ் வங்கிக்கு பெண் கவர்னர்: பிரணாப் - இனி எல்லாம் சக்தி மயமா!
பதில்: இது என்ன பெண்கள் வகிக்கக்கூடாத பதவியா என்ன?//

அதானே!?

வால்பையன் said...

//சப​ரி​மலை உண்​டி​யல் வசூல் ரூ.119 கோடி - நல்ல வேளை கோவில் கேரளத்தில் இருக்கு!//

நாட்டில் இன்னும் பலபேர் சோறில்லாமல் இருக்கிறார்கள்!

Anonymous said...

அரசியல் தலைவர்கள் ,பிரபல நடிகர்,நடிகைகள் வீடுகளில் வருமான வரி ரெய்டு,ஆவணங்கள் பறிமுதல்.

6.இதற்கும் அரசியல் சாயம் சிலரால் பூசப்படுவதில் உண்மை உண்டா?
7.திமுகவில் பிளவு போது கூட இந்த ஆயுதம் எம்ஜீஆர் மேல் பாய்ந்ததது என் சொல்லபட்டதே?
8.ஜெ மீது போடப்பட்ட வழக்குகளின் கதி?
9.திமுக இந்த செயலுக்காக இந்தத்துறையில் துணை மந்திரியாவது தொடர்ந்து வைத்துள்ளது பற்றி?
10.இந்தத் துறையில் இதுவரை இருந்தவர்களில் சிறப்பான நடுநிலையான செயல்பாடு யாருடையது?

கிருஷ்ண மூர்த்தி S said...

வால்பையன் புரியாமல் கேட்டது:
/பின் ஏன் ஐந்து(தானே)முறை வரை வரிசையாக தேர்ந்தெடுத்தார்களாம்! அவரும் இலவச டீவீ கொடுத்தாரா!?/

இலவச டீவீயை விட மோசம்! வங்காளிகளில் இரண்டு பிரிவு உண்டு. பரம்பரையாக அங்கேயே குடியிருப்பவர்கள். இவர்களுடைய வாக்கு ஒருபோதும் இடதுசாரிகளுக்கு விழுவதில்லை!

மற்றொன்று வங்காளதேசத்தில் அகதிகளாகவும் ஊடுருவியும் வந்து குடியேறியவர்கள். இந்த இரண்டாவது பிரிவின் இரட்சகராகவும், அண்டைமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக ஒண்டுகிற பீகார், ஒரிசா மாநிலங்களில் இருந்து வருபவர்கள், இவர்களை வைத்தும் தான் இன்னமும் அங்கே மார்க்சிஸ்ட் கட்சியால் குதிரை ஓட்ட முடிகிறது!

கள்ள ஒட்டு திமுகவின் பலம் என்றால், இந்த மாதிரி கள்ளத் தனமான வாக்காளர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரும் பலம்!

மார்க்சிஸ்ட் கட்சியின் பலமாக வங்காளம் இருப்பது இந்தியாவின் பலவீனமாகத் தான் உண்மையிலேயே இருக்கிறது!

இப்படிச் சொல்லும்போதே, இதெல்லாம் அவர்கள் ஆட்சியில் இருக்கிறவரை தான்! ஆட்சியை இழந்தால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை சரியும்! தொழிற் சங்கங்கள் காணாமல் போகும்!ஆதரவாளர்கள் காற்றோடு போய்விடுவார்கள்! இது முன்னாலும் நடந்திருக்கிறது!

கேரளாவில் கொஞ்சம் வித்தியாசம்! அங்கே 69 க்கு மவுசு ஜாஸ்தி! என்ன சாதனை அல்லது சோதனை பண்ணினாலும், மலையாளிகள், மாற்றி மாற்றித் தான் தேர்ந்தெடுத்து ஆட்சியைப் பிடிக்க விடுவார்கள்!

Suresh Ram said...

5. துக்ளக் ஆண்டுவிழாவில் யாருமே துக்ளக் பற்றி பேசவில்லையே ஏன்?

தலைப்பு " இன்றைய அரசியல் நிலை" அல்லவா?

Madhavan Srinivasagopalan said...

Dondu's comments/reactions please, on the following.

1) "ஊனமுற்றவர்களுக்கு பல திட்டங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எனது மனம் பெரியது. ", இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். (ref: http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6359

2) ஒரே வாரத்தில் 4வது தாக்குதல்: ஆஸி.,யில் இந்தியர்கள் பரிதாபம் ; இனவெறியில்‌‌‌லை என கெவின் ருட் மறுப்பு. (Ref. http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1713 )

3) விலைவாசியை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசின் அறிவிப்பு, "ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூடுதலாக 10 கிலோ அரிசி : 2 மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு" (http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6354)

4) 44 நிகர் நிலை பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தினை ரத்து செய்ய பரிந்துரை, "நாட்டின் இன்றைய கல்லூரிக்கல்வியின் நிலை"

5) சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட எனது வலைப்பூவின் மணம் உங்களை வந்தடைந்ததா ? என்னைபோன்ற இளம் வ(க)லைஞர்களை நீங்களும் ஊக்குவிக்கலாமே.


Thanks.

வால்பையன் said...

//வங்காளதேசத்தில் அகதிகளாகவும் ஊடுருவியும் வந்து குடியேறியவர்கள். இந்த இரண்டாவது பிரிவின் இரட்சகராகவும், அண்டைமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக ஒண்டுகிற பீகார், ஒரிசா மாநிலங்களில் இருந்து வருபவர்கள், இவர்களை வைத்தும் தான் இன்னமும் அங்கே மார்க்சிஸ்ட் கட்சியால் குதிரை ஓட்ட முடிகிறது!//

இது ஒன்றும் தேசத்துரோகமாக தெரியவில்லையே!
எல்லாம் நம் மக்கள் தானே! வருகிறார்கள் ஏன், தொழில் வளம் இருப்பதால் தானே! ஆனால் டோண்டு சார், அங்கே தொழிலே முடங்கி போச்சுன்னு தானே சொன்னார்!

அவர்கள் ஆட்சியை பிடிக்க என்னமோ செய்கிறார்கள், அடுத்த முறையும் ஆட்சிக்கு வர என்னவாவது செய்யனும் தானே!

இப்போ புரிந்தே கேட்கிறேன்!

Anonymous said...

வால், ஒவ்வொரு கேள்விக்கும் உங்கள் பதிலை தனி பின்னூட்டமாக இடுவது ஏன்?

-மணிகுமார்

வால்பையன் said...

//வால், ஒவ்வொரு கேள்விக்கும் உங்கள் பதிலை தனி பின்னூட்டமாக இடுவது ஏன்? //

பொழுதுபோகத் தான்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது