போன திங்களன்று இந்த மீட்டிங்கிற்காக இப்பதிவை போட்டதற்கு பின்னூட்டங்கள் குறைந்த அளவிலேயே வந்தன. நான், ஜயராமன் மற்றும் ஜோசஃப் தவிர்த்து யாரும் நிச்சயமாக வருவதாகத் தெரியவில்லை. பிறகு கிருஷ்ணா மீட்டிங்கிற்கு வரப்போவதாகப் பின்னூட்டமிட்டார். சிவஞானம்ஜி அவர்கள் உடல்நிலை கடந்த சில நாட்களாகவே சரியாக இல்லாததால் அவர் தான் வருவது சந்தேகம் என முதலிலேயே தெரிவித்து விட்டார். நேற்று என்னுடன் நிலவு நண்பன் தொலை பேசினார். அவர் தான் வருவது 50-50 சான்ஸ் என்று தெரிவித்தார். ஆனால் இன்று பிற்பகல் மா.சிவகுமார் சேட்டில் வந்து மீட்டிங்கிற்கு வருவதாகத் தெரிவித்தார். ஜெயகமல் அவர்கள் போன் செய்து தன் நண்பர் சரவணனுடன் வருவதாகக் கூறினார். சிமுலேஷனும் தான் வருவதை உறுதி செய்தார்.
மாலை 5 மணியளவில் என் கார் சன் தியேட்டரை நெருங்கிக் கொண்டிருக்கும்போது கிருஷ்ணா அவர்களின் செல் பேசி அழைப்பு வந்தது. தான் ஏற்கனவே டிரைவ் இன் வந்து சேர்ந்து விட்டதாகக் கூறினார். அடுத்த 5 நிமிடங்களில் நான் அவர் இருக்குமிடம் போய் சேர்ந்தேஎன். அடுத்த சில நிமிடங்களில் சந்திரசேகர், மதன், சிமுலேஷன் ஆகியோர் வந்தனர். 5 நிமிடம் கழித்து ஜயராமன் தான் உள்ளே வந்து விட்டதாகவும் என்னைப் பார்க்க முடியவில்லை என்றும் கூற அவருக்கு சரியான இடத்தைக் கூற அவரும் வந்தார்.
ரவிச்சந்திரன் என்பவரிடமிருந்து ஒரு கால் வந்தது. தானும் மீட்டிங்கிற்கு வரலாமா எனக் கேட்க, தாராளமாக வாருங்கள் என அழைக்க, அவரும் 20 நிமிட நேரத்தில் வந்தார். இதற்குள் மா. சிவகுமார் அவர்களும் வந்து சேர்ந்து கொள்ள எல்லோரும் உள்ளே சென்றோம். ஜோசஃப் சார் அவசர வேலை காரணமாக 6.45 மணியளவில் வந்தார்.
மீட்டிங்கிற்கு வந்தவர்கள்:
1. ரவிச்சந்திரன், அமெரிக்காவில் வர்ஜீனியாவில் ஐ. டி. இஞ்சினியர்
2. சிமுலேஷன் என்னும் சுந்தரராமன். சத்யமில் வேலை செய்பவர்; இவர் சங்கீதம் பற்றி புத்தகம் போட்டிருக்கிறார்
3. மரபூர் சந்திர சேகரன். பிளாஸ்டிக் தொழிற்நுட்ப நிபுணர்.
4. மதன். இவரும் மரபூரும் பொன்னியின் செல்வன் குழுவைச் சேர்ந்தவர்கள்
5. ஜயராமன், சி.ஏ. படித்தவர், ஆல்காடெல்லில் வேலை செய்பவர்
6. மா.சிவகுமார், ஒரு தோல் தொழில் நுட்பத்திற்கான மென்பொருள் தயாரிப்பாளர்.
7. கிருஷ்ணா என்னும் ராமகிருஷ்ணன், விப்ரோவில் தொழில் நுட்ப மேனேஜராகப் பணி புரிபவர். இந்த மீட்டிங்கிற்கான படங்களை எடுத்தவர், நான் வீட்டிற்கு வந்து சேரும்போது அவை என் மின்னஞ்சல் பெட்டியில் எனக்காகக் காத்திருந்தன.
8. டி.பி.ஆர். ஜோசஃப் அவர்கள். கத்தோலிக்க சிரியன் பேங்கில் மென்பொருள் துறைத் தலைவர்.
9. ஜயகமல். ஜப்பானிய மொழி கற்கும் மாணவர்
10. சரவணன், அவரது நண்பர். இவர் இக்னூவில் பணி செய்கிறார். ஜயகமல் மற்றும் சரவணன் மிகவும் லேட்டாக வந்தனர்.
11. டோண்டு ராகவன்
இப்போது படங்களுக்குச் செல்வோம்: இடமிருந்து வலம் அல்லது கடிகாரச்சுற்றின் எதிர்ப்பக்கமாக:
மரபூர் சந்திரசேகர், சிமுலேஷன், டோண்டு மற்றும் மதன்
மரபூர், கிருஷ்ணா (இப்படத்தை விடுத்து மீதி எல்லாவற்றைய்ம் எடுத்தவர்), டோண்டு மற்றும் மதன்
டோண்டு, மா.சிவகுமார், மதன், மரபூர், ஜயராமன், சிமுலேஷன மற்றும் ரவிச்சந்திரன்
டோண்டு, மா.சிவகுமார், மதன், மரபூர், ஜயராமன், சிமுலேஷன மற்றும் ரவிச்சந்திரன் (எதிர்ப்புறத்திலிருந்து)
டோண்டு (கோரமாக இளித்துக் கொண்டு), மா.சிவகுமார், மதன், மரபூர் மற்றும் ஜயராமன். மற்ற இருவர் ஃபிரேமில் இல்லை
ரவிச்சந்திரன், ஜோசஃப் மற்றும் டோண்டு
ஜோசஃப், டோண்டு, ஜயராமன், சிமுலேஷன் மற்றும் ரவிச்சந்திரன்
ஜோசஃப், டோண்டு, ஜயராமன், சிமுலேஷன் மற்றும் ரவிச்சந்திரன்
டோண்டு (கைக்கடிகாரம் மட்டும் தெரிகிறது), ஜயகமல் மற்றும் சரவணன். (ஏன் லேட் என்று கேட்டால், இருவரும் கிரிக்கெட் ஆடி விட்டு வந்திருக்கிறார்கள்).
படங்களை வெற்றிகரமாக மேலேற்ற உதவி செய்த ஜயராமனுக்கு ஒரு ஓ போடுவோமா?
பாசந்தி, குலாப் ஜாமுன் மற்றும் பாதாம் அல்வா ஆர்டர் செய்யப்பட்டன. இனிப்பு வேண்டாமென சிலர் கூறி விட்டனர். போண்டா வேண்டாமென நான் தீர்மானித்து செட்டி நாடு இட்டலிகள் ஆர்டர் செய்து கொண்டேன். போண்டா ஆதரவாளர்களுக்கும் பஞ்சம் இல்லை. லேட்டாக வந்து சேர்ந்த ஜோசஃப் போண்டா ஆர்டர் செய்து கொள்ள அவருக்கு கம்பெனி கொடுக்க நானும் போண்டா ஆர்டர் செய்தேன்.
ஒவ்வொருவரும் சுய அறிமுகம் செய்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதைத் தவிர்த்து பேச்சுக்கள் இயல்பாக தத்தம் பாதையைத் தேர்ந்தெடுத்தன. மா. சிவகுமார் நாங்கள் பேசுவதையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவரையும் இந்த மீட்டிங் பற்றிப் பதிவு போடும்படி கேட்டுக் கொண்டுள்ளேன். ஜோசஃப் அவர்கள் தன்னுடைய தூத்துக்குடி மற்றும் தஞ்சை அனுபவங்களை சுவைபடக் கூறினார். அவரது நண்பர் திரு தனஞ்சயின் அகால மரணம் அவரை நிறையவே பாதித்து விட்டிருந்தது. ரொம்பத் தூண்டுதலில் மா. சிவகுமார் பேசினார். தாய் பற்றி தான் எழுதிய கவிதையை பற்றி சந்திரசேகர் பேசினார்.
சிவகுமார் அவர்கள் நான் விரைவில் பாஸ்போர்ட் பெற்று வெளி நாட்டு அனுபவங்களும் பெற வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.
எவ்வளவோ விஷயங்கள் பேசினோம். எல்லாவற்றையும் சட்டென்று இப்போது நினைவில் கொண்டு வர இயலவில்லை. வழக்கம் போல ஜோசஃப் மற்றும் ஜயராமன் அவர்கள் நான் விட்டதை இட்டு நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மா. சிவகுமார் தனது பார்வையிலிருந்து எழுதும் பதிவு வேறு வர இருக்கிறது.
மேலும் விஷயங்கள் நினைவுக்கு வர வர அவற்றை உசிதம் போல பதிவிலோ அல்லது பின்னூட்டங்களாகவோ சேர்ப்பேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
19 comments:
தொடர்ந்து வலைப்பதிவாளர்கள் சந்திப்பதும், அவற்றை விடமல் நீங்கள் போட்டுவருவதும் நிறைவாய் இருக்கிறது.
மா.சி. யின் 'எண்ணங்கள்' காண நானும் ஆவலாயுள்ளேன்!
இந்தப் படங்கள் விஷயம்தான் என்னை ஏமாற்றி விட்டது. எவ்வளவு முயன்றும் அவை ஏற்ற முடியாமல் இருக்கின்றன. இது சம்பந்தமாக எழுதும்போது நேற்று பிளாக்கர் சேவைகளைப் பற்றிப் பேசியது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
பிளாக்கருக்கான செர்வரை பலப்படுத்துவதில் கூகள் அவ்வளவாக அக்கறை காண்பிக்கவில்லை என்று ஜோசஃப் கூறினார். பதிவாளர்கள் எண்ணிக்கை வேறு கோடிக் கணக்கைத் தாண்டி விட்டது.
ஜிமெயில் நன்றாக இருப்பதாக மா.சிவகுமார் கூறினார். அதன் ஆர்கைவ்ஸின் உதவியோடு என்னால் எனது கணினியில் தவறுதலாக அழிக்கப்பட்ட கோப்புகளை மறுபடி நிறுவிக் கொள்ள முடிந்தது என்று நானும் என் பங்குக்குக் கூறினேன்.
எது எப்படியானாலும் மறுபடி முயற்சி செய்வேன், படங்களை ஏற்ற என்று கூறுவேன் நிச்சயமாக (உபயம்:ஜுனூன்).
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் சார்,
பதிவு கச்சிதமாய் இருக்கிறது. மன நிறைவை கொடுத்தது என்பதே ஒரு வார்த்தையில் நேற்றைய மாலைக்கான விமர்சனம். தங்கள் மற்றும் ஜோசப் முதலிய அனுபவஸ்தர்களின் முதிர்ச்சியான பார்வைகளும், பல வேறு விஷய தாகத்தை தீர்க்கும்படியான கருத்து பரிமாற்றமும் ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. இளைய பட்டாளங்கள் வழக்கம்போல பட்டையை கிளப்புகிறார்கள்.
ஆபீஸில் கொஞ்சம் கெடுபிடியாக இருக்கும் திங்கள் காலை. பிறகு விவரமாக எழுத முயற்சிக்கிறேன். இப்போது கிறுக்குவது இரண்டு விஷயத்துக்காக. ஏற்பாடு செய்த தங்களுக்கும், ஜோசப் சாருக்கும் ரொம்ப நன்றி. இரண்டாவது, படம் பதிவதில் i.e யில் சரியாக வருவதில்லை. firefox அல்லது netscape உபயோகிக்கவும். எனக்கு எப்போதுமே i.e. யில் படம் பதிவதில்லை. இதை சொல்வதும் இரண்டாவது காரணம்.
நன்றி
டோண்டு சார் - சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த தங்களுக்கும், ஜோசப் சாருக்கும் நன்றி. படங்களை எதிர்பார்த்து பதிவைப் பார்த்த எனக்கு ஒரு சிறு ஏமாற்றம். மற்றபடி 'It is a small world' என்பதை மறுபடியும் மெய்ப்பித்தது இந்த சந்திப்பு. ஜோசப் அவர்களின் தூத்துகுடி கதைகள் என்னுடைய பழைய நினைவுகளை புதுப்பித்தன. சிமுலேஷன் அவர்கள் தன்னுடைய ஜப்பானிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் (என் ஜப்பானிய அனுபவங்களை பதிவாக போடும் படியும் கூறினார்). மா.சி. அவர்கள் தன்னுடைய சீன உணவு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். தாங்கள் தெரிவித்தபடி, வெகு நாட்கள் பழகிய நண்பர்களை சந்தித்து உரையாடிய மன நிறைவை தந்தது இந்த சந்திப்பு.
வெற்றி ராமன் (ஜயராமன்) கூறியபடி நடந்ததில் வெற்றி. அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக.
அன்புட,
டோண்டு ராகவன்
கிருஷ்ணா அவர்களே, நீங்கள் சொல்வது போல இது சிறு உலகம்தான். என் மேட்டுப்பாளையம் உறவினர்களைத் தெரிந்த ஒருவரும் அங்கு இருந்தார். அவர் யார் என்பதில் ஒரு சிறு குழப்பம். சிமுலேஷனா, மரபூராரா அல்லது வேறு யாரோவா என்பது நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாழ்த்துக்கள்
நன்றி சந்திரவதனா அவர்களே. ரொம்ப நாளாக் காணுமே. நலமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ஸார்,
ஃபோட்டோக்கள் சற்று குளிர்ச்சியான வானிலையை காட்டுகிறதே. மழையேதும் பெய்ததா?
மழையேதும் பெய்ததா?
இல்லை. ஆனால் வெப்பமும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
நீங்க சொன்னா மாதிரி நேற்றைய சந்திப்பு உண்மையிலேயே நிறைவு தருவதாக இருந்தது.
எப்போதுமில்லாமல் இந்த முறை எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டது நல்ல யுத்தி. அத்துடன் இம்முறைதான் நல்ல சுவையான விவாதங்களும் கருத்து பரிமாற்றங்களும் இருந்தன.
அதாவது தமிழ்மணத்தில் எழுதும் சில வலைப்பதிவாளர்கள் யாருமே தங்களுடைய கருத்துகளுக்கு எதிர் கருத்து எழுதலாகாது என்ற முறையில் நினைப்பது நல்லதல்ல. எந்த ஒரு கருத்துக்குமே மாற்று கருத்து இருக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி நான் பேச பலரும் அதை ஒப்புக்கொண்டனர். பிறகு பின்னூட்டங்களை கவர்வதற்காகவே சர்ச்சைக்குரிய விஷயங்களை குறிவைத்து எழுதும் பதிவுகள் சமீபகாலமாக கூடிவருவது அழகல்ல என்றும் விவாதித்தோம்.
முதன் முதலாக கூட்டத்திற்கு வந்திருந்த மா.சிவக்குமார், கிருஷ்ணா,ரவி ஆகியோர் கலகலப்பாக பேசி கூட்டத்திற்கு மெருகேற்றினர். இறுதியில் வந்த ஜெயக்கமல் மிகவும் இளையவர், புதியவர்.
ஜயராமன் வழக்கம் போலவே தன்னுடைய பாணியில் கலக்கினார்.
டோண்டு சார் இம்முறை பேசாத ஒரு விஷயம் இந்த போலிகள் விஷயம்.
சிவஞானம்ஜியும் கடந்த முறை வந்திருந்த ஜிராவும் இம்முறை வராதது பெருங்குறையாகப் பட்டது.
அடுத்த கூட்டத்தை வேறெங்காவது வைக்கலாம் என்றனர். அவரவர்களுடைய எண்ணத்தை டோண்டு சாரிடம் தெரிவிப்பதெனவும் அடுத்த கூட்டத்திற்கு முன் முடிவு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நாளுக்கு நாள் கலந்துக்கொள்ளும் வலைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது மகிழ்ச்சியை அளித்தாலும் சென்னையிலுள்ள பதிவர்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது இது மிக மிக சொற்பமே என்றே தோன்றுகிறது.
அடி மேல் அடித்தல் அம்மியும் நகரும் என்பார்கள் அல்லவா? அதுபோல மாதா மாதம் கூட்டத்தை நடத்தியே மீதமுள்ள வலைஞர்களையும் வரவைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்.
"டோண்டு சார் இம்முறை பேசாத ஒரு விஷயம் இந்த போலிகள் விஷயம்.Ä
அப்பேச்சு இருந்தது ஆனால் நீங்கள் வருவதற்கு முன்னால். அதில் இனிமேல் பேச ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.
பிறகு மா.சிவகுமார் கூட அது பற்றி கோடி காட்டினாரே. அவர் பதிவையும் பாருங்கள்.
ஆனால் ஒன்று, மா.சிவகுமார் அவர்கள் சொன்னதுபோல நீங்கள் வந்ததும்தான் மீட்டிங் இன்னும் அதிக களை கட்டியது. ஆகவே இனிமேல் லேட்டாக வராதீர்கள் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்த மீட்டிங்கிற்கு பத்து நாட்கள் முன்னரே அறிவிப்பை போட்டு விடுகிறேன். பிறகு எல்லா யோசனைகளையும் கேட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாருங்கள் ஹேயக் ஆர்டர் முதலில் இந்தூர் எம்.பி. என்றவுடன் நிஜமாகவே பாராளுமன்ற உறுப்பினர் என நினைத்து விட்டேன். பிறகுதான் மத்தியப் பிரதேஷ் என்பது உறைத்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Came to your blog from Ma Siva;s pages. Nice to know that you are organising bloggers beyond online activities... will visit more and more.
*** anbudan ...
"OSAI" Chella,
Tamil Voice Blogger,
www.osai.tamil.net
நன்றி செல்லா அவர்களே. உங்கள் www.osai.tamil.net பார்த்தேன். எல்லாமே ஒலி வடிவத்தில் உள்ளன போலும். பின்னூட்டங்கள் மட்டும் எழுத்து வடிவில் இருந்தன. பதிவும் எழுத்து வடிவத்திலும் இருக்கலாமே, இது என்னுடைய யோசனையே. ஒலி வடிவ பதிவுகளை கேட்க அலுப்பாக உள்ளது. ஆகவே கேட்கவில்லை.
சென்னை வந்தால் என்னுடன் தொடர்பு கொள்ளவும். என் செல்பேசி எண் உங்களுக்குத் தெரியும் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
I dont aprove your prejudice about audio blogs!LOL! My page says this...
நல்வரவு! என்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். நான் ஒரு இணய நாடோடி... எங்காவது ஓடிக்கொண்டே இருப்பவன். இணையம் அனைவரையும் சென்று அடையவேண்டும் என்பதற்காக கடந்த 1999 முதல் பல்வேறு முயற்சிகளை இணையம், மின்னஞ்சல் குழுமங்கள், வலைப் பூக்கள், விரிவுரை மூலமாக ஓயாமல் செய்து கொண்டு வருகிறேன்.
"ஓசை " மூலம் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை வாரம் இரு முறை சென்றடைகிறேன். இணையத்தில்எழுத்துக்கள் மட்டும் ஆதிக்கம் செய்வதை விரும்பாமல் ஒலி மற்றும் ஒளியும் உலாவரவேண்டும், மற்றும்எழுதப் படிக்க இயலாத எம் தமிழர்களும் இணையம் மூலம் பயன்பெற வேண்டும் என்ற அவாவினால் இந்த ஓசை நிகழ்ச்சியை ஆரம்பித்து, தமிழ் இணையம் மூலம் தொகுத்து வழங்கி வருகிறேன்
... so I address diff audiences .. and i came to know from Newyork friends that they listen my podcasts in a group of ten or more during their weekends by amplifying and with speakers! They can operate their micro wave oven while listening!
Then many Tamils abroad.. they can not read tamil alphabets and my thoughts reaches them! lol! Then even visually challenged ppl can use the blogs in my way! more over many nice learned ppl like you are doing great writing in a texual way and hence i went in some less travelled terrain! An explorer always!
With regards
Chella
webmedia consultant
www.chella.info
உங்கள் செயல்பாட்டை நான் குறைத்து மதிப்பிடவில்லை செல்லா அவர்களே. ஆனால், ஒலி வடிவத்துடன் கூடவே எழுத்திலும் இருப்பதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்.
என்னை விடுங்கள். தமிழ் படிக்க முயல்பவர்கள் எழுத்து மற்றும் ஒலி இரண்டையும் சேர்த்துக் கேட்டால் அவர்கள் படிக்கும் திறனும் கூடவே வளருமல்லவா?
இது யோசனையே. மற்றப்படி ஒலிவடிவைக் கேட்பதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை என்பதும் நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் யோசனையை அப்படியே ஆசியாக ஏற்று செயல் படுத்தியுள்ளேன்! Still ... Bless me by clicking the link below!
இணைய நாடோடி
உங்களது லேட்டஸ்ட் முயற்சியை பார்த்தேன். பாராட்டுகள். பின்னூட்டமுமிட்டிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment