பட்டுக்கோட்டைக்கு வழி என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம் என்பது
நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் தமிழ் இலக்கணத்தை சீர்யசாகவே சொல்லிக் கொடுப்பதுண்டு. அதில் “விடை வழு (பட்டுக்கோட்டைக்கு வழி எது என்றால் கொட்டைப்பாக்கு எட்டுப்பணம்) என்பது அடங்கும். அதற்கு சிறந்த உதாரணங்கள் நம்ம தமிழ் ஓவியாவின் கிட்டத்தட்ட எல்லா பதிவுகளுமே என்றால் அது மிகையாகாது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அவரது லேட்டஸ்ட் பதிவையே நோக்கலாம்.
அப்பதிவிலிருந்து:
”ஒரு பார்ப்பனன் தன் பெண்ஜாதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை விபசாரி, விபசாரி, என்று கூறிக்கொண்டே வந்தான். ஆனால், அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக் கொண்டே வந்தாள்.
இப்படி இருக்கையில், அந்தப் பார்ப்பான் தன் மனைவி அந்நிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப்பிடியாய் பிடித்து விட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப் போக்கும், சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் பிராமணா!, உன் வாக்குப் பலித்துவிட்டது. அதற்கு நான் என்ன செய்யட்டும்? என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைக் சுமத்தினாள்.
அதாவது, புருஷனைப் பார்த்து நீ அடிக்கடி என்னை விபசாரி, என்று உன் வாயால் சொல்லிக் கொண்டே வந்தால் அல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது அது எப்படியும் பலித்துவிடும் என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி) நீர் பரிசுத்தமான பிராமணரானதால் உமது வாக்குப் பலித்துவிட்டது”.
இதைத்தான் self fulfilling prophecy எனச் சொல்வார்கள். புலி வருது கதையைப்போல எனவும் கூறலாம். இப்பார்ப்பனனை விடுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் தன் புது மனைவி கோவிலுக்குச் செல்லும்போது தன் நண்பர்களிடம் அவள் ஊருக்கு புதிதாக வந்த தாசி எனக்கூறி அவளை கேலி செய்ய வைத்தாராம். பெரியவர் வாக்கு பலித்திருக்குமோ?
நிற்க. இதில் விடை வழு எங்கிருந்து வருகிறது எனக் கேட்கிறீர்களா? அப்ப்திவுக்கு 16 பின்னூட்டங்கள், ஒன்றுகூட பதிவுடன் சம்பந்தப்பட்டதில்லை என்பத்தான் விசேஷம். இந்த மனிதரது கிட்டத்தட்ட எல்லா பதிவுகளிலுமே இந்த நிலைதான், அதாவது காபி பேஸ்ட் விவகாரங்கள்..
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இம்மாதிரி எல்லாம் கேனத்தனமான விடைகள் வருமா என வியந்ததுண்டு. இப்போது அவ்வியப்பு போயே போயிந்தி.
விஸ்வரூபம் விவகாரம்:
அப்படத்தைப் பார்த்த பலரும் கூறிவிட்டார்கள், அதில் இசுலாமிய அவதூறு இல்லையென. இருப்பினும் அரசு தடை விதிக்கிறது என்பது நாட்டில் ஓட்டு பொறுக்கும் அரசியல்தான் கோலோச்சுகிறது எனத் தெரிகிறது. தடையை உடனடியாக நீக்குவது அவசியம்.
மதுரா விஜயம்:.
வெள்ளீயன்று மதுரை வந்தேன், இன்று {திங்கட்கிழமை) சென்னைக்கு செல்கிறேன். நான் மதுரையில் இருந்தவரை குருட்டு அதிர்ஷ்டம், பவர்கட் லேது.
சனியன்று தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை தரிசிக்கச் சென்ற நேரத்தில் பவர் கட் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று காலை எட்டு மணிவாக்கில் கிளம்பும்வரை அது இல்லாமலிருந்தால் அதிர்ஷ்டம்தேன்.
அப்டேட் (18.06 மணி, 28.01.2013)
சென்னை வந்தாகி விட்டது. காலை 10.30 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பினேன். நோ பவர்கட். சந்தோஷமாக இருந்தது.
தென்றலாக வந்த புதிர்:
மிருதுவாக இப்புதிர் தோன்றியது.
ஒரு பெண்ணுக்கு இரு சகோதரர்கள். ஆனால் அச்சகோதரர்களுக்குள் ஒரு உறவும் இல்லை. சினேரியோ கூறவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரா.முருகன் விமர்சனப்போட்டி
-
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்
விருது இரா.முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி ஒரு கட்டுரைப் போட்டி
அறிவிக்கிற...
10 hours ago
11 comments:
You are giving unnecessary publicity to sites like TOvia. They are best ignored
தமிழ் ஓவியா ஒரு குறிப்பிட்ட இனத்தையே பிராமணர்களை சாடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ள ஒரு சாக்கடை! அதில் சந்தனம் தேடுவது நம் தவறு!
***விஸ்வரூபம் விவகாரம்:
அப்படத்தைப் பார்த்த பலரும் கூறிவிட்டார்கள், அதில் இசுலாமிய அவதூறு இல்லையென. இருப்பினும் அரசு தடை விதிக்கிறது என்பது நாட்டில் ஓட்டு பொறுக்கும் அரசியல்தான் கோலோச்சுகிறது எனத் தெரிகிறது. தடையை உடனடியாக நீக்குவது அவசியம்.***
என்ன சார் ஏதோ ஹைகோர்ட் ஜட்ஜ் எல்லாரும் ஏகமனதா சொல்லிப்ப்புட்டாங்கிற மாதிரி பேசுறேள்!
யார் இவங்க எல்லாம்?
நீங்க என்னவோ சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மாதிரி தடையை நீக்குவது அவசியம்னு வேற எதையோ சொல்றீங்க??
பதிவர் கானா பிரபா ஒண்ணும் இஸ்லாமியர் இல்லை. அவர் என்ன சொல்றார்ணு கொஞ்சம் பாருங்கோ!
http://www.madathuvaasal.com/2013/01/blog-post.html
***விஸ்வரூபம் படத்தின் நெருடல்கள் என்ற வகையில் இரண்டே இரண்டு இன்னும் உறுத்திக் கொண்டிருக்கின்றன. நெருடல் ஒன்று "அமெரிக்கன் பெண்களையும், குழந்தைகளையும் ஒண்ணும் பண்ணமாட்டான்" என்று கமல் சொல்லும் போது வயிறு குலுங்கிச் சிரிக்கத் தோன்றுகிறது. இதுவரை கமல் ஆஸ்காருக்கு அனுப்பிய படங்களை விட விஸ்வரூபம் தான் தொழில் நுட்ப ரீதியில் மேம்பட்டது, கவனிக்கப்படவேண்டியது என்பதால், அமெரிக்கனுக்கு காக்காய் பிடித்து அந்தப் பக்கத்தையும் கவனித்துவிடுவோம் என்று கமல் எண்ணினாரோ தெரியவில்லை.
என்னதான் இன்னொரு நாட்டுத் தீவிரவாதி அல்லாவின் பெயரை உச்சரித்துக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டாலும், தொடர் காட்சிகளில் ஒரு எல்லைக்கு மேல் என்னையே கொஞ்சம் நெளிய வைக்கிறது. காரணம் நாம் வாழும் சூழல் அப்படி. ஒரு படைப்பைப் பகுத்துப் பார்த்து அது எந்த விஷயத்தை முக்கியமாகச் சொல்லிவைக்கின்றது என்ற அளவுக்கு நம் தமிழ்ச்சூழலுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை என்பேன். இந்தச் சூழலில் இப்படியொரு படத்தை எடுத்துவிட்டு அடுத்த படத்தில் தலிபானாக கமல் நடிப்பார் என்று சொல்லும் எஸ்.ஏ.சந்திரசேகர மூளையும் அவருக்கு இல்லை. கமல் போன்ற மூத்த கலைஞனுக்குப் பொறுப்புணர்வு மிக முக்கியம்.***
The fact is Kamal Haasan is "bribing" Americans perhaps to win an Oscar for "foreign film"! As he focused on "on that part" he overlooked lots of things.
Now, the whole muslim world is against him. What an achievement for an actor and a businessman! What a loser he is!!!
பாவம் அப்பாவி நீங்க சார், உங்களுக்கெல்லாம் இதெல்லாம் பகவான்தான் விளங்க வைக்கணும்!
வெறுப்பையே தனது மொழியாக கொண்டுள்ளவர்கள் மனநோய்க்காரர்கள். அவர்களிடத்து மட்டுமல்ல அவர்களை பற்றியே கூட பேசுவது தேவையற்றது.
விஸ்வரூபம் திரைப்படம் நேற்று நண்பர்களோடு பார்த்தேன். நான் ஒன்றும் தீவிர இந்து அல்ல. இந்து மதத்தின் அநீதிகளுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் சவாலாக இஸ்லாமின் நீதி உணர்வும் கிறிஸ்துவத்தின் எளிமையும் கனிவும் இருக்கவேண்டும் என்னும் ஜெ.மோ.வின் கட்சிதான் நான்.
அப்படிப்பட்ட எனக்கு இந்த திரைப்படம் எப்படி இஸ்லாமியர்களுக்கு / இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது என்று சொல்கிறார்கள் என்று துளியும் புரியவில்லை.
கதை அல்-கொய்தா பற்றியது என்பதால் இயல்பாகவே அவர்களை பற்றி சொல்லும்போது அவர்கள் செய்யும் அனைத்தும் இடம் பெறுகிறது. அது இங்கே உள்ள இஸ்லாமியர்களுக்கு ஏன் உறுத்த வேண்டும் ? சொல்லப்போனால் இஸ்லாமிய மதத்தையோ, இஸ்லாமியர்களையோ எந்த விதத்திலும் தவறாக சித்தரிக்க வில்லை. தவறாக என்ன, விமர்சனமேகூட இல்லை. RAW-விலிருந்து அல்-கொய்தாவில் ஊடுருவும் நேர்மையான இஸ்லாமிய அதிகாரியாகத்தான் கமல் நடித்திருக்கிறார்.
கமல் மாதிரியான சினிமா பித்தர்களை தசை வலிமை காட்டி முடக்க நினைப்பது 'அன்பு மார்க்கம்' என்று சொல்லிக்கொள்ளும் தங்களது மார்க்கத்துக்கு இழைக்கும் அவமானம் என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் உணரவேண்டும்.
உண்மையான மக்களாட்சியில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டியது நீதிமன்றத்திடம். கும்பல்மனப்பான்மை மேல் அல்ல.
இதை இப்படியே வளரவிட்டால் கும்பல் பலம் உள்ள எவரும் நாளை இதே ரீதியான காரணத்தை வைத்து ஒவ்வொரு திரைப்படத்தையும் சிதைக்க முடியும்.
விளம்பரம் பெற எவ்வளவோ நேர்வழிகள் உள்ளன. உடனடி விளம்பரம் என்பதால் கீழ்த்தரமாகவா இறங்க நினைப்பது ?
உடனடியாக முடக்கப்பட வேண்டிய பாசிச மனோபாவம் இது.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
"ஒரு பெண்ணுக்கு இரு சகோதரர்கள். ஆனால் அச்சகோதரர்களுக்குள் ஒரு உறவும் இல்லை. சினேரியோ கூறவும்"
அப்பெண்ணின் தந்தை/தாய் செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தால் வந்த உறவாக இருக்கலாம்.
கட்டிய மனைவியை தாசி என்று கேலி செய்த பெரியவர் யார் என்று தமிழ் கூறும் திராவிட உலகத்திற்கே நன்றாக தெரியுமே
1. அந்த பெண்ணின் தந்தைக்கும் தாய்க்கும் தனித்தனியான முந்தைய திருமண பந்தங்களிலிருந்து வந்த ஆண் பிள்ளைகள் அவர்கள்.
2. அந்த பெண் ராக்கி கட்டிய நண்பர்கள் சகோதரர் முறையாகலாம்.
@சுபா, முத்து
சரியான விடை. அப்பெண்ணின் தாயும் சரி தந்தையும் சரி இரு முறை திருமணம் செய்தவர்கள்.
அதான் கோடி காட்டிவிட்டேனே தென்றலாய் வந்த புதிர் என்று. :)))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
Do you agree on Cho's comment for Vishwaroopam issue?
@சுதாகர்
இல்லை, சோ சொல்வதை நான் ஒத்துக் கொள்ளவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுயசாதி அபிமானம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகவைக்கும் என்பதை சோ நிரூபித்து இருக்கிறார். இட்லிவடை வலைப்பூ-வில் ஒரு பதிவு இட்டிருக்கிறார்கள் பாருங்கள், இந்த மனிதன் இதே பிரச்சினை தனக்கு வந்தபோது இந்திரா காந்தி-கே தந்தி கொடுத்து படத்தை வெளியிட உதவி கேட்டிருக்கிறார்.
ஒருவேளை கமல் ஆத்திகராக இந்து மதத்தை விமர்சனம் செய்யாதவராக இருந்திருந்தால் சோ எப்படி இவ்விஷயத்திற்கு எதிர்வினை ஆற்றி இருப்பார் என்று யோசிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.
Post a Comment