பல மாத நாவல்கள் வெளி வருகின்றன.அவற்றில் கணிசமானவை ஏற்கனவே பத்திரிகைகளில் தொடர்க் கதையாக வெளி வந்தவையே. ஆனால் சம்பந்தப்பட்ட மாத நாவலில் அதை பற்றி ஒன்றும் கூற மாட்டார்கள். தலைப்பை வேறு மாற்றி விடுவார்கள்.
இந்தப் பழக்கத்துக்கு ஒரு மோசமான உதாரணம் திரு. சாவி அவர்கள். அவருடைய தொடர் கதை "ஓ" மாத நாவலாக உருவான போது "அன்னியனுடன் ஒரு நாள்" என்றப் பெயரில் வந்தது. நல்ல வேளையாக நான் அதை வாங்கி ஏமாறவில்லை. ஓரு சைக்கிள், ஒரு ரௌடி, ஒரு கொலை" என்று 1978-ல் வெளியான தொடர் கதை தொண்ணூறுகளில் வேறு பெயரில் வந்தது. இந்த முறை ஏமாந்தேன். ஆனால் முதல் பாரா படிக்கும் போதே ஏற்கனவே படித்த கதை என்றுத் தெரிந்துப் போயிற்று. சாவியின் இம்முயற்சிகள் எல்லாம் அவருடைய சொந்தமான மோனா பப்ளிகேஷனில் வெளியாயின. ஆகவே அவர் பொறுப்பு இதில் இரட்டிப்பு ஆகிறது.
சாவியின் எழுத்துக்கள் மட்டும் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுத்தப் பட்டன என்றுக் கூற முடியாது. பால குமாரன், ராஜேஷ் குமார் ஆகியவர்கள் புத்தகங்களும் இம்மாதிரியான முயற்சிகளிலிருந்துத் தப்பவில்லை.
ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் அவசர அவ்சரமாய் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வண்டி ஏறுகிறோம். வண்டி கிள்ம்பியப் பிறகு ஏமாந்ததுத் தெரிந்து ஙே என்று விழிக்கிறோம்.
ஏற்கனவே ஒரு புத்தகம் தொடர்க் கதையாகவோ அல்லது புத்தகமாகவோ வெளியாகி விட்டது என்றுக் கூறுவது சட்டப்படிப் பதிப்பாளரின் கடமை அல்லவா? பிறகு எந்தத் தையிரியத்தில் இந்த நாணயமற்ற வேலை நடக்கிறது?
மேலும் சேர்க்கப் பட்டது:
சத்யராஜ் குமார் கூறியது சரி எனப்பட்டதால் தலைப்பைத் திருத்தியுள்ளேன். ஆனால் எழுத்தாளருக்கும் இதில் பொறுப்பு இல்லையா? பதிப்பாளர்கள் அவ்வாறு செய்யும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாமே. எனக்குத் தெரிந்து பால குமாரன் ஒரு முறை இவ்வாறு செய்துள்ளார்.
அள்ளிப்பற்றும் சுடர்
-
அன்புள்ள ஜெ, நான் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது
நீங்கள் கோவிட் தொற்று காலகட்டத்தில் எழுதிய 136 கதைகளைப் பற்றிப்
பேசிக்கொண்டிருந்தேன். ...
12 hours ago
3 comments:
ஒரு மாத நாவலில் ஆசிரியருக்கு 5000 ரூபாயும், பதிப்பிப்பவர்க்கு 5000 ரூபாயும் கிடைக்கும்.
மேலும் மாத நாவல் வாங்குவது பயணத்தின் போது பொழுது போக....
எனவே இது ஒன்றும் பெரிய விசயமாக எனக்கு தெரியவில்லை
//எனவே இது ஒன்றும் பெரிய விசயமாக எனக்கு தெரியவில்லை//
அதாவது இந்தத் திருட்டால் பாதிப்பு அதிகம் இல்லை எனக் கூறுகிறீர்கள். இம்மாதிரி ரயில் கிளம்பும் அவசரத்தில் புத்தகத்தை வாங்கி விட்டு, வண்டி கிளம்பியதும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர்கள் இதை ஒத்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று தான் உங்களின் பதிலை பார்த்தேன். மீதி விவாதம் உங்களின் புது பதிவிலேயே வைத்துக் கொள்வோம்
Post a Comment