4/17/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 3

எதை எழுத வேண்டும் அல்லது கூடாது, எப்படி எழுத வேண்டும் அல்லது கூடாது என்பவை மிக முக்கியம். நான் முதலில் கூறியபடியே அனேகமாக எப்போதும் எழுதுவேன். இருந்தாலும் மாறுதலுக்காகச் அவ்வப்போது சிறிதே மாற்றியிருக்கிறேன்.

உதாரணத்துக்கு ஒரு கடிதத்தில் நான் முதலில் பொறியாளன் என்பதைக் குறிப்பிட்டுப் பிறகு மொழிபெயர்ப்பாளர் என்பதை எழுதினேன். பின் நடந்தது என்ன? எனக்கு வந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

"ஐயா, எங்கள் நிறுவனத்தில் விற்பனைப் பொறியாளராகச் சேர நீங்கள் அனுப்பியக் கடிதம் சம்பந்தமாக" என்று இருந்தது. இது என்னடா கஷ்டம் என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் தலைமை நிர்வாகியைச் சந்தித்தேன். அவரிடம் விஷயத்தை எடுத்துக் கூற அவர் சிரித்தார். மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பற்றி ஒரு தெளிவு நிலை அடைந்தேன்.

சுருக்கமாகக் கடிதம் எழுத வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் சொல்ல நினைப்பது அத்தனையும் கடிதத்தில் இருக்க வேண்டும். அவையும் பெறுநரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். அவர்தம் தேவைகளைப் பற்றி எழுத வேண்டும். தலைமை நிர்வாகிக்கே எழுத வேண்டும். தட்டச்சிடவில்லை நான். என் கடிதங்கள் அதனால் ஒரு தனித்தன்மை பெற்றன. தில்லியில் 2001 ஜூலை வரை இருந்தேன். எல்லா மொழிபெயர்ர்ப்புகளும் கையாலேயே எழுதப் பட்டன. அங்கிருந்த கடைசி கட்டத்தில் மொழி பெயர்ப்புகள் கையெழுத்திலேயே கொடுக்கப்பட்டன. இம்மாதிரி ஆயிரக்கணக்கானப் பக்கங்கள். ஆகவே என் கையெழுத்து நல்லத் தோற்றம் பெற்றது.

நல்லது. உள்ளே நுழைந்து விட்டீர்கள். தலைமை நிர்வாகி எதிரில் உள்ளீர்கள். மேலே? அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

Moorthi said...

வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் அருமையான அறிவுரைகள் டோண்டு அண்ணா.

எதற்கும் தலைமை நிர்வாகிக்கு நயன்தாரா மாதிரி அழகிய மகள் இருக்கிறாரா என்பதனை விசாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். யார் கண்டார்? குடுக்குற தெய்வாம் கூரைய பிச்சிட்டு கொடுக்குமாமே?!!!

dondu(#11168674346665545885) said...

நயனதாரா மாதிரிப் பெண் இருக்கலாம். ஆனால் அப்பன் சில்வெஸ்டர் ஸ்டால்லோனாக இருந்து, ஒரு உதை விட்டால், வாழ்நாள் முழுதும் பெண்ணாசைப்படமுடியாது போய் விட்டால்? எதற்கு வம்பு? உழைப்பிலேயே முன்னேறி விடலாமே?
அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது