1/01/2010

வெஸ்டர்ன் டாயிலட்டை வெறுப்பவரா நீங்கள்?

முதற்கண் பதிவர் வேலனது இப்பதிவுக்கு நன்றி.

சமீபத்தில் 1960-ல் கலைவாணர் அரங்கம் குழந்தைகள் அரங்கமாக இருந்தது. அங்கு டாயிலெட்டில் சாதாரணமாக நம்வீடுகளில் காணப்படும் இந்தியன் கிளாசட்டுகள்தான் முதலில் இருந்தன. திடீரென சில வெஸ்டர்ன் கிளாசட்டுகளும் போடப்பட்டன. எனக்கு அப்போது அவற்றை உபயோகிக்கத் தெரியாது. மெனக்கெட்டு அதில் காலைவைத்து குந்தியவாறு உட்காருவதுதான் நடந்தது. அதன் மேல் அப்படியே ஸ்டூலில் உட்காருவதுபோல உட்கார வேண்டும் என்ற அறிவெல்லாம் இல்லை.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.-ல் வரும் கருணாசும் ஒரு காட்சியில் அப்படித்தான் அமர்ந்திருக்கிறார் என நினைக்கிறேன். அதை காட்டாவிட்டாலும் டயலாக்கிலிருந்து அதை ஊகிக்கலாம். அதாவது “இங்கிலீஷ் கக்கூஸ், ஹைட் வேற, எங்காவது மிஸ்ஸாச்சுன்னா”.

அதுக்கப்புறம் அதையெல்லாம் எப்படி உபயோகப்படுத்தறதுங்கறதை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேங்கறது வேற விஷயம். அது இப்போ இங்க வாணாம்.

நண்பர் கோவி கண்ணன் கூறியதை ஏற்று, எவ்வாறு உட்கார வேண்டும், எவ்வாறு உட்காரக்கூடாது என்பதற்கான இருபடங்களும் கீழே தரப்பட்டுள்ளன. X போட்டது செய்யக்கூடாதது என்று கூறவும் வேண்டுமோ?



பை தி வே, சில ஆண்டுகளுக்கு என்னிடம் தமிழ் மொழிபெயர்ப்புக்காக இந்த பவர் பாயிண்ட் கோப்பு வந்ததும் நடுங்கி விட்டேன். எவ்வளவு பெரிய விபத்திலிருந்து தப்பித்திருக்கிறேன் என்பதை நினைக்கக்கூட பயமாக இருந்தது. அந்த கோப்பை இங்கு பொது நலம் கருதி வெளியிடுகிறேன். தமிழ் மொழிபெயர்ப்பு என்னுடையது.

சில படங்கள் மகா கண்ணறாவியாகத்தானிருக்கும். ஆனால் ஆபத்தைத் தவிர்க்கணுமே. அல்லாருக்கும் சொல்லி சுதாரிப்பா இருக்கச் சொல்லுங்கப்பூ. சாப்பிடறதுக்கு முன்னாடியெல்லாம் பாத்துத் தொலைக்காதீங்க.

இப்போ கோப்புக்கு போகலாமா? பலகீனமான இதயம் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்.


இந்திய கிளாசட்டுக்கு பழக்கப்பட்டவர்கள் வெஸ்டர் க்ளாசட்டை வெறுப்பது இயற்கையே. ஆனால் அதற்காக அவற்றைத் தவறான முறையில் பயன்படுத்தாதீர்கள் என்றுதான் கூறவியலும்.

உட்காருவதற்காக ஒரு ரிங் சீட் உண்டு. அது உபயோகத்தில் இல்லாதபோது அதை உயர்த்தி வைப்பது நலம். அதன்றி அது பொருத்தப்பட்ட நிலையில் இருந்தால், அறிவில்லாமல் சிலர் நின்றவாக்கிலேயே அதன் மேல் சிறுநீர் கழிப்பார்கள். அடுத்து வருபவனைப் பற்றி அறிவோ அக்கறையோ இல்லாத சமூக துரோகிகள் அவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

39 comments:

hayyram said...

சார், எனக்கு உடம்பெல்லாம் கூசுது அத பாத்த உடனே! எதுக்கும் பலகீனமான இதையம் உள்ளவர்கள் பார்க்கவேண்டாம்ன்னு போட்டுட்டா தேவலை சார்.

ஏதாவது செய்யுங்க. எனக்கும் வெஸ்டர்ன் டாய்லெட் புடிக்கவே புடிக்காது. என்ன பன்றது ஆபீஸ்ல் அந்த கருமத்த தானே வெக்கறாங்க. டிஸ்யூ பேப்பர் தான் காப்பாத்துது இதுவரை.

நன்றி

Anonymous said...

// உட்காருவதற்காக ஒரு ரிங் சீட் உண்டு. அது உபயோகத்தில் இல்லாதபோது அதை உயர்த்தி வைப்பது நலம். அதன்றி அது பொருத்தப்பட்ட நிலையில் இருந்தால், அறிவில்லாமல் சிலர் நின்றவாக்கிலேயே அதன் மேல் சிறுநீர் கழிப்பார்கள். அடுத்து வருபவனைப் பற்றி அறிவோ அக்கறையோ இல்லாத சமூக துரோகிகள் அவர்கள். //


Well said !!

Anonymous said...

அய்யா என‌து கேள்விக‌ள்..

1) த‌ங்க‌ளை காநதி ரேஞ்ஜுக்கும் க‌வ‌ர்ன‌ர் ரேஞ்ஜுக்கும் ப‌ல‌ர் கேள்வி கேட்ப‌தும், நீங்களும் பெரிய‌ ப‌ருப்பு போல‌ ப‌தில் சொல்வ‌தும் எப்ப‌டி முடிகிற‌து? இம்மாதிரி ஆட்க‌ளை எப்ப‌டி செட்ட‌ப் செய்கிறீர்க‌ள்?

2)ப‌ல‌ கேள்விக‌ளுக்கு உருப்ப‌டியாக‌ ப‌தில் சொல்லாது, "அவ‌ர்க‌ளைத்தான் கேட்க‌வேண்டும்" என்ற‌ ரீதியில் ப‌திலளிப்ப‌து ஏன்?

கோம‌ண‌கிருட்டின‌ன்

dondu(#11168674346665545885) said...

@கோமணகிருட்டினன்

முதல் கேள்விக்கு பதில் இரண்டாம் கேள்வியிலேயே அடங்கியுள்ளது.

செட்டப் செய்து கொள்பவன் இம்மாதிரியெல்லாம் பதிலளிக்கத் தெரியாத விஷயங்களை எல்லாம் கேள்விகளாக செட்டப் செய்ய மாட்டானல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஸ்ரீநி said...

idhu indhapadhippu kurithadu andru, ayinum ungal email id kidaikkaamayaal pinnootamaai podugiraen.
http://sangadhi.blogspot.com/2009/12/1.html
vikky66@gmail.com
neengal, kuttinaalum magizhvaen

வலைஞன் said...

ஐயா கோம‌ண‌கிருட்டின‌ன்,

எனக்கும் உங்களிடம் ஒரு கேள்வி உள்ளது:
இது உங்கள் பெற்றோர் வைத்த பெயரா அல்லது புனைப்பெயரா?
நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல பதிவு. எனது கருத்து, நம் நாட்டிற்கு நம் "டைப்" க்லோசெட்தான் சுகாதாரமானது & பாதுகாப்பானது. மேற்கத்தியர்கள் முடிச்ச அப்புறம் "துடைத்தல்" மட்டும் செய்வதால் அவர்களுக்கு அவர்கள் "டைப்" வசதி. நாம் ஏன் அதை பயன் படுத்த வேண்டும்.

Anonymous said...

// வலைஞன் said...

ஐயா கோம‌ண‌கிருட்டின‌ன்,

எனக்கும் உங்களிடம் ஒரு கேள்வி உள்ளது:
இது உங்கள் பெற்றோர் வைத்த பெயரா அல்லது புனைப்பெயரா?
நன்றி//

dOnduvukku therinthavar thaan

Rajan said...

Romba nalla irukku......

Anonymous said...

I am 100% sure thatthe female in the pictures is not wounded by a toilet. It looked like she was wounded by a bomb blast!!!

Anonymous said...

11.உலகம் முழுவதும் ஆண்கள், தங்கள் தொப்பையையும், பெண்கள், உடல் பருமனையும் குறைக்க செய்யும் முயற்சிகள் எப்படி பலனளிக்கிறது?
12.சமூகத்தின் மீதான சிந்தனை இக்கால இளைஞர்களுக்கு இருக்கிறதா?
13.ஒரு பகுதியினருக்கு பிழைக்க வழி தெரியவில்லை... இது, யாருடைய தவறு?
14. இதில் எது டாப்-வளை ஓசை... கொலுசு ஓசை?
15.வாழும்போது மனைவியின் பெருமித செயல்களை அடிக்கடி பாராட்டும் கணவன்கள்

R.Gopi said...

A very good and useful article Dondu Sir....

kailash,hyderabad said...

My god!
Very horrible.
Alarming and useful post.

Anonymous said...

16.பரவலாய் பேசப்படும்
சிக்ஸ் பேக்... சிக்ஸ்பேக்னு சொல்றாங்களே.. அப்படின்னா என்ன ?
17. அதில் நம் நடிகர்களில் நம்பர் ஒன் யார்?
18.இது பெண்களுக்கும் சாத்யமா?
19.அரசியல் வரலாற்றில் நேர்மையின் அடையாளங்களாய் வாழ்ந்த காந்தி, காமராஜர், கக்கன் போன்றோர் இருந்து... தேர்தலில் நின்றால்?
20.மாகாணி, அரைக்கால் வாய்ப்பாட்டில் வாழ்ந்த மனிதனின் ஞாபக சக்திக்கு , கால்குலேட்டர், செல்போன் (மெமரி) கம்ப்யூட்டர் எல்லாம் , வேட்டுவைத்து விட்டது என்பது உண்மை தானே.

ரவிஷா said...

அனானி கேட்டது “பரவலாய் பேசப்படும் சிக்ஸ் பேக்... சிக்ஸ்பேக்னு சொல்றாங்களே.. அப்படின்னா என்ன ?”

பதில்: வயிற்றின் சதைகளை தொப்பை இல்லாமல் உருட்டி திரட்டி - எக்ஸர்சைஸ் - செய்து வைத்துருப்பதை சிக்ஸ் பேக் என்கிறாகள்! பக்கத்துக்கு மூன்று வீதம் ஆறு இருப்பதால் சிக்ஸ் பேக்! சில பேர் எய்ட் பேக்கும் வைத்துருப்பது உண்டு! ஆங்கிலத்தில் சொன்னால் Six Pack Abs or Eight Pack Abs! கொசுறு தகவல்:அமெரிக்காவில், ஆறு பீர் கேன்களை (beer cans) ஒரு பேக் (pack) என்று சொல்லி சூப்பர் மார்க்கெட்டில் விற்பார்கள்!

கோவி.கண்ணன் said...

//உட்காருவதற்காக ஒரு ரிங் சீட் உண்டு.//

வயதானவர்களுக்கும் உடல் குறையுற்றோர்களுக்கும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகள் தான் வசதி. எழுந்திருக்கும் சிரமம் இருக்காது, ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாலும் தொடைப் பகுதியும் வலிக்காது.

அடிபட்ட படமெல்லாம் போட்டு இருக்கும் நீங்கள், அதில் எப்படி உட்காருவது என்கிற கொஞ்சம் டீசண்டான படத்தையும் போட்டு இருக்கலாம், எஸ்வீசேகர் பற்றிய தகவல் / பேட்டி / கட்டுரை ஒன்று பழைய ஆனந்த விகடனில் 15 ஆண்டுகளுக்கு முன் அவர் மகன் (குழந்தையாக இருந்த போது) வெஸ்டர்ன் டாய்லட்டில் அமர்ந்திருப்பது போன்ற படத்துடன் வந்து இருந்தது.

dondu(#11168674346665545885) said...

@கோவி கண்ணன்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. படங்களைச் சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை, நான் கல்லூரி இறுதி ஆண்டில் பயணச் சுற்றுலா சென்ற போது இது போல ஏறி உக்காந்துதான் போனேன். ஆனால் இப்போது தினமும் சரியான முறையில் போகின்றேன். இப்ப பிரச்சனை வேற மாதிரி இருக்கு. இது போல சொகுசா உக்காந்து இப்ப பாம்பே கழிவறையில் கால்கள் மடக்கி அமர முடியவில்லை. ஊரில் உறவினர்களின் வீட்டில் இல்லாமல் விருந்தும் சாப்பிட்டு, அமர்ந்து கழிக்க முடியாமல் முதல் ஜந்து நாளுக்கு படும் கஷ்டம். காமடிதான். நன்றி இராகவன் அய்யா.

Madhavan Srinivasagopalan said...

// Anonymous Anonymous said...

I am 100% sure thatthe female in the pictures is not wounded by a toilet. It looked like she was wounded by a bomb blast!!! //

I too feel the same.. 'wounds' shown here do not seem to be, of the type said so here.

Burn/fire/blast might be the reason..

May be the 'bomb' was kept inside western toilet..!

dondu(#11168674346665545885) said...

படங்களில் காட்டப்பட்டவை உண்மையிலேயே டாய்லட் கிளாசட்டால் ஏற்பட்டதா என சந்தேகப்படுகிறார்கள் சிலர். ஒன்று செய்யலாம் அவர்கள். வெஸ்ட்ர்ன் டாயிலட்டில் அம்மாதிரி குந்தி உட்கார்ந்து பார்த்து கொள்ளட்டும். கிளாசட் உடைந்து அடிப்பட்டால் எவ்வாறு இருக்கிறது என்பதையும் படங்களாக எடுத்து அனுப்பட்டும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Rajan said...

எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்.

Anonymous said...

ஜெஸ்டஸ் என்னாச்சு சார். நல்ல கட்டத்தில தொடரும் போட்டுட்டு விட்டுடீங்களே ??? சீக்கிரம் தொடரை வெளியிடவும்.

ராஜாராம்

Madhavan Srinivasagopalan said...

//படங்களில் காட்டப்பட்டவை உண்மையிலேயே டாய்லட் கிளாசட்டால் ஏற்பட்டதா என சந்தேகப்படுகிறார்கள் சிலர். ஒன்று செய்யலாம் அவர்கள். வெஸ்ட்ர்ன் டாயிலட்டில் அம்மாதிரி குந்தி உட்கார்ந்து பார்த்து கொள்ளட்டும். கிளாசட் உடைந்து அடிப்பட்டால் எவ்வாறு இருக்கிறது என்பதையும் படங்களாக எடுத்து அனுப்பட்டும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன் //

Dear & respected Sir,

I am not intended to say that information given in this article is wrong. In fact thanks are due, for an eye-opening article. But, I am not really convinced that these wounds are due to the cause mentioned in this article.

Sorry, if you are hurt by my comment(s).

Anonymous said...

கேள்வி பதில் பதிவுக்கானது

1) மேலை நாடுகளில் டாய்லட்டுகளில் தண்ணீர் இருப்பதில்லை. டாய்லட்டின் கதவும் முழுவதும் கிடையாது. கீழே இடைவெளி இருக்கும் (வெர்ஜின் மொபைல் விளம்பரம் பார்ப்பதுண்டா). தண்ணீர் இல்லாமல் எப்படி டிஸ்யூ காகிதம் மட்டும் கொண்டு நமது ஆசனவாயை க்ளீன் செய்யமுடியும் ? இதனால் சுகாதாரக் கேடு ஏற்படாதோ ?

2) மேலை நாட்டினர் இதுமாதிரி தண்ணீர் கொண்டு தங்கள் ஆசனவாயை க்ளீன் செய்யாததால் எப்படி அவர்களுக்கு தொற்று மற்றும் பிற நோய்கள் வராமல் உள்ளது ?

3) மேலை நாடுகளில் டாய்லட் செல்லும் போது தண்ணீர் வெண்டுமென்றால் - ஒரு பாட்டிலில், சொம்பில் தண்ணீர் எப்படி எடுத்துச் செல்வது ? (மற்றவர்களுக்கு இடையே (பொது கழிப்பறைகளில்) எடுத்துச்செல்ல தயக்கமாக இருக்கிறதே ?

சுரேஷ்குமார்

Anonymous said...

டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.செம்மொழி மாநாடு: கோவையில் சாலைகளை மேம்படுத்த 59 கோடி ஒதுக்கீடு -அட்ரா சக்கை அட்ரா சக்கை!
2.ஓய்வு பெற்றவர்களுக்கு தேர்தல் பணியா? தேர்தல் ஆணையத்துக்கு ஜெயலலிதா கடிதம் - அய்யோ பாவம் ஜெ!
3.
ஓய்வு பெற்றவர்களுக்கு பணி: வைகோ கண்டனம் - ஜெ ஐ குஷி படுத்தவா?
4.தபால் நிலையங்களில் முகவரி அடையாள அட்டை விநியோகம் -அவங்களும் செய்யாத வேலையில்லை!
5.அருந்ததியர்க்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு: வேலைவாய்ப்பு பதிவில் மறுப்பதாக குற்றச்சாட்டு -ஆண்டவன் கொடுத்தாலும் இந்த பூசாரிகள்!
6.அமெரிக்கர்களை துரத்தும் பயங்கரவாத பகீர் : விமானநிலையத்தில் நுழைந்த மர்ம மனிதன் -அடுத்து?
7. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இல்லை : அடக்கி வாசிக்கும் இலங்கை கடற்படை -சோழியன் குடுமி!
8.தூக்க மாத்திரை கொடுத்து கணவன் படு கொலை: நாடகம் ஆடிய மனைவி,கள்ளக்காதலனுடன் கைது-காமம் கண் மறைக்கும்!
9.பாக்.,கிற்கு சீனா ஆயுதம்: மந்திரி கிருஷ்ணா கவலை-முதலையும் மூர்க்கனும்!
10.வன்னியர்கள் வீணாகி விட்டோம்: ராமதாஸ் 'விரக்தி'--எதுக்கு அடி போடுகிறாரோ!

கந்தசாமி.

கோவி.கண்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
@கோவி கண்ணன்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. படங்களைச் சேர்த்து விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

படத்துக்கு நன்றி !

:)

வெஸ்டர்ன் டாய்லெட் கொஞ்சம் சிறுசாக சரியான அமைப்பில் இல்லை என்றால் ஆண்களுக்கு சங்கடமும் உண்டு.:)

சங்கர்லால் said...

21.தமிழகத்தில் எந்த அரசியல் தலைவரை இலகுவாக சந்தித்து பேச முடியும்?
22.உங்கள் சொந்த அனுபவம் எப்படி?
23.பத்திரிக்கைகள்/நிகழ்வுகள்/சம்பாஷனைகள் இவற்றில் சமீபத்தில்(கடந்த ஒரு வருடத்திற்குள்)நீங்கள் படித்து/கேட்டு, ரசித்த ஜோக் ?
24.தற்சமயம் உங்கள் மோடி ஆட்சியில் காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் மதுவிலக்கு சட்டம் எப்படி கடைபிடிக்கப்படுகிறது?
25.இந்தியாவில் உள்ள, "சாப்ட்வேர்' நிறுவனங்களில் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துவிட்டதே. அமெரிக்காவில் நிலமை சரியாய் விட்டதா?
26.இந்த மீட்சிக்கு அதிபர் ஒபாமாவின் நடவடிக்கைதான் காரணமா?
27.பொதுவாய் இது போல் பொருளாதார தேக்க நிலமை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் என்பதில் உண்மை உண்டா?
28.செழிப்பாய் செல்லும் வளர்ச்சி வேகம் பின்னோக்கி செல்வது ஏன்?
29.சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே க்களில் முக்கியமான,உபயோகமான தகவல் ஏதும் உண்டா?
30.ஈ.வெ.ரா. வையும், அண்ணாதுரையையும் விட, கருணாநிதி சிறந்தவர்(சமூக நிதி காப்பதில்) என வரலாறு சொல்லி மகிழுமா?
31.மக்கள் நலத்திடங்கள் தேர்தலை குறி வைத்து செய்ப்படவில்லை எனும் கருணாநிதியின் அறிவிப்புக்குப்பிறகும் இந்த எதிர் கட்சிகளின் தொல்லை ?
32.முடி சூட்டு விழாவிற்கு ஜூன் வரை காதிருக்கமுடியாது என தலைவருக்கு கொடுக்கபடும் நெருக்கம் என வரும் கிசு கிசு பற்றி?

thiruchchikkaaran said...

This is an useful article. I have been using western toilet for the past 12 years. Initially, I was clueless as how to use it and struggled for a while, but later comfortable with that.

In my opinion, western toilet is much more comfortable than the Indian Type. Its more useful especially for elderly people and for sick people.

When we use western toilet, we need not balance our body with foot, as we sit naturallay there is a greater balance.

The Lady shown in the picture - its very hard to understand that the wound is due to the falling at western toilet- I can even say that its impossible to have such wounds due to Western toilet.

Are the western toilets made out of Ceramic or Blade? Are the western toilets fitted with "Arivaalmanai"?

When I will construct my House, I will provide with all western closets at all bath rooms, except for only one room- where I will provide Indian closet - for those guuestswho are not comfortable with western toilets!

Madhavan Srinivasagopalan said...

// thiruchchi said..."In my opinion, western toilet is much more comfortable than the Indian Type. Its more useful especially for elderly people and for sick people." //


Yes, for elderly & sick p'ple, but ... I read "Squatting is the easiest, most natural and healthiest position for defecation." from http://www.toilet-related-ailments.com/squatting-versus-sitting.html
And I experience the same.

'Western closets' with both sitting & squatting options are available (I don't know how to upload figure, hence giving the link here..) as can be seen from http://upload.wikimedia.org/wikipedia/commons/4/4d/Pedestal-squat-toilet.jpg

Anonymous said...

now in the market hybrid version is available.both types are combined,normal and bombay types .
COMBINATION

Universal P/S

clik this link for full details
http://www.eparryware.com/product/product.asp?imgName=1&parentid=1&sparentid=5

thiruchchikkaaran said...

//படங்களில் காட்டப்பட்டவை உண்மையிலேயே டாய்லட் கிளாசட்டால் ஏற்பட்டதா என சந்தேகப்படுகிறார்கள் சிலர். ஒன்று செய்யலாம் அவர்கள். வெஸ்ட்ர்ன் டாயிலட்டில் அம்மாதிரி குந்தி உட்கார்ந்து பார்த்து கொள்ளட்டும். கிளாசட் உடைந்து அடிப்பட்டால் எவ்வாறு இருக்கிறது என்பதையும் படங்களாக எடுத்து அனுப்பட்டும். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

The chances that the western closet break up due to weight of the person is very rare. I never heard of any such incident.

Ok, assuming that the western closet breaks and the person / lady fell into the broken part. Even if some one fell, they may get scratches or bruises due to the falling down. Of course they are not falling from 3 metres heigh, they are falling from a maximum height of one feet.

This lady if fell into the broken closet, at the worst case may get small deep cut in the back side of the thighs, that is below the buttocks.

But this lady has a deep, very deep and wide cut in the back side of the thighs , as well as in the front part of the thigs also. that means a deep cut at the part of the thigh below the stomach.

This could have been possible, only when the lady after falling into the broken closet, get up and again fell into the closet with the front portion of the body facing the broken closet.

This brutal injury of the lady with so deep and wide cuts, looks like some one has cut this ladys thighs with a broad and big sword or knife.

Its painful joke that Dondu sir showers his Aaseervaathams on readers to try themselves by falling into broken western closet. How to get a broken western clost? Do we have to break the closet in our house with hammer? Even if we fell on a broken closet, we may end up with minor bruises only.

Dondu sir is all out to prove that this injury is due to closet? HoW did the lady got a wound in the front portion of her Thighs? Did any one broke the western clost, kept the broken piece in the front portion of the thigh of the lady and hacksawed her front thigh?

Can Dondu sir leave up his anger, instead see the reason?

ரமணா said...

1.ஹெல்மெட் கட்டாயம் ஆதாயம் யாருக்கு இந்த முறை?
2.ஆர்டிஓ அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை பாவ்லா அடுத்து எப்போ?
3.அண்டுக்கு 3 லட்சம் காங்கிரிட் வீடுகள் குடிசை வாசிகளுக்கு.அடுத்த அறுவடை ?
4.இன்றைய தமிழ்க அரசியல் வாதிகளில் பெரும் பணக்காரர் -இப்போதைய நிலவரம்?
5.ஜக்குபாய் விவகாரம் எப்படி நடந்ததது?

Anonymous said...

intha varushathoda modal pathivey kakoosa pathithaanaa?

thiruchchikkaaran said...

//intha varushathoda modal pathivey kakoosa pathithaanaa?

January 06, 2010 9:29 PM//



அத‌னால் என்ன‌?


முத‌ல் ப‌திவில் வெஸ்டெர்ன் கிலாச‌ட் ப‌ற்றி எழுதினால், வ‌ருட‌ம் முழுவ‌தும் வாந்தி பேதி வ‌ருமா?

ஏன் இப்ப‌டி மூட‌ ந‌ம்பிக்கையுட‌ன் சிந்திக்கிறீர்க‌ள், ந‌ண்ப‌ரே?

Anonymous said...

//ஏன் இப்ப‌டி மூட‌ ந‌ம்பிக்கையுட‌ன் சிந்திக்கிறீர்க‌ள், ந‌ண்ப‌ரே?//

அப்டி இல்ல நண்பா சும்மா டோண்டு சார கலாய்க்க தான்..

vignaani said...

I have not opened the attachemnt.

Indian closet should be preferred for the sheer economy of water usage. More so in a country like India, all the more in TamilNadu.

When the number of toilets is moe than one, one could be western.

T.Duraivel said...

சிலர் அந்த பெண்மணியின் காயம் உடைந்த பீங்கானால் ஏரற்பட்டிருக்கமுடியாது என நினைக்க்கின்றனர். நான் ஒரு பிளம்பர் வேலை செய்யும்போது டாய்லெட் சீட் உடைந்து இதே போல் கால் பாதத்தினை கிழித்துக்கொண்டு வந்திருந்ததை இராயப்பேட்ட மருத்துவமணையில் பார்த்திருக்கிறேன். உடைந்த பீங்கான் துண்டு உடைந்த கண்ணாடித்துண்டிற்கு சமமானது. கால் அழுத்தத்தில் உடைந்து அப்பெண்மணி விழும்போது பென்சில் சீவுவதுபோல் அவருடைய உடம்பினை ஆழமாக உள்ளிறங்கி சீவியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறியவே உண்டு.

நிரூபன் said...

வணக்கம் சகோ, நீங்கள் தந்த இணைப்பின் மூலம்,
பீங்கான் உடைந்தால் எப்படியிருக்கும் எனும் விளைவினைப் பார்த்தேன்,
கடவுள் அருளால் தெய்வாதீனமாக நான் தப்பி விட்டேன், நல்ல வேளை நான் இப்படி உட்கார்ந்து பின் பக்கத்தில் வெட்டுக் காயம் வாங்கி ஹாஸ்பிட்டல் போகலை..

நிரூபன் said...

dondu Said...

நீங்கள் செய்தது மிகவும் ஆபத்தான விஷயம். அந்த பீங்கான் உடைந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை அறிய எனது இப்பதிவில் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.

http://dondu.blogspot.com/2010/01/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்//

ஆஹா....ஆஹா... இப்புடியெல்லாம் யோசித்திருக்கிறீங்களா..கண்டிப்பாக உங்க வலைக்கு வந்து பார்க்கிறேன் சகோ, நன்றிகள் சகோ.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது