pt
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தமிழகத்தில் திமுக கூட்டணியில் 63 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் அந்த ஃபார்முலா வேலைசெய்யாது என சூசகமாகத் தெரிவித்துள்ளது.மேற்குவங்க தேர்தல் திரிணமூல் காங்கிரஸ்
பதில்: நியாயம்தானே. திருணாமுல் காங்கிரசுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட காங்கிரஸ் சந்தர்ப்பம் அளிக்கவில்லையே. ஆகவே பிளாக்மெயில் செய்ய வாய்ப்பு லேது.
கேள்வி-2. சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் உள்ள 79 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து மக்களவையில் இன்று கவலை தெரிவிக்கப்பட்டது.
பதில்: ஒரு சுண்டைக்காய் நாட்டை அடக்க உலக நாடுகளுக்கு துப்பில்லையா? எல்லா நாடுகளுமாக சேர்ந்து போர்க்கப்பல் எஸ்கார்ட் செர்வீஸை முறை வைத்து செய்து, அப்படி வரும் கொள்ளையரை ஒட்டு மொத்தமாக சுட்டு கைலாயம் அனுப்புவதே வழி. சிறையெல்லாம் பிடிக்கக் கூடாது. இல்லாவிடில் கொள்ளையன்களுக்கு தண்டச்சோறு வேறு போட வேண்டும். தேவையானால் சோமாலியாவின் துறைமுகங்களை சேட்டிலைட் போட்டோ மூலம் துல்லியமாக விடாது போட்டோ பிடித்து, கொள்ளையர்கள் இருக்கும் இடங்களை பாம் போட்டு தகர்க்க வேண்டும். செய்ய தில் இருக்கிறதா?
கேள்வி-3. சீனாவிடம் இருந்து நவீன போர்விமானங்களை வாங்கி தங்கள் படையில் சேர்த்த பாகிஸ்தான், கடற்படைத் திறனை அதிகரிக்கும்நோக்கில் தற்போது 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் சீனாவிடம் இருந்து வாங்க.
பதில்: பாகிஸ்தான் ஒரு சுதந்திர நாடு. தனது நலனை பார்த்துக் கொள்ள வேண்டியது அதன் கடமை. இதில் ஆட்சேபம் தெரிவிக்க என்ன இருக்கிறது? இந்தியா விழிப்பாக இருந்தால் போதும்.
கேள்வி-4. மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என்பதை வலியுறுத்தி மார்ச் 14-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக அறிவித்துள்ளது
பதில்: எனக்கு இந்த விவகாரம் புரியவில்லை. மருத்துவர் புரூனோ இக்கேள்விக்கு இன்னும் ஆதாரபூர்வ பதில்களுடன் விடையளிக்க இயலும்? ஓக்கேவா ப்ரூனோ?
கேள்வி-5. நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது.
பதில்: விட்டுத் தராவிட்டால் என்ற பேச்சுக்கே இடம் இல்லையே. வேறு வழி இல்லைதானே முஸ்லிம் லீகுக்கு.
thenkasi
கேள்வி-6. 2012 ல் உலகம் அழிவதற்கான முன்னோட்டம் தான் ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி என்பது பற்றிய உங்கள் கருத்து?
பதில்: இம்மாதிரியான கேள்விகளுக்கு பாதுகாப்பான ப்தில் அப்படியெல்லாம் அழியாது என்பதே. இதனால் என்ன அனுகூலம் என்றால், உண்மையிலேயே அம்மாதிரி அழியாமல் உலகம் இருந்தால் எனது பதிலளிக்கும் திறன் போற்றப்படும். ஆனால் அழிந்து விட்டால்? அப்புறம் யார் கேள்வி கேட்பது, யார் பதில் சொல்வது? யாருமே மிஞ்ச மாட்டோமே.
ஒரு பிராடு ஜோசியர் எனது நினைவுக்கு வருகிறார். தம்பதியர் வந்து அவரிடம் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் எனக் கேட்டால் தைரியமாக ஆண் குழந்தைதான் எனக் கூறிவிடுவார். அதே நேரம் ஒரு தாளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பெண் குழந்தைதான் எழுதி, அதை ஒரு கவரில் தேதி சீலிட்டு வைத்து விடுவார். ஆண் குழந்தை பிறந்தால் பிரச்சினையில்லை. ஆனால் பெண் குழந்தை பிறந்து அத்தம்பதியர் மெனக்கெட்டு கேட்டால், தனக்கும் அது தெரியும் என்றும், ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மனதை நோகடிக்க விரும்பாததால் அவ்வாறு கூறியதாகவும், அதற்கு ஆதாரமாக அவர்கள் முன்னிலையிலேயே அந்த சீலிட்ட கவரை பிரித்து தாளில் எழுதியதைக் காட்டுவார். எப்புடீ?
கேள்வி-7. பூமியின் அச்சு விலகியுள்ளதாய் வரும் தகவல் இன்னும் என்ன செய்யப் போகிறது?
பதில்: யாருக்கு தெரியும்? யாருக்குத் தெரியும்? கூகளிட்டு பார்த்ததில் இந்தப் பக்கம் கிடைத்தது.
நாம் உணரும் வகையில் மாறுதல்கள் சீதோஷ்ண நிலையில் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
கேள்வி-8. வரும் சுப்பர் முழுநிலவு 19.3.2011 என்ன செய்யப் போகிறது?
இங்கும் கருத்துகள் மாறுபடுகின்றன. இப்பக்கத்தைப் பார்க்கவும்.
மீண்டும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் அடுத்த வியாழனன்று சந்திப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
A novel-writing workshop at Walnut Creek, California.
-
I conducted a workshop on writing novels in Chennai for Manasa
Publications. Now, my friends in the USA are asking me to hold similar
classes there. A one-...
4 hours ago
8 comments:
http://expressbuzz.com/nation/modi%E2%80%99s-%E2%80%98vibrant-gujarat%E2%80%99-draws-income-tax-query/256810.html
இவனுங்க திருந்தவே மாட்டாங்க. உருப்படரவனைய்யும் உருப்பட விடமாட்டாங்க என்பது பொதுக் கருத்து. உங்கள் விமர்சனம், reasoning என்ன?
வருமானவரித் துறை மத்திய அரசின் கைப்பாவையாகி விட்டதையே காட்டுகிறது இச்செய்தி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை எல்லாம் இவ்வாறு கேள்வி கேட்கவில்லையே, குஜராத்தை முன்னணிக்கு கொண்டு செல்வது மோதி என்பதாலேயே அத்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது.
நீயாயஸ்தனாக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருப்பது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும் என்ற கோட்பாட்டின்படி பார்த்தால் வருமான வரித்துறை தேறாவே தேறாதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
.
ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?
அல்லது
வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?
என்றால்,
பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.
.
சோமாலியா நாட்டை ஐரோப்பிய மற்றும் இதர ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுத்தமாக சூரையாடியதன் விளைவே இந்த கடல் கொள்ளையர்களின் பெருக்கம்.
சோமாலியா ஆப்பிரிக்காவின் கொம்பு என்ற அதிமுக்கிய தலத்தில் உள்ள மிக ஏழை நாடு. அந்த நாட்டின் வரும்படிக்கு கோஸ்ட் கார்ட் வைத்து அதன் கடல் எல்லையைப் பாதுகாக்க முடியாது. அதனாலேயே ஐரோப்பிய மற்றும் ஆசிய மீன்பிடிப்படகுகள் (deep sea trawlers) சோமாலிய கடல் பகுதி மீன்களை மொத்தமாகச் சுரண்டி எடுத்துவிட்டன. போதாத குறைக்கு சோமாலிய நாட்டு ஊழல் அரசாங்கத்தை சரிகட்டி ஐரோப்பிய நாடுகள் சோமாலியாவின் கடல் எல்லைக்குள் எக்கச்செக்கக் விஷக்குப்பைகளைக் கொட்டியதால் மீன்களே இல்லாமல் போயின.
மீன் பிடித்தொழிலையே நம்பி வாழும் பல குடும்பங்கள் சீரழிந்தன. இந்த நிலையில் தான் மீனவர்கள் சிலர் கடல் கொள்ளையில் ஈடுபட்டு தங்கள் நாட்டு கடல் பகுதியை பந்தோபஸ்து செய்துகொண்டனர். கடல் கொள்ளையர் பயத்தால் வெளிநாட்டுப் படகுகள் மீன்பிடிப்பு அப்பகுதியில் குறைந்தது. மீன்வளம் பெருகியது. கடல் கொள்ளைத் தொழிலும் அசுரவேகமாக வளர்ச்சி அடைந்து தற்போதய நிலையை எட்டியுள்ளது.
இப்பிரசசனைக்கு சோமாலியாவை பாம் போட்டு காலி செய்தால் நாளை கென்யா, டான்சானியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து கடல் கொள்ளையர்கள் உருவாகி நம்மைப் பயமுருத்துவார்கள். அந்தந்த நாட்டு வளத்தை அந்தந்த நாட்டு அரசுகள் பாதுகாக்கத் தவறினால் நடக்கும் மோசமான விளைவுகளில் ஒன்றே சோமாலியக் கடல்கொள்ளையர்கள். நல்லவேளை இந்தியா கேணைத்தனமாக சில அறிவு (கெட்ட)ஜீவிகள் சொல்வது போல் ராணுவத்தைக் கலைத்திருந்தால் இன்னேரம் இந்திய மீனவர்கள் கடல் கொள்ளையர்கள் ஆகியிருப்பார்கள்.
இலவசம் என்கிற தூண்டில் போடப்பட்டுவிட்டது. எச்சரிக்கை! மக்களே எச்சரிக்கை! http://hayyram.blogspot.com/2011/03/blog-post_19.html
டோண்டுசாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.அதிமுக தலைமையின் தன்னிச்சையான போக்கால் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறது: வைகோ
2. திமுகவின் தேர்தல் அறிக்கை, வறுமையும் ேலைவாய்ப்பின்மையும் அதிகரித்திருப்பதையே காட்டுகிறது: திருப்பூரில் டி.கே.ரங்கராஜன் பேட்டி
3. கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்: தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள்
4.தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் அனுப்பப்பட்ட 321 அரிவாள்கள் பறிமுதல்
5. ராஜீவ் காந்தியை குற்றவாளி என்கிறார் பிரதமர்: .அத்வானி
//சுழியம் said...
ஊழல் ஜெயாவா, ஊழல் கருணாநிதியா, ஊழல் காங்கிரசா?
அல்லது
வாழும் காமராசர் பொன் ராதாகிருஷ்ணனா?
என்றால்,
பொன்ராதாவுக்கே வாக்களிப்பார்கள் தமிழர்கள். வாழ்க பாஜக.//
எந்தத் தேர்தலில்? தயவுசெய்து வருடம் குறிப்பிடவும்....
sir, did u read this
http://www.jeyamohan.in/?p=11930
a beautiful article by jeyamohan.
அது சரி, நீங்க என்ன மொழிபெயர்ப்பில் ரொம்பவே பிஸி ஆகி விட்டீர்களா?
உங்கள் அதிரடியான் இடுக்கைகளின் ரசிகர்களான நாங்கள் அடிக்கடி வந்து ஏமாந்து போகிறோம். அதுவும் தேர்தல் நேரம், தங்களது விமர்சனங்கள் வந்தால் எங்கள் கருத்துக்களுடன் ஒத்துப் பார்த்து இசைவும் மறுப்பும் தெரிவித்து ஒரு மனப்பரிமாற்றமே நிகழ்த்துவோம். அதெல்லாம் இல்லாமல், ஆறிப்போன கஞ்சியைப் பார்ப்பது போல உங்கள் தளத்தைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
தங்கள் ஆசிகளுடன் எனது மேட்ரிசேவா பகுதி வெற்றிகரமாக மூன்றாவது வாரம் தொடரப்போகிறது. அன்பர்கள் தங்களது ப்ரொஃபைலை அனுப்புகிறார்கள். யாருக்கேனும் நன்மை நடந்தால் மகிழ்ச்சி!
உங்கள் தொடர்ந்த தள பங்களிப்பை பகிர்வுகளை தளத்தில் பதியுங்கள். தொடருங்கள். Actually we (if any body join with me or I ) miss you.
Post a Comment