கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
ரமணா1. அண்ணா புற்று நோயால் சிரமப்படும் நாளில் பெருந்தலைவர் காமராஜை தோற்கடிக்கவேன்டும் என காரணம் கூறி அதிக ஒளி வீசும் கேமிரா முன்னால் நீண்ட் நேரம் நிற்க வைத்ததால்தான் அவருக்கு மரணம் நேர்ந்தது;அதற்கு இன்றைய அரசியல் பெரும்புள்ளி சதி செய்தார் என்று சொல்லபட்டதே உண்மையென்ன?பதில்: அம்மாதிரி ஒரு வதந்தியும் அக்காலகட்டத்தில் நான் கேள்விப்படவில்லையே? மேலும், இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் 1962-ல் அண்ணா தோற்க வேண்டுமென காமராஜ் வேண்டுமானால் வன்மத்துடன் காரியம் செய்தார். அதனால் அண்ணா அவர்கள் ராஜ்ய சபாவுக்கு சென்று தன்னை வளப்படுத்திக் கொண்டதற்கு காமராஜ் தன்னைத் தானே பின்னால் நொந்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.
ஆனால் 1967-ல் அண்ணா அவ்வாறு ஒன்றும் செய்யவில்லை. காமராஜரை எதிர்த்து அதிகம் பிரபலமாகாத ஒரு மாணவர் தலைவரை நிற்க வைத்தார். காமராஜ் தோற்றதற்கு நிஜமாகவே வருத்தப்பட்டார். அந்த மாணவர் தலைவர் செருக்குடன் அலைந்த காலத்தில் மண்டையில் தட்டி ஓரமாக உட்கார வைத்தார் அவர்.
2. 1967 ல் எம்ஜிஆர் ராதாவால் சுடப்படார் என்பது செய்தி. பின் வழக்கு நடந்தது. ஒரு சில தகவல்கள் அரசியல் செல்வாக்கு இதில் தலை நுழைத்து சாதகமாய் காரியங்கள் நடந்தன என்று சொல்லபட்டதே.இதில் எது உண்மை?பதில்: யாருக்கு சாதகமாய்? எதற்கும் சுதாங்கன் எழுதிய புத்தகத்தைப் பாருங்கள். மற்றப்படி கேஸ் நடந்து முடிந்து எம்.ஆர். ராதா தண்டனையும் பெற்று வெளியில் வந்தாயிற்று. அவரும் இல்லை, எம்ஜிஆரும் இப்போது இல்லை. எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.
அந்த வழக்கில் சாட்சியளித்த தடவியல் நிபுணர் ஒரு சுவாரசியமான விஷயம் சொன்னார். அவ்வளவு கிட்டத்திலிருந்து எம்.ஜி.ஆரை சுட்டபோதும் அவர் இறக்க்வில்லை. காரணம் என்னவென்றால் தோட்டா பழையதாக ஆனதால் அதன் வீர்யம் குறைந்திருந்தது என்பதே. எது எப்படியானாலும் எம்.ஜி.ஆர். செய்த தருமமே அவரைக் காப்பாறியது என்றுதான் நான் கூறுவேன்.
3. இதற்கு பிரதி உபகாரமாய் 1972ல் திமுகவை இரண்டாய் உடைப்பதற்கு சதி செய்தார் எனும் திமுக தலைவரின் குற்றச்சாட்டு சொல்லபட்டதே அது உண்மையா?பதில்: யார், எம்ஜிஆரா? எம்ஜிஆரை வெளியில் அனுப்பி முட்டாள்தனம் செய்தவர் கருணாநிதி. கட்சியின் பிளவுக்கும் அவரே பொறுப்பு.
4. ரஜினி காதலிக்கும் பெண் பெயர் லதா எனகேள்வி பட்டதும் அது தனது கதாநாயகி லதா எனத் தவறாய் புரிந்து,வசூல் சக்ரவர்த்தி கொடுத்த சித்திரவதையின் காரணமாய் ரஜினி மனநலம் பாதிக்க பட்டார் என்று சொல்லபட்டதே, அது உண்மையா?பதில்: அதுவும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் எம்ஜிஆர் நாயகி லதாவுடன் ரஜினி ஜோடியாக நடித்துள்ள படம் சங்கர், சலீம், சைமன். ஆனால் அப்போதுதான் எம்ஜிஆர் படவுலகிலேயே இல்லையே.
5. நாகேஷ் வேடிக்கையாய் சின்னவரை கிழவன் என கேலி பேசயதால் கோபப் பட்டு அவரது நகைச்சுவை நடிகர் வாழ்வுக்கு மங்களம் பாடினார் சின்னவர் என்று சொல்லபட்டதே, உண்மையா?பதில்: இந்தச் செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எம்ஜிஆர் இல்லாவிட்டால் என்ன சிவாஜிதான் ஃபீல்டில் இருந்தாரே. மொத்தத்தில் நாகேஷ் எம்ஜிஆர் பிரிந்ததில் சோவுக்கு வாழ்வு.
ராம்1. ஜீவாத்மா பரமாத்மா பற்றி உங்களுக்கு என்றைக்காவது புரிந்திருக்கிறதா?பதில்: ஜீவாத்மா என்பது ஆதாம் ஏவாள் என கிறித்துவர்கள் கூறுவதற்கு ஒப்பானது என ஒரு முறை காஞ்சி பெரியவர் எழுதி படித்ததாக ஞாபகம்.
எம். கண்ணன்1. சுஜாதா ஒரு முறை 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்த ' நெக்ரபொண்டே ஸ்விட்ச்' -http://en.wikipedia.org/wiki/Negroponte_switch - மீண்டும் ஒரு சுற்று வந்துவிட்டது போலிருக்கே ? டிவி தற்போது டிஷ் மூலமும், பிராட்பேண்ட் கம்பி மூலமும் ? (முதலில் டிவி - ஆண்டெனா (வயர்லெஸ்) - பின் கேபிள் வழி தற்போது மீண்டும் டிஷ்) (டெலிபோன் - முதலில் கம்பி, பின்னர் வயர்லெஸ், தற்போது பிராட்பேண்ட் - டிஎஸெல் - கம்பி மூலம் அல்லது கேபிள் மூலம்)பதில்: சில தொழில்நுட்பங்கள் சில இடைஞ்சல்களால் தற்காலிகமாக தடைபெறுகின்றன. பிற்காலத்தில் வேறு துறைகளில் வரும் முன்னேற்றங்களால் அத்தடைகள் நீங்க பழைய தொழில்நுட்பம் புதிய சக்தியுடன் முன்னுக்கு வருவது விஞ்ஞான உலகில் பலமுறை நடந்துள்ளதே. அதில்தான் நீங்கள் சொன்ன விஷயமும் வருகிறது.
2. விகடனில் ஸ்னேகாவின் பிகினி டிரஸ் பார்த்து ஜொள்ளுவிட்டீர் தானே? (அது கட் அன் பேஸ்ட் என்றபோதும்)பதில்: பிகினி ட்ரெஸ் இருந்தால்தான் ஜொள்ளு விடுவோமா? அது இல்லவே இல்லாவிட்டாலும்தான்.
3. ராக்கி சாவந்த் போல (ராகி கா ஸ்வயம்வர் - ஸ்டார் பிளஸ்) ரம்பாவின் சுயம்வரம் கலைஞர் டிவியில் வந்தால் அப்ளிகேஷன் போடுவீரா? ரம்பாவின் டெஸ்டில் பாஸ் செய்வீரா?பதில்: ஆக, என் வீட்டம்மாவிடம் போட்டுக் கொடுத்து எனக்கு சமாதி கட்டாமல் ஓய மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
4. பெண்கள் பத்திரிக்கைகள் பற்றி ஆர்.வெங்கடேஷ் ஒரு பதிவு இட்டிருக்கிறார். உங்கள் வீட்டில் மங்கையர் மலரா? அவள் விகடனா? குமுதம் சிநேகிதியா?பதில்: எங்கள் வீட்டில் மூன்றையுமே வாங்குகிறோமே. குமுதம் சினேகிதியில் ரங்கநதி என்னும் தலைப்பில் இந்திரா சௌந்திரராஜன் எழுதும் தொடர்கதையை படித்து விட்டுத்தான் மீதி பக்கங்களைப் பார்ப்பேன். அது போல அவள் விகடனில் தொடர்கதை இல்லை என்பது குறையாக உள்ளது. மங்கையர் மலர்? அதிலிருந்துதான் ஒரு
கதையை எடுத்துப் போட்டுள்ளேனே?
5. தமிழ் படிக்கும் வழக்கமே குறைந்துவரும் நிலையில் - அதுவும் தற்கால பெண்கள் மேற்சொன்ன புத்தகம் எல்லாம் வாங்கி படிப்பார்களா?பதில்: எழுதும் விதமாக எழுதினால் ஏன் படிக்க மாட்டார்கள்?
7. ஆபாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஏன் இந்த நிறங்கள் ? யார் கொடுத்தனர்? சிகப்பு விளக்கு, நீலப் படம், மஞ்சள் பத்திரிகைகள், பச்சை மொழி..... தமிழில் மட்டும்தானா இல்லை ஆங்கிலத்திலிருந்து எல்லா மொழிகளிலும் (பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி..) இப்படித்தான் சொல்கிறார்களா?பதில்: முக்கியமாக ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையே சிகப்பு விளக்கு, நீலப் படம், மஞ்சள் பத்திரிக்கைகள் ஆகிய சொற்கள்.
8. விஜய் டிவியின் நீயா நானாவுக்குப் போட்டியாக கலைஞர் டிவியிலும் 'கருத்து யுத்தம்' என ஒரு விவாத அரங்கம் (புதன் இரவு 10மணி) நடைபெறுகிறதே? விஜய்டிவி கோபிநாத் அளவு இல்லாவிட்டாலும், கலைஞர் டிவி ஷண்முகசுந்தரமும் நன்றாகவே நடத்துகிறார். ஓரினச் சேர்க்கை பற்றிய விவாதத்தில் பலரும் (பெண்கள் உட்பட) வெளுத்துக் கட்டினரே ? பார்த்தீர்களா? (ஒரு கட்டத்தில் அடிதடியே வந்துவிட்டது - சிவன் விஷ்ணு என ஒருவர் பேசப் போக) - சிறப்பு விருந்தினர்களில் சாருவும் ஒருவர்.பதில்: விஜய் டிவி, கலைஞர் டிவி ஆகியவற்றை நான் பார்ப்பதில்லை என்றாலும். நிங்கள் கூறுவது சுவாரசியமாகவே உள்ளது. சிவன் விஷ்ணு உதாரணம் சரியில்லை. அவர்கள் சேர்க்கை நடந்தபோது விஷ்ணு மோகினி அவதாரத்தில் இருந்தார். இதில் ஒரு தத்துவமே உள்ளது. கருவில் உள்ள முட்டை உயிரணு ஜோடி ஆணாகவோ பண்ணாகவோ பிறக்க சாதாரணமாக சமவாய்ப்புகள் உள்ளன. வெறும் குரோமோசோம் விளையாட்டுதான். ஆகவே ஒரு செமக்கட்டை ஃபிகர் ஆணாகக் கூட பிறந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கிறது. அப்போது அந்த ஆண் மற்ற செமக்கட்டை ஃபிகர்களைப் பார்த்து ஜொள்ளு விட்டிருக்கும்.
9. தமிழ் சினிமா நடிகர்களில் சிலர் ஓரினச் சேக்கை விருப்பம் உள்ளவர்கள் எனவும் சமீப காலங்களில் சில பெண் ஓரினச் சேக்கையாளர்கள் பற்றிய செய்திகளும் வந்தது. நம்பக்கூடியதா இந்த செய்தி?பதில்: பொது புத்தி என்ன கூறினாலும் ஓரினச்சேர்க்கைக்கு கணிசமான அளவில் ஆதரவு இருக்கிறது. ஆகவே இதில் நம்பிக்கையின்மைக்கு இடமில்லை.
10. ஞாநியின் கேணி என்ற ஞாயிறு மாலை (ஞாநியின் வீட்டில்) நிகழ்ச்சியை ஆனந்த விகடன் ஏன் “பாஸ்கர் சக்தி (ஞாநியுடன்) நடத்தும்” என ஞாநியை இருட்டடிப்புச் செய்கிறது? ஓ பக்கங்கள் குறித்தான மோதல் இன்னும் முடியவில்லையோ? (அதுவும் விகடன் பொறுப்பாசிரியர் ரவிபிரகாஷே கலந்து கொண்டபோது)பதில்: கேள்விப்பட்டுள்ளேன், ஆனால் இதுவரை போனதில்லை.
அனானி (07.09.2009 பிற்பகல் 12.05-க்கு கேட்டவர்)1) What is your opinion on this?பதில்: ஜாதி விட்டு ஜாதியில் திருமணம் செய்வது, வெளிமாநிலத்தவரை மணப்பது ஆகிய விஷயங்கள் கேட்க வேண்டுமானால் நன்றாக் ஐருக்கலாம். ஆனால் நடைமுறையில் பல கஷ்டங்கள் உள்ளன. முக்கியத் தடையே சாப்பாட்டு முறைகளில் உள்ள வேறுபாடுகள்தான். ஆகவே இம்மாதிரி திருமணங்கள் காதல் திருமணமாகத்தான் நடக்கும் வாய்ப்பு அதிகம். அரேஞ்ச்டு திருமணங்களில் அது மிகக்குறைவு.
2) Why Stalin has gone to England? for what treatment? what is the health problem he has which cannot be treated in India but only in London?பதில்: அப்படியா? ஸ்டாலினா லண்டனுக்கு வைத்தியத்துக்காக சென்றார்? ரஷ்யாவில் இல்லாத மருத்துவர்களா? ஆனால் அப்படியெல்லாம் ஸ்டாலின் லண்டனுக்கு சென்றதாக நான் எங்குமே படிக்கவில்லையே? ஏதாவது ரஷ்யாவிலிருந்து புது ஆவணங்கள் கிடைத்தனவா? எது எப்படியிருந்தாலும் அவர் இறந்து 56 ஆண்டுகளுக்கும் மேலாயின. இப்போது எதற்கு பழைய கதை? அப்படியே இருந்தாலும் அவர் ஏன் இந்தியாவுக்கெல்லாம் வந்திருக்க வேண்டும்?
சேதுராமன்1. ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மாதிரி ப்ளேன் டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா?பதில்: தொழிற்சங்கம் அமைக்கும் உருமை பெற்ற எல்லா தொழில்களிலும் வேலை நிறுத்தம் ஒரு பிறப்புரிமை. பைலட்கள் செய்யலாம், செய்தார்கள். சமீபத்தில் 1996 ஜூன் 16-ஆம் தேதி நான் தில்லியிலிருந்து சென்னைக்கு ஃப்ளைட் பிடித்தபோது பைலட் வேலை நிறுத்தத்தால் பயணம் 6 மணி நேரம் லேட்.
2. ஆந்திராவில் முதல்வர் பதவிக்கு ஜகன் ரெட்டி தகுதியானவரா? ஆந்திரா அன்பழகன் ரோசையாவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டாமா?பதில்: அன்பழகன்கள் எல்லா ஊர்களிலுமே இளிச்சவாயர்கள்தானே. இதில் என்ன ஆச்சரியம் இருக்கவியலும்?
3. வாரப் பத்திரிகைகளுக்கு, கதைகள் அவசியமா - ஸ்ரேயா முதல் ஸ்ருதி வரை 'திறந்த வெளி' போஸ் கொடுத்து விற்பனையைப் பெருக்கும்போது?பதில்: ஒரு கையால் எத்தனை நேரம்தான் கை தட்டவியலும்? களைப்பாகி விடுமே. ஓய்வு வேண்டாமா. ரிலேக்ஸ் செய்யவே கதைகள்.
4. தி.மு.க. எப்போதுமே ஜனநாயகப் பண்புகளை மதிக்கும் என்ற மு.க. வின் பேச்சு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?பதில்: முதல்வர் இதையேல்லாம் பத்திரிகைகளில் எழுதினால் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் எனப் பெயர் பெறுவார்.
அனானி (12.09.2009 இரவு 08.18-க்கு கேட்டவர்) 1. மூர்த்தியை மேலும் மேலும் வளர்த்து விட்டு ஆதாயம் தேடினீர்கள் என்ற குற்றசாட்டு உண்மையா?பதில்: நானாவது என்னைக் காத்துக் கொள்ள போராடி வெற்றி பெற்றேன். ஆனால் அவனோ என்னைத்தான் நன்றாக வளர்த்தான். போராடினான் அதற்காக மிகப்பெரிய அளவில். அதே பெரிய அளவிலேயே உதையும் வாங்கினான். உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சுத்தான் தீர வேண்டும்.
போலி விவகாரத்தில் பலர் பலவிதமாகக் கூறிவிட்டார்கள். அவனால் எல்லோரையும்விட மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவன் நான். நான் அவனை எதிர்த்து போராடியபோது ஒத்துழைக்காவிட்டாலும் பரவாயில்லை, அதைரியப்படுத்தியவர்களே அதிகம். போலியின் செயல்பாடு என்னவென்றால் அவன் ஒருவரை மோசமாக அட்டாக் செய்வான். அவ்வாறு தாக்கப்பட்டவர் பேசாமல் நகர்ந்து விடுவார். இவன் கொக்கரித்துவிட்டு அடுத்த ஆளைத் தேடுவான். அவ்வாறு எனக்குத் தெரிந்து போனவர்கள் கிட்டத்தட்ட 10 பேர். பெரும்பான்மையினர் பார்ப்பனர்.
அவனுடைய துரதிர்ஷ்டம் டோண்டு ராகவன் என்னும் சண்டைக்கார பாப்பானை தேர்ந்தெடுத்தான். நான் விலகுவதாக இல்லை. உனக்காச்சு எனக்காச்சு என போராடினேன். இத்தனைக்கும் என்னைப் போல போலியாக உருவெடுத்து மற்றவர்களை நான் திட்டுவது போல தோற்றத்தை வரவழைத்தது அதுவரைக்கும் யாருமே செய்யாதது. கையாலாகாது வேடிக்கை பார்த்தவர்கள் எனக்கு மட்டும் புத்தி சொன்னார்கள். ஒன்று சண்டை போடுபவர்கள் இருவரையும் தடு, அதற்கு வக்கில்லாமல் ஒருவனை மட்டும் தடுக்காதே எனக் கூறிவிட்டு நான் எனது சண்டையைத் தொடர்ந்தேன்.
என் பெண்ணின் போட்டோவை போட்டபோது சதயம் போன்ற சில பதிவர்கள் ஆஷாடப்பூதித்தனமாக வருத்தம் தெரிவித்து விட்டு டோண்டுவுக்கு நன்றாக வேண்டுமென கெக்கலி கொட்டினர்.
இது பற்றி நான் இப்பதிவில் எழுதிய சில வரிகள் இதோ.
“அதற்கு முன்னால் சதயம் அவர்கள் அவர் பதிவில் போட்டதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.
//தனிப்பட்ட முறையில் பெரியவர் டோண்டுவிற்காக வருந்தினாலும் இத்தகைய ஆப்புகளை வாங்குவதற்காக அவர் மெனக்கெட்டு உழைத்தார் அல்லது அவரின் நலம்விரும்பிகளை உழைக்க வைத்தார் என்றே நிணைக்கிறேன்.அந்தச் சகோதரியைப் பற்றிய சில பின்னூட்டங்கள் நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.//
ஏன் சார் ஆஷாடபூதித்தனமாக வருத்தமெல்லாம் தெரிவிக்கிறீர்? அதற்கு உங்களுக்கு அனானியில் பின்னூட்டம் இட்டவரே மேல். வெளிப்படையாகவே எழுதுகிறார்.
//ஜாக்கிரதை சதயம். நீங்கள் கூறியது போல ஒரு டோண்டு சந்திக்கும் பிரச்சினைகள் போதாதா. நீங்கள் வேறு சனியனை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? டோண்டு நாசமாய் போகட்டும். அவனால்தானே மட்டுறுத்தல் வந்து தமிழ்மணத்தின் சுதந்திரமே பறிபோனது. நன்றாக வேண்டும் அவனுக்கு.//
அதானே, அந்த மட்டுறுத்தலால்தானே உங்கள் பதிவுகள் இற்றைப்படாமல் இருக்கின்றன. போய் ஸ்வீட் சாப்பிடுங்கள் சார்.
//இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோண்டு அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார் என நான் எண்ணவில்லை.//
இல்லையே, நன்றாகத் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன்.
//மற்றபடி தொழில்நுட்ப யுத்தத்தில் உங்கள் கை ஓங்கியிருப்பது உண்மைதான்....உங்களின் திறமையையும், உழைப்பையும், துல்லியத்தையும் பார்த்து என் போன்ற அரைட்ரவுசர்கள் அசந்து போயிருக்கிறோம். உங்களின் பின்னூட்டத்தை நீக்கவே படாதபாடு பட்டேன்...ஹி..ஹி...என்னுடைய தொழில்நுட்ப அறிவு அத்தகையது.//
போய் போலி டோண்டு ரசிகர் மன்றம் வைப்பதே நலம், அல்லது சிம்ரன் ஆப்பக்கடையிலிருக்கும் ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, கருத்துச் சுதந்திரம் பறிபோகிறதென்று ஒரு ஹை மாரல் ரீசனுக்காக மட்டுறுத்தலையே செயல்படுத்தாது இருப்பவர் போலியின் தரப்பிலிருந்து வரும் கருத்து சுதந்திர கொலைக்கு இப்படி ஏன் ஜிஞ்சா அடிக்கிறீர்கள்? உங்களுக்கும் ஆப்பு வைப்பான் என்ற பயம்தானே காரணம்”?போலியுடன் நான் போடும் சண்டை எனக்காக மட்டும் இல்லை, பதிவர் சுதந்திரத்துக்காக என்ற அடிப்படை அறிவு கூட இல்லாது குருட்டுத்தனமாக பலர் இருந்தனர்.
2. மூர்த்தி உங்களின் குடும்ப பெண்களை புகைப்படம் போட்டு மோசமாக எழுதியும் நீங்கள் ஏன் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை?பதில்: யார் சொன்னது கொடுக்கவில்லை என்று? 2006-லேயே சிபிசிஐடியில் புகார் தந்தேன். அங்கு டிஜிபி ஆக ஒரு பெண்மணி இருந்தார். பலமுறை அந்த அலுவலகம் சென்றேன். என்னிடமிருந்து விவரங்கள் வாங்கிக் கொண்டு காசி, திருமலை ஆகியோரும் புகார் தந்தனர். ஆனால் 2006-ல் சைபர் கிரைம் துறையிடம் இப்போது இருப்பது போன்று வசதிகள் இல்லை. அவை வர சில காலம் பிடித்தது.
மூர்த்தியின் கெட்ட காலம் 2008-ல் செந்தழல் ரவியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அவரது பெயரை ஆர்க்குட்டில் கெடுத்து வைத்தான். அவர் சிறிது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு மந்திரியின் பி.ஏ. மூலம் நேராக சிடி போலீஸ் கமிஷனரிடம் சென்றார்.
இது சம்பந்தமாக ஜூலை 2008-ல் நான்
போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு என்னும் பதிவில் எழுதிய வரிகள் இதோ:
செந்தழல் ரவி, உண்மைத் தமிழன், ஓசை செல்லா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மூர்த்தியின் மேல் புகார் அளித்து அது பத்திரிகைகளிலும் வந்தது தெரிந்ததே. அதற்கு ஒரு வாரம் கழித்து நானும் சென்றேன். எனது புகார் சைபர் கிரைமில் ஒரு உதவி ஆய்வாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவரிடம் என் பெயரில் மூர்த்தி தயாரித்த ஆர்க்குட் ஆபாச பக்கங்களை காண்பித்தேன். மொத்தம் 23 ப்ரொஃபைல்கள். எல்லாவற்றையும் பொறுமையாக அவர் ஸ்க்ரீன் ஷாட்டுகள் எடுத்தார். நேரம் ஆக ஆக மூர்த்தியின் மேல் அவரது கோபம் அதிகரிக்க ஆரம்பித்தது. போலி டோண்டு பற்றி நான் இட்ட பதிவுகள் எல்லாவற்றையும் பார்த்தார் அவர்.
முதல் காரியமாக ஆர்க்குட் பக்கங்களை அவர் கூகளுக்கு எழுதி அழிக்கச் செய்தார். டுண்டூ பதிவர் எண்ணில் போடப்பட்டிருந்த மூன்று வலைப்பூக்கள் அழிக்கப்பட்டன. வெளியில் சொல்லாமல் கமுக்கமாக விசாரணை நடத்தப்பட்டது. கூகள் நிறுவனம் ஒத்துழைத்தது. மலேஷியாவுக்கும் செய்திகள் பறந்தன. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நேற்று ஒரு விஷயம் நடந்தது.
நேற்று சைபர் க்ரைமில் வைத்து போலி டோண்டு மூர்த்தியை நேருக்கு நேர் சந்தித்தேன். கேசை விசாரித்து வரும் அதிகாரிகளே மூர்த்தியின் செயல்பாடுகளைப் பார்த்து நொந்து போயினர். புகார் அளித்தவன் என்ற ஹோதாவில் என்னையும் அங்கு அழைத்ததால் நான் அங்கு சென்றிருந்தேன்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேர விசாரணை. மூர்த்தி இட்டிருந்த பதிவுகளின் அச்சடிக்கப்பட்ட காகிதங்களுடன் பதிவர் உண்மைத் தமிழனும் ஆஜரானார். என் தரப்புக்கு நானும் சைபர் கிரைம் அதிகாரியிடம் மூர்த்தியால் உருவாக்கப்பட்ட உரல்களை எடுத்து தந்தேன்.
மூர்த்தியுடன் அவரது வக்கீல் மற்றும் மைத்துனர் வந்திருந்தனர். தன் சகோதரியின் கணவன் இவ்வளவு கீழ்த்தரமாக செயல்பட்டதைப் பார்த்து அந்த இளைஞருக்கு பேச்சே வரவில்லை. அவமானத்தால் குனிந்த தலை நிமிரவே இல்லை.
மூர்த்திக்கு மலேஷியாவில் பார்த்த வேலை பறிபோயிற்று. பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. (அப்படியில்லை என செந்தழல் ரவி கூறுகிறார். இந்த வரியை சேர்த்த நேரம் 14.38 மணி, 25.07.2008)
இப்படியாக மூன்றாண்டுகளாக நடத்திய யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த மூன்றாண்டுகளாக என்னென்னவெல்லாம் நடந்து விட்டன! மூர்த்திக்கு சப்பைக்கட்டு கட்டியவர்கள் எத்தனை பேர்?
இப்போதும்
போலியின் அல்லக்கைகள் சப்பைக்கட்டு கட்டுகிறார்களே? நடந்ததிலிருந்து பாடம் கற்காதவர்கள் பின்னால் வருந்துதலைத் தவிர்க்கவியலாது.
இன்னொருவர் இப்போது நடந்ததைக் கூறுகிறேன் பேர்வழி எனக் கிளம்பி என்னமோ மூர்த்தி மகாத்மா ரேஞ்சுக்கு இருந்ததுபோலவும் நான் அவனை சீண்டிச் சீண்டி போலியாக்கியதாகவும் அழுவாச்சி பதிவுகள் போட்டு வருகிறார். அவற்றை எல்லாம் ஒரு சிரிப்புடன் பார்த்து வருகிறேன்
வஜ்ரா1. அண்ணாதுரை பிறந்தநாளன்று கோவை குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சில குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் கருணாநிதி. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்: முற்றிலும் பொறுப்பற்றச் செயல்.
கேள்விகள் ஏதும் இப்போதைக்கு கைவசம் இல்லை. ஆகவே மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்