9/07/2009

ஜொள்ளு விடறவன் முட்டாள்னு சொல்ல ஒரு தனி ஆராய்ச்சி தேவையா டோமரு?

இதைத் தெரியாதவங்க யாராவது இருக்காங்க? ஆனாக்க அதுக்கு போய் மெனக்கெட்டு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்களே.

நண்பர் சந்திரசேகர் எனக்கு அனுப்பித்த இந்த மின்னஞ்சலில் Pat Hagan என்பவர் Telegraph, UK-ல் எழுதிய கட்டுரையை என் கவனத்துக்கு கொண்டு வந்தார். அது சம்பந்தமாக எனது ஆங்கில வலைப்பூவில் இந்த இடுகை இட்டுள்ளேன்.

எவ்ளோ புத்திசாலியா இருந்தா என்ன, அம்சமா ஒரு ஃபிகர் வந்து புன்னகை செஞ்சாலே ஃப்ளாட் ஆயிடறாங்களே. இது லோகத்துக்கே தெரிஞ்ச விஷயம்தானே. இருந்தாலும் இதையும் நிரூபிக்க ஒரு ஆய்வு நடத்தியிருக்காங்கப்பு. அது பத்தித்தான் இப்பதிவில் பார்க்கப் போறோம்.

இந்த ஆய்வில் என்ன செஞ்சாங்க? மூளையை உபயோகித்து ஸ்கோர் செய்ய வேண்டிய சோதனை ஒண்ணை தேர்ந்தெடுத்தாங்க. முதலில் ஆண்கள் எல்லாம் டெஸ்ட் கேள்விகளுக்கு மடமடன்னு பதில் கொடுத்தாங்க. அதே ஆண்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு அழகான பெண்ணுடன் பேச விட்டாங்க. பிறகு மறுபடியும் டெஸ்ட் பண்ணாக்க அவனவன் சிங்கியடிக்கிறான். முந்தைய ஸ்கோர் வரவேயில்லையாம். ஆக ஜொள்ளு விட்டாக்க வேலையில் காலியாங்கற கேள்விக்கு ஆமாம் அப்படித்தான்னு விடை கிடைத்த் விட்டது.

இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் அதன் ரிசல்டுகளை Journal of Experimental and Social Psychology-யில் பதித்துள்ளனர். அவர்களது துணிபு என்னவென்றால், அழகான ஃபிகர்களை மடக்கும் நோக்கத்துடன் புத்தியை அதிகம் செலவழித்ததாலேயே ஆய்வில் பங்கு கொண்ட ஆண்கள் பின்னால் டெஸ்டில் பிளாங்கி அடித்தனர் என்பதேயாகும்.

கோஎஜுகேஷன் ஸ்கூல்களில் பரீட்சையில் கோட்டைவிட்டப் பசங்கள் முக்கால்வாசி நேரம் இந்த ஜொள்ளு விஷயத்தால்தான் கெட்டார்கள். வேலை செய்யும் இடங்களில் கூட சூதனமாக பெண்டுகள் பின்னால் போகாமல் இருங்கடா டோமருங்களா என சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதே சமயம் அழகான ஆண்களுடன் பழகும் பெண்களுக்கெல்லாம் அம்மாதிரி நிகழ்வதில்லையாம்.

ஏன் இப்படி என்கிற கேள்விக்கு அளிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஃபிகர்களை மடக்குவது ஆண்களுக்கு கடினமாக இருக்கிறதாம். அதே சமயம் பெண்கள் தங்களுடன் உறவு கொள்ள ஆண்களை சுலபமாக அழைக்கவியலுமாம். இதுக்காக விசேஷமாக முயற்சிகள் எதுவும் தேவையில்லையாம். வெறுமனே செக்ஸியாக ஒரு லுக் விட்டு, லேசாக உடலுடன் உராசினாலே வெற்றிதானாம். ஆனால் ஒன்று. பின்னால் வரும் விளைவுகளையும் கவனிக்க வேண்டியிருக்கும். ஒரு முறை உசுப்பப்பட்ட ஆண் சட்டென பின்வாங்க மாட்டான். ஆகவே தமாஷுக்காகவெல்லாம் இதைச் செய்யலாகாது என்பதை ஒரு புத்திசாலிப் பெண் உணர்ந்தே இருப்பாள். எது எப்படியானாலும் பிள்ளை பெறப்போவது அவள்தானே. அவதியும் அவளுக்குத்தானே.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிட்ட ஆண் டெஸ்டுக்கு பிறகு தன் விலாசத்தைக்கூட சிறிது நேரத்துக்கு மறந்தானாம். எல்லாம் நேரந்தேன். அப்படியா ஒருவன் தன் சக்தியை இம்மாதிரி வீணாக்குவான்?

British Psychological Society-யை சேர்ந்த மனோதத்துவ நிபுணர் Dr. George Fieldman கூறுவது என்னவென்றால் ஆண் எப்போதுமே தனது ஜீன்களை பரப்புவதிலேயே குறியாக இருப்பான் என்பதே. அதனால்தான் அழகிய ஃபிகர்களிடம் அசடு வழிவது எல்லாம் நடக்கிறது.

ஆனால் பெண்ணோ மேலதிக விஷயங்களையும் பார்க்கிறாள். ஆணின் செல்வம், இளமை, நல்ல குணம் எல்லாமே அவளது தெரிவில் காரணிகளே.

அதாகப்பட்டது பெண் புத்தியுடன் செயல்படுகிறாள். ஆணுக்கு அவ்வளவு போதாது. அதாவது பெண்புத்தி முன்புத்தி இந்த விஷயத்தில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/04/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 04.09.2009

பழமைபேசியின் எகத்தாளம் பற்றிய பதிவு
பழமைபேசியின் பதிவுகள் எனக்கு பிடிக்கும். முக்கியமாக அவர் வயல்நாய் பேச்சி பற்றி எழுதிய இப்பதிவு. மேலே குறிப்பிட்ட எகத்தாளம் பற்றிய பதிவில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் சுவாரசியமானவை. அவை என் நினைவுகளையும் தூண்டிவிட்டன.

நான் சமீபத்தில் 1956-57 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்தபோது சாய்நாத் பிரசாத் என்னும் சிறுவன் ஒரு கேள்வி கேட்டானே பாருங்கள். எங்கள் நீதிநெறி வகுப்பில் ராமாயணக் கதையை சொல்லி வந்தார்கள். அதில் விஸ்வாமித்திரர் ராமரை தனது யாகத்தைக் காப்பதற்காக அழைத்துச் செல்லும் கட்டத்துக்கு சற்று முன்னால் கதை இருந்தது. ராமருக்கு 16 வயது முடிந்தது என ஆசிரியர் கூறினார். சாய்நாத் பிரசாத் எழுந்து நின்று பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு கீழ்க்கண்டவாறு கேட்டான்.

சாய்நாத்: சார், ராமரோட சீதை ஒரு வயது பெரியவங்கன்னு சொல்ல்றாங்களே?
ஆசிரியர்: ஆமாம் அப்படியும் சிலர் கூறுவது உண்டு.
சா: அப்படியான்னா சீதை கல்யாணத்தின்போது அவங்களுக்கு 17 வயது?
ஆ: ஆமாம்
சா: கல்யாணத்துக்கு பிறகு 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்திருக்காங்க. அதுக்கப்புறம்தான் வனவாசம்.
ஆ: ஆமாம்
சா: அப்புறம் காட்டுல 13 ஆண்டுகளுக்கு அப்புறம்தான் ராவணன் வந்து சீதையை அபகரித்துச் சென்றான்.
ஆ: ஆமாம்.
சா: ஆக அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ராவணன் போயும் போயும் 42 வயசுக்காரங்களையா அழைத்துச் சென்றான்?

சாய்நாத் பிரச்சாத் பெஞ்சு மேல் ஏற்றப்பட்டு உதை வாங்கினது வேறு கதை.

தமிழில் இரண்டாவது புதினமான கமலாம்பாள் சரிதத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம் (1880-களில் வெளிவந்த நாவல்). அதில் ஆடுதாபட்டி அம்மையப்பிள்ளை நளவெண்பா பாடம் எடுக்கிறார். அதில் நிடதநாட்டுச் சிறப்பைக் கூறும் ஒரு வெண்பாவில் பெண்கள் சந்தனம் தேய்த்து குளிக்க, சந்தனக் குழம்பு எல்லாம் தெருக்களில் ஓட அவற்றில் சென்ற யானைகளும் வழுக்கி விழுந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை படித்த அம்மையப்பப்பிள்ளை பரவசம் அடைகிறார். “அடாடா எப்படிப்பட்ட ஊர். நம்ம ஊரும் இருக்கே”.

போக்கிரிமுத்து என்னும் மாணவன் வினயமாக கேள்வி கேட்கிறான், “ஐயா, யானைகளே அப்படி வழுக்கி வீழ்ந்தால் மனிதர்கள் கதி என்ன”?

ஆசிரியர் கூறுகிறார், “நம்ம ஊர் மாதிரி தரித்திரம் பிடிச்ச ஊரா? எல்லோரும் பல்லக்கில் அல்லவா செல்வார்கள்”?

போக்கிரிமுத்து விடவில்லை. “ஐயா, பல்லக்குதூக்கிகள் மட்டும் வழுக்கிவிழமாட்டார்களா”? என்று கேட்கிறான்.

அம்மையப்பபிள்ளை மேலே கூறுகிறார், “இப்படியெல்லாம் விதண்டாவாதம் செய்யக்கூடாது. இப்பாடலிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், நிடதநாட்டில் சந்தன மரங்கள் அபரிதமாக இருந்தன”.

போக்கிரிமுத்துவின் முடிவுரை, “அவ்வூரிலும் பெண்கள் இருந்தார்கள். அவர்களும் குளித்தார்கள்”.

வாத்தியார்களுக்கு செல்லப் பெயர்கள் - விசு டோண்டு ராகவனை கண்டித்த கதை
எகத்தாளம் என்றதும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் வைக்கும் நிக்நேம்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. பலருடைய உண்மைப் பெயர்களே தெரியாமல் போய்விடும். சமீபத்தில் 1998 கடைசியில் டைரக்டர் விசு அவர்கள் தயாரித்த குமுதம் இதழில் அவர் தான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளீயில் படித்தது பற்றி எழுதியிருந்தார். அவர் சொன்ன நிகழ்வுகளை படித்ததும் அவர் நான் படித்த நாளிலேயே அப்பள்ளிக்கூடத்தில் படித்தார் என்பதை அறிந்தேன். முக்கியமாக விசு என்னுடன் 9-ஆம் வகுப்பில் படித்த விஸ்வநாதனாக இருப்ப்பாரோ என சம்சயம். விஸ்வநாதனுக்கு பருப்புக் குசு என்ற நிக்நேமும் உண்டு.

ஆகவே 1999 ஜனவரியில் சென்னைக்கு சொந்தவேலையாக வந்தபோது அவரது டெலிஃபோன் நம்பரைக் கண்டுபிடித்து அவருடன் தொடர்பு கொண்டு அவர் எந்த ஆண்டு SSLC பாஸ் செய்தார் எனக் கேட்க அவர் 1961 என்றார். நான் 1962-ல் பாஸ் செய்ததால் அவர் பருப்புக் குசுவாக இருக்க முடியாது என முதற்கண் நிச்சயம் செய்து கொண்டேன். ஆகவே அதை குறிப்பிடாது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மேலே பேச ஆரம்பித்தேன். எனக்கு பள்ளியிறுதி வகுப்பில் அப்ரஹாம் லிங்கன் தமிழ் வகுப்பு எடுத்தார் எனக் கூற, விசு சீறலோடு என்னை இடைமறித்தார். “சார் அவர் பெயர் ராஜகோபால்” என்று. பிறகு ஒன்பதாம் வகுப்பில் “தோசிதான் எனக்கு சமூகவியல் பாடம் எடுத்தார்” எனக்கூற, “ஐயோ என்ன சார் இது, அவர் பெயர் பாஷ்யம் ஐயங்கார்” என்றார். பிறகு நான் மற்ற ஆசிரியர்களான பஞ்சர் (கிருஷ்ணமூர்த்தி), சித்ரா (ரகுநாதன்-ஸ்கூல் நாடகத்தில் பெண்வேஷம் போடுபவர்), பறக்கும்பாப்பா, வைஜயந்திமாலா, சீட்டா (சுப்பிரமணியம்), மசால்வடை (ஸ்ரீனிவாசன்) ஆகியோரை குறிப்பிட, “சார் ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க. இப்படியா ஆசிரியர்களை அழைப்பது” என நொந்து போனார். அவர்கள் உண்மையான பெயர்கள் தெரியாது என்றும், அவர்களை அவமதிக்கும் எண்ணமே எனக்கு இல்லை என்றும் அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. கடைசியில் தயங்கியவாறே எங்கள் டிராயிங் வாத்தியாரை செல்லப் பெயரைக் கூறி அவர் உண்மைப் பெயரைக் கேட்க, அவர் திருஞானம் என்றார் (மோசமான செல்லப் பெயர் அது; இங்கு வேண்டாம்).

திருவல்லிக்கேணியில் நான் படித்த அதே காலகட்டத்தில் இன்னும் இரு பள்ளிகள் இருந்தன. அதில் ஒன்றுதான் கெல்லட் ஹைஸ்கூல். அதன் தலைமையாசிரியர் (பிரின்ஸிபால்) பெயர் தம்புசாமி. ஆனால் அவரை பசங்கள் குள்ளன் என்றுதான் அழைப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இவ்வளவு ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது அவற்றை அவமரியாதையாகக் கருதமுடியாது என்றுதான் நினைக்கிறேன்.

ஆ ஊ என்றால் விடுமுறைதானா?
ஆந்திர முதல்வர் விபத்தில் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. அதற்கு ஆந்திர அரசில் லீவ் விடுவதும் புரிந்து கொள்ள முடிந்ததே. மத்திய அரசுகூட ஆந்திராவில் உள்ள தமது அலுவலகத்துக்கு மட்டுமே லீவ் விட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு லீவ் விடுவதை புரிந்து கொள்ள முடியவில்லைதான்.

இது சம்பந்தமாக நான் இட்ட இந்தியாவுக்கு கட்டிவராத டாம்பீகம் பதிவில் எழுதியதிலிருந்து சில வரிகள்:
“எனக்கு தெரிந்து எந்த பாராளுமன்ற அல்லது சட்டசபை கூட்டத் தொடரோ அதனதன் முதல் நாளைக்கு முழுவதுமாக வேலை செய்ததில்லை. என்ன நடக்கும் என்றால், இடைகாலத்தில் யாராவது பழைய அல்லது செயலில் உள்ள அங்கத்தினர்கள் மண்டையைப் போட்டிருப்பார்கள். முதல் நாளன்று சபை கூடியதும் இறந்தவர்களை பற்றி இரங்கல் தீர்மானம் போட்டு விட்டு, சபையை அத்துடன் அன்றைக்கு ஒத்தி வைத்து விட்டு இறங்கி போய் கொண்டேயிருப்பார்கள். இதில் கட்சி வேறுபாடே கிடையாது.

நான் கேட்கிறேன், ஒரு நாளைக்கு சட்டசபை கூட்டம் நடக்க என்ன செலவாகும்? அத்தனையும் எள்ளுதானா? ஏன், இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து அஞ்சலி செலுத்தி விட்டு வேலையைத் தொடங்கினால் குடி முழுகி விடுமா என்ன?

இன்னொரு கொடுமை செயற்கைக்கோள் சேனல்கள் வருவதற்கு முன்னால் நடந்தது. அதாவது ஒரு தலைவர் இறந்தால் இரண்டு நாட்களுக்கும் மேல் சோக இசைதான் தொலைக் காட்சி மற்றும் ரேடியோவில். அதுவும் இந்திராகாந்தி இறந்த போது அவர் உடல் மரியாதைக்கு வைக்கப்பட்டது முழுக்க முழுக்க லைவ் ஆக ஒளிபரப்பப்பட்டது. அடுத்த நாள் சடங்குகளும் அவ்வாறே. ராஜீவ் காந்தி கோட்டின் மேல் பூணூல் போட்டுக் கொண்டு சடங்குகள் செய்ததை முழுக்கவே காண்பித்தார்கள். நல்ல வேளையாக இப்போதெல்லாம் இந்த வேலை நடக்கவியலாது என்பதற்கு நாம் உலகமயமாக்கலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அதே போல பிரதம மந்திரி / குடியரசுத் தலைவர் இறந்தால் இரண்டு நாள் விடுமுறை. வெளி தேசத்து தலைவர்கள் இறந்தால் ஒரு நாள் விடுமுறை. என்ன இதெல்லாம் கூத்து? ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு லீவ் விட, சோவியத் யூனியனிலோ லீவே கிடையாது. எங்கு போய் அடித்து கொள்வது”?


அன்புடன்,
டோண்டு ராகவன்

9/03/2009

நூறு ஆண்டுகளுக்கு அப்பால் - பெண்ணின் திருமண வயது

துஷ்யந்தன், சகுந்தலை விஷயத்தில் உண்மையாகவே என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து எழுதிய நாடோடி, துச்சாசனன் அவிழ்த்துப் போட்ட புடவைகளால் வந்த பிரச்சினையை சுவையுடன் அலசிய நாடோடி, தமிழ்நாட்டில் நடக்கும் விஷயங்களை பகிடி செய்ய அதிசயபுரி என்ற பிரத்தியேக நாட்டை சிருஷ்டி செய்து, தனது மனோரதத்தில் ஏறி கால பரிமாணங்களை தாண்டி தமிழகத்துக்கு சென்று தான் கண்டதை எழுதும் நாடோடி பற்றி நான் ஏற்கனவே பதிவுகள் போட்டபோது கைவசம் அவர் புத்தகங்கள் ஏதும் இல்லை. ஆனால் இம்முறை ஒரு புத்தகம் கிடைத்தது, அதன் தலைப்பு “ஆயிரம் வருஷத்துக்கு அப்பால்”.

அதிலிருந்து புத்தகத் தலைப்பிலேயே வந்த கட்டுரை பற்றி பதிவு போட்டாகி விட்டது. இப்போது அடுத்த பதிவுக்கு செல்வோம்.

இப்பதிவை ஆரம்பிக்கும் முன்னால் இதில் வரும் இக்கட்டுரையை நாடோடி அவர்கள் இற்றைப்படுத்திய விஷயம் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. சமீபத்தில் 1955-ல் இக்கட்டுரை முதலில் வெளியாகியிருந்தது (தீபாவளி மலரிலா அல்லது சாதாரண விகடன் இதழிலா என்பது இப்போது நினைவிலில்லை). அதில் நாடோடி அவர்கள் தனது மனோரதத்தை 1955-லிருந்து 2055-க்கு செலுத்துவதா அல்லது 1855-க்கு செலுத்துவதா என குழம்பி, முன்னும் பின்னும் போய் 1855-க்கே போனதாக கதையை ஆரம்பிக்கிறார்.

ஆனால் எனது கையில் இப்போது இருக்கும் புத்தகத்திலோ அவையே 1957, 1857 மற்றும் 2057-ஆக மாற்றப்பட்டுள்ளது. ஏதோ நாடோடியாலான இற்றைப்படுத்தல் என வைத்து கொள்ளலாமா? ஆனால் இப்பதிவில் நான் ஒரிஜினலாகக் கூறப்பட்ட 1955-யே எடுத்து கொள்கிறேன்.

ஆக, முதலில் சொன்னது போல சில முறைகள் முன்னே பின்னே சென்ற பிறகு 1855-க்கே செல்கிறார். அதே தமிழகம்தான் ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னால். அவர் இப்போது ஒரு திருமண வீட்டுக்குள் இருக்கிறார். பெண்களெல்லாம் அழகாக உடை உடுத்தி பவ்யமாக தத்தம் கணவருடன் நிற்கின்றனர். 12 வயதுக்கு மேல் மணப்பெண்ணின் வயதைக் கூற முடியாது. சுற்றியிருக்கும் பெண்களின் வயதும் 18, 19 என்றுதான் இருக்கும். எல்லோருக்கும் குழந்தைகள் வேறு. படித்த பெண்கள் முகத்தில் சாதாரணமாக காணப்படும் முக்குக் கண்ணாடிகள் இல்லை, அதிகம் படித்ததால் ஏற்படும் சோர்வும் இல்லை. ஒருவருமே அவ்வளவாகப் படிக்காதது போலத்தான் இருந்தது. பெண்கள் கையில் பணமும் இல்லை. தத்தம் கணவரிடம்தான் பணம் பெற்று செலவழித்தனர்.

இக்காட்சிகளை பார்த்த் விட்டு வெளியே வந்தால் நாடோடிக்கு தூக்கிவாரிப் போட்டது. வாசலில் நூற்றுக்கணக்கான மோட்டார் கார்கள் நின்றிருந்தன. 1855-ல் ஏது மோட்டார் கார் எனக் குழம்புகிறார் நாடோடி அவர்கள். அங்குள்ள ஒரு காரை ஒருவர் ஸ்டார்ட் செய்ய முயற்சித்து கொண்டிருக்க, அவரிடம் நாடோடி காரில் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்க்குமாறு கூறுகிறார். அவரோ இவரை துச்சமாகப் பார்த்து விட்டு காருக்கு பெட்ரோல் ஏன் தேவை, அது அணு சக்தியால் ஓடும் என்பது கூடத் தெரியாதா என எகத்தாளமாகக் கேட்கிறார். பிறகு மேலே பேசியதில் தான் 1955-ஆம் ஆண்டிலிருந்து வருவதாகவும், இப்போது 1855-க்கு வந்த பிறகு இங்குள்ள கார்கள் ஏது என குழம்பியதாகவும் நாடோடி கூற, மற்றவர் பெரிதாக சிரித்து விட்டு நாடோடி வந்திருப்பது 2055-க்குத்தான் என விளக்குகிறார்.

அப்படியானால் பெண்கள் மட்டும் 1855-ஆம் ஆண்டு பெண்களைப் போல் ஏன் இப்படி கட்டுப்பெட்டித்தனமாக இருக்கிறார்கள் எனக்கேட்க, மற்றவர் இவரிடம் 2055-க்கான பெண்கள் எவ்வாறு இருப்பார்கள் என நாடோடி நினைத்ததாக அவரிடமே கேட்கிறார். அவரும் 1955-ல் ஸ்திரீ சுதந்திரம், ஸ்திரீ முன்னேற்றம் என்ற பெயரில் ஆண்களுடன் எல்லா துறைகளிலும் போட்டி போட்ட பெண்கள் நிலையை எடுத்துரைக்கிறார். 2055-ல் பெண்கள் இன்னும் அதிக சுதந்திரம் அடைந்திருப்பார்கள் என தான் நினைத்ததாகக் கூறுகிறார்.

புது நண்பர் பெண்களின் 2055-ஆம் ஆண்டுக்கான நிலையை விளக்குகிறார்.

பெண்களுக்கு 14 வயதுக்குள்ளாக திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது. அவ்வாறு செய்யாவிட்டால் பெண்ணின் 14-வயது பூர்த்தியடையும் கடைசி நாளன்று அரசே பையனை ஏற்பாடு செய்து திருமணத்தை நடத்தி வைக்கும். பெண்ணின் பெற்றோருக்கு சிறை தண்டனை கிடைக்கும். திருமணத்துக்கு பிறகு பெண்களுக்கு கல்வி கிடையாது. தனிப்பணம் வைத்துக் கொள்ளக்கூடாது. லேடி டாக்டர் மற்றும் நர்ஸ் தவிர வேறு உத்தியோகங்களை செய்ய அனுமதி இல்லை.

பெண்களை ஏன் இவ்வாறு அடக்கி வைத்திருக்கிறீர்கள் என நாடோடி அவரைக் கேட்க அவர் அதை தெரிந்து கொள்ள 2005-ஆம் ஆண்டில் பெண்கள் நடத்திய புரட்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் எனக்கூறுகிறார். பிறகு இருவருமாக நாடோடியின் மனோரதத்தில் ஏறி 2005-க்கு செல்கின்றனர்.

அதே தமிழ் நாடுதான். ஆனால் ஆண்டு மட்டும் 2005. தெரு வழியாக இறங்கியதும்தான் தமதம், ஆயிரக்கணக்கான பெண்கள் அடங்கிய ஊர்வலம் தெருவழியாக அவர்கள் எதிரே வந்தது. அவர்கள் பல வாசக அட்டைகளை பிடித்த் சென்றனர். அவற்றில் பின்வரும் கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.

பதினான்கு வயதுக்குள் கல்யாணம் பண்ணி வை.

எங்களுக்கு சொத்துரிமையும் வேண்டாம், உத்தியோகமும் வேண்டாம்.

கல்யாணத்திற்குப் பிறகு படிக்க மாட்டோம். ஒன்று பெற்றோர்கள் வரன் தேடட்டும்; அல்லது சர்க்கார் தேடிக் கொடுக்கட்டும்.


இம்மாதிரியான கோஷங்களை ஆயிரக்கணக்கான பெண்கள் தாங்கிக் கொண்டு வந்து சென்னை கடற்கரையில் கூடியது ஆண்களாகிய அவ்விருவருக்கும் பயமாக இருந்தது.

அங்கு நடந்த கூட்டத்தில் பெண்கள் பல மயிர்க்கூச்செரியும் பேச்சுக்களை பேசினர். இந்தப் போராட்டம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பதாக முதலில் கூறப்பட்டது. கூட்டத்தின் தலைவி பேசியதன் சாராம்சம் இதோ.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக பென்ணுரிமை தருகிறேன் என ஆண்கள் எங்களை மோசம் செய்து வருகின்றனர். கல்யாணம் செய்து வைக்கும் வயதை உயர்த்தும் சாக்கில் எங்களுக்கு கல்யாணம் செய்து வைப்பதையே எங்கள் பெற்றோர்கள் மறந்து விட்டார்கள். மேலும் நாங்கள் உத்தியோகங்களுக்கு செல்வதால் அதனால் வரும் பணத்துக்கு ஆசைப்பட்டு கல்யாண வயதை அவர்கள் மேலும் தள்ளிப் போடுகின்றனர். அப்படி இப்படி என எங்களுக்கு 30 வயதில் வரன் தேடினால் 40-45 வயதானவனுக்கு இரண்டாம் தரமாகப் போய் தொலைய வேண்டியிருக்கிறது. மூத்தாளின் நான்கைந்து குழந்தைகளை வேறு பராமரித்துத் தொலைக்க வேண்டியுள்ளது. சொத்துரிமை தருவதால் எங்களை பெற்றோருக்கும் சரி எங்கள் புக்ககத்தினருக்கும் சரி எங்களைப் பிடிக்காமல் போய் விட்டது. ஆகவே, அரசே எங்கள் கோரிக்கைகளை மரியாதையாக ஏற்றுக் கொள்ளவும்.

அதற்கு மேல் 2055-ஆம் ஆண்டைச் சேர்ந்தவர் நாடோடியை அங்கு இருக்க விடவில்லை. 2005-ல் அக்குறிப்பிட்ட தேதியில் கண்ணில் பட்ட ஆட்களையெல்லாம் அப்பெண்கள் உதைத்ததாக சரித்திரம் இருந்ததாகக் கூற இருவரும் அவ்விடத்தை விட்டு துள்ளி குதித்து ஓடிவிட்டனர். பிறகு நாடோடி அந்த நண்பரை 2055-ல் விட்டு விட்டு தான் மட்டும் 1955-க்கு திரும்பினார்.

இப்போது டோண்டு ராகவன் தரப்பில் சில வார்த்தைகள். இக்கட்டுரையின் முழு நோக்கமுமே 1955 நிலை குறித்த நையாண்டி மற்றும் பகிடி ஆகும். அதை நான் படித்த போது எனக்கு வயது ஒன்பது. ஆனால் மனதில் நன்றாக படிந்து விட்டது. இப்போது எதேச்சையாக நாடோடியின் இப்புத்தகம் கிடைத்ததால் பழைய நண்பனை பார்க்கும் உணர்வு.

ஆனால் ஒன்று 2005 இப்போது நமக்கு பழைய காலம். ஆனால் அவ்வாறெல்லாம் நடக்கவில்லையே எனக் கேட்பதற்கு நாடோடி என்ன நாஸ்ட்ரடாமஸா என்ன? கட்டுரையை வெறுமனே படித்து அனுபவிக்கணும். கேள்வியெல்லாம் கேட்கக்கூட்டாது எனச் சொல்வது முரளி மனோகர். இப்படித்தான் ஜார்ஜ் ஆர்வெல் என்பவர் எழுதிய நாவல் 1984. அதில் அந்த ஆண்டில் நடக்கப் போவதை அவர் கற்பனை செய்ட்து எழுதியிருந்தார். நாவல் எழுதியது 1948-ல். 1949 ஆக இருந்திருந்தால் நாவலின் தலைப்பு 1994 ஆகியிருக்கும் அவ்வளவே. ஆனால் ஒன்று அந்த நாவல் எல்லோரையும் புரட்டிப் போட்டது. இப்போது கூட Orwellian உலகம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அதுவும் 1984 ஜனவரி 1-ஆம் தேதி பல பேப்பர்களில் ஆர்வல் சொன்ன 1984 ஆரம்பித்து விட்டது என்ற பொருளில் எல்லாம் எழுதினார்கள்.

பெண்கள் சுதந்திரத்தால் பல பிரச்சினைகள் பெண்களுக்கே வந்தது, வருவது எல்லாமே உண்மைதான். முக்கியமாக அவர்களது திருமணம் மிகவும் தள்ளிப் போடப்பட்டது. பெண்ணின் சம்பளத்தை வைத்து பல பெற்றோர்கள் அது போய்விடப் போகிறதே என மனம் பதைத்து அவள் திருமணத்தை தள்ளிப்ப் போட்டதை நானே பல வீடுகளில் பார்த்தேன். சமீபத்தில் 1973-ல் வந்த “அரங்கேற்றம்” படத்தில் மூத்த பெண்ணும் அவளுக்கு அடுத்து இரு பெண்களும் திருமணத்துக்கு தயாராக இருக்கும் நிலையில் தாயார் இன்னொரு முறை கர்ப்பம் அடைகிறாள். அது ஒன்றும் மிதமிஞ்சிய கற்பனை எல்லாம் இல்லை.

ஆனால், அதற்காகவெல்லாம் பெண்களுக்கு சுதந்திரமே வேண்டாம் என பழைய காலத்துக்கு செல்ல மட்டும் நினைத்து விடலாமா? அவ்வாறு சொல்வது, இந்திய சுதந்திர தினத்தன்று அதை துக்க நாள் என அறிவித்த பெரியார் அவர்கள் வெள்ளைக்காரன் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்று பேசியது போலத்தான் இருக்கும்.

இங்கு முக்கியமாக ஒன்றை நாம் மறக்கலாகாது. ஒருபோதும் கடந்த காலத்துக்கு செல்லவியலாது. அந்த நாளும் வந்திடாதோ என எம்.எஸ். அவர்கள் பாடிய ரிகார்டை வேண்டுமானால் கேட்டு மகிழலாம். ஆனால் நிஜமாகவே அந்த நாளை வரவழைக்க நினைத்தால் ஐயா, அம்மா, அப்பப்பாதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 03.09.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

அவானி (12 கேள்விகள் கேட்பவர்)
1. ஆண்வர்க்கததை அதிகம் அல்லல்படுத்துவது மதுப் பழக்கமா? மாதுப் பழக்கமா?
பதில்: மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்றால் எல்லாமே அவற்றுள் அடங்குமே.

2. ஆண்களுக்கு பெரிய பிரச்சனையாய் மாறிவரும் தொந்தியைக் குறைக்க உபாயங்கள்?
உடற்பயிற்சி, முக்கியமாக இரண்டாவது டோஸாக சாப்பாடு/டிபன் அளித்தால் தலையை ஒரு புறத்திலிருந்து மறு புறத்துக்கு மாற்றி மாற்றி கொண்டு செல்வது, பியர் குடிக்காமல் இருப்பது.

3. தமிழ்நாட்டில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தில் இருப்பது பற்றி?
பதில்: எதிர்காலத்தை காபந்து செய்யும் புத்திசாலிகள்.

4. செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிவருவது பற்றி?
பதில்: என்னைப் போன்று சுயதொழில் செய்பவர்களுக்கு துணையாக இருந்து வியாபாரத்தை பெருக்கும் செல்போன்களுக்கு எதிராக எனக்கு என்ன ஆட்சேபணை இருக்கவியலும்?

5. தமிழ்த் திரை உலகில் புதிய இசையமைப்பாளர்களுள் உங்களைக் கவர்ந்தவர்? ஏன்?
பதில்: எம்.எஸ். விஸ்வநாதன். 45 ஆண்டுகள் கழித்து கேட்டாலும் காதலிக்க நேரமில்லை படத்தின் பாட்டுகள் இன்னும் புதிய பாடல்களைப் போலவே ஒலிக்கின்றனவே? சரியான ஜித்தன் அவர்.

6. அரசியல் தலைவர் ஒருவர் அடிக்கடி”இருப்பது ஒரு உயிர். அது போவது ஒரு முறை” என்பது பற்றி?
பதில்: உயிரும் தரப்போவதில்லை. அதற்கு எதுகையாக வருவதை கூட தரப்போவதில்லை.

7. தி.மு.க.வினர் பார்வையில் ராகுலின் தமிழக அரசியல் நடவடிக்கைகள்?
பதில்: கவலையூட்டும் வண்ணம் தனது காய்களை அவர் நகர்த்தினால் திமுகவினர் கதை கந்தல்தான்.

8. கலைஞரின் பார்வை பாஜக பக்கம், ஜெ-சோனியா-வி.காந்த் கூட்டணிக்கு வழி செய்யுமா?
பதில்: கலைஞரின் பார்வை பாஜக பக்கம் என எதை வைத்து சொல்கிறீர்கள்? ஜெயும் சோனியாவும் ஒன்று சேருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

9. தமிழ் திலையுலகின் போக்கு எத்திசையில் பயணிக்கிறது?
பதில்: தொழில் நுட்பத்தில் அபார முன்னேற்றம், ஆனால் கதையில் மட்டும் கோட்டை விடுகிறர்கள். சிவாஜி படத்தை இப்போதுதான் டி.வி.யில் பார்த்தேன். ஏன் ஊற்றிக் கொண்டது என்பது வெளி ஆளான எனக்கே புரிகிறதே.

10. அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஆன்மீகப் பணி பற்றி?
பதில்: எனக்கு அவற்றுடன் பரிச்சயம் இல்லை.

11. தூத்துக்குடி ஸ்பிக் மறுவாழ்விற்கு அரசின் உதவி வெற்றிபெறுமா?
பதில்: இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்திருக்கிறது போல. நீங்கள் சொல்வது நடந்தால் நல்லதுதானே. இங்கு பார்க்கவும்.

12. மதுரை அமெரிக்கன் கல்லுரி போல்,பல கிருத்துவ கல்லுரிகளில் (சபைகள்) பதவிப் போட்டி சொத்துச் சண்டை என உலா வரும் செய்திகள் ஏசுபிரானின் அன்புக் கொள்கைக்கு மீறீய செயலல்லவா?
பதில்: இப்படி பச்சப்புள்ளயா இருக்கீங்களே. ஏசுநாதரை சிலுவையில் அறைந்து 2000 ஆண்டுகள் ஆகப்போகின்றதே.


அனானி (21.08.2009 இரவு 10.36-க்கு கேட்டவர்)
டோண்டுவின் புதுமொழிகள்?
1.அசைந்து தின்கும் யானை; அசையாமல் தின்கும் வீடு

பதில்: மொத்தத்தில் எல்லாமே தின்கும்.

2. அசல் வீட்டுக்காரனுக்கு ஏண்டுக்கிட்டு அப்பக்காரனை அடிக்கலாமா...?
பதில்: மேனாட்டு பழக்கங்களை சிலாகித்து சக தாய் நாட்டினரை மட்டம் தட்டலாமா?

3. அங்கும் இருப்பான், இங்கும் இருப்பான், ஆக்கிய சோத்துக்குப் பங்கும் இருப்பான்- வெங்கப்பெயல்.
பதில்: நோகாமல் நோம்பும் நூற்பான்

4. அக்கு தொக்கு இல்லாதவனுக்கு தூக்கம் ஏது?
பதில்: அப்படியே தூங்கினாலும் எழுப்பிவிடு.

5. அக்கரையில் படர்ந்த பாகற்கொடிக்கு, இக்கரையில் பந்தலிடுவானேன்?
பதில்: கமல் பெரியவரா ரஜனி பெரியவரா என்று ஏன் பேச்சு? உன் வீட்டு அடுப்பு எரிகிறதான்னு பார்.

நக்கீரன் பாண்டியன்
1. இன்றும் ஒரு சிலர் தீய பழக்கங்கள் என்னும் பாழும் கிண‌ற்றில் விழுந்தது தெரிந்தும் வெளியே வர மனமில்லாமல்/இயலாமல் தங்கள் வாழ்வினை தொலைப்ப‌தற்கு என்ன காரணம்?
அ). பிரம்மன் விதித்த விதியா; ஆ). படிப்பிருந்தும் புரியா நிலையா?; இ). உங்கள் பதிவுகலக நண்பர் சுப்பையா வாத்யார் சொலவது போல அவரது ஜாதக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் ஈர்ப்பு விசையா?; ஈ).போன ஜென்மா கர்மாவா?; உ).மனித குலத்தின் இருப்பினை (மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு) சம நிலை செய்ய இயற்கையின் சித்து விளையாட்டா?; ஊ).கிருத்துவர்கள் சொலவது போல் இது சாத்தானின் சதியா?

பதில்: மேலே சொல்லப்பட்ட எல்லா காரணிகளுமே தனியாகவோ, சேர்ந்தோ செயல்படுகின்றன. ஆனால் கடைசி ரிசல்ட் ஒன்றுதான், அதாவது அழிவு.


அனானி (23.08.2009 இரவு 08.30-க்கு கேட்டவர்)
1. தேர்தல் முடிவுக்குப் பிறகு அசைக்க முடியாத சக்தியாக தே.மு.தி.க மாறியுள்ளதா?
பதில்: சக்தியாக உருவாகியுள்ளது. மற்றப்படி அசைக்க முடியாதது என எதுவுமே இல்லை.

2. இரட்டை இலை ஓட்டு வங்கி முரசுக்கு தாவிவிட்டதா?
பதில்: அப்படி என ஒட்டு மொத்தமாகச் சொல்லிவிட முடியாது.

3. ஜெயலலிதா இனி என்ன செய்யப் போகிறார்?
பதில்: அவருக்கே அது தெரியாது என்றுதான் தோன்றுகிறது. எனக்கு மட்டும் எப்படித் தெரியும் என சோ அவர்கள் சொன்னதை நானும் ஆமோதிகிறேன்.

4. தொண்டர்களின் குமுறல் கேடகாத தலைமையின் பிடிவாதத்தால்தான் அதிமுகவின் நிலை தலைகீழ் சரியா?
பதில்: அதில் என்ன சந்தேகம். ஆனால் தொண்டர்கள் என யாரை கூறுகிறார்கள்? கட்சியே எல்லாம் என செயலாற்றும் தொண்டர்கள் யாருமே இப்போது எந்தக் கட்சிக்குமே இல்லை என்பதுதான் நிஜம்.

5. கலைஞரின் அரசியல் ராஜதந்திரத்தின் முன்னால் வி.காந்த் சினிமா வீர வேஷங்கள் எடுபடுமா?
பதில்: வெறுமனே மனோகரா, பராசக்தி அலம்பல் அடுக்கு மொழிகளை மட்டுமே வைத்திருந்த கருணாநிதியே வெற்றி பெற்ற பிறகு விஜயகாந்த் ஏன் வெற்றி பெறக்கூடாது?

6. இனி காங்கிரசும் அடக்கி வாசிக்குமா?
பதில்: சொந்த பலத்தை நம்பும் துணிவு இல்லாதவரை அது வேறு என்ன செய்யவியலும்?

7. திருமங்கல பார்முலாவின் வெற்றி தொடர்வது அரசியல் ஆரோக்கியத்திற்கு சரியில்லையே?
பதில்: சரியில்லைதான் என்ன செய்யலாம் சொல்லுங்களேன்.

8. அழகிரியின் தேர்தல் மாயா ஜாலங்கள் தந்தைக்கே உபதேசம் செய்யும் செயல் போலுள்ளதே?
பதில்: அதெல்லாம் ஒரு காலத்தில் கருணாநிதி அவர்கள் நிற்கும் தொகுதிகளில்தான் செய்து கொடிருந்தார்கள். இப்போது அதை அழகிரி மேலே கொண்டு செல்கிறார் அவ்வளவே.

9. ஸ்டாலின் பிடி கட்சியில் தளர்கிறதா இல்லை இறுகுகிறதா?
பதில்: அவர் பிடி இறுகுகிறதோ அல்லது தளர்கிறதோ என்பதை பார்ப்பதற்கு முன்னால் அவர் கழுத்தில் விழுந்த அழகிரி போட்ட முடிச்சு என்னவாகும் என்பதை பார்ப்பது நலமாக இருக்கும்.

10. ஒரு குடும்ப ஆட்சி 2011ல் மாறும் என பலரின் நம்பிக்கை பொய்த்துவிடும் போலுள்ளதே, இதற்கு மாற்று வழி?
பதில்: மக்கள் விழிப்புணர்வு எய்துவதுதான். முடியுமா?

11. நவீன காதல் கிறுக்கன் ராகவேந்திரா பற்றி?
பதில்: அது என்ன நடிகை என்றால் இளப்பமா? இவ்வளவும் செய்து விட்டு தான் பைத்தியம் என தப்பித்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரே தண்டனை நிஜமாகவே ஆண்டுக்கணக்கில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைப்பதுதான்.

12. நடிகை என்றாலே கஜமுஜா ஏன்?
பதில்: கஜமுஜா பாட்டுக்கு எல்லோருக்கும் எதிராக நடந்து கொண்டுதானிருக்கும். ஆனால் நடிகைக்கு எதிராக நடப்பதைத்தான் எல்லோரும் ஆர்வத்துடன் பார்ப்பதால்தான் நீங்கள் சொல்வது போல நடக்கிறது.

13. இதுவும் புஸ்வாணமாய் ஆய்விடுமா?
பதில்: எது?

14. சமீபத்தில் ஒபாமாவை பேட்டி எடுத்த 11 வயது வாண்டு பற்றி?
பதில்: சுட்டிப்பயலாக இருக்கிறான். இங்கு நேர்காணலின் வீடியோவைப் பாருங்கள்.

15. வருங்காலத்தில் தலைவர்கள் சிலைகள் தரும் கவலைகள் கூடும்போலுள்ளதே?

பதில்: பேசாமல் எல்லா சிலைகளையும் மியூசியத்தில் வைத்து விடலாம். இஷ்டப்பட்டவர்கள் போய் பார்த்து கொள்ளட்டும். செய்வார்களா?

16. உலகெங்கும் வாழும் பணக்காரச் செல்லப் பிராணிகள் எவை எவை?
பதில்: இந்த லிஸ்டில் முக்கியமாக இருப்பவை நாய், பூனை, கிளி முதலியன.

17. உலகத் தமிழர் பிரகடனம் நிகழ்ச்சி ‍அரசின் நடவடிக்கை பாயுமா திருமாவளவன் மீது?
பதில்: ஏதோ திருமாவளவனை தன்னுடன் வைத்துக் கொண்டதால் கலைஞருக்கு ஸ்ரீலங்கா விவகாரத்தில் உள்ள கெட்டப் பெயர் ஒரு அளாவோடு இருக்கிறது. அவர் மீது இப்போது ஆக்‌ஷன் எடுக்க கலைஞருக்கு பைத்தியமா என்ன?

18. வடிவேலுவின் காமெடி விவேக் காமெடியை பின் தள்ளிவிட்டதா?
பதில்: எனக்கு வடிவேலுவைத்தான் பிடித்திருக்கிறது. அவர் காமெடியை காமெடியாக செய்கிறார். குழப்பம் இல்லை. ஆனால் விவேக் கருத்து கந்தசாமியாக வந்து எரிச்சல் மூட்டுகிறார்.

19. இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் சாமானியர்களின் பிரதிநிதியாய் வலம் வரும் ஒபாமாவை வெறுப்பது ஏன்?
பதில்: ரிபப்ளிக்கன் கட்சி அபிமானியான டோண்டு ராகவனுக்குத்தான் ஒபாமாவை பிடிக்காது என நினைத்தேன். இடதுசாரிகளுக்கும் பிடிக்காதாமா? இது என்ன புதுக்கதை?

20. பொதுவுடமை கட்சிகளின் தமிழக ஓட்டு பலம் தெரிந்துவிட்டதே இனி அவர்கள்?
பதில்: அவர்களது ஓட்டுபலம் புதிதாக என்ன தெரிந்து விட்டது? ஆகவே இத்தனை நாள் செய்யும் பஜனையையே செய்து விட்டு போகிறார்கள்.

கிருஷ்ணகுமார்
1. Tell whether oats is good for health and in what way? your experience?
பதில்: உலகபிரசித்தி பெற்ற சாமுவேல் ஜான்சன் என்ன சொன்னாரென்றால், Oats: A grain, which in England is generally given to horses, but in Scotland appears to support the people. இதற்கு மேல் ஓட்ஸ் பற்றி ஏதும் அறியேன். ஓட்ஸ் கஞ்சி எனக்கு பிடிக்கும் என்றும் இத்தருணத்தில் கூறிவைக்கிறேன்.

2. WHICH IS the best -HP OR DELL or h c l LAPTOP? why? which is your brand?
பதில்: கணினி வன்பொருள் விஷயம் எனக்கு தகராறு. மென்பொருள் மட்டும் என்ன வாழுகிறதாம் எனக் கேட்டுவிடாதீர்கள். எனது மொழிபெயர்ப்பு தேவைக்கேற்ற மென்பொருள்களில் எனக்கு பிரச்சினை அவ்வளவாக இல்லை.

3. In the world most of the celebrities are big Hypocrites, why?
பதில்: அது ஒரு பிரமை மட்டுமே. ஒரு துறையில் பிரசித்தி பெற்றவர்களை நாம்தான் பல விஷயங்கள் பற்றிக் கேட்டு அவர்களை கருத்து கந்தசாமிகளாக்குகிறோம். அவர்களும் எவ்வளவு நேரந்தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல நடிப்பதாம்? சாயம் வெளுத்தால் உடனே அவர்கள் ஆஷாடபூதிகளாமா? தவறு நம்மிடம்தான் இருக்கிறது.

4. Is Economics a Science Subject or?
பதில்: பொருளாதாரம் கலையா அறிவியலா என்று ஒரு பெரிய விவாதமே நடக்கிறது. இந்தப் பக்கத்துக்கு வேண்டுமானால் போய் பாருங்களேன்.

5. It is advertised that home based net jobs pay more? is it true?
பதில்: அம்மாதிரி வாக்குறுதிகள் தரும் விளம்பரங்களால் அதிகம் சம்பாதிப்பவர்கள் அவ்விளம்பரங்களைத் தருபவர்களே. ஜாக்கிரதையாக நாம்தான் இருக்க வேண்டும்.

5. As told by many is masturbation bad for health?
பதில்: இல்லை, தவறான செய்தி. நான் சௌக்கியமாகத்தானே இருக்கிறேன்.

6. The worst incident during english rule india?
பதில்: ஜாலியன்வாலாபாக் படுகொலைகள்.

7. Tell the best and useful computer course suitable for all?
பதில்: அது அவரவர் தேவையை பொருத்தது. நீங்கள் நினைப்பதுபோல ஒற்றை பதிலாகத் தரவியலாது.

8. merits and demerits about self finance institutions?
பதில்: சுயநிதிக் கல்லூரிகள் பற்றித்தானே கேட்கிறீர்கள்? அவை காலத்தின் கட்டாயம். அவற்றை நடத்தும்போது ஏற்படக்கூடிய முறைகேடுகள் நடக்காமல் பார்த்து கொண்டால் அவை இருப்பது நல்லதே.

9. Tell any Surge in an Automobile at present?
பதில்: கார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பலமடங்காய் அதிகரிக்கிறது. இப்போதே சாலைகள் அவற்றை சமாளிக்க முடியவில்லை. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளது.

10. Your heaven?
பதில்: ஓய்வு என்ற வார்த்தைக்கே இடம் இல்லாது கடைசி நாள் வரை இடையறாத மொழிபெயர்ப்பு வேலைகள் கிடைக்க வேண்டும். அதுதான் எனக்கு சொர்க்கம்.

சேதுராமன்
1. Will Jinnah issue divide the B.J.P. now?
பதில்: பாஜகவுக்கு death wish வந்துவிட்டது எனத் தோன்றுகிறது. சுதாரித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

2. With the Vasundhara and Jaswanth epidemic, will the BJP survive, or will be a 'gone case'?
பதில்: அதை பூட்ட கேஸ் எனச்சொல்ல மனம் வரவில்லை.

3. Instead of his usual shouting from the rooftop that DMK's achievements alone are the cause for the victory, why did MK pull the Centre also into the picture?
பதில்: காங்கிரஸ் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக குமுறிக் கொண்டிருக்கிறது. திடீரென 2011 தேர்தலுக்கு முன்னால் அக்கட்சி மாநிலத்தில் தனது ஆதரவை விலக்கிக் கொண்டால் திமுக ஆட்சிக்கு சங்குதான். அமாதிரி செய்து ஜனாதிபதி ஆட்சி வந்தால் திருமங்கலத்தில் செய்த பஜனையை திமுகாவால் செய்யவியலாது. ஆகவேதான் கருணாநிதியும் காங்கிரசை தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

4. With so many raids in Tamilnadu by the CBI (original and the duplicate) and arrests, can you please tell how many of the arrested are from the Brahmin community?
பதில்: தெரியவில்லையே.

5. Is there any connection between Anita Radhakrishnan joining the DMK, and withdrawal of cases against him, within three days?
பதில்: கைப்பூணுக்கு கண்ணாடியும் தேவையா?

6. Did you read Kumudham this week, will there be a split in the ADMK now?
பதில்: பிளவு என்று வராது. ஒரேயடியாக அழிவது வேண்டுமானால் நடக்கலாம்.

அனானி (25.08.2009 காலை 06.00 மணிக்கு கேட்டவர்)
1. எல்லாத் தந்தையர்களும் அனாதி காலம் தொட்டு தனது வாரிசுகள் , தான் வாழ்வில் அனுபவித்த துன்பங்களின் நிழல் கூட பட்டுவிடக் கூடாது என முடிவு செய்து தன் சக்திக்குமீறி கடனை உடனை வாங்கி , ஆங்கில வழிக் கல்வியும்,பின்னர் சிறப்பான பொறியியல் கல்வியும் அளித்து அதன் பலனாய் கைநிறைய சம்பளம் வாங்கவது காரணமாய் அமைவது. நிதர்சனம். ஆனால் இந்தப் பிள்ளைகள் (பொதுவாய்_ பார்ப்பனர் சமூகத்தை தவிர_வால்பையன் சண்டைக்கு வரப் போகிறார்_டோண்டுவிடமே விளக்கம் உண்டு) தன் நலம் கருதாது, தியாகம் செய்து தன் வாழ்வின் நிலை உய‌ர்த்திய தாய் தந்தையரை வயதான காலத்தில் சிறிதும் கவனிக்காமல் இருப்பதை என்ன நோய் என சொல்லலாம்?
பதில்: இதை எதிர்க்க வால்பையன் ஏன் வேண்டும்? டோண்டு ராகவனே ஒத்துக் கொள்ளமாட்டானே. இம்மாதிரியெல்லாம் பொதுப்படையாகக் கூறுவதை தர்க்க சாத்திரப்படி fallacy of hasty generalization என்பார்கள். மற்றப்படி தாய் தந்தையரை அழவிடுபவனுக்கு நல்லச்சாவே வராது.

2. குடும்பத்தில் ஆண்கள் (அண்ணன்கள்) தங்கைகளின் திருமணத்திற்கு குடும்பத்து சொத்தினை விற்றும், கடன்கள் வாங்கியும் நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்த பிறகும், அரசின் பெண்கள் சொத்து உரிமை சட்டப்படி மீதம் உள்ள குடும்ப பூர்வீக வீட்டில் தனக்கு பங்கு கேட்டு படிக்கட்டுகளில் ஏறுவோருக்கு (பெண்கள்) என்ன நோய்?
பதில்: திருமணத்துக்கு செலவு செய்வதை சொத்துக்களை பிரிக்கும் விஷயத்தில் கொண்டுவர இயலாது என்றுதான் சட்டம் கூறுகின்றது என்பது எனது புரிதல். வக்கீல் பதிவர்களே இதற்கு விடையளிக்க அதிகப் பொருத்தமானவர்கள்.

3. வீடு வாடகைக்கு வரும் போது நல்லவர்கள் போல் நடித்து பின்னர் ஒரு சில ஆண்டுக்குப் பிறகு வீடு எனக்குத்தான் சொந்தம் என சொல்லும் மனிதர்களுக்கு என்ன நோய்?
பதில்: வீட்டு வாடகைச் சட்டத்தை 1948-லிருந்து அப்படியே மாற்றாமல் வைத்திருக்கும் அரசுக்குத்தான் நோய். மற்றவர்களுக்கு அல்ல.

அனானி (25.08.2009 காலை 06.55-க்கு கேட்டவர்)
1. பொய்புரட்டு பேசி தன்னை நம்பும் சாமனியர்களை ஏமாற்றி கோடி கோடியாய் தந்து குடும்பத்து அனைத்து அங்கத்தினர்களுக்கும் பெரும் சொத்து சேர்த்து வைத்துள்ளதாய் வெளிப்படையாய் தெரியவரும் தமிழக அரசியல் பெரும் புள்ளிக்கு நரகத்தில் என்ன தண்டனை (நரகம் இருப்பதாய் நம்பும் முகமாக)?
பதில்: அடுத்த ஜன்மத்தில் அவர்களை ஏழைகளாகப் பிறக்கச் செய்து பூர்வ ஜன்ம ஞாபகத்தையும் அளித்தால்? கற்பனை செய்யவே சுகமாக இல்லை?

2. தனது தோழியின் சொல்கேட்டு ரத்தம் சிந்தி வளர்த்த கட்சியை ஒரு சுயநலக் குடுபத்திடம் அடகு வைத்ததாய் அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்படுபவருக்கு என்ன தண்டனை (அன்னியன் படத்தில் சொன்ன கருத்துகளின் அடிப்படையில்)?
பதில்: அத்தோழியின் கையாலேயே தண்டனை பெறுவதே சரியான தண்டனை.

3. கறுப்பு பணத்தை கணக்காய் வாங்கி கல்லுரி கட்டி, கறாராய் பணம் வாங்கியும்,அரசின் இடங்களையும் தன்னிஷ்டத்துக்கு வழக்குகள் வந்தாலும் கலங்காது மாய்மாலம் தொடந்து செய்யயும் இந்த போலி நடிகவள்ளலுக்கு என்ன தண்டனை (ரமணா பாணியில்)
பதில்: அக்கல்லூரியிலேயே அவரை படிக்கச் செய்து, பரீட்சை எழுத வைப்பது.

4. தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா கண்ணிர் விட்டல்லவா வளர்த்தோம் எனும் கொள்கைப்படி கட்சி உள்ளதாய் சொல்லும் நபர்களின் பெரும் பகுதியினர் சுயந‌லக் குமபல்களாய் மாறி, மக்களை வதம் செய்வோருக்கு படைபலமாய் உள்ளதை நாடறியும். இவர்களுக்கு என்ன தண்டனை (அந்தமான் தீவுச் சிறை பானியில்)
பதில்: வதம் செய்வோராலேயே இவர்களும் வதம் செய்யப்படல்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது