2001-ல் சென்னைக்கு வந்தேன். அதுவரை துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களுக்கு போக முடிந்ததில்லை. டில்லியில் இருந்தேன். 2002-ஆம் ஆண்டு கூட்டத்துக்கு சென்றேன். அப்போது பதிவராக இல்லை. 2003, 2004 ஆண்டுகளுக்கான கூட்டங்களுக்கு என் வேலை காரணமாக போக இயலவில்லை. ஆனால் 2005 துவங்கி 2011 வரை தவறாமல் சென்றதோடு பதிவும் போட முடிந்தது. இந்த ஆண்டு நான் ஏற்கனவேயே குறிப்பிட்டபடி மருத்துவ காரணங்களுக்காக செல்ல இயலவில்லை.
ஆனால் போன ஆண்டு மாதிரி இவ்வாண்டும் இணையத்தில் வெப்காஸ்ட் செய்தார்கள். அதை பார்க்க கட்டணம் 200 ரூபாய் என்றார்கள். என்னிடம் கிரெடிட் கார்ட் ஏதும் இல்லை. ஆன்லைனில் எப்படி கட்ட முடியும் என விட்டு விட்டேன். ஆனால் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா இப்போது உதவிக்கு வந்தார். தான் பணம் கொடுத்து வாங்கியதை என்னுடனும் பகிர்ந்து கொண்டார். என்ன, ஒரு முறை ஓப்பன் செய்தால் விடாது பார்க்க வேண்டும். பாதியில் நிறுத்தினால் திரும்பவும் லாகின் செய்ய வேண்டியிருக்கும். 15 முறைதான் அவ்வாறு செய்யவியலும். ஆகவேதான் நான் குறிப்பிட்ட மாதிரி செய்ய வேண்டியிருந்தது.
நேற்று பிற்பகல் 4 மணிக்கு உள்ளே சென்றவன் அந்த தளத்தை இரவு 9.30 வரை ஒப்பனில் வைத்திருந்தேன். நல்ல ஒளிபரப்பு. என்ன, ஆடியோவில் சில சமயங்களில் குறைபாடு. நானும் கையில் நோட் புத்தகத்தை வைத்துக் கொண்டு குறிப்புகள் எடுக்கத் துவங்கினேன். இம்முறை இட்லிவடை அவர்கள் அமர்க்களமாக கவர் செய்துள்ளார். முதலில் ஆன்லைன் கவரேஜ் செய்து, பிறகு ஆடியோக்களை போட்டு, அதன் பின்னால் ஜெயா டிவியில் வந்த நிகழ்ச்சியின் ஒளிக்காட்சிகளையும் எம்பெட் செய்து தூள் கிளப்பி விட்டார்.
நான் குறிப்பு எடுத்ததாகக் கூறினேன். பாலா அவர்களும் எனது ஸ்டைலில் பதிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டார். ஆனாலும் நான் நேரில் சென்று பிறகு சூட்டோடு சூடாக 3 அல்லது 4 பதிவுகளாக வெளியிடுவது போல இம்முறை செய்ய விருப்பமில்லை. ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்ற காரணம் முக்கியமானது. ஆகவே வீடியோக்களை பார்த்த பின்னால் எனது எண்ணங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
முழு வீடியோவையும் ஜெயா டிவி வீடியோக்களையும் பார்த்ததில் ஒன்றை கூற வேண்டும். சரியாகவே ஜெயா டிவியினர் முழு மீட்டிங்கின் சாரத்தையும் போட்டுள்ளனர். உதாரணத்துக்கு முதலில் பேச வந்த வாசகி கல்பனா கூட்டத்திலிருந்து மீண்டு வர பிடித்த நேரத்தை ஜெயா டிவி தவிர்த்தது புத்திசாலித்தனமானது.
மீட்டிங்கை பல பகுதிகளாக பிரிக்கலாம். சோவின் வரவேற்புரை, தனது சகபணியாளர்களை அறிமுகப் படுத்துவது, வாசகர்கள் கேள்விகள், சோவின் உடனுக்குடனான பதிவுகள், சோவின் பேச்சு, அத்வானி பேசியது, மோதி பேசியது, கடைசியில் மீண்டும் சோ பேசியது என்று பல பிரிவுகள்.
மன்மோகன்சிங் இந்த கூட்டத்துக்கு வந்து, தமிழ் அவருக்கு புரிந்திருந்தால் சோ பேசியதை கேட்டு மீட்டிங் முழுவதும் நெளிந்த வண்ணமே இருப்பார். உண்மையாகவே அவர் வந்திருந்தால், சோ அவர்கள் என்ன பேசியிருப்பார்? கண்டிப்பாக விருந்தாளியை நோகடித்திருக்க மாட்டார். அவரது உலக வங்கி சாதனை, 1991-லிருந்து 1996 வரை நிதி மந்திரியாக அவர் செய்த சாதனைகள் ஆகியவை அதிகமாக இடம் பெற்றிருக்கும் என ஊகிக்கிறேன்.
கலைஞர் வந்திருந்தால்? இப்பதிவை படிப்பவர்கள் அவரவர் ஊகத்தை தம் பின்னூட்டங்களில் கூறலாமே. ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்த மீட்டிங்கில் பேசியதை அப்படியே பேசியிருக்க மாட்டார். சபை நாகரிகம் தெரிந்த சோ அவர்கள் என்பதில் நான் திடமாகவே உள்ளேன். அதே சமயம் கூற வேண்டியதை நாசுக்காகவே கூறியிருப்பார்.
வெளிநாட்டவர் நேரடி முதலிட்டாஇ இவர் ஆதரித்தார். அதே சமயம் அப்போது சபையில் இருந்த குருமூர்த்தி ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதையும் குறிப்பிட்டார். இவ்வாறே தனது மாற்றுக் கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பார் என்பதுதான் உண்மை. போன முறை அத்வானி வந்தபோது (2007) மன்மோகன்சிங் அணு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதை ஆதரித்து, பாஜக ஆட்சியில் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருக்கும் என அவர் குறிப்பிட்டதை இங்கு நினைவில் கொண்டு வருகிறேன்.
நேரடி அன்னிய முதலீட்டைத் தவிர்த்து மத்திய அரசை அவர் எம்முறையிலும் ஆதரிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு பத்தாண்டுகாலமாவது ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்தால் மோதியின் குஜராத்தையும் மிஞ்சி அவ தமிழகத்தைக் கொண்டு வருவார் எனக் கூறியது அவரது நம்பிக்கையையே அதிகம் பிரதிபலிக்கிறது. இந்த ஒரு விஷயத்தில் நான் சோ அவர்களிடமிருந்து மாறுபடுகிறேன். நான் ஏற்கனவேயே கீழ்கண்டவாறு கூறியுள்ளேன்.
டிஸ்கி: மனதை நிறையச் செய்த மோதியின் வெற்றி என்று தலைப்பிட்டவன் இப்போது மட்டும் தோல்வியை குறிப்பிடுகிறேன் என்றால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.
மோதியின் வெற்றிக்கான நேர்மறை காரணங்களே அதிகம். அவருடன் ஒப்பிடும்போது குஜராத்தில் காங்கிரஸ் ஒரு டம்மி காமெடி பீஸ் மட்டுமே. ஆனால் இங்கு அப்படியில்லை ஊழல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிமுகவும் சரி திமுகவும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.
நான் ஏற்கனவேயே பல முறை குறிப்பிட்டபடி 1996 தேர்தலில் அதிமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் 2001-லும் சரி, 2006-லும் சரி அப்போதைய ஆளும் கட்சி ஏற்கும்படியாகவே ஆட்சி செய்து முடித்திருந்தது. கூட்டணிகள் கணக்கு விவகாரங்களில்தான் வெற்றி தோல்வி பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்டன.
ஆனால் 2011-ல் திமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. அதை தமிழக மக்கள் உணர்ந்து செயல் பட்டதற்கு ஒரு ஓ போடுவோம். தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு ஓ. தொங்கு சட்டசபையெல்லாம் கொண்டுவராது ஒரு கட்சிக்கு தெளிவாக ஆட்சிப் பொறுப்பை தந்திருப்பதும் சிறப்புக்குரியதே.
அத்வானி அவர்கள் தனது பேச்சுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை, அதுவும் சோ அதை செய்வது உத்தமம் எனக் கூற, சோ அவர்கள் துக்ளக் வாசகர்களுக்கு ஆங்கிலம் நன்கு புரியும் என பெருமிதத்துடன் கூறியது மிகச்சரியான கூற்றே. தனது வாசகர்களை பர்றி அவர் வைத்திருக்கும் உயர்ந்த கருத்து இங்கு வெளியாகிறது. அத்வானி, மற்றும் மோதியின் பேச்சுகள் வழக்கம்போலவே சுவையாக இருந்தன. இட்லி வடை அவர்கள் தந்திருக்கும் ஆடியோ டேப்புகளே சாட்சி.
சோவின் வழக்கமான கலாய்ப்புகள் இருந்தன என்பதைக் கூறவும் வேண்டுமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
14 hours ago
2 comments:
இந்த விழாவிலே
சோ அவர்கள் ஹிந்து பத்திரிகையின் தரம் எந்த அளவிற்கு கீழே போய்விட்டது என்பதற்கு, நக்கீரன்
இதழில் வந்த செய்தியை, விலா வாரியாக, " யாரேனும் படிக்காவிட்டால், அவர்களும் படிக்கவேண்டும் என்று
நினைத்து மறுபடியும் வெளியீட்டதை சொல்லி வருத்தப்பட்டார்.
செய்திகளை செலக்ட் செய்யும் சீஃப் எடிட்டர் ( சீப் அல்ல) இப்பொழுது மாறி விட்டார் . இவரது ஆட்சியிலாவது
ஹிந்துவின் கடந்த கால நம்பகத்தன்மை திரும்ப வருகிறதா என்று பொறுத்து பார்க்கவேண்டும்.
சுப்பு ரத்தினம்.
உலகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களிலும் தன் மூக்கை நுழைத்து கருத்தை சொல்லும் வழக்கமுடைய சோ,மௌனம சாதிப்பது சங்கராசாரியார் விவகாரத்திலும்,ஜெயா சம்பந்தப்பட்ட விவகாரங்களிலும்.எல்லோரும் ஓரினம் என்பதாலா?மேலும் சினிமாவில் காமெடியானான அவர் அன்று அடித்த மிகச்சிறந்த ஜோக்,"ஜெயா இந்திய பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர்"
பி.கு:விரைவில் உங்களிடமிருந்து "சந்திரலேகா"திரைப்பட விமரிசனம் எதிர்பார்க்கிறேன். :-)))
Post a Comment