7/06/2005

நான் தேடும் ஹைப்பெர்லிங்க்

சாதாரணமாக என் ஹைப்பெர் லிங்க் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதும் போது சம்பந்தப்பட்ட ஹைப்பெர்லிங்க் எது என்பதில் எனக்கு ஐயமே இருந்ததில்லை. இப்போது மட்டும் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன ஆனால் அவற்றைப் பற்றிய நினைவைத் தூண்டிய ஹைப்பெர்லிங்க் எது என்பதைத்தான் மறந்து விட்டேன். என் வலைப்பதிவு நண்பர்கள் எனக்கு இதில் ஏதாவது உதவி செய்ய முடியுமா?

சரி, நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சி அலிபாபாவின் கதையில் வரும். அந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அலிபாபா (எம்.ஜி.ஆர்.) தையற்காரனின் (தங்கவேலு) கண்களைக் கட்டி தன் வீட்டுக்கு அழைத்து வருவார். வெட்டப்பட்டிருக்கும் தன் அண்ணன் (எம்.ஜி.சக்கரபாணி) உடலைத் தைக்கச் செய்து, நிறையப் பணம் கொடுத்து, திருப்பி அவன் கண்களைக் கட்டி அவனை அனுப்புவார். வீட்டைத் திரும்ப அடையாளம் கண்டு கொள்ள அந்தத் தையற்காரன் அலிபாபாவின் வீட்டுக் கதவில் ஒரு குறியிடுவான். இதை யதேச்சையாக கவனித்த மார்ஜியானா (பானுமதி) புத்திசாலித்தனமாக தெருவில் இருந்த எல்லா வீடுகளுக்கும் அவ்வாறே குறியிட, பிறகு கொள்ளையர் தலைவன் (பி.எஸ்.வீரப்பா) பின்தொடர வரும் தையற்காரன் வீட்டை அடையாளம் காட்ட முடியாது திகைப்பான்.

இன்னொரு நிகழ்ச்சி நிஜமாக நடந்தது. ஐ.டி.பி.எல்.-லில் எங்கள் பொறியியல் மேலாளர் பாலிகா அவர்கள் தன் சகா மகரபூஷணம் சம்பந்தமாகக் கூறியது. மகரபூஷணத்துக்கு பொது மேலாளர் ஒரு வேலை கொடுத்தார். அதாவது, தனக்கு வேண்டிய மூவருக்கு முன்கூட்டிய ஊதிய உயர்வு அளிப்பதற்காக ஒரு கோப்பைத் தயார் செய்யச் சொன்னார். மகரபூஷணம் ஒரு காரியம் செய்தார். கோப்பைத் தயார் செய்தார், ஆனால் வேண்டிய மூவருக்காக கொடுத்த குறிப்புகளை வைத்து கொண்டு மொத்தம் 10 பேர் முன்கூட்டிய ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என்பதாகக் கோப்பைத் தயாரித்தார். பொது மேலாளரும் வேறு வழியின்றி அதை நிதி ஒதுக்கலுக்காகப் பரிந்துரைக்க, தலைமை அலுவலகம் அப்பரிந்துரையை நிதிப் பற்றாக்குறை காரணமாக நிராகரித்தது.

இந்த நிகழ்ச்சிகள் இரண்டும் திடீரென எனக்கு இப்போது ஏன் நினைவுக்கு வந்தன? அதுவும் பிரிட்டிஷ் தயாரிப்பான மார்ரிஸ் மைனர் காரைப் பற்றி ஒரு பழைய பத்திரிகைக் குறிப்பை பார்த்ததும் அவை நினைவுக்கு வந்தன. ஏன் என்று புரியாமல் சிண்டைப் பிய்த்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

dondu(#11168674346665545885) said...

Dear Kasi,
As informed yesterday evening, I will be away from Chennai and will be back only Sunday. In the meantime, I will not have access to Internet. Kindly watch my blogs for indecent comments, as already discussed. You will have a clue of the problem we discussed yesterday. It will come in handy in locating the troublemaker.
Regards,
N.Raghavan

pandian said...

Thangavelu- vai kooti varuvathu Panumathi than Alibaba (MGR) alla.

dondu(#11168674346665545885) said...

பாண்டியன் அவர்களே, கூட்டி வந்து பானுமதிதான், ஆனால் தங்கவேலுவின் கண்களை லட்டி கூட்டி வரச் செய்தது எம்.ஜி.ஆர்.

அது இருக்கட்டும் மாரிஸ் மைனர் காரை பற்றிய ஹைப்பெர்லிங்க் ஞாபகத்துக்கு வந்து விட்டது.

அது: "_______ சிறிது, ஆனால் _______ பெரிது."

யாராவது கோடிட்ட இடங்களை நிரப்ப முடிந்தால் செய்யுங்கள். நான் தற்சமயம் சென்னையை விட்டு வெளியில் செல்கிறேன். நாளை மாலையளவில் வருவேன்.

இன்னும் ஒரு க்ளூ. நான் முதலில் குறிப்பிட்ட தற்போதைய நிகழ்ச்சிகளில் மார்ஜியானாவுக்கோ மகர பூஷணத்துக்கோ வெற்றி கிட்டவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

test

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது