டிஸ்கி: பவுடர் ஸ்டாரின் என்னது ஔவையார் மலையாளியா என்னும் பதிவுதான் எனது இப்பதிவுக்கு தூண்டுதல்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் விகடனில்(?) ஒரு தொடர்கதை வந்திருந்தது. அது பற்றி கூறும் முன்னால் இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். கிடைப்பதற்கரிய நெல்லிக்கனியை தமிழ்புலவர் ஔவையாருக்கு அளித்து மகிழ்ந்தான் வல்ளல் அதியமான். காரணம் என்னவென்றால், சாதாரண மன்னனான தன்னைவிட தமிழே மூச்சாக வாழும் ஔவையாரே தமிழகத்துக்கு அதிகம் தேவை என்று அவன் நினைத்ததுதான்.
இதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா என ஆராயப்புகுந்ததுதான் நான் மேலே சொன்ன தொடர்கதை.
கதை அதியமான் இளைஞனாக இருந்தபோது துவங்குகிறது. அவனுக்கு ஒரு காதலி உண்டு (பெயர் முக்கியமில்லை). அதியமானின் விரோதிகள் அவனைக் கொல்ல நஞ்சு பூசிய பாணத்தை விட அவன் காதலி அப்பாணத்தை தன் உடலில் ஏற்று அவனைக் காப்பாற்றுகிறாள். ஆனால் அவளும் சாகவில்லை. என்ன, அவள் முதுகு வளைந்து, சிறுவயதிலேயே முதுமைத் தோற்றம் வந்து விட்டது. அமிதாப் நடித்த பாஆஆஆஆஆ என்னும் படம் நினைவுக்கு வருகிறதல்லவா?
அக்காதலியே பிற்காலத்தில் பெரிய கவியாகி ஔவையார் என அழைக்கப்பெற்றாள் என்று அந்த தொடர்கதை தோற்றம் கொண்டது. ஆக, அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்தது தனது காதலி அவர் என்ற ஹோதாவிலேயே என்ற துணிபுதான் முன்னுக்கு வந்து நிற்கிறது.
இதே ஔவையார் (சில பாடங்களில் கம்பர் என்றும் கூறுவர்) தெலுங்கு பேசும் பிரதேசத்துக்கு சென்று பாஷை புரியாது கஷ்டப்பட்டார் என்றும் படித்திருக்கிறேன். அதை குறித்து அவர் “ஏமிரா வோரி யென்பாள் எந்துண்டி வஸ்தியென்பாள்” என்று துவங்கும் பாடலையும் பார்த்தேன்.
மேலே சொன்ன தொடர்கதையின் தலைப்பையும், பாடலின் முழு வடிவத்தையும் தெரிந்திருந்தால் யாரேனும் சொல்லுங்கப்பூ.
இதைத்தான் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு பிறகு ஔவையாரையே கடிச்சுட்டாங்களே என்று கூற வேண்டுமோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
14 hours ago
10 comments:
தமிழ் மொழியே ஒரு மலையாளி இல்லாவிட்டால் இல்லை !
அவ்வையாரைப்பற்றி நான் சொல்லவில்லை. தொல்காப்பியரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன். ரா.பி.சேதுப்பிள்ளையின் ஆங்கிலநூலான த கிஸ்டரி ஆப் தமிழ் லிட்டரேச்சரின்படி The History of Tamil literature) இவர் கொல்லத்துக்காரர். குலசேகராழ்வார் ஒரு மலையாளியென்பது உங்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும். இல்லையா? அன்று மலையாளம் இல்லை. தமிழே. மலைதேசத்தவரும் தமிழரே.
அவ்வையாரைப்பற்றி ஆயிரம் கதைகள் உண்டு. அப்படியிருக்கும்போது அவரவருக்குப் பிடித்த வண்ணம் புனைவதை நாம் ஏன் தடுக்கவேண்டும்?
Using historic events to write fiction is commonly accepted as good literary habit in producing classics as well as good cinema. Titanic and Sandilyan’s historic novels are a few examples.
ஒன்று மட்டும் நான் சொல்வேன். அவ்வையாரின் பேச்சைக்கேட்டே அதியமான் அழிந்தான். அவனின் பராக்கிரமத்தை உண்மைக்குப்புறம்பாகச் சொல்லி அவனை மூவேந்தரையே எதிர்க்கும் முட்டாள்தைரியத்தை அவனுக்குப் புகட்டியவர் அவ்வையார். மூவேந்தர் நால்பக்கமும் சூழுந்த அவனை போர்க்களத்திலேயே கொன்றனர்.
Adhiyaman sent her as a spy to the rival kingdom, and using her fame as a poet, she got entry into their arsenals; and returned to his kingdom to convey that the rival king was a coward who could be easily won in war as Adhiyan were stronger than them in every thing. (This is vide a famous puranaanooru poem of Avvayaar)
Adhiyaman was a small chieftain (kuru nila mannan) paying tributes to the Pandian. On being fed such false reports by this woman, he stopped paying tributes to the Pandian. Pandian used his friendship with other two Kingdoms and together all of the three came and completely defeated Adhiyaman. Adhiyaman was killed in the battle field brutally and his capital was ransacked. Finised for ever. Who was responsible? This woman ! who is hailed by all Tamilians as the wisest woman ever lived !!
இலக்கியவாதிகளை இலக்கியம் சமைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களின் பேச்சைக்கேட்டு நாம் வாழ்க்கையை அமைக்கக்கூடாது. இதுவே அதியமான் - அவ்வையார் உறவில் தெரிந்தது.
-Kavya
Madurai
***காவ்யா said...
தமிழ் மொழியே ஒரு மலையாளி இல்லாவிட்டால் இல்லை !***
NONSENSE!!!
***அவ்வையாரைப்பற்றி நான் சொல்லவில்லை. தொல்காப்பியரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன்.**
Who said if there was no tholkaappiyar, there will not be thamizh??
இலக்கியம் தோன்றியது இலக்கியத்துக்கு முன்பேனு தெரியாதா?
சும்மா எதையாவது சொல்லக்கூடாது
காவ்யா அளவுக்கு நமக்கு வரலாறு தெரியாது. என்றாலும்..
மூவேந்தர்கள் பாரி தொடங்கி எல்லாக் குறுநில மன்னர்களையும் அழித்து, ஹிந்தி ஸாம்ராஜ்யத்தை - I'm sorry, ஒருங்கிணைந்த தமிழ்ப் பேரரசை உருவாக்கினார்கள். அதற்கு project Eelam - I'm sorry, Project Elengo என்று பெயர். அந்த வரலாறு கூறும் நூலே 'சிலப்பதிகாரம்'.
வள்ளல் பேகன் பொதினி(பழனி)யில் இருந்து தப்பி புகாரில் ஒரு வணிகன் போல தலைமறைவு வாழ்க்கையில் இருந்ததும், பிறகு அங்கிருந்தும் ஒளிந்தோடி மதுரை சேர்ந்ததும், அவன்தான் பேகன் என்று ஒற்றர் வழி அறிந்து மதுரை மன்னன் அவனைக் கொன்றதும்..
ஆனால் இதையெல்லாம், சீத்தலைச் சாத்தனே, நீ எழுதினால் உண்மையை அப்படியே எழுதி விடுவாய்; அதனால் நான் எழுதுகிறேன் என்று சேர இளவல், பேகனின் மனைவியை முகாமைப் படுத்தி 'சிலப்பதிகாரம்' எழுதியதும்..
என்று நமக்குத் தோன்றிய கொஞ்சூண்டு வரலாற்றையும் சொல்லிப் பார்ப்போம். குட்டையில் மீன் பிடிக்கிறவன் மீனும் விலாங்கு பிடிக்கிறவன் அதையும் பிடித்துக் கொள்ளட்டும்.
ஆனா, இன்னா டவுட்டுனா, ஆதிசங்கரர் மலையாளி இல்ல அரவாடுதான்னு 'தெய்வத்தின் குரல்'ல ஒரு மடாதிபதி ஏன் சொன்னாரு?
ஏமிரா வோரி என்பாள்
எந்துண்டி வஸ்தி என்பாள்
தாம்இராச் சொன்ன எல்லாம்
தலைகடை தெரிந்ததில்லை.
போம்இராச் சூழும் சோலை
பொரும் கொண்டைத் திம்மி கையில்
நாம்இராப் பட்ட பாடு
நமன் கையில் பாடு தானே!
இத்தெ 'மாமல்லன்' தளத்துல படிச்ச யாவுகம்.
//இலக்கியவாதிகளை இலக்கியம் சமைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களின் பேச்சைக்கேட்டு நாம் வாழ்க்கையை அமைக்கக்கூடாது. இதுவே அதியமான் - அவ்வையார் உறவில் தெரிந்தது.//
இந்த கருத்தில் முற்றும் உடன்படுகிறேன்.
அய்யா,
கம்பர் தெலுங்கு தேசம் சென்ற போது ஒரு சமயம் ஒரு வீட்டு திண்ணயில் உறங்கலானார். அந்நேரம் அவ்வீட்டம்மாள் (திம்மி என்று பெயர்) நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? என கம்பரை நோக்கி வினவுங்கால் கவிச்சக்ரவர்த்தியாகப்பட்டவர் மொழி தெரியாமல் விழிக்கவும் உண்டான நகைச்சுவையான சூழலை வைத்துப் பாடிய பாடல் இது..
அப்பாடல் பின்வருமாறு:
ஏமிரா வோரி யென்பாள்
எந்துண்டி வஸ்தி யென்பாள்
தாமிராச் சொன்ன தெல்லாம்
தலைகடை தெரிந்த தில்லை
போமிராச் சூழுஞ் சோலை
பொருங்கொண்டைத் திம்மி கையில்
நாமிராப் பட்ட பாடு
நமன்கைப் பாடு தானே..
/ரா.பி.சேதுப்பிள்ளையின் ஆங்கிலநூலான த கிஸ்டரி ஆப் தமிழ் லிட்டரேச்சரின்படி (The History of Tamil literature) இவர் கொல்லத்துக்காரர். குலசேகராழ்வார் ஒரு மலையாளியென்பது உங்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும். இல்லையா? அன்று மலையாளம் இல்லை. தமிழே. மலைதேசத்தவரும் தமிழரே./
ஆக, 'தமிழர்' என்பது ஓர் இனம்; 'மலையாளிகள்' என்பது அப்படி அல்ல, மலையாளம் அதாவது மலைசார்ந்த நிலவரம்பின் மக்கள் - அவ்வளவே.
இதை மலவிந்தர் மாலக்கண்ணர் எழுதியதொரு வரலாற்று நூலிலும் வாசித்ததாக ஞாபகம்.
[மல = மலை; மால = மாலை (இது மலையாளத் தமிழ்)]
/இலக்கியவாதிகளை இலக்கியம் சமைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்./
அடல் பிஹாரி வாஜ்பாய் இதற்காகவே ஓரங்கட்டப்பட்டார் என்று புரிகிறது. கனிமொழி ஓரங்கட்டப் படுவதும் இதற்காகத்தானோ?
கருணாநிதி?
ஜெயலலிதா கூட இலக்கியம் எழுதி இருக்கிறார். சோனியாதான் ஒத்துவருவார் போலத் தெரிகிறது.
***இலக்கியம் தோன்றியது இலக்கியத்துக்கு முன்பேனு தெரியாதா?
சும்மா எதையாவது சொல்லக்கூடாது***
It should read as,
இலக்கியம் தோன்றியது இலக்கணத்திற்கு முன்பேனு தெரியாதா?
"ஏமிரா வோரி என்பாள்" காளமேகமப் புலவர் ஒரு தெலுங்குப் பெண்ணுடனான தன் அனுபவத்தை எழுதியது என்று படித்த நினைவு. கம்பர் தனிப்பாடல் திரட்டில் கூட இந்தப் பாடல் இருப்பதாகத் தெரியவில்லை!
ovvaiyara poi vambukku ilukeerengala boss..?
http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi
Post a Comment