உப்பிலியைப் பற்றி விடை கொடுத்தவர்களுக்கு என் நன்றி. இப்போது மேலும் சில கேள்விகள் தோன்றுகின்றன. விடை கொடுத்து விடுவீர்கள் என நிச்சயம் அறிவேன்.
1. ராமனுக்கும் ராமன் அப்பாவுக்கும் ஒரே வயதாமே. இது என்னக் கூத்து?
2. அம்பானி அவர்கள் தன் காரியதரிசியிடம் ஐந்து நிமிடத்துக்கான பேச்சை தனக்கு தயார் செய்துத் தருமாறு ஆணையிடுகிறார். காரியதரிசியும் அவ்வாறே செய்து தருகிறார். ஆனால் மீட்டிங் முடிந்து வந்த அம்பானி காரியதரிசி மிகப் பெரிய அளவில் பேச்சை தயார் செய்ததாகவும் ஆகவே தான் அதை 15 நிமிடங்களுக்குப் படிக்க வேண்டியதாகி விட்டதாகவும் கூறி அவரை டிஸ்மிஸ் செய்து விடுகிறார். தான் தவறே செய்யவில்லை என்று புலம்புகிறார் காரியதரிசி. என்ன ஆயிற்று?
3. மாது யூனிவர்சிடி பரீட்சை எழுதுகிறான். அவனுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சங்கரைப் பார்த்து எழுதுகிறான். மாதுவை விடப் பெரிய கபோதியான கோவிந்தன் மாதுவைப் பார்த்து எழுதுகிறான். சங்கர் மற்றும் கோவிந்தன் பாஸ் ஆனால் மாது பெயில். எங்ஙனம்?
4. இரண்டு சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன. ஒன்றையொன்று நோக்கி ஒரே நேரத்தில் கிளம்புகின்றன. இரண்டினது வேகமும் மணிக்கு 20 கிலோமீட்டர்கள். அதே நேரத்தில் ஈ ஒன்று ஒரு சைக்கிளிலிருந்து கிளம்பி இன்னொரு சைக்கிளை நோக்கி 40 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது. அது இன்னொரு சைக்கிளின் ஹேண்டில்பாரைத் தொட்டு முதல் சைக்கிளை நோக்கி வருகிறது. இப்போது முதல் சைக்கிளைத் தொட்டு மறுபடி இரண்டாம் சைக்கிளுக்குச் செல்கிறது. இதே மாதிரி திரும்பத் திரும்பச் செய்து கடைசியில் இரண்டு சைக்கிள்களும் ஈயும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடுகின்றன. ஈ அதிகப் பட்சம் எவ்வளவு தூரம் பறந்தது?
5. ஒருவன் தன் மனைவியைக் காரில் வைத்து வேகமாக ஓட்டிச் செல்கிறான். நடுவில் கார் ரிப்பேர். காரை அப்படியே விட்டு கணவன் மட்டும் மெக்கானிக்கைத் தேடி செல்கிறான். திரும்பி வந்து பார்த்தால் அவன் மனைவி அவன் இதுவரை பார்க்காத ஒருவனை அணைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் கணவன் கோபம் அடையவில்லை. ஏன்?
6. ஒருவன் ஒரு தீவில் தனியாக இருக்கிறான். அத்தீவில் உணவோ தண்ணீரோ கிடையாது. ஆனாலும் அவன் தான் இறந்துவிடுவோம் என்று ஒரு போதும் பயப்படவில்லை. இருப்பினும் 10 நிமிடங்களில் இறந்து விடுகிறான். என்ன நடந்தது?
7. ஓட்டப் பந்தயத்தில் ராமமூர்த்திக்கு முதலிடம் கிடைத்தது ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஏன் இந்த அக்கிரமம்?
8. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
22 hours ago
14 comments:
1.கீழத்தெரு ராமனும் மேலத்தெரு ராமன் அப்பாவும் ஒரே நாளில் பிறந்தவர்கள்தான்.
2.(இது ஏற்கனவே வந்தது) மூன்று நகல் தயாரித்து காரியதரிசி கொடுத்தார்.
3.
என்னார் அவர்களே, முதல் கேள்வியின் விடை தவறு. ராமன் எத்தனை ராமனடி அல்ல. ஒரே ராமன்தான். இரண்டாம் கேள்விக்கான உங்கள் விடை சரியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Sorry for my English..
1. Raman's father became a father on the day raman born! so same age only.
3. Sankar - Chemistry, Mathu Physics and Govindan chemistry again!
6. She is hugging her just-born kid?
7. Slow race.
8. This has to do with German language, so ambel! but still a guess - it has to with the names and occupations right?
3) முதல் ஆளும் மூன்றாம் ஆளும் ஒரே பாடம் .. நம்ம ஹீரோ வேற பாடம் ..(s.V.Sekar Joke)
//மூன்று நகல் தயாரித்து காரியதரிசி கொடுத்தார்.
இதே பதில் எனக்கும் தோன்றியதால், நானே எனக்கு முதுகில் தட்டிக்கொடுத்துக்கொள்ளலாம் அல்லவா?
பெனாத்தல் சுரேஷ் அவர்களே, 1,3 கேள்விகளுக்கான விடை சரி. 6,7 மற்றும் 8-ஆம் கேள்விகளுக்கான விடை தவறு. கேள்வி எண்ணைக் கூறுவதில் தவறு செய்தீர்களா என்று பாருங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தாசு அவர்களே
உங்களுக்கு முன்னாலேயே பெனாத்தல் சுரேஷ் மற்றும் என்னார் சரியான விடை கொடுத்து விட்டனர். இருப்பினும் நீங்கள் பதிலை எழுதிக் கொண்டிருக்கும்போது சரியான விடை என் திரையில் விழுந்திருக்கிறதூ. ஆகவே உங்களுக்கும் க்ரெடிட் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
8. This has to do with German language, so ambel! but still a guess - it has to with the names and occupations right?
இல்லை, மொழிக்கும் இக்கேள்விக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் விடை லொள்ளுத்தனமானது. ஒரு ஜெர்மன் புத்தகத்தில் படித்தது. அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
4. 40 கிலோமீட்டர். (இரு சைக்கிள்களும் ஒரு மணி நேரத்தில் சந்திக்கும். அந்த ஒரு மணி நேரத்தில் அந்த ஈ பறக்கக்கூடிய தூரம் 40 கி.மீ.தானே? :-))
4. 40 கிலோமீட்டர்.
மிகச்சரியான பதில் லதா அவர்களே. கூறப்போனால் இந்த வினாவின் விடையைத்தான் நான் முதலில் எதிர்ப்பார்த்தேன். ஏனெனில் இது பல முறை கேட்கப்பட்டு பிரபலமான வினா.
ஒரு கணித நிபுணரிடம் இவ்வினாவைப் போட்டால் அவர் ஒரு infinite series - யை முதலில் உண்டாக்கி, பக்கம் பக்கமாக கணக்குப் போட்டு இவ்விடையைக் கூறுவார். இது ஒரு converging series. ரோசாவசந்தைக் கேட்டால் இன்னும் விளக்கமாகக் கூறுவார்.
ஒரு சமயம் ஒரு பிரபலக் கணித நிபுணரிடம் இக்கேள்வியைப் போட அவர் ஒரு சில நோடிகள் யோசித்து சரியான விடையைக் கூறினார். கேட்டவருக்கோ ஒரே ஆச்சரியம் அவர் நிபுணரிடம் converging series பற்றிக் கூற, நிபுணரோ ஆச்சரியத்துடன் கூறினார்: "நான் அம்முறையைத்தானே உபயோகித்தேன்" என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
6-ஆம் கேள்விக்கு இன்னொரு வெங்கட் சரியான விடை கூறினார். நல்லது, இன்னும் இரண்டு கேள்விகள் பாக்கியிருக்கின்றன (7 மற்றும் 8).
அன்புடன்,
டோண்டு ராகவன்
15 நாட்கள் ஆகியும் கடைசி இரண்டு கேள்விகளுக்கு இன்னும் விடை வரவில்லையே? இவற்றை ராகாகியில் போட்டும் விடை வரவில்லை. இராமு அவர்கள் ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் அனுப்பித்த விடையும் தவறானது என்று பதில் எஸ்.எம்.எஸ். கொடுத்தாகி விட்டது.
முயற்சி திருவினையாக்கும் என்று கேள்வி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
What exactly is the answer for the 7th and eighth questions?
Curious
7 - முதலில வந்த ஓட்டக்காரர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தார்
நீங்கள் சற்றே தாமதமாக வந்துள்ளீர்கள் சரவணன். இக்கேள்விக்கு விடை ராமமூர்த்தி ஒரு குதிரையின் பெயர், ஆகவே அதன் சொந்தக்காரருக்கே பரிசு, ராமமூர்த்திக்கல்ல என்பதாகும். இதை காசி அவர்கள் சமீபத்தில் 2005-ல் கூறிவிட்டார். பார்க்க: http://dondu.blogspot.com/2005/09/blog-post_13.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment