5/14/2011

டோண்டு பதில்கள் - 12.05.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தமிழக அரசுக்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு: திமுக-கருணாநிதி

பதில்: எந்த பத்திரிகைகள், சந்தர்ப்பம் என்ன என்பதை அறியாமல் விமரிசனம் செய்வது சரியல்ல. ஆனால் ஒன்றை மறக்கக் கூடாது. உள்ளூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களுக்கு சரியாகப்பட வேண்டாமா?

கேள்வி-2. கருத்து கணிப்புகள் சரியாகுமா? -கருணாநிதியின் பாராட்டு பெற்ற சோலை, அரசியல் விமர்சகர்
பதில்: கருத்துக் கணிப்புகள் சாதகமாக இருந்தால் அது சரி இல்லையென்றால் இல்லை என பேசுவதில் கருணாநிதி ஜயலலிதா ஆகிய இருவருமே ஒரே போலத்தான்.

கேள்வி-3. மீண்டும் அவரே முதல்வராக வரக்கூடாது: அதற்காக தான் சமதூரத்தை மாற்றினோம்-கேரளாவில்
பதில்: அவர்கள் கூறுவது நியாயமாகத்தான் படுகிறது.

கேள்வி-4. கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்...-ஒரு எச்சரிக்கை
பதில்: படிக்கவே பயங்கரமாக இருக்கிறது. தன் திருமணத்துக்காக கடன் வாங்கி பின்னால் குடும்பமே அழிந்த கதைகளை மதர் இந்தியா சினிமா காலத்திலிருந்தே பார்த்தாயிற்று. கடன் வாங்குவது / கொடுப்பது பற்றி பலரும் பல முறை கூறிவிட்டார்கள். ஆனால் பலன்தான் லேது.

கேள்வி-5. ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், அடுத்தடுத்து பாயும் வழக்குகள் மூலம், தி.மு.க.,வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்ற திட்டம், உயரதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பில் நிச்சயம் நடக்கப் போகிறது என்கின்றனர்-அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள்.
பதில்: ஆட்சி மாற்றம் ஏற்படட்டும் பிறகு பார்க்கலாம்.

கேள்வி-6. 2ஜி விவகாரம்--- 17 மாதங்களாக பிரதமர் மௌனம் ?
பதில்: இதன் பெயர் வெறும் மௌனம் அல்ல. கள்ள மௌனம்.

கேள்வி-7. பயங்கரவாதிகளை நீதிக்குமுன் நிறுத்துவதில் உறுதியாகவுள்ளோம்'---- அதிபர் பராக் ஒபாமா
பதில்: நீதிக்கு முன் நிறுத்துவது என்பது கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். போட்டுத் தள்ளுவது என்பதுதான் அவரை போன்றவர்களுக்கு பிராக்டிகலாகப் படுகிறது என நினைக்கிறேன்.

கேள்வி-8.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது --- சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம்
பதில்: அவர் வேறு எப்படி வாதிட முடியும்?

கேள்வி-9. நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குலும் மும்பைத் தாக்குதலும் ஒன்றல்ல --- அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர்
பதில்: எதிர்வினை ஆற்ற அமெரிக்காவுக்கு வக்கு இருக்கிறது இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் அப்பேச்சின் பொருள். புலியை பார்த்து சூடு போட்டுக் கொள்ளாதே என பூனையிடம் கூறுவதாகவும் கொள்ளலாம்.

கேள்வி-10. அட்சய திருதியை முன்னிட்டு ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை
பதில்: நகை வியாபாரிகளாக கிளப்பிய புருடா நன்கு வேரூன்றிவிட்டது.

ரமணா
கேள்வி-11. வைகோ வை கூட்டணியில் சேர்க்காததற்கு 1000 கோடி கைமாறியதாய் வரும் செய்திகள் உண்மையா?
பதில்: தெரியவில்லையே. உண்மையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கேள்வி-12. திருமாவின் விருதுகள்-பரிசுகள் கூட்டாளிகளுக்கு?
பதில்: பின்னே எதிராளிக்கா தருவார்கள்?

கேள்வி-13. ரஜினியின் உடல்நலம் பற்றி முதல்வரின் நேரடி ஆஸ்பத்திரி விசாரிப்புக்கு ஏதாவது காரணம்?
பதில்: மனித அபிமானமாகக் கூட இருன்க்கலாமே? ஏன் முதல்வரை இவ்விஷயத்தில் சந்தேகப்பட வேண்டும்?

கேள்வி-14. வடிவேலுவுக்கு திரையுலகில் திண்டாட்டமாமே?
பதில்: தேர்தல் ரிசல்டுகள் வரட்டும். அப்போது பல நிலைப்பாடுகள் மாறும்.

கேள்வி-15. சாய்பாபா--ஷிர்டி, பிரசாந்தி நிலையம் ஒப்பிடுக?
பதில்: ஷிர்டி போயிருக்கிறேன். அந்த சாய்பாபா பற்றி படித்ததோடு சரி. பிரசாந்தி போனதில்லை. இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

கேள்வி-16. நேற்று சுமாராக இரண்டு மணி நேரம் தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலாப் பயணிகளாய் வந்திருந்த பலதரப்பட்ட மக்களிடம் பேசியதில் பெரும்பாலோர்கள் திமுக கூட்டணிக்கு எதிராய் வாக்களித்தாய் சொல்லும் போது அந்த ஆங்கிலச் சேனல் திமுக ஆட்சி தொடரும் எனச் சொல்வது எப்படி சாத்தியம்?
பதில்: இது என்ன கூத்து? ஆங்கிலச் சேனல்காரரிடம் பேசியவர்கள் வேறு மாதிரியாகக் கூறியிருந்தால்?

கேள்வி-17. ஓட்டுப்போட கொடுத்த பணமெல்லாம் கோவில் உண்டியலில் போடப்பட்டதாய் அவர்கள் சொன்னதை பார்க்கும் போது?
பதில்: மக்களுக்கு தர்மசிந்தனை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அதே தர்மசிந்தனை கை நீட்டி வாங்கிய காசுக்கு வஞ்சனை செய்யலாகாது என்ற எண்ணமும் சிலரிடம் இருக்கலாமே என்பதுதான் என் கவலை.

கேள்வி-18. கிராமத்து மக்களுக்கு கூட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் வியாபார உலகில் உள்ளது தெளிவாய் தெரிவதை எண்ணுபோது?
பதில்: கிராம மக்களுக்கு பல விஷயங்கள் யதார்த்தமாக புரியும். கனிமொழி விஷயத்தில் உள்ள உள் விவகாரங்கள் பற்றி என்னிடம் விலாவாரியாகப் பேசியவர் இரு கிராமத்தார்தான்.

கேள்வி-19. குருப் பெயர்ச்சி ஜெயலலிதாவுக்கு சாதகம் என வரும் செய்திகள்?
பதில்: அது குருவுக்கு சாதகமாக இருக்குமா?

கேள்வி-20. தமிழ் சினிமா உலகம் சுதந்திரத்தை எதிர்பார்த்து?
பதில்: யாரிடமிருந்து சுதந்திரம்? தமிழகத்தின் முதல் குடும்பத்தாரிடமிருந்தா?

கருத்துக்கணிப்பு சொல்வது போல் திமுக தோற்றால்!
கேள்வி-21. கருணாநிதியின் குடும்பங்களுக்குள் மோதல் வரலாம் என சோவின் கணிப்பு சரியா?

பதில்: அனுமானக் கேள்விகளுக்கு ஓரளவுக்கு மேல் பதில் தருவது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த அனுமானம் எனக்கு உவந்ததாக இருப்பதால் பதிலளித்து விடுகிறேன்.

குடும்பப் பூசல்கள் வரும் எனக் கூறுவதற்கு சோ போன்றவர்களை ஏன் தொந்திரவு செய்ய வேண்டும்? டோண்டு ராகவனே அதை கூறிவிட இயலும்.

கேள்வி-22. சினிமா உலகம் நிம்மதி பெருமூச்சுவிடுமா?.
பதில்: விடும், கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே. பிறகு புது முதல்வருக்கான பாராட்டு விழாக்களையெல்லாம் ஆர்கனைஸ் செய்ய வேண்டியிருக்குமே.

கேள்வி-23. வியாபார உலகம் கொண்டாடுமா?
பதில்: சினிமா உலகம் போலத்தான். கொண்டாடி விட்டு புது அரசின் அதிகார மையங்களை அடையாளம் காணும் காட்சிகள் நடைபெறும்.

கேள்வி-24. சொத்து குவிப்பு வழக்குகளால் இனி வக்கீல் காட்டில் மழை கொட்டுமா?
பதில்: கொட்டும், அதுவும் நீண்ட காலத்துக்கு.

கேள்வி-25. இலங்கை தமிழர் பிரச்சனை இனி திமுகவின் கொட்டு முரசாகுமா?
பதில்: ஆறின கஞ்சி பழங்கஞ்சி.

கேள்வி-26. மீனவர் பிரச்சனையை இனி திமுக கையிலெடுத்து போராடுமா?
பதில்: வேறு வழி?

கேள்வி-27. திமுக, பாஜக இடையே புதிய உறவு மலருமா?
பதில்: அதற்கான தருணம் வர இன்னும் பல நாட்கள் இருக்கின்றனவே.

கேள்வி-28. அதிமுக காங். உடன் கைகோர்ககுமா?
பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

கேள்வி-29. மருத்துவர் அணி மாறுவாரா?
பதில்: மாற மாட்டார் என்கிறீங்களா?

கேள்வி-30. கருணாநிதி முழு நேர இலக்கிய ஆர்வலராய் மாறி இன்னுமொரு புதிய அத்தியாயம் எழுதுவாரா?
பதில்: யார் கண்டார்கள், “சிறையில் பூத்த சின்ன மலர்கள் - 2 வெளிவரலாம்.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7 comments:

hayyram said...

//
கேள்வி-4. கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்...-ஒரு எச்சரிக்கை
பதில்: படிக்கவே பயங்கரமாக இருக்கிறது. தன் திருமணத்துக்காக கடன் வாங்கி பின்னால் குடும்பமே அழிந்த கதைகளை மதர் இந்தியா சினிமா காலத்திலிருந்தே பார்த்தாயிற்று. கடன் வாங்குவது / கொடுப்பது பற்றி பலரும் பல முறை கூறிவிட்டார்கள். ஆனால் பலன்தான் லேது. // தனியார் வங்கிகளெல்லாம் அப்பட்டமாக இதைத்தான் செய்கிறார்கள். என்ன வங்கிகள் ஒரே இடத்தில் இருந்து செய்வதை இந்த கடன்கொடுப்பவர்கள் லாட்ஜ் போட்டு செய்கிறார்கள். வேறு வித்தியாசம் இல்லை.

hayyram said...

டோண்டு சார், படிச்சிட்டு சொல்லுங்க எப்டி இருக்குன்னு!

http://hayyram.blogspot.com/2011/05/blog-post_11.html

dondu(#11168674346665545885) said...

@hayyram
இன்று நான், நாளை நீ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

automation said...

சரி நானும் ஜோசியம் சொல்றேன்.. மொபைல் நம்பர் 420420420420 : இதுநாள் வரை கலர் டீவி, இலவச நிலம், காப்பீட்டு திட்டம் போன்ற அதிர்ஷ்ட கிரகங்களின் சஞ்சாரத்தின் ஆதரவோடு மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்ற அனுகூலமான திசை கருணாநிதிக்கு இருந்தாலும்.. தேர்தலுக்கு முன்னாள் நிகழ்ந்த ஸ்பெக்ட்ரம் கிரகணம் அவருடைய மகள் கனிமொழியின் ஜென்மராசிக்கு பாதகமாக அமைந்தது வெற்றியின் நம்பிக்கையை குறைக்கும் வண்ணமே அமைந்தது.. ஆனாலும் அந்த கிரகணத்தின் பாதிப்பை முழுவதுமாக தங்கள் காவல் தெய்வம் ராஜாவின் மேல் திருப்பி விட்டு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் நேரத்தில் தேர்தல் கமிஷன் கெடுபிடி, ஓட்டுக்கு துட்டு கொடுக்க முடியாமை போன்ற துர் கிரகங்கள் எதிர்பாராமல் அவரது ஜாதக கட்டத்துக்குள் சஞ்சாரித்து விட்டது மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்றே தோன்றுகிறது.. அந்த பக்கம் அம்மாவின் ஜாதகத்தை பார்த்தால் 'தமிழக மக்களுக்கு மாற்றுக்கு இன்னொரு தலைமைக்கு வழி இன்னமும் இல்லை' என்ற வாஸ்து மிக பலமாக அமைந்து விட்டது மிகப்பெரிய பலம்.. தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் சசிகலா குடும்பத்தினர் கூகுள் மேப் பார்த்து தமிழகத்தில் மிச்சம் மீதி இருக்கும் காலி நிலங்களையும் பினாமி பெயரில் வளைத்து போடும் புண்ணிய காரியத்தில் ஈடுபடுவது உசிதமாக இருக்கும்.. அதே நேரத்தில் கருணாநிதி 'ஐயோ என்னையும் என் மகளையும் கொல்றாங்களே' என்ற ஜனாநாயக ஸ்லோகத்தை பிழையின்றி கதற.. ச்சே.. கூற இப்பவே கற்றுகொள்வது மிகமிக உசிதம்....

automation said...

சரி நாம் தமிழகத்தின் வாக்காளர்களின் ஜாதகத்தை பார்ப்போம். தமிழகத்தின் ராசி மேஷம் ( மோஷம் இல்லங்க ) இந்த ராசியின் உருவம் ஆடு இதன்படி ஆடு தானம் கொடுப்பவருக்குத்தான் செம்மறி ஆடு கூட்டம் போல மக்கள் வாக்கு அளிப்பார்கள் . லாப ஸ்தானமான 11 இல் சுக்ரன் இருப்பதால் மக்களுக்கு சுற்றுகிற திசைதான் ! மிக்ஷி கிரைண்டர் பேன் என்று இலவசங்கள் கொட்டும் மின்சார கிரகமான ராகு வும் இதனுடன் சேர்ந்து இருப்பதால் மின்சாரம் அளவுக்கு அதிகமாக கிடைக்கும் .சுவிட்சை ஆப் செய்தாலும் விளக்கு எரிந்துகொண்டே இருக்கும் என்றால் பார்த்து கொள்ளுங்களேன் ! நீர் கிரஹமான சந்திரன் மேஷத்தில் ஸ்தான பெற்றுள்ளதால் விவசாயம் செழித்து விலைவாசி மிக குறைந்த விலைக்கே கிடைக்கும் அரிசி கிலோ 50 காசு க்கு கிடைக்கும் சீனி மூன்று ரூபாய் . ஒரு கிலோ சீனி வாங்கினால் ஒரு லிட்டர் பாம் ஆயில் அல்லது கெரசின் இலவசம் . ரேஷன் கடைக்கு மக்கள் வராததால் ரேஷன் கடைகள் மூடப்படும். ரேஷன் கடைகள் டாஸ்மாக் கடைகளாக மாற்றப்படும். ஞான காரகனான கேது பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தில் இருப்பதால் அரசு ஊழியர்களின் ,மற்றும் M.L A., மந்திரிகளின் ஆடை காவி நிறத்தில்தான் அணிய சட்டம் வரும். இதன் மூலம் அவர்கள் புனிதம் அடைந்து லஞ்சம் வாங்க மாட்டார்கள் ஏற்கனவே வாங்கிய லஞ்ச பணங்களையும் மக்கள் வங்கியில் போட்டு விடுவார்கள் . இவர்களை பார்த்து கோவில் அர்ச்சகர்களும் திருந்தி தட்டில் காசு போடாதவர்களுக்கும் பிரசாதம் கொடுப்பார்கள். அரசு கிரகமான சூரியன் ஒன்பதாம் இடத்தில உள்ளார் அது இரண்டும் கேட்டான் இடம் எனவே ஆண் ஆலும் பெண் ஆலும் இவர்களுக்கு கெடுதல் தான் . ரோஸ் ஆண்டால் இவர்களுக்கு சிறப்பு. தங்க கிரகமான குரு பகவன் இரும்புக்கு அதிபதி ஆனா சனியை ஒன்பதாம் பார்வையால் பார்ப்பதால் இரும்பு தங்கமா மாறிவிடும். அரசு ஏழை பெண்களுக்கு மாங்கல்யதிற்கு நாலு கிலோ தங்கம் இலவசமாக கொடுக்கும். மேலும் குரு பகவான் நெருப்பு கிரகமான செவ்வாயை ஐந்தாம் பார்வையால் பார்ப்பதால் மூலிகை பெட்ரோல் ராம் தன் ஐந்தாம் அறிவோடு ஆறாம் அறிவான அப்துல் கலாம் அவர்களுடன் சேர்ந்து மூலிகை பெற்றோலை கண்டுபிடித்து விடுவார். எனவே பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விளையும் அடுத்த ஆட்சியில் குறைந்து விடும். படிப்புக்கு சொந்த காரனான புதன் பகவான் பத்தில் இருந்து கல்வி கட்டணங்களை குறைத்து விடுவார். அடுத்த ஆட்சியில் யாராக இருந்தாலும் வாக்களர்களுக்கு பொற்காலம் தான். ஆனால் ஒரே ஒரு குறைதான் . மாந்தி எட்டில் இருப்பதால் இவை எல்லாம் மக்கள் தூங்கும் பொது கனவில் மட்டும் கிட்டும்.முழித்து விட்டால் இதெல்லாம் கிட்டாது. கேட்டவன் கிட்டில் கேட்டது ராஜ யோகம் .

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1.தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்: ஜெயலலிதா உறுதி
2.தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது - வைகோ
3.அன்பழகன் முதல் தமிழரசி வரை 18 தி.மு.க. அமைச்சர்கள் தோல்வி
4.கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் வெற்றி
5.50,249 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி

Surya said...

டோண்டு சாரின் "கேள்வி பதில்" பகுதிக்கு.

1) நெடுமாறன் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அவர் கடிதத்தில் சில உண்மைகள் இருந்தாலும் அவரது ஒரு சில கருத்துக்களுக்கும் நடை முறை உண்மைக்கும் சம்பந்தமே இல்லையே! மு.க.வின் தோல்விக்கு அவர் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகமே என்று கூறி உள்ளார். மு.க. தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் தேர்தல் முடிவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து. சீமானும் அப்படிதான் சொல்லிக்கொண்டு திரிகின்றார் (அப்படி என்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எப்படி மு.க. வும் காங்கிரசும் ஜெயித்தார்களாம்?). நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

2)எனக்கென்னவோ அஞ்சா நெஞ்சன் என்று சொல்லிக்கொண்ட அழகிரியை விட ஸ்டாலின் தோல்வியை தைரியமாக சந்திக்கிறார் என்று தோன்றுகிறது. கொளத்தூருக்குப் போய் நன்றி சொல்லி விட்டார் அதற்குள் (பெரு வெற்றி பெற்ற அம்மா கட்சிக் காரர்களே இன்னும் நன்றி நவில வில்லை). அழகிரி வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கிறாரே!

3)கனிக்காக ராம் ஜெத்மாலனி வாதாட ஒத்துக் கொண்டது முறையா? அவர் ஒரு வக்கீல் மட்டும் அல்ல, மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார். மக்கள் அவரிடம் ஒரு "தொழில் முறை" வக்கீலை விட சற்று அதிக அளவில் நாணயத்தை எதிர் பார்ப்பது தவறல்லவே!

4)வீரமணியின் அறிக்கைகளைப் பார்த்தால் அம்மாவிடம் கூடிய சீக்கிரம் சரணாகதி அடையும் நாள் தூரத்தில் இல்லை என்று நினைக்கிறீர்களா?

5)அம்மா அனுபவம் வாய்ந்தவர்களை மந்திரி சபையில் சேர்க்காதது ஏன்? அது தவறா?

6)மோடி எப்படி அம்மாவின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்தார்? மைனாரிட்டி ஒட்டு பயம் போய் விட்டதா அம்மாவுக்கு?

7)அ.தி.மு.க. தொண்டர்கள் பிரவீன் குமார் காலில் விழுந்தார்களாம். எனக்கென்னவோ எல்லாப் புகழும் "சேஷனுக்கே" என்று தோன்றுகிறது. அவர் மட்டும் ஆரம்பித்து வைக்காமல் இருந்திருந்தால் இன்றும் எலெக்க்ஷன் கமிஷன் ஒருன் "டம்மி பீசாகவே" இருந்திருக்கும்.

8)குரேஷியைப் பத்தி அவர் பதவி ஏற்பதற்கு முன் பல விமர்சனங்கள் இருந்தன. அவர் நல்ல படியாகவே செயல் படுவதாகவே தெரிகிறது. ஒரு நல்ல முன் மாதிரி (சேஷன் கோபாலஸ்வாமி போன்ற வர்களுக்கு நன்றி) இருந்தால் யார் எலெக்ஷன் கமிஷனர் ஆனாலும் சரியான படியாகவே செயல் படுவார்கள். என்ன சொல்கிறீர்கள்?

9) சோ "எதிர்க் கட்சி" வேலையை அம்மாவுக்கு எதிராக ஆரம்பித்து விடுவாரா? எவ்வளவு நாள் கொடுப்பார்?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது