உதாரணத்துக்கு ஒரு பதிவு 0/100 என்று குறிப்பிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இது கூறுவது என்ன? 50 பேர் ஆதரித்து, 50 பேர் எதிர்த்து ஓட்டுப் போடப்பட்டதாகப்படுகிறது. முதலில் ஒரு ஓட்டு ஆதரவாகப் போட்டால் ஸ்கோர் 1/1 என்று வருகிறது. அடுத்த ஓட்டு எதிர்ப்பாக போடப்பட்டால் ஸ்கோர் 0/2 ஆகிறது. இதன் லாஜிக் புரியவில்லை. 1000-ல் 500 பேர் ஆதரவு, 500 பேர் எதிர்ப்பு, ஸ்கோர் 0/1000. அபத்தமாக இல்லை?
இங்கிலாந்தில் க்ளப்புகளில் புது உறுப்பினரை தேர்வு செய்யும்போது இரண்டு வர்ணஙள் உடையப் பந்துகளை உபயோகிப்பார்கள். அவற்றில் ஒரு வர்ணம் கறுப்பு. புது அங்கத்தினர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. அதற்கு இரட்டை மதிப்பு. அவ்வாறு செய்வதை "blackballing" என்பார்கள். அதைத்தான் இங்கும் பின்பற்றுகிறோமா? யாராவது விளக்குவார்களா? ஸ்கோரின் பின்னத்தில் மேலே ஆதரவு வோட்டையும் கீழே மொத்த வோட்டையும் போடுவதுதானே முறை? Or vice versa?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
5 comments:
அப்படியா வருகிறது. நான் இவ்வளவு நாளும். மேலே ஆதரவு வோட்டும் கீழே மொத்த வோட்டும் வருகிறது என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கும் நீங்கள் சொல்வது போல் தான் அமைய வேண்டுமென்று தோன்றுகிறது.
Numerator indicates the effective positive vote and we get negative sign in case of minus votes outnumbering plus votes.
Regards,
Dondu Raghavan
மதிப்பீடு கணக்கிடப்படும் முறைக்கான விளக்கம் பின்வரும் சுட்டியில் உள்ளது, தங்களுக்கு உதவக்கூடும்: http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=103#103
இராதாகிருஷ்ணன் அவர்களே, புரியாமல் இல்லை. நிகர மதிப்பு ஏன் என்பது பற்றித்தான் பேச்சு.
மூக்கை நேரடியாகவும் தொடலாம், தலையை சுற்றியும் தொடலாம். சாத்தியக் கூறுகள் விதியில் p/p+q என்றுக் குறிப்பிடுவார்கள். p+q=1. p=probability மற்றும் q=non-probability. p மற்றும் q-க்கு ஒன்றுக்குக் கீழ் மதிப்பு.
நிகர மதிப்பு என்பது தேவையானால் மதிப்பிட்டுக் கொள்ளலாமே. இது அதிக சுலபம் என்பது என் கருத்து.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Raghavan Sir,
You are absolutely right. The method of showing the votes must be as x/y where x represents the positive votes and y the total no. of votes polled. Obviously, y-x will give the negative votes. This way it is simpler and better!
Post a Comment