இன்று பிற்பகல் ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. எதேச்சையாக கே டிவி பக்கம் செல்ல, அங்கு தில்லானா மோகனாம்பாள் படம் (இப்பதிவை போடும்போதும் அது ஓடிக் கொண்டிருக்கிறது). எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பது நினைவிலில்லை. இன்னும் அலுக்கவில்லை.
சமீபத்தில் ஐம்பதுகளில் இது ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது படித்துள்ளேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்த்தது அக்கதை. சமீபத்தில் புத்தகத்தையும் வாங்கி இன்னொரு முறை படித்தேன். இரண்டு வால்யூம்கள். அதை இப்போது நிதானமாகப் படிக்கும்போதுதான் பல விஷயங்கள் புதிதாகப் புலப்பட்டன. முதல் விஷயம் திரைக்கதை. சாதாரணமாக பிரசித்தி பெற்ற புத்தகங்கள் திரைப்படமாக்கப்படும்போது அவை சரியாக வெற்றி பெறுவதில்லை. காரணம் திரையாக்கம் கதையைப் படித்த ரசிகர்களின் கற்பனையுடன் ஒத்துப் போவதில்லை. ஆனால் தில்லானா மோகனாம்பாள் ஒரு விதி விலக்கு.
மூன்றரை மணி நேரத்துக்குள் அடக்கி ஓட்டியிருக்கிறார்கள். சுவையானவற்றை எடுத்து பூத்தொடுத்திருக்கிறார்கள். மூலக் கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் ஆலோசனை இதில் பெறப்பட்டது என அறிகிறேன்.
அதே நேரத்தில் மூலக் கதையிலிருந்த பல கதாபாத்திரங்கள் திரைக்கதையில் சேர்க்கப்படவில்லை. அவற்றில் பல மிக சுவாரசியமானவை. உதாரணத்துக்கு காரைக்கால் நடேசனை சொல்லலாம். இப்போது வெகு நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை இங்கே கூற ஆசைப்படுவேன். அதாவது, இக்கதையை மெகா சீரியலாக எடுக்க முடியுமா என்று. ஏற்கனவே ஜாவர் சீதாராமனின் "பணம் பெண் பாசம்" திரைக்கதையாக முன்னரே எடுக்கப் பட்டிருந்தாலும் சீரியலாகவும் வந்து சோபித்தது என்பதை மனத்தில் கொண்டால், நான் கொண்டிருப்பது வீணாசையல்ல என்றுதான் கூற வேண்டும்.
இது வெற்றிகரமாக நடைபெற என்னென்ன தேவை? இன்னொரு நல்ல திரைக்கதை ஆசிரியர். எவ்வளவு எபிசோடுகள் என்ற நிர்ணயம். நல்ல நடிக நடிகையர் தேர்வு. இவற்றில் முதல் இரண்டும் என் சக்திக்கப்பாற்பட்டவை. நல்ல நடிக நடிகையரைப் பட்டியலிடுவதே நான் செய்யக் கூடிய காரியம். அவ்வாறே செய்வேன். ஒரு பாத்திரத்திற்கு ஒன்றுக்கு மேல் கலைஞர்களைக் குறிப்பிட்டிருப்பது ஒரு சாய்ஸாகத்தான்.
ஷண்முகசுந்தரம்: பிரபு, சூர்யா, விக்ரம்
மோகனா: ரேவதி, மீனா
பாலையா: ஜூனியர் பாலையா
சிங்கபுரம் மைனர்: ராதா ரவி
ஜில் ஜில் ரமாமணி: மனோரமா (வேறு யாரால் முடியும்?)
நாகலிங்கம்: ஓ.ஏ.கே. சுந்தர், வினுச்சக்கரவர்த்தி
மதன்பூர் மகாராஜா: நம்பியார்
வைத்தி: நாகேஷ், வடிவேலு, வாசு விக்ரம்
வடிவாம்பாள்: வடிவுக்கரசி
எனக்கு இப்போதைக்கு தோன்றியவை அவ்வளவே. எல்லோரும் பெரிய திரை நடிகர்கள் என நினைக்காதீர்கள். அவர்களில் பலர் சின்னத் திரையிலும் வந்து விட்டார்கள்.
நம் சக வலைப்பதிவாளர்கள் என்ன கூறுகிறீர்கள்? உங்களுக்கு பிடித்த லிஸ்டுகளையும் போடுங்கள். விவாதிப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
16 comments:
ஷண்முகசுந்தரம்: சூர்யா
மோகனா: ரேவதி,சுகாசினி,பத்ம பிரியா
பாலையா: ஜூனியர் பாலையா
சிங்கபுரம் மைனர்: ராதா ரவி,நாசர்
ஜில் ஜில் ரமாமணி: மனோரமா (வேறு யாரால் முடியும்?)
நாகலிங்கம்: ஓ.ஏ.கே. சுந்தர், வினுச்சக்கரவர்த்தி
மதன்பூர் மகாராஜா: நம்பியார்
வைத்தி: நாகேஷ், வடிவேலு, வாசு விக்ரம்
வடிவாம்பாள்: வடிவுக்கரசி
மிக்க நன்றி கார்த்திக் பிரபு அவர்களே. யார் அந்த குட்டிப் பையன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
வேண்டாம் சார் சிவாஜி பத்மினி இடத்தி்ல் இவர்களை வைத்தால் யார் பார்பது.
"சிவாஜி பத்மினி இடத்தி்ல் இவர்களை வைத்தால் யார் பார்பது."
ஏன் கரகாட்டக்காரனில் ஒரு நிமிடத்திற்கு செந்திலும் கோவை சரளாவும் இருந்தார்களே? :)))))
சீரியசாக, அதுதான் சேலஞ்சே. மூலக் கதையில் இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் உண்டு. அவையும் வெளியே வர வேண்டாமா? அவ்வாறு நினைத்துக் கொண்டு ஒஆருங்கள்.
தில்லானா மோகனாம்பாள் - இன்றைய நடிகர்களால் சிதைய வேண்டாமே :-(
பாலையாவுக்கு எந்த வகையிலும் ஜூனியர் பாலையா பொருந்த மாட்டார். குறிப்பா ரயில் காட்சி. பாலையா தவிர வேறு யாரும் செய்ய முடியாது
அதான் தில்லான மோகானாம்பாள் கதையை பலமுறை தமிழ்சினிமாக்காரர்கள் எடுத்து தோற்றுவிட்டார்களே. வெட்டி வேலை சார் :-)
ஏன் சோர்வு முத்துக் குமரன் அவர்களே? மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கல்லூரியில் படிக்கும் போது சென்னை வானொலியில் புதினப் பக்கங்கள் என்ற பகுதியில் தில்லானா மோகனாம்பாள் படிக்கக் கேட்டது. அதை வாசித்தவரும் ஆழ்ந்து வாசித்தார். புத்தகத்தைப் படிக்கவோ படத்தைப் பார்க்கவோ எப்போதும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இன்றைக்கு திரும்ப எடுத்தால் நன்றாக வருமா என்று சந்தேகம்தான். அந்தக் காலத்தில் இருந்து கதையைப் பெயர்த்து விட்டால் பாதி உயிர் போய் விடாது?
அன்புடன்,
மா சிவகுமார்
ரீமேக் என்பதைக் கேள்விப்பட்டதில்லையா சிவா அவர்களே? ஆனால் நான் எடுக்கச் சொல்லி ஆலோசனை கூறுவது சின்னத்திரை சீரியலுக்காக. நேரக் குறைவினால் வெட்டிய பலக் காட்சிகளை சீரியலில் மேக் அப் செய்யலாமில்லையா?
இப்போது லிஸ்ட் தர முயற்சி செய்யுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தில்லான மோகானாம்பாள் கதையை பலமுறை தமிழ்சினிமாக்காரர்கள் எடுத்து தோற்றுவிட்டார்களே//
அட..ஆமாம்.. கரகாட்டக்காரன் என்றொரு படம் எடுத்து படு நஷ்டம்.
1.ஷண்முகசுந்தரம்: பிரபு, சூர்யா, விக்ரம்
2.மோகனா: ரேவதி, மீனா
3.பாலையா: ஜூனியர் பாலையா
4.சிங்கபுரம் மைனர்: ராதா ரவி
5.ஜில் ஜில் ரமாமணி: மனோரமா (வேறு யாரால் முடியும்?)
6.நாகலிங்கம்: ஓ.ஏ.கே. சுந்தர், வினுச்சக்கரவர்த்தி
7மதன்பூர் மகாராஜா: நம்பியார்
8.வைத்தி: நாகேஷ், வடிவேலு, வாசு விக்ரம்
9.வடிவாம்பாள்: வடிவுக்கரசி
1. சேத்தன், சிவக்குமார், விக்ரம், அபிஷேக், பிரேம் குமார்
2. மீனா, சுகந்தி, தேவயானி [ரேவதிக்கு வயதான தோற்றம் வந்து விட்டது!]
3. மணிவண்ணன்
4. அபிஷேக், விவேக்
5. தேவ தர்ஷனி, கோவைசரளா
6. 'அண்ணாமலை' செரிஅலில் வரும் செட்டியார்[இப்போ செல்வியிலும் சரிதாவின் அப்பாவாக வருபவர், பெயர் தெரியவில்லை.]
7. சத்தியராஜ், நாஸர்
8. உங்களோடு ஒத்துப் போகிறேன்!
9. வடிவுக்கரசி, நளினி
10. அந்த மோகனாவின் நட்டுவனாரை விட்டு விட்டீர்களே! சார்லி சரியாக இருப்பார்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்வைப் பற்றி சொல்லியிருப்பதால், உடனே மறுமொழியிட்டு விட்டேன்!
அமர காவியம் அது!
லைலா - மஜ்னு; ரோமியோ - ஜூலியட் வரிசையில் இன்னொன்று.....எனக்கு!
நன்றி!
சின்னத்திரை என்பதால், சில சின்னத்திரை நட்சத்திரங்களையும் சொல்லியிருக்கிறேன்!!
1. விக்ரம் (கம்பீரம் அவசியம்)
2. ஷோபனா (பரதம் ஆட இவரை மிஞ்ச யார்?) அல்லது பானுப்ரியா
3.மணிவண்ணன் (நகைச்சுவை உணர்வு)
4. நாசர்
5. கோவை சரளா (இவரால் இதை நன்கு செய்ய முடியும். உதாரணம்: சதிலீலாவதி)
6. மோஹன்ராம்
7. நம்பியார் (இன்னும் மிடுக்கு குறையவில்லை)
8. வடிவேலு
9. நளினி
இதன் பிறகு இந்த மாதிரி ஒரு படம் எதிர்பார்க்க முடியாது. என் இல்லத்தில் நான்கு தலைமுறையில் உள்ள அனைவருக்கும் இப்படம் உயிர்.
nan tha dondu sir
வாருங்கள் கார்த்திக் பிரபு அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல சாய்ஸ் கிருஷ்ணா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அமர காவியம் சார்!அப்படியே கட்டிப்போட்டு விடும்...நடுவில் எழுந்திருக்க கூட மனம் வராது
இசை கண்டிப்பா நம்ம இசை ஞானி தான்; சொல்லிப்பிட்டேன்.
1. ஷண்முகசுந்தரம்: விக்ரம்
2. மோகனா: மீனா, ஷோபனா, தேவயானிக்கு கோபம் அவ்வளவாக வராது; படத்தில் பத்மினி நளினமாக சீறும் காட்சியைப் பார்க்க வேண்டுமே!
3. பாலையா: மணிவண்ணன் பொருத்தமான சாய்ஸ் or
SPB-ஐ try பண்ணலாமோ?
4. சிங்கபுரம் மைனர்: ராதா ரவி
5. ஜில் ஜில் ரமாமணி: மனோரமா(சற்று வயதாகி விட்டது, கோவை சரளா கலக்குவார், கிருஷ்ணா சொல்வது மிகவும் சரி..//உதாரணம்: சதிலீலாவதி//)
6. நாகலிங்கம்: ஏன் ப்ரகாஷ் ராஜை try பண்ணலாமே?
7. மதன்பூர் மகாராஜா: நாஸர்
8. வைத்தி: வடிவேலு
9. வடிவாம்பாள்: வடிவுக்கரசி
ஏவிஎம் ராஜனை விட்டு விட்டீர்களே; சூர்யா?? சற்று மென்மையானவரே போதும் என்றால் விஷால்??
மோகனாவின் நட்டுவனார் - சார்லி (அ) விவேக்??
பத்மினியின் சகோதரன் மகளும், அவர் முக ஜாடையும் உடைய ஷோபனா மிகப் பொருத்தமாக இருப்பார்.
மீதி எல்லாம் ஓக்கே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment