எனது வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவில் பதிவர் ஆர்.வி. இவ்வாறு பின்னூட்டம் இட்டார்.
“நீங்கள் பார்ப்பனீயம், ஜாதீயம் பற்றி எழுதியதை பார்த்ததும் அட என்று வியந்தேன். ஏறக்குறைய இதே தோரணையில் ஒரு வாரம் முன் ஒரு போஸ்ட் எழுதி இருந்தேன். இளைஞரான உங்கள் வாழ்க்கையில் ஜாதி பற்றிய பிரக்ஞை எங்கே எல்லாம் குறுக்கிட்டிருக்கிறது? இதை பற்றி எழுதினால் என்னை போன்ற அரை கிழங்கள் கொஞ்சம் புரிந்து கொள்வோம்”. அவருக்கு நான் அளித்த பின்னூட்டத்திலிருந்து: “எனது வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவில் நான் எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன். அதற்கான பின்னுட்டங்களைப் பார்க்க இங்கு செல்லவும்”:
அப்புறம் பார்த்தால் அவரே அதில் பின்னூட்டமும் இட்டிருக்கிறார் என்பதை கூறி விட்டு மறுபடியும் எழுதியுள்ளார், “ திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது. உங்கள் மறுமொழியை பார்த்ததும், "பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை" என்று நானே கேட்டிருந்த ஞாபகம் வந்தது. உங்களிடமே வந்து ப்ளாக் உலகில் பார்ப்பன வெறுப்பை பற்றி நான் எழுதியதை பார்க்க சொல்லி இருக்கிறேனே! நம் கருத்துகள் இங்கே ஒன்றுபட்டிருப்பது மகிழ்ச்சி. உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே”!
எனக்கும் அது சரி என படுவதால் எனது பின்னணியையும் கூறிவிடுகிறேன். முதற்கண் ஒன்று தெளிவுபடுத்துவேன். வடகலை ஐயங்காராக பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன் என எழுதியதற்கு காரணமே இப்போதைய தமிழ் உலகில் பார்ப்பனன் என்பவனை இளப்பமாகவே பார்ப்பனரல்லாதவர்கள் நோக்குகின்றனர். அதற்கு பயந்து பல பார்ப்பனர் தாம் பார்ப்பனர் என்பதை அடக்கி வாசித்து, தேவையானால் தாங்களும் பார்ப்பனரை திட்டினால் காலணா பிரயோசனமில்லாத இணையதாசில்தார்களாக தம்மை நினைத்து கொள்ளும் சில பேர்வழிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதாக நினைத்து, ஆனால் அதே பேர்வழிகளின் இளப்பத்தை மேலும் சம்பாதித்து கொள்கின்றனர். அம்மாதிரி தயங்கும் பார்ப்பனரிடம் “ஐயா பார்ப்பனனாக பிறப்பதற்காகா ஏன் பயப்படுகிறீர்கள்? இது பெருமைக்குரிய விஷயம்தான்” என அடித்து கூறுவதே நான் எழுதியதன் நோக்கமாகும். மற்றப்படி பார்ப்பன சாதி மற்ற எந்த சாதியையும் விட சிறந்தது என நான் எங்குமே கூறியதில்லை.
ஓக்கே, எனது பின்னணிக்கு செல்வேன். நான் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் 1963-ல் சேரும் வரை இம்மாதிரி சாதீய எண்ணங்கள் எதுவும் எனக்கில்லை. பிறந்து வளர்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள சூழலில் நான் இருந்ததால் நான் நானாகவே இருந்தேன். இது பற்றி ஏதேனும் எண்ணம் இருந்திருந்தாலும் இந்த சாதி ஒசத்தி, வேறொரு சாதி மட்டம் என்ற ரீதியில் யோசித்ததே இல்லை. பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான நேர்க்காணலில் கூட அப்போதைய தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் திரு முத்தையன் அவர்கள் என்னைப் பார்த்து "நீங்கள் பார்ப்பனரா?" என்று கேட்ட போது "ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். "அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை. இதில் என்ன விசேஷம் என்றால் திரு. முத்தையன் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற பேச்சு அப்போது உண்டு. அதில் உண்மையிருந்தாலும் அதை தனது முடிவுக்கு அடிப்படையாக வைத்து கொள்ளாதது அவர் பெருந்தன்மைதான் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.
ஆனால் நான் கல்லூரியில் சேர்ந்ததுமே இந்த பார்ப்பன வெறுப்பை நேரடியாகவே அனுபவித்தேன். பல வேற்று சாதியினர், அதிலும் தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் எங்களை போன்றவர்களிடம் வேண்டுமென்றே எங்கள் சாதியை மட்டம் தட்டுவார்கள். அதுவும் ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் பாடு திண்டாட்டம்தான். நல்ல வேளையாக நான் டே ஸ்காலராக இருந்ததால் ரொம்ப கஷ்டமெல்லாம் படவில்லை. எனது நண்பர்கள் எல்லா சாதியிலிருந்தும் வந்தவர்கள். அவர்களும் டே ஸ்காலர்களே, அதுவும் திருவல்லிக்கேணியில் வசிப்பவர்களே. ஆக இப்படியே விளையாட்டாகவே கல்லூரிக்காலம் முடிந்தது.
1971-ல் பம்பாய்க்கு சென்று மூன்றரை ஆண்டுகள் இருந்ததில் இந்த பார்ப்பன வெறுப்பு என்னை அண்டவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டைத் தாண்டியதுமே பார்ப்பன வெறுப்பு கிட்டத்தட்ட மறைந்து விடுகிறது. பம்பாய்க்கு பிறகு அடுத்த 7 ஆண்டுகள் சென்னையில் வசித்தபோதும் நேரடியாக தாக்கம் ஏதும் இல்லை. 1981-லிருந்து 2001-வரை தில்லியில் இருந்தபோது பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய மதிப்பே இருந்தது. உதாரணத்துக்கு ஒரு பிராம்மண புரோகிதர் பஞ்சக்கச்சம் அணிந்து, திருநீறோ திருமண்ணோ இட்டு சென்றால், “நமஸ்தே பண்டிட்ஜீ, ஆயியே பண்டிட்ஜீ” என்றெல்லாம் வட இந்தியர்கள் மரியாதையுடன் பேசுவார்கள். ஆக, இங்கும் எனக்கு எந்தவித தாக்கமும் இல்லை.
தாக்கம் என்று சீரியசாகக் கூறப்போனால் இங்கு திரும்ப வந்து வலைப்பூ தொடங்கியதும்தான் எனக் கூறவேண்டும். போலி டோண்டு பிரச்சினையே அதனால்தான் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். அதே சமயம் என் சார்பாக இருந்தவர்கள் பல சாதி மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
கிட்டத்தட்ட எல்லா நாளுமே பார்ப்பனர்களை தாக்கியே பல பதிவுகள் தமிழ்மணப்பக்கங்களில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்துக்கு இந்தப் பதிவர் போடும் பதிவுகள்.
தலித்துகள் மேல் வன்கொடுமையா, பார்ப்பனீயத்தைத் தாக்கி பதிவு போடுவார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் வன்கொடுமை செய்தது கவுண்டராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, அல்லது வேறு யாராவதாகவோ பார்ப்பனர் அல்லாதவராக இருப்பார்கள். நான் கேட்பது இதுதான், “பின்னே ஏண்டா ஜாட்டான் பார்ப்பனீயம் எனக் கூறுகிறாய்? உயர்சாதீயம் என சொல் இருக்கிறதல்லவா, அதைக் கூறு” என்பதே. உடனே விளக்கெண்ணெய் விளக்கங்கள் வரும், அதாவது, “நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல” என்று. இங்கு அவர்கள் பார்ப்பனீயம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.
மோடிக்கு ஆதரவா, இஸ்ரேலுக்கு ஆதரவா, உடனே பார்ப்பனீயம் வந்துவிடுகிறது. இந்த நிலைப்பாடுகளுக்கும் பார்ப்பனீயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பகுத்தறிவுடன் ஒரு கேள்வி கேட்டாலே அவர்களுடைய தீசிஸ் எல்லாம் காலி. அதுவும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளனான என்னைப் போய் நாசிஸத்துக்கும் ஆதரவாளன் என அபத்தமாக சரித்திர அறிவேயில்லாது எழுதுவார்கள். ராமாயணத்தில் ஏதேனும் பிடிக்காத விஷயமா, உடனே அதை எழுதி விட்டு, பார்ப்பனர்களே பதில் கூறுங்கள் என்ற ரேஞ்சில்தான் விடுதலை போன்ற பத்திரிகைகள் எழுதுகின்றன. ஒரு பார்ப்பனன் திருடனாக இருந்து போலீசில் பிடிபட்டால் “பார்ப்பனத் திருடன்” என நீட்டி முழக்குவார்கள். அதையே வேற்று சாதிக்காரன் செய்தால் அப்போது சமரச சன்மார்க்கமாக வெறுமனே பெயரை மட்டும் போட்டு திருடன் எனக் கூறுவார்கள். கீழ்வெண்மணியில் தலித்துகளை ஒரு பார்ப்பன மிராசுதார் எரித்திருந்தால் பெரியார் என்ன மாதிரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்?
நான் நேரடியாக பாதிக்கப்படாமல் பார்ப்பன வெறுப்பைப் பார்த்தது தியாகி வாஞ்சிநாதனனின் விதவைக்கு பென்ஷன் தரும் விஷயத்தில்தான். அவர் பார்ப்பனத்தி என்பதற்காகவே விடுதலை பத்திரிகை அவருக்கு பென்ஷன் தரக்கூடாது என்றெல்லாம் வரிந்து கட்டி எழுதியது. ஆஷ்துரை என்னதான் இருந்தாலும் கலெக்டராம், ஆகவே அவரை கொன்றது ராஜத்துரோகமாம். கொலையாளியின் விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று மனதில் ஈரமேயில்லாது அப்பத்திரிகை எழுதியது. 60 ஆண்டுகள் விதவையாக கஷ்டப்பட்ட அப்பெண்மணி பென்ஷன் வாங்காமலேயே இறந்தார். அதுவும் என்னை பாதித்தது.
ஒன்று நிச்சயம். என்னுடன் நேரடியாக பழகியவர்களில் மா.சிவக்குமாரும் ஒருவர். அவர் ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறார், “ஜாதிவெறி இல்லாதவர்களில் நீங்களும் ஒருவர்” என்று. இப்போதும் அதே கருத்துதான் வைத்திருப்பார் என நினைக்கிறேன். மற்றவர்களும் ஏறத்தாழ அந்த நிலைப்பாட்டுடனேயே இருப்பார்கள் என நம்புகிறேன். இணையத்தில் எனது இந்த மாதிரி பதிவுகள் கூட விருப்பு வெறுப்பின்றியே போடப்படுகின்றன. Setting the record straight என்ற வகையிலேயே அவை உள்ளன. ஆகவேதான் பதிவர் மீட்டிங்குகளிலும் என்னுடன் மனம் விட்டு பேசுபவர்கள் அதிகமே.
வேண்டுமென்றே இந்தத் தருணத்தில் பதிவை முடிக்கிறேன். வேறு ஏதாவது விளக்கங்கள் தேவையென்றால் பின்னூட்டமாகக் கேட்டால் அம்முறையிலேயே பதிலளிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஷார்ஜா புத்தகவிழாவில்…
-
ஷார்ஜா புத்தகவிழாவில் மலையாள- ஆங்கில எழுத்தாளராக டி.சி.புக்ஸ் (மலையாளம்)
சார்பில் கலந்துகொள்கிறேன். எட்டாம்தேதி காலையில் ஷார்ஜா. பத்தாம்தேதி
மாலையில் ஒரு ச...
6 hours ago
93 comments:
Good posting
சாதி என்ற முறையை உருவாக்கியது யார்? ஏன்?
வேண்டுகோளை ஏற்று பதிவு இட்டதற்கு நன்றி! எதிர்பார்த்தபடியே சுவாரசியமாக இருந்தது.
எழதி முடிப்பதற்குள் மறுமொழியை தவறுதலாக போஸ்ட் செய்துவிட்டேன்.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதீயம் மோசமான கோட்பாடு என்றும், என் முப்பாட்டன்கள் அதை கடைப்பிடித்திருப்பார்கள் என்றும் நான் கருதுகிறேன். ஆனால் என் முப்பாட்டன்களின் தவறுகளுக்கு நானோ, என் சந்ததியினரோ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது மகா முட்டாள்தனமாகத்தான் எனக்கு தெரிகிறது.
பிராமண த்வேஷத்துக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? ஜாதி ஒழிப்பை விட பிராமண ஒழிப்பை முக்கியமானதாக பெரியாரிலிருந்து தொடங்கி திராவிட இயக்கங்கள் கருத என்ன காரணம்? பிராமணர்களால் discriminate செய்யப்பட அவர்கள் இன்று தலித்களுக்கு எதிராக எப்படி இயங்குகிறார்கள்?
பார்பனர்கள் கூறியதை எல்லாம் அப்படியே ஒரு சமுதாயம் கடைப் பிடிக்க சாத்தியம் இருந்திருகிறதா ?
அவர்கள் யாருக்குமே சுய புத்தி (இனைய வார்த்தையில் பொதுபுத்தி) இல்லாமல் இருந்திருக்கிறதா !
அந்தக் காலத்திலேயே பத்திரிகை சுதந்திரம் மாதிரி புலவர்களுக்கு அரசனையே கேள்வி கேட்கும் அதிகாரம் இருந்திருக்கிறதே! அப்படி அரசன் அல்லது சமூகம் பார்பனாரால் ஆட்டிவைக்க பட்டிருந்தால் ஒரு புலவர் கூடவா தன் பாட்டில் அதைக் காட்டியிருக்க மாட்டார்
ஜாதி அமைப்பு ஒரு காலத்தில் தொழிற்சங்க அமைப்பு போன்றது என்றும் அது பிறப்பால் வருவதாக இல்லை என்றும் அடுத்தடுத்த வந்த அந்நிய படையெடுப்புகளில் அது சிதைந்து குழு மனப்பான்மைக்கு ஆளாகி தற்போதைய நிலையில் நிற்பதாக ஒரு சொற்பொழிவில் கேட்டிருக்கிறேன்.
அதாவது அவன் பாங்கரக இருந்தால் வைசியன், எஞ்னியர் என்றால் விஸ்வகர்மா அவர்கள் பிள்ளைகள் அவர்கள் தொழில் சார்ந்த அறியப்பட்டார்கள். இதைப் பற்றி விரிவாக எதேனும் தர இயலுமா
ரிஷபன்
வணக்கம்,
தமிழக அரசு சாலைப் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்களை நீக்கியதாக (அரசாணைக்கூட வெளியிட்டதாக) கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் கோபதி நாராயணன் சாலையின் புதிய மேம்பாலம் கிட்டே போய் பாருங்கள். டாக்டர் நாயர் சாலை செல்லும் வழி இது என்று புதியதாக சாலை வளைவு வைத்திருக்கிறார்கள்,
யாரை குற்றம் சொல்வது?
//நீங்கள் கோபதி நாராயணன் சாலையின் புதிய மேம்பாலம் கிட்டே போய் பாருங்கள். டாக்டர் நாயர் சாலை செல்லும் வழி இது என்று புதியதாக சாலை வளைவு வைத்திருக்கிறார்கள்//
தெருக்களில் சாதிப்பெயரை எடுத்தது பற்றிய எனது பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.com/2007/01/blog-post_30.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஜாதி ஒழிப்பை விட பிராமண ஒழிப்பை முக்கியமானதாக பெரியாரிலிருந்து தொடங்கி திராவிட இயக்கங்கள் கருத என்ன காரணம்?//
பெரியார் அவர்களின் திட்டமிட்ட வெறுப்பு பிரசாரமே முக்கிய காரணம்.
மற்றப்படி பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினரோ, பிற்படுத்தப்பட்டவரோ தலித்துகளை வன்கொடுமை செய்தது குறித்து ரொம்ப கவலையெல்லாம் அவர் பட்டதில்லை. பட்டிருந்தால் கீழ்வெண்மணி விவகாரத்தில் அவர் அப்படி சொதப்பியிருக்க மாட்டார்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சாதி என்ற முறையை உருவாக்கியது யார்? ஏன்?//
குரங்காக இருந்தவரையில் சாதி வித்தியாசம் பார்க்கவில்லை.-வால் இருந்தது
ஆனால் மனிதனாக மாறியதும் சாதி வித்தியாசம் ஆரம்பித்திருக்கலாம்.-அதனால் வால் இல்லை
"வால்" எப்போது போயிற்று என்று தெரிந்தால் இது பற்றி மேல் விவரம் அறியலாம்.
புள்ளியியலில் "Null Hypothesis" என்று சொல்வார்களே அதன் அடிப்படையில் இந்த எளியவனுக்கு தெரிந்த "வால்" தியரியை சொன்னேன். கோபப்படாதீங்க !
வாலில்லாத தம்பி
Dear Mr.Dondu Raghavan,
Iam new to Blogspot.Only Recently iam seeing your Blogs.I agree with Your points .Both of us have some similaity. I also lived in Triplicane & later (now )in Gurgaon - (Near IDPL !) Iam also an Engineer & 62 Years Young!
I Do not feel So called Brahmin Caste as a source of Irritation here ( Past 20 years )
Can You pl. explain as to why there is not much descrimination prevail here( North / Delhi) between Brhamin & other castes
than South. Is this trend here for a longer time or subsidied now?
Pl.think over & put up post in this matter as only You can do that as U spent considerable Time in these zones,grsped knowlege.
With Regards,
S.Kannan.
என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.
சரியான வார்த்தைகள்.
very very nice post
very nice post
its a great post
Dondu sir,
Can we assume, Brahmin Bash still alive because of
S.CHO’s writings ‘n’ speeches or
Some Bolger’s writings, Including Dondu‘s? or
Some stage Dramas and TV serials or
Attitude of some,
Hidden Inner-burns some Brahmins.
Feel envy of Beauty & culture of Brahmin men & women
Or all the above
Your friend
Sathappan
//என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்
//
தமிழ் சாதியினர் நன்றாக அடித்துக்கொள்வதை ரசித்து களித்த பின்னர் எரிகிற வீட்டில் பிடுங்குவார்கள் பார்ப்பனர்கள். இம்மாதிரி சாதி வேற்றுமையை மற்றவர்க்கு கற்றுவித்தது யார்? பார்ப்பனர்தானே?
பெரியாரைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதும் வீணான அவதூறுகளே..
உமது பார்ப்பன சாதி மீது காரணமில்லாமலா விமர்சனங்கள் வருகின்றன?
மனசாட்சியுடன் பதிலளியுங்கள் டோண்டு அவர்களே..
கோமணகிருட்டிணன்
//பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன்//
இல்லை என அடக்கமாக பதிலளித்திருக்கலாமே. உமது பதிலில் இருந்த்தே உமது வண்டவாளாம் தெரிகிறதே டோண்டு அவர்களே!! இதனால்தான் பார்ப்பனர்கள் தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.
கோமணகிருட்டிணன்
explicit posting
what a wonderful post this is
//ஒன்று நிச்சயம். என்னுடன் நேரடியாக பழகியவர்களில் மா.சிவக்குமாரும் ஒருவர். அவர் ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறார், “ஜாதிவெறி இல்லாதவர்களில் நீங்களும் ஒருவர்” என்று. ////
வழிமொழிகிறேன்.
“I do not feel the so-called Brahmin Caste as a source of Irritation here for the past 20 years.
Can you pl. explain as to why there is not much discrimination prevailing here (North/Delhi) between Brahmin & other castes than in South?”
கண்ணன் குர்கானிலிருந்து எழுதியிருக்கிறார்.
எனக்கும் அந்த கேள்வியே எழுகிறது. வட மானிலங்களில் மட்டுமல்ல. தமிழ்நாட்டைத் தவிர மற்ற தென் மானிலங்களிலும், இந்த பார்ப்பன எதிர்ப்பு இல்லை.
இதற்கு என்ன காரணம்?
Excellent Post, Dondu Sir......
//தலித்துகள் மேல் வன்கொடுமையா, பார்ப்பனீயத்தைத் தாக்கி பதிவு போடுவார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் வன்கொடுமை செய்தது கவுண்டராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, அல்லது வேறு யாராவதாகவோ பார்ப்பனர் அல்லாதவராக இருப்பார்கள். நான் கேட்பது இதுதான், “பின்னே ஏண்டா ஜாட்டான் பார்ப்பனீயம் எனக் கூறுகிறாய்? உயர்சாதீயம் என சொல் இருக்கிறதல்லவா, அதைக் கூறு” என்பதே. உடனே விளக்கெண்ணெய் விளக்கங்கள் வரும்//
pottu thaakku...
adra sakka! adra sakka!
i love this post,
its a good post anyway
வேலூர் வரதராஜ் -Good posting
*********************************
http://srk.blogspot.com/
சீர்காழி கோவிந்தராஜ்-very nice post
போளூர் தங்கராஜ்-its a great post
சூளூர் சூரியராஜ்- what a wonderful post this is
கரூர் கந்தராஜ்-i love this post,
கோழியூர் கொக்குராஜ் -its a good post anyway
திருவண்ணாமலை தியாகராஜன்-very very nice post
*******************************
இன்று ராஜாக்களின் தொடர் அணிவகுப்பு
டோண்டு சாரின் பதிவுக்கு!
எலிக்குட்டி சோதனை result
http://srk.blogspot.com/
//http://srk.blogspot.com/
சீர்காழி கோவிந்தராஜ்-very nice post
போளூர் தங்கராஜ்-its a great post
சூளூர் சூரியராஜ்- what a wonderful post this is
கரூர் கந்தராஜ்-i love this post,
கோழியூர் கொக்குராஜ் -its a good post anyway
திருவண்ணாமலை தியாகராஜன்-very very //
.))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
/////திருவண்ணாமலை தியாகராஜன் said...
very very nice post////
உண்மையாகவா?
நமது தேசியக் கவி பாரதியாரின் பாட்டு
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 1
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
appa neenga v p singh patri eluthinatha ennandu solla, summa crocordile kanneer vidathiyungo
"If not DONDU SIR , then who: if not now, then when?"
i never seen such a great post
its amazing to see such a excellent post
its really cool to see a cool post like this
அண்ணா,
ராஜ் & கோ கும்மி சத்தத்திலே நீங்க வந்ததை பார்க்க விட்டுட்டேன்.
நல்லா இருக்கீங்களா ! அநுவாவி சுப்பிரமனியர் கோவில் போனீங்களா !
தரிசனம் எல்லாம் எப்படி இருந்தது.
' ஒரு சாதியை வைத்துக்கொண்டு ஒருவரை எடை போடுவது தவறு?
ஆனா பார்ப்பணர்கள் ஈழத் தமிழர் விடயத்தில் எடுத்திருக்கும் நிலைப்பாடு வெளிப்படையான சந்தேகத்திற்குரியது.
"ஆஷ்துரை என்னதான் இருந்தாலும் கலெக்டராம், ஆகவே அவரை கொன்றது ராஜத்துரோகமாம். கொலையாளியின் விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று மனதில் ஈரமேயில்லாது அப்பத்திரிகை எழுதியது
"
What about Mrs. Nalini Murugan?
விடுதலைப் புலிக்கும் இந்த நியாயம் பொருந்துமா சாமி?
its amazing. its cool. its fantastic.
Dear Dondu Sir,
Gr8 post. Thanks for reflecting on what exactly I felt on this issue.
Please also write a sequel to this on how practically anti-Brahmin "apartheid" is happening in the ground level in the state. Covering the aspects of Quota regime, politics or the modus-operandi in Blogosphere are not required, as they are widely discussed already.
கீழ்வென்மணியில் பெரியார் தலித்களுக்கு எதிராக செயல்பட்டார் என்று நானும் அரசல் புரசலாக கேள்விப்பட்டிருக்கிறேன். நம்ப கஷ்டமாக இருக்கிறது. அதே சமயம் நெருப்பில்லாமல் புகையாதே என்றும் தோன்றுகிறது. பெரியார் ஜாதிகளை ஒழிக்க பிராமண எதிர்ப்பை ஒரு கருவியாக பயன்படுத்தினார் என்று எனக்கு ஒரு நினைப்பு. பார் அவர்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள், அவர்களை பின் தள்ளி நீயும் முன்னேறு என்கிற மாதிரி. Of course, அவர் காசியில் பட்ட அவமானங்களும் அவரது பிராமண எதிர்ப்புக்கு ஒரு காரணம்தான்.
பொதுவாக வட மாநிலங்களிலும், ஆந்திராவிலும் உள்ள ஜாதி வெறியை விட தமிழகத்தில் குறைந்து காணப்படுகிறது. இதற்கு பெரியாரும், திராவிட இயக்கங்களும் ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஜாதி வெறியை குறைத்தது பெரிய சாதனை என்றும் பல குறைகள் இருந்தாலும் அதற்காக பெரியாரை பாராட்ட வேண்டியதுதான் என்றும் நினைக்கிறேன். நான் எழுதிய ஒரு போஸ்ட் இங்கே - http://koottanchoru.wordpress.com/2008/12/23/பெரியார்/
டெல்லியில் பல வருஷங்கள் வாழ்ந்த நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வட மாநிலங்களின் ஜாதி வெறி அதிகமா இல்லையா? அதிகம் என்றால் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் குறைந்து காணப்படுகிறது?
EXCELLENT POSTING
பல உண்மைகளை சொல்லும் சூப்பர் பதிவு.
குறுக்கு சால் ஒட்ட நினைப்போரின் செயல்களை எதிர்கொள்ளும் துணிவான பதிவு.
இடக்கு மடக்காய் பேசுவோரின் முடக்கு வாதத்தை முறியடிக்கும் பதிவு
ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்ததாய் உள்ள நிகழ்ச்சிகளை திரும்ப திரும்ப சொல்லி ஜல்லி அடிப்போரை அசர வைக்கும் பதிவு.
உண்மையான சூழ்நிலையை படம் பிடித்து காட்டும் வீரம் செறிந்த பதிவு.
//பெரியார் ஜாதிகளை ஒழிக்க பிராமண எதிர்ப்பை ஒரு கருவியாக பயன்படுத்தினார் என்று எனக்கு ஒரு நினைப்பு. பார் அவர்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள், அவர்களை பின் தள்ளி நீயும் முன்னேறு என்கிற மாதிரி. Of course, அவர் காசியில் பட்ட அவமானங்களும் அவரது பிராமண எதிர்ப்புக்கு ஒரு காரணம்தான்.//
பார்ப்பன எதிர்ப்புதான் பெரியார் செய்த பெரும் தவறு. அதே சமயம் மற்றவர்களை காண்பித்து நீயும் முன்னேறு என்னும் தோரணையில் அவர் அதை செய்யவிலை. அவர்கள் அளவுக்கு முன்னேறாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களையும் எப்படியாவது கீழே இழுத்துவிடு என்ற நோக்கம்தான் அதிகமாக காணப்படுகிறது.
வைக்கம் போராட்டம் கூட அவர் காங்கிரசில் இருந்த நேரத்தில் அக்கட்சியால் ஏற்பாடு செய்த போராட்டத்தில் அவர் வகித்த பங்கு மட்டுமே. அவர் காங்கிரசை விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்கு வந்ததும் அம்மாதிரி தலித்துகளுக்காக கோவில் பிரவேச போராட்டங்கள் எதுவும் தலைமை எடுத்து நடத்தியதாக எனக்கு தோன்றவில்லை. பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்த அவர், மற்ற ஜாதி ஹிந்துக்கள் தலித்துகளை அடக்கி ஒடுக்கும் செயல்களுக்கும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தாரா? இரட்டை டம்ளர் முறைக்கு எதிராக அவர் எத்தனை போராட்டங்கள் எங்கெல்லாம் நிகழ்த்தியிருந்தார் என்றெல்லாம் யாரேனும் பட்டியலிட முடியுமா?
காசியில் அவருக்கு ஏற்பட்ட அவமானம் என்கிறீர்கள். அதையே தனது பார்பன எதிர்ப்புக்கு காரணமாக கொண்டிருந்ததில் அவர் தனிப்பட்ட நிகழ்ச்சியை பொதுமையாக்குகிறார். தர்க்க சாத்திரத்தில் இதை fallacy of hasty generalization என்று கூறுவார்கள். அதைத்தான் அவர் செய்து, தான் போதித்த பகுத்தறிவுக்கு விரோதமாகவே நடந்துள்ளார். ஆக அவரைப் பகுத்தறிவு பகலவன் என்று அவரது அடிபொடிகள் தவிர வேறு யாருமே கூற இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெரியார் பெரிய சிந்தனையாளர் என்று நானும் நினைக்கவில்லை. என் கண்ணோட்டத்தில் அவர் ஒரு போலித்தனம் இல்லாத ஒரு maverick. கள்ளை ஒழியுங்கள் என்றால் தென்னை மரங்களை வெட்டி சாய்ப்பவர். பிராமண வெறுப்பு அவரது பலவீனம்தான். ஆனால் அவரது தாக்கம்தான் தமிழகத்தில் ஜாதி வெறியை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைத்திருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. வேறு காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. பெரியாரை பற்றி உங்கள் கருத்து தெரிகிறது, மற்ற மாநிலங்களில் உள்ள ஜாதி வெறி, தமிழகத்தில் உள்ள ஜாதி வெறி, பெரியாரின் தாக்கம், அல்லது அவரது non-தாக்கம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
கீழ்வென்மனியை பற்றி அவர் என்னதான் சொன்னார்? அப்போது(அம்) இளைஞர் என்ற விதத்தில் உங்களுக்கு நினைவு இருக்கலாம். நினைவு இல்லாவிட்டாலும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன்.
வைக்கம் மாதிரி அவர் வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தாதது ஏன் என்பது நல்ல கேள்வி. எனக்கு இது வரை தோன்றவில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்கள் அதிகம்.
பொதுவாய் சின்ன நகரங்கள்,கிராமங்களில் கூட அக்ரஹாரம்
இரண்டு மூன்று இருக்கும்.
குறிப்பாய் "என்பீல்டு" மோட்டார் சைக்கிள் தொழிற்சாலை நிறுவனர் ஈஸ்வரன் அவர்களின் சொந்த கிராமமான கல்லிடைக் குறிச்சியில் 18 அக்ரஹாரம் இருந்தது.இந்த ஊர் உளுந்து அப்பளத்திற்கு பேர் பெற்றது.பரணி போற்றும் ஜீவ நதி தமிரபரணி எனும் புண்ணிய நதிகரையில் உள்ள அழகு கொஞ்சும் நகரம்.
மிகவும் தொண்டுள்ள மனம் படைத்தவரான "சிம்சன் குருப்ஸ்" அதிபர் ராமகிருஷ்ணன் அவர்களின் சொந்த ஊரான ஆழ்வாற்குறிச்சிக்கு பக்கத்தில் உள்ளது.
தேசியக் கவி பாரதியாரின் மனைவியின் பிறந்த ஊரான கடையத்துக்கு பக்கத்தில் உள்ளது.
எல்லாம் தென்றல் தவழும் மேற்கு மலைத்தொடர் அடிவார அழகு நகர்களாகும்.
கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் பார்ப்பனர்கள் ஒழுங்கு முறையில்,எல்லோரும் போற்றும் வகையில் வாழ்ந்து வந்தனர்.
அந்தத் தெருக்களில் போவோர் மிகுந்த பய பக்தியுடன் போய் வருவர்.
பிற ஜாதியினர் பார்ப்பன ஆண்களை "சாமி" எனவே உயர்வாய் அழைத்துப் பேசுவர்.
பெண்களை மரியாதையாய் "மாமி" என அழைப்பர்.
நில புலங்கள் மிகுந்து இருந்ததால்,பொதுவாய் பிராமணர்கள் தாராள மனதாய் இருப்பது வாடிக்கை.
உலகில் நல்லதும் கெட்டதும் பரவிக் கிடப்பது போல், அதில் ஒரு சிறு பகுதியினர் சற்று ஆணவத்துடன் பிறரை மட்டம் தட்டியும் ,சிறு சிறு துன்பங்கள் கொடுத்தும் வாழ்ந்து இருந்தனர் என்பதை மறுக்க முடியாது.
பெரும்பான்மை சமுகம் நல்ல மனத்துடன்,தயாள சிந்தனையுடன் இருக்கும் போது இந்தக் கடந்த கால சிறு சிறு தவறுகளை பூதக் கண்ணாடி கொண்டு இன்று பார்த்து "பார்ப்பன துவேஷத்தை" இன்னும் தங்களின் வாழ்வியல் ஆதாரம் போல் பாவித்து அதை ஒரு பெரும் தொடர் பிரச்சாரமாய் செய்பவர்களுக்கு, டோண்டு ராகவன் அவர்களின் இந்தப் பதிவுகள் விளக்கம் தந்து,சற்று அவர்களின் கண்ணைத் திறந்தால் நாட்டிற்கும், தமிழ் போற்றும் பதிவுலகத்துக்கும் மிக நல்லது.
அவர்கள் தெளிவாய்ச் சொல்லியுள்ளார்கள் "தான் எந்த இடத்திலும் பிராமண ஜாதியினர் பிற சாதிகளைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லவில்லை என்று ஆணித்தரமாய் சொல்லியுள்ள பிறகும், நாகரிகம் காப்பது தானே தமிழனின் உலகம் போற்றும் பண்பு.
ஒரு உண்மைத் தகவல்
இன்றைய அக்ரஹாரங்களின் நிலை
இங்குள்ள பிராமணர்கள் சென்னை,பம்பாய்,கல்கத்தா,டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு குடி பெயர்ந்து விட்டனர்.காரணம் நான் சொல்ல வேண்டியதில்லை.
அக்ரஹாரங்கள் உண்மையான வாழும் சமத்துவபுரமாய் மாறிவிட்டது.
இந்துக்களில் உள்ள எல்லா ஜாதியினரும்,இஸ்லாமியர்,கிருத்துவர் அனைவரும் அங்குள்ள பெரிய பெரிய வீடுகளை விலைக்கு வாங்கி பெருமையுடன் வாழ்ந்து வருவதை காணலாம்.
ஆம் பெரிய வீடுகள் என்றால் வீட்டின் வாசல் ஒரு தெருவில் இருக்கும் மற்றொரு தெருவில் வீட்டின் பின் கதவு இருக்கும்.வீட்டின் நீளம் 100 அடி முதல் 200 அடி வரை இருக்கும்.
பார்ப்பனரின் பரம்பரை சொத்துக்களும், கடின உழைப்பால் வாங்கப் பட்ட நில புலன்களும் இன்று அவர்கள் கையை விட்டு போய் விட்டன்.
இன்று அவர்களில் பெரும்பாலோர்,ஜாதி வெறி கிஞ்சிற்றும் இல்லாமல்
எல்லா ஜாதியினரையும்.பிற மதத்தினரையும் கடவுளின் படைப்பு, ஆண்டவனின் அன்புக் குழந்தைகள் எனப் போற்றி ஒற்றுமையாய் வாழும் இந்த "காஸ்மோபாலிட்டன்" வாழ்வு முறையில் ,பழங்கதை வேண்டாம் என டோண்டு ஐயா அவர்கள் சொல்வதை அவரது வயதுக்கும் ஆழங்கால் பட்ட அறிவுக்கும், அனுபவத்திற்கும் மதிப்பு கொடுத்தும், வரும் புத்தாண்டில் (1-1-2009)அனைத்து பதிவுலக் பதிவர்களும்,பின்னூட்ட பண்பாளர்களும், வாசகச் செம்மல்களும், அன்புகளுமிய ஆர்வலர்களும் ஒரு சங்கல்பம் எடுத்து
"ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் "என்பது பதிவுலகில் எங்கும் ஒங்கி ஒலித்து சிறந்து பரவி மலர்ந்து மணம் வீசட்டும் அன்பர்களே.
அன்புடன்
திருநெல்வேலி சுவாமி.
நான் பார்ப்பன வகுப்பை சார்ந்தவன் அல்ல
எனது 5 வயது முதல் 20 வது வரை உள்ள காலக் கட்டத்தில் பெரும் பகுதி
அக்ரஹாரத் தெருக்களில் வாழ்ந்ததாலும் ,பார்ப்பன நண்பர்களோடு பெரும்பகுதியினரிடம் பழ்கிய பழக்கத்தையும் வைத்து மேலெ யுள்ள கருத்தை பதிந்துள்ளேண்.
//கீழ்வெண்மணியைப் பற்றி அவர் என்னதான் சொன்னார்?//
12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீட்டை நாம் கண்டு கொள்ளலாம்:
"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''
அதாவது பெரியார் திமுக ஆட்சியை மட்டுமே பாதுகாக்க நினைத்துள்ளார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
please explain in detail.
Is it true that justice party was started by muthaliyaars to counter attack the progress of brhamins?
periyaar's D.K is a break away group of so called other forward communities mouth piece-justice party?
On seeing the past history of DMK and ADMK one can see the deputy leader positon is still maintained by muthaliyaars?
என்று தணியும்
இந்த பிராமண துவேஷம்?
என்று மடியும்
இந்த அபாண்டக் குற்றச்சாட்டுகள் ?
@RaamakirushNahari
ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தது முதலியார்கள் மட்டுமல்ல. அதில் நாயுடு போன்ற மற்ற சாதியினரும் இருந்தனர். பல மிட்டா மிராசுகள், ஜமீந்தார்கள் ஆகியோரை உள்ளடக்கிய கட்சி அது.
பெரியார் குரூப் தனியாகவெல்லாம் பிரியவில்லை, ஜஸ்டிஸ் கட்சியே ஒட்டுமொத்தமாக தி.க. வாக பரிமாணம் எடுத்தது என்றுதான் நினைக்கிறேன். இந்த அனுமானம் தவறு எனத் தோன்றினால், யாரேனும் விளக்கலாம்.
மற்றப்படி முதலியார்கள் என தனியாக ஒரு சாதியை கூறுவதும் வேறு இன்னொரு வெறுப்புக்கே வழிவகுக்கும். ஆகவே அது வேண்டாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@திருநெல்வேலி சுவாமி
நல்ல விஷயமாகத்தானே கூறுகிறீர்கள். ஏன் அனானியாக வர வேண்டும்? பிளாக்கராக பதிவு செய்து கொள்ள ஐந்து நிமிடங்கள் போதும். அது இலவசம். பிளாக்கராக வந்தால் உங்கள் கருத்துக்கு இன்னும் வலிமை கூடும். இது ஒரு ஆலோசனை மட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//dondu(#11168674346665545885) said...
@திருநெல்வேலி சுவாமி
நல்ல விஷயமாகத்தானே கூறுகிறீர்கள். ஏன் அனானியாக வர வேண்டும்? பிளாக்கராக பதிவு செய்து கொள்ள ஐந்து நிமிடங்கள் போதும். அது இலவசம். பிளாக்கராக வந்தால் உங்கள் கருத்துக்கு இன்னும் வலிமை கூடும். இது ஒரு ஆலோசனை மட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
ஐயாவின் ஆலோசனைக்கு நன்றி.
அதன்படி இந்தக் கருத்தை திருவாளர் ஆர்.வி அவர்களின் http://koottanchoru.wordpress.com/
பதிவில் பதிந்துவிட்டேன்.
சுவாமி.
extremely sorry
ramakrishnahari.
To Dondu's Q&A:
1) What is the need of varna sasthiram? I hope it is all about describing people based on their work.
2) Why people should not do any work on their will? A Brahmin should do only religious rituals and preach vedas. A Vaishyan do only business. A Suthiran do only technical only. A Chatriyan do only governance. Why this differentiation?
3) In Islam they have Quran with ease accessible to anyone. But in our religion even for Brahmin (who are assigned to preach religion as per varna sathiram) Vedas is not so reachable. I had a talk with my brother's friend who is reading sanskrit for "Vaithega" purpose. He told they won’t read all four vedas. Also they won't learn the meanings of it instead they have one special format to memorize the vedas.
Then where is the room for feeling the virtues of our vedas? Then how a common man can know about vedas to live his life?
To Dondu's Q&A
4) What is socialism?
5) How many "ism"s are there?
for friday - previous transmission interrupted, pls avoid duplication!
மு.க.விற்கு பாரத ரத்னா!! சிபார்சு செய்தது, கார்வேந்தன் எங்கிற காங்கிரஸ் பிரக்ருதி!
காங்கிரஸ்காரர்களுக்கு மூளை கொஞ்சமும் கிடையாது என்பது லக்ஷக்கணக்கில் கட்சியில் இந்தியர்கள் இருக்கும், போதே சோன்யா காந்தியை தலைமைக்கு தேர்ந்தெடுத்தபோதே தெரிந்த விஷயம். எதற்கு இந்த பாரத ரத்னா பட்டம்? தமிழ் நாட்டில் ஜாதி வெறியைத் தூண்டி கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாரே அதனாலா? அல்லது பதவிக்கு வந்த நாள் முதலே சுரண்டல் மன்னனாகத் திகழ்கிறாரே அதனாலா!
28 பெரிசா 50000 பெரிசா? எல்லாம் முடிந்து போன விஷயம்!
சந்திரலேகா ஐ.ஏ.எஸ்.அவர்களின் சோகக்கதை பற்றி மிகவும் உருக்கமாக மு.க.முரசொலியில் ஒரு கடிதம் எழுதினார்!
## உடன்பிறப்பே,
இந்த ஊழல் பின்னணியின் மப்பும், மந்தாரமுமான சூழலில் தான் அதிகாரியின் கதை சுழலுகிறது!***
1992 ஏப்ரல் மாதத்திலேயே ஒரு பங்கு விலை 125 ரூபாய் என்றும், அதற்குப் பிறகு200 ரூ. வரையில் உயர்ந்தும் விற்கப்படக்கூடிய அருமையான நேரத்தில் அந்த உபரிப் பங்குகளை சுமார் 55 ரூ. விலைக்கு எம்.ஏ.சி.குழுவுக்கு விற்பது சரியா? என்ற கேள்வி எல்லோருக்கும் தோன்றுவதுபோல் சந்திரலேகாவுக்கும் தோன்றியிருக்கக்கூடும்.
எனவே அதிகாரி அரசிடம் சில விபர விளக்கங்கள் கோரி ஒரு கடிதம் எழுதினார் -- பங்குகளை எம்.ஏ.சிதம்பரம் குழுவுக்குத் தான் தரவேண்டுமா? வேறு நிறுவனங்களுக்கு விற்கக்கூடாதா? - எதுவாயினும் அரசே முடிவு செய்யட்டும். -- இவ்வாறு இவர் காட்டிய தயக்கத்தினால், அதிகாரி அரசுத் துறைக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடிய காரியத்துக்கு உடந்தையாக இருக்கவில்லை என்ற கோபம் கொப்பளிக்கிறது.
டிட்கோ நிறுவனப் பொறுப்பிலிருந்து அவர் வேறு துறைக்கு மாற்றப்படுகிறார்.. அதற்குப்பிறகு அவர் முகத்தில் 'திராவகச் சித்திரம்' தீட்டப்படுகிறது - இல்லை இல்லை - திராவகச் சித்திரவதை நடத்தப்படுகிறது!! -- இந்த பயங்கரமான சம்பவத்திற்குக் காரணம் யார்? அவர்கள் அனைவரும் கண்டு பிடிக்கப் பட்டார்களா? காவல் துறையினர் இந்த விவகாரத்தில் வேகம் காட்டுகிறார்களா அல்லது நத்தைகளின் ஊர்வலம் தொடர்கிறதா?
## (சோவின் பரமரசிகர் சின்னக்குத்தூசியின் 'முத்துச்சரம்' பக்கம் 171-172)
இருபத்தெட்டுக் கோடிக்கே இப்படி அங்கலாய்க்கும் மு.க. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் மட்டும் 'எல்லாம் முடிந்து போன விஷயம்' என்று எப்படி சொல்லுகிறார்??
12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீட்டை நாம் கண்டு கொள்ளலாம்:
....... ....... ...... ......
The speech of EVR can be taken as a protection to the then DMK government. But I heard that the KeezaveNmani tragedy occurred during Kamaraj government.
Leaving aside the chronology, and looking at the speech only, it would appear to be a correct and decent speech. EV Ramasamy didnot support the killers Nayudus. Rather, he found fault with the agent provocateurs, the Communists; and laid the blame of 42 deaths of dalits at their doors only.
It is true even today. The Communists are responsible in the dalits vs Pillais in Uththapuram of Madurai district; and also, now on-going tussle between the same two communities in PanathanpaLLi of Tirunvelveli district - for temple entry.
Ramasamy in his speech touched upon an effective point namely, the rise in wages for agricultural labourers is possible due to various economic indicators; and the Tanjavur landowners alone cant do it. Can violent demonstrations do away with such unfavourable economic conditions? But Communists dont think so. The communists should attack the government for bad policies, not the landowners. Attacking the landowners for all ills that beset the labour community, is naxalism that faced West Bengal in 60s and facing Chattisgarh, MP and Jharkhand today.
When someone here asked Dondu raghavan to reproduce the speech, I though, the speech would be a frontal attack on dalits.
Now, I understand, the attack on Ramasamy is motivated.
அனானிமஸ்,
கீழ்வெண்மணி அண்ணா ஆட்சிக்காலத்தில் நடந்தது.
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? எரித்த பண்ணையார்கள் மேல் எந்த தவறும் இல்லை, கூலி கேட்ட கம்யூனிஸ்ட்கள் செய்த தவறினால்தான் இத்தனை பேர் இறந்தார்கள் என்றா? அதாவது தவறெல்லாம் எரிந்தவர்களுடையது, எரித்தவர்களுடையது அல்ல. இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை.
உங்களுடைய கீழ் வெண்மணி விஷயத்தை ஒரு போஸ்டில் உபயோகப்படுத்தி இருக்கிறேன். http://koottanchoru.wordpress.com/2008/12/30/ஆளுமைகள்-விமர்சனங்கள்/
முடிந்தால் பாருங்கள்.
//இருபத்தெட்டுக் கோடிக்கே இப்படி அங்கலாய்க்கும் மு.க. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் மட்டும் 'எல்லாம் முடிந்து போன விஷயம்' என்று எப்படி சொல்லுகிறார்??//
auto veettuku varppovuthu
//மு.க.விற்கு பாரத ரத்னா!! சிபார்சு செய்தது, கார்வேந்தன் எங்கிற காங்கிரஸ் பிரக்ருதி!
காங்கிரஸ்காரர்களுக்கு மூளை கொஞ்சமும் கிடையாது என்பது//
ithu verayaa?
sikkal thaan periyavarukku
//பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஜாதீயம் மோசமான கோட்பாடு என்றும், என் முப்பாட்டன்கள் அதை கடைப்பிடித்திருப்பார்கள் என்றும் நான் கருதுகிறேன். ஆனால் என் முப்பாட்டன்களின் தவறுகளுக்கு நானோ, என் சந்ததியினரோ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது மகா முட்டாள்தனமாகத்தான் எனக்கு தெரிகிறது.//
neenga solrathu sarithaan
aanaa kedkiravanga
kedkanume!
//நீங்கள் கோபதி நாராயணன் சாலையின் புதிய மேம்பாலம் கிட்டே போய் பாருங்கள். டாக்டர் நாயர் சாலை செல்லும் வழி இது என்று புதியதாக சாலை வளைவு வைத்திருக்கிறார்கள்,//
gn chetti saalayai kalivaanar theru yena maatrukiraarkalaam
ithaiyum matrinaal possu
thalaivaru sonnathu
விவேகம் என்னும் வெள்ளி முளைத்து,
சாதி மத பித்து என்னுன் சனி தொலைந்தால் தான்,
சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்!
//வால்பையன் said...
சாதி என்ற முறையை உருவாக்கியது யார்? ஏன்?
answer please.
//The speech of EVR can be taken as a protection to the then DMK government. But I heard that the KeezaveNmani tragedy occurred during Kamaraj government.//
yethu sari?
//When someone here asked Dondu raghavan to reproduce the speech, I though, the speech would be a frontal attack on dalits. //
please explain
//தமிழ் நாட்டில் ஜாதி வெறியைத் தூண்டி கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாரே அதனாலா? அல்லது பதவிக்கு வந்த நாள் முதலே சுரண்டல் மன்னனாகத் திகழ்கிறாரே அதனாலா//
tamizharkale avaalai adaiyaalam kandu kollungal
நான் உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பவன்.
சமீபத்தில் திரு.பத்ரி அவர்களின் மொட்டை மாடிக் கூட்டத்தில் திரு.ஞானி அவர்கள் பேசியதைக் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அதை இங்கே கேட்கலாம்.
http://www.archive.org/details/BadriSeshadriKizhakkuMeeting_JournalistGnanionMumbaiTerrorAttacks_Tamil__16December20/
திரு. ஞானி மேல் எனக்கு மரியாதையும் உண்டு கருத்து வேறுபாடும் உண்டு. மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, CST'யில் நடந்த தாக்குதல்களை யாருமே கண்டு கொள்ளவே இல்லையென்றும் தாஜ் ஓபராய் ஹோட்டல்களில் நடந்தத் தாக்குதலைத் தான் உலகுக்கே காட்டினார்கள் என்று ஊடகங்கள் மீது குற்றம் சாட்டினார். ஒரு வகையில் இது ஒரு நியாயமான குற்றம் தான். I fully agree with them.
ஆனால், அவர் பேசத் தொடங்கி சில நிமிடங்களில் இந்தத் தீவிரவாதம் ஒரு Reactionary step தான் என்ற நோக்கத்தில் பேசத் தொட்டங்கி விட்டார். இப்படி இவர் பேசுவது, என்னவோ தீவிரவாதிகள் செய்ததை நியாயப் படுத்துவது போல் உள்ளது. மேலும் இதற்குக் காரணமாக இருந்ததே அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தான் என்றும் சொல்லியிருக்கிறார். அவர் பார்வையில் அது ஒரு காரணமாகக் கருதலாம். அதற்காக அத்வானி மோடி எல்லோரும் தான் தீவிரவாதிகள். அவர்களைத் தான் முதலில் கைது செய்ய வேண்டுமென்றும் சொல்கிறார்.
இவர் கடவுள் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். எந்தவொரு மதத்தைச் சாராதவராகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் உள்ளவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவது ஒத்துக் கொள்ள முடியாத விஷயம்.
மேலும் சாதிகள் ஒழிய வேண்டுமானால் பிராம்மணர்கள் எல்லோரும் பூணூலை கழற்றியெரிய வேண்டும் என்றும் சொல்கிறார். இவரால் எந்தவொரு முஸ்லிம் மதத்தை பின்பற்றுவரிடமோ அல்லது கிறிஸ்தவரிடமோ போய் குல்லாவும் சிலுவையும் அணியாதீர்கள் என்றோ, ஒரு சர்தாரிடம் போய் தலைப்பாக்கு கட்டாதே என்று சொல்ல துணிச்சல் உண்டா?
Terrorists have taken India for granted and so are people like Gnani, for whom Brahmins are taken for granted.
இவர்களைப் பற்றி என்னவேணுமானாலும் பேசலாம். இவர்கள் ஒண்ணும் செய்ய மாட்டார்கள் என்ற இருமாப்பு.
திரு.ஞானி ஒரு முறை தனது ஓ பக்கங்களில் இவ்வாறு எழுதியிருந்தார். "சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டுமானால், அதற்குண்டான அடுத்த நிலை, பூணூலற்ற நிலை"
பாரதியாரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க எல்லோரும் பூணூல் போட்டுக்கொள்ளும் நிலை வரவேண்டும் என்று எண்ணினார்.
சம நிலை ஏற்பட பாரதியார் எல்லோரையும் உயர்த்த வேண்டும் என்று எண்ணினார், இவர் எல்லோரையும் கீழிறக்க வேண்டும் என எண்ணுகிறார். சம நிலை அடைய வேண்டும். அது எப்படி அடந்தால் என்ன? :-)
நீங்கள் ஞானியின் இந்த பேச்சுக்கு (பிராமணர்களைக் குறிப்பிட்டு பேசியது மட்டுமல்ல. பாகிஸ்தான் தீவிரவாதத்தை நியாயப்படுத்துவது போல் பேசியது, இதற்கு காரணமே அத்வானி மோடி போன்றவர்கள் தான் என்று சொன்னது, தனது மத / கடவுள் நம்பிக்கையின்மை தான் உயர்ந்தது, கடவுளை வழிபடுபவர்களெல்லாம் தீவிரவாதி என்று குறிப்பிடுவது எல்லாம் தான்) ஒரு எதிர்ப்புப் பதிவு இடுவீர்கள் என நம்புகிறேன். பிராம்மணர்களை இப்படி சொல்லிவிட்டாரே என்ற சாதியுணர்வுடன் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம்.
மேற்கூறிய அனைத்துக் காரணங்களுக்காகவும் எதிர்ப்பு காட்டியே ஆகவேண்டும். இந்த நாட்டில் இப்படிப் பேசுபவர்களுக்குத் தான் அங்கீகாரமும் publicity'யும் கிடைக்கிறது. நீங்கள் காரசாரமாக ஒரு எதிர்ப்புக் கட்டுறை எழுதுவீர்கள் என நம்புகிறேன். உங்களது பதிவுகளை நிறைய பேர் படிக்கிறார்கள் என்பாதாலும், உங்களுடைய கருத்துக்களுக்கு நல்ல reach இருக்கிறது என்பதாலும் இந்த விண்ணப்பம்.
sir some one is creating bad name against ur blog... in copymannan.blogspot.com.So give ur powerful reply to them. Jai Hind
//வால்பையன் சைட்...
சாதி என்ற முறையை உருவாக்கியது யார்? ஏன்?
answer please.
December 30, 2008 5:29 PM//
அண்ணா மன்னிக்கனும்,
என் வால் தியரி சரியாவல்லீங்களா ?
வாலில்லாத தம்பி
one e mail received from my close friend.
***
Every Indian must wish Pakistan for
New Year 2009 (New ear, tooth, ass and eye)
Y?
New ear to hear properly what we say
New tooth to speak truth
New ass when they retreat after a defeat
New eye to visualize their future properly
-r
திரு விஜய் அவர்களே,
ஞானி என்று பெயர் மட்டும் வைத்துக் கொண்டால் போதுமா ?
விஜய் நீங்கள் நல்லா எழுதியிருக்கீங்க.
ஆனால், இதையும் எழுதியிருக்கீங்க!
//பாரதியாரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க எல்லோரும் பூணூல் போட்டுக்கொள்ளும் நிலை வரவேண்டும் என்று எண்ணினார்.
சம நிலை ஏற்பட பாரதியார் எல்லோரையும் உயர்த்த வேண்டும் என்று எண்ணினார்,//
எனக்குப் புரியவில்லை.
அப்போ, புணூல் போட்டா எல்லாரும் உசந்திடுவாங்களாங்க? நீங்கள் போட்டிருக்கீங்க. போடாதவங்க எல்லாரையும் விட உசந்திட்டீங்களாங்க?
எல்லாரும் உசந்து சமனிலை வரும்கிரீங்க!
dear dondu,
a strange thing, in english eight and night sounds same as in french huit et nuit and in german acht und nacht,,,,bizarre non?
@இளங்கோவன்
அப்படி கூற இயலாது. உதாரணமாக பிரெஞ்சில் எட்டை வீட் என்று உச்சரிப்பார்கள், ஆனால் இரவு ந்வீ. ஆக ட் சத்தம் வராது.
மற்றப்படி ஜெர்மனில் வருவது எதேச்சையே.
ஆனால், ஒன்பது என்பதற்கு பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஹிந்தியில் புதியது என்னும் பொருளும் வரும். தமிழில் மட்டும் ஒன்பது என்பதற்கு வேறு பொருள்.
இதை விட அதிசயமாக 69 என்ற எண்ணுக்கு உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் ஒரே ஒரு கெட்ட வார்த்தை அர்த்தம்தான்!!!!!!
அன்புடன்,
டோண்டு ராகவ்ன்
//அப்போ, புணூல் போட்டா எல்லாரும் உசந்திடுவாங்களாங்க? நீங்கள் போட்டிருக்கீங்க. போடாதவங்க எல்லாரையும் விட உசந்திட்டீங்களாங்க?//
2008 mudiyap pOvuthu
intha vENdaatha vivaatham vENdaaame
//இதை விட அதிசயமாக 69 என்ற எண்ணுக்கு உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் ஒரே ஒரு கெட்ட வார்த்தை அர்த்தம்தான்!!!!!!//
சாமியோவ் !
//திரு விஜய் அவர்களே,
ஞானி என்று பெயர் மட்டும் வைத்துக் கொண்டால் போதுமா ?//
ivar oru poli kamyunistaa?
/*Anonymous said...
//பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன்//
இல்லை என அடக்கமாக பதிலளித்திருக்கலாமே. உமது பதிலில் இருந்த்தே உமது வண்டவாளாம் தெரிகிறதே டோண்டு அவர்களே!! இதனால்தான் பார்ப்பனர்கள் தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.
*/
I agree to the first half of this comment. Dondu's pride of being a brahmin is not for defense purpose as he claims as his pride is not of recent origin to counter some of the other brahmins irritation on being branded as a brahmin.
Dondu has been proud of his caste even when he was in school and college. This is unnecessary and it is a pity that he still carrying his identity prideness and he is trying to find reasons to justify his uncouth prideness by blaming other moderate brahmins for his barbaric behaviour.
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு சார்
டோண்டு ஐயா
பொதுவாய் லோகத்தில் தூங்குறவாளை
எழுப்பலாம்
துங்குறது மாதிரி பாசாங்கு செய்றவாளை பகவான் தான் சேவிக்கனும்.
பிராமணாள் இவா போஜனத்திலே மண்ணெய் அள்ளிபோட்டாளா
ஏனிந்த கோபம்
அவா அவா ஜோலிய அவா அவா பாத்துண்டு
சிவனேன்னு இருக்காம
கன்னா பின்னான்னு தத்து பித்து மாதிரி வார்த்தைகளைக் கொட்டும் மனுசாளை
வரும்
2009 வது திருத்தட்டும்.
பகவானை பிரார்த்தனை பண்ணுவோம்
இவாளுக்கு நல்ல புத்தியை கொடுன்னு
தாங்கள் தமிழ்நாட்டில் 7 விழுக்காடு இருப்பதாகவும் 50க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தங்கள் (பார்ப்பனர்)ஜாதியினர் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப் படுகிறதே.
ithu sariyaa saar
திரு அனானி,
பூணல் போட்டவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று நான் சொல்ல வில்லை. இந்தச் சமூகம் தான் சொல்கிறது. நான் என்னை உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்று ஒரு நாளும் நினைத்தது கிடையாது. அப்படி நான் வளர்க்கப் படவில்லை.
மேலும் பாரதியார் வாழ்ந்த் காலகட்டத்தில் பூணல் அணிந்தவர்களை உயர்ந்த ஜாதியினராகப் பார்க்கப் பட்டனர். நான் சொல்ல வந்ததென்ன வென்றால் பாரதியார் எல்லோரையும் உயர் ஜாதியினராக மாற்ற நினைத்தார் என்பது தான்.
This is kind of going recursive.
///பூணல் போட்டவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று நான் சொல்ல வில்லை. இந்தச் சமூகம் தான் சொல்கிறது. நான் என்னை உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்று ஒரு நாளும் நினைத்தது கிடையாது. அப்படி நான் வளர்க்கப் படவில்லை. ///
இங்கே ஒரு தவளை தன் வாயால் - புல்ஸ்டாப்.
//செந்தழல் ரவி said...
///பூணல் போட்டவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று நான் சொல்ல வில்லை. இந்தச் சமூகம் தான் சொல்கிறது. நான் என்னை உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்று ஒரு நாளும் நினைத்தது கிடையாது. அப்படி நான் வளர்க்கப் படவில்லை. ///
இங்கே ஒரு தவளை தன் வாயால் - புல்ஸ்டாப்.//
எத்தனை ஜென்மா எடுத்தாலும்
யார் புத்தி சொன்னாலும்
புத்தகங்கள் பல படித்தாலும்
புதுமைகளை பார்த்தாலும்
ஏற்றுக் கொள்ள மாட்டங்களா?
/////எத்தனை ஜென்மா எடுத்தாலும்
யார் புத்தி சொன்னாலும்
புத்தகங்கள் பல படித்தாலும்
புதுமைகளை பார்த்தாலும்
ஏற்றுக் கொள்ள மாட்டங்களா/////
well said
என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.
சரியான வார்த்தைகள்.
this is 2 much
//
மேலும் சாதிகள் ஒழிய வேண்டுமானால் பிராம்மணர்கள் எல்லோரும் பூணூலை கழற்றியெரிய வேண்டும் என்றும் சொல்கிறார். இவரால் எந்தவொரு முஸ்லிம் மதத்தை பின்பற்றுவரிடமோ அல்லது கிறிஸ்தவரிடமோ போய் குல்லாவும் சிலுவையும் அணியாதீர்கள் என்றோ, ஒரு சர்தாரிடம் போய் தலைப்பாக்கு கட்டாதே என்று சொல்ல துணிச்சல் உண்டா?
//
Cross/cap/turban are religious symbols, பூணூல் is a caste symbol.
More over anyone can have a cross, but பூணூல்?
//Cross/cap/turban are religious symbols, பூணூல் is a caste symbol.
More over anyone can have a cross, but பூணூல்?//
.)
Are not you spreading hatred and enimity?
Post a Comment