டிஸ்கி: மனதை நிறையச் செய்த மோதியின் வெற்றி என்று தலைப்பிட்டவன் இப்போது மட்டும் தோல்வியை குறிப்பிடுகிறேன் என்றால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.
மோதியின் வெற்றிக்கான நேர்மறை காரணங்களே அதிகம். அவருடன் ஒப்பிடும்போது குஜராத்தில் காங்கிரஸ் ஒரு டம்மி காமெடி பீஸ் மட்டுமே. ஆனால் இங்கு அப்படியில்லை ஊழல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிமுகவும் சரி திமுகவும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.
நான் ஏற்கனவேயே பல முறை குறிப்பிட்டபடி 1996 தேர்தலில் அதிமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் 2001-லும் சரி, 2006-லும் சரி அப்போதைய ஆளும் கட்சி ஏற்கும்படியாகவே ஆட்சி செய்து முடித்திருந்தது. கூட்டணிகள் கணக்கு விவகாரங்களில்தான் வெற்றி தோல்வி பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்டன.
ஆனால் 2011-ல் திமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. அதை தமிழக மக்கள் உணர்ந்து செயல் பட்டதற்கு ஒரு ஓ போடுவோம். தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு ஓ. தொங்கு சட்டசபையெல்லாம் கொண்டுவராது ஒரு கட்சிக்கு தெளிவாக ஆட்சிப் பொறுப்பை தந்திருப்பதும் சிறப்புக்குரியதே.
விஜயகாந்த் புத்திசாலித்தனமாக ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. எதிர்க்கட்சித் தல்கைவர் என்ற அந்தஸ்து அவருக்கு பொருத்தமாகவே இருக்கும். திமுகவுக்கு அது கூட கிடைக்கவில்லை என்பதும் மனதுக்கு ஒரு நிறைவைத் தருகிறது.
இனிமேல் என்ன, ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும் அதிமுக. சரியாக நடத்தவில்லையென்றால் 1996-ல் ஏற்பட்ட கதிதான் மீண்டும் என்பதை அக்கட்சி உணருவது அவசியம்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் செய்ய வேண்டியதைச் செய்து சீக்கிரம் கனிமொழியை உள்ளே தள்ள வேண்டும். காங்கிரஸ் புத்திசாலி என்றால் மத்திய ஆட்சியிலிருந்து திமுக அமைச்சர்களை நீக்குவது பற்றி யோசிக்க வேண்டும். செய்யுமா?
இந்தத் தேர்தல் விஷயத்தில் டோண்டு ராகவனாகிய நான் மிகவும் அடக்கி வாசித்தேன். திமுக தோற்கும் என சோ அவர்கள் கூறினாலும் அவ்வளவு நிச்சயமாக நான் இல்லை என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: பிளாக்கர் சொதப்பியதால் நேற்று முழுக்க பதிவுகள் போட முடியாமல் பல வலைப்பதிவாளர்கள் தவித்தனர். எனது டோண்டு பதில்கள் 12.05.2011 காணாமல் போயிற்று. ஆனால் எனது டாஷ்போர்டில் Edit Posts-பக்கத்தில் அது அப்படியே இருந்தது, scheduled for publishing என்ற வரையறையில். உடனே போஸ்டிங் தெரிவில் ஆட்டமேட்டிக் என மாற்றி பப்ளிஷ் செய்து விட்டேன். என்ன டோண்டு பதில்கள் 12.05.2011 சரியாக அந்தத் தேதியில் காலை 5 மணிக்கு வராது 14.05.2011 காலை 04.33-க்கு வந்துள்ளதாக ரிகார்ட் கூறுகிறது, அவ்வளவே.
பின்குறிப்பு-2
தமிழ்ப்புத்தாண்டு அதனுடைய சரியான தினத்துக்கு வைக்கப்படுமா? இந்துக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட கலைஞர் தோற்றதற்கு நான் மகிழ்வது இந்த விஷயத்துக்காகவும்தான்.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
10 hours ago
49 comments:
நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதால் திட்டமிட்டு ப்ளாகர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். தேர்தல் கமிஷன் ஏற்பாடாக இருக்குமோ?
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக இரவு பத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது என பத்திர்க்கை செய்தி வெளியானது. எனக்கென்னமோ திட்டமிட்ட சதி நடந்திருப்பதாகவே தெரிகிறது. தேர்தல் நடக்கும் போதே கதவை சாத்திக்கொண்டு வாக்குச்சாவடிக்குள் அரைமணி நேரம் யாரையும் உள்ளே விடாமல் என்னமோ செய்தவர் ஸ்டாலின். குறைந்த பட்சம் தோற்காமல் இருக்க ஏதோ தில்லு முல்லு நடத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். ஜெ யும் நினைக்கமுடியாத வெற்றி இருப்பதால் தொலைகிறான் விடுங்கள் என்று விட்டிருக்கலாம்.
//ezhil arasu said...
தேர்தல் முடிவின் போக்கு கண்டு தமிழன்னை கண்ணீர் வடிப்பாள்.தனது தலைமகனின் தரும ஆட்சி தொடர வேண்டிய நல் வாய்ப்பை ஊழல் எனும் பொய்க் குற்ற்சாட்டு புனைந்து கூறி சாய்த்து விட்டனர் பார்ப்பனர் கூட்டம்.தலைவன் செய்திட்ட நல்லாட்சியையும்,அளித்திட்ட நலத் திட்டங்களையும் எப்படி தீட்டம் போட்டு மறக்கடித்தனரோ!.இன்று பலிகடாவாய் ஆக்கப்பட்ட தமிழினம் 2014 பாரளுமன்ரத் தேர்தலில் மீண்டும் திமுக,காங் லட்சியக் கூட்டணிக்கு வெற்றி பரிசு தரும்.திமுக ஒரு பீனிக்ஸ் பறவை.அது சாம்பலிருந்து மீண்டும் எழும் .திமுக நண்பனாய் தொடர விரும்பும் காங்கிரசை பிரிக்க நடக்கும் சதிகளை உடன் பிறப்புகள் அறிவர்.அன்னை சோனியாவின் ஆதரவு இருக்கும் வரை கழகத் தொண்டன் கலங்க வேண்டாம்.விட்டில் பூச்சியை விளக்கென எண்ணும் போக்கு மாறும்.இனி தலைவரின் முழு நேரமும் இலங்கை தமிழர் நலன் காக்கவும்,மீனவச் சகோதரர்களை காக்கும் காவல்காரனாய் செயல் படவும் ஒரு நல்ல வாய்ப்பு இயற்கை வழங்கியுள்ளது கண்டு மகிழ்ச்சியே.
இப்போது மறந்தாலும்
1)ஒரு ரூபாய் அரிசி
2)இலவச காஸ்
3)இலவச மருத்துவம் 108
4)இலவச பஸ் பாஸ்
5)இலவச வீடு
6)இலவச நிலம்
7)இலவச லேப்டாப்
8)இலவச மிக்ஸி
ஒரு நாள் முகிலை கிழித்து வெளிவரும் முழு மதியாய் மாறி சூரியக் குடும்பத்தின் ஆட்சியை மீண்டும் 2021 ல் வரச் செய்யும்.///
திமுகவின் தொண்டன் எழில்ராஜவுக்கு கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லையாம்.
இதுவரை மறந்திருந்த இலங்கை பிரச்சனை,மீனவர் நலம் பற்றி அவரது தலைவர் போல் பேசுவது வேடிக்கை.
இருக்கவே இருக்கு பார்ப்பன துவேஷம்.
இனி பெரியார் ரேஞ்சுக்கு எழுதுவார்கள் ,பேசுவார்கள்,ஊடகம் வாயிலாக தீக் கங்குகளை கொட்டுவார்கள் கழகத்தார்.
திமுகவின் இந்தப் படுதோல்விக்கான காரணங்கள் பற்றி துகளக் ஆசிரியர் தெளிவாய் விளக்கிய பிறகும்,இவர்கள் தூங்குவது போல் நடித்தால் நாம் என்ன செய்ய
ஒருவேளை 2ஜி ஸ்பெக்ட்ரம் சிபிஐ முதல் அறிக்கையில் கனிமொழி பெயர் இருந்திருந்தால் திமுக என்னவாயிருக்குமோ
வைகோவும் ஜெயலலிதா அணியில் இருந்திருந்தால்?
தேர்தல் கமிஷன் கடைசி 3 நாட்களில் பல தொகுதிகளில் நடந்த பணப் பட்டுவாடாவை முழுவதும் தடுத்திருந்தால்
சன்டீவிக்கும் திமுக தலைவர் குடுபத்துக்கும் கண்கள் பனிக்காமல் இருந்து நெஞ்சம் கசந்திருந்தால்
காங்கிரஸ் வெளிப்படையாக கை கழுவியிருந்தால்.
ஆனாலும் ஜெயலிதாவின் அரசியல் நடவடிக்கைகளை பொறுத்துதான் இனி திமுகவின் எதிர்காலம்.
கலைஞர் கொடுக்கபட்ட ஓய்வுக்கு மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டார்.
ஆனாலும் இனி யாரும் சினிமா வசனம் எழுதக் கூப்பிடுவாரோ
கனிமொழி,அழகிரி இனி தொடர் வழக்குகளில் பொழுதை போக்க வேண்டும்.
தளபதி ஸ்டாலின் கையில் தான் இனி திமுக
சுன் டீவி சகோதரர்கள் ஜெயலலிதாவின் வெற்றியை பார்த்ததுமே நடுநிலையாளராய் மாறிவிட்டனர்.
திமுகவை வரும் டிசம்பருக்குள் காங்கிரஸ் கைவிடும் என வரும் தகவல்கள் உண்மையானால்
உரலுக்கு ஒரு பக்கம் இடி
மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி
திமுகவுக்கு
1.ஜெயா டீவிக்கு சோ அளித்த பேட்டியில் குஜராத் மோடி போல் ஜெயலலிதா ஆட்சி செய்வார் எனச் சொன்னார்௧ள் நம்புகிறீர்களா?
2.காங்கிரசாரின் அடுத்த மூவ் என்னவாயிருக்கும்?
3.அழகிரியின் வழக்குகள் இனி?
4. கருனாநிதியின் இரண்டு குடுபங்களுக்குள் இனி என்ன நடக்கும்?
5.வைகோவின் அரசியல் எழுச்சி வாய்ப்புண்டா?
6.ஸ்டாலினின் இழுபறி வெற்றி பற்றி?
7.தேர்தல் கமிஷ்னின் கெடுபிடியில் பின்னணியில் யார்?
8.தமிழகத்தில் பாஜகவுக்கு இனி எதிர்காலம்?
9.ராகுல் திட்டம் தமிழகத்தில் தோல்விதானே?
10.ஜெயலலிதாவிடம் ஒரு அசாத்திய அடக்கம் தெரிவது போல் உள்ளதே?
11.பாமகவுக்கு கிடைத்த அடி?
12.திருமாவும் பாவம் தானே?
13.மேல் சபை இனி வருமா?
14. ஆசை ஆசையாய் கருணாநிதி கட்டிய புது சட்டமன்றம் இனி?
15.மின் வெட்டுப் பிரச்சனை சரியாகுமா?
16.உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி மாற்றம் வருமா?
17.இலவச வீட்டு வசதி திட்டம் இனி?
18.ஒரு லடசம் கோடி கடனாமே எப்படி சரி செய்வார் ஜெ.?
19.கள் இறக்க அனுமதி கொடுககப்படுமா? சரியா?
20.இன்னும் 16 வருசத்திற்கு ஜெயலலிதாவின் ஜாதகப் படி அவர்தான் முதல்வராமே?
ராம் , நேற்று முதல் நாள் மதியத்தில் இருந்தே இந்தப் பிரச்சனை போயிட்டு இருக்கு. எதோ அப்டேட் ப்ராப்ளம்.
மற்றபடி கொளத்தூரில் சிவகங்கை பார்முலாதான்
//காங்கிரஸ் புத்திசாலி என்றால் மத்திய ஆட்சியிலிருந்து திமுக அமைச்சர்களை நீக்குவது பற்றி யோசிக்க வேண்டும். செய்யுமா?// சோ சொல்வது பேராயக் கட்சி புனிதப் பசுவா? குறிப்பாக 2G விவகாரத்தில். - சிமுலேஷன்
கண்டிப்பாக தில்லு முல்லு நடந்துள்ளது...
ஆரம்பத்தில் என்னவோ திமுக ஸ்டாலின் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் மட்டும் முன்னிலையில் இருந்தார்..
பிறகு அதிமுக சைதை துரைசாமி முன்னிலை வகித்தார்..
பிரபல NDTV மற்றும் Rediff இணைய தளத்திலும் ஸ்டாலின் தோல்வி என்றே அறிவிக்கபட்டது .....
கடைசியில் இரவு 10 மணிக்கு மேல் அனைத்தும் மாறி விட்டது..
ஜனநாயக முறையில் தேர்தலை முடிந்த வரை நேர்மையாக நடத்திய தேர்தல் கமிஷன் இதையும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்...
அது வரை கொளத்தூர் வெற்றி நிறுத்தி வைக்க வேண்டும்...
//மற்றபடி கொளத்தூரில் சிவகங்கை பார்முலாதான்// ஆம், ஸ்டாலின் கொள்ளைப்புரம் வழியாக வெற்றியை ரகசியமாகப் பெற்றுள்ளார். வெட்கக்கேடு இதைவிட வேறென்ன வேண்டும். இதற்கு கவுரவமாக தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கலாம்.
//hayyram said...
//மற்றபடி கொளத்தூரில் சிவகங்கை பார்முலாதான்// ஆம், ஸ்டாலின் கொள்ளைப்புரம் வழியாக வெற்றியை ரகசியமாகப் பெற்றுள்ளார். வெட்கக்கேடு இதைவிட வேறென்ன வேண்டும். இதற்கு கவுரவமாக தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கலாம்.//
பார்ப்பனர்களுக்கு பயம் வந்து விடது.தலைவனின் தலைமகனின் தம்பியை சட்ட மன்றத்தில் சந்திக்க திரானியில்லாமல் புதுச் சரடு விடுகிறார்கள்.திமுகவின் தற்காலிக் தோல்வி மாறும்.மக்கள் ஏமாற்றப் பட்டோம் என ஒரு வருடத்திற்குள்
தெரிந்து கொள்வார்கள்.ஜெயலலிதாவின் அனைத்து நெருக்கக்டிகளையும் தாண்டி மீன்டும் சூரியன் உதிக்கும்.இது உறுதி.திமுக இனி இலங்கை தமிழர் நலம் காக்கும் காவலனாய் மாறும் .ஸ்டாலின் கலைஞரின் பொதுவாழ்வு நலப் பணியை தொடர்வார்.காங்கிரசும் கை கொடுக்கும்.வரும் உள்ளாட்சி தேர்தல்களில் காட்சி மாறும்.கழகம் மீண்டும் புதுப் பொலிவுடன் மிளிரும்.இதற்கான செயல்களில் தளபதிக்கு திமுக தொண்டர்கள் துணையிருப்பர்
// Simulation said...
//காங்கிரஸ் புத்திசாலி என்றால் மத்திய ஆட்சியிலிருந்து திமுக அமைச்சர்களை நீக்குவது பற்றி யோசிக்க வேண்டும். செய்யுமா?//
ஆசை தோசை அப்பளம் வடை.
//hayyram said...
//மற்றபடி கொளத்தூரில் சிவகங்கை பார்முலாதான்// ஆம், ஸ்டாலின் கொள்ளைப்புரம் வழியாக வெற்றியை ரகசியமாகப் பெற்றுள்ளார். வெட்கக்கேடு இதைவிட வேறென்ன வேண்டும். இதற்கு கவுரவமாக தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கலாம்.//
திமுக கூட்டணியே கொள்ளைப்புரத்தில் புகுந்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்த கும்பல் தான். கொளத்தூரில் இசுடாலின் கொல்லைப்புறம் வழியே வெற்றிக் கனியைத் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்.
திமுக தலைவரின் வெற்றி திருவாரூரில் ஒரு சரித்திரச் சாதனையல்லவா.அந்த மக்களின் நம்பிக்கைக்கு கழகம் என்ன கைமாறு செய்தாலும் தகும். திமுவுக்கு தமிழ்ச் சமுதாயம் எப்படித்தான் செய் நன்றி கொன்றதோ என தமிழன்னை கலங்குகிறாள். பிற தொகுதிகளில் கழகத்துக்கு இழைத்த துரோகம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.ஆதிக்க சக்திகளின் பொய் பிரச்சரத்தில் ஏமந்த தமிழன் இன்னும் எத்துணை முறை ஏமாறுவான் என கருதும் பிற்போக்கு சக்திகளை முறியடிப்போம் ஒற்றுமை காத்து.
http://jeeno.blogspot.com/2011/05/2011.html
And the winners are......Praveen Kumar, Amudha and other election officials. After Seshan's tenure, only now the Election Commission performed their role exemplarily. Kudos to them. It was, however, thought that the race would be neck-to-neck, but this landslide, I believe, could not be anticipated by any one. I agree with Cho when he said, "JJ is a phenomenon". Hopefully, as a commentator observed, JJ would follow 2G - Good Governance.
MGR thayavil(hande)mu.ka.vum,mu.ka.THAYAVIL mooooopnrum,veru vazhiyil pa.si.yum keliththathu appo.elec.com.strongaaka ulla intha electionil ithu saathiyamaa?
To my knowledge, the primary reasons for DMK’s defeat in spite of good governance are,
1. Power Cut
2. Inclusion of PMK and VC might triggered other community voters like (BCs) Mudaliyars, Udayars, Yadavas, Chettiyar etc to vote against DMK.
3. Not giving tickets to new faces, this has resulted in intra party revelries and the people thought why the same people only contesting for ages. Relatives of MLAs occupied Local Body posts and people and party men thought only few relative family benefited.
4. No Control on district and local level party functionaries. This has triggered anger over party candidates. Example Veerapandi Arumugam, MKK Raja etc..
5. More Seats given to alliance parties beyond their capacity.
6. Back stabbing on Eelam Tamil’s issue and became as slave/puppet of congress.
7. Wide projection by Medias as Monopolization in film industry by MK’s family.
8. Not done counter campaign to defend DMK’s stand on 2G and Price raise etc. DMK only concentrated on saying the achievements. TN people, is always interested in counter attacks and highlighting one’s negatives. This is not done properly
இந்த எழில் அரசு போன்றவர்கள் தங்கள் காலை கடன்களை கழிக்க முடியாவிட்டாலும் இது ஆரிய சதி, பூணுல் பேதி என்று பேத்துவது
"ஏதோ ஒன்று எதையோ பார்த்து ????????"
நீங்களே முடிவு செஞ்சிகொங்க...
இனிமே தலைவர் பகுத்தறிவு பகலவனாக அவதரித்து விடுவார். இந்து என்றால் திருடன் என்ற ரீதியில் உளற ஆரம்பிப்பார் என்று நம்புகிறேன். இந்த எழிலரசு என்பவர் இலைகாரன் போல சூரிய வாதி என்று நினைக்கிறேன். அவரின் வஞ்சபுகழ்ச்சி கொஞ்சம் ஓவர்தான்.
6.THE JUDGEMENT IN RESPECT OF BAIL APPLICATION OF MRS.KANIMIZHI, DAUGHTER OF KARUNANIDHI HAS BEEN POSTPONED TO 20/5/2011 INSTEAD OF 14/5/2011.
7.ANY SPECIAL AGENDA FROM CONGRESS.
8.CONG.PRESIDENT CONGRATULATED MISS JEYALALITHA OVER PHONE FOR HER VICTORY.
9.IS IT CORRECT TO SHIFT ASSEMBLY TO ST.GEORGE PORT AS THE NEW PALACE TYPE ASSEMBLY HAS BEEN CONCEIVED BY KARUNANIDHI
10.BJP HAS RECEIVED LESS THAN 5000 VOTES IN ALL ASSEMBLY SEATS EXCEPT K.K DISTRICT.
DONDU'S SPECIAL COMMENT PLEASE?
டோண்டு அவர்களே, இன்னும் ஏன் 1996 பற்றி கூறுகிறீர்கள். அப்போ 2006-ல் ஏன் ஜெ தோற்றார்? என்னமோ மக்கள் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு ஓட்டுப் போடுகிறது போல் சொல்கிறீகளே? அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை. 2001-2006, நியாயமான முறையிலேயே, கொஞ்சம் strict-ஆக ஆண்ட ஜெ, இலவசங்கள் எதுவும் தராததனால், அரசு உழியர்களுக்கு ஆதாயம், செய்யாததனால் இன்னும் இது போன்ற நல்ல செயல்கள் செயததனால் தோற்கடிக்கப்பட்டார். ஒரு முக்காலணா தொலைக்காட்சிக்கு ஆசைப்பட்டு, ஓட்டுப்போட்டு விட்டு இன்றைக்கு கோவணத்தோடு நிற்கின்றனர் சங்கப் புகழ் தமிழர்கள். மறுபடியும் ஜெ 2001-2006 போல் ஆண்டால் 1) அவர் மிக மிக நல்லவர் அல்லது 2) விபரம் தெரியாதவர் (2ம் ஒண்ணுதான்). எப்படிப் பார்த்தாலும் அடுத்த முறை வேறு ஆட்சியை (அன்று என்ன இலவசமோ) மக்கள் கொண்டு வந்து விடத்தான் போகிறர்கள். ஜெ புத்திசாலியாக இருந்தால், 2014 தேர்தலில் காங். உடன் கூட்டணி வைத்து ஜெயித்து மத்தியில் அமைச்சர் பதவிகள் வாங்கி, மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவிக் கொண்டு விட வேண்டும் (அட அப்பக் கூட நமக்கு உறைக்கதுப்பா).
சட்டம் ஒழுங்கு மீளப் பெறுவதற்காகவாவது மாற்றம் நிகழ வேண்டும் என யாசித்து இருந்தேனுங்க...
பணிவுடன்,
பழமைபேசி.
திடுக் செய்தி:
கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுகவின் ஆட்சியில் நடை பெற்ற ஊழல்கள பற்றி
முதல்வர் ஜெயலலிதா விசாரனை செய்யப்போவாதாய் ஜூ.வி18.5.2011
செய்தி வெளியுட்டுள்ளது.
1) 1000 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகம்
2) நிலக்கரி வாங்கிய விவகாரம்
3)உணவுப் பொருட்கள் வாங்கிய முறைகேடு
4) மதுரை அழகிரி செயல்பாடுகள்
5) அனைத்து அமைச்சர்களின் பெரும் சொத்து குவிப்புகள்
அப்பூருவர் படலமும் ஆரம்பம் எனவும் சொல்லுகிறது.
உமா சங்கர் இந்த வழக்குகளை கையாள்வதாய் செய்திகள் சொல்லுகின்றன
1996 - கைது-வழக்குகள்-வரலாறு திரும்புகிறதோ என்னவோ இல்லை அடுத்த உள்ளாட்சி தேர்தலுக்கான முஸ்தீபா
அனானிக்கு வழிவிட்டுட்டீங்க போல இருக்கு!
@hayyram
இப்பதிவில் அனானிமஸ் என்னும் பெயரில் பின்னூட்டமிட்டவரும் ஒரு பதிவரே. அனானிமஸ் என்பது அவரது டிஸ்ப்ளே பெயர்.
அவரும் வலைப்பூ வைத்துள்ளார். இங்கு அவர் பெயர் மேல் க்ளிக் செய்து பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
POINTS ON HOW TO IMPROVE YOUR LIFE
Personality:
1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment
3. Don't overdo; keep your limits
4. Don't take yourself so seriously; no one else does
5. Don't waste your precious energy on gossip
6. Dream more while you are awake
7. Envy is a waste of time. You already have all you need..
8. Forget issues of the past. Don't remind your partner of his/ her mistakes of the past. That will ruin your present happiness.
9. Life is too short to waste time hating anyone. Don't hate others.
10. Make peace with your past so it won't spoil the present
11. No one is in charge of your happiness except you
12. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more
14. You don't have to win every argument. Agree to disagree.
Community:
15. Call your family often
16. Each day give something good to others
17. Forgive everyone for everything
18. Spend time with people over the age of 70 & under the age of 6
19. Try to make at least three people smile each day
20. What other people think of you is none of your business
21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.
Life:
22. Put GOD first in anything and everything that you think, say and do.
23. GOD heals everything
24. Do the right things
25. However good or bad a situation is, it will change
26. No matter how you feel, get up, dress up and show up
27. The best is yet to come
28. Get rid of anything that isn't useful, beautiful or joyful
29. When you awake alive in the morning, thank GOD for it
30. If you know GOD, you will always be happy. So, be happy.
While you practice all of the above, share this knowledge with the people you love, people you school with, people you play with, people you work with and people you live with.
ஓஹ், ஆப்டிகல் இல்யூஷன் ஆகிவிட்டது.
கீழ்கண்ட சுட்டியில் நான் இட்ட பின்னூட்டம். அந்த கதாசிரியர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனாலும் மனதில் பட்டதை பின்னூட்டினேன். உங்கள் பார்வைக்காக இங்கேயும் தருகிறேன்.
http://www.tamilhindu.com/2011/05/nectar-short-story/
வரலாற்று ரீதியில் அற்புதமான கதை. தாமதமாகப் படித்தேன்.
//அதுவே இங்கும். இக்கதையில் அந்த கல்லால் அடித்தல் என்பது ஒரு கற்பனை புனைவு மட்டுமே. கதையின் புனைவுத்தன்மையை அதிகரிக்க செய்யப்பட்ட உத்தி.// இந்தக் கதைக்கு அப்பால் சில விஷயங்கள் கூற விரும்புகிறேன்.
சினிமாக்களிலும் சரி, இது போன்ற கதையாசிரியர்களானாலும் சரி - புனைவை அதுவும் கொடுமையை அதிகப்படுத்தி காண்பிக்க வேண்டுமென்றால் பிராமணரை அளவிற்கு மிஞ்சிய கொடுமைக்காரர்களாக காண்பிப்பதே கற்பனையில் சிறப்பு என்று நினைத்திருக்கும் ஒரு வித மனப்பதிவு நீக்கப்படவேண்டியது. தவிர்க்கப்பட வேண்டியது.
என்ன தான் புனைவிற்காக எழுதப்பட்டது எனிலும் பிராமணர்கள் மீது விழும் பிம்பத்தை படித்தவர்கள் மனதில் இருந்து நீண்ட காலத்திற்கு மாற்ற முடியாது. ஏற்கனவே தமிழகத்து ஜாதிக்கொடுமைக்கும், யாருக்கேனும் கக்கூஸ் வரவில்லை என்றாலும் அதற்கு பார்ப்பாரக் கொடுமை தான் காரணம் என்று மூளை சூடு ஏற்றப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில் அதற்கு தூபம் போட்டு சாம்பிரானி காட்டப்படுவது போல புனைவுகள் பிராமணர்களுக்கு எதிராகவே அமைக்கப்படுமானால் அது கண்டனத்திற்குரியது என்றே நான் கருதுகிறேன்.
நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் பிராமணர்களை ஜாதிக்கொடுமைக் காரர்களாக சித்தரிக்கும் டெம்ப்ளேட் கதைகளை பார்த்திருப்போம். எத்தனையோ ஜாதிக்கொடுமைச் சம்பவங்கள் ஜாதி வெறியர்கள், இஸ்லாம் மத வெறியர்கள் என்று சமூக வெறிகள் ஆயிரம் இருப்பினும் எளிதில் அனைவரும் பிராமணரை ஒரு டெம்ப்ளேட் கதாபாத்திரப் புனைவாக காட்டி விடுகிறார்கள். இதனால் அடுத்தடுத்த தலைமுறை மக்கள் மனதிலும் ஒருவித மனப்பதிவு பிராமணர்களுக்கெதிராக இயல்பிற்கு மீறியே விதைக்கப்படுகிறது என்பதை யாரும் உணர்வாரில்லை. புனைவாக இருந்தாலும் அதையே செய்யும். இது ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் துரோகம். கொடுமை. இது வருத்ததிற்குரியது.
********
//1990-களில் தென் மாவட்டங்களிலெல்லாம் தலித்துகள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியபோது// ஜாதியைக் குறிப்பிடும் இடமெல்லாம் பிராமணரை ‘பிராமணர்’ என்று குறிப்பிட முடிகிறது. ஆனால் மற்றவர்களை அவரவர் ஜாதியைச் சொல்லி குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக ‘ஆதிக்க சாதியினர்’ என்று கூறிவிடுவது ஏனோ? அவர்கள் ஜாதிகளுக்கு மட்டும் பெயர் கிடையாதா? அல்லது வழக்கம் போல பிராமணன் தான் இளிச்சவாயன் , ஜாதியக் குறிப்பிட்டு எழுதினாலும் ஒன்றும் சொல்லமாட்டான் என்கிற பொது புத்தியா என்று தெரியவில்லை.
இந்தக் கதையில் மட்டுமல்ல தமிழ் ஹிந்துவின்
http://www.tamilhindu.com/2011/05/from-cycle-to-sanskrit-hindutva-space-for-dalit-rights/
இந்தக் கட்டுரையிலும் இதே பானியில் தான் பிறருடைய ஜாதி குறிப்பிடப்பட்டது. அதற்கு நான் எழுதிய பின்னூட்டமும் அங்கேயே இருக்கிறது.
//மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். இதைக் கண்டு வெகுண்ட அங்கு வாழும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் அவரைத் தடுத்து நிறுத்தி // அந்த ஆதிக்க ஜாதியினர் யார் என்று வெளிப்படையாக எழுதலாமே!……… ….. …
என்று எழுதியிருந்தேன். ‘ஆதிக்க ஜாதியினர்’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று யாரேனும் விளக்குங்களேன்!
******
கீழ்கண்ட சுட்டியில் நான் இட்ட பின்னூட்டம். அந்த கதாசிரியர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனாலும் மனதில் பட்டதை பின்னூட்டினேன். உங்கள் பார்வைக்காக இங்கேயும் தருகிறேன்.
http://www.tamilhindu.com/2011/05/nectar-short-story/
வரலாற்று ரீதியில் அற்புதமான கதை. தாமதமாகப் படித்தேன்.
//அதுவே இங்கும். இக்கதையில் அந்த கல்லால் அடித்தல் என்பது ஒரு கற்பனை புனைவு மட்டுமே. கதையின் புனைவுத்தன்மையை அதிகரிக்க செய்யப்பட்ட உத்தி.// இந்தக் கதைக்கு அப்பால் சில விஷயங்கள் கூற விரும்புகிறேன்.
சினிமாக்களிலும் சரி, இது போன்ற கதையாசிரியர்களானாலும் சரி - புனைவை அதுவும் கொடுமையை அதிகப்படுத்தி காண்பிக்க வேண்டுமென்றால் பிராமணரை அளவிற்கு மிஞ்சிய கொடுமைக்காரர்களாக காண்பிப்பதே கற்பனையில் சிறப்பு என்று நினைத்திருக்கும் ஒரு வித மனப்பதிவு நீக்கப்படவேண்டியது. தவிர்க்கப்பட வேண்டியது.
என்ன தான் புனைவிற்காக எழுதப்பட்டது எனிலும் பிராமணர்கள் மீது விழும் பிம்பத்தை படித்தவர்கள் மனதில் இருந்து நீண்ட காலத்திற்கு மாற்ற முடியாது. ஏற்கனவே தமிழகத்து ஜாதிக்கொடுமைக்கும், யாருக்கேனும் கக்கூஸ் வரவில்லை என்றாலும் அதற்கு பார்ப்பாரக் கொடுமை தான் காரணம் என்று மூளை சூடு ஏற்றப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில் அதற்கு தூபம் போட்டு சாம்பிரானி காட்டப்படுவது போல புனைவுகள் பிராமணர்களுக்கு எதிராகவே அமைக்கப்படுமானால் அது கண்டனத்திற்குரியது என்றே நான் கருதுகிறேன்.
நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் பிராமணர்களை ஜாதிக்கொடுமைக் காரர்களாக சித்தரிக்கும் டெம்ப்ளேட் கதைகளை பார்த்திருப்போம். எத்தனையோ ஜாதிக்கொடுமைச் சம்பவங்கள் ஜாதி வெறியர்கள், இஸ்லாம் மத வெறியர்கள் என்று சமூக வெறிகள் ஆயிரம் இருப்பினும் எளிதில் அனைவரும் பிராமணரை ஒரு டெம்ப்ளேட் கதாபாத்திரப் புனைவாக காட்டி விடுகிறார்கள். இதனால் அடுத்தடுத்த தலைமுறை மக்கள் மனதிலும் ஒருவித மனப்பதிவு பிராமணர்களுக்கெதிராக இயல்பிற்கு மீறியே விதைக்கப்படுகிறது என்பதை யாரும் உணர்வாரில்லை. புனைவாக இருந்தாலும் அதையே செய்யும். இது ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் துரோகம். கொடுமை. இது வருத்ததிற்குரியது.
********
//1990-களில் தென் மாவட்டங்களிலெல்லாம் தலித்துகள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியபோது// ஜாதியைக் குறிப்பிடும் இடமெல்லாம் பிராமணரை ‘பிராமணர்’ என்று குறிப்பிட முடிகிறது. ஆனால் மற்றவர்களை அவரவர் ஜாதியைச் சொல்லி குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக ‘ஆதிக்க சாதியினர்’ என்று கூறிவிடுவது ஏனோ? அவர்கள் ஜாதிகளுக்கு மட்டும் பெயர் கிடையாதா? அல்லது வழக்கம் போல பிராமணன் தான் இளிச்சவாயன் , ஜாதியக் குறிப்பிட்டு எழுதினாலும் ஒன்றும் சொல்லமாட்டான் என்கிற பொது புத்தியா என்று தெரியவில்லை.
இந்தக் கதையில் மட்டுமல்ல தமிழ் ஹிந்துவின்
http://www.tamilhindu.com/2011/05/from-cycle-to-sanskrit-hindutva-space-for-dalit-rights/
இந்தக் கட்டுரையிலும் இதே பானியில் தான் பிறருடைய ஜாதி குறிப்பிடப்பட்டது. அதற்கு நான் எழுதிய பின்னூட்டமும் அங்கேயே இருக்கிறது.
//மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார். இதைக் கண்டு வெகுண்ட அங்கு வாழும் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் அவரைத் தடுத்து நிறுத்தி // அந்த ஆதிக்க ஜாதியினர் யார் என்று வெளிப்படையாக எழுதலாமே!……… ….. …
என்று எழுதியிருந்தேன். ‘ஆதிக்க ஜாதியினர்’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று யாரேனும் விளக்குங்களேன்!
******
அந்த பின்னூட்டம் இந்த நிமிடம்வரை பரிசீலனையில் இருப்பதாக காட்டுகிறது.
@hayyram
//‘ஆதிக்க ஜாதியினர்’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்கள் யாரென்று யாரேனும் விளக்குங்களேன்!//
ஒரு முக்கிய உதாரணம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பலீஜா நாயுடு. அவர்தான் கீழ்வெண்மணியில் தலித்துகளை எரித்த கோபால கிருஷ்ண நாயுடு என்னும் சகசாதிக்காரரது குற்றத்தை பூசி மொழுகி, அதற்கு கம்யூனிஸ்டுகள்தான் காரணம் என பிதற்றினார்.
அவரது மானசீக புதல்வர்களாகவே இப்போதைய இணைய தாசில்தார்களும் மற்றவர்களும் செயல்படுகின்றனர். அவர்கள் மனசாட்சியே இல்லாத அற்பர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கருணாநிதியால் கட்டப்பட்டது என்ற ஒரு காரணத்திற்காக முடக்கப்படும் புதிய தலமைச் செயலகம்,மாற்றப்படும் செம்மொழி நூலகம், ஊழல் சார்ந்த வழக்குகளில் அதீத அக்கறை போன்றவற்றினால் மக்களின் அனுதாபம்,வரும் உள்ளாட்சிச் தேர்தலில் திமுக பக்கம் திரும்பும் போல் தெரிகிறதே-
காங்கிரஸ் கைவிடாத படசத்தில் எதுவும் நடக்கலாம்.
துக்ளக் சோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவாரா?
மின்வெட்டினை சரி செய்தல்,ஒரு லட்சம் கோடி கடனை திருப்பிச் செலுத்தும் முகமாய் பொருளாதார நடவடிக்கைகள்,சட்டம் ஒழுங்கு சரி செய்தல்,விலை வாசி கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தத்தான் மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தனர் என்பதை மறந்தால் ?
௨
சிரந்தாழ்த்தி நன்றி:
கடவுளுக்கு மற்றும்
தமிழக வாக்காள பெருமக்களுக்கு!
பெருமையுடன் நன்றி:
இந்திய/தமிழக தேர்தல் ஆணையம்..ஊழியர்கள்
காவல்துறை
மாவட்ட ஆட்சித்தலைவர்கள்
நெகிழ்ச்சியுடன் நன்றி:
வலைதள நேர்மையாளர்கள்/தைரியசாலிகள்:
சவுக்கு
உண்மைத்தமிழன்
இட்லிவடை
காவிரிமைந்தன்
டோண்டு ராகவன்
எதிர்பார்ப்புடன் நன்றி:
விஜயகாந்த்
பிரார்த்தனையுடன் நன்றி:
ஜெயா
எங்களை இதுவரை மகிழ்வித்து இனியும் மகிழ்விக்கப்போகும் விதூஷகர்களுக்கு நன்றி:
வடிவேலு
வாலி
வைரமுத்து
அப்துல்ரகுமான்
சன் டிவி
நன்றியைக்கூட எதிர்பார்க்காமல்
பணிசெய்* நடுநிலையாளருக்கு நன்றி:
தினமணி
தினமலர்
சோ ராமசாமி
ஞானி சங்கரன்
[*=வினைத்தொகை:செய்த,செய்யும்,செய்யப்போகும்]
நன்றிகள் கோடி
நீவிர் வாழ்க!
நின் சுற்றம் வாழ்க !!
நின குலம் வாழ்க!!!
//ரமணா said...
2.காங்கிரசாரின் அடுத்த மூவ் என்னவாயிருக்கும்?
16.உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி மாற்றம் வருமா?//
தலைகீழ் விகிதங்கள். தேநீர் விருந்துக்கு சோனியா ஜெயலலிதாவை அழைத்தார்-http://savukku.net/
இவ்வார துக்ளக்கிலே மதுரை அருகே நடந்ததாகக் கூறப்படும் ஒரு ஜாதி மோதலைக் குறிப்பிடுகையில் 'முக்குலத்தோர்' என்று வெளிப்படையாக செய்தியை அளித்திருந்தனர். உண்மையை பூசி மெழுகாமல் சொல்லும் தைரியம் கூட மற்றவர்களுக்கு இல்லை. அஞ்சா நெஞ்சர் 'சோ' வாழ்க!
////ரமணா said...
2.காங்கிரசாரின் அடுத்த மூவ் என்னவாயிருக்கும்?
16.உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி மாற்றம் வருமா?//
தலைகீழ் விகிதங்கள். தேநீர் விருந்துக்கு சோனியா ஜெயலலிதாவை அழைத்தார்-http://savukku.net////
காங்கிரசுக்கும் கழகத்துக்கும் உள்ள லட்சிய உறவை கெடுக்க யார் சதி செய்கிறார்கள் என்பதையும் அதை எப்படி முறியடிக்க வேண்டும் எனும் ராஜ தந்திரத்தையும் நன்கு அறிவார் தலைவர் கலைஞர்.இந்தச் சதியின் பின்னால் இருக்கும் பார்ப்பனர்கள் யார் அவர்களின் பின்புலம் என்ன எனபதை தமிழ் சமுதாயம் நன்கு அறியும்.துக்ளக் சோவின் பேட்டியே இதற்குச் சான்று.
ஆனால் சோனியா அம்மையார் பற்றி அதிமுக தலைவியின் பழைய பேச்சுக்களை இன்னும் டெல்லி மறந்திருக்காது என நம்புகிறோம்.அதையும் மீறி கழகத்துக்கு பாதகம் செய்தால் சில பல செய்திகள்,கொள்கைகள்,கருத்துக்கள் பற்றி பேச வேண்டிய கட்டாயத்துக்கு திமுக தள்ளப்படலாம்.
கூட்டணி தர்மம் சிதைக்கப்படுமானால்
பின் விளைவுகள் பெரும்துன்பத்தை அளிக்கலாம்.
இவர்களின் சதி பலித்தால் திமுகவின் விலங்குகள் உடைக்கப்பட்டு,முழுவேகத்துடன் இலங்கை தமிழர் நலம் காக்கும் இயக்கமாய் மாறும் திமுக என்பது உறுதி.
தமிழன் நலம் ஒன்றே கழகத்தின் தாரக மந்திரம்.
பதவி என்பது திமுகவிற்கு தோளில் போடும் துண்டு.
கொள்கைதான் இடுப்பு வேட்டி.
தன்மானச் சிங்கங்களின் வருங்கால வெற்றி மீண்டும் உறுதி செய்ய்படும் காலம் விரைவில் வரும்.
கவரிமானின் பரம்பரை மீது களங்கம் கற்பிப்போர் கண்டு தமிழன்னை மாறக் கோபம் கொண்டுள்ளாள்.
அந்த அன்னையின் சாபம் ஆதிக்க சக்திகளையும் ,பிற்போக்கு சக்திகளையும் விரட்டி அடிக்கும் .
தமிழினம் காக்கப்படும்.
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் வாட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரம் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
அழுவதை கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
தாயின் மடியும் நிலைத்திட வில்லை
தந்தையின் நிழலும் காத்திட வில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
/thenkasi said...
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்/
IS THIS TOO MUCH?
dondu's special comment please.
நேற்று சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பெரிய தலைவர்களை பார்க்கும் போது முதல்வர் ஜெயலலிதா அடுத்த அரசியல் நடவடிக்கை வேறு திசையில் செல்லும் போலுள்ளது.அவரது அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம் தொடருமா? ஆண்டவனுகே வெளிச்சம்.
2001 லிருந்து 2006 வரை நடந்த அதிமுக ஆட்சி துக்ளக் சோவின் கணிப்புப் படி நல்ல நிர்வாக ஆட்சியானாலும் அதிமுக 2006 தேர்தலில் தோற்க பொதுஜனம் பேசும் காரணங்கள்.
1.குடும்ப அட்டையில் கெளவரவ அடையாள முத்திரையிட்டது-நடுத்திர வர்க்கத்தின் மொத்த கோபம்
2.தேவையில்லாத மத மாற்ற தடை சட்டம்-முஸ்லீம்,கிருத்துவரிடையே ஒரு பாதுகாப்பற்ற உணர்வு
3.ஆடு மாடுகளை சிறு தெய்வங்கள் முன்னால பலியிடத் தடை-படிக்காத பாமர மக்களிடையே வெறுப்பு
4. எல்லாத் தேர்தல்களையும் நடத்தும் அரசு ஊழியர்களின் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட
அடக்குமுறை,பதவி பறிப்பு,சிறை பிடிப்பு,பெண் ஊழியர்கள் பட்ட துன்பம்-அரசு ஊழியர் சங்கங்கள் மொத்த எதிர் வினை
5.அளவுக்கு அதிகமாக உயர் பதவியில் செய்யப்பட்ட மாறுதல்கள்.
6.அதிமுக ஏற்படுத்திய வலுவில்லாக் கூட்டணி
திமுகவின் வரலாற்றை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு ஒரு உண்மை தெளிவாய்த் தெரிய வரும்.
அண்ணாவின் மறைவுக்கு பின்னால்,எதிரணியிலிருந்த
எம்ஜிஆரின் திடீர் ஆதரவுடன் நெடுஞ்செழியனை பின்னுக்கு தள்ளி கருணாநிதி முதல்வரானார்.
1972ல் அதிமுகவின் உதயத்திற்கு பிறகு எம்ஜிஆரின் மறைவு வரை
கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் அமர மக்கள் அனுமதிக்கவில்லை.
பின்னர் அதிமுக இரண்டாய் உடைந்தது.இரட்டை இலைசின்னம் முடக்கப்பட்டது.
1989-நடந்த தேர்தலில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதி முதல்வரானார்.ஜா,ஜெ அணிகள் தோற்றன.
1991-காங் கூட்டணியுடன்,இரட்டை இலை சின்னம் பெற்ற அதிமுக ஆட்சியை பிடித்தது.
1991-1996 அதிமுகவின் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சியில் நடை பெற்ற ஆடம்பரச் செயல்களால் மக்கள் பெரும் கோபங் கொண்டனர். கருணாநிதியிடம்,ஆட்சி திரும்பியது.
1996-கருணாநிதி முதல்வரானார்
2001-அதிமுக அமைத்த வலுவான கூட்டணி மீண்டும் திமுகவை தோற்கடித்தது
2006-திமுக ஆட்சியை பிடித்தற்கான காரணங்களில் மேலே சொல்லப்ட்ட ஆறும் முக்கியமானவை.
2011-மீண்டும் அதிமுக ஆட்சி-காரணங்கள் அனைவரும் அறிந்ததே.
2016 ல் இளைஞர்களிடையே பெரும் ஆதரவு உள்ளதாய்ச் சொல்லபப்டும் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்தக்கு வாய்ப்பு கிட்டுமா காலம் பதில் சொல்லட்டுமே
மஞ்சள் துண்டு மகாத்மா ஊரார்க்குரைத்திட வள்ளுவம் படித்தேன் திரவியம் தேடிட திராவிடம் எடுத்தேன் ஆசையின் மிகுதியால் வள்ளுவம் மறந்தேன்
நாவிலும் மையிலும் புரண்ட வள்ளுவம் நெஞ்சில் நிலைகொள என்றும் மறுத்தது வஞ்சகம் பகைமை நெஞ்சை நிறைத்தது கிஞ்சித்தும் மனிதம் என் உளம் வர மறுத்தது அந்தணர் பழிப்பில் அகமகிழ்ந்திருந்தேன் ஆயுதமாய் அதை என்றும் தரித்தேன் இறைவனை இகழ்ந்து அக மகிழ்ந்திருந்தேன் உள்ளத்தின் கோடியில் ஓர் பயமிருந்தது மஞ்சள் துண்டால் அதுவும் மறைந்தது பகுத்தறிவாயுதம் ஒற்றுமை பிளக்க அதன் துணை வேண்டேன் என்றனை அளக்க மனைவி சுற்றினாள் மண் உறை இறைவனை துணைவி சுற்றினாள் விண் உறை தலைவனை தலங்களில் கிட்டிய மாசறு மஞ்சள் தரித்தால் அதுவே என்னை மறைக்கும்-அத்துனை மஞ்சள் மங்கலமாய் தரும் மஞ்சளை அணிந்தால் மனைவியும் துணைவியும் மகிழ்ந்திடுவாரே பொடியும் துணியும் நிறத்தினில் ஒன்று அதனால் அணிந்தேன் மஞ்சள் துண்டு இப்போது புரிந்ததா என் நிலை உனக்கு இனி, பேச்சில் வேண்டாம் உந்தன் துடுக்கு
அங்கே மேற்குவங்கத்தில் 35 ஆண்டுகால கம்யூனிஸ்டுகள் ஆட்சி கவிழ்ந்துள்ளது. வழக்கம் போல் எழவு டாட் காமில் தோத்தது "போலிகள்" என்று பதிவு போட்டுவிட்டார்கள். இவிங்கள்ளாம் சோத்தத் திங்கிறாய்ங்களா இல்ல வேற எதுனாச்சும் திங்கிறாய்ங்களா...?
@வஜ்ரா
உங்களது சந்தேகம் ரொம்ப நாளாகவே எனக்கும் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//எழவு டாட் காமில் தோத்தது "போலிகள்" என்று பதிவு போட்டுவிட்டார்கள்// நான் இன்றைக்கு டோண்டு ஐயாவிடம் கேட்க நினைத்த ஒரு விஷயம் பற்றி வஜ்ரா துவங்கி வைத்து விட்டார் என்றே நினைக்கிறேன்.
டோண்டு ஐயா!
இந்த எழவு டாட் காம் காரர்கள் ஒரு நக்ஸலைட் கும்பல் என்று உங்களுக்குத் தெரியுமா? (கேள்வி பதில் பகுதியில் கூட பதில் சொல்லலாம்!)
சமீபத்தில் 2011 ல் கோ படம் பார்த்தேன். ஜீவா நடித்த படம். அந்தப் படத்தில் சிறகுகள் என்ற பெயரில் மக்களுக்காக போராடுவதைப் போல கட்சி நடத்திக்கொண்டு இருக்கும் அதன் தலைவன் நக்ஸலைட்டாக இருப்பான். அதைப் பார்க்கும் போது எலக்கியக்கழகம்னு பேர் வெச்சிக்கிட்டு எழவு கொட்டுர எழவு டாட் காம் ஞாபகம் தான் வந்தது. காரணம் ஒரு முறை முக்கியமான பஸ் டிப்போவில் பேருந்தில் அமர்ந்திருக்கும் போது இதே எலக்கியக் கழகத்தைச் சேர்ந்த ஒருவன் உண்டியல் குலுக்கினான். அவன் தன்னை அறிமுகப்படுத்திய போது நாங்கள் எலக்கியக் கலக நக்ஸல் பாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு பள்ளிக்கட்டணக் குறைப்பிற்காக போராடப்போகிறோம். உங்களால் முடிந்த பிச்சையை உண்டியலில் போடுங்கள் என்று கொஞ்ச நேரம் கூவி நாற்பது பேரில் 2 பேரிடம் தலா ஐந்து ரூபாய் பிச்சை பெற்றுச் சென்றான். அதன் அடிப்படையில் அப்போது தான் தெரிந்தது. இவர்கள் சிறகுகள் டைப்பிலான நக்ஸலைட்டு கும்பல் என்று. உங்களுக்கு இது பற்றி ஏதாவது தெரியுமா?
வெளியே கம்யூனிஸ்டுகள் போல காட்டிக்கொண்டும் பார்ப்பன எதிர்ப்பு, மத சமத்துவம் பற்றி பேசுபவர்களாகவும் தங்களைக் காட்டிக்கொண்டு சத்தமில்லாமல் ஒருகொலைகார கும்பல் வளர்ந்து வருகிறது. அவர்களை வலை தளத்தில் ஆதரிப்பவர்களின் குழந்தைகளோ மனைவிகளோ, அம்மா அப்பாக்களோ ஏன் அவர்களே கூட நாளை இந்த கொலைகார கும்பலின் பஸ் கவிழ்ப்பு ரயில் கவிழ்ப்புகளில் பலியாகலாம் என்பது நிச்சயம்!
தாய்த் தமிழகத்தை ஆளும் நல் வாய்ப்பை ,பொய் புனைந்து ஆரியர் செய்திட்ட கூட்டு சதியால் ,இழந்த திமுகவின் நம்பிக்கை நட்சத்திரம்,வருங்கால நிரந்திர முதல்வர் தளபதி ஸ்டாலின், வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் போது ஆர்பரித்த மக்கள் கூட்டத்தின்
செயல்பாடுகள் கண்டு தமிழன்னை புன்னகை பூக்கின்றாள்.
இதற்கிடையே கல்நெஞ்சுபடைத்தோர்,கெட்ட எண்ணத்துடன்,திமுகவில் பிளவு வரும் அதற்கு மாறனின் வாரிசுகள் டெல்லியில் முகாமிட்டு செயல் புரிவதாய் வீண் வதந்தியை கிளப்புவோரை தமிழ சமுதாயம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.
திமுக இரும்புக் கோட்டை.
பிரங்கியால் கூட துளைக்கமுடியாதது என்பதை வரலாறு சொல்லும்.
அதிமுகவின் தலைவி முதல்வர் ஜெயலலிதா இரண்டு முக்கிய அறிவிப்புகள் செய்ததாக சொல்லப்படுகிறதே உண்மையா?
1.காலில் விழும் கலாச்சாரத்திற்கு விடுதலை
2.முதல்வர் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தம் இனி கிடையாது.
1. காங்கிரசால் திமுகவுக்கு பாதிப்பா அல்லது திமுகவால் அதிமுகவுக்கு பாதிப்பா?
2. இரண்டு ஆண்டுகள் கழித்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுக்கு கூட்டணி சேர ஆள் இல்லாத நிலையில் ( சொந்த பலமும் குறைந்த நிலையில் ) விஜய் காந்த் அதிமுகவுக்கு மாற்றாக உருவெடுப்பாரா?
//சமீபத்தில் 2011 ல் கோ படம் பார்த்தேன்.//
இந்த சமீபத் தொல்லை தாங்க முடியலடா சாமி....
//இந்த சமீபத் தொல்லை தாங்க முடியலடா சாமி....// ஓ, நீங்கள் சமீபத்தில் தான் இதைப் படித்தீர்களா?
2G scam என்று ஒன்று நடந்ததை யாரும் மறுக்க முடியாது. .
இருந்தும் எப்படி தான் இவர்களால் திமுக புகழ்பாட முடிகிறதோ...
you can be opinionated but dont be such a fanatic.
Post a Comment