சுஜாதாவின் கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் கதைகளை ஆதி காலத்திலிருந்தே படித்து வருபவன். "நைலான் கயிறு" கணேஷ் இப்போதைய வசந்த் போலவே செயல் பட்டிருப்பார். "அனிதா இளம் மனைவி" யில் கராத்தே சண்டை கூடப் போட்டிருப்பார். காலப் போக்கில் வசந்த் தேவைப் பட்டிருக்கிறார்.
"பிரியா" திரையாக்கத்தைப் பார்த்து திடுக்கிட்டேன். கணேஷை ஒரு சூப்பர்மேன் ரேஞ்சுக்கு அதில் காண்பித்து இருந்தார்கள். இந்த அழகில் அவருக்குக் கல்யாணம் வேறு செய்து விட்டார்கள்! சுஜாதா ஏ.வி.எம். மேல் கேஸ் கூடப் போட்டிருக்கலாம். அந்த அளவுக்கு அது ஒப்பந்த மீறல் ஆகும். ஏனெனில் அவர்கள் பிரியா கதைக்கு மட்டும்தான் உரிமை வாங்கியிருப்பார்கள். கணேஷ் என்பவர் கட்டை பிரம்மச்சாரி. இப்போதும் கூட.
இதையெல்லாம் பார்த்துத்தான் கணேஷ் வசந்தை தனித்தனியாகப் பிரித்தார் சுஜாதா என்பது என் கருத்து. கணேஷின் பயங்கள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவையும் அவ்வப்போது காண்பிக்கப் படுகின்றன. உதாரணம்: "கணேஷ் Vs வசந்த்". பிரியா படம் வெளி வந்த உடனேயே சுஜாதா தன் அதிருப்தியை ஒரு கதையில் நாசுக்காக வசந்த் வாய் மொழி மூலம் காண்பித்து இருப்பார்.
ஆகவே கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை.சுஜாதா வாசகர்களின் கருத்து என்ன?
பின் குறிப்பு:
காந்தளூர் வசந்த குமாரன் கதையிலும் கூட கணேஷ் (கணேச பட்டர்) மற்றும் வசந்த் (வசந்த குமாரன்) வருகிறார்கள். மிகவும் ரசித்தேன். முக்கியமாக வசந்த குமாரனின் சேட்டைகளை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
தீராநதி நேர்காணல்- 2006
-
எழுத்தாளர் ஜெயமோகன் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை.
இவரது ”விஷ்ணுபுரம்” நாவல்,தமிழ் நாவல் உலகத்தைப் புதிய திசையில் திருப்பிய
ஒரு படை...
7 hours ago
8 comments:
//சுஜாதா ஏ.வி.எம். மேல் கேஸ் கூடப் போட்டிருக்கலாம்.
ப்ரியா ஏ.வி.எம். தயாரிப்பில்லை, PA Arts (பஞ்சு அருணாச்சலம்) தயாரித்தது..
(அப்பா.. ஒரு தப்பு கண்டுபுடிச்சாச்சு!)
நிஜமாகவா? தகவலுக்கு நன்றி. எனக்கு டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் என்று நினைவு அதனால் ஏ.வி.எம் என்று புரிந்துக் கொண்டேன் என்று நினைக்கிறேன். ஒரு வேளை அதுவும் தவறோ? டைரக்டர் எஸ்.பி. முத்துராமன் இல்லையோ?
மீண்டும் நன்றி. என்னுடைய மற்ற பாயின்டுகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
//பிரியா" திரையாக்கத்தைப் பார்த்து திடுக்கிட்டேன். // moi aussi !
Merci beaucoup Raviaa
Es freut mich sehr, Ihre Eingaben auf Deutsch zu lesen.
ஜூலியஸ் சீசருக்கு மீசை இருந்ததா என்று தெரியாது. ஆனால் ரெக்ஸ் ஹார்ரிசனுக்கு இல்லை என்பதைப் பார்த்தேன்.
பெயரிலிப் பதிப்புகளை அனுமதிக்கக் கேட்டிருக்கிறீர்கள். ஆகட்டும் பார்க்கலாம் (காமராஜர்).
உங்களுக்கு ஜெர்மன் தெரியுமா? மிக்க மகிழ்ச்சி.
ஜெர்மன் வாக்கியம் பார்த்த உடனேயே புரிந்துக் கொண்டேன். இருப்பினும் அதை நான் கூறுவது நன்றாக இருந்திராது. எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்.
//ஆகவே கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை.சுஜாதா வாசகர்களின் கருத்து என்ன? //
Ego & Alter Ego :) :) :)
Ego & Alter Ego :) :) :)
உண்மைதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment